புதன், 11 ஏப்ரல், 2012

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?


கடவுள் இருக்கிறாரா? 
அல்லது
கடவுள் இல்லையா?


[விவாதப் பகுதி 1 of 3]




கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சைகள் இன்று நேற்று அல்ல பல யுகங்களாகவே நடைபெற்று வருகின்றன என்பதை நாம் ”கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று தன் தந்தையும் அரசனுமாகிய ஹிரண்யகசிபுவுக்குச் சொன்ன ”பக்தப் பிரகலாதன்” போன்ற புராணக் கதைகள் மூலம் நன்கு அறிய முடிகிறது. 

பட்டி மன்றங்கள் பல கேட்டு ரஸித்திருப்பீர்கள். கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு ஏற்றவாறு இரண்டு அணிகளாகப் பிரிந்து, தங்கள் வாதங்களை வெகு அழகாக எடுத்துரைப்பார்கள். 

ஒரு அணியிலிருந்து ஒருவர் பேசும் போது, அந்த அணிதான் வெற்றிபெறும் என்பது போல நமக்குத் தோன்றும். இன்னொரு அணியிலிருந்து வேறொருவர் வந்து பேசும் போது, நாம் ஏற்கனவே நினைத்தது தவறு, இந்த அணியினரே வெற்றி பெறக்கூடும் என்பது போல நமக்குத்தோன்றும். 

இவ்வாறாக மாற்றி மாற்றி அவரவர்கள், அவரவர்கள் அணிக்கு சாதகமான பல விஷயங்களை எடுத்து நம் முன் வைத்து, திறமையுடன் வாதம் செய்வார்கள்.

பட்டிமன்றத் தலைவர் அவர்களும் முன்னுரையாக நல்ல சில செய்திகளைக் கூறிவிட்டு, விவாதத்தைத் துவக்கி வைப்பார். ஒவ்வொருவர் பேசும் போதும், பேசி முடிந்ததும் கூட, தலைவர் பேசியவரைப் பாராட்டி உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். 

அந்த பிரபலமான பட்டிமன்றப் பேச்சாளர்களில் பலரும், தங்களை எந்த அணி சார்பாகப் பேசச் சொன்னாலும், தாங்கள் பேச முடியக்கூடிய அளவுக்கு அறிவும், ஆற்றலும், விஷய ஞானமும் உள்ளவர்களாகவே இருப்பார்கள். 

இதில் எந்த அணியினர் வெற்றி பெறுகிறார்கள்; எந்த அணியினர் தோல்வி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களின் வாதத்திறமைகளும், நம் முன் கொண்டுவந்து வைக்கும் பாய்ண்ட் பாய்ண்ட்டான,வெகு சுவாரஸ்யமானத் தகவல்களுமே, மிகவும் பாராட்டப்பட வேண்டியவைகளாகும்.  

அதுபோலவே இந்தப்பதிவினின் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு விவாதத்தை ஊன்றிப் படித்து வாருங்கள். இதில் உள்ள ஒவ்வொரு வரிகளும், ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் முக்கியமானவையாகும். மனதில் ஏற்றிக்கொண்ட பிறகே அடுத்த வரிக்குச் செல்ல வேண்டும். 

அதுபோல இந்த விவாதத்தை முழுவதுமாக ஒரு வரி விடாமல் தயவுசெய்து படியுங்கள். அப்போது தான் “கடவுள் இருக்கிறாரா? அல்லது “கடவுள் இல்லையா” என்று சிந்தித்துப்பார்த்து நீங்களும் பட்டிமன்றத் தலைவர் போல ஓர் முடிவுக்கு வர இயலும்.

oooooooooooooooooooooo
அன்புடன் vgk
oooooooooooooooooooooo


தத்துவப்பாடங்கள் கற்பிக்கும் ஒரு கல்லூரிப் பேராசிரியர், கடவுளால் விஞ்ஞானத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளைப்பற்றி விவரிக்கிறார். 

அந்தப்பேராசிரியர் கடவுள் நம்பிக்கை ஏதும் இல்லாத ஓர் நாஸ்திகர். 


அவர் தன் வகுப்பு மாணவர்களில் ஒருவரை எழுந்து நிற்கச்சொல்கிறார்.


பேராசிரியர்: உனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா?


மாணவர்: நிறையவே உள்ளது ஐயா.


