ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இ னி ய செ ய் தி - 6

அன்புள்ள வலைப்பூ நண்பர்களுக்கு,


========================================================================


24.04.2011 தேதியிட்ட “கல்கி” வார இதழின் 
பக்கம் எண் : 83 இல் வெளியாகியுள்ள அறிவிப்பு




”வித்யாசத்தில் இருக்குது வெற்றி” தொடரின் ஒவ்வொரு இதழிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆர்வத்துடன் தொடர்ந்து பங்கேற்ற எண்ணற்ற வாசகர்களுக்கு நன்றி.  

பிரசுரிக்கப்பட்டவற்றில் அதிக எண்ணிக்கையில் வித்யாசமான விடைகளை அளித்தவர்களாக கீழ்க்கண்ட வாசகர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு புத்தகப்பரிசு அனுப்பி வைக்கப்படுகிறது. வாழ்த்துக்கள்..... !


1) வை. கோபாலகிருஷ்ணன், திருச்சி

2) சிதம்பரம் என். ராமசந்திரன், நாமக்கல்

3) ஆர்.ஜி. பிரேமா, நெல்லை 


========================================================================

”கல்கி” தமிழ் வார இதழில் கடந்த 12 வாரங்களாக ”வித்யாசத்தில் இருக்குது வெற்றி” என்னும் மிகவும் சுவாரஸ்யமான தொடர் கட்டுரை ஜி.எஸ்.எஸ் என்பவரால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது.  

அந்தத்தொடர் கட்டுரைக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட சம்பவமும் அதற்கான ஒரு கேள்வியும் ஒவ்வொரு வாரமும் கேட்கப்பட்டு வந்தன. அந்தக்கேள்விக்கான விடையை மாத்திமாத்தி யோசித்து வித்யாசமான பதில்களாக அதிகபட்சம் எவ்வளவு தரமுடியுமோ அவ்வளவு தரவேண்டும் என்பதே வாசகர்களுக்கான போட்டியாகும். 

தொடர்ந்து 12 வாரங்களும் நானும் கலந்து கொண்டு, ஒவ்வொரு வாரமும் அதிகபட்சம் விடைகள், மிகவும் வித்யாசமான முறையில் கொடுத்திருந்தேன். 

என் பெயர் இதுவரை ஏழு முறைகள் தேர்வானவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது என்ற விபரம், கீழ்க்கண்ட “கல்கி” இதழ்களில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.

1) 30.01.2011 கல்கி இதழ் பக்கம் எண் 85
2) 27.02.2011 கல்கி இதழ் பக்கம் எண் 54 
3) 13.03.2011 கல்கி இதழ் பக்கம் எண் 87
4) 27.03.2011 கல்கி இதழ் பக்கம் எண் 70
5) 03.04.2011 கல்கி இதழ் பக்கம் எண் 69
6) 24.04.2011 கல்கி இதழ் பக்கம் எண் 82
7) 24.04.2011 கல்கி இதழ் பக்கம் எண் 83 

இன்று வெளியான 24.04.2011 கல்கி இதழில் ஒட்டுமொத்தமாக 12 வாரங்களாக நடைபெறும் இந்தத்தொடர்ப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள் பெயர்கள், இறுதிப்பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அந்த ஒட்டுமொத்த வெற்றியாளர்களின் பெயர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியீட்டு அறிவிப்பில்,  என் பெயர் முதலிடம் வகிக்கிறது என்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.



கல்கி அட்டைப்படம் மேலே.

வெற்றி அறிவிப்பு கீழே. 



அளிக்கப்பட்டப் பரிசுப்புத்தகங்கள்
 மேலேயும் கீழேயும்
ஆக இரண்டு.




என்றும் உங்கள் அன்புள்ள
வை. கோபாலகிருஷ்ணன்

53 கருத்துகள்:

  1. முதலெழுத்து வா.
    இறுதியெழுத்து ள்.
    நடுவில் ஐந்து எழுத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கோபு சாருக்கு, மனதாரப் பாராட்டுகிறேன்.ஆனந்த விகடன் வார இதழ் தவிர வேறு பத்திரிகைகள் படிப்பதில்லை. அதனால் நீங்கள் குறிப்பிடும் முன்பாகத் தெரிய வில்லை.இனி மற்ற பத்திரிகைகளும் படிக்க வேண்டும் போல் இருக்கிறது. திறமையாளர்கள் அடையாளம் காணப்படுவது உறுதி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க மகிழ்ச்சி
    வெற்றி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. கலக்கிட்டீங்க சகோ, தொடர்ந்தும் பல போட்டிகளில் பங்கு பற்றி, வெற்றியீட்டி என்றுமே முதலிடத்தில் இருக்க வேண்டும் என சிறியவன் நான் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்...
    (இந்த டயலாக்க யார்ட்டயாவது சொல்லலாம்னு இத்தனை நாளா, தவமிருந்தேன்..இன்னிக்குத் தான் முடிஞ்சது...அப்பாடா!!!)
    வெற்றி மீது வெற்றி வந்து தங்களை சேரட்டும்!!


    வாழ்த்துக்களுடன்,
    கொழுக்கு,மொழுக்கு!

    பதிலளிநீக்கு
  6. கல்கியிலும் கலக்குறீங்க
    பதிவிலும் கலக்குறீங்க
    வாழ்த்துகள்.

    சார் தேதி 24/4/2011 என்பதில் எனக்கு குழப்பம்

    பதிலளிநீக்கு
  7. இனிய வாழ்த்துக்கள்! மனதாரப் பாராட்டுகிறேன்..
    வெற்றி தொடர வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  8. thirumathi bs sridhar said...
    //சார் தேதி 24/4/2011 என்பதில் எனக்கு குழப்பம்//

    கல்கி வார இதழ் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளிவரும். 24.04.2011 ஞாயிறு தேதியிட்ட இதழ் ஒரு வாரம் முன்னதாகவே அதாவது 17.04.2011 ஞாயிறு அன்றே கடைகளில் கிடைக்கும்.

    அதுபோல 01.05.2011 ஞாயிறு தேதியிட்ட இதழ் வரும் 24.04.2011 ஞாயிறு அன்றே கடைகளில் கிடைத்துவிடும்.

    உங்கள் குழப்பம் இப்போது தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  9. பார்த்தேன். வாழ்த்துகள். புத்தகம் கைக்கு வந்ததும் என்ன புத்தகம் என்று பகிரவும்!

    பதிலளிநீக்கு
  10. தங்கள் பதிவுக்கு இன்று வந்தேன்.
    பரிசு பெற்ற செய்தி கண்டு மகிழ்ந்தேன்.
    எதையுமே வித்தியாசமாக நினைந்து செய்ல்படுவது
    க்ரியேடிவிடி உள்ளவர்களுக்கே , வலது பக்க மூளை அதிகம் செய்ல்படுபவர்க்கே
    சாத்தியம். ஒரு சார்டர்டு அகௌடன்டன்ட் க்ரியேடிவ் ஆக இருப்பது அதிசயமில்லை.

    திருச்சியைச் சேர்ந்தவரா நீங்கள் !! நானும் அந்தக்காலத்தில் ஆண்டார் வீதியில் இருந்துகொண்டு
    1957ல் ஜோசப் கல்லூரியில் படித்தவனே.

    நிற்க. எல்லா இடத்திலும் தெரு மூலையில் உட்கார்ந்திருக்கும் அந்தப்பிள்ளையார்
    திருச்சியில் மட்டும் உச்சிக்குப்போய்
    உச்சிப்பிள்ளையாராக அமர்ந்ததன் ரகசியம் என்ன என்று பார்த்தால்
    அவரும் வித்தியாசமாக எண்ணியிருக்கிறார்.
    செயல்பட்டு இருக்கிறார்.

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    லேட்டாக சொன்னாலும் லேட்டஸ்டு மெசேஜ் ஃப்ரம் ஆன் ஓல்டு மேன்.


    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. 'கல்கி'ட்டீங்க சார். மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. மாமா..சூப்பர்! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  13. அந்த ஒட்டுமொத்த வெற்றியாளர்களின் பெயர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியீட்டு அறிவிப்பில், என் பெயர் முதலிடம் வகிக்கிறது என்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.


    .... We are proud of you!

    பதிலளிநீக்கு
  14. வித்தியாசத்தில் இருக்குது வெற்றி - வித்தியாசமாக - ரூம் போட்டு யோசிச்சீங்களோ? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... மென்மேலும் வெற்றி சிறக்க வாழ்த்துக்கள், மாமா!

    பதிலளிநீக்கு
  15. இனிய பாராட்டுக்கள்! அன்பு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  16. கலக்குங்க வை.கோ சார். வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. vaazthukkal sir. thamiz type makkar pannuthu.
    antha kalki nanum paththen ningannu therinjathum rompa santhoshamaa irukku.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  19. இப்பதிவுக்கு வருகை தந்து வாழ்த்தி அருளிய அனைத்து உடன்பிறப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை மிகப்பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    வை. கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  20. முதன் முதலாக என் வலைப்பூவுக்கு வருகை தந்துள்ள திரு. சுப்புரத்தினம் ஐயா அவர்களுக்கு அடியேனின் அன்புடன் கூடிய நமஸ்காரங்கள்.

    தாங்களும் 1957 இல் எங்கள் திருச்சியில், [அதுவும் நாங்கள் அன்று முதல் இன்றுவரை வசித்துவரும் வடக்கு ஆண்டார் தெருவில்], தங்கி மிகவும் புகழ்பெற்ற, பிரபல St. Joseph College இல் படித்தவர் என்பது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

    உச்சிப்பிள்ளையாரைப்பற்றி மாத்தி யோசித்து தாங்கள் கூறிய கருத்தும் என்னைக் கவர்ந்தது.

    //எதையுமே வித்தியாசமாக நினைந்து செய்ல்படுவது
    க்ரியேடிவிடி உள்ளவர்களுக்கே , வலது பக்க மூளை அதிகம் செய்ல்படுபவர்க்கே சாத்தியம். ஒரு சார்டர்டு அகௌடன்டன்ட் க்ரியேடிவ் ஆக இருப்பது அதிசயமில்லை.//

    இந்தத்தங்களின் கருத்தை B.Com., (Hons.) C.A., & ICWAI படித்து தற்சமயம் பெங்களூரில் இருக்கும் என் கடைசி பிள்ளைக்கு மெயில் மூலம் அனுப்பி வைத்தேன். மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  21. தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
    //பாராட்டுக்கள்//

    என் வலைப்பூவுக்கு முதன்முதலாக வருகை தந்ததற்கும், பாராட்டுக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  22. I would like to submit my
    Sincere, Heartiest & Special Thanks to
    the Most Respectable, Popular & Famous Writers
    Mrs. Vidhya Subramanian Madam &
    Mrs. Mano Swaminathan Madam.

    என்றும் அன்புடனும், பணிவுடனும் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  23. வாழ்த்துக்கள் சார். தரமான இதழில் தாங்கள் பரிசு பெற்றிருப்பது உண்மையில் பெருமைக்குரியது.

    பதிலளிநீக்கு
  24. ரிஷபன் said...
    //இனிய வாழ்த்துக்கள்//

    தொடரின் முதல் வாரத்தில் என் பெயர் முதன் முதலில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டதும், தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எழுதி அனுப்புங்கள் என்று அன்புக்கட்டளையிட்டு, உற்சாகப்படுத்தியவர் தாங்கள் அன்றோ!

    அது தான் இந்த வெற்றியின் இரகசியம்.
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  25. சிவகுமாரன் said...
    //வாழ்த்துக்கள் சார். தரமான இதழில் தாங்கள் பரிசு பெற்றிருப்பது உண்மையில் பெருமைக்குரியது.//

    அருட்கவி அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  26. ஒரு வித்தியாச
    சாதனையாளரை
    சமீபத்தில்
    சந்திப்பது
    சந்தோஷம்...............
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
    மதி நிறைந்த வணக்கங்கள் ஐயா !

    துணை செய்தி: ஆண்டார் வீதியில் உள்ள (உணவகம் பெயர் நினைவில்லை ) உணவக உணவிற்கு நான் அடிமை , என் ஏழு வருட வாழ்க்கை திருச்சியில் தான் கழிந்தது .

    பதிலளிநீக்கு
  27. A.R.RAJAGOPALAN said...
    //ஒரு வித்தியாச
    சாதனையாளரை
    சமீபத்தில்
    சந்திப்பது
    சந்தோஷம்...............
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
    மதி நிறைந்த வணக்கங்கள் ஐயா !//

    தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    என் வலைப்பூவுக்கு புதிய Follower ஆக வந்துள்ள தங்களை அன்புடன் நன்றியுடன் வரவேற்கிறேன்.

    //துணை செய்தி: ஆண்டார் வீதியில் உள்ள (உணவகம் பெயர் நினைவில்லை ) உணவக உணவிற்கு நான் அடிமை , என் ஏழு வருட வாழ்க்கை திருச்சியில் தான் கழிந்தது .//

    வடக்கு ஆண்டார் தெருவின், மேற்குக்கோடியில், வடக்கு பார்த்து அமைந்துள்ளது “ராமா கஃபே” என்ற டிபன் கிடைக்கும் ஹோட்டல்.

    எனக்குத்தெரிந்து சுமார் 55 வருடங்களுக்கு மேலாக உள்ளது. டிபன்+சாம்பார்+சட்னி நன்றாக இருக்கும். நடுவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, Ownership மட்டும் ஒரு ஐயரிடமிருந்து ஐயங்காரிடம் மாறியுள்ளது.

    இதன் அருகே ”பழநி விலாஸ் நெய் ஸ்டோர்” என்ற மிகவும் பிரபலமான தயிர், பால், வெண்ணெய், நெய் விற்கும் கடையும், அதையொட்டி கருப்பர் கோயிலும் உள்ளது.

    இந்த ராமா கஃபே ஹோட்டலுக்கு எதிர்புறம் ஒரு பெரிய அரசமரமும், பிள்ளையார் கோவிலும் உண்டு. அதன் அருகே மாங்காய், மாவடு, மஹாளிக்கிழங்கு, சுண்டைக்காய் போன்ற ஊறுகாய்க்கான ஐட்டங்கள் விற்பனை எப்போதும் நடைபெறும்.

    அந்தப்பிள்ளையார் கோவிலுக்கு ஒரு 4 கட்டடம் தாண்டி, “மதுரா லாட்ஜ் ஹோட்டல்” உள்ளது. இங்கு பகலிலும் இரவிலும் சாப்பாடு மட்டும் கிடைக்கும். Unlimited Meals.
    ”எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்; ஆனால் பரிமாறிய உணவை தயவுசெய்து சாப்பிடாமல் வீணாக்கி விடாதீர்கள்”

    என்ற ஒரு பெரிய அறிவிப்பு வைத்திருப்பார்கள். இன்றும் ரூ.45 க்கு ருசியான Unlimited சாப்பாடு போடுகிறார்கள். நீங்கள் சொல்லுவது இந்த ஹோட்டலாகத்தான் இருக்கும். இந்த ஹோட்டலின் மேல் பகுதியில் பேச்சலர்ஸ் தங்கிக்கொள்ளும் வசதியும் கூட உண்டு.

    மற்றொன்று “மாயவரம் லாட்ஜ்” என்பது வடக்கு ஆண்டார் தெரு ராமா கஃபே யிலிருந்து சற்றே தள்ளி வாணப்பட்டரை ரோட்டில் அமைந்துள்ளது. இங்கும் தங்கும் ரூம்களும், நல்ல Homely Meals + Tiffin only for very limited hours கிடைக்கும். பாலக்காட்டு ஐயர் ஹோட்டல் இது. சுமார் 100 ஆண்டுகளாக இருப்பதாகக் கேள்வி. சாப்பிட்ட இலைகளை அவரவர்களே எடுத்து குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்பது போல நிறைய கண்டிஷன்ஸ் உண்டு.

    தாங்கள் சொல்வது இந்த ராமா கஃபே/மதுரா லாட்ஜ்/மாயவரம் லாட்ஜ், மூன்றுக்குள் ஒன்று தான் என்பது சர்வ நிச்சயம். வாழ்த்துக்கள்.

    நான் செய்த பெரிய பாக்கியம், நான் தற்சமயம் வசித்துவரும் வீட்டிலிருந்து 3 நிமிட நடை தூரத்தில் தான் இந்த 3 உணவகங்களும் உள்ளன. சுவையான உணவகங்கள் அருகே இருப்பது சொர்க்கத்தில் இருப்பது போல உள்ளது.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  28. திரு ராஜகோபால் அவர்களுக்கு நீங்கள் அளித்த ஹோட்டல் விவரங்கள் சுவையாகவும், இப்பவே அங்கே சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தினையும் தோற்றுவித்தது. இதைத் தனி பதிவாகவே போட்டிருக்கலாம் என நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  29. வெங்கட் நாகராஜ் said...
    //திரு ராஜகோபால் அவர்களுக்கு நீங்கள் அளித்த ஹோட்டல் விவரங்கள் சுவையாகவும், இப்பவே அங்கே சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தினையும் தோற்றுவித்தது. இதைத் தனி பதிவாகவே போட்டிருக்கலாம் என நினைக்கிறேன். :)//

    ஆஹா, வாங்க வாங்க. வெங்கட். நன்றி.

    ஹோட்டல்கள் மட்டுமல்ல, சலூன்காரர், சலூன்கடைகளில் பேசும் அரசியல்கள், நாட்டுநடப்புகள், செருப்புத்தைப்பவர், குடை ரிப்பேர்செய்பவர், கத்தி சாணைபிடிப்பவர், கோயில்கள், குருக்கள்கள் என ஒவ்வொன்றிலும் பதிவிட பல அனுபவங்கள் உள்ளன.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம். said...
    //பார்த்தேன். வாழ்த்துகள். புத்தகம் கைக்கு வந்ததும் என்ன புத்தகம் என்று பகிரவும்!
    April 17, 2011 6:23 PM //

    அன்புள்ள ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்!

    இன்று 03.06.2011 அன்று தான் இரண்டு பரிசுப்புத்தகங்கள் பதிவுத்தபாலில் கல்கி அலுவலகத்திலிருந்து வந்தன

    [1] எங்கள் எம்.எஸ் [இசை அரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பற்றிய இனிய நினைவுகள், கல்கி பதிப்பக வெளியீடு 2010 விலை ரூ. 120
    [பல அரிய படங்களுடன், ஏற்கனவே எம்.எஸ். அம்மா அவர்கள் பற்றி, கல்கியில் வெளியிடப்பட்ட தொடர்
    நினைவுச்சரங்களின் தொகுப்பு நூல்]

    [2] வண்ணநிலவன் எழுதிய “உள்ளும் புறமும்” ஒரு மெல்லின நாவல், கல்கி பதிப்பக வெளியீடு விலை ரூ. 65 [இது சமீபத்தில் கல்கியில் தொடர் கதையாக வெளிவந்தது]

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  31. மிகுந்த சந்தோஷம். :) மேலும் மேலும் வெற்றி குவிய இறைவனை வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    ஷக்தி

    பதிலளிநீக்கு
  32. Shakthiprabha said...
    //மிகுந்த சந்தோஷம். :) மேலும் மேலும் வெற்றி குவிய இறைவனை வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    ஷக்தி//

    ஷக்தி அளித்திடும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  33. "மாத்திமாத்தி" யோசிக்கும் ஐயா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
  34. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும்
    என் மனமார்ந்த நன்றிகள், Mrs. VijiParthiban, Madam.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  35. மனமார்ந்த பாராட்டுகளும், இனிமேலும் இத்தகைய இனிப்பான பல செய்திகளைப் பெறவும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  36. வாழ்த்துகள். நீங்க வித்யாசமா என்ன எழுதி அனுப்பினீஙுக. எங்களுக்கும் சொல்லலாமே....

    பதிலளிநீக்கு
  37. அதென்ன வித்தியாசமான விடை.

    அந்தக் கேள்விகளையும், வித்தியாசமான விடைகளையும் ஒரு தொகுப்பாகப் பதியுங்களேன். இது போல் 3,4 முறை பரிசு வாங்கி இருக்கிறீர்கள் அல்லவா? அவை எல்லாவற்றையும் பதியுங்களேன். படித்து ரசிக்கிறோம்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  38. Jayanthi Jaya May 17, 2015 at 11:02 PM

    //அதென்ன வித்தியாசமான விடை.

    அந்தக் கேள்விகளையும், வித்தியாசமான விடைகளையும் ஒரு தொகுப்பாகப் பதியுங்களேன். இது போல் 3,4 முறை பரிசு வாங்கி இருக்கிறீர்கள் அல்லவா? அவை எல்லாவற்றையும் பதியுங்களேன். படித்து ரசிக்கிறோம். வாழ்த்துக்கள்.//

    அது ஒரு தொடர் போட்டி ஜெயா. 12 வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெற்றது. 12 வாரங்களும் நான் பங்கேற்றிருந்தேன். அதில் எட்டு வாரங்கள் எனக்கு வெற்றி கிடைத்ததாக அவ்வப்போது அறிவித்திருந்தார்கள். கடைசியாக ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் அறிவிப்பினில் எனக்கே முதலிடமும் அளித்து பரிசு அளித்திருந்தார்கள்.

    அந்தக்கேள்விகள் + அதற்கான என் பதில்களைத் தேடிக் கண்டுபிடித்து, முடிந்தால் உங்களுக்கு மட்டும் மெயிலில் அனுப்ப முயற்சிக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  39. அந்த பொஸ்தவத்துல இன்னா எளுதினீங்கனு சொல்லல.

    பதிலளிநீக்கு
  40. வாழ்த்துகள். இன்னும் பல இமாலய வெற்றிகள் உங்களை வந்து சேரவேணும்

    பதிலளிநீக்கு
  41. வாத்யார் எப்பவும் முதலிடம்தான்...உச்சம்தொட்டதாலதான் எல்லாரையும் உயர்த்தும் எண்ணம் ஏற்படுகிறது...வாழ்த்துகள் வாத்யாரே...

    பதிலளிநீக்கு
  42. வெற்றி மீது வெற்றி வந்து தங்களை சேர்ந்து கொண்டே இருக்கட்டும்.. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. ஸார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... July 10, 2016 at 11:35 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வெற்றி மீது வெற்றி வந்து தங்களை சேர்ந்து கொண்டே இருக்கட்டும்.. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. ஸார்//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      நீக்கு