வெள்ளி, 13 செப்டம்பர், 2013

49] பாவ, புண்ணியங்கள் + எதிர்பார்ப்புகள்

2
ஸ்ரீராமஜயம்

இந்த உலகில் நாம் யாருமே பாவியாக இருக்க விரும்புவது இல்லை. ஆனால் பாப காரியமே அதிகமாகச் செய்கிறோம்.

நாம் எல்லோரும் புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணிய காரியங்கள் செய்வது இல்லை.

எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆகவே நல்லதுக்கும்கூட எதிர்ப்பு இருந்தால்தான் நம் குறை நிறை சரியாக வெளியாகும். நம்மைக் காத்துக்கொள்வதில் விழிப்பும் இருக்கும். 

ஆனால் எதிர்ப்பு என்ற பெயரில் இல்லாத கெடுதல்களைச் சொல்லி நல்லதைத் தூக்கிப் போடக்கூடாது. 

ஸ்த்ரீகள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறார்கள். அவர்களின் பண்பு கெடுவதற்கு இடம் தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது.

“வரவே சிறுத்து, செலவைப் பெருக்கினால் அது திருட்டு” என்றோர் பழமொழி இருக்கிறது.


oooooOooooo


பெரியவா கொடுத்த 

PRESCRIPTION

ஓர் சுவையான சம்பவம்


அந்தப் பையனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் பதினஞ்சு, பதினாறு வயஸுதான் இருக்கும். பாவம், தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டான்! டாக்டர்கள், வைத்யம் இதெல்லாம் ஒரு பக்கம் அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்கு பேரிடியாக ஞாபகசக்தியும் குறைந்து கொண்டே வந்தது!


சோதனை காலத்திலும் ஒரு நல்ல காலம், ஞாபகம் நன்றாக இருக்கும் போதே ["அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்று ஆழ்வார் பாடியது போல்] பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டான். 

"எனக்கு தலைவலி தாங்க முடியலே பெரியவா.... அதோட மறதி ரொம்ப இருக்கு. பாடத்தை ஞாபகம் வெச்சுக்கவே முடியலே... பெரியவாதான் காப்பாத்தணும்" அழுதான்.

"கொழந்தே! நா..... வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லேடா..... வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக்கேன்....."

பையன் நகருவதாக இல்லை. பெரியவாளிடம் prescription வாங்காமல் போவதாக இல்லை. அதற்கு மேல் அவனை சோதிக்க பெரியவா விரும்பவில்லை. 

எனவே அவனிடம், " சரி, நான் சொல்ற வைத்யம் ரொம்ப கடுமையா இருக்குமேப்பா! ஒன்னால follow பண்ண முடியாதேடா கொழந்தே!..."

"அப்டீல்லாம் இல்லே பெரியவா...... ஒங்க வார்த்தைப்படி கட்டாயம் நடக்கறேன்!

வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் பையன் முகம் ப்ரகாஸமானது.

"ரொம்ப சந்தோஷம். அந்தக் காலத்துல, முகத்தளவைன்னு ஒரு கணக்கு உண்டு. அதுப்படி, நாலு பெரிய்....ய்ய படில அரிசி, கோதுமை மாதிரி எதாவுது ஒரு தான்யத்தை அளந்து ஒரு பையில கட்டி ..... சபரி மலைக்கு இருமுடி கட்டிண்டு போறவாளை பாத்திருக்கியோ? அதுமாதிரி, அந்த தான்யத்தை ஒன்னோட தலையில வெச்சுண்டு, தெனோமும் ஒரு மைல் தொலைவு நடக்கணும்! செய்வியா?.... முடியுமா?..." 


"கட்டாயம் நடக்கறேன்....."


"இரு .... இரு.... இன்னும் நான் முழுக்க சொல்லி முடிக்கலே! ஒரு மைல் தொலைவு நடக்கறச்சே.... யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசப்....டாது! சிவ நாமாவோ, ராம நாமாவோ சொல்லிண்டிருக்கணும்! அந்த தான்யத்தை அன்னன்னிக்கி எதாவுது சிவன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ,..க்ராம தேவதை கோவிலுக்கோ எதுவானாலும் சரி, குடுத்துடணும்! இல்லாட்டா.... யாராவுது ஒரு ஏழைக்கு அதைக் குடுத்துடணும்! இதுமாதிரி பதினோரு நாள் பண்ணினியானா..... ஒன்னோட தலைவலி போய்டும்; ஞாபகசக்தியும் நன்னா வ்ருத்தியாகும்..."

