திங்கள், 22 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 22ம் திருநாள்

2



நினைவில் நிற்கும்

பதிவர்களும் பதிவுகளும்


22ம் திருநாள்

22.06.2015


121. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்



ஸ்ரீ ஸ்ரீ சர்வ மங்கள ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி-61

ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் அருளும் 
லக்ஷ மஞ்சள் பிரார்த்தனை-62



 வானில் வண்ணக்கோலங்கள்-63




122. திருமதி.  சிவகாமி அவர்கள்

வலைத்தளம்: பூந்தளிர்-3
தேங்காய்ப் பால் பாயஸம்
பொங்கல் + ஃப்ரூட் சாலட்
குழந்தை வளர்ப்பு + சின்னதொரு ஜோக்
கேளடி பெண்ணே!
கும்பிடலாம் வாங்க!
பாடும் ரேடியோ
தங்கமே தங்கம் .. தொடர்கதை 1 of 4 
ஹோலி பண்டிகைபற்றி ஜாலியான செய்திகள்
ஆட்டோக்காரர்





123. திருமதி.  பவித்ரா அவர்கள்
வலைத்தளம்: பவித்ரா நந்தகுமார்


பட்டுப்போன்ற 
மென்மையான மேன்மையான எழுத்தாளரான
இவர்கள் வாழும் ஊர் ஆரணி !

ஆரணி .... பட்டு .... ஆஹா .... என்னப்பொருத்தம் பாருங்கோ ! :) 

இவரின் தனித்திறமைகள் சொல்லில் அடங்காதவை.

சிறுகதை எழுதுவதில் மட்டுமல்ல, கவிதைகள், கட்டுரைகள்
தொலைகாட்சிப் பட்டிமன்றப் பேச்சுக்கள், 
வானொலி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் 
புகழின் உச்சியில் கொடிகட்டிப்பறந்துவரும் 
இளவரசி ஆவார்.

இவர்களின் ஆக்கங்கள் இதுவரை 
வெளிவராத பிரபல பத்திரிகைகள்
தமிழ்நாட்டில் ஏதும் இல்லை 
என நான் அடித்துச் சொல்லுவேன்.

நேற்று முன்தினம் கூட (20.06.2015) இவரின் ஆக்கம்
’மேகிக்கு போகி’ என்ற தலைப்பில்
தினமலர் பெண்கள் மலரில் (Page 9 and 11 இல்)
வெளியாகியுள்ளது.

இவருக்கு எழுத்துலகில் இன்னும் 
மிகப் பிரகாசமான நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இவரின் ‘பவித்ரா’ என்ற 
பெயர் ராசி அப்படி !


என் மனம் நிறைந்த 
வாழ்த்துகளும் ஆசிகளும் 
 பவித்ரா ! 

 

அழகி
வாழ்க்கை சதுரங்கம்
அத்தை
புத்திர சோகம்
தங்கத் தோடு
அவளும் பெண் தானே !
அவன் .... அவள் ....
எச்சில் இலை பலகாரம்
அந்தத் தொழில்
செவிடன் மனைவி
ஆயா வீடு
விளம்பரங்களில் பெண்
பெண் என்பவள்
ஓடிப்போனவள்
அப்பாவின் அஸ்தி
ஷண்முகம் மாமா
ரிக்‌ஷா சவாரி
முகவரி தொலைத்த கடிதம்



 


124. திருமதி.  ராதாபாலு அவர்கள்

புத்தகங்களைப் படிப்பதும், அறிந்தவற்றையும், அனுபவங்களையும் எழுதுவதும் 

திருமதி. ராதாபாலு அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.


கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 
இவர்கள் எழுதியுள்ள கதைகள், கட்டுரைகள், 
ஆலய தரிஸனம், சமையல் குறிப்புகள் ஆகியவை 
பல பிரபலமான தமிழ் இதழ்களில் 
வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

  

சமீபத்திய 'தீபம்' இதழ்களில் இவரின் பல ஆன்மிகக் கட்டுரைகளும்

’தி ஹிந்து’ தமிழ் தினசரியிலும், மங்கையர் மலரிலும்

வேறு சில ஆக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் இதழ்கள் பலவற்றிலும் அவ்வப்போது 
வெளியாகியுள்ள அவற்றின் தொகுப்புக்களை
தற்போது தன் வலைத்தளங்களிலும் 
இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

எங்கள் ஊராம் திருச்சியில் உள்ள
பிரபல எழுத்தாளரான இவர்களின்
வலைத்தளங்கள்:


“அறுசுவைக் களஞ்சியம் ”


” எண்ணத்தின் வண்ணங்கள் ”


“ என் மன ஊஞ்சலில் “




வாழைப்பூ பருப்பு உசிலி
காரடை
பிசிபேளாபாத்
புளிக்காய்ச்சல்

oooooOooooo


பெண்ணின் முதல் எதிரி .. 
ஆணா / பெண்ணா ?
புலியின் வாலைப் பிடித்தேன்
மாசி மாசம் ஆளான பொண்ணு
விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு ஒரு ஜே
ஒரு வித்யாசமான அனுபவம் .. 
ஓஸி ஷாப்பிங்!

oooooOooooo


ஆலய விளக்கம்
ஆயிரெத்தெண் விநாயகர்
தலையில் லிங்கம் சூடிய மஹாலக்ஷ்மி
’ஸ்ரீ’ யின் யந்திரங்கள்




125.   விஜி  
என்கிற
திருமதி.  விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்
வலைத்தளங்கள்:

I LOVE CRAFT

VIJI'S CRAFT 


நாங்கூர் கருட சேவை
ஹாரத்தித் தட்டுகள்
சின்னச்சின்ன சிருங்காரக் கை வேலைகள்
நகரும் ரங்கோலிக் கோலங்கள்
அழகாய் மிதக்கும் ரங்கோலிக் கோலங்கள்
புடவைத்தலைப்பினில் ஜொலிக்கும் கை வண்ணம்
தமசோமா ஜ்யோதிர்கமய!




126. சுய அறிமுகத்தில் சில ....

        பரிசு பெற்ற நாடகம் 
{சிறுசிறு பகுதிகள் படங்களுடன்}







மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

55 கருத்துகள்:

  1. திருமதி.பவித்ரா, திருமதி.விஜி, திருமதி.ராதா பாலு, திருமதி.சிவகாமி அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @மனோ சாமிநாதன்

      :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  2. பவளமல்லிகைப் பூவில் சொக்கி
    திருமதிகள் சிவகாமி, பவித்திரா
    ராதா பாலு, விஜி ஆகியோருக்கும்
    உங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @kovaikkavi

      :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. :)

      பவழமல்லிப்பூக்களின் நறுமணம் போன்றே தங்களின் இனிய வாழ்த்துகளும் சொக்க வைக்கிறதே ! :)

      மிக்க நன்றி :)

      நீக்கு
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் படிக்கவேண்டும்...நிதானமாய் படித்து கருத்து இடுகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @R.Umayal Gayathri

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      //ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் படிக்கவேண்டும்... நிதானமாய் படித்து கருத்து இடுகிறேன் ஐயா.//

      ஆஹா, பேஷா, தங்கள் செளகர்யம்போல ... நிறுத்தி நிதானமாகவே செய்யுங்கோ. ஒன்றும் அவசரமே இல்லை. தாங்கள் இவ்வாறு சொன்னதே போதும் ..... சந்தோஷம். அதற்கும் என் நன்றிகள்.

      நீக்கு
  4. அறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @பழனி. கந்தசாமி

      :) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  5. தாங்கள் இன்று அறிமுகப்படித்தியுள்ள
    பதிவர்களின் பதிவுகள் அனைத்தும்
    சுவாரஸ்யமாகவும் இருக்கும்
    பயனுள்ளதாகவும் இருக்கும்
    அவர்கள் அனைவருக்கும்
    மிகச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ள
    தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Ramani S

      :) வாங்கோ சார், வணக்கம், மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சார் :)

      நீக்கு
  6. திருமதி ராதா பாலு அவர்கள் தளத்துக்கு சிலமுறை சென்றிருக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் புதுசு.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ஸ்ரீராம்.

      ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  7. பதிவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கரந்தை ஜெயக்குமார்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  8. பதில்கள்
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) வாங்கோ, My Dear DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  9. இன்றைய அறிமுக பதிவர்களுக்கு என வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வே.நடனசபாபதி

      :) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  10. அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் தளங்களுக்குச் சென்றேன். தங்கள் மூலமாக பல புதியவர்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. நாளை சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Dr B Jambulingam

      :) வாங்கோ முனைவர் சார், வணக்கம், மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  11. இன்று எனக்கு புதிய அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @சசி கலா

      :) வாங்கோ, தென்றலாய் வருகை தந்துள்ள கவிதாயினியே ! வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  12. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @mageswari balachandran

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ராதாபாலு, விஜி அவர்களின் தளம் சென்றதில்லை! சென்று பார்க்கின்றேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @‘தளிர்’ சுரேஷ்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  14. ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    விரிந்த கண்களும், திறந்த வாயுமாய் என் பெயரை பார்கிறேன்.
    ஒளிவெள்ள நிலவும்,சுடர் ஒளி சூரியனும் பளிச்சிடும் வானில்
    இந்த கண்சிமிட்டும் நக்சதரத்துக்கும் ஒரு எடம்.
    ஆஹா உங்களுக்கு எவ்வள்ளவு பெரிய மனது...............
    சின்ன சின்ன கைவேலை செய்து அதை போட்டோ வாக போட்டு மகிழும் என்னை உங்கள் உற்சாக பாராட்டு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
    ஆனால் இப்போது எனக்கு சிறகுகளை தந்து விட்டர்கள்.
    இதோ நான் மகிழ்ச்சி வானில் பறக்கிறேன்.
    தட்டச்சில் என் மனவெழுச்சியை பதிவிட வேகமான தட்டச்சு தெரியாததால் நீங்கள் குறிப்பிடும் எல்லா பதிவர்களின் இடத்துக்கும் சென்று படித்து மகிழ்கிறேன்.
    இங்கே கற்றவர் நிறைந்த சபையில் இந்த குழந்தையின் கிறுக்கலை ஓவியமாய் எடுத்து இயம்பியதற்க்கு நன்றி பல.
    அன்புடன் விஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji June 22, 2015 at 2:32 PM

      வாங்கோ விஜி. வணக்கம்மா. செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? உங்களைப் பதிவுகளில் பார்த்தே ரொம்பநாள் ஆச்சும்மா. எல்லாம் நலம் தானே ?

      //ஓஓஓஓஓஓஓஓஓஓஓ//

      என்ன ஒரேயடியா இவ்வளவு ‘ஓ’ போட்டுட்டீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓ:)

      //விரிந்த கண்களும், திறந்த வாயுமாய் என் பெயரை பார்க்கிறேன். ஒளிவெள்ள நிலவும், சுடர் ஒளி சூரியனும் பளிச்சிடும் வானில் இந்த கண்சிமிட்டும் நக்ஷத்திரத்துக்கும் ஒரு இடம். ஆஹா உங்களுக்கு எவ்வளவு பெரிய மனது...............//

      அடடா, தங்கள் கை வேலைகளைப்போலவே. இப்போ அழகா தமிழில் கவிதைபோல எழுதவும் ஆரம்பிச்சுட்டீங்கோ. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :)

      //சின்னச் சின்னக் கைவேலைகள் செய்து அதை போட்டோவாக போட்டு மகிழும் எனக்கு உங்கள் உற்சாக பாராட்டுகள் சந்தோஷத்தை கொடுத்திருக்கின்றன.//

      சின்னச் சின்னக் கைவேலைகள் எல்லோராலும் செய்ய முடியாதே விஜி. அது தங்களைப்போன்ற வெகு சிலருக்கு மட்டுமே கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள ஸ்பெஷல்
      கிஃப்ட் அல்லவா !!!!!

      //ஆனால் இப்போது எனக்கு சிறகுகளை தந்து விட்டீர்கள். இதோ நான் மகிழ்ச்சி வானில் பறக்கிறேன்.//

      எப்போதும் நம் விஜி மகிழ்ச்சி வானில் மட்டுமே பறக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் ஆகும். :)

      //தட்டச்சில் என் மனவெழுச்சியை பதிவிட வேகமான தட்டச்சு தெரியாததால் நீங்கள் குறிப்பிடும் எல்லா பதிவர்களின் இடத்துக்கும் சென்று படித்து மகிழ்கிறேன்.//

      மிகவும் சந்தோஷம்மா. தங்களின் தமிழ் தட்டச்சில் இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள். :)

      //இங்கே கற்றவர் நிறைந்த சபையில் இந்த குழந்தையின் கிறுக்கலை ஓவியமாய் எடுத்து இயம்பியதற்கு நன்றிகள் பல. //

      ஓர் குழந்தையின் கிறுக்கலைவிட மிகச்சிறந்ததோர் ஓவியம் இந்த உலகத்திலேயே எங்குமே கிடையாது, என்று நினப்பவன் நான். :)

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //அன்புடன் விஜி//

      பிரியமுள்ள வீ.......ஜீ

      நீக்கு
  15. நிறைந்த செய்திகளுடன்.. சிறந்த பதிவர்களின் அறிமுகம்..

    அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.... வாழ்க தங்கள் சேவை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @துரை செல்வராஜூ

      :) வாங்கோ, பிரதர். வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  16. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைய அறிமுகத்தில் நமது ஊர்க்காரர் திருமதி. ராதாபாலு அவர்களது வலைத்தளம் மட்டுமே எனக்கு தெரியும். சமீபகாலமாக தமிழ்மணத்தில் அடிக்கடி வரும் இவரது ஆக்கங்களை படிக்கின்றேன்.

    மற்றும் இன்றைய வலைத்தள பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @தி.தமிழ் இளங்கோ

      :) வாங்கோ, சார். வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி சார், மிக்க நன்றி சார் :)

      அன்புடன் VGK

      நீக்கு
  17. இன்றைய ம்அறிமுகத்தில் ராதாபாலு மட்டும் தெரியும். மற்ற அனைவரும் புதியவர்கல். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy G June 22, 2015 at 7:10 PM

      வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

      //இன்றைய அறிமுகத்தில் ராதாபாலு மட்டும் தெரியும். மற்ற அனைவரும் புதியவர்கள். எல்லோருக்கும் என் பாராட்டுகள்!//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். :)

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  18. இன்றைய பதிவர்களின் பக்கங்களுக்கு சென்று பார்த்தேன். அனைத்தும் அருமை.
    ஒவ்வொரு பதிவரும் எழுதியிருக்கும் அத்தனை பதிவுகளையும் நினைவில் வைத்து, அவற்றில் சிறந்ததை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் தங்களின் சேவையைப் பார்க்கும் போது, தங்களின் நினைவு திறனை எண்ணி வியக்கிறேன் அய்யா!
    தொடரட்டும் தங்களின் அறிமுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.P. Senthil Kumar June 22, 2015 at 10:35 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //இன்றைய பதிவர்களின் பக்கங்களுக்கு சென்று பார்த்தேன். அனைத்தும் அருமை.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //ஒவ்வொரு பதிவரும் எழுதியிருக்கும் அத்தனை பதிவுகளையும் நினைவில் வைத்து, அவற்றில் சிறந்ததை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் தங்களின் சேவையைப் பார்க்கும் போது, தங்களின் நினைவு திறனை எண்ணி வியக்கிறேன் அய்யா! //

      என் வலையுலக நட்பு வட்டம் சற்றே பெரியது. இருப்பினும் அவர்களில் ஏதோ ஒருசில அடைப்படை காரணங்களுடன் 168 பதிவர்களை மட்டுமே வடிகட்டி தேர்ந்தெடுத்து அடையாளம் காட்டி சிறப்பிக்க நினைத்து திட்டமிட்டுள்ளேன்.

      *அவர்களில் 98 பெண் பதிவர்கள் + 70 ஆண் பதிவர்கள்.*

      இதுபோக கணக்கில் சேராத Repeated Cases 33+1+1+1+1=37 மற்றும் என் சுய அறிமுகங்கள் 31 ... ஆகமொத்தம் Serial Numbers : 168+37+31=236 என இந்தத்தொடர் நிறைவடையக்கூடும்.

      *எனது தேர்ந்தெடுத்தலுக்கான அடிப்படை காரணங்கள் பற்றியும் இந்தத்தொடரின் நிறைவுப்பகுதியில் அறிவிக்கவும் உள்ளேன்.*

      //தொடரட்டும் தங்களின் அறிமுகம்.//

      :) மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி :)

      நீக்கு
    2. Total Serial Numbers 236 எனத்திட்டமிடப்பட்டுள்ளது.

      இதுவரை தினமும் தலைப்பகுதியில் ஓர் தலைவியும், வால் பகுதியில் அடியேனும் காட்சியளித்து, நடுவில் உடல் பகுதியில் நால்வர் வீதம் மட்டுமே அடையாளம் காட்டப்பட்டு வரப்படுகிறது.

      இத்துடன் இந்த 22ம் திருநாளுடன் Serial Numbers: 126 மட்டுமே முடிந்துள்ளன. 236 Minus 126 = 110 Serial Numbers பாக்கியுள்ளன. 05.07.2015 அன்று இந்தத் தொடர் முடிய இன்னும் 13 நாட்களே உள்ளன.

      அதனால் இனிவரும் 5 நாட்களுக்கு வழக்கம் போல 6 Serial Numbers வீதமும், மீதி 8 நாட்களுக்கு தினமும் 10 Serial Numbers வீதமும் அடையாளம் காட்டப்பட உள்ளன.

      {5*6=30} + {8*10=80} ஆகமொத்தம் 110 Serial Numbers என கணக்கு சரியாகிவிடும் என நினைக்கிறேன். :)

      இதெல்லாம் ஒரு தகவலுக்காக மட்டுமே. - VGK

      நீக்கு
  19. சீரிய பதிவர்கள்!
    சிறந்த பதிவுகள்!
    நன்று சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      :) வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  20. ராஜி, சிவகாமி, பவித்ரா, ராதா பாலு விஜி ஆகியோருக்கு வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றி விஜிகே சார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Thenammai Lakshmanan

      :) வாங்கோ ஹனி மேடம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  21. மனம் மகிழ்ந்த நன்றிகள் சார்
    உங்களின் அறிமுகம் என்னை பலரிடம் கொண்டு சேர்க்கும்
    உங்களின் அன்பிற்கு இணையே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @A.R.ராஜகோபாலன்

      வாங்கோ சார், வணக்கம். தங்கள் வலைத்தளம் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது இதோ இந்த 23ம் திருநாள் என்ற பதிவினில்:

      http://gopu1949.blogspot.in/2015/06/23.html

      இருப்பினும் இங்கு தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  22. இன்றைய பதிவர்களில் பூந்தளிர் சிவகாமி அவர்களும் விஜி அவர்களும் புதியவர்கள். இன்றைய பதிவுகள் அனைத்துக்கும் சென்று பார்வையிடவே பலநாள் வேண்டும்போல் உள்ளது. சான்றுக்கு ஒன்றிரண்டு பதிவுகள் பார்வையிட்டேன். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரிJune 23, 2015 at 7:18 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய பதிவர்களில் பூந்தளிர் சிவகாமி அவர்களும்
      விஜி அவர்களும் புதியவர்கள்.//

      தங்களுக்கே புதியவர்களா?

      ஆஹா. அப்படி ஒருபோதும் இருக்கக்கூடாதே என்பதால் மட்டுமே அவர்களைப்பற்றி இங்கு நான் சிறப்பித்துக் கூறியுள்ளேன், போலிருக்கிறது.

      மேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் ஏதும் புதிய பதிவுகள் தரவில்லை என்பதையும் நான் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

      அவர்களின் சூழ்நிலைகள் தற்சமயம் புதிய பதிவுகள் ஏதும்
      வெளியிடமுடியாமல் அமைந்துள்ளன. விரைவில் சூழ்நிலைகள் சாதகமாக அமைந்து மீண்டும் பதிவுலகுக்கு வருவார்கள் என நாம் நம்புவோம்.

      //இன்றைய பதிவுகள் அனைத்துக்கும் சென்று பார்வையிடவே பலநாள் வேண்டும்போல் உள்ளது.//

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      //சான்றுக்கு ஒன்றிரண்டு பதிவுகள் பார்வையிட்டேன்.//

      சான்றுக்கு ஒன்றிரண்டா ................... !!!!!! :)

      இரயிலில் பயணம் செய்து, அதுபோதாதென்று வானில் வண்ண வண்ணக்கோலங்களாகத் திகழ்ந்த விமான சாகசங்களையும் கண்டு களித்துவிட்டு, விமான வேகத்திலேயே மேலும் சுமார் 20 பதிவுகளுக்குச் சென்று கருத்தளித்து வந்துள்ளீர்கள் என்பதை நான் துப்புத்துலக்கிக் கண்டு பிடித்துள்ளேன். தங்களின் இந்த ’ஜெட் வேகம்’ என்னை வியக்க வைத்தது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். :)))))))))))))))))))))))

      //அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் அனைவர் சார்பிலும் என்
      சார்பிலும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      என்றும் பிரியமுள்ள கோபு

      நீக்கு
  23. என்னைப் பற்றி இப்படியொரு அறிமுகமா? ரசித்து சிரித்தேன்.குடத்தினுள் இருந்த விளக்கு போல இருந்த என் வலைப்பூவை குன்றிலிட்ட விளக்காய் பிரகாசமாய் பிறருக்கு தெரியப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களின் ஆசி என்னை மேன்மேலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லட்டும்.

    என்றும் அன்புடன்
    பவித்ரா நந்தகுமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பவித்ரா நந்தகுமார் June 25, 2015 at 9:27 AM

      வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு முதற்கண் என் நன்றிகள்.

      //என்னைப் பற்றி இப்படியொரு அறிமுகமா? ரசித்து சிரித்தேன்.//

      தங்களின் சிரிப்பினை நானும் என் கற்பனையில் ரஸித்து மகிழ்ந்தேன். :)

      //குடத்தினுள் இருந்த விளக்கு போல இருந்த என் வலைப்பூவை குன்றிலிட்ட விளக்காய் பிரகாசமாய் பிறருக்கு தெரியப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி.//

      ஆஹா, இந்தத் தன்னடக்கம்தான் தங்களின் தொடர் வெற்றிகளின் இரகசியம் என்பதை நான் நன்கு அறிவேன். :)

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //தங்களின் ஆசி என்னை மேன்மேலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லட்டும்.

      என்றும் அன்புடன்
      பவித்ரா நந்தகுமார்//

      என் ஆசிகள் ‘பவித்ரா’ என்ற பெயர் ராசிகொண்ட அனைவருக்கும் எப்போதுமே உண்டு :)

      http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
      http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html
      http://gopu1949.blogspot.in/2015/01/19_4.html

      என்றும் அன்புடன்
      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  24. புதியவர்கள்! அறிந்த் கொண்டோள்ம்....அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Thulasidharan V Thillaiakathu

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார். :)

      நீக்கு
  25. ஹையா இங்க நானும் இருக்கேனா? சூப்பர் சூப்ர். பதிவு எழுத ஆரம்பிச்சு பேருக்குனு நாலு பதிவு எழுதினேன். எழுதறத விட்டு கூட ரெண்டு வருஷம் ஆச்சு. என்னையும் தேடி பிடிச்சு அறிமுகம் பண்ணி இருக்காங்க. நன்றியோ நன்றிகள். இத பாத்ததுமே மறுபடி எழுத தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் September 6, 2015 at 5:39 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //ஹையா இங்க நானும் இருக்கேனா? சூப்பர் சூப்பர்.//

      பருப்பில்லாமல் கல்யாணமா ? :)

      //பதிவு எழுத ஆரம்பிச்சு பேருக்குனு நாலு பதிவு எழுதினேன். எழுதறத விட்டு கூட ரெண்டு வருஷம் ஆச்சு. என்னையும் தேடி பிடிச்சு அறிமுகம் பண்ணி இருக்காங்க. நன்றியோ நன்றிகள்.//

      சிலரின் சூழ்நிலை அதுபோல தொடர்ந்து எழுத இயலாமல் ஆகிவிடுகிறது. அதனால் என்ன? பரவாயில்லை.

      தங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      // இத பாத்ததுமே மறுபடி எழுதத் தோணுது.//

      எழுதுங்கோ, கட்டாயமா எழுதுங்கோ. அதற்குத்தானே இவ்வளவு சிரமப்பட்டு, ’நினைவில் நிற்போர்’ ன்னு தலைப்புக்கொடுத்து கெளரவப்படுத்தி மகிழ்ந்துள்ளோம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  26. இந்தப்பதிவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  27. நினைவில் நிற்கும் பதிவர்களும் பதிவுகளும்....
    அருமை.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:17 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நினைவில் நிற்கும் பதிவர்களும் பதிவுகளும்....
      அருமை.. வாழ்த்துகள்..//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

      நீக்கு