என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

41] வா என்றால் ஓடி வருபவனே இறைவன் !

2
ஸ்ரீராமஜயம்




எங்கும் இருக்கும் இறைவன் நாம் இருக்கச் சொல்லும் இடத்தில் கல், மண், செம்பு முதலிய எந்த உருவத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான்.

அப்படிப்பட்ட யோக்யதையும் கருணைவும் அவனுக்கு நிச்சயமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட இறைவன் நமக்கு வேண்டவே வேண்டாம். 

பிற மதத்தினர் என்றவுடனேயே எதிர்ப்புணர்ச்சியோடுதான் வாதிடுவது என்றில்லாமல் நேயத்துடனேயே அணுகி, தங்களுக்குள்ள நியாயமான உரிமைகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப்பார்ப்பது என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


oooooOooooo


மற்றும் ஓர் சம்பவம்


இதெல்லாம் என்ன ஞாபகசக்தி?
ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார்.தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.

“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்துதே!…… இன்னும் இருக்கோ?….”

“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்…. இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காய்க்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”

“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!…. அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..போல ஆயிருந்துதே!..”

“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”

“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”



“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா….. இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு… நல்ல வம்சம்….”

“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”

“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”

“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”

“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”

“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”

“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”

“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! 


பாட்டி சொன்னாள்…. ”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க கிராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் ….. ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!… பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”


பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..  “ஆமா…… இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…” 


ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!


குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். 


நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.


[Thanks to Mr. M.J.Raman of Manakkal, Now at Mumbai]  






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

25.08.2013 ஞாயிறு

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

40] பொய், பொறாமை, அழுக்கு, சிரங்கு !

2
ஸ்ரீராமஜயம்



அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல் மூடி மூடி வைத்தால் அது சிரங்காகி விடும். 

அது மாதிரி தப்பை மூடி மறைத்தால், அது பொய் என சிரங்காகி விடுகிறது. 

உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.

இன்னொரு பெரிய அழுக்கு, குழந்தைகளிடத்தில் சுலபத்தில் சேர்கிற அழுக்கு, பொறாமைக்குணம். இவ்வழுக்குக்கான எண்ணங்களாலேயே அறிவு, உடம்பு இரண்டையும் பாழாக்கிக்கொள்கிறோம். 

நம்மை நாமே கெடுத்துக் கொள்வதைத்தவிர, பொறாமையால் வேறு எந்த விதப்பயனும் இல்லை.

oooooOooooo



கோவிந்தா ! கோபாலா!!

பெரியவாளிடம் ரொம்ப ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு தம்பதியினர்.

பெரியவா அனுக்ரஹத்தால் அவர்களுக்கு ரெட்டை குழந்தைகள் பிறந்தன. 

பெரியவாளே அக்குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்பது அவர்களின் தீராத ஆவல். 

இருப்பதோ ஆந்திராவில் எங்கோ வடகோடியில் ! அந்த சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகளை அவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் வந்து, இதோ, பெரியவாளின் திருவடி முன் போட்டாயிற்று. 



மாச வரும்படியோ ரொம்ப சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 

ஆனால், பெரியவாளிடம் இருந்த நம்பிக்கை, பக்தி, ப்ரேமை கடலளவு சொல்லவே முடியாதபடி இருந்தது. பெரியவாளிடம் பெயர் வைக்கச் சொல்லி, எப்படிக் கேட்பது? என்ற தயக்கம் வேறு/

பாதங்களின் கீழே குஞ்சுக்கைகளையும், கால்களையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டிருந்த ரெட்டையை பார்த்தா பெரியவா, “என்ன பேரு?” என்றார்கள்.





மெய் சிலிர்த்தது தம்பதிக்கு! நேரடியாக சப்ஜெக்ட்டுக்கு வந்துவிட்டார்களே !

“இன்னும் வெக்கலை, பெரியவாதான் எங்களுக்கு எல்லாமே! கர்காச்சார்யார் கிருஷ்ண பலராமனுக்கு பேர் வெச்ச மாதிரி, பெரியவாதான் எங்களோட குரு, அதுனால பெரியவாளே பேர் வெக்கணும்னு ரொம்ப நம்பிக்கையோட, ஆசையோட வந்திருக்கோம்”. 




“அந்த பழக்கமெல்லாம் நின்னு போய் ரொம்ப நாளாறதே.” சிரித்தார்.

நின்றுபோன சம்பிரதாயத்தை திரும்ப துவக்கினால், அது தொந்தரவாகவும் ஆகலாம். ஆனால், பாவம் அவ்வளவு தூரத்திலிருந்து இவ்வளவு நம்பிக்கையோடு வந்தவர்களை நிர்தாட்சிண்யமாக திருப்பி அனுப்பவும் மனஸ் ஒப்பவில்லை. பெரியவா கர்கரோ இல்லையோ, ஆனால் அமுக்கமாக அழகாக நாடகம் நடத்தி, பக்தர்களை குதூகலப்படுத்துவதில் நிச்சயம் கிருஷ்ணன்தான் ! அவருடைய சங்கல்பத்தால் உடனே அங்கே ஒரு நாடகமேடை தயாராகியது.

ஒரு பக்தர் ஸ்ரீமடத்துக்கு காணிக்கையாக ஒரு பசுமாட்டை கொண்டு வந்தார். 

பெரியவா சைகை பண்ணியதும், வித்யார்த்தி நாராயண சாஸ்த்ரி அந்தப் பசுவை பெரியவா எதிரில் நிறுத்தி, “இதுதான், காணிக்கையா சமர்பிக்கப்பட்ட பசு” என்ற அர்த்தம் தொனிக்க, ஒரே வார்த்தையில் “கோ” [பசு] என்றார். 

அதே வினாடி, ஒரு அம்மா கூஜாவில் பால் கொண்டு வந்திருந்தார். “கூஜாவில் பால் இருக்கு” என்று அர்த்தம் தொனிக்க “பால்” என்று விண்ணப்பித்தார். 

பெரியவா சிரித்துக் கொண்டே சிஷ்யரிடம் “ஏண்டா, சாஸ்த்ரிகளும், அந்த அம்மாவும் சொன்ன வார்த்தை ரெண்டையும் சேத்து சொல்லு” என்றார். 

“கோ………பால்….. கோபால்” “ஆஹா! ஒரு குழந்தைக்கு பேர் கெடச்சாச்சு! 

சரி……..ஏண்டா, பஜனை சம்ப்ரதாயத்ல கோபாலனோட சேத்து என்ன நாமம் சொல்லுவா?” 

சிஷ்யர் மெல்லிய குரலில் ஒரு நாமாவளி போட்டார். “கோபாலா .... கோவிந்தா.” 

“சபாஷ் ! கோவிந்தன் ! 

கோபாலன், கோவிந்தன். ரெண்டு கொழந்தைகளுக்கும் பேர் ! 

என்ன இப்போ த்ருப்தியா ? 

சந்தோஷமா போயிட்டு வாங்கோ. க்ஷேமமா இருங்கோ” 

ஆசிர்வதித்தார். 

இனி வேறென்ன வேண்டும்?

இந்த குழந்தைகளும் கருவிலே திருவுடையவர்கள். 

ஆம். பிறந்து ஒரு பயனும் இல்லாமல், சத்சங்கம் இல்லாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைந்துவிட்டு, கடைசி மூச்சு இழுக்கும் போது ஏதோ பூர்வ புண்ய பலன் இருந்து, பகவந்நாமம் சொல்லவோ, கேட்கவோ கிடைக்கப் பெற்றவர்களை பார்க்கும்போது, இந்தக் குழந்தைகள் பிறந்ததுமே, பெரியவாளுடைய பாதங்களை தஞ்சம் அடைந்து, அவராலேயே பெயர் சூட்டப்பெற்றது அவர்களுடைய பரம பாக்யம்! 



இதனால்தான் குழந்தைகளை மஹான்களின் சன்னதிக்கு அடிக்கடி அழைத்துக் கொண்டு போகவேண்டும். அங்கே போனால், அது அழும், படுத்தும் என்று சாக்கு சொல்லாமல், குழந்தைகளின் யோகக்ஷேமத்துக்காக அழைத்துப் போகவேண்டும். 

வீட்டில் பூஜை பண்ணும்போதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். சின்ன சின்ன வேலைகளை சொல்லி அவர்கள் மனஸில் நம்பிக்கையை, பக்தியை ஊட்ட வேண்டும்.



oooooOooooo


http://sashiga.blogspot.in/


நம் தளத்தில் தொடர்வருகை தந்துவரும் பாசம் மிகுந்த மேனகாவின் அன்பான  அவசரமான வேண்டுகோளுக்கிணங்க நேற்று இரவு முழுவதும் கண்விழித்து தகவல்கள் சேகரித்து இதனை இன்று வெளியிட்டுள்ளேன்.  





 ஸங்கடஹர சதுர்த்தி


ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபக்ஷ சதுர்த்திக்கு [பெளர்ணமிக்குப் 


பிறகு வரும் நான்காவது திதி] ’ஸங்கடஹர சதுர்த்தி’ என்று பெயர்.




கணபதியின் முக்கியமான 32 திரு உருவங்களில் ’ஸங்கடஹர கணபதி’ 

என்பவரும் ஒருவர்.





இன்று பகல் முழுவதும் உபவாஸம் இருந்து, மாலையில் சந்திரன் 

உதயமானதும், ஸங்கடஹர கணபதியை அபிஷேகம், அர்ச்சனை, 

ஸ்தோத்ர பாராயணம் மூலம் உபாஸித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 21 

முறை சொல்லி ப்ரார்த்தனை செய்வதால் அனைத்து ஸங்கடங்களும் 

[இன்னல்களும்] விலகும். 


க3ணாதி4 பஸ்த்வம் தே3வேஸ!

சதுர்த்2யாம் பூஜிதோமயா

ஷ்டாந் மாம் மோசயேஸாந!

ஸர்வமிஷ்டம் ச தே3ஹிமே 



இதுவரை கொடுத்துள்ள தகவல்கள் என்னுடைய பழைய பதிவு ஒன்றில் 

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இணைப்பு:

 http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_30.html



oooooOooooo




இதோ ஒருசில புதிய தகவல்கள்



24.08.2013 சனிக்கிழமை -

 மஹா ஸங்கடஹர சதுர்த்தி



சிராவண மாத கிருஷ்ணபக்ஷ [தேய்பிறை] சதுர்த்திக்கு மட்டும் 

மஹா ஸங்கடஹர சதுர்த்தீ என்று பெயர்.  


ஒவ்வொரு மாதமும் ஸங்கடஹர சதுர்தி விரதம் இருக்க நினைப்பவர்கள்,  இன்று 

[24.08.2013 சனிக்கிழமை] ஆரம்பித்து தொடர்ந்து ஒரு வருஷம் முழுவதும் ஒவ்வொரு 

மாதமும் ஸங்கடஹர சதிர்தீயன்று [தம்பதியினராக] இந்த விரதத்தை அனுஷ்டிக்க 

வேண்டும். 


ச்ராவணே ப3ஹுளே பக்ஷே

சதுர்த்2யாம் து விது4த3யே,

க3ணேசம் பூஜயித்வா து

சந்த்3ராயார்க்4யம் ப்ரதா3 பயேத்



என்பதாக இன்று பகல் முழுவதும் உபவாஸம் இருந்து மாலையில் ஸ்ரீ கணபதி 

விக்ரஹத்தை அல்லது படத்தை வைத்து, 


மம வித்3யா-த4ன-புத்ர-பெளத்ராதி3 ஸுக2 ப்ராப்த்யர்த்த2ம் ஸர்வ ஸங்கஷ்ட 

நிராஹரணார்த்த2ம் ஸங்கடஹர கணபதீ பூஜாம் கரிஷ்யே 

என்று ஸங்கல்ப்பம் செய்துகொண்டு,


அஸ்மின் படே2 க3ஜாஸ்யாய நம: ஆவாஹயாமி [ஸ்வாமியை வரவேற்றல்]

விக்4னராஜாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி [ஸ்வாமிக்கு இருக்கை அளித்தல்]

வக்ரதுண்டா3ய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி

ஹேரம்பா3ய நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி [சுத்த ஜலத்தால் அபிஷேக்ம்/ப்ரோக்ஷணம்]

சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி [ஆடை அணிவித்தல்]

குப்3ஜாய நம: யக்3ஞோபவீதம் ஸமர்ப்பயாமி [பூணூல் அணிவித்தல்]

கெள3ரீ புத்ராய க3ணேஸ்வராய நம: க3ந்த4ம் ஸமர்ப்பயாமி [சந்தனம் இடுதல்]


உமாபுத்ராய நமஅக்ஷதான் ஸமர்ப்பயாமி 

[முனை உடையாத மஞ்சள்பொடி கலந்த முழுப்பச்சரிசியால் அர்சித்தல்]


சிவஸூநவே நம: மாலிகாம் ஸமர்ப்பயாமி [புஷ்ப மாலைகள்]

விக்4னநாசினே நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி [உதிரிப்பூக்கள்]

விகடாய நம: தூ4பம் ஆக்4ராபயாமி [ஊதுபத்தி, சாம்பிராணி]

வாமனாய நம: தீ3பம் த3ர்சயாமி [விளக்கு காட்டுதல்]

ஸர்வாய நம: நைவேத்3யம் நிவேத3யாமி 


[ 21 மோதகம் - கொழுக்கட்டைகள் - நிவேதனம் செய்ய வேண்டும்]


  



ஸர்வார்த்தி நாஸினே நம:  ப2லம் ஸமர்ப்பயாமி [பழங்கள்]



 


[மாதுளம்பழம் + கொய்யப்பழம் நிவேதனம் செய்வது நல்லது]


விக்4னஹர்த்தே நம: தாம்பூ3லம் ஸமர்ப்பயாமி [வெற்றிலை+பாக்கு] 

ஸர்வேஸ்வராய நம: த3க்ஷிணாம் ஸமர்ப்பயாமி [COINS]

விக்4ன நாசினே நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி 

[சூடம் ஏற்றிக்காட்டுதல்]


என்பதாகச் சொல்லி அனைத்து உபசாரங்களுடன் பூஜையை முடித்து விட்டு, பசும்பால் 

அல்லது சந்தனம் கலந்த ஜலத்தால் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி ஸ்ரீ கணபதியின் 

முன்பாக கிண்ணத்தில் அர்க்யத்தை விடவும்.


1] க்ஷீர ஸாக3ர ஸம்பூ4த ! ஸுதா4 ரூப ! நிஸாகர !

    க்2ருஹாணார்க்4யம் மயா த3த்தம் க3ணேச ப்ரீதி வர்த்த4ன!

    ரோஹிணீ ஸஹித சந்த்3ரமஸே நம: 

    இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். 


2] க3ணேசாய நமஸ்துப்4யம் ஸர்வஸித்தி4 ப்ரதா3யக!

    ஸங்கஷ்டம் ஹர மே தே3வ ! க்3ருஹாணார்க்4யம் 

     நமோஸ்து தே,     க3ணேசாய நம: 

    இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். 


3]  க்ருஷ்ண பக்ஷே சதுர்த்2யாம் து பூஜிதஸ் த்வம் விதூ4த3யே

    க்ஷிப்ரம் ப்ரஹாதி3தோ தே3வ ! க்3ருஹாணார்க்4யம் 

    நமோஸ்துதே     ஸங்கஷ்ட ஹர க3ணேசாய நம: 

    இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். 



4]  திதீ2நா முத்தமே தே3வி ! க3ணேச ப்ரிய வல்லபே4 !

     ஸர்வ ஸங்கஷ்ட நாசாய சதுர்த்2யர்க்4யம் நமோஸ்துதே - 

     சதுர்த்2யை நம:

     இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். . 


இவ்வாறு அர்க்யம் தந்துவிட்டு. ஸ்ரீ கணபதியின் ஸன்னதியில் தம்பதிகளாக 

அமர்ந்து கொண்டு


நமோ ஹேரம்ப3 மத3மோதி3த 

மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய 

நிவாரய ஹும் ப2ட் ஸ்வாஹா


என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 முறை ஜபிக்கவும்.


பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 மோதகத்தில் [கொழுக்கட்டையில்] 

ஐந்து கொழுக்கட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு தந்து 

சாப்பிடச் செய்ய வேண்டும்.



பாக்கியை பிரஸாதமாக கணவனும் மனைவியும் மற்றவர்களும் சாப்பிடலாம். 


பிறகு கணபதியைப் பிரார்த்தித்துக்கொண்டு, சந்திரனை தரிஸித்து விட்டு இரவு 

உணவு சாப்பிடலாம்.


இவ்வாறு பூஜை செய்ய இயலாதவர்கள் அர்க்யம் மட்டுமாவது தந்து, சந்திரனை 

தரிஸனம் செய்யலாம்,


இதனால் அனைத்து ஸங்கடங்களும் [இன்னல்களும்] விலகும் என்கிறது 

கணேச புராணம்.


சுபம்






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

23.08.2013 வெள்ளிக்கிழமை

புதன், 21 ஆகஸ்ட், 2013

39] பக்தி, மரியாதை, அருள், கருணை

2
ஸ்ரீராமஜயம்



உத்தமமான பொருளிடம் வைக்கும் அன்புக்கே ’பக்தி’ என்று பெயர்.

நமக்கு சமமானவர்களிடம் வைக்கும் அன்பு .... ’நட்பு’ என்பதாகும்.

நட்பு உத்தமமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வயதில் பெரியவர்களிடம் நாம் வைக்கும் அன்பு .... ’மரியாதை’ என்பதாகும்.

சின்னவர்களிடமும், நமக்குக் கீழ்ப்பட்டவர்களிடமும் நாம் வைக்கும் அன்புதான் ‘அருள்’ என்பது.

கஷ்டப்படுபவர்களிடம் நாம் வைக்கும் அன்பு ‘கருணை’ எனப்படும்.

பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பலனில்லை. அவர்களுடைய மனங்களும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.

அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு. 

நமக்கு நாமே செய்துகொள்கிற அலங்காரம்,. அகங்காரத்திற்குத்தான் வழிவகுக்கும்.

எக்காரணமும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிரியமாய் இருப்பது தான் உண்மையான அன்பு. 


oooooOooooo



மற்றொரு சம்பவம்

திருச்சியிலிருந்து கணபதி என்ற பக்தர், தன் பெற்றோருடன் மஹானை தரிசிக்கப்போனார்.

அவருக்கு வேலை கிடைப்பது பெரும் பிரச்னையாக இருந்தது. மஹானிடம் அதைச் சொன்னார். 

கணபதியிடம், திருச்சியில் என்னென்ன பெரிய பேங்குகள் இருக்கின்றன என்று கேட்டு இருக்கிறார் மஹான். கணபதியும் சொன்னார். 

சில நாட்கள் கழித்து இரண்டு இடங்களில் வேலைக்குச் சேரும்படி கணபதிக்கு ஆர்டர் வந்தது. 

சென்னையில் ஒன்று -  திருச்சியில் ஒன்று - சென்னை வேலை நிரந்தரம். திருச்சி வேலை  தற்காலிகமானது. 

குழம்பிப்போன கணபதி இதற்கும் மஹானை அணுகி யோசனை கேட்டார்.



"திருச்சி பேங்க் உத்யோகத்தில் போய்ச் சேர்"

இந்த பதிலும் கணபதிக்கு நெடுநேரம் பெரியவா தரிசனத்திற்குப் பிறகு 4 மணிக்குக் கிடைத்த உத்தரவு. தற்காலிகமான பேங்க் உத்தியோகத்திற்குப் போகச் சொல்கிறாரே மஹான் என்று  மனத்தில் கலக்கத்தோடு பேங்க் உத்தியோகத்திற்குப் போனார்.

இது லீவில் போய்விட்டவருக்கான உத்தியோகம். அவர்  திரும்பவும் வந்து  உத்தியோகத்தில் சேர்ந்து விட்டால், கணபதி வீட்டிற்குத் திரும்ப வேண்டியது தான்!


ஆனால் நடந்தது என்ன?

லீவில் போனவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.  அதன் பலனாக அந்த நல்ல பாங்க் வேலை கணபதிக்குக் கிடைத்தது.

கருணை வள்ளலான மகானின் தீர்க்க தரிசனத்தை எண்ணி  ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கணபதி. 

உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம்  அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. 

அதில் இதுவும் ஒன்று.

[Thanks to AMIRTHA VAHINI 14.06.2013]

oooooOooooo



மகிழ்ச்சிப் பகிர்வு

நம் தளத்திற்கு தொடர் வருகை தந்துவரும்
திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள் 
சமையல் குறிப்புகள் போட்டியொன்றில் 
சமீபத்தில் பரிசினை வென்றுள்ளார். 

மனம் நிறைந்த பாராட்டுக்கள். 
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.









அன்புடன் கோபு


மேலும் விபரங்களுக்கு



  




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியிடப்படும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

21.08.2013 புதன்கிழமை