பையனுக்கு ஒரே சந்தோஷம் ! "நிச்சயம் நீங்க சொன்னபடி பண்றேன் பெரியவா" விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு போனான். 

பெரியவாளின் அநுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்ததால், அவர் சொன்ன எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு பண்ணினான். ஒரே வாரத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தான்... அழுது கொண்டு இல்லை! சிரித்த முகத்துடன் வந்தான்!

"பெரியவா...... என் தலைவலி போய்டுத்து! டாக்டர்ல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டா! "என்ன மருந்து சாப்ட்டே?"ன்னு கேட்டா..... பெரியவா பண்ணச் சொன்னதை சொன்னேன்.... தலைல ஏதோ நரம்பு பிசகி இருந்திருக்கும், தான்யத்தோட வெயிட் ஏறினதும், அது சரியாகி இருக்கும்ன்னு சொன்னா! இன்னும் பாக்கி இருக்கறதையும் பண்ணிடறேன் பெரியவா"

அவன் சொன்னதை சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, ப்ரஸாதம் குடுத்தனுப்பினார். 


உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம் 

தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது!


[ Thanks to Amrutha Vahini ]




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும். 

-oOo-


சமீபத்தில் படித்ததில் பிடித்த நகைச்சுவை


ஒரு தடவை தனக்கு சினிமாவில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் தன் நண்பர் திரு. கோபாலி அவர்களிடம் விவரிக்கிறார்.

-oOo-





”டைரக்டர் என்னிடம் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத்தான் நடிக்கக் கூப்பிடுகிறார், என்று நினைத்துப் போனேன்! எனக்கு நடிக்கத் தெரியவில்லை என்று திரும்பி அனுப்பிவிட்டார்கள்”.

”அப்படி என்ன கஷ்டமான ரோல் சொன்னாங்க?”

“டெட்-பாடியா நடிக்கச்சொன்னாங்க!”

"ஹா! ஹா!!  இதுல நடிக்க என்ன இருக்கு?”

“அப்படித்தான் நானும் நினைச்சேன். ஆனா, செத்தவனா நடிக்கிறது ரொம்ப கஷ்டம்னு அப்புறம்தான் புரிஞ்சுது!”

“அப்படியா”

“ஆமாம்! நானும் கண்ணை மூடிக்கொண்டு படுத்தேன். என்மீது ஒரு தாட்டியான பெண் விழுந்து கதறுகிறாள். அந்தப் பளுவையும் தாங்கிக் கொண்டு படுத்திருந்தேன். 

திடீரென்று டைரக்டர், ‘கட்! கட்!’ என்று கத்தினார். 

’என்ன சார்?’ என்றேன். 

‘சார், நல்லா திருப்தியா சாப்பிட்டு தூங்குற மாதிரி இருக்கீங்க. டெட்பாடி மாதிரி மூஞ்சிய வச்சுக்கோங்க!’ 

நான் எத்தனை முறை செத்துப்போயும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை”

“ம்”

“அப்புறம் அவரே நடிச்சுக் காமிச்சார்!”

“அடடே”

“அவருடைய உதவியாளர் சொன்னார், ‘அப்படியே டெட்பாடி மாதிரி தத்ரூபமா நடிக்க ஒரு ஆள் இருக்கானாம்! அவனைக் கூட்டிட்டு வர்றதாச் சொன்னான்!”

“கடைசியிலே என்ன ஆச்சு?”

“சார்! மன்னிச்சுக்கோங்க! அடுத்த படத்துல நல்ல கேரக்டர் ரோல் தரேன்! டெட்பாடி வேண்டாம். உங்களுக்கு சரிப்பட்டு வராது! ஸாரின்னுட்டார்.”