பேராசிரியர்: கடவுள் நல்லவரா?


மாணவர்: நிச்சயமாக நல்லவரே.


பேராசிரியர்: கடவுள் சக்தி வாய்ந்தவரா?


மாணவர்: ஆமாம், ஐயா, மிகவும் சக்தி வாய்ந்தவரே.


பேராசிரியர்: 


தன்னைக்காப்பாற்றும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தும், என் சொந்த சகோதரர் புற்று நோயினால் இறந்து விட்டார். 


நம்மில் பலரும் நோயுற்றவர்களுக்கு உதவிடவும், அவர் நோயிலிருந்து விடுபட்டு செளகர்யமாகவும் தானே விரும்புவோம்! 


ஆனால் கடவுள் அப்படிச் செய்யவில்லையே. 


பின் எப்படி அவர் நல்லவர் ஆவார்? 


பதில் சொல்.


[மாணவர் சற்று நேரம் பதில் ஏதும் சொல்லாமல் மெளனமானார்.]

பேராசிரியர்: 


உன்னால் பதில் ஏதும் சொல்லமுடியாது. 


எனக்கு நன்றாகவே தெரியும். 


சரி நாம் மீண்டும் ஆரம்பிக்கலாமா? 


கடவுள் நல்லவரா?


மாணவர்: ஆமாம்; நல்லவரே!


பேராசிரியர்: சாத்தான் நல்லவரா?


மாணவர்: இல்லை. நல்லவர் இல்லை.


பேராசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தவர்?


மாணவர்: கடவுளிடமிருந்தே வந்தவர்


பேராசிரியர்: 


சரியாகவே சொல்கிறாய். அப்போ கெடுதல் செய்யக்கூடியவைகள் என்று இந்த உலகில் உண்டா?
.
மாணவர்: ஆம், உண்டு தான்.

பேராசிரியர்:  


ஓஹோ, அப்படியென்றால் இந்த உலகம் முழுவதிலும் கெடுதல்களும் பரவியுள்ளனவா?

மாணவர்: ஆம், பரவித்தான் உள்ளன.

பேராசிரியர்: 


ஆகையால் கெடுதல் எல்லா இடங்களிலும் உள்ளன என்பதை ஒத்துக்கொள்கிறாய்; 


கடவுளே தான் இவற்றையெல்லாம், இந்தக் கெடுதல்களையெல்லாமும் ஏற்படுத்தியுள்ளார்; 


சரிதானே?

மாணவர்: ஆம், சரி தான் ஐயா.


பேராசிரியர்: அப்போ கெடுதல் செய்யும் சாத்தானைப் படைத்தவர் யார்?


[மாணவர் சற்று நேரம் மெளனம் சாதிக்கிறார்]


பேராசிரியர்:


கொடுமையான வியாதிகள், ஒழுக்கக்கேடுகள், பிரிவினைவாதங்கள், தீண்டாமை. அசிங்கங்கள், அராஜகங்கள், வன்முறைகள் முதலிய விரும்பத்தகாத சம்பவங்கள் எல்லாம் எங்கும் உலகில் நடைபெற்றுக் கொண்டு தானே இருக்கின்றன?
மாணவர்: ஆம், ஐயா.

பேராசிரியர்: 


எனவே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியவர் யார்?


[மாணவர் இப்போதும் எதுவும் பதில் பேசவில்லை.]

பேராசிரியர்: 


விஞ்ஞானப்படி நமக்கு ஐம்புலன்கள் உள்ளன. 


அதன் மூலமாக மட்டுமே நாம் எதையும் அடையாளம் காண முடிகிறது.


நம்மைச்சுற்றி நடப்பவற்றை உணர்ந்து கொள்ள முடிகிறது. 


இவ்வாறு இருக்கும் போது, இப்போது சொல்: 


நீ கடவுளை உன் கண்களால் இதுவரை பார்த்திருக்கிறாயா? 


மாணவர்: இல்லை, ஐயா. 


பேராசிரியர்: 


கடவுளின் குரலையாவது இதுவரை கேட்டிருக்கிறாயா என்று எங்களுக்குச் சொல். 


மாணவர்: இல்லை, ஐயா. 


பேராசிரியர்: 


கடவுளை எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? 


ருசித்திருக்கிறாயா? 


முகர்ந்து பார்த்திருக்கிறாயா? 


அல்லது உணர்வுபூர்வமான பார்வையாவது கடவுளின் மேல் உனக்கு இதுவரை ஏற்பட்டுள்ளதா? 

மாணவர்: 


இல்லை ஐயா, எதுவுமே இல்லை. 


ஆனால் எனக்கு கடவுளின் மேல் பயம் மட்டும் உள்ளது. 


பேராசிரியர்: 


இவ்வளவுக்கும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறாயா? 


மாணவர்: ஆமாம் ஐயா. 


பேராசிரியர்: 


அனுபவத்தையே அடிப்படையாகக்கொண்ட ஆராய்ச்சிகளின் படியும், இதுவரை நிகழ்த்தியுள்ள சோதனைகளின் அடிப்படையிலும், அந்தப் பல்வேறு சோதனைகளின் இறுதி முடிவு அறிக்கைகளின் படியும், உன்னுடைய, நீ சொல்லும் கடவுள் என்பவர் யாரும் இல்லவே இல்லை. 


இதற்கு உன் பதில் என்ன, என் அன்பு மகனே?  


மாணவர்: 


பதில் என்று சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை ஐயா! இருப்பினும் எனக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை மட்டும் உள்ளது.
பேராசியர்: 

ஆமாம். பாழாய்ப்போன நம்பிக்கை. 


இந்த நம்பிக்கை என்னும் சொல்லே விஞ்ஞானத்திற்கு இன்று அளித்துவரும் மிகப்பெரிய பிரச்சனையும் தொல்லையுமாகும்.

மாணவர்: 

பேராசிரியர் அவர்களே! நான் உங்களிடம் இப்போது கொஞ்சம் மனம் விட்டு பேச விரும்புகிறேன். 


உஷ்ணம் [HEAT] என்று சொல்லுகிறோமே, அப்படி ஒரு பொருள் உண்மையிலேயே உள்ளதா, ஐயா?

பேராசியர்: ஆம், உள்ளது.

மாணவர்: குளிர்ச்சி என்று சொல்லுகிறோமே, அது?

பேராசியர்: ஆமாம். அதுவும் உள்ளது.

மாணவர்: இல்லை ஐயா, அது போல எதுவுமே இல்லை.





[இதன் பிறகு நடைபெற்ற விவாதங்களில் 
சுவையும் சூடும் மிகவும் அதிகம்]

தொடரும்








[இதன் தொடர்ச்சி நாளை வெளியிடப்படும்]

49 கருத்துகள்:

  1. கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

    உண்டென்றால் அது உண்டு ;

    இல்லை என்றால் அது இல்லை !!

    உளன் எனில் உளன்
    இலன் எனில் இலன் என்பது
    ஆழ்வார்கள் அனுபவம்..

    பதிலளிநீக்கு
  2. ஓடும் மேகங்களே
    நீங்கள் சொல்லுங்கள்... செல்லுங்கள்
    "கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

    பதிலளிநீக்கு
  3. பிரபலமான பட்டிமன்றப் பேச்சாளர்களில் பலரும், தங்களை எந்த அணி சார்பாகப் பேசச் சொன்னாலும், தாங்கள் பேச முடியக்கூடிய அளவுக்கு அறிவும், ஆற்றலும், விஷய ஞானமும் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

    சுவாரஸ்யம் மிகுந்த ரச்னையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. ஓடும் மேகங்களே
    நீங்கள் சொல்லுங்கள்... செல்லுங்கள்
    "கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

    பதிலளிநீக்கு
  5. எனக்கு மிகவும் பிடித்தது கடவுள் பற்றிய விவாதங்கள்தான். அனுபவங்களில் மூளை உணரக்கூடியது மனம் உணரக்கூடியது என்று இரண்டு கட்சி உண்டு. மனம் உணரக்கூடிய விஷயங்களில் நான் செல்லும்போது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாய் நான் உணர்கிறேன்.

    வாழ்க்கையின் மிகக் குறுகிய பரப்பில் உங்கள் கண்களால் பார்த்தவற்றையும் ஆதாரத்தோடு நிறுவப்பட்டவைகளை மட்டுமே ஏற்கமுடியுமெனில் நாம் சமன்பாடுகளை மட்டுமே ஏற்கவும் காணவும் முடியும்.

    வாழ்க்கை நமக்குக் கொடுத்த குறுகிய எல்லைக்குள் அது தரும் சமிக்ஞைகள் மூலமாக மூலத்தை உணரமுடியும்போது கடவுளையும் உணரமுடியும்.இப்படித்தான் நான் கடவுளை தரிசிக்கிறேன்.

    இந்த உலகம் கடவுளையோ அல்லது காலத்தையோ நம்புபவர்களாலேயே சுவாரஸ்யம் கொள்கிறது. நம்பிக்கையோடிருப்பவர்களாலே எதையும் உருவாக்கமுடிகிறது. நம்பிக்கை இழந்தவர்களால் அற்றவர்களால் எதையுமே புதிதாய் உருவாக்கமுடிவதில்லை நம்பிக்கை உட்பட.

    அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன் ஆவலாய்.

    பதிலளிநீக்கு
  6. தரிசனம் என்று சொல்லும்போது உடனே சட்டென்று எல்லோருக்கும் ரிஷப வாஹனத்தில் நான்கு கைகளும் கழுத்தில் நாகமும் இடப்புறம் பார்வதி சஹிதமாய் புகை சூழ தீபாவளி மலரில் வரையப்படும் ஓவியங்களை நினைவுக்குக் கொண்டு வந்து விட்றாம் பாரு உடான்ஸ் என்று கருதக் கூடுமென்பதால் இந்த உபரி பின் ஊட்டம்.

    ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் மிகச்சோர்வுற்றிருக்கும் ஒரு முதியவருக்கு இடம் விட்டுத் தரும் சக மனிதரிடமும், மிகுந்த பசியோடிருப்பவருக்கு அன்னமிடும் மற்றொரு மனிதரிடம், தனக்குக் கூட வைத்துக்கொள்ளாமல் பிறருக்காக வாழும் மனங்களில் இறைவனை நான் தரிசிக்கிறேன்.

    இப்படிப்பட்டவர்களே அருகிப்போய்விட்ட காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் என் கண்களில் அடிக்கடி பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள் எனும்போது நான் கடவுளை அடிக்கடி தரிசிக்கிறேன் என்று சொல்வதும் நிஜமாய்த்தானே இருக்கமுடியும்?

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு சார்.
    கடவுள் என்பவர் நம் கண்ணுக்கு புலப்படாத ஒரு மாபெரும் சக்தியாக எங்கும் இருக்கிறார் என்பது என் எண்ணம். அவருக்கு எந்த உருவத்தை தந்தும் நாம் வழிபடலாம். நமக்கு ஏற்படும் நல்லவை, கெட்டவைகளுக்கும் ஏதோ காரணம் இருக்கும்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற ஆசிரியர், மாணவன் கேள்வி, பதில் அருமையாக இருக்கிறது.

    அடுத்த பதிவில் யார், யார் வழிக்கு வருகிறார்கள் என்று பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற ஆசிரியர், மாணவன் கேள்வி, பதில் அருமையாக இருக்கிறது.

    அடுத்து என்ன என்கிர எதிர்பார்ப்புடன் காத்திருக்கிரோம்.

    பதிலளிநீக்கு
  10. //அனுபவத்தையே அடிப்படையாகக்கொண்ட ஆராய்ச்சிகளின் படியும், இதுவரை நிகழ்த்தியுள்ள சோதனைகளின் அடிப்படையிலும், அந்தப் பல்வேறு சோதனைகளின் இறுதி முடிவு அறிக்கைகளின் படியும், உன்னுடைய, நீ சொல்லும் கடவுள் என்பவர் யாரும் இல்லவே இல்லை.//

    பேராசிரியர் இருப்பதாகக் கூறும் உஷ்ணமும் குளிர்ச்சியும் கூட கண்ணால் பார்க்கவும் காதால் கேட்கவும் இயலாதவைதான்.அவற்றை உணர மட்டுமே இயலும்.அடுத்தவருக்கு அவற்றை இருக்கிறதாகக் காட்ட இயலாது.அவர்களையும் அந்த உணர்வுக்கு அழைத்துச் செல்லத்தான் இயலும்.அதுபோல்தான் என அந்த மாணவன் எடுத்துக் கூறுவான் அல்லவா?

    பதிலளிநீக்கு
  11. ஆமாம், அந்த ஆசிரியர் நல்லவரா அல்லது கெட்டவரா?

    பதிலளிநீக்கு
  12. ERkenevE padiththirukkiREn. Mika arumaiyakavum perumaiyakavum amainthathu. Thanks for sharing!

    பதிலளிநீக்கு
  13. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற ஆசிரியர், மாணவன் கேள்வி, பதில் அருமையாக இருக்கிறது.
    ///
    சுவாரஸ்யம் அடுத்த பகிர்வுக்கு வெயீட்ங்

    பதிலளிநீக்கு
  14. middleclassmadhavi said...
    //ERkenevE padiththirukkiREn. Mika arumaiyakavum perumaiyakavum amainthathu. Thanks for sharing!//

    Most WELCOME Madam.

    I am going to disclose the actual facts, at the end of the 3rd Part.

    Thanks a Lot for your kind cooperation & keen interest shown in following/enjoying my writings of this article, in TAMIL.

    With Best Wishes

    vgk

    பதிலளிநீக்கு
  15. உணர்வு பூர்வமான விஷயம்-பாசமுள்ள பார்வையிலும் கருணை உள்ள நெஞ்சினிலும் கடவுள் வாழ்கிறார்!

    அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  16. உணர்வு பூர்வமான விஷயம்-பாசமுள்ள பார்வையிலும் கருணை உள்ள நெஞ்சினிலும் கடவுள் வாழ்கிறார்!

    அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  17. உங்கள் ஆன்மீகப் பதிவுகள் நல்ல கருத்துக்களுடன் சுவையான நடையுடன் மிளிர்கின்றன...

    பதிலளிநீக்கு
  18. ஒடிக்கொண்டிருக்கும் மேகங்கள் விண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றனவா? இல்லை மிதந்து சென்று கொண்டிருக்கின்றனவா?
    ஆத்திகமும் நாத்திகமும் இரவும் பகலும் போல. இல்லை என்று சொல்ல தமிழோவியா! இருக்கு என்று சொல்ல பல தளங்கள் அற்புதமான கருத்துக்களை சொல்லி வருகின்றன. அருமையாய் உங்களின் தெளிவான நடையில்.....தொடர் சென்று கொண்டு இருக்கின்றது.....வாழ்த்துக்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  19. இந்தப்பகுதிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும், தனித்தனியே, இதன் கடைசி பகுதியில் நன்றி கூறியுள்ளேன்:

    இணைப்பு இதோ:

    http://www.blogger.com/comment.g?blogID=1496264753268103215&postID=4775384660439001065&page=1&token=1334391699602

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  20. மின்வெட்டால் தாமதம்.
    அருமையான பதிவு.
    அருமையான விவாதங்கள்.
    தொடருட்டும் ஐயா.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. Rathnavel Natarajan said...
    //மின்வெட்டால் தாமதம்.
    அருமையான பதிவு.
    அருமையான விவாதங்கள்.
    தொடருட்டும் ஐயா.
    நன்றி.//

    தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  22. நல்லதொரு பதிவு. எனக்குள்ளே பல நாள்களாய் நான் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி.எதற்க்கும்காரணம் அறிய ஆசைப்படும் நான் இது பற்றியும் பலவாறு சிந்தித்திருக்கின்றேன். ஆனால் ஒன்று மட்டும் உணர்கின்றேன். பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் மனிதனால் ஆக்கப்பட்டுள்ள இந்நம்பிக்கை ஆழமாக வேரூன்றி இருக்கிறது.அதனால் மாணவன் இருந்தது போல் பதில் தெரியாமல் அநேகமானவர்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  23. மிகவும் சுவையாக சுவாரசியமாக இருக்கு பதிவு.மீதி பகுதிகளையும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. சந்திரகௌரி said...
    //நல்லதொரு பதிவு. எனக்குள்ளே பல நாள்களாய் நான் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி.எதற்க்கும்காரணம் அறிய ஆசைப்படும் நான் இது பற்றியும் பலவாறு சிந்தித்திருக்கின்றேன். ஆனால் ஒன்று மட்டும் உணர்கின்றேன். பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் மனிதனால் ஆக்கப்பட்டுள்ள இந்நம்பிக்கை ஆழமாக வேரூன்றி இருக்கிறது.அதனால் மாணவன் இருந்தது போல் பதில் தெரியாமல் அநேகமானவர்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.//


    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான க்ருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  25. RAMVI said...
    //மிகவும் சுவையாக சுவாரசியமாக இருக்கு பதிவு.மீதி பகுதிகளையும் படிக்கிறேன்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான க்ருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    மீதிப்பகுதிகள் இரண்டையும் படியுங்கள். vgk

    பதிலளிநீக்கு
  26. விவாதம் சூடு பறக்கிறது... தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, இது யாரு? ’திருமதி உஷா அன்பரசு’ன்னு கேள்விப் பட்டப் பெயர் போல உள்ளதே! ??????????????????

      நீக்கு
  27. விவாதம் சூடு பறக்கிறது. தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசுJanuary 3, 2013 6:25 AM
      விவாதம் சூடு பறக்கிறது. தொடர்கிறேன்//

      ஏற்கனவே சூடான விவாதம் என்று தான் எல்லோரும் சொல்லுகிறார்கள். நீங்களும் வந்துட்டீங்களா டீச்சர்.

      மிக்க மகிழ்ச்சி, வாங்கோ வாங்கோ, எங்கே வேலூரிலிருந்து நேராகப் புறப்பட்டு வந்துள்ளீர்களோ?

      அய்யோ எனக்கு இப்போ கையும் ஓடலை, காலும் ஓடலை.

      எங்க டீச்சரே வந்துட்டாங்கோ!

      யாரும் எதுவும் பேசக்கூடாதூஊஊஊஊ. அப்புறம் காதைப்பிடித்துத் திருகிடுவாங்கோ !

      இப்படிக்கு,
      ஏற்கனவே இவர்களால் காது திருகப்பட்ட மாணவன்

      கோபாலகிருஷ்ணன்.

      நீக்கு
  28. நல்லா சூடான விவாதம் தொடங்கியவுடன் தொடருமா ...இதோ கொஞ்சம் பொறுங்கள் மீம்டும் வருவேன் ...ஒரு வேலை வந்துவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரியாஸ் அஹமது January 9, 2013 6:47 PM

      //நல்லா சூடான விவாதம் தொடங்கியவுடன் தொடருமா ... இதோ கொஞ்சம் பொறுங்கள் மீண்டும் வருவேன் ... ஒரு வேலை வந்துவிட்டது//

      ஆஹா,

      விவாதம்: கடவுள் இருக்கிறாரா? இல்லையா? ... என்பது.

      விசாரம் : நீங்க திரும்பி வருவீங்களா? இல்லையா? என்பது.

      வாருங்கள். காத்திருப்பேன் காத்திருப்பேன் .. காலமெல்லாம் காத்திருப்பேன்.

      VGK

      நீக்கு
  29. ///இதில் எந்த அணியினர் வெற்றி பெறுகிறார்கள்; எந்த அணியினர் தோல்வி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களின் வாதத்திறமைகளும், நம் முன் கொண்டுவந்து வைக்கும் பாய்ண்ட் பாய்ண்ட்டான,வெகு சுவாரஸ்யமானத் தகவல்களுமே, மிகவும் பாராட்டப்பட வேண்டியவைகளாகும். ///////

    எனக்கு இதுவே மிக சிறந்த அறிவுரை ஐயா! பொதுவா பட்டிமன்றங்களைளில் முடிவு இதுவாக தான் இருக்கும் என்று கணித்து அது தவறாக போனால் கோவப்பட்டு கூட இருக்கிறேன். ஆனால் இரு அணியினரின் வாதங்களை நீங்கள் சொன்னது போல அவதானித்து புதிய தகவல்களை ஏற்றுகொண்டது இல்லை ! நான் ஒரு டியுப் லைட் ஹிஹி ..இனி உங்கள் அறிவுரை ஏற்று அவதானித்து கேட்டு பயன்பெறுவேன் இந்த பக்கத்தில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் இது அடுத்த அடுத்த பதிவுகளில் தொடர்கிறேன் .....நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவதானித்தல் என்பது இலங்கைத்தமிழா? அழகாகவே உள்ளது. நான் வேறு சிலரின் பதிவுகளில் படித்துள்ளேன். இப்போதும் உங்களிடமிருந்து அவதானித்துள்ளேன்.

      பட்டிமன்றத்தில் பேசுபவர்கள் மிகவும் சிறந்த பேச்சாளிகள். அறிவாளிகள். எந்த அணியில் பேசச்சொன்னாலும் ஏதாவது புதுப்புது பாயிண்ட்ஸ் [களை] எடுத்து விட்டு அசத்தி விடுவார்கள்.

      வக்கீலின் வாதத்திறமைகளால் மட்டுமே, கேஸ் ஜெயிக்கும். குற்றவாளியும் தப்பிக்க முடியும். அதுபோலத்தான் இதுவும்.

      தங்களின் அன்பான வருகைக்கு நன்றி.

      VGK

      நீக்கு
  30. அருமையான விவாதம். ஒவ்வொரு வரியையும் நிதானமாகப் படிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. கடவுள் இருக்கிராரா இல்லையா? ஆசிரியர் மாணவர் விவாதம் இன்ட்ரஸ்டிங்க் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  32. நம்பினவனுக்கு கடவுள்

    நம்பாதவனுக்குக் கல்

    என்னைப் பொறுத்தவரை கடவுள் இருக்கிறார், இருக்கிறார், இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  33. பூந்தளிர் June 11, 2015 at 3:02 PM
    கடவுள் இருக்கிராரா இல்லையா? ஆசிரியர் மாணவர் விவாதம் இன்ட்ரஸ்டிங்க் தொடருங்கள்

    பூந்தளிர் July 24, 2015 at 4:12 PM
    :)))

    //

    :))))))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  34. மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று (30.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    நல்ல பதிவு.

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
    எனக்கொரு உண்மை தெரிந்தாகணும் ...!

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  35. வாத்தியாரு கேள்வி பயபுள்ள பதிலு யோசிக்க வைக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 20, 2015 at 1:49 PM

      //வாத்தியாரு கேள்வி பயபுள்ள பதிலு யோசிக்க வைக்குது.//

      யோசியுங்கோ .... மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      நீக்கு
  36. பேராசிரியரின் கேள்வியும் மாணவரின் பதிலும் நம்மையும் யோசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. சிந்திக்க வைக்கும் சுவாரசியமான பதிவு. நான் - இருக்கிறார் பக்கம்...

    பதிலளிநீக்கு
  38. கிருஷ்ணர் – ஏசு கிருஷ்து – அல்லா – புத்தர் ஒருவரே.

    நமது வேதங்களில் சொன்னதை எப்படி புரிந்து கொள்வது

    நாம் வாழும் இந்த காலம் கலியுகம் ஆகும். கலியுகம் என்றால் சண்டையும் பிரச்சனைகளும் நிறைந்த ஆக இருக்கும் என்பதே இதன் அறிகுறிகள். சண்டையும் பிரச்சனையும் வரக் காரணம். மனிதனின் அடிப்படை நற்குணங்கள் இல்லாமல் போனதே காரணம். இந்த நற்குணங்கள் கருணை, ஒழுக்கம், உண்மை, தூய்மை இந்த 4 நற்குணங்களில் இருந்து விலகும் போது தவறுகள் செய்வார்கள்.

    எந்த உயிரிடமும் கருணை இல்லாமல் போனால் மாமிசம் உண்பார்கள், மனதாலும் உடலாலும் ஒழுக்கம் இல்லாமல் போனால் போதை பொருட்கள் பயன்படுத்துவார்கள். உண்மை இல்லாத போது சூது விளையாடுதல் அல்லது தவறான வழியில் பொருள்(பணம்) சேகரிப்பதும் காலத்தையும் பணத்தையும் வீணடிப்பதும் ஆகும். மனதாலும் உடலாலும் தூய்மை இல்லாத போது (திருமணத்திற்கு புறம்பான) முறையற்ற உடல் உறவில் ஈடுபடுவார்கள் என 5000 வருடங்களுக்கு முன் வேத வியாசர் தொகுத்த வேத இலக்கியங்களில் உள்ளது.
    ஆத்மா உடலை விட்ட பிறகு பாவ புண்ணியத்திற்கு தகுந்தபடி சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ சொல்வான். நரகத்தில் எவ்வளவு அடித்தாலும் எரித்தாலும் வலி துன்பம் உணரும்படியான யாதனா சரீரம் கொடுக்கப்பட்டு அவனவன் பாவத்திற்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும். மாமிசம் உண்பவர்கள் கும்பிபாகம் என்ற நரகத்தில் அந்த விலங்கிற்கு எத்தனை முடிகள் உள்ளதோ அத்தனை காலம் எண்ணை சட்டியில் போட்டு வறுக்கப்படுவார்கள். உண்மையற்று அடுத்தவர் பணம் பொருளை திருடுபவன் சந்தம்ஸம் என்ற நரகத்தில் சூடான குறடால் உடலை கிழிப்பார்கள். காப்பி டீ சாராயம் சிகரெட் போன்ற போதை வஸ்து பயன்படுத்துபவர்களுக்கு அய:பானம் என்ற நரகத்தில் உருக்கிய இரும்பை காய்ச்சி வாயில் தொடர்ந்து ஊற்றி குடிக்க செய்வார்கள். (திருமணத்திற்கு புறம்பான உடலுறவு செய்பவர்) முறையற்ற உடலுறவு செய்பவருக்கு தப்தசூர்மி என்ற நரகத்தில் ஆணுக்கு பெண் அல்லது பெண்ணுக்கு ஆண் என்றபடி இரும்பு பொம்மையை நெருப்பில் காய்ச்சி அத்துடன் கட்டித்தழுவ செய்வார்கள்

    சநாதன தர்மம் (இந்து மதம்), புத்தமதம், ஜைனமதம் இவற்றில் மாமிசம் உண்ணக் கூடாது என கூறுகிறது. இதனால் அதிகமாக வியாதிகள் வருகின்றன என விஞ்ஞானமும் கூறுகிறது.

    சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் மேலே கூறிய 4 விதமான கட்டுபாடுகள் இல்லாத விசயங்களை அதிகமாக காட்டுகிறார்கள். பெண்களை அதிகமாக கவர்ச்சி என்ற பெயரில் கேவலப் படுத்துகிறார்கள். சினிமாவும் தொலைக்காட்சியும் பார்ப்பது பணம் மற்றும் கால விரயம். மனமும் தவறான வழியில் செல்கின்றன. உதாரணமாக நாம் பெற்றோருடன் தெருவில் நடக்கும் போது ஆணும் பொண்ணும் அந்தரங்க செயல்களை வெளியே செய்தால் எந்த அளவிற்கு மனம் சுழிப்போம். ஆனால் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் மிக மோசமாக காட்டுகிறார்கள். இதை பணம் கொடுத்து மனம், புத்தி, காலம், இவை அனைத்தும் விரயம் செய்கிறோம்.

    மேலே கூறிய விசயங்கள் நம்மை பாவங்களில் இருந்து விலக்கும். அறிவுள்ள மனிதன் இதை புரிந்து கொண்டு வேத இலக்கியங்கள் கூறிய படி நடப்பான்.அறிவில் குறை உடையவர்கள் வேத இலக்கியங்களுக்கு எதிர் மறையான கேள்விகள் கேட்டு தன் மன போன போக்கில் வாழ நினைப்பவர்கள் மிருகத்திற்கு இணையானவர்கள்.

    இந்த கலியுகத்தில் யாருடைய மனதில் பாவம் செய்ய எண்ணங்கள் உள்ளதோ அவர்கள் வேதங்களையும் வேத வழி வந்த இலக்கியங்களையும் ஆன்மீக குருக்களையும் நம்ப மாட்டார்கள்.

    ஒரு பெற்றோர்கள் தனது குழந்தையை மருத்துவராக, பொறியாளராக, வழக்கறிஞராக அல்லது பெரிய பதவியியோ, பணக்காரனாக முயற்சி செய்யலாம். இதில் ஏதாவது ஒன்று உறுதியாக ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம். ஆனால் ஒன்று உண்டு அது ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம் என கூற முடியாது. அது தான் மரணம்.

    மரணத்திற்கு பின் மனிதன் என்ன ஆவான் என ஆன்மீக நூல்கள் கூறுகிறது. ஆகலாம் ஆகாமலும் போகலாம் என்ற விசயத்திற்கே எந்த அளவிற்கு முயற்சிக்கிறோம். மரணம் உறுதியாக ஆகும் என தெரிந்த பிறகு நமது நிலை என்ன என்று அறிய பகவத் கீதை ,பாகவதம் மற்றும் ஆன்மீக இலக்கியங்களை படித்து புரிந்து அதன் படி நடக்கவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KRISHNA DAS May 9, 2016 at 12:10 PM

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு