வியாழன், 25 ஆகஸ்ட், 2011

மலரே.............குறிஞ்சி மலரே ! [இறுதிப்பகுதி 3 of 3]





மலரே........குறிஞ்சி மலரே ! 

[சிறுகதை - சிறு தொடர்கதை 
 இறுதிப்பகுதி 3 of 3]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
முன்கதை முடிந்த இடம்:



இந்த அஃபிஷியல் ட்யூர் முடிந்ததும், அடுத்தவாரம் ஜாலியாக கல்பனாவுடன் ஊட்டி மலர் கண்காட்சிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். சிறுவயது முதலே அபூர்வமாகப்பூக்கும் குறிஞ்சி மலரைக்காண வேண்டும் என்ற ஒரு ஆவல், சிவராமனுக்கு. இன்றுவரை அது நிறைவேறாத ஒரு ஆசையாகவே உள்ளது. இந்த ஆண்டும் தனது நெடுநாளைய ஆசை நிறைவேறாதபடி இந்த மன உளைச்சலுடன் கூடிய எதிர்பாராத சிறைவாசம்.

சிவராமனைப் பொருத்தவரை இந்தச் சிறைவாசமும், குறிஞ்சி மலரைப்போலவே இதுவரைப் பார்த்தறியாத ஒரு புது அனுபவம் தான்.  


============oOo============  
   

வக்கீல் நந்தினி மறுநாள் சனிக்கிழமை தன்னுடைய வருங்காலக் கணவரும், சீனியர் வக்கீலுமான வஸந்த் இடம் எல்லா விஷயங்களையும் கூறி, மேற்கொண்டு என்ன செய்து, தன் சினேகிதியின் கணவரை மீட்கலாம் என்று ஆலோசித்தாள்.

வக்கீல் வஸந்த் தனக்குத்தெரிந்த ஒரு போலீஸ் ஆபீஸர் மூலம், சிவராமனை அடைத்து வைத்துள்ள சிறைச்சாலையைப் பற்றிய விவரம் தெரிந்து கொண்டு, திங்கட்கிழமை காலையில் சிவராமனை ஜாமீனில் எடுக்க, முயற்சிகள் மேற்கொண்டார்.

ஜாமீனில் எடுக்கப்பட்ட சிவராமனிடம் நந்தினியும், வஸந்தும் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு, நந்தினியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைப்பற்றி, வக்கீல்களின் ஆலோசனைப்படி, சிவராமனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. 

நந்தினி வீட்டுக்குச்சென்ற சிவராமனுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் நந்தினியால் செய்து கொடுக்கப்பட்டன.  சிவராமனை கல்பனாவுடன் போனில் பேசச்சொல்லி தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தாள் நந்தினி.


நடந்த கதைகளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை முழுவதுமாகக் கூறி, ஆபத்தான நெருக்கடியான சூழ்நிலையில் மிகவும் அன்பாகவும், பண்பாகவும், தனக்கு பல்வேறு உதவிகள் செய்து கொடுத்து, போலீஸ் காவலிலிருந்து தன்னை விடுவித்த, நந்தினியைப்பற்றி, கல்பனாவிடம் வானளாவப் புகழ்ந்து தள்ளினான், சிவராமன்.


இரண்டு முழுநாட்களும், மூன்று முழு இரவுகளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுபவம் அவனை முற்றிலும் ஒரு புது மனிதனாகவே மாற்றியிருந்தது. மிகவும் சங்கோஜியானவன் இப்போது மிகவும் சகஜமாகப்பழக ஆரம்பித்தான்.


படித்த பெண்கள் எவ்வளவு அறிவாளிகள் என்றும், முற்போக்கானவர்கள் என்றும், அவர்களின் விவேகமான, தைர்யமான செயல்கள் இன்றைய சமுதாயத்திற்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்றும் நந்தினி மூலம் உணர்ந்து கொண்டான். அவளின் சமயோஜித புத்தியால் மட்டுமே, தன் கன்னத்து மச்சம் மூலம், தான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, பிறகு சிறையிலிருந்து மீண்டு வர முடிந்ததை அறிந்து, நந்தினிக்கு தன் மனமார்ந்த நன்றிகளை வார்த்தைக்கு வார்த்தை தெரிவித்து கொண்டான். 


தான் இதுவரை ஹிந்தி மொழியைக் கற்காததை நினைத்தும், ஹிந்தி பேசத்தெரியாமல் தலைநகருக்கு புறப்பட்டு வந்ததை நினைத்தும், கவனக்குறைவாக இருந்து தன் உடமைகளைப் பறிகொடுத்ததை நினைத்தும், மிகவும் துரதிஷ்டவசமாக போலீஸில் மாட்டியதை நினைத்தும், மிகவும் வருந்தினான்.


அவனுக்கு ஆறுதல் சொல்லிய நந்தினி “தங்கள் மனைவி கல்பனாவுடன் பழகியதால் தான், இன்று நான் இந்தப்பரபரப்பான டெல்லியில் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும், அச்சமின்றியும் வாழ முடிகிறது; 


தங்கள் கல்பனா என்னைவிட எல்லாவிதத்திலும் மிகச்சிறந்த ஒரு உன்னதமான பெண். அவளுக்கு மட்டும் முழுச் சுதந்திரமும், வாய்ப்பும் அளிக்கப்பட்டால், இந்த நம் நாட்டையே ஆளக்கூடிய அளவுக்கு எல்லாத் திறமைகளும், அசாத்ய துணிச்சலும் அவளுக்கு உண்டு; 


அவளுடைய அன்பான அணுகுமுறை, மனோதைர்யம், பொதுஅறிவு, பேச்சாற்றல் மற்றும் ஆளுமைத்திறனால் நல்லதொரு சமுதாய மாற்றத்தைக் கல்பனாவால் கொண்டு வர முடியும்; 


கல்லூரியில் படிக்கும்போது எங்களுக்கெல்லாம் கல்பனா தான்  ரோல்மாடலாக இருந்து வந்தாள். எதிலும் தனித்தன்மையும், முழுத்திறமையும் ஒருங்கே வாய்ந்த உங்கள் மனைவியால் உங்களுக்கே கூட சமூகத்தில் மிகவும் புகழும், பெருமையும் அதிகரிக்க வாய்ப்புண்டு; 


உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அடுத்தமுறை நீங்கள் டெல்லி வரும்போது, கட்டாயம் சரளமாக ஹிந்திமொழி பேசத்தெரிந்தவளான என் உயிர்த்தோழி கல்பனாவுடன் தான் வரவேண்டும்” என்று நந்தினி தன் விருப்பத்தைக் கூறினாள்.


எப்போதுமே எந்தவிதமான அலட்டலோ, ஆரவாரமோ இன்றி அன்புடனும், அமைதியுடனும் இருந்து வரும் தன் மனைவிக்குள் இவ்வளவு நல்ல விஷயங்களா! சிவராமனுக்கே மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது.


ஒரு புதிய சூட்கேஸில் பயணத்திற்கு வேண்டிய அவசியமான துணிமணிகள், புதியதாக வஸந்த் ஆல் வாங்கிவரப்பட்ட ரெடிமேட் பேண்ட்கள், டீ ஷர்ட்கள், புதியதோர் செல் போன், சிம்கார்ட், ரொக்கப்பணம் முதலியவற்றைக்கொடுத்து, தன் வீட்டில் நல்ல விருந்தும் அளித்து, சிவராமனை ஹரித்வாருக்கு வழியனுப்ப ஸ்டேஷன் வ்ரை தன் காதலன் வஸந்துடன் காரில் சென்று வந்தாள் நந்தினி..


அலுவலக வேலை முடிந்து தன் ஊருக்கும் வீட்டுக்கும் திரும்பிய சிவராமன், கல்பனாவுக்கு மிகவும் பிடித்தமான, பால் ஸ்வீட்ஸ் டப்பாக்களை திறந்து நீட்டினான். தாய்மைப்பேறு பெறப்போகும் கல்பனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்குக் காரணம் பால் ஸ்வீட் மட்டுமல்ல, அந்த ஸ்வீட் டப்பாவின் மேல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் வெகு அழகாக எழுதப்பட்டிருந்த “நந்தினி” என்ற தன் ஆருயிர்த் தோழியின் பெயர். அதைத்தன் கணவனிடம் சுட்டிக்காட்டி மகிழ்ந்தாள். 


அப்போது தான் அதை கவனித்த சிவராமனும், ”உன் தோழி ’நந்தினி’ பெயர் போட்டிருந்ததால் தான் நானும் இதை வாங்கி வந்தேன்; நமக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்குமானால் “நந்தினி”  என்று தான் நாம் பெயர் வைக்க வேண்டும்” என்று சொல்லி சமாளித்தான்.


தன் கணவனிடம் புதிதாக, இதுவரை இல்லாத ஏதோவொரு கலகலப்பும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடுவதை கல்பனா கவனிக்கத் தவறவில்லை.


முதல் வேலையாக கூண்டில் அடைபட்டிருந்த கிளிகள் இரண்டையும், கல்பனா கையால் சுதந்திரமாக பறக்க விடச்சொன்னான், சிறையில் இருப்பது எவ்வளவு கொடுமை என்பதைத் தன் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டு வந்துள்ள சிவராமன். 


அந்தக்கிளிகள் இரண்டும் மிகவும் மகிழ்ச்சியுடன் கல்பனாவின் தோளில் உரசியவாறே கத்திக்கொண்டே பறந்து சென்றன. அவைகள் இரண்டும் மிகவும் நன்றியுடனும், பிரியா விடையுடனும் தனக்கு டாட்டா சொல்லிப்போவது போல இருந்தது கல்பனாவுக்கு. 








           

கிளிகளைச் சுதந்திரமாகப் பறக்க விட்ட கல்பனா மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவனை நோக்கினாள்.



”கல்பனா, உன்னைப்பற்றி நந்தினி மிகவும் உயர்வாகப் புகழ்ந்து பாராட்டிப் பேசினாள். கல்லூரி நாட்களில் பல்வேறு திறமைகள் படைத்தவளாமே நீ! அது பற்றியெல்லாம் நீயாகவும் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. நானாகவும் உன்னிடம் கேட்டுக்கொள்ளவும் இல்லை. இதுவரை உன் விருப்பு வெறுப்புக்களைத் தெரிந்து கொள்ள நான் தவறிவிட்டேன். உன் திறமைகளை நீ வெளிக்காட்ட நான் இதுவரை ஏதும் சந்தர்ப்பமே கொடுக்காமல் இருந்து விட்டேன். என் மீதும் தப்பு தான். அதற்காக நான் இப்போது மிகவும் வருந்துகிறேன், கல்பனா” என்று தன் மனம் திறந்து தொடர்ந்து பேசலானான் சிவராமன்.


”இவ்வளவு நல்ல குணங்களையும், திறமைகளையும் உன்னிடத்தே வைத்துக்கொண்டு, குடத்திலிட்ட விளக்காக இருந்துவிடுவது நல்லதல்ல, கல்பனா.  குன்றிலிட்ட விளக்காக நீ மாறி, சமுதாய நலனுக்கு நீ உன்னுடைய படிப்பையும் திறமைகளையும் பயன்படுத்தி புகழோடு நீ விளங்க வேண்டும். அதைக் கண்குளிர நானும் கண்டு பெருமையடைய வேண்டும்; 


நீ ஏற்கனவே பார்த்து வந்த பேங்க் வேலையில் மறுபடியும் நாளை முதல் சேர்ந்து பணியாற்று. பேங்க்குக்கு வரும் பொது மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உன்னால் முடிந்த சிறந்த சேவையை, உன் தனித்திறமையுடன் சிறப்பாக செய்து கொண்டு இரு” என்றான் சிவராமன்.


சிவராமனைப் புது மனிதனாகக் கண்ட கல்பனாவுக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது. நாலு நாள் சிறைவாசமும், நந்தினியிடம் பழகியதும் தான் ஆளை அடியோடு மாற்றியிருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.


”என்ன கல்பனா யோசனை? நான் சொல்வதற்கெல்லாம் எதுவும் பதில் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருக்கிறாயே?” என்றான் சிவராமன். 


கல்பனா தன் மெல்லிய மென்மையான விரல்களால், சிவராமன் கன்னத்தில் இருந்த, அதிர்ஷ்டம் வாய்ந்த அந்த மச்சத்தை, அன்புடன் வருடிக்கொடுத்தாள். 


தான் நேரில் பார்க்க விரும்பிய குறிஞ்சிமலரே தன் அருகில் வந்து தன்னைத் தழுவிய உணர்வு ஏற்பட்டது சிவராமனுக்கு.     











-o-o-o-o-o-o-o-

முற்றும்

-o-o-o-o-o-o-o-

51 கருத்துகள்:

  1. படித்த பெண்கள் எவ்வளவு அறிவாளிகள் என்றும், முற்போக்கானவர்கள் என்றும், அவர்களின் விவேகமான, தைர்யமான செயல்கள் இன்றைய சமுதாயத்திற்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்றும் நந்தினி மூலம் உணர்ந்து கொண்டான்.//

    அநேகம் பேர் உணர்ந்து கொள்ளவேண்டிய தகவல் பகிர்வை கதையில் பொதிந்து கொடுத்த திறமையைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. எப்போதுமே எந்தவிதமான அலட்டலோ, ஆரவாரமோ இன்றி அன்புடனும், அமைதியுடனும் இருந்து வரும் தன் மனைவிக்குள் இவ்வளவு நல்ல விஷயங்களா! சிவராமனுக்கே மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது.//

    நிறைகுடம் ததும்பாததில் ஆச்சரியம் இல்லையே!

    பதிலளிநீக்கு
  3. தான் நேரில் பார்க்க விரும்பிய குறிஞ்சிமலரே தன் அருகில் வந்து தன்னைத் தழுவிய உணர்வு ஏற்பட்டது சிவராமனுக்கு. //

    குறிஞ்சிமலர் அபூர்வமாக் தரிசித்து ஆனந்தப்பட்டோம்.

    அருமையான கதைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தாய்மைப்பேறு பெறப்போகும் கல்பனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்குக் காரணம் பால் ஸ்வீட் மட்டுமல்ல, அந்த ஸ்வீட் டப்பாவின் மேல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் வெகு அழகாக எழுதப்பட்டிருந்த “நந்தினி” என்ற தன் ஆருயிர்த் தோழியின் பெயர். //

    குழந்தை நந்தினி காமதேனுவாய் வந்து வசந்தத்தை வாரி வழங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. // தான் நேரில் பார்க்க விரும்பிய குறிஞ்சிமலரே தன் அருகில் வந்து தன்னைத் தழுவிய உணர்வு ஏற்பட்டது சிவராமனுக்கு.//

    காவிய நடையில் கவிதைபோல் சென்ற கதை மன
    ஓவியமாக நின்றது வைகோ
    முடிவில் தந்துள்ள வரிகள்
    முல்லைக் கொடியில் பூத்த
    மலர்கள்.

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. மென்மையான உணர்வுகளுடன் கூடிய ஒரு இனிய கதையை தந்ததற்கு பாராட்டுக்கள், கோபு மாமா!

    பதிலளிநீக்கு
  7. புரிந்து கொள்ளுதல்தான் இல்லறத்தின் அடிப்படை. இருவரின் ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே இருப்பது தங்கக்கிளியை கூண்டில் அடைத்ததுபோல்தான் என்று அழகாக சொல்லிவிட்டீர்கள். கதையமைப்பு மிக அருமை.

    பதிலளிநீக்கு
  8. ஒருவருக்கு ஒரு நனமை செய்யப்போய்
    அதிலிருந்து இன்னொரு நன்மை விளைவதை
    இயல்பாகச் சொல்லிச் செல்லும் கதை
    மிக மிக அற்புதம்
    மனம் கவர்ந்த படைப்பு

    பதிலளிநீக்கு
  9. //முதல் வேலையாக கூண்டில் அடைபட்டிருந்த கிளிகள் இரண்டையும், கல்பனா கையால் சுதந்திரமாக பறக்க விடச்சொன்னான், சிறையில் இருப்பது எவ்வளவு கொடுமை என்பதைத் தன் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டு வந்துள்ள சிவராமன். //

    சிவராமன் திருந்தியது மனதுக்கு நிம்மதியாக இருக்கு.
    நல்ல கதையை கொடுத்ததற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  10. நல்ல தொடர்/சிறு கதை வை கோ சார்..அற்புதம்

    பதிலளிநீக்கு
  11. அருமையான முடிவு.. அழகான குறிஞ்சி மலர்..:)

    பதிலளிநீக்கு
  12. இதுபோல நல்ல நட்பு கிடைக்க
    கொடுத்து வச்சிருக்கணும். நல்ல கதை
    நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு
  13. கடைசிப் பகுதியை வேகமாக முடித்து விட்ட மாதிரி இருந்தாலும், இனிமையான கதை!

    பதிலளிநீக்கு
  14. மென்மையாக, அதே சமயம் அழுத்தமாக உணர்வுகளை உலாவ விட்டு, அருமையாக முடிச்சிருக்கீங்க. ரொம்ப நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  15. அழகான கதை, விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதம் அருமை

    பதிலளிநீக்கு
  16. அருமையான கதை.. அழகான நடை.. மீண்டும் இதுபோல் ஒரு அருமையான கதைகளை எதிர்பார்க்கிறேன். போட்டிகள் ஆரம்பிக்கலையா?

    பதிலளிநீக்கு
  17. Can you please public all the three parts as one story? The sentence lines of the first part were broken when I perused it on my lap top. Thanks

    பதிலளிநீக்கு
  18. நல்ல விருவிருப்பான சிறுகதை. இப்படிப்பட்ட சிறுகதைகளை அந்தக் காலத்தில் கலைமகள், விகடன் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். இன்று இது போன்ற கதைகளைப் பிரசுரிக்கும் பத்திரிக்கைகள் ஒன்றையும் காணோம். எழுதுவாரும் அருகி விட்டனர்.

    பதிலளிநீக்கு
  19. ஒரு நாவல் எழுதுவதற்கான கதைக் கருவில், சிவராமன் மீட்கப் படும் சம்பவங்களை முன்கதைச் சுருக்கம் சொல்லும் வேகத்திலும் சுருக்கமாகவும் கொடுத்துக் கொண்டு சென்றுள்ளீர்கள். இந்தப் பகுதியில் சம்பவங்கள் வெகு விரைவாக தரப் பட்டுள்ளன. கிளிகளின் கூண்டு அனுபவத்தை கல்பனாவுக்கு உவமையாகச் சொல்லி, கிளி, கல்பனா இரண்டு அனுபவத்தையுமே சிவராமன் தன் இரண்டு நாள் சிறை அனுபவத்தில் உணர்வதாகக் கூறுவதும் அழகு. டாக்டர் பி கந்தசாமி அவர்கள் சொல்வதை வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. கதையின் கடைசி பாகமான இதில் அப்படி ஒரு விருவிருப்பு....

    சிவராமன் போன்ற ஆண்கள் நிறைய நம் சமூகத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்... அவர்களுக்கெல்லாம் இது நல்லதோர் படிப்பினை.

    கதையின் போக்கும், முடிவும் என் மனதைக் கொள்ளை கொண்டது...

    பதிலளிநீக்கு
  21. கதை மாந்தரின் இயல்புகள் போலவே கதையின் போக்கும் இருந்தது. எதிர் பாராத திருப்பங்கள் ஏதும் இல்லாதிருந்தது,உங்கள் பாணியிலிருந்து மாறியிருந்தது. திறமை இருக்குமிடம் கண்டறியப்படாமல் போகக்கூடாது என்பதைக் கூறிய உங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  22. மனதை கவர்ந்த கதை ஐயா..
    விறுவிறுப்பாக எழுதி அசத்திட்டீங்களே..
    அன்புடன் பாராட்டுக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  23. புரிதலும்,அதன் மகத்துவமும் சொல்லும் அழகான கதை

    பதிலளிநீக்கு
  24. // Chandramouli said...
    Can you please public all the three parts as one story? The sentence lines of the first part were broken when I perused it on my lap top. Thanks//

    Sir,
    Please send me your correct e-mail ID to my mail ID valambal@gmail.com so that I can send all the 3 parts of the story immediately.

    Just now I have sent it to your mail ID vcnowleeswaran@gmail.com but it is returned as undelivered.

    vgk

    பதிலளிநீக்கு
  25. அனைவரும் அறியவேண்டிடிய தகவலை கதைன் மூலம் சொன்னதற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  26. மிக நல்ல கதை. மிக எளிமையான தமிழ்நடை உள்ள கவிதை. நான் 3 அங்கமும் வாசித்தேன் கருத்துமிட்டேன் என்று மகிழ்கிறேன் .சில வேளைகளில் தவறுவதுண்டல்லவா!. மகிழ்ச்சி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  27. நல்ல கருத்து பகிர்வை கதையுடன் கூட தந்திருக்கிறீர்கள.பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  28. எப்போதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்யும்போது அது தொடர்கதை போல ஆவதுண்டு. தொடர்ந்து நல்ல விஷயங்களே நடப்பதுண்டு. அது போன்ற நிகழ்வுகளினல் கதையும் நல்ல விதமாகவே முடிந்திருக்கிறது. கூண்டிலடைப்பட்ட கிளிகளைப் பறக்க விட்டதன் மூலம் நல்லதல்லாவற்றை அது போல பறக்க விட்டு விடவேன்டுமென்ரறு சிறப்பாகச் சொல்லுகிறது இந்த கதை!

    பதிலளிநீக்கு
  29. சிவராமன் திருந்தியதில் மகிழ்ச்சி. நல்ல முடிவு. நல்லதொரு கதையை பகிர்ந்ததற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  30. விறுவிறுப்பாகக் கொண்டு போய் சுகமாக முடித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  31. கதை தான் என்ன ஒரு விறுவிறுப்பு?
    அந்த கூண்டு கிளைகளைப் பறக்க விட்டதன் மூலம் எங்கோ சென்று விட்டீர்கள், ஸார்..?

    பதிலளிநீக்கு
  32. I received your email with the full story. Essentially, a feel-good story, comparing the modern women as caged birds - though a golden cage. But, I must say that it is unbelievable if a heroine like Kalpana would accept to live in such a glorified, but restricted environment.

    பதிலளிநீக்கு
  33. இந்தக்கதையின் இறுதிப் பகுதிக்கும் அன்புடன் வருகை தந்து, ஆர்வமுடன் அரிய கருத்துக்கள் அளித்து உற்சாகமூட்டி பாராட்டியுள்ள என் அன்பான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  34. நிறைவுப்பகுதி அருமை. படங்களும் பொருத்தமாக இருக்கின்றன.

    முன்பே சொல்ல நினைத்தது இது, வெண்மைப் பின்னணியில் நீல எழுத்துக்கள் கண்ணுக்கு இதமாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  35. இமா said...
    //நிறைவுப்பகுதி அருமை. படங்களும் பொருத்தமாக இருக்கின்றன.

    முன்பே சொல்ல நினைத்தது இது, வெண்மைப் பின்னணியில் நீல எழுத்துக்கள் கண்ணுக்கு இதமாக இருக்கின்றன.//

    இமாவின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் அண்ணனின் மனமார்ந்த நன்றிகள்.

    3.9.2011 தந்துள்ள தங்களின் கருத்தினை இந்தச் சோம்பேறி அண்ணன் இன்று 3.6.2012 [சரியாக 9 மாதங்கள் கழித்து] தான் அதுவும் அகஸ்மாத்தாகப் பார்க்க நேர்ந்துள்ளது.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  36. நல்ல கதை. ஆரம்பம் முதல் முடிவுவரை அழகாக, சொல்ல வந்த கருத்தினை தெளிவாகச் சொல்லி கதையை நகர்த்தியுள்ளீர்கள்.

    கல்பனாவின் நிலையை கூண்டில் அடைத்து வைத்திருக்கும் கிளியை உதாரணமாக கூறியது பாலச்சந்தர் அவர்களின் பழைய திரைப்படங்களை ஞாபகப்படுத்தியது.

    நல்ல அறிவுரைக்கதை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி December 2, 2012 2:09 PM

      வாங்கோ இளமதி, வணக்கம். செளக்யமா இருக்கீங்களா?

      தங்களைப்பார்த்து பலவருஷங்கள் ஆனது போல ஓர் உணர்வு ஏற்பட்டது.

      //நல்ல கதை. ஆரம்பம் முதல் முடிவுவரை அழகாக, சொல்ல வந்த கருத்தினை தெளிவாகச் சொல்லி கதையை நகர்த்தியுள்ளீர்கள்.//

      ரொம்பவும் சந்தோஷமம்மா! ;)

      //கல்பனாவின் நிலையை கூண்டில் அடைத்து வைத்திருக்கும் கிளியை உதாரணமாக கூறியது பாலச்சந்தர் அவர்களின் பழைய திரைப்படங்களை ஞாபகப்படுத்தியது.//

      நிறைய பேர்களின் நிலை இன்றும்கூட கூண்டில் அடைபட்டுள்ள கிளியாகவே உள்ளது, என்பது தானே உண்மையாக உள்ளது, இளமதி!

      உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? திரைப்பட இயக்குனர் பாலச்சந்தர் [Mr. K B Sir] அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

      'பாலச்சந்தர்'க்கும் 'இளமதி'க்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.

      இருவரும் ஒருவரே. பாலச்சந்தரின் தூய தமிழாக்கமே இளமதி என்பதாகும். யோசித்துப்பாருங்கள் தெரியும்.

      பால = Tender = இளம்
      சந்தர் = சந்திரன் [MOON] = மதி
      ஃ பாலச்சந்தர் = [Young Moon] = இளமதி

      //நல்ல அறிவுரைக்கதை. வாழ்த்துக்கள்!//

      எப்போதாவது மாதம் ஒரு முறை வானில் கஷ்டப்பட்டு நம்மால் கண்டுபிடித்து தரிஸிக்கப்ப்படும் மூன்றாம்பிறைச் சந்திரனாக தங்களின் அபூர்வ வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

      அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி.

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  37. ஐயா..உங்கள் மறுமொழிக்கு சந்தோஷம்..:)

    நல்ல நல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் செய்கிறீர்கள். நான் பெயரைச் சொன்னேன்..:)

    எனக்கு தூய தமிழிலில் இளமதின்னு பெயர் வைத்துவிட்டுள்ளனர் என் மதிப்புக்கும், அன்புக்குமுரியவர்கள். ஆகையினால் நீங்கள் கூறிய பெயர் என்னதுன்னு தப்பார்த்தமாகிட வேணாமே. அதோடு நான் பெண். நீங்கள் கூறும்வகையில் அப்பெயரை ஆணுக்குத்தான் வைக்கமுடியும்....:)))

    ஆமாம்... 3ம்பிறை தரிசஸனம்னா அத்தனை சுலபமா என்ன....:)))

    நேரப்பற்றாக்குறைதான்.. எத்தனை இல்லங்களுக்கு போகவேண்டி இருக்கிறது. அவ்வப்போது இங்கும் வருவேன். குறை எண்ண வேண்டாம்...
    மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  38. இளமதி December 2, 2012 11:21 PM

    //ஐயா..உங்கள் மறுமொழிக்கு சந்தோஷம்..:)//

    என் மறுமொழிக்கு ஓர் மறுமொழி பார்த்ததும் எனக்கும் இரட்டிப்பு சந்தோஷமே ஏற்பட்டது.

    //நல்ல நல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் செய்கிறீர்கள். நான் பெயரைச் சொன்னேன்..:)//

    ஓஹோ! பெயரைப்பற்றி தானா! நான் வேறு என்னவோ ஏதோவென்று பதறிப்போய் விட்டேன். மகிழ்ச்சி ;)))))

    //எனக்கு தூய தமிழிலில் இளமதின்னு பெயர் வைத்துவிட்டுள்ளனர் என் மதிப்புக்கும், அன்புக்குமுரியவர்கள்.//

    ஆஹா, அருமையான பெயர் வைத்துள்ள அந்தத் தங்கள் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன், மனதுக்குள்.

    //ஆகையினால் நீங்கள் கூறிய பெயர் என்னதுன்னு தப்பார்த்தமாகிட வேணாமே. அதோடு நான் பெண். நீங்கள் கூறும்வகையில் அப்பெயரை ஆணுக்குத்தான் வைக்கமுடியும்....:)))//

    ஆணின் பெயரை ஓர் அன்பினால் பெண் வைத்துக்கொள்வதும், பெண்ணின் பெயரில் ஆண் எழுதுவதும் மிகவும் சகஜம் தானே. அதில் ஒருவித சொல்லமுடியாத பேரின்பம் ஒளிந்துள்ளது என்பதே உண்மையல்லவோ!

    //ஆமாம்... மூன்றாம்பிறை தரிசஸனம்னா அத்தனை சுலபமா என்ன....:)))//

    ரொம்ப ரொம்ப கஷ்டம் தான். மிகவும் உன்னிப்பாக ஒருசில இடங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தெரியும். பார்த்தவுடன் மனதுக்கு ஓர் மகிழ்ச்சி ஏற்படும்.

    //நேரப்பற்றாக்குறைதான்.. எத்தனை இல்லங்களுக்கு போகவேண்டி இருக்கிறது. அவ்வப்போது இங்கும் வருவேன். குறை எண்ண வேண்டாம்...//

    நியாயம் தான். எனக்கு இதில் குறையொன்றும் இல்லை.

    //மிக்க நன்றி ஐயா!//

    மிகவும் சந்தோஷம் + நன்றிகள் இளமதி.

    ------------
    அவ...காடா;) என்ற தலைப்பில் வேறொருவர் எழுதின பதிவினில், தங்களின் முதல் வருகைக்காக பிரத்தானியா குயின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் அவர்களால் ’சான்விச்’ அளிக்கப்பட்டுள்ளது அறிந்தேன். Congrats. ;)))))
    ------------

    பதிலளிநீக்கு
  39. நல்ல முடிவு. நான் எதிர்பார்த்த முடிவும் கூட.

    பொதுவாக நல்ல விஷயங்களை யாராவது எடுத்து சொன்னால்தான் புரியும். இன்றைய கால கட்டத்தில் நல்ல விஷயங்களை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் ஆட்கள் இல்லை.

    மேலும் உங்களது இந்த அருமையான கதைகளை புத்தக வடிவில் வெளியிடுவது வருங்கால சந்ததியினருக்கு நன்மை தரும் என்று நினைக்கிறேன். ஆவன செய்ய யோசியுங்கள்.

    பதிலளிநீக்கு
  40. //JAYANTHI RAMANIJanuary 24, 2013 at 1:46 AM

    நல்ல முடிவு. நான் எதிர்பார்த்த முடிவும் கூட//.

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. சந்தோஷம்.

    //பொதுவாக நல்ல விஷயங்களை யாராவது எடுத்து சொன்னால்தான் புரியும். இன்றைய கால கட்டத்தில் நல்ல விஷயங்களை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் ஆட்கள் இல்லை.//

    ஆமாம். யாருக்கும் எதற்கும் இப்போது நேரமும், பொறுமையும் இல்லை.

    அவசர உலகம