என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 15 ஜூன், 2011

மடிசார் புடவை [பகுதி 1 of 2]


'ஆத்துக்கு (வீட்டுக்கு) ஒரு பெண் பிறந்தால் அத்தை அசலார்' என்று ஒரு பழமொழி உண்டு. வீட்டுக்கு நான் பெண்ணாகப்பிறந்து விட்டேனே ஒழிய, என் அத்தை அசலாராக முடியவில்லை.

ஏனென்றால் என் வீட்டுக்கு நான் ஒரே பெண். என் அத்தை பிள்ளைக்கே வாழ்க்கைப்பட உள்ள எனக்கு என் அத்தை என்றுமே அசலார் ஆக முடியாதே.

ஏற்கனவே என் அத்தையின் அதிகாரம், எப்போதுமே என் வீட்டில் கொடிகட்டிப்பறக்கும். இப்போது அவர்கள் வீட்டுக்கே மருமகளாக நான் போக வேண்டிய சூழ்நிலையில் நாளுக்கு நாள் வெறும் அதிகாரம் சர்வாதிகாரமாகவே போய்விட்டது.

என் அம்மாவை நினைத்தால் தான் ரொம்பவும் பாவமாக உள்ளது. மாமியார், மாமனார், நாத்தனார் என்று பயந்து நடுங்கிப்பழகியவள். மாமியார், மாமனார் ஏதோ வயதாகி காலமாகிவிட்டதால், நியாயமாக அவளின் பயம் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அது தான் இல்லை.

நல்லவேளையாக என் அம்மாவுக்கு, என் வருங்கால மாமியாராகிய ஒரே ஒரு நாத்தனார் மட்டும் தான். ஆனால் அந்த ஒரு நாத்தனாரே ஒன்பது நாத்தனார்களுக்குச் சமம்.

எதைப்பார்த்தாலும் அதில் ஒரு குறையை மட்டும் அலசி ஆராய்ந்து கண்டுபிடிப்பவர்கள் என் அத்தை. வாயைத்திறந்து எது பேசினாலும், அதில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு குதர்க்கம் ஒளிந்திருக்கும்.

மிகவும் அப்பாவியான என் அம்மா, எதற்கு வம்பு என்று பேசாமல் ஒதுங்கியே இருந்தாலும், “அமுக்கக்கள்ளி” என்பார்கள். 

வாயைத்திறந்து ஏதாவது ஓரிரு வார்த்தைகள், அதுவும் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டாலும் அதில் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து பொடுகைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி அம்மாவை அழ வைத்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பாள்.

என் அப்பாவும் கூட தன் அக்காவுக்கு சற்று பயப்படக்கூடியவர் தான். சட்டசபை சபாநாயகர் போல இருவருக்கும் நடுவில் நடுநிலைமை வகித்து, தன் அக்காவின் கோபத்தை மேற்கொண்டு கிளறாமல் சமாதானப்படுத்தவே முயற்ச்சிப்பார்.

”என் பொண்டாட்டி ஒரு அசடுன்னு உனக்குத்தெரியாதா அக்கா; அவள் பேச்சை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்காதே அக்கா; உன் அனுபவம் என்ன! உன் சாமர்த்தியம் என்ன! அவள் கிடைக்கிறாள்” என்பார். 

[பிறகு என் அம்மாவைத் தனியாக சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு தைர்யத்தில்.]

இதெல்லாம் என் சின்ன வயது முதல், நான் பலமுறை பார்த்து, கேட்டு, பழகிப்போனது தான். இப்போது என் திருமண விஷயமாக, தன் நாத்தனாரே சம்பந்தி அம்மாளாக வரப்போவது, என் அம்மாவுக்கு அடி வயிற்றில் புளியைக்கரைப்பதாக இருக்க வேண்டும் என்பதை, என்னால் நன்றாகவே உணர முடிந்தது.

சம்பந்தி அம்மாளை இந்த என் கல்யாணத்தில் முழுத்திருப்தி படுத்தவும், தங்களுக்கே இயல்பாக உள்ள ஆவலைப்பூர்த்தி செய்துகொள்ளவும், சீர் வரிசை முதலான அனைத்து விஷயங்களிலும் சர்வ ஜாக்கிரதையாக எல்லாம் அமர்க்களமாக செய்துவிடத்தான் என் அம்மாவும், அப்பாவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

பெறுபவர் மனதில் திருப்தி என்பதை கொடுப்பவர்களால் பணத்தாலோ, பொருளாலோ வரவழைத்துவிட முடியுமா என்ன? பெறுபவருக்கு அது தனக்குத்தானே திருப்தியளித்தால் தான் உண்டு. மேலும் எது கிடைத்தாலும் அதை சந்தோஷமாக, மனதில் ஒருவித திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள, இறைவன் அருளால் அதற்கான மனப்பக்குவம் ஏற்பட்டிருந்தால் தான் உண்டு. 

ஒருவர் தனக்குக்கிடைத்த பொருளை, திருப்தியுடன் பெற்று, சந்தோஷமாக அதை அனுபவிக்கவும் ஒரு கொடுப்பினை வேண்டும் என்பார்கள், அனுபவசாலிகள். அதுவும் நியாயமான கூற்று தான்.

இன்று எங்கள் வீட்டில் ஒரு சிறிய பிரச்சனையும், பரபரப்பும். என் அத்தைக்கு (வருங்கால சம்பந்தி அம்மாளுக்கு) எங்கள் வீட்டின் சார்பில் கல்யாணத்திற்குப் புடவை எடுக்க ஜவுளிக்கடைக்குப் போக வேண்டும். அவர்கள் எப்போதும் கட்டுவது ஒன்பது கெஜ மடிசார் புடவை.

”கடைக்கு நீங்களும் வாங்கோ” என்று கூப்பிட்டால் “நீயே பார்த்து ஏதாவது வாங்கி வாயேன்; எனக்காகப் புடவை வாங்க நானே உங்களுடன் வந்தால் நன்னா இருக்காது; விலையும் கூடக்குறைய ஏதாவது எடுத்துக்கொண்டு விடுவேன்; உங்கள் பட்ஜெட் எப்படியோ, என்னவோ, ஏதோ?” என்பார்கள்.

சில சமயங்களில் “வரவர இந்த ஒன்பது கெஜம் புடவையைக் கையாள்வதே கஷ்டமாக உள்ளது. உடம்பில் நீட்டி முழக்கிக்கட்டுவதோ, அவிழ்ப்பதோ, துவைப்பதோ, அலசுவதோ, உலர்த்துவதோ, மடித்து வைப்பதோ செய்வதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிரது. பேசாமல் எப்போதுமே இந்த சிறுசுகளைப்போல நாமும் நைட்டியில், காத்தாட இருந்து விடலாம் போல உள்ளது” என்பார்கள்.

அவர்களைக் கடைக்குக் கூப்பிடாமல் நாங்கள் மட்டுமே புடவை எடுக்கப்போனாலோ, “உள்ளூரிலேயே இருக்கும் என்னையும் ஒரு மரியாதைக்காகவாவது கடைக்கு வாங்கோன்னு கூப்பிடனும்னு தோணலையா உங்களுக்கு” என்பார்கள்.  மொத்தத்தில் இப்படி என்றால் அப்படி என்றும், அப்படி என்றால் இப்படி என்றும் கூறுபவர்கள்.

பலவித யோசனைகள், மண்டைக்குடைசல்களுக்குப்பின், ஒருவழியாக நாங்கள் மட்டுமே ஜவுளிக்கடைக்குப் போவதென முடிவெடுத்து, புறப்பட்டும் விட்டோம்.

தங்கக்கலரில் அரக்கு பார்டர், அரக்குக்கலரில் பச்சை பார்டர், புட்டா போட்டது, புட்டா போடாத ப்ளைன் புடவை, ராமர் கலர், மயில்கழுத்து இரட்டைக்கலர், தலைப்பு பூராவும் ஜரிகை அது இதுன்னு பட்டுப்புடவைகள் பலரகங்களில் போடப்பட்டன. மூவாயிரம் முதல் முப்பதாயிரம் வரை விலைகளில் பல தினுசுகள், பல டிசைன்கள்.

அப்பாவும் அம்மாவும் நெடுநேரம் யோசித்து, ட்யூப் லைட் வெளிச்சத்திலும், வெளியே வெய்யில் வெளிச்சத்திலும் கலர்களைப்பார்த்து, திருப்திப்பட்டு, ஒரு நவாப்பழக்கலர் பட்டுப்புடவையை, நல்ல பச்சைக்கலரில் ஜரிகை பார்டராகவும், ஒரு வித்யாசமான தலைப்பாகவும் தேர்ந்தெடுத்து கடைக்காரரை விட்டு பிரித்துக்காண்பிக்கச்சொல்லி வாங்கிக்கொண்டார்கள்.

ஒருவேளை சம்பந்தி அம்மாளுக்கு திருப்தி இல்லாமல் இருந்தால் வந்து வேறு புடவை மாற்றிச்செல்கிறோம் என்று கடை முதலாளியிடம் கேட்டுக்கொண்டனர். புடவை கசங்காமலும், மடிப்புக்கலையாமலும், பில்லுடன், நான்கு நாட்களுக்குள் வந்தால் மாற்றிக்கொள்ளலாம் என்று கடைக்காரரும் உத்தரவாதம் கொடுத்ததில் என் அம்மாவுக்கு ஒரு நிம்மதி. 

அம்மாவும், அப்பாவும் தாங்கள் எடுத்துள்ள பட்டுப்புடவைக்கு மேட்ச் ஆக ரவிக்கைத்துணி எடுக்க அந்தக்கடையின் வேறு பகுதிக்குச் சென்றார்கள். நான் மட்டும் சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன்.


தொடரும்

   

  
[இந்தச் சிறுகதை அடுத்த பகுதியுடன் நிறைவடைந்து விடும்]

42 கருத்துகள்:

  1. கடந்து போன தலைமுறைகளின் வாழ்க்கைமுறை எத்தனை விதமாய்க் கோர்க்கப்பட்டிருக்கின்றன உங்களால்?

    வாஷிங்டனில் திருமணம் ஒரு பக்கமாய் மட்டுமே பார்த்தது போலத் தோன்றும். ஆனால் உங்களின் பார்வை எல்லாப் பக்கங்களிலும் சுழல்கின்றன கோபு சார்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு நாத்தானாரே ஒன்பது நாத்தனார்களுக்குச் சமம்.//
    கொடுத்து வைத்த்வர் அவர் அம்மா. எனக்கு ஐந்து நாத்தனார்கள். ஐந்நூறு மாமியார்களுக்கு சமம்.

    அருமையான நடை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. @சட்டசபை சபாநாயகர் போல இருவருக்கும் நடுவில் நடுநிலைமை வகித்து, தன் அக்காவின் கோபத்தை மேற்கொண்டு கிளறாமல் சமாதானப்படுத்தவே முயற்ச்சிப்பார்.//

    பாவம் பாம்பென்று தாண்டவும் முடியாது. பழுதென்று மிதிக்கவும் முடியாதே.

    பதிலளிநீக்கு
  4. வாயைத்திறந்து எது பேசினாலும், அதில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு குதர்க்கம் ஒளிந்திருக்கும்.//

    நிறைய சாமர்த்திய சாலிகளைப் பார்த்து வியந்ததுண்டு.
    வாய் மட்டும் இல்லையென்றால் நாய் தூக்கிக் கொண்டு போயிருக்கும் என்று சொல்லுமாறு வாயிலேயே வாய்ப்பந்தல் போட்டு வாயாஜாலம் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆத்துக்கு (வீட்டுக்கு) ஒரு பெண் பிறந்தால் அத்தை அசலார்' என்று ஒரு பழமொழி உண்டு.//

    அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் புடவைகளை வர்ணிக்கிற விதம் கண்டு
    அசந்து போனேன்
    எந்த கதையானாலும் அந்த சூழலை
    மிகச் சரியாக கண்முன் கொண்டுவந்து
    நிறுத்திவிடுகிறீர்கள்
    நல்ல துவக்கம்
    (எங்களுக்கும் எடுத்த புடவை மற்றும்
    டிசைன் பிடிக்காமல் எந்த பிரச்சனையும்
    வந்துவிடக்கூடாதே என்கிற பயம்
    இப்போதே வந்துவிட்டது)

    பதிலளிநீக்கு
  7. திருமண வீட்டின் நிகழ்ச்சிகளையும் உறவிலேயே வாழ்க்கைப் படப்போகும் எண்ண ஓட்டங்களையும் அழகாகக் கோர்த்துச் சொல்கிறீர்கள். பராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சில வருடங்களுக்கு முன்பு வரை நாத்தனார்களுக்கு பயந்த காலம். இப்ப அப்படி அதிகம் இல்லை

    அது சரி , நாத்தனாருக்கு பயந்த மாதிரி யாரும் மைத்துனருக்கு பயப்படறது இல்லையே

    பதிலளிநீக்கு
  9. ஒத்தை நாத்தனார்… ஒன்பது நாத்தனாருக்கு ஈடு…., எது வாங்கினாலும் குறை சொல்வது…, புடவைக் கடையில் புடவை வாங்கும் பாங்கு என்று சூழ்நிலையை அழகாய் எடுத்துக்க் காட்டியது உங்கள் இந்த பகிர்வு… நாங்களும் நாயகியுடன் கடையிலேயே காத்திருக்கிறோம்…. அடுத்த பகுதியில் “நடந்தது என்ன?” என்று தெரிந்து கொள்ள…..

    பதிலளிநீக்கு
  10. ""தங்கக்கலரில் அரக்கு பார்டர், அரக்குக்கலரில் பச்சை பார்டர், புட்டா போட்டது, புட்டா போடாத ப்ளைன் புடவை, ராமர் கலர், மயில்கழுத்து இரட்டைக்கலர், தலைப்பு பூராவும் ஜரிகை அது இதுன்னு பட்டுப்புடவைகள் பலரகங்களில் போடப்பட்டன. மூவாயிரம் முதல் முப்பதாயிரம் வரை விலைகளில் பல தினுசுகள், பல டிசைன்கள்.""

    எந்த பிரிவை, வகையை, விதத்தை எடுத்தாலும்
    அதன் ஆதி முதல் அந்தம் வரை சொல்லும் உங்களை எழுத்து நடை யாருக்கும் வாய்க்காது ஐயா.

    அந்த அம்மாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது ஐயா , அவர்களை ரொம்ப வேதனை பட வைக்காதீர்கள் , இது என் வேண்டுகோள்

    பதிலளிநீக்கு
  11. //எதைப்பார்த்தாலும் அதில் ஒரு குறையை மட்டும் அலசி ஆராய்ந்து கண்டுபிடிப்பவர்கள் என் அத்தை. வாயைத்திறந்து எது பேசினாலும், அதில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு குதர்க்கம் ஒளிந்திருக்கும்.

    மிகவும் அப்பாவியான என் அம்மா, எதற்கு வம்பு என்று பேசாமல் ஒதுங்கியே இருந்தாலும், “அமுக்கக்கள்ளி” என்பார்கள்.// நின்றாலும் தப்பு நடந்தாலும் தப்பு என்பார்களே இதை தானே..
    .கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள், அப்ப மாமியார் நாத்தனார் அமைவதெல்லாம் யார் கொடுத்த வரம் )))

    பதிலளிநீக்கு
  12. //சில சமயங்களில் “வரவர இந்த ஒன்பது கெஜம் புடவையைக் கையாள்வதே கஷ்டமாக உள்ளது. உடம்பில் நீட்டி முழக்கிக்கட்டுவதோ, அவிழ்ப்பதோ, துவைப்பதோ, அலசுவதோ, உலர்த்துவதோ, மடித்து வைப்பதோ செய்வதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிரது. பேசாமல் எப்போதுமே இந்த சிறுசுகளைப்போல நாமும் நைட்டியில், காத்தாட இருந்து விடலாம் போல உள்ளது” என்பார்கள்.//
    ஒரு கேரக்டராய் கூடு விட்டு கூடு மாறும் ஜாலம் உங்கள் பேனாவிற்கு இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  13. நாத்தனாரே மாமியாராவது தொடரும் துன்பம் போல. ஆனால் நம் ஊரில் பெண்களுக்கு சிறு வயது முதலே நாத்தனார், மாமியார் பற்றி சொல்லி பயமுறுத்தியே வளர்ப்பதால் நாத்தனாராகும் பெண்கள் அந்த குணாதிசயங்களைக் காட்ட வேண்டும் என்றும், நாத்தனார் முதலியோரை அடையும் பெண்கள் இவர்கள் தப்பாகத்தான் இருப்பார்கள் என்று ஒரு முன் தற்காப்புடனேயும் இருக்கிறார்களோ என்று தோன்றும்! இங்கு என்னாகிறது என்று அடுத்த கட்டத்தில் பார்ப்போம். நீங்கள் இதை அப்படியே வேறு திசையில் கொண்டு போய் ஏதாவது மெசேஜ் சொல்வதில் வல்லவர்.

    பதிலளிநீக்கு
  14. கையில் வசமாய் உருட்டுக் கட்டை வைத்திருக்கிறேன்.. நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்..அந்த அத்தையை மட்டும் அடையாளம் காட்டுங்கள் போதும்....

    பதிலளிநீக்கு
  15. எப்போதும்போல சரளமான, மெல்லிய நகைச்சுவையுடன் கதை போகிறது!

    "சட்டசபை சபாநாயகர் போல இருவருக்கும் நடுவில் நடுநிலைமை வகித்து, தன் அக்காவின் கோபத்தை மேற்கொண்டு கிளறாமல் சமாதானப்படுத்தவே முயற்ச்சிப்பார்.//"

    புன்னகையை வரவழைத்த‌ உதாரணம்! ஆனால் அப்போதும் அக்கா பக்கம்தானே அவர் சாய்கிறார்? பிற‌கு நடுநிலைமை எங்கிருந்து வந்தது?

    பதிலளிநீக்கு
  16. ஒரு தலைமுறையின் வாழ்க்கை கண் முன் நிற்கிறது.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  17. கல்யாணத்துக்கு முன்னரே மாமியாரை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து கொண்டு விட்டதால் இந்த பெண்ணின் திருமண வாழ்க்கை சுலபமாக செல்லும். ஒவ்வொரு வார்த்தையிலும் நீங்கள் கடந்த அனுபவங்கள் பிரதிபலிக்கின்றன. சிற்ந்த நடை.
    ஒரு நல்ல விசு படம் பார்த்தால் போல் இருக்கிறது .

    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  18. பழைய தலை முறை நடை முறைகள்
    கண்முன்னே படம் விரித்து காட்டி இருக்கிரீர்கள். சரளமான எழுத்து. படிக்கப்படிக்க அடுத்து என்ன என்கிர ஆரவத்தை கிளப்பி விடுகிரது.

    பதிலளிநீக்கு
  19. மனித மனங்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்துவதில் வித்தகர் நீங்கள்.உறவிலே சொந்தத்திலே வாழ்க்கைப் படும் விஷயம் என்ன ஆழமாய் அலசப் பட்டிருக்கிறது?.

    பதிலளிநீக்கு
  20. அந்த காலத்து மாமியார், நாத்தனார்கள் போல் இப்போது இருப்பதில்லை என்பது என் அபிப்பிராயம். பாவம் அந்த பெண்ணின் அம்மா. புடவை பிடித்ததோ? இல்லையா? மனசு துடிக்கிறது.

    புடவை வகைகளை, வண்ணங்களை, காம்பினேஷனை பிரமாதமாக
    விளக்கியுள்ளீர்கள் சார்.

    அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. சரளமான நடையில் மனங்களை ஆராய்ந்து எழுதியுள்ள பாங்கு கவர்கிறது.அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கும்.....

    அன்பன்,
    எல்லென்

    பதிலளிநீக்கு
  22. உங்கள் கதைகள் படிக்கப் படிக்க சுவரசியமாகப் போகும். இப்பொழுதெல்லாம் பின்னூட்டங்களும் சுவையாக இருக்கின்றன.

    பேஷ் பேஷ் ! ரொம்ப நன்னா இருக்கு.

    நாத்தனாருக்கு சப்போர்டாக இன்னும் யாரும் பின்னூட்டம் தரவில்லை.

    அடுத்தப் பகுதி எப்ப சார் வரும்?

    பதிலளிநீக்கு
  23. எனக்கு வீட்டுப் பெரியவர்களுக்கும் விழாக்களுக்கும் மடிசார் புடவை எடுத்த/எடுக்கும் ஞாபகம் வருகிறது!

    பதிலளிநீக்கு
  24. அழகான வார்த்தை அமைப்பு... காட்சியை கண் முன் கொண்டு வருகிறது... அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க...:)

    பதிலளிநீக்கு
  25. நாத்தனார்களுக்கு ஒரு பயம் இருக்கும்போல , பிறந்த வீட்டில் மரியாதை குறைந்துவிடும் என்று. அதுதான் , இந்த அல்லி தர்பார் போல. இது சகஜமான வார்த்தைகளில் கதை முழுக்க வெளிப்படுகிறது. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  26. இந்தக் கதையின் முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தொடர்ந்து வாருங்கள்.

    உற்சாகம் தாருங்கள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  27. இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  28. வணக்கம்
    ஐயா

    பெண்களின் ஆண் ஆதிக்கம் நீங்கள் சொன்னமாதிரி மாமியார் வீட்டில்தான் உள்ளது இது கூடுதலாக அவர்களின் இரத்தில் ஊறிவிட்ட பழக்கம்
    நாய் வாலை நிமிர்த்த முடியாது அதை நாம் கையாள் நிமிர்தினாலும் அது மீண்டும் சுருண்டு விடும் அதைப்போலதான் நீங்கள் புகுந்த வீட்டு மாமியார்

    அம்மாவும் அப்பாவும் திருமணத்தக்கு புடவை வேண்டி வரும் போது மாமியர் நாத்தனார் என்ன குறை கூறிவிடுவாங்கள் என்ற மன ஏக்கத்தையும் மிக அழகாக படம் பிடித்த காட்டியுள்ளீர்கள்

    தற்ப்போது எங்களைப் போன்ற இளைஞ்ஞர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும் இதைப் படிக்கும் போது

    அது மட்டுமா நல்ல கவர்ச்சியான மொழி நடையில் வாசக உள்ளங்களை கட்டிப்போட்டு விட்டீர்கள் ஐயா, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2008rupanJanuary 8, 2013 7:37 AM
      //வணக்கம் ஐயா
      அம்மாவும் அப்பாவும் திருமணத்தக்கு புடவை வேண்டி வரும் போது மாமியர் நாத்தனார் என்ன குறை கூறிவிடுவாங்கள் என்ற மன ஏக்கத்தையும் மிக அழகாக படம் பிடித்த காட்டியுள்ளீர்கள்

      தற்ப்போது எங்களைப் போன்ற இளைஞ்ஞர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும் இதைப் படிக்கும் போது

      அது மட்டுமா நல்ல கவர்ச்சியான மொழி நடையில் வாசக உள்ளங்களை கட்டிப்போட்டு விட்டீர்கள் ஐயா, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  29. அருமையாகக் கொண்டு போகிறீர்கள். இப்படி ஒரு அத்தையை எனக்கும் தெரியும். :)))))

    பதிலளிநீக்கு
  30. Geetha Sambasivam July 10, 2013 at 5:01 AM

    வாங்கோ, வணக்கம்.

    //அருமையாகக் கொண்டு போகிறீர்கள். //

    சந்தோஷம். பாராட்டுக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடைய எவ்வளவோ சிறுகதைகளை, தாங்கள் இதுவரை படிக்கவில்லை.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அமுத மழைத்தொடர் முடியட்டும்.

    அதன்பிறகு, இப்போது பெருகியுள்ள, உங்களைப்போன்ற என் சமீபத்திய நட்பு வட்டத்திற்காகவே பல கதைகளை மீள் பதிவாக வெளியிடவும், புதிய கதைகளை வெளியிடவும் எண்ணியுள்ளேன்.

    //இப்படி ஒரு அத்தையை எனக்கும் தெரியும். :)))))//

    ஆங்காங்கே இருக்கக்கூடும். என் சொந்த அனுபவங்கள் தானே, அவ்வப்போது சிறுகதைகளாக வெளியிடப்படுகின்றன. ;)))))

    பதிலளிநீக்கு
  31. உறவுகளுக்குப் பயப்பட்டது அந்தக் காலம். இப்போதைய இளசுகளைக்கண்டு பெரிசுகள்தான் பயப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  32. நாத்தனாரா இருக்கும் போதே இப்படி ரவுசு பண்ரவா சம்மந்தி வேர ஆயிட்டாங்கன்னா என்னல்லாம் ரகளை பண்ணுவூங்களோ...

    பதிலளிநீக்கு
  33. //தங்கக்கலரில் அரக்கு பார்டர், அரக்குக்கலரில் பச்சை பார்டர், புட்டா போட்டது, புட்டா போடாத ப்ளைன் புடவை, ராமர் கலர், மயில்கழுத்து இரட்டைக்கலர், தலைப்பு பூராவும் ஜரிகை அது இதுன்னு பட்டுப்புடவைகள் பலரகங்களில் போடப்பட்டன. மூவாயிரம் முதல் முப்பதாயிரம் வரை விலைகளில் பல தினுசுகள், பல டிசைன்கள்.//

    நன்னா ரசிச்சு எழுதறேள் போங்கோ.

    நாத்தனாரே (அதுவும் குத்தம், குறை கண்டி பிடிக்கறதில Ph.d வாங்கற அளவுக்கு சாமர்த்தியம் உள்ளவாளே) சம்பந்தியா வந்தா அம்மடியோ, சமாளிக்கறது கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
  34. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    மடிசார் புடவை....:

    உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் 'அவள்' எழுதிய சிறுகதை.. அதுதான் புடவைக் கடைக்குள்ளே அலசி, ஆராய்ந்து, அடடா......எத்தனை சூட்சுமம்...! கதை பிரமாதம்..

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  35. கத என்னமோ நல்லாதான் ஆரம்பிச்சிருக்கு. இந்த நாத்தனாரு சம்மந்திமாரு இதெல்லாம் வெளங்கிகிடவே ஏலலியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 11, 2015 at 11:31 AM

      //கத என்னமோ நல்லாதான் ஆரம்பிச்சிருக்கு. இந்த நாத்தனாரு சம்மந்திமாரு இதெல்லாம் வெளங்கிகிடவே ஏலலியே.//

      நாத்தனார் = ஒருத்தியின் கணவனுடன் கூடப்பிறந்த சகோதரிகள் (அக்கா அல்லது தங்கை)

      சம்பந்தி =
      (1) நம் பிள்ளையின் மனைவியின் (நம் மருமகளின்) அப்பா அல்லது அம்மா.

      (2) நம் பெண்ணின் கணவனின் (நம் மாப்பிள்ளையின்) அப்பா அல்லது அம்மா.

      நீக்கு
  36. உறவு முறைகளில் திருமணம் செய்வதில் பலவித சவுகரியங்கள் இருப்பது போலவே பலவித அசௌகரியங்களும் இருக்கத்தான் இருக்கிறது. பிள்ளை வீட்டுக்காரங்க ன்னு வரும்போது தங்கள் அதிகாரத்தை காட்டுவாங்க. பெண்வீட்டுக்காரங்கன்னா அடங்கித்தான் போகணும் என்ற எழுதப்படாத சட்டம். எல்லா வித அடஜஸ்மெண்டும் செய்து கொண்டால்தான் உறவு முறை திருமணங்கள் பெருமை அடையும்

    பதிலளிநீக்கு
  37. //
    எதைப்பார்த்தாலும் அதில் ஒரு குறையை மட்டும் அலசி ஆராய்ந்து கண்டுபிடிப்பவர்கள் என் அத்தை. வாயைத்திறந்து எது பேசினாலும், அதில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு குதர்க்கம் ஒளிந்திருக்கும்.

    மிகவும் அப்பாவியான என் அம்மா, எதற்கு வம்பு என்று பேசாமல் ஒதுங்கியே இருந்தாலும், “அமுக்கக்கள்ளி” என்பார்கள்.

    வாயைத்திறந்து ஏதாவது ஓரிரு வார்த்தைகள், அதுவும் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டாலும் அதில் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து பொடுகைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி அம்மாவை அழ வைத்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பாள்.// அத்தையே மாமியாரக வரப்போகும் சூழ்நிலையில் என்ன செய்யப்போகிறாள்...இந்தக்காலத்துப் பொண்ணு...எப்புடி செய்யப்போகிறாள்...எதிர்பார்ப்பே விறுவிறுப்பு...

    பதிலளிநீக்கு
  38. "அங்க"....ரெகுலரா வரவேண்டி இருந்ததால " இங்க".....இப்பத்தான் வர முடிந்தது.. மடிசார் புடவை செலக்ட் பண்ண க்ளாஸ் எடுக்கலாமே... நாத்தனாரே சம்பந்தியாக வருவதில்.. எதைப்பத்தியெல்லாம் யோசிக்க வேண்டி இருகுகு.. இந்த கால பொண்ணுகலாம் விவரமா இருக்காங்க. நல்லாவே சமாளிச்சுப்பாஙுக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... October 2, 2016 at 6:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //"அங்க"....ரெகுலரா வரவேண்டி இருந்ததால " இங்க".....இப்பத்தான் வர முடிந்தது..//

      புரிந்துகொண்டேன். :)

      //மடிசார் புடவை செலக்ட் பண்ண க்ளாஸ் எடுக்கலாமே... நாத்தனாரே சம்பந்தியாக வருவதில்.. எதைப்பத்தியெல்லாம் யோசிக்க வேண்டி இருகுகு.. இந்த கால பொண்ணுகலாம் விவரமா இருக்காங்க. நல்லாவே சமாளிச்சுப்பாங்க..//

      :) தங்களின் அன்பான வருகைக்கும், விவரமான இந்தக்காலப் பொண்ணுங்க நல்லாவே சமாளிச்சுப்பாங்கன்னு சொல்லியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      நீக்கு