இதைத் தென்கச்சி சொல்ல அந்த இடமே சிரிப்பால் அதிர்ந்தது.

[‘தென்கச்சியும் நானும்’ என்ற தலைப்பில் திரு. கோபாலி அவர்கள் ”கிழக்கு வாசல் உதயம்” என்ற மாத இதழில் ’நிரம்பி வழியும் காலிக்கோப்பை’ என்ற பகுதியில் எழுதியுள்ளது. ]

-oOo-




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

59 கருத்துகள்:

  1. அன்பின் வை.கோ

    நாம் புண்ணியம் செய்வதை விட பாவம் அதிகம் செய்கிறோம் - என்ன செய்வது - வாழ்க்கையில் இப்படித்தான் நடக்கிறது - மாறுவோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. /// எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்... ///

    அதை விட

    எதிர்ப் பார்ப்பு ---> அவசரம் ---> ஏமாற்றம் ---> பொறுமையின்மை ---> சின்னதாக எரிச்சல் ---> பயம் ---> கோபம் ---> பொறாமை ---> பழி வாங்கும் எண்ணம் ---> பேராசை ---> கெட்ட பழக்கம் (குடி, புகை, சூது, இன்னும் பல) ---> மனச் சோர்வு ---> கெட்ட பழக்கம் தினமும் வழக்கமாகுதல் ---> அடுத்தவர்களை கஷ்டப்படுத்துதல் ---> பொறுப்பின்மை ---> பிடிவாதம் ---> மதிப்பு குறைதல் (வீட்டிலும் வெளியிலும்) ---> எதற்கும் கவலைப்படாமை ---> பணம் குறைதல் ---> பொய் பேசுதல் ---> கடன் வாங்குதல் ---> ஏமாற்றுதல் ---> இன்னும் பல கெட்ட குணங்கள் ---> உடல் நலம் குறைதல் ---> திடீர் மரணம் ---> குடும்பம் ???

    பதிலளிநீக்கு
  3. Reading your posts about Kanji periyava makes me feel reaaly good and blessed.Thanks a lot for sharing the greatness of Kanji periyava

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Harini M September 13, 2013 at 1:32 AM

      வாங்கோ, வணக்கம்.

      //Reading your posts about Kanchi Maha periyava makes me feel really good and blessed.

      Thanks a lot for sharing the greatness of Kanchi Maha periyava//

      இந்தத்தொடரின் பகுதி-35 மற்றும் பகுதி-39 முதல் பகுதி-49 வரை தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம்.

      நடுவில் ஒரே ஒரு பகுதி மட்டும் அதாவது பகுதி-48 மட்டும் தாங்கள் வருகை தராமல் விடுபட்டுப்போய் உள்ளது.இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2013/09/48.html

      இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன் VGK

      நீக்கு
  4. அன்பின் வை.கோ

    // சோதனை காலத்திலும் ஒரு நல்ல காலம், ஞாபகம் நன்றாக இருக்கும் போதே ["அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்று ஆழ்வார் பாடியது போல்] பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டான். //

    // பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்
    தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது! //

    அதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் அனுக்ரஹம்.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வை.கோ

    தென்கச்சியின் நகைச்சுவை கிறைவே இல்லாதது

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. /// நான் எத்தனை முறை செத்துப்போயும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை... ///

    ஹா... ஹா... சாவதிலும் கூடவா...?

    மனிதனுக்கு கடைசி வரை இருக்கும் குணம் என்ன...? : http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_14.html

    மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?

    http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_09.html

    தங்களின் கருத்துக்களை இப்பதிவுகளில் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் September 13, 2013 at 1:37 AM

      //மனிதனுக்கு கடைசி வரை இருக்கும் குணம் என்ன...? : http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_14.html

      மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?

      http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_09.html

      தங்களின் கருத்துக்களை இப்பதிவுகளில் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன் ஐயா... நன்றி...//

      தகவலுக்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி.

      பார்த்தேன், படித்தேன், ரஸித்தேன், கருத்துக்களுக்கும் கொடுத்துள்ளேன்.

      அன்புடன் VGK

      நீக்கு
  7. மிகவும் சந்தோசம் ஐயா... இது போல் கொடுத்த இணைப்பில் வாசித்து விட்டு ஊக்கம் தரும் கருத்துக்கள் யாரும் சொல்வது கிடையாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. As far as I am concerned, FEEDBACK is very very Important.

      I like you very much, ONLY for your very quick feedback in all the Blogs then & there.

      All the Best !

      நீக்கு
  8. என் சகோதரி, துணைவி என உடல்நலத்திற்காக.......... பற்பல மன வருத்தம் இருந்தாலும் இந்த இணையம்... உங்களின் கருத்துரை மனதிற்கு மகிழ்ச்சி... நன்றிகள் பல...

    9944345233

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன்
      September 13, 2013 at 2:07 AM

      //என் சகோதரி, துணைவி என உடல்நலத்திற்காக.......... பற்பல மன வருத்தம் இருந்தாலும் இந்த இணையம்... உங்களின் கருத்துரை மனதிற்கு மகிழ்ச்சி... நன்றிகள் பல... 9944345233 //

      இனிய நண்பரே ! இருகோடுகள் தத்துவமே !

      இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பார்கள்.

      எனக்குள்ள மனவருத்தங்களை நான் வெளியே யாரிடமும் சொல்லிக்கொள்வது இல்லை.

      ஏராளமாகவும் தாராளமாகவும் உள்ளன.

      நாளை காலை அவசரமாக நானும் என் துணைவியாரும் மட்டும் ஒரு ஏ.ஸி. காரில் புறப்பட்டு சென்னை சென்றுவிட்டு, அதே காரில் மறுநாள் ஞாயிறு இரவுக்குள் திரும்ப உள்ளோம்.

      நாளை சனிக்கிழமை இரவு படுக்கை மட்டும் சென்னை T NAGAR இல் உள்ள ஒரு STAR HOTEL இல்.

      என் மனம் சற்றே அமைதியாக இருக்கும்போது கட்டாயம் உங்களை கைபேசியில் நிச்சயமாகத் தொடர்பு கொள்கிறேன்.

      வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ளுங்கள்.

      எதற்கும் கவலைப்பட்டு மனதை மேலும் மேலும் வருத்திக்கொள்ளாதீர்கள்.

      ஏதோ உங்களுக்கு நான் ஆறுதலாக பதில் அளிக்க முடிகிறது. ஆனால் எனக்கு ?????

      ஆண்டவனும் அம்பாளும் இருக்கிறார்கள் !

      ஆனால் பதில் ஏதும் தரவே மாட்டார்கள் ;(

      அன்புடன் VGK

      நீக்கு
    2. Eversmiling DD

      துன்பங்கள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் ஓடும் தண்ணீர் போன்றது. அது எப்போதும் நிற்காது ஓடிவிடும். அதுபோலதான் வாழ்வில் வரும் துன்பங்களும்.இன்பத்தை எதிர்கொள்வதுபோலவே துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டும். காலபோக்கில் இரண்டும் ஒன்றுதான் என புரியும்.Face the troubles-then it will leave you in a phased manner.இடுக்கண் வருங்கால் நகுக-திருவள்ளுவர் உங்களுக்காக ஒரு குறளை போட்டிருப்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  9. பெரியவாளின் அமுத மொழிகளும் தலைவலி தீர்த்த கதையும் சிறப்பாக பகிர்ந்து ஆன்மீக கடலில் திளைக்க வைத்தீர்கள்! தென்கச்சியின் நகைச்சுவை ரசிக்க வைத்தது.

    \\ ஆண்டவனும் அம்பாளும் இருக்கிறார்கள் ஆனால் பதில் தரவே மாட்டார்கள்\\ என்று டிடியின் பின்னூட்டத்திற்கு பதில் தந்திருந்தீர்கள்!
    ஒருவிதத்தில் உண்மை தான்! நம் கஷ்டங்களை கடவுளிடம் கொட்டுகிறோம்! ஒருவித ஆறுதல் அடைகிறோம்! மற்றபடி கர்மா என்ற ஒன்றை நாம் அனுபவித்து தானே ஆக வேண்டும்! பதில் தராத கடவுள் சில சமயம் பரிசினையும் தருவார்! காத்திருப்போம்! நல்ல நல்ல பதிவுகளை தரும் தங்கள் பிரச்சனையும் விரைவில் தீரும்! டிடியின் சகோதரியும் துணைவியும் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. ஸ்த்ரீகள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறார்கள். அவர்களின் பண்பு கெடுவதற்கு இடம் தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது.

    ஸ்த்ரி தர்மத்தை அனுசரிக்க துணைபுரியவேண்டும்..!

    பதிலளிநீக்கு
  11. பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம் தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது!

    அனுக்ரஹ அமுதம் ..!

    பதிலளிநீக்கு
  12. ’நிரம்பி வழியும் காலிக்கோப்பை’ என்ற பகுதியில் எழுதியுள்ளது நகைச்சுவையாக ரசிக்கவைத்தது..

    பதிலளிநீக்கு
  13. எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆகவே நல்லதுக்கும்கூட எதிர்ப்பு இருந்தால்தான் நம் குறை நிறை சரியாக வெளியாகும். நம்மைக் காத்துக்கொள்வதில் விழிப்பும் இருக்கும்.

    எதிர்ப்பும் நம் முன்னேற்றத்திற்கு
    உரமாக துணைபுரிகிறது..!

    பதிலளிநீக்கு
  14. சிறுவனின் நம்பிக்கை தான் அவனை பெரியவா கைவிடாமல் தலைவலியைப் போக்கி, மறுவாழ்வு கொடுத்தார் என்றால் பிழை ஆகாது.
    தென்கச்சியின் நகைச்சுவை எப்பவுமே டாப்!

    பதிலளிநீக்கு
  15. ஸ்த்ரீகள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறார்கள். அவர்களின் பண்பு கெடுவதற்கு இடம் தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது.//

    ஸ்த்ரீகள் தான தர்மத்தை வளர்க்கும் தீபங்களாக என்றும் இருக்க
    பெரியவர் அவர்களின் ஆசி எப்போதும் உடன் இருக்கட்டும்.

    //உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்

    தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது!//

    சிறுவன் முன்பு செய்த பாவ சுமையை தானம் செய்ய வைத்து, சிறுவனின் தலை பாரத்தை போக்கி விட்டார். சிறுவன் பெரியாவாளுடைய அநுக்ரஹத்தால் நலம் பெற்று எல்லோருக்கும் எடுத்து காட்டாய் திகழ்கிறான். பாவ மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போகாதீர்கள். எல்லோருக்கும் நல்லது செய்து முன்பு செய்த பாவத்தையும், அறிந்து செய்த பாவத்தையும் அறியாமல் செய்த பாவத்தையும், போக்கி வாழலாம் என்று சொல்கிறார் பெரியாவா அவர்கள்.

    தென்கச்சி அவர்களின் நகைச்சுவை பகிர்வு அருமை.
    நல்ல செய்திகளை படிக்க தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்,
    நன்றிகள்.

    ஆண்டவனும் அம்பாளும் இருக்கிறார்கள் !

    ஆனால் பதில் ஏதும் தரவே மாட்டார்கள் ;(//

    உங்களுக்கு என்றும் ஆண்டவன் நல்ல பதில் தருவார்.
    எல்லோருக்கும் மனத்துயரங்கள் இருக்கும் ஆனால் அதை எதிர் கொள்ளும் மனதிடத்தை அருள இறைவன் துணை வேண்டும்.
    இறைவன் அருள்வார் உங்களுக்கு.


    பதிலளிநீக்கு
  16. http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_13.html

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  17. எங்க வீட்டிலே நிலைப்படியிலே தலை வைச்சு அல்லது ஒரு படி அளவு அளக்கும் படியைத் தலைக்கடியிலே வைச்சுப் படுக்கச் சொல்வாங்க. :))) சரியாயிடும்.

    டிடியின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவப் பிரார்த்தனைகள். அவர் சுட்டி கொடுத்திருக்கும் பதிவுகளையும் நேரம் கிடக்கையில் படிக்கிறேன். சில முறைகள்/பல முறைகள் படித்தாலும் பின்னூட்டாமல் வந்துடுவேன். :))))

    பதிலளிநீக்கு
  18. ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பம் -திருமூலர்
    ஆசையே துன்பத்திற்கு மூல காரணம் -புத்தர்
    ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்-திருமூலர்.

    சின்ன சின்ன ஆசை பெரிதாகி பேராசையாக பெருகி
    நிராசையாக சுருங்கி புறப்பட்ட இடத்திற்கே செல்லுவதுதான் மனித வாழ்க்கை

    பதிலளிநீக்கு
  19. அன்புடையீர்!.. தங்களின் தளம் - வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  20. பரமாச்சாரியார் அந்தப் பையனைச் செய்யச் சொன்ன
    காரியத்தில்தான் செயல் நம்பிக்கை தானம் என்ற
    மூன்றும் அடங்கியிருக்கிறதே
    மருந்து மாத்திரைகளை விட வலுவானவைகள்
    அல்லவா அவைகள்
    மன அழுக்கெடுக்கும் அருமையான பதிவுகளுக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  21. எந்த விதத்ததிலோ பெரியவரின் அருளாசி கிடைத்தது, தலைவலி நீங்கியது,எல்லாம் ஸாதாரண காரியமா?இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் படிக்கும் போதாவது நல்லகாரியங்களின் பலன்கள் தெரியவந்து
    கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமாவது தோன்றும் அல்லவா.
    மஹாப் பெரியவர்களின் அமுத மொழிகள் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவைகள். உங்கள் வலைப்பூ படிக்க அமைதி கிடைக்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  22. தென்கச்சியாரின் நகைச் சுவை நன்று! பெரியவா என்றும் பெரியவா தான்!ஐயமில்லை! நீண்ட நாளுக்குப் பின் தங்கள் பதிவைப்
    படிக்கிறேன் தொடர வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  23. பக்திச்சுவை சொட்டச் சொட்ட தங்களது பதிவு அமைந்துள்ள விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது அய்யா. அன்பான நன்றிகள் தங்களுக்கு. பெரியவாளின் அற்புதம் அருமை. பக்தி மற்றும் சிரிப்பு இரண்டிலும் கலக்குறீங்க அய்யா. பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  24. சிறப்பான அமுத மொழிகள்.....

    தென்கச்சி சொன்ன நிகழ்ச்சியை ரசித்தேன்.

    தொடரட்டும் அமுத மொழிகள்.

    பதிலளிநீக்கு
  25. //எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆகவே நல்லதுக்கும்கூட எதிர்ப்பு இருந்தால்தான் நம் குறை நிறை சரியாக வெளியாகும். நம்மைக் காத்துக்கொள்வதில் விழிப்பும் இருக்கும்.
    ஆனால் எதிர்ப்பு என்ற பெயரில் இல்லாத கெடுதல்களைச் சொல்லி நல்லதைத் தூக்கிப் போடக்கூடாது. //
    அருமை சார்!

    பதிலளிநீக்கு
  26. மெய் சிலிர்க்கும் நிகழ்வு.!வைத்தீஸ்வரன் ஆயிற்றே!

    பதிலளிநீக்கு

  27. உணவில் பல சுவைகள் இருப்பதுபோல் வாழ்விலும் எல்லாவிதமான உணர்வுகளும் இருக்கும்... இருக்கவேண்டும் அப்படி இருப்பதைதான் வாழ்க்கை என்கிறோம். எல்லோரும் எப்போதும் ஆனந்தமாகவோ நல்லவர்களாகவோ இருந்துவிட்டால் வாழ்க்கை சுவைக்குமா, அனுபவங்கள்தான் கிடைக்குமா.. பதிவில் பகிர்ந்துள்ள விஷயங்களிலும் பல் சுவை இருக்கிறதே பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  28. எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆகவே நல்லதுக்கும்கூட எதிர்ப்பு இருந்தால்தான் நம் குறை நிறை சரியாக வெளியாகும். நம்மைக் காத்துக்கொள்வதில் விழிப்பும் இருக்கும். //

    அருமையான அமுதமொழி! தென்கச்சி அவர்களின் நகைச்சுவை இரசித்தேன்! நம்பினார் கெடுவதில்லை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  29. வரவே சிறுத்து, செலவைப் பெருக்கினால் அது திருட்டு” என்றோர் பழமொழி இருக்கிறது.//

    புதுசாக இருக்கு, ரசித்தேன்ன்.. உண்மைதான்ன்..


    oooooOooooo


    பெரியவா கொடுத்த

    PRESCRIPTION//

    கதை சூப்பர். குட்டிச் சம்பவம் நினைவுக்கு வருகிறது, ஊருஇலே ஒருவருக்கு நடக்க முடியாமல் முழங்காலில் ஏதோ பிரச்சனை வந்துவிட்டதாம், அப்போ நாட்டு வைத்தியரிடம் போனாராம், அவர் மிகவும் கெட்டிக்கார வைத்தியர்... அவர் இவரைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் தள்ளி நிற்கச் சொன்னாராம்ம்..

    பின்பு வைத்தியர் எழுந்து, வேஷ்டியை மடிச்சுக் கட்டினாராம், கொஞ்சம் பின்னே போய், ஓடிவந்து ஒரு உதை கொடுத்தாராம் இவரின் காலுக்கு, அத்தோடு எல்லாம் சரியாகி விட்டதாம்:).. இது முந்தின காலத்தில் நடந்ததாக சொல்லிச் சிரிப்பார்கள், எந்தளவுக்கு உண்மை எனத் தெரியாது, ஆனா அக்காலத்தில், பார்த்தவுடன் அவர்களுக்கு தெரிந்துவிடும் என்ன பிரச்சனை என்பது..

    பதிலளிநீக்கு
  30. நகைச்சுவை படித்து மீயும் சிரிச்சேன்.. இறந்தவராக நடிப்பது எவ்ளோ கஸ்டம்.. அந்நேரம் ஏதும் எறும்பு கடிச்சலும் ஆடாமல் இருக்கோணுமெல்லோ:).

    பதிலளிநீக்கு
  31. வைகோ சார்,
    நம்பிக்கை தான் வாழ்க்கை. மஹா பெரியவரின் மேல் சிறுவன் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகாமல் அவனைக் காப்பாற்றியது.
    நல்லதொரு பதிவு. இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக கடவுள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை இன்னும் பன்மடங்காகும் வாய்ப்புகள் அதிகம்.
    நன்றி .

    பதிலளிநீக்கு
  32. நாம் எல்லோரும் புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணிய காரியங்கள் செய்வது இல்லை.
    ஆம் ஐயா
    மனிதனிடம் ஆசை இருக்கின்றது
    முயற்சி இல்லை

    பதிலளிநீக்கு
  33. தலைவலி சரியானதும் அந்த பையனுக்கு கிடைத்த சந்தோஷம் எனக்கே கிடைத்தது போன்றதொரு உணர்வு.

    தென்கச்சி சுவாமிநாதன் அவர்களது அனுபவமும் அருமை.

    திண்டுக்கல் தனபாலன் வீட்டில் மகிழ்ச்சி பெருக என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  34. பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்
    தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது!

    அற்புதமான வைத்தியம் !

    பதிலளிநீக்கு
  35. நம்பிக்கை தானே எல்லாம்..படிக்கும் போதே மகிழ்ச்சியா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  36. பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம் – நம்பிக்கையின் அடிப்படையில் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. அந்த சிறுவனின் நம்பிக்கை வீண் போகவில்லை. தென்கச்சி சுவாமிநாதன் நகைச்சுவை பேச்சினை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  37. தென்கச்சி சாரின் நகைச்சுவையையும் நிலைமையையும் நினைத்துப் பார்த்தேன்,கஷ்டம் தான்.நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  38. ஐயா தங்களுக்கு இனிமையான சூழ்நிலைகள் அமைய கடவுளை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  39. உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்

    தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது

    How to get Periyavals anugragham?
    viji

    பதிலளிநீக்கு
  40. \\“வரவே சிறுத்து, செலவைப் பெருக்கினால் அது திருட்டு” என்றோர் பழமொழி இருக்கிறது.\\

    இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் தேவையான செய்தி.

    மகாபெரியவர்பால் சிறுவன் கொண்ட நம்பிக்கை பொய்க்கவில்லை. சிறப்பான பகிர்வு.

    தென்கச்சியாரின் நகைச்சுவைக்கு கேட்கவா வேண்டும்? முகத்தில் எந்த உணர்வையுமே காட்டாமல் நம்மை நகைக்கவைக்கும் அவரது திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன்.

    பல்சுவைப் பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  41. பெரியவா...... என் தலைவலி போய்டுத்து! டாக்டர்ல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டா! "என்ன மருந்து சாப்ட்டே?"ன்னு கேட்டா..... பெரியவா பண்ணச் சொன்னதை சொன்னேன்.... தலைல ஏதோ நரம்பு பிசகி இருந்திருக்கும், தான்யத்தோட வெயிட் ஏறினதும், அது சரியாகி இருக்கும்ன்னு சொன்னா! இன்னும் பாக்கி இருக்கறதையும் பண்ணிடறேன் பெரியவா"//

    மீண்டும் ஒருமுறை படித்து மெய் சிலிர்த்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  42. அமுதமழையில் நனைகின்றோம்.

    நகைச்சுவை ரசனையாக இருந்தது.

    அனைவரினதும் மனத்துயரங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள் புரிவானாக.

    பதிலளிநீக்கு
  43. Very important and interesting information sir, thank you for sharing it with us. I like the joke a lot, was funny...

    பதிலளிநீக்கு
  44. அன்பு நன்றி கருணை கொண்டவன் மனிதவடிவில் தெய்வம் அதுதான் மாதா பெண்கள்தான் ஆண்கள் செய்யும் அனைத்து கர்மாக்களுக்கும் உதவிசெய்கிறார்கள் அதனால்தான் நற்பலன்களில் பாதிஅவர்களுக்குசென்றுவிடும் கர்மசாத்குண்யம் அவர்கள் தக்ஷிணையில்
    தீர்த்தம் விட்டால்தான் பலன்கிடைக்கும் எனவே நமது சாஸ்த்திரங்களில் பெண்களுக்கு அதிகாரம் நிறைய சொல்லியிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  45. எது எதற்கு யாரிடம் தீர்வு கிடைக்குமோ அவரிடம் போவதுதான் உத்தமம்.

    பதிலளிநீக்கு
  46. ஸ்ரீ மஹா பெரியவாளோட அநுக்கிரகமும் ஆசிகளும் இருந்தா தீராத வியாதிகளும் கஷ்டங்களும் நிவர்த்தி ஆயிடும்

    பதிலளிநீக்கு
  47. பெரியவா சன்னதியில இப்படி ஒன்று, இரண்டல்ல பல நூறு நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. இப்பதான் அதெல்லாம் கொஞ்சம், கொஞ்சமா வெளிச்சத்துக்கு வருது.

    எத்தத் தின்னா பித்தம் தெளியும்ன்னு இருக்கற மனுஷனுக்கு இதெயெல்லாம் படிக்கும் போது நம்பிக்கை வரும்.

    தென்கச்சியின் நகைச்சுவை எப்பொழுதும் போல் ரசித்து, சிரிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  48. இந்த சம்பவமும் நல்லாருக்குது

    பதிலளிநீக்கு
  49. தென்கச்சியாரின் நகைச்சுவை சிரிப்பை வரவழைத்தது. பெரியவா " நான் வைத்திய சாஸ்த்திரமெல்லாம் படித்தத்ல்லை" என்று சொல்லிக்கொண்டே வைத்தியராலும் தீர்க்க முடியாத வலி வேதனையை தீர்த்து வச்சிருக்காளே.

    பதிலளிநீக்கு
  50. ஸ்த்ரீகள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறார்கள். அவர்களின் பண்பு கெடுவதற்கு இடம் தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது./// பெண்கள் சமுதாயத்தின் சிற்பிகள் அல்லவா?

    பதிலளிநீக்கு
  51. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (24.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=422690968233603

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு