2
ஸ்ரீராமஜயம்
மூன்று இலக்கணங்கள் உள்ளவன் தான் “ஆச்சாரியன்” என்று வைத்தார்கள்.
ஒன்று: சாஸ்த்ர சித்தாந்தத்தை நன்றாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இரண்டு: தெரிந்ததை வாழ்க்கையில் நடத்திக் காட்டும் ஆச்சார சீலராக இருக்க வேண்டும்.
மூன்று: இப்படித் தனக்குத் தெரிந்து கடைப்பிடிக்கும் சாஸ்த்ரத்தைப் பிறருக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் நெறியாக வாழ்க்கையில் நிலை நாட்ட வேண்டும்.
மாணாக்கன் சுத்தனாகவும் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
சொல்லிக்கொடுப்பதை நன்றாக புரிந்து ஏற்றுக்கொள்வதே 'க்ரஹண சக்தி'.
அப்புறம் அதை மறக்காமல் புத்தியில் இருத்திக் கொள்வதே 'தாரணசக்தி'.
ooooooOoooooo
அதிசய நிகழ்வு
நெஞ்சை உருக்கும் சம்பவம்
மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா!
முன் கதை பகுதி- 1 of 10 ..... தங்கள் நினைவுக்காக :
பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சித்ரா பெளர்ணமி தினம். திருவடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமி கோயிலில், மஹன்யாச ருத்ர ஜபத்துடன் ஓர் அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர் திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயணஸ்வாமி என்பவர். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்து ருத்ராபிஷேகம் மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது.
11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர் திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயணஸ்வாமி என்பவர். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்து ருத்ராபிஷேகம் மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது.
காஞ்சி மஹாஸ்வாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். ‘எப்படியும் இந்த ருத்ராபிஷேகப் பிரஸாதத்தைப் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் சேர்த்து விடவேண்டும்' என்று தீர்மானித்தார்.
ருத்ராபிஷேகப் பிரஸாதத்தை பயபக்தியுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப்பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக்கொண்டார்.
அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில் மதுரை-சென்னை பாஸிஞ்சர் ரயிலில் ஏறினார், மிராசுதார்.
விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி பஸ் பிடித்து காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார் நாராயணஸ்வாமி ஐயர்.
அன்று மடத்தில் ஏகக்கூட்டம். ஸ்நானம் இத்யாதிகளை முடித்துக்கொண்டு, பெரியவா தரிஸனத்திற்காக பிரஸாதத்துடன் காத்திருந்தார் மிராசுதாரர்.
நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் பூஜையை முடித்து விட்டு வந்து உட்கார்ந்தார் மஹாஸ்வாமிகள். பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது.
மிராசுதாரரால் ஸ்வாமிகளை நெருங்கவே முடியவில்லை.
உடனே மிராசுதார், “எல்லோரும் கொஞ்சம் நகருங்கோ, நகருங்கோ, நா பெரியவாளுக்காக திருவிடைமருதூர், மஹாலிங்க ஸ்வாமியின் ருத்ராபிஷேகப் பிரஸாதம் கொண்டு வந்திருக்கேன். அதை அவாகிட்ட சமர்ப்பிக்கணும்” என்று பிரஸாத மூட்டையைக்காட்டிக் கெஞ்சினார்.
உடனே மிராசுதார், “எல்லோரும் கொஞ்சம் நகருங்கோ, நகருங்கோ, நா பெரியவாளுக்காக திருவிடைமருதூர், மஹாலிங்க ஸ்வாமியின் ருத்ராபிஷேகப் பிரஸாதம் கொண்டு வந்திருக்கேன். அதை அவாகிட்ட சமர்ப்பிக்கணும்” என்று பிரஸாத மூட்டையைக்காட்டிக் கெஞ்சினார்.
[பகுதி 2 of 10]
ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரரின் பதற்றத்தையும் தவிப்பையும் பார்த்த, மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக்கொடுத்து, நாராயணஸ்வாமி ஐயரை பெரியவாளுக்கு அருகே அழைத்துச்சென்றார்.
பெரியவாளைப் பார்த்ததும் மிராசுதாரருக்கு கையும் காலும் ஓடலை. தொபுக்கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மஹா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார். ’என்ன விஷயம்?’ என்பதைப் போலப் புருவங்களை உயர்த்தினார்.
உடனே மிராசுதார் கைகள் உதற “பிரஸாதம் .. பிரஸாதம் .. பெரியவா” என்று குழறினார்.
மீண்டும் பெரியவர், “என்ன பிரஸாதம்?” என்று கேட்டு அவரைப்பார்த்தார்.
மீண்டும் பெரியவர், “என்ன பிரஸாதம்?” என்று கேட்டு அவரைப்பார்த்தார்.
அதற்குள் மூட்டையைப்பிரித்து, பிரஸாதத்தை எடுத்து அங்குள்ள மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாக சமர்ப்பித்தார் மிராசுதார். அதில் ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.
மஹாஸ்வாமிகள், “இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரஸாதம்?” என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப்பார்த்தார்.
மிராசுதார் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, மிகவும் விநயமாக, “பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூரிலே மஹாலிங்க ஸ்வாமிக்கு, ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்தப்பிரஸாதம் தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹரம் பண்ணணும்!” என்று சொல்லி முடித்தார்.
உடனே பெரியவா அந்தப்பிரஸாத மூங்கில்த்தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக்கேட்டார், *****“நாராயணஸ்வாமி! நீ பெரிய மிராசு தான், இருந்தாலும் செலவுக்கு இன்னும் வேறு யாரையாவது கூட்டு சேர்த்துண்டு, இந்த ருத்ராபிஷேகத்தை ஸ்வாமிக்குப் பண்ணினயோ?” *****
“இல்லே பெரியவா! நானே என் சொந்தச்செலவிலே பண்ணினேன்” என்று அந்த “நானே”வுக்கு சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார்.
பெரியவாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அத்துடன் விடவில்லை. ”லோக க்ஷேமார்த்ததிற்கு [உலக நன்மைக்கு] மத்யார்ஜுன க்ஷேத்ரத்திலே [திருவிடைமருதூரில்] ருத்ராபிஷேகம் பண்ணினையாக்கும்?” என்று கேட்டார்.
பெரியவாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அத்துடன் விடவில்லை. ”லோக க்ஷேமார்த்ததிற்கு [உலக நன்மைக்கு] மத்யார்ஜுன க்ஷேத்ரத்திலே [திருவிடைமருதூரில்] ருத்ராபிஷேகம் பண்ணினையாக்கும்?” என்று கேட்டார்.
உடனே மிராசுதார் ஆதங்கத்துடன் , “இல்லே பெரியவா! ரெண்டு மூணு வருஷமாவே வயல்கள்லே சரியான விளைச்சல் கிடையாது. சில வயல்கள் தரிஸாகவே கெடக்கு.
திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப்பார்த்தேன். அவர்தான் “சித்ரா பெளர்ணமி அன்னிக்கு, மஹாலிங்க ஸ்வாமிக்கு, மஹந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து; அமோக விளைச்சல் கொடுக்கும்”ன்னு சொன்னார். அத நம்பித்தான் பண்ணினேன் பெரியவா!“ என்று குழைந்தார்.
திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப்பார்த்தேன். அவர்தான் “சித்ரா பெளர்ணமி அன்னிக்கு, மஹாலிங்க ஸ்வாமிக்கு, மஹந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து; அமோக விளைச்சல் கொடுக்கும்”ன்னு சொன்னார். அத நம்பித்தான் பண்ணினேன் பெரியவா!“ என்று குழைந்தார்.
தொடரும்
ooooooOoooooo
மீண்டும் ஓர் சந்திப்பு
16.06.2013 ஞாயிறு மதியம்
என் இல்லத்திற்கு திடீர் விஜயம் செய்த
*****
இந்த இடத்தில் எனக்கு ஒருசில நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு, நிறைய தங்க வில்வ இதழ்களால் கனகாபிஷேகம் செய்வித்து, அதன் பின் அதே தங்கத்தால் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் கருவறை விமானத்தை [தங்கத்தால்] ஜொலிக்கச்செய்வது என திட்டமிட்டு ஊருக்கு ஊர் கமிட்டி அமைத்தார்கள்.
இதற்கு ஒப்புதல் அளித்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா ஒருசில கண்டிஷன்ஸ் சொல்லியிருந்தார்.
அதாவது இதற்கான வசூல்தொகை மிகச்சிறியதாகினும், [ஒரே ஒரு ரூபாய் மட்டுமே ஆனாலும்] அது பல ஏழை மக்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும் எனச் சொல்லியிருந்தார்கள்.
அதாவது இந்த புண்ணியத்தின் பலன் ஏழைகள் உள்பட எல்லா ஜனங்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமும், விருப்பமுமாக இருந்தது.
[அவர்கள் மட்டும் நினைத்திருந்தால் ஒரேநாளில், தரிஸனத்திற்கு வரும் எவ்வளவோ கோடீஸ்வரர்களிடம், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு வேண்டிய தங்கத்தை வெகு சுலபமாக திரட்டி இருக்க முடியும்.]
திருச்சி BHEL வளாகத்தில், திரு. சங்கர் என்கிற பொது மேலாளரிடம் [General Manager] இந்த வசூல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
நான் ஒருசில பொருளாதார சிரமங்களுக்கு இடையில் அன்று இருந்தேன் என்றாலும், கிடைத்துள்ள வாய்ப்பினை நழுவ விடக்கூடாது, என்ற நோக்கத்தில், GENERAL MANAGER Mr. SHANKAR அவர்களிடம் அன்றைய ஒரு பவுனுக்கு சமமான தொகையான ரூ. 2500ஐக் கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டேன்.
அதன் பிறகு ஸ்ரீமடத்திலிருந்து எனக்கு ரூ.10, ரூ.25, ரூ.50 என சில ரசீது புத்தகங்கள் அனுப்பபட்டு, பக்தகோடிகள் பலரிடமும் ஒர் பவுனுக்கான தொகையையாவது வசூல் செய்து, உடனே அனுப்பி வைக்குமாறு, ஸ்ரீமடத்திலிருந்த ஒருவரிடமிருந்து ஓர் வேண்டுகோள் வந்தது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் பக்தி ஸ்ரத்தையுள்ள குடும்பத்தினர் சிலரிடம் மட்டுமே நான் வசூல் செய்தேன்.
ஒரு அரை பவுனுக்கு மட்டுமே என்னால் மொத்தமாக வசூலிக்க முடிந்தது. மீதி அரைப்பவுனுக்கான தொகையை என் பெரிய அக்கா, மிகவும் சந்தோஷத்துடன் தானே ஏகதேசமாகக் கொடுத்து உதவி விட்டாள்.
மொத்தப் பணத்திற்கும் DD வாங்கி, அனுப்பச்சொன்னவருக்கு கொரியரில் அனுப்பி விட்டேன்.
அதே போல மற்றொரு நிகழ்ச்சியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஸித்தியடைந்த பிறகு, சமீபத்தில் நடந்தது. [2001ம் வருஷம் என்று ஞாபகம்]
ஒரு நாள் இரவு சொப்பணத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா எனக்குக்காட்சி அளிக்கிறார். கோயிலில் உ ள்ள கற்தூண் போன்ற ஏதோ ஒன்றில் சாய்ந்து நின்று காட்சியளிக்கிறார்.
மறுநாள் காலையில் தபாலில் எனக்கு சென்னையிலிருந்து, ’சிம்சன் வைத்தா’ என்பவரிடமிருந்து ஓர் கடிதம் வருகிறது.
”ஓரிக்கை என்ற இடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு நினைவு மணிமண்டபம் எழுப்ப கமிட்டி அமைத்துள்ளோம். அதற்கு நீ மட்டும் ரூ. 11000/- [பதினோரு ஆயிரம் ரூபாய்] அனுப்பி வைக்கணும். மொத்தம் கட்டப்பட உள்ள 100 தூண்களில், ஒரு தூணுக்கான செலவு உன்னுடையதாக இருக்கட்டும் என நினைத்துக்கேட்டுள்ளேன். உடனே அனுப்பி வை” என்று எழுதியிருந்தார்.
அப்போது நான் பணக்கஷ்டம் அதிகம் ஏதும் இல்லாமல் இருந்ததால், உடனடியாக ரூ. 11000/- க்கு ஓர் DD வாங்கி ’சிம்சன் வைத்தா’ என்கிற ஸ்ரீ வைத்யனாத ஐயர் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். [இவர் இன்னும், இன்றும் சென்னையில் தான் இருக்கிறார். ]
முதல் நாள் இரவு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஓர் கல் தூணில் சாய்ந்தபடி காட்சியளிக்கிறார். மறுநாள் இதுபோல ஒரு கல்தூணுக்கான சிறிய பொருளுதவி செய்யும் பாக்யம் எனக்குக் கிடைக்கப்பெற்றேன்.
*****
ooooooOoooooo
மீண்டும் ஓர் சந்திப்பு
16.06.2013 ஞாயிறு மதியம்
என் இல்லத்திற்கு திடீர் விஜயம் செய்த
’மின்னல் வரிகள்’ + ‘மேய்ச்சல் மைதானம்’
வலைத்தளங்களின் பதிவர்
திரு. பாலகணேஷ் அவர்களின் வருகை.
நினைவுப்பரிசாக என் கையொப்பமிட்ட
”எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு”
சிறுகதைத் தொகுப்பு நூல் வழங்கப்பட்டது
வருகை தந்து சந்தித்துச்சென்ற
திரு. பாலகணேஷ் அவர்களுக்கு நன்றி.
அவருடன் என் இல்லத்துக்கு
அன்புடன் வருகை தந்து சிறப்பித்து
புகைப்படங்கள் எடுக்கவும் உதவிய
’என் எழுத்துலக மானஸீக குருநாதர்’
திரு ரிஷபன் அவர்களுக்கு
என் மனமார்ந்த இனிய நன்றிகள்
ooooooOoooooo
திரு. பாலகணேஷ் அவர்களுக்கு நன்றி.
அவருடன் என் இல்லத்துக்கு
அன்புடன் வருகை தந்து சிறப்பித்து
புகைப்படங்கள் எடுக்கவும் உதவிய
’என் எழுத்துலக மானஸீக குருநாதர்’
திரு ரிஷபன் அவர்களுக்கு
என் மனமார்ந்த இனிய நன்றிகள்
ooooooOoooooo
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்























































