ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

VGK-34 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் !


 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-34  


 ’ பஜ்ஜீன்னா .... 


 பஜ்ஜி தான் !’  



இணைப்பு:


   


 

    

தமிழ்ச் சிறுகதை உலகின் திருப்புமுனையாக இருந்த சிறுகதைச் சக்ரவர்த்தி புதுமைப்பித்தனின் சிறுகதையைத் தான் படிக்கிறோமோ என்று திகைக்க வைக்கும் ஆரம்பம்.   அந்த ராட்சஸ பம்ப் ஸ்டெளவ் பற்ற வைத்து பரபரவென்று எரிகையில் அந்த ஓசையை உணருகிற மாதிரியேவான எழுத்து. எண்ணெய்க் கொப்பரையின் ஃபர்னஸ் அனல் நம் மேலேயே அடிக்கிற மாதிரி இருக்கிறது. பார்வை லென்ஸ் ஒன்றையும் விட்டு வைக்காமல் பார்த்து ரசித்து உள்வாங்கியது எழுத்தாய் வெளிப்பட்டிருக்கிறது.  தவம் கிடந்தாலும் எல்லோராலும் இந்த அளவுக்கு நேரேட் பண்ண முடியாது என்பது வாஸ்தவம் தான்.

 

     - ஜீவி    

     



மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  




நடுவர் திரு. ஜீவி






நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



ஐந்து






இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 






    

முதல் பரிசினை முத்தாக

வென்றுள்ள விமர்சனம் - 1


பஜ்ஜினா பஜ்ஜிதான்' என்றத் தலைப்பைப் படித்துவிட்டு சுவாரசியமான நகைச்சுவைக் கதையாக இருக்கும் என்று தொடர்ந்து படித்தால், கணிப்பில் பாதி சரி என்பது விரைவில் புரிந்து விடுகிறது. சுவாரசியமான கதை. சிரிப்புக்குப் பதில் சீரியஸ். 

கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. புடலங்காய். சிறிதாகக் கூட எதுவும் இல்லை. பின்னே? 

கடன் தர விரும்புகிறார் ஒருவர். 'கடன் வேண்டாம், இருக்கும் நிலையே போதும்' என்று மறுத்து விலகுகிறார் இன்னொருவர். அவ்வளவு தான். அரை வரி கூட இல்லை.

இதையெல்லாம் கதை பண்ணுகிறாரே கோபாலகிருஷ்ணர், வொய்? நியாயமா, நீங்களே சொல்லுங்கள்?


சாதாரண நிகழ்வுகளைச் சிறுகதையாக்கும் நகாசு பற்றி இனிப் புலம்பவோ வியக்கவோ போவதில்லை. இது கதாசிரியரின் கற்பனை ரேகை. இது தான் இவர் முத்திரை. பிடித்தால் படி, பிடிக்காவிட்டால் நடையைக் கட்டு என்று எனக்கு நானே அறிவுரை சொல்லிக்கொண்டாலும் 'இது என்னய்யா இது! இவருக்கு மட்டுமே தெரிந்த அக்கிரம வித்தையாக இருக்கிறதே?' என்று ஒரு கணம், ஒரு கணமாவது, கழிவிரக்கத்தோடு சலிக்காமல் இருக்க முடியவில்லை.



கடன் குடியைக் கெடுக்கும் - இந்த போதனை கதை(?)யின் வேராக இழைந்திருக்கிறது. நேற்றைய நாளைய என்று எந்தக் காலத்துக்கும் பொருந்தும் என்றாலும், இன்றைய வணிக யுகத்துக்கான மிக முக்கியமான போதனைகள் மூன்று உண்டென்றால், அவற்றில் முதலிரண்டு 'கடன் வாங்காதே' என்பதே. மூன்றாவது, 'கடன் கொடுக்காதே' என்பதாகும் :-).



இதை ஒரு மிகச் சிறிய கதை வழியாக மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். 



கருணை என்பது வானிலிருந்து விழும் தேன்துளி போன்றது. இருமுறை ஆசீர்வதிக்கப்பட்டது கொடுப்பவருக்கும் ஆசி. பெறுபவருக்கும் ஆசி. இது அந்த சேக்கண்ணாத்தை சொன்னது.



கடனும் ஒருவகையில் அப்படித்தான். என்ன வித்தியாசம்? இது வானிலிருந்து விழும் சேற்று நீர் போன்றது. இருமுறை சபிக்கப்பட்டது. கொடுப்பவருக்கும் சாபம். பெறுபவருக்கும் சாபம். இது இந்த பேக்கண்ணாத்தை சொன்னது.



கடன்பட்டார் நெஞ்சம் பற்றி கம்பனிலிருந்து சேக்கண்ணாத்தை வரை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகும் நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். 

கடன்படுவது ஏறக்குறைய அடிமையாவது போல. ஒரு விதத்தில் அடிமைத்தனத்தை விடக் கொடுமை. கடன் பட்ட சுமையை காலம் முழுதும் சுமக்க வேண்டிய அவமானம் கடன் பட்டவருக்கே தெரியும். வாழ்க்கையில் கடன் படாமல் வாழ்வதில் இருக்கும் நிம்மதியும் சுதந்திரமும் எத்தனை அடிபட்டாலும் அழுதாலும் புரிவதில்லை. வாழ்வின் முக்கிய வரம் கடனில்லாமல் வாழ்வதே. இதைத் திரும்பத் திரும்பக் கடைசி பத்திகளில் சொல்கிறார் கதாசிரியர். படிக்கையில் அப்படியே மூழ்கிவிட்டேன். ஒரு சில இடங்களில் 'என்னைப் பற்றிச் சொல்கிறாரே, இவருக்கு எப்படி விஷயம் தெரிந்தது?' என்ற பயமே வந்துவிட்டது.

இலக்கை நோக்கிக் கேமரா நகரும் வித்தை போல கதையின் தொடக்கத்தில் பஜ்ஜிக்கடைக்கு இன்னொரு பார்வை வழியாக அழைத்துச் செல்லும் உத்தி பிடித்தது. சாலை, முச்சந்தி, கோவில், இஸ்திரிபெட்டிக்காரர் என்று அங்கே இங்கே நகர்ந்த கதைக்கேமரா பஜ்ஜிக் கடை முன் நிற்கிறது. பஜ்ஜிக்கடைகளுக்குச் சென்று எத்தனையோ முறை வாழைக்காய் வெங்காயம் என்று பஜ்ஜிகளை வாங்கி பகாசூரம் செய்திருக்கிறேனே தவிர இது வரை கடையில் நடக்கும் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியதில்லை. தெருவோர பஜ்ஜிக் கடைகளில் இத்தனை தொழில் நுணுக்கம் இருக்கிறதா என்று வியக்க வைத்தது கதாசிரியரின் விவரணை. பஜ்ஜி போட ஒருவர், பஜ்ஜி போட உதவி மற்றும் வணிக மேற்பார்வைக்கு ஒருவர் என்ற இரு நபர் ஆபரேஷனை மிக நுணுக்கமாக விவரித்திருக்கிறார். ஒரு பெருநகரின் நாற்சந்தியில் நிற்பது போன்ற பிரமையை உண்டாக்கியது. பஜ்ஜிக் கடையின் காய்ந்த எண்ணை மணம் கூட வந்தது என்று சொல்வேன். கதைக்கரு சொற்பமாக இருந்தால் இத்தகைய விவரங்களில் நகர்த்த அதிகத் துணிச்சல் வேண்டும். கதாசிரியரிடம் இருக்கிறது. விவரங்களின் நேர்மை சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

'சரி, பஜ்ஜிக்கடையில் ஏதோ நிகழப் போகிறது' என்று நினைத்தால் மெதுவாக வருகிறார் கதாநாயகர். வங்கி மேலாளர். பஜ்ஜிக்கடையில் புலப்படும் உழைப்பும் முனைப்பும் இந்த வங்கி மேலாளரைக் கவர்கிறது. பஜ்ஜிக்கடை வளர விரும்புகிறார். பண உதவி செய்ய விரும்புகிறார். 

ஆ! இதெல்லாம் நடக்கிற காரியமா? எந்த வங்கி மேலாளர் இப்படி சிறுதொழில் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்கிறார்? 'இதென்ன கூத்தாக இருக்கிறதே' என்று வியந்தாலும், வங்கி மேலாளரின் மனநிலை புரிந்து மனமார வாழ்த்தத் தோன்றியது. என் வாழ்வில் இது போன்ற வங்கி மேலாளர்களை ஏன் சந்திக்கவில்லை என்று விதியை நொந்து கொள்ளத் தோன்றியது.



கதாசிரியர் விதியையும் விடவில்லை. தொழில் வாய்ப்பைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்:



"அவரவர் தலைவிதிப்படி, அவரவர் விருப்பப்படி,  அவரவருக்கு ஏதோ ஒரு உத்யோகம் அமைகிறது. நாம் அதில் முழு ஈடுபாட்டுடன், உண்மையாக உழைத்து, திறமையை வளர்த்துக் கொண்டால், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடிகிறது. அவரவர் வேலைகள் பழக்க தோஷத்தினால், அவரவருக்கு சுலபமானதாகவும், மற்றவர்கள் பார்வைக்கு அதே வேலை மிகக் கடினமானதாகவும் நினைக்கத் தோன்றுகிறது." 



விதியில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், இந்த ரீதிச் சிந்தனைகள் மனதில் ஓடியதுண்டு. ஓடுவதுண்டு. என்னை விட பல வகைகளில் குறைந்த தகுதியுடையவர்கள் எப்படி என்னை விட மேலான வாழ்க்கையும் தொழில் முறை வெற்றியும் செல்வமும் செல்வாக்கும் பெறுகிறார்கள் என்று நினைப்பதுண்டு. 'என்னைப் பற்றி இப்படி சிலர் நினைக்கலாமே?' என்ற நினைப்பு வந்தவுடன் இத்தகைய சிந்தனைகளின் கண்மூடித்தனம் உடனே விலகிவிடும் என்றாலும், முற்பிறவிப் புண்ணியம், விதி என்ற போர்வையில் அவ்வப்போது என் இயலாமை மற்றும் தோல்விகளை மூட எண்ணுவதுண்டு. 

கதாசிரியர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். 'உத்யோகம் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்கிறார். 

விதிப்படி கிடைத்த பஜ்ஜிக் கடைத் தொழிலை வெற்றிகரமாகச் செய்து வரும் முதலாளிக்கு உதவி செய்ய எண்ணிய வங்கி மேலாளர், அட்டெண்டர் ஆறுமுகம் (அந்த முகமா இந்த முகம்? ஒரு கதைமாந்தரை இன்னொரு கதையில் புகுத்துவது எனக்கும் பிடிக்கும்), வழியாக கடை முதலாளிக்கு செய்தி அனுப்புகிறார். ஆறுமுகம் வேறுமுகத்தோடு திரும்புகிறார். வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் முதலாளி வங்கி மேலாளரைப் பார்க்க முடியாமல் போனதாகச் சொல்கிறார் ஆறுமுகம்.

இங்கே ஒரு ஆச்சரியம். பஜ்ஜிக்கடை முதலாளி பற்றிய முதல் அபிப்பிராயம் இந்த இடத்தில் ஏற்படுகிறது. முதல் கணிப்பு முக்கிய கணிப்பு என்பது போல, முதல் கணிப்பிலேயே ஒரேயடியாக உயர்ந்து விடுகிறார் பஜ்ஜிக்கடை முதலாளி. 'வாடிக்கையாளரைக் கவனிப்பதை விட எதுவும் முக்கியமில்லை' என்ற சேவை மனப்பாங்கு எத்தனை பேரிடம் இருக்கிறது? வியாபார நுணுக்கம் இங்கே இந்த இடத்தின் இந்த வரிகளில் புதைந்திருக்கிறது நண்பர்களே. இதற்காக மேலாண்மைக் கல்லூரிகள் போய் படிக்க வேண்டியதில்லை. தொழில் வெற்றிக்கு வித்து இவை தான். உழைப்பு, முனைப்பு, வாடிக்கையாளர் மேலான மதிப்பு. இன்று போய் நாளை வருவதாக பஜ்ஜிக்கடை முதலாளி சொல்வது ரசிக்கவும் பாராட்டவும் வைத்தது.

வங்கி மேலாளர் வீட்டுக்கு மறுநாளோ பிறகோ வருகிறார் பஜ்ஜிக்கடை முதலாளி, அழைத்த விவரம் சொல்கிறார் மேலாளர். கடையை மேம்படுத்திப் பெருக்க வங்கியிலிருந்து நிதியுதவி செய்ய விரும்புவதாகச் சொல்கிறார். அவருக்குத் தெரியும், இந்தக் கடன் நிச்சயமாகத் திரும்பி வரும் என்று. இருந்தாலும் தொழில் தர்மத்தையும் சுயதர்மத்தையும் கலந்து அவர் உதவ முன்வருவதை ரசிக்கையில், பஜ்ஜிக்கடைக்காரர் பணால் என்று குண்டு போடுகிறார். 'கடன் வேண்டாம் சுவாமி' என்கிறார்.  

'ஏன் மறுத்தீர்கள்?' என்று கேட்டால், பஜ்ஜிக்கடைக்காரர் பகவத்கீதை சொல்கிறார்: 'என் கடமையைச் செவ்வனே செய்கிறேன். இதில் வரும் பலனை அனுபவிக்கிறேன். நிம்மதியும் திருப்தியும் கிடைக்கிறது. இதற்கு மேல் ஆசைப்படவில்லை. அகலக்கால் வைத்து அவஸ்தைப்பட விரும்பவில்லை'.



வாவ்!. 'என் உழைப்புக்கேற்ற ஊதியத்தில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்ற அந்த பஜ்ஜிக்கடைக்காரர் மேலான மதிப்பு ஆகாயத்துக்குக் கொஞ்சம் மேலே போய்விடுகிறது.



நம்மில் எத்தனை பேர் இப்படி ஒரு தடவையாவது சொல்லியிருக்கிறோம்? நான் சொன்னதேயில்லை. என் வாழ்வின் கொள்கையே 'இன்னும் கொஞ்சம்' என்பது தான் என்ற நிலையில், பஜ்ஜிக்கடைக்காரர் சொன்னது பொட்டில் அடித்தது.



பஜ்ஜிக்கடையில் வேலை பார்க்கும் இருவரைப் பற்றித் தொடக்கத்தில் வரும்  விவரங்களை வைத்து இந்தப் பெரியவர் அவர்கள் இருவரில் ஒருவராக இருக்க முடியாது என்று தோன்றினாலும், உடனே அந்த எண்ணம் மறைந்து பஜ்ஜிக்கடை முதலாளி சொன்ன விவரங்கள் மனதில் நிற்கின்றன. தொடர்ந்து படித்தால் மேலாளர் பற்றியும் அறிய முடிகிறது. 

மேலாளருக்குக் கோபமோ அகங்காரமோ வரவில்லை. 'என்ன இவன், நான் கடன் கொடுத்தால் வேண்டாம் என்கிறானே?' என்று ஆத்திரப்படவில்லை மாறாக, பஜ்ஜிக்கடைக்காரர் பேச்சின் உண்மை உறைக்கிறது. மேலாளர் அகலக்கால் வைத்து ஐம்பது லட்சம் வரை இழந்தவர் என்ற உண்மை தூசு தட்டப்பட்டுத் தெளிவாகிறது. பஜ்ஜிக்கடைப் பெரியவர் போல போதுமென்ற மனம் தனக்கில்லாமல் போனதே என்ற மேலாளரின் ஏக்கம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

தொடர்ந்து வரும் போதனை வரிகளை நீங்களே படித்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக: கடன் வாங்காதீர்கள் அன்பர்களே!.

இடையில் விலைவாசி விவரம் வேறே. மூன்று ரூபாய்க்கு 192 பஜ்ஜி விற்ற நாள் போய் மூன்று ரூபாய்க்கு ஒரு பஜ்ஜி விற்கும் நாளில் வாழ்கிறோம்.


செய்தியின் சமகாலப் பொருத்தம் பற்றி இந்த இடத்தில் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.



'நேற்று நடந்து முடிந்த கதை. நாளை நடக்கவிருக்கும் கதை இன்று நிதரிசனக் கதை. நம் கையில் இருக்கும் கதை.. நேற்று வரலாறு, நாளை கனவு, இன்று மட்டுமே வாழ்வு' என்ற ரீதியில் வரும் அறிவுரைகள் ஒரு வகையில் உண்மை என்றாலும், சுலபமாகத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியவை.. இன்றைய நாளின் அவசரமும் அவசியமும் நம்மை அகலக்கால் வைக்கத் தூண்டுகின்றன. வைத்த பின் அல்லல். அவதி. நிம்மதியும் மகிழ்ச்சியும் மெள்ளக் கரைந்து போவதை அறியாமல், நாளை மறுநாள் அதற்கடுத்த நாள் என்று வருங்காலம் முழுவதையும் நாம் வைத்த அகலக்கால் அழித்துவிடுகிறது. இது மிக மிக மிகப் பெரிய உண்மை. எத்தனை சொன்னாலும் புரியாத மிக மிக மிகப் பெரிய உண்மை. 



கடன் வாங்காதீர்கள் என்பது செய்தியானாலும், வாங்குவது தவறு என்று கதாசிரியர் சொல்லவில்லை. கடன் வாங்கி அகலக்கால் வைத்து அதையும் சமாளிப்பவர்களைப் பாராட்டுகையில், கடன் வாங்கித் திண்டாடி வாழ்வின் சுவையை மறக்கும் பலரைப் பற்றியக் கவலையே கதையின் சாரம். ஒரு சமூக அக்கறைப் பார்வை. கதாசிரியரின் வெற்றி.


ஒரு வகையில் இது போன்ற கதைகள் கடவுள் போல. 


உண்டென்றால் உண்டு. கதையைக் காணோம் என்று நினைக்கலாம். கதையாகவும் பார்க்கலாம்.


வங்கி மேலாளரும் பஜ்ஜிக்கடை முதலாளியும் என் வாழ்க்கையில் வந்திருக்கலாமே என்ற ஏக்கத்துடன் முடிக்கிறேன்.




அப்பாதுரை

Thanks a Lot 
My Dear Appadurai Sir ! 
- Gopu

 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

 திரு.   அப்பாதுரை   அவர்கள்


 வலைத்தளம்: மூன்றாம் சுழி   







மனம் நிறைந்த பாராட்டுகள் +
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



     


முதல் பரிசினை முத்தாக

வென்றுள்ள விமர்சனம் - 2









பஜ்ஜீன்னா பஜ்ஜிதான் – தலைப்பின் மூலம் கதையின் மையம் பஜ்ஜிதான் என்பது தெளிவாகிவிட்டது. கதையின் துவக்கம் முதல் எந்த வித நகாசு வேலைகளுமின்றி அழகாய் ஒரு மொட்டு விரிவதைப் போல பஜ்ஜிக்கடை இருக்குமிடம் பற்றிய அறிமுகமும் தொடர்ந்து பஜ்ஜி போடுபவரின் அறிமுகமும் கதாசிரியரின் வரிகளில் நம் மனக்கண் முன் மெல்ல மெல்ல விரிந்துகொண்டு போகின்றன.

குறுகலான தெருவொன்றின் ஓரமாய் ஒரு பஜ்ஜிக்கடை,  அதற்கு ஒரு முதலாளி, ஒரு தொழிலாளி, வாடிக்கையாளர் பலர், அந்தப் பலருள் ஒருவராய் நம் கதைசொல்லி.

கதைசொல்லியின் பார்வையில் பஜ்ஜிக்கடையின் தொழிலாளி மிகவும் பரிதாபத்துக்குரியவர். அவர் நெருப்பில் வெந்து வேலை செய்யும் அவதியைப் பார்த்தால் ஏசி குளிரூட்டப்பட்ட அறையில் பணி செய்யும் இவருக்கு, தான் வாங்கும் சம்பளம் அதிகப்படியோ என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. அவ்வளவு மெலுக்கான வேலை பார்க்கிறார் போலும்.

மைக்ரோ செகண்ட் பிசகினாலும் நஷ்டப்படக்கூடியதான வியாபாரத்தில் அஷ்டாவதானியாக அசாத்திய வேகத்துடனும், ஒரு ஜிம்னாஸ்டிக் கலைஞனைப் போன்ற நுட்பமான கவனத்துடனும் பஜ்ஜி போடுபவரைக் கண்முன் நிறுத்துகின்றன வர்ணனைகள். கதையின் பிரதான பாத்திரம் இவராகத்தான் இருக்கவேண்டும் என்ற யூகத்துடன் கதைக்குள் நுழைகிறோம் நாம். நம் யூகத்தைக் கலைத்து வேறு திக்கில் அழைத்துப் போகின்றன பின்னால் வரும் சம்பவங்கள்.

சுடச்சுட தாளில் வைத்து வழங்கப்படும் பஜ்ஜியின் அருமைபெருமைகளை விவரிக்க விவரிக்க வாசிக்கும் நமக்கும் நாவூறுகிறது. வாசிக்கும் நமக்கே இப்படியென்றால் நித்தமும் கண்பார்வையில் படும், பெருங்காய மணம் தூக்கலாய் நாசி துளைக்கும், பார்க்கவே உப்பலாய் முரட்டு சைஸில் கண்ணைப் பறிக்கும் பஜ்ஜி நம் கதைசொல்லியின் ஐம்புலன்களையும் ஆண்டு, தன் விசிறியாக்கியதில் வியப்பென்ன இருக்கிறது?

கதைசொல்லிக்கு அந்த தெருவோர பஜ்ஜிக்கடையின் பஜ்ஜி மீது உண்டான கிறக்கமே அதன் முதலாளி மீது ஒருவித இரக்கத்தை வரவழைத்துவிடுகிறது. சிறுதொழில் புரிவோருக்கு வங்கி மூலம் கடன் வழங்கும் பதவியில் இருக்கும் அவர் தானாகவே முன்வந்து பஜ்ஜிக்கடையின் முதலாளிக்கு உதவ விரும்புகிறார்.

எத்தனையோ பேர் அந்த பஜ்ஜிக்கடைக்கு வருகிறார்கள், வாங்குகிறார்கள், தின்கிறார்கள். எல்லோருக்குமா அந்த கடையின் முதலாளிக்கு உதவும் எண்ணம் வந்தது? வங்கி ஊழியரான நம் கதைசொல்லிக்கு மட்டும் அந்த எண்ணம் ஏன் வரவேண்டும்?

தெருவோரத்திலேயே தினமும் வியாபாரம் சூடுபறக்கிறது. கடை வைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வியாபாரம் பிய்த்துக்கொண்டு போகும். எவரையும் தொங்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லாமல் கொடுத்த கடனும் தானாகவே வசூலாகிவிடும் என்று அவர் மனக்கணக்கு போட்டிருக்கலாம். வங்கி ஊழியர் அல்லவா?

வங்கியிலிருந்து அழைப்பு என்றதுமே பவ்யமாய் வந்து கைகட்டி நிற்காமல் வியாபாரத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும்போதே பஜ்ஜிக்கடை முதலாளியான பெரியவரின் மனோபாவம் பிடிபட்டுவிடுகிறது. அவர் கையோடு வரமறுப்பதன் மூலம் தன் தொழிலுக்கு தரும் மரியாதையும், அழைக்க வந்த அட்டெண்டரிடம் நான்கு பஜ்ஜிகளைக் கொடுத்தனுப்பியதன் மூலம் வாடிக்கையாளரைப் பகைத்துக்கொள்ள விரும்பாத சாமர்த்தியமும் இந்த இடத்தில் அழகாக காண்பிக்கப்படுகிறது. அவரது முன்னேற்றத்துக்கான காரணிகள் என்னென்ன என்பதை கதாசிரியர் குறிப்பிடாமலேயே வாசகர்களாகிய நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

போதுமென்ற மனத்துடன் கிடைப்பதைக் கொண்டு திருப்தியான வாழ்க்கையை வாழ்வது ஒரு வரம். அந்த வரம் அந்தப் பெரியவருக்கு இனிதே வாய்த்திருக்கிறது.

எவ்வளவு கிடைத்தாலும் மேலும் மேலும் எதற்காவது ஆசைப்பட்டுக்கொண்டு எதிலும் திருப்தியுறாத வாழ்க்கை ஒரு போராட்டம். அப்போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து திருந்தாத, திருந்த முடியாத ஜென்மம் கதைசொல்லி. அதையும் அவர் வாயாலேயே சொல்கிறார்.

கடன் வாங்குவதை அவமானமாக எண்ணுபவர்கள் பற்றியும் கடன் வாங்குவதை பெருமையாக எண்ணுபவர்கள் பற்றியும் அடுத்தடுத்தப் பத்திகளில் நமக்கு விலாவாரியாய் விளக்கி, நமக்கெழும் சிந்தனைகளையும் இணைத்தெழுதி நாம் எழுதவேண்டிய சிரமத்தைக் குறைத்துவிட்டார் கதாசிரியர்.

சரி, பெரியவரின் சூழலுக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டிய தேவை இல்லை. ஓரளவுக்கு பணம் சேர்த்துவிட்டார், குடியிருக்க வீடும் வாங்கிவிட்டார். இந்த வியாபாரத்தை நம்பிதான் அவர் வாழ்க்கை வண்டியை ஓட்டவேண்டிய அவசியம் இல்லை. அதனால் கடனை மறுத்துவிடுகிறார். நியாயம்தான். ஆனால் அந்த அஷ்டாவதானி? அவரைப் பற்றி பெரியவர் ஏன் யோசிக்கவே இல்லை? இத்தனைத் திறமைகளை வைத்துக்கொண்டு அந்த தொழிலாளி ஏன் இன்னும் அனலில் கிடந்து வேகவேண்டும்? கூட இரண்டு பேர்களை உதவியாளர்களாய் வைத்துக்கொண்டு சிரமத்தைக் குறைத்துக் கொள்ளலாமே! அதற்காகவாவது அவர் கடன் வாங்கி வியாபாரத்தை விருத்தியாக்கியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்போது மட்டும் என்ன? உண்மையிலேயே உதவி தேவைப்படும் யாராவது ஒருவருக்கு கடனுதவி வழங்கக் கோரியிருக்கிறாரே.. வங்கி ஊழியரின் கவனம் அந்த அஷ்டாவதானி மேல் திரும்பாமலா போய்விடும்? அந்தக் கடையின் பஜ்ஜிப்பிரியராயிற்றே… பஜ்ஜிக்கடையை ஜாம் ஜாம் என்று விஸ்தரிக்கும்வரை ஓயமாட்டார் என்று நம்புவோம். 

பஜ்ஜிக்குள் பொதுவாய் என்ன இருக்கும்? கதாசிரியர் சொல்வது போல் உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய், பெரிய வெங்காயம், குண்டு குடமிளகாய் போன்ற காய்கறிகள் இருக்கலாம். ஆனால் திருப்திகரமான வாழ்க்கையை வாழும் வழியை உள்ளே வைத்து சுவாரசியமாய்ப் பரிமாறப்பட்ட இந்த கதை பஜ்ஜியின் சுவையும் தனித்துவமான சுவைதான் அல்லவா?

-oooOooo-

Thanks a Lot 
Mrs. Geetha Mathivanan, Madam ! 
- Gopu


  

இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


திருமதி. 

கீதா மதிவாணன் 

அவர்கள்

வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.in 





மனம் நிறைந்த பாராட்டுகள் +
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

     






 


முதல் பரிசினை முத்தாக வென்றதுடன் 



நான்காம்  ஹாட்-ட்ரிக் வெற்றியினை 


இறுதிச்சுற்றான  ஆறாம் சுற்றுவரை  


தக்க வைத்துக்கொண்டு 


சாதனை புரிந்துள்ளார்கள்


திருமதி 

 கீதா மதிவாணன்  

அவர்கள்  

VGK-29 TO VGK-34

 



  
 

  

  




திருமதி 

 கீதா மதிவாணன்  

அவர்களின்  



ஒரு சில சிறப்புச் சாதனைகள்:



1. இது இவர்கள் அடித்துள்ள நான்காவது ஹாட்-ட்ரிக் வெற்றியாகும்.


2. இது HIGHEST HAT-TRICK பரிசுடன் கூடிய 

இவர்களின் மூன்றாவது HAT-TRICK வெற்றியாகும்.


3. மிகப்பெரிய  முரட்டு ’ஹாட்-ட்ரிக்’கிலேயே  

ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ளது தனிச்சிறப்பல்லவா !  :))))))


4. இவர்களின் மற்ற மூன்று ஹாட்-ட்ரிக் பரிசு வெற்றிகளிலும் இல்லாத 

ஒரு விசேஷமும் இதில் உள்ளது. இந்த VGK-29 To VGK-34 ஆகிய  

ஆறு கதைகளுக்கும் இவர்கள் எழுதி அனுப்பியுள்ள

விமர்சனங்கள் அனைத்துமே தொடர்ச்சியாக 

இவர்களுக்கு ‘FIRST PRIZE' ஐ மட்டுமே ஈட்டிக்கொடுத்துள்ளன. 


5. இதுவரை நடைபெற்றுள்ள 34 [THIRTY FOUR]

விமர்சனப்போட்டிகளின் முடிவுகளின்படி

’முதல் பரிசு’ வென்றவர்களின் / பகிர்ந்து கொண்டவர்களின்

மொத்தம் 64 பெயர்கள் கொண்ட மிக நீண்ட பட்டியலில்,  

இவரே அதிகமுறைகள் முதல் பரிசினை 

வென்றுள்ளதாக / பகிர்ந்துகொண்டுள்ளதாக 

புள்ளிவிபரங்கள் அறிவிக்கின்றன. 


6. இதுவரை கிடைத்துள்ள VGK-01 to VGK-34 பரிசு முடிவுகளின் 

புள்ளிவிபரங்கள்  அடிப்படையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 

மிக அதிகமான பரிசுத் தொகையினைப் பெற்றுள்ளவர் இவரே 


என்றும் அறியப்படுகிறது. 


[இருப்பினும் இந்த ஓட்டப்பந்தயத்தில் இவரை அடுத்து சிலரும் 

ஸ்பீடாகவே ஓடி வருவதால், போட்டியின்  இறுதியில்

இந்தப்புள்ளிவிபரங்கள் சற்றே மாறக்கூடிய 


வாய்ப்புகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.]


7. இந்தப்போட்டியில் மேலும் உள்ள ஐந்து-ஆறு வாய்ப்புகளில் 

மீண்டும் இவர்கள் ஓர் ஹாட்-ட்ரிக் அடித்தாலும் ஆச்சர்யம் 

ஏதும் இல்லைதான். :)




 



 

    




எங்கள் ஊராம் திருச்சியில் பிறந்துள்ள

இந்தப்பொண்ணுக்கு 

 திருஷ்டி ஏதும் ஏற்படாமல் இருக்க 

ஹாரத்தி சுற்றப்படுகிறது.


 


மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



பிரியமுள்ள  

கோபு 




    


 





மிகக்கடினமான இந்த வேலையை 

சிரத்தையுடன் பரிசீலனை செய்து 

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள  

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி 


முதல் பரிசுக்கான தொகை

இவர்கள் இருவருக்கும் 


சரிசமமாக பிரித்து அளிக்கப்பட உள்ளது.






இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள 


மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர  

இடைவெளிகளில் 

வெளியிடப்பட்டுள்ளன.


அதற்கான இணைப்புகள் இதோ:






காணத்தவறாதீர்கள் !





  



இந்த VGK-34 போட்டிக்கு வந்திருந்த விமர்சனங்கள் பற்றி 

நடுவர் திரு. ஜீவி அவர்களின் பொதுவான சில கருத்துக்கள் 

23.09.2014 செவ்வாய்க்கிழமையன்று

தனிப்பதிவின் மூலம் வெளியிடப்படும்.




காணத்தவறாதீர்கள் !






    


அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:





VGK-36  


  ’எலி’ஸபத் டவர்ஸ்  




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:




வரும் வியாழக்கிழமை 


25.09.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

49 கருத்துகள்:

  1. திரு. அப்பாதுரை அவர்கள் ,
    திருமதி கீதா மதிவாணன் அவர்கள். என முதல்பரிசு பரிசினை பெற்ற இருவருக்கும் நிறைவான வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. முதற் பரிசு பெற்ற அப்பாதுரை, கீதா மதிவாணன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று வெறும் வாழ்த்தை மட்டும் வழங்கிவிட்டு
    போகாமல் வாசிக்கிற எவருக்கும் இந்த விமரிசனங்கள் பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிற விமரிசனங்கள். அதற்காகவே வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. கடன் வாங்காதீர்கள் என்பது செய்தியானாலும், வாங்குவது தவறு என்று கதாசிரியர் சொல்லவில்லை. கடன் வாங்கி அகலக்கால் வைத்து அதையும் சமாளிப்பவர்களைப் பாராட்டுகையில், கடன் வாங்கித் திண்டாடி வாழ்வின் சுவையை மறக்கும் பலரைப் பற்றியக் கவலையே கதையின் சாரம். ஒரு சமூக அக்கறைப் பார்வை. கதாசிரியரின் வெற்றி.//

    நீங்கள் சொல்வது சரிதான் அப்பாதுரை சார். கடனில் எல்லாவற்றையும் வாங்கி விட்டு கடனை அடைக்கமுடியாமல் திண்டாடும் குடும்பங்கள் எத்தனை?

    கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் !
    என்பது போல் கடன் வாங்கி கவலை பட்டு வாழ்க்கையை தொலைத்தவர்களை கதாசிரியர் பார்த்து இருப்பார். வாழ்க்கை அனுபவத்தில் போதுமென்ற மனநிலை உடையவர்களையும் பார்த்து இருப்பார் . அதனால் உருவான அழகான கதை.

    (வை.கோ சாரே ஒரு முறை சொல்லி இருக்கிறார் அவரைப் பற்றி வாழ்க்கையில் கடனே வாங்கியது இல்லை என்று.)

    கடன் வாங்க பயப்பட வேண்டும் அப்போதுதான் கடன் வாங்க மாட்டோம் .


    மூன்று ரூபாய்க்கு 192 பஜ்ஜி விற்ற நாள் போய் மூன்று ரூபாய்க்கு ஒரு பஜ்ஜி விற்கும் நாளில் வாழ்கிறோம்.//

    அப்பாதுரை சார் எங்கள் ஊரில் ஒரு பஜ்ஜி 6 ரூபாய்.

    அருமையான விமர்சனம். முதல் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு September 21, 2014 at 6:28 PM

      //(வை.கோ சாரே ஒரு முறை சொல்லி இருக்கிறார் அவரைப் பற்றி வாழ்க்கையில் கடனே வாங்கியது இல்லை என்று.)//

      வாங்கோ, வணக்கம்.

      தங்களுக்கு நினைவாற்றலும் ஞாபகசக்தியும் அதிகமாக உள்ளது. பாராட்டுகள்.

      நான் அதுபோலச் சொன்னது இதோ இந்தப்பதிவினில் ஆரம்பத்தில் இரண்டாம் பாராவில் உள்ளது: http://gopu1949.blogspot.in/2013/03/5.html

      பிறகு நான் துணிந்து கடன் வாங்கினேன் என்று சொல்லியுள்ளது இந்தப்பதிவினில் நடு பாகத்தில் சில பாராக்களில் உள்ளன. :)

      http://gopu1949.blogspot.in/2013/02/2.html

      கடன் வாங்குவது தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவசியமானால் வாங்கிக்கொள்வதில் எந்தத்தவறும் இல்லைதான். இருப்பினும் அந்தக்கடனை நாம் யாரிடம் வாங்குகிறோம், எதற்காக வாங்குகிறோம், அதை வாங்கி என்ன செலவுகள் செய்யப்போகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

      அடுத்ததாக அதை திரும்பச்செலுத்த நமக்கு முடியுமா, அதை நம்மால் எந்த வழிகளில் எப்படி அடைக்க முடியும், எவ்வளவு நாட்களில்/வருடங்களில் அடைக்கமுடியும், அதற்காக நாம் தரப்போகும் வட்டிப்பணம் எவ்வளவு என்பதையெல்லாம் திட்டமிட்டு கணக்கிட்டு வாங்கினால் தவறேதும் இல்லை என்பேன்.

      என்னிடம் கையில் போதிய பணம் கைவசம் இருந்தும் நான் என் வீட்டுக்காகக் கடன் வாங்கியது உண்டு.

      அங்குதான் கவனமாகக் கணக்குப்போட்டு நம் மூளையை புத்திசாலித்தனத்துடன் உபயோகிக்க வேண்டும்.

      [1] கடன் வாங்கி வீடு வாங்கும் போது, நம் வீட்டுப்பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லையா என லீகல் ஒபீனியன் கட்டாயமாக வாங்க நேரிடுகிறது. இது மிகவும் நிம்மதி அல்லவா !

      [2] கடன் கொடுத்த வங்கியால் நம் வீடு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு விடுகிறது. இதுவும் நமக்கு நல்லது அல்லவா !

      [3] நம் வீட்டுப்பத்திரம் அவர்களிடம் அடமானம் வைக்க நேருவதால் அது அவர்களால் மிகவும் பத்திரமாக வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நமக்கு நன்மையே !

      [4] நாம் இவ்வாறு வங்கிக்கடன் வாங்கி அசல் + வட்டி EMI கட்டும் போது வருமான வரி தள்ளுபடி சலுகைகள் கிடைக்கின்றன. இது மேலும் நமக்கு இலாபமே !

      [5] இது தவிர நான் வேலை பார்த்த கம்பெனியால் நேரிடையாக எனக்கு குறைந்த வட்டியில் வீடுகட்ட லோன் தர முடியாததால் பேங்க் வட்டிக்கும், நான் வேலை பார்த்த கம்பெனி லோனின் வட்டிக்கும் உள்ள இடைவெளி இழப்பு சரிகட்டப்படும் விதமாக என் கம்பெனியால் INTEREST SUBSIDY என்று ஒரு தொகை மாதாமாதம் எனக்குத் தரப்பட்டது. வந்தது. இதுவும் ஓர் உபரியான இலாபமே !

      இதுபோன்ற பல சலுகைகளை அனுபவிக்க வழி இருக்கும் போது, கடன் வாங்கக்கூடாது என்ற வறட்டுக் கொள்கையுடன், சொந்தப்பணத்தில் வீடு வாங்குவது மிகப்பெரிய ஓர் முட்டாள் தனமல்லவா?

      இன்னும் என்னால் இதைப்பற்றி பல்வேறு விஷயங்களைப்பேச முடியும். ஓர் தனிப்பதிவே வெளியிட முடியும்.

      என் நண்பர்கள் பலருக்கும் நான் இதுபோலெல்லாம் FINANCIAL ADVISES கொடுத்துள்ளேன். அதுபோல எவ்வளவோ குடும்பங்களுக்கு சேமிப்பின் அவசியம் பற்றி எடுத்துச்சொல்லியும், எங்கு சேமித்தால் முதலுக்கு மோசமில்லாமல் இருக்கும் என்பதையெல்லாம் எடுத்துச்சொன்னதும் உண்டு.

      பல லட்சங்களை வைத்திருந்த பலரும் என்னிடம் தான் CONSULT செய்ய வருவார்கள். நான் சொல்லும் இடத்தில் மட்டுமே பணத்தை சேமிப்பார்கள். என் இந்த இலவச சேவைகள் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம் உண்டு.

      இன்றும்கூட சிலர் என்னைக்கேட்காமல் எதுவும் செய்வது இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, உழைத்த பணத்தை நான் சொன்னபடி சேமித்து, பலன் அடைந்து இன்று நல்ல நிலமைக்கு வந்துள்ளவர்களும் கூட, இன்றும் என்னிடம் கலந்தாலோசித்தபின்னரே தங்களின் சேமிப்பை நான் சொல்லுமிடத்தில் மட்டுமே போட்டு வருகிறார்கள்.

      ஏதோ என்னிடம் மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ள அவர்களைப் பார்க்கும் போது எனக்கும் மனதுக்கு ஓர் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  4. //கதையென்று பெரிதாக எதுவும் இல்லை; புடலங்காய்.. //

    புடலங்காய்க்குக் கூட சுருண்டு விடாமல் கல் கட்டி நீட்ட வேண்டியிருக்கிறது. ஏகப்பட்ட படங்கள், வண்ணங்களுக்கு இடையே முடிவுறாத இந்தக் கதை நீட்சிக்குக் கட்டிய கல்லும் பார்வைக்கு சட்டென்று படாமல் பதுங்கி மறைந்திருப்பதும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உண்டென்றால் உண்டு. கதையைக் காணோம் என்று நினைக்கலாம். கதையாகவும் பார்க்கலாம்.//

      Excellent writing capacity!

      'உண்டென்றென்றால் உண்டு' என்று சொல்லி 'இல்லையென்றால் இல்லை' என்பதை சொல்லாமல் விட்டதே அழகு!

      கடவுளை கதைக்கு ஒப்புமையாக்கி அதன் மூலம், இது கதையே இல்லை என்றாலும் சரி, கதை இருக்கிறது என்று கொண்டாலும் சரி என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள்!

      நீக்கு
    2. யாருனா இதைப் பிடிப்பாங்கனு நினைச்சேன்.

      நீங்க சொன்ன என் எழுத்தில் என்னைப் பார்க்க எண்ணுபவன் என்பதன் அப்பட்ட உண்மையை நினைத்துப் பார்க்கிறேன். ;-)

      நீக்கு
  5. வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இவ்வாறாக போட்டிகள் வைத்து பலரை ஊக்குவிக்கும் தங்களின் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இவ்வாறாக போட்டிகள் வைத்து பலரை ஊக்குவிக்கும் தங்களின் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. இந்த விமர்சனத்துக்கும் முதல் பரிசு கிடைத்திருக்கிறது என்பது அளவில்லாத மகிழ்வைத் தருகிறது. பரிசுக்குரியதாய் என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கு மிக்க நன்றி.

    முதல் பரிசுகள் குறித்தும் ஹாட்ரிக் பரிசுகள் குறித்தும் பாராட்டி எழுதியுள்ளமை கண்டு மிகவும் நெகிழ்கிறேன். நன்றி கோபு சார். தங்களுடைய இதுபோன்ற ஊக்கமளிப்புகள்தாம் தொடர்ந்து பரிசுக்குரிய விமர்சனங்களை எழுதும் வல்லமையை எனக்குள் வளர்க்கின்றன. மிக மிக நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  8. கதை என்ன கதை, புடலங்காய் என்று ஆரம்பித்து முடிவில் இது போன்ற கதைகள் கடவுள் போல என்று முத்தாய்ப்பாய் முடித்தவிதம் அருமை. பாராட்டுகள் அப்பாதுரை சார். தங்களோடு முதல் பரிசினைப் பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'கடவுளும் கந்தசாமி பிள்ளையும்' என்று புதுமைப்பித்தன் ஒரு கதை எழுதியிருக்கிறார். அது நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    2. பாராட்டுக்கள் கீத மஞ்சரி அவர்களே. எனக்கும் பெருமை தான்.

      புடலங்காய் அசலில் வெங்காயம் :). நடுவர் பாருங்க உரிச்சு வச்சுட்டாரு.

      நீக்கு
  9. நடுவர் பொறுப்பேற்றுள்ள ஜீவி சாரின் விமர்சனம் கதையின் சிறப்பம்சத்தை அழகாக சொல்லிப்போகிறது. விமர்சனதாரர்களுக்கும் அதில் செய்தி இருக்கிறது. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதை எழுதத் தொடங்கினாலும் அதை எப்படி ஆரம்பிப்பது என்பதே ஒரு தனிக்கலை. அமரர் புதுமைப்பித்தனின் எழுத்தைத் தொட்டுச் சொல்லியிருக்கிறேன், அல்லவா?.. இந்த மாதிரி ஆரம்பித்தால் எழுதும் விமரிசனத்திற்கே தனியாக ஒரு களை வந்து விடும்.

      வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. பிரியமுள்ள திரு. ஜீவி சார்,

      நமஸ்காரங்கள், வணக்கம்.

      நான் ஏற்கனவே தங்களிடம் சொல்லியிருந்ததையே திரும்பவும் மற்றவர்களுக்காக மீண்டும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

      நான் இதுவரை எந்த ஒரு பிரபல எழுத்தாளர்களின் கதையையும் அதிகமாக வாசிக்கும் வாய்ப்பே எனக்குக் கிட்டவில்லை.

      இளமையில் வறுமையினால் புத்தகங்கள் வாங்க காசு கிடைக்கவில்லை. ஆங்காங்கே ஓஸியில் கிடைக்கும் வார / மாத இதழ்களையும் செய்தித்தாள்களையும் வாசகசாலை, பார்பர் ஷாப் போன்ற பொது இடங்களில் மட்டும் கொஞ்சம் அவ்வப்போது படித்தது உண்டு.

      என் சிறுவயதில், நிலக்கடலை சுற்றித்தரும் பேப்பர்களில் உள்ள பக்கங்களைக்கூட நான் ஒருவரி விடாமல் மிக ஆர்வமாகப் படிப்பதுண்டு. அவ்வாறு படித்த ஒருபக்கம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததில் அதன் தொடர்ச்சிப் பக்கத்தினையும் எப்படியாவது படித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தினில், அடுத்து கடலை வாங்கிச்சென்றவரை, அந்தப் பேப்பருக்காக மட்டுமே துரத்திச்சென்ற அனுபவமும் எனக்கு ஒருமுறை ஏற்பட்டது உண்டு.

      பிறகு கல்யாணமாகி, குழந்தைகுட்டிகள் ஏற்பட்டு, குடும்ப பாரத்தை சுமக்க வேண்டியிருந்ததாலும், அலுவலக வேலை பொறுப்புகளும் நெருக்கடிகளும் மிகவும் அதிகமாகவே இருந்ததாலும் அதிகமாக புத்தகம் படிக்க முடியாமல் போய்விட்டது.

      ஆபீஸ் போகும்போதும் வரும்போதும் பஸ் பயணங்களில் சில வார இதழ்களை விரும்பிப் படிப்பது உண்டு. அத்தோடு சரி.

      வார/மாத இதழ்களில் சில சிறுகதைகள் + கட்டுரைகள் படிக்கும்போது, நம் எழுத்துக்களும் இதுபோல என்றாவது பத்திரிகைகளில் வெளிவராதா என்ற ஏக்கம் மட்டும் மனதில் ஒருபக்கம் இருந்துகொண்டே வந்தது.

      2005க்குப் பிறகே நான் ஏதோ கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். என் சொந்த அனுபவங்கள், நான் அன்றாடம் சந்தித்த வேடிக்கையான விசித்திரமான சில மனிதர்கள், எனக்கேயுள்ள நகைச்சுவை உணர்வுகள், என் மனதில் ஏராளமாக உள்ள கற்பனைகள் எல்லாவற்றையும் குழைத்து கதையாக்கி அவற்றிற்கு கண், காது, மூக்கு என வைத்து, எனக்கென ஒரு தனிபாணியில் கதைகள் எழுதிவர ஆரம்பித்தேன்.

      மற்றபடி நான் எழுதுவதெல்லாம் / கிறுக்குவதெல்லாம் நல்ல தரமுள்ள கதைகள் தானா என எனக்கே தெரியாது.

      இருப்பினும் அவற்றில் பலவும் பிரபல வார/மாத இதழ்களில் வெளியாகி என்னைத் திகைக்க வைத்தன.

      அது என்னவோ சில பத்திரிகைகாரர்களுக்கு என் இந்தப்புதுப்பாணி பிடித்துப்போய் அடுத்தடுத்து பிரசுரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

      குறிப்பாக ஒருசில பத்திரிகைக்காரர்கள் தொடர்ந்து என் படைப்புகளைத் தங்கள் இதழ்களில் வெளியிட்டு சற்றே என்னைப் பிரபலமாக்கி விட்டார்கள் என்பதே இதிலுள்ள உண்மை. அடிக்கடி எனக்கு ஃபோன் செய்து, மேற்கொண்டு கதைகளை எழுதி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டனர்.

      2005 முதல் 2010 வரை இவ்வாறு பல பத்திரிகைகளில் என் படைப்புகள் இடம் பெற்றன. அதன் பிறகு பத்திரிகைகளுக்கு என் படைப்புகளை அனுப்பி வைக்க எனக்குப் பொறுமை இல்லை. முற்றிலுமாக நிறுத்திக்கொண்டு விட்டேன். 2011 முதல் வலைத்தளத்த்தில் மட்டுமே எழுதி வருகிறேன்.

      தப்போ ரைட்டோ எனக்கென தனிப்பாணி வைத்துக்கொண்டு ஏதோ எனக்குத் தோன்றுவதை நான் என் வலைத்தளத்தினில் எழுதி வருகிறேன்.

      தங்களைப்போன்ற அனுபவசாலிகள் மட்டுமே என் எழுத்துக்களில் உள்ள குறை/நிறைகளை எனக்கு எடுத்துச்சொல்ல முடியும். நம் விமர்சனப்போட்டியின் அடிப்படை நோக்கமும் அதுவே தான்.

      இது இவ்வாறு இருக்கும்போது புதுமைப்பித்தன் என்ற மிகப்பிரபலமான எழுத்தாளர் ஒருவருடன் என் இந்தக் கதையையும் எழுத்துக்களையும் ஒப்பிட்டுச் சொல்லிப் பாராட்டியுள்ளீர்கள். இதுவும் எனக்கு மிகுந்த திகைப்பையும் வியப்பையும் அளிக்கிறது.

      புதுமைப்பித்தன் என்று ஒரு பிரபல எழுத்தாளர் இருந்துள்ளார் எனக் கேள்விப்பட்டுள்ளேனே தவிர அவரின் எந்த ஆக்கத்தினையும் நான் இதுவரை படித்தது இல்லை.

      பல பிரபலங்களின் எழுத்துப்பாணிகளைப்பற்றி நன்கு அறிந்துள்ள + ஆராய்ந்து சிலாகித்துள்ள தங்களின் இதுபோன்ற பாராட்டுக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தக்கூடும். தாங்கள் சொல்லும் குறை நிறைகள் என் எழுத்துக்களை நான் மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளவும், மெருகேற்றிக்கொள்ளவும் உதவும் என நினைக்கிறேன்.

      தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    3. பொன்னகரம் -என்று போட்டு கூகுளில் தேடிப்பாருங்கள். புதுமைப்பித்தனின் மிகச் சிறந்த கதை இது. ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக சாராய டிப்போவுக்கு போகிற ஒரு சந்தின் விவரணையில் ஆரம்பிக்கும். இந்த ஒரு கதையை நீங்கள் படித்து விட்டால், அவரது ஒவ்வொரு கதையையும் படிக்காமல் விடமாட்டீர்கள்.

      அவரது சிறுகதைகளின் லிஸ்ட்டைக் குறித்துக் கொண்டு தினத்திற்கு ஒன்று படிக்க ஆரம்பியுங்கள்.
      அப்புறம் சொல்லுங்கள். புதுமைப்பித்தனைப் படிக்காமல் பேனாவை பிடித்தால் பாவம். அதற்காகச் சொன்னேன். அவரது அத்தனை கதைகளும் இணையத்திலேயே படிக்கக் கிடைக்கின்றன.

      மற்றபடி பத்திரிகை பிரசுரங்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவை ஒரு தேவை சம்பந்தப்பட்ட விஷயம். பருவ இதழ்களின் தேவை பருவத்திற்கு பருவம் மாறும். உங்கள் 'பூபாலன்' கதையிலேயே டிராஷூக்குப் போகும் அவையெல்லாம் பற்றி நீங்களே நிறைய சொல்லிவிட்டீர்கள். . ஆனால் இப்பொழுது நீங்கள் ஈடுபட்டிருக்கும் இணையம் அப்படியில்லை. இங்கு எழுதுவது சாசுவத கல்வெட்டு.

      நீக்கு
    4. ஜீவி September 22, 2014 at 4:00 AM

      வாங்கோ ... நமஸ்காரங்கள், வணக்கம்.

      //பொன்னகரம் -என்று போட்டு கூகுளில் தேடிப்பாருங்கள். புதுமைப்பித்தனின் மிகச் சிறந்த கதை இது. ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக சாராய டிப்போவுக்கு போகிற ஒரு சந்தின் விவரணையில் ஆரம்பிக்கும். இந்த ஒரு கதையை நீங்கள் படித்து விட்டால், அவரது ஒவ்வொரு கதையையும் படிக்காமல் விடமாட்டீர்கள்.

      அவரது சிறுகதைகளின் லிஸ்ட்டைக் குறித்துக் கொண்டு தினத்திற்கு ஒன்று படிக்க ஆரம்பியுங்கள்.
      அப்புறம் சொல்லுங்கள். புதுமைப்பித்தனைப் படிக்காமல் பேனாவை பிடித்தால் பாவம். அதற்காகச் சொன்னேன். அவரது அத்தனை கதைகளும் இணையத்திலேயே படிக்கக் கிடைக்கின்றன. ............................................................
      .................... //

      -=-=-=-

      தங்களின் அன்பான ஆலோசனைகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      முதலில் நம் போட்டி நல்லபடியாக வெற்றிகரமாக இனிதே நிறைவடையட்டும். என் வேண்டுதல்படி பிள்ளையாருக்கு சிதர் தேங்காய் அடித்து விட்டு வந்துவிடுகிறேன். :)))))

      இரும்பு பிடித்தவன் கையும், துரும்பு பிடித்தவன் கையும், [சொறி பிடித்தவன் கையும் கூட] சும்மா இருக்காது என்று சொல்லுவார்கள்.

      பதிவராகிய என் கைமட்டும் சும்மாவா இருக்கப்போகிறது?

      இந்த போட்டிகள் ஒருவழியாக முடிந்தபிறகு கணினிப்பக்கமே போகக்கூடாது என்று Very Strict ஆக உத்தரவு போட்டுள்ள என் மேலிடத்திடம் கெஞ்சிக்கூத்தாடி எப்படியும் கொஞ்சூண்டு அனுமதிபெற்று தாங்கள் சொல்லும் புதுமைப்பித்தனைத் தேடிக்கண்டுபிடித்து விடுகிறேன்.

      பொன்னகரத்திற்குச் செல்லும் முன் என் ’கண்’ணகரத்தையும் கவனிக்க வேண்டியதுள்ளது. [என் வலது கண்ணுக்கு நான் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையைத்தான் சொல்கிறேன்]

      பிரியமுள்ள கோபு [VGK]

      நீக்கு

    5. //இது இவ்வாறு இருக்கும்போது புதுமைப்பித்தன் என்ற மிகப்பிரபலமான எழுத்தாளர் ஒருவருடன் என் இந்தக் கதையையும் எழுத்துக்களையும் ஒப்பிட்டுச் சொல்லிப் பாராட்டியுள்ளீர்கள். //

      ஸாரி.. ஒப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.
      உங்கள் இந்தக் கதையின் ஆரம்ப வரிகளை சிலாகித்துச் சொல்லப்பட்டது அது.

      நீக்கு
    6. ஜீவி September 22, 2014 at 7:29 PM

      //ஸாரி.. ஒப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.
      உங்கள் இந்தக் கதையின் ஆரம்ப வரிகளை சிலாகித்துச் சொல்லப்பட்டது அது.//

      OK .... OK .... Now .... I understood Sir.

      என் இந்தக் கதையின் ஆரம்ப வரிகளை தாங்கள் சிலாகித்துச் சொல்லியுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்னுடைய இந்த misunderstanding கூட, புதுமைப்பித்தன் கதைகளை நான் இதுவரை வாசிக்காமல் இருந்துள்ளதால் மட்டுமே ஏற்பட்டுள்ளது என என்னால் நன்கு உணர முடிகிறது. I too feel sorry, Sir.

      பிரியமுள்ள கோபு [VGK]

      நீக்கு
    7. பார்பர் ஷாப்பில் தினத்தந்தி படித்த சுகத்துக்கு ஒரு ஈடு... ஹ்ம்ம்.

      நீக்கு
  10. போதுமென்ற மனத்துடன் கிடைப்பதைக் கொண்டு திருப்தியான வாழ்க்கையை வாழ்வது ஒரு வரம். அந்த வரம் அந்தப் பெரியவருக்கு இனிதே வாய்த்திருக்கிறது.//

    அருமையாக சொன்னீர்கள் கீதமஞ்சரி.


    //திருப்திகரமான வாழ்க்கையை வாழும் வழியை உள்ளே வைத்து சுவாரசியமாய்ப் பரிமாறப்பட்ட இந்த கதை பஜ்ஜியின் சுவையும் தனித்துவமான சுவைதான் அல்லவா?//

    மிக அருமையாக சொன்னீர்கள். பஜ்ஜி செய்யும் போதெல்லாம் சாரின் கதையும் உங்கள் அழகான விளக்கமும் இனி மறக்காது.
    அழகான விமர்சனம் செய்து முதல்பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள்.
    சாதனை நாயகிக்கு ஆரத்தி அவசியம் தான்.
    பாராட்டுக்கள், .வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. புடலங்காயில் கூட பஜ்ஜி போடலாம். மிக அழகான கதை. அதற்கு அறிபூர்வமான விமர்சனம் கொடுத்த துரை அவர்களுக்கு நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. அன்பு கீதாமதி, உழைப்பு வெளிப்படுகிறது உங்கள் விமரிசனத்தில்.ஆழமாக ழோசித்து வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதி இருக்கிறீர்கள். விமரிசனங்கள் எதிர்கால நல்ல கதைகளுக்கு அஸ்திவாரம். பாராட்டுகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  13. எழுத்துப்பிழை... ஜெர்மன் கணினி சோதிக்கிறது. யோ ழோ ஆனது.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே!

    என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

    வணக்கத்துடன்,
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
  15. திரு. அப்பாதுரை அவர்கள் ,
    திருமதி கீதா மதிவாணன்
    இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வை.கோ

    முதல் பரிசு பெற்ற அபபாதுரை மற்றும் கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. //கதாசிரியர் சொல்வது போல் உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய், பெரிய வெங்காயம், குண்டு குடமிளகாய் போன்ற காய்கறிகள் இருக்கலாம். ஆனால் திருப்திகரமான வாழ்க்கையை வாழும் வழியை உள்ளே வைத்து சுவாரசியமாய்ப் பரிமாறப்பட்ட இந்த கதை பஜ்ஜியின் சுவையும் தனித்துவமான சுவைதான் அல்லவா?
    //அருமை! திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. //'நேற்று நடந்து முடிந்த கதை. நாளை நடக்கவிருக்கும் கதை இன்று நிதரிசனக் கதை. நம் கையில் இருக்கும் கதை.. நேற்று வரலாறு, நாளை கனவு, இன்று மட்டுமே வாழ்வு' என்ற ரீதியில் வரும் அறிவுரைகள் ஒரு வகையில் உண்மை என்றாலும், சுலபமாகத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியவை.. இன்றைய நாளின் அவசரமும் அவசியமும் நம்மை அகலக்கால் வைக்கத் தூண்டுகின்றன. வைத்த பின் அல்லல். அவதி. நிம்மதியும் மகிழ்ச்சியும் மெள்ளக் கரைந்து போவதை அறியாமல், நாளை மறுநாள் அதற்கடுத்த நாள் என்று வருங்காலம் முழுவதையும் நாம் வைத்த அகலக்கால் அழித்துவிடுகிறது. இது மிக மிக மிகப் பெரிய உண்மை. எத்தனை சொன்னாலும் புரியாத மிக மிக மிகப் பெரிய உண்மை.
    // அருமை சார்! திரு அப்பாதுரை அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!//

    பதிலளிநீக்கு
  19. முதல் பரிசு பெற்ற திரு. அப்பாதுரை அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
    பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கும், என் இனிய தோழி கீதாவிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். இவர் பெற்றுள்ள பரிசு பட்டியலே ஒரு பதிவின் நீளத்திற்கு வரும் போலிருக்கிறதே. பாராட்டுக்கள் கீதா! மென்மேலும் பரிசுகள் வாங்கிக் குவிக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. அப்பாதுரை சாருக்கு நல்வாழ்த்துக்கள்!
    திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு சிறப்பு நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை September 21, 2014 at 11:34 PM
      வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி.//
      -=-=-=-

      திருமதிகள்:
      இராஜராஜேஸ்வரி அம்மா வந்திருக்காக ......
      கோமதி அரசு அம்மா இருமுறை வந்திருக்காக ......
      கீதமஞ்சரியே பலமுறை வந்திருக்காக ......
      வல்லியம்மாவே மூணுதடவை வந்திருக்காக ......
      கமலா ஹரிஹரன் அம்மாவும் வந்திருக்காக ......
      ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா வந்திருக்காக ......
      சந்திரகெளரி சிவபாலன் அம்மாவும் வந்திருக்காக ......
      கோவைக்கவியும் வந்திருக்காக ......

      திருவாளர்கள்:
      ஜீவி ஐயாவே பலமுறை வந்திருக்காக .........
      வீஜீயும்கூட வந்திருக்காக ......
      சோழநாட்டிலிருந்து பெளத்தம் ஐயா வந்திருக்காக ......
      கரந்தையிலிருந்து ஜெயக்குமார் ஐயாவும் வந்திருக்காக ......
      அன்பின் சீனா ஐயாவே வந்திருக்காக ......
      சேஷாத்ரி வந்திருக்காக ......
      அ. முஹம்மது நிஜமுத்தீன் ஐயாவே வந்திருக்காக ......
      கே.பி. ஜனா வந்திருக்காக ......

      மி ன் ன ல் ...................... !

      மாப்பிள்ளையைப்பார்க்க இவ்ளோ பேர் வந்து சபையில் ஆவலுடன் கூடியிருக்கும் போது ...............................

      முதல் பரிசு வென்றுள்ள திருவாளர் அப்பாதுரை அவர்களே !

      இப்படி மின்னல் போல ஒரு நொடி மட்டும் வந்துட்டு ஓடிட்டா எப்படி ?

      யாருமே உங்களைச் சரியாகப்பார்க்க முடியவில்லையே !

      திரும்பவும் நான் எல்லோர் பெயரையும் சொல்லி

      வந்திருக்காக ...... வந்திருக்காக ...... வந்திருக்காக ...... வந்திருக்காக ...... வந்திருக்காக ...... வந்திருக்காக ...... ன்னு

      மீண்டும் மீண்டும் சொல்லணுமா?

      திரும்பியும் ஒருமுறை நின்னுநிதானமாக் காட்சி தந்து பேசவேண்டியதெல்லாம் தெளிவாகப்பேசி எல்லோரையும் திருப்திப்படுத்துங்கோ, ப்ளீஸ் ..... !

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
    2. ஆ! நான் போட்ட பின்னூட்டம் என்னாச்சு? பஜ்ஜியா நினைச்சு சாப்பிட்டுடுச்சா ப்லாகர்?

      பிழை திருத்தங்களுக்கும் பரிசுக்கும் நன்றினு விவரமா எழுதியிருந்தேன்.

      ஹிஹி.. வேலை நிமித்த பயணம். இந்தியா வந்திருந்தேன். மும்பையில் பிடித்த வைரஸ் இன்னும் விடவில்லை. பெங்களூர் தில்லி என்று அவசரப் பயணம் காரணமாக நன்றி சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன் - இணைய தொடர்பு கிடைப்பது அரிதாக இருந்தாலும் எழுதிய ரெண்டு பின்னூட்டங்களில் ஒன்று பஜ்ஜியாகிப் போனதே!

      நீக்கு
    3. Durai A September 27, 2014 at 11:58 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆ! நான் போட்ட பின்னூட்டம் என்னாச்சு? பஜ்ஜியா நினைச்சு சாப்பிட்டுடுச்சா ப்லாகர்? ........ ........ .......... எழுதிய ரெண்டு பின்னூட்டங்களில் ஒன்று பஜ்ஜியாகிப் போனதே! //

      பல்வேறு அவசரப்பணிகள் / பயணங்களுக்கு இடையேயும் மீண்டும் இங்கு வருகை தந்து கருத்தளித்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      “எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...” தாங்கள் இருப்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. :)))))

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  22. பரிசு பெற்றோருக்கு வாழ்த்துக்கள். சார் நீங்கள் பாராட்டுகின்ற தன்மையே சுவையானது. உங்கள் முயற்ச்சிக்கும் மனப்பாங்குக்கும் வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  23. வென்றோருக்கு வாழ்த்துக்கள்...
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  24. பரிசுபெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  25. முதல் பரிசை முதல் முறையாகப் பரிசு பெற்ற அப்பாதுரைக்கும், தொடர்ந்து அதைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கீதா மதிவாணனுக்கும் வாழ்த்துகள்.

    அப்பாதுரை, இங்கே கீழே சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு பஜ்ஜி 15 ரூபாய்க்கு விக்கறாங்க. தரம், சுமார் தான். :(

    பஜ்ஜிக்குள் வாழும் வழியைக் கண்டு பிடித்துச் சுவைத்த கீதமஞ்சரிக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க லெவலுக்கு வந்திருக்காது.. அதான் சுமார்னு சொல்றீங்களா?
      புடலங்காய் பஜ்ஜி எப்பவாவது சாப்பிட்டிருக்கீங்களா? வல்லிம்மா கமெண்ட் படிச்ச பிறகு சாப்பிடலாம்லயும் இன்னொரு ப்லாகிலும் தேடிக்கிட்டிருக்கேன்.

      நீக்கு
  26. முதல் பரிசு பெற்ற திரு. அப்பாதுரை அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  27. முதல் பரிசு பெற்ற திரு. அப்பாதுரை அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. //தவம் கிடந்தாலும் எல்லோராலும் இந்த அளவுக்கு நேரேட் பண்ண முடியாது என்பது வாஸ்தவம் தான்.//

    நூத்துக்கு நூறு உண்மை.

    முதல் பரிசு பெற்ற திரு. அப்பாதுரை அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. பரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு அப்பாதுரை அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. திருமதி கீதாமதிவாணன் திரு அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. வெற்றிபெற்ற விமர்சகர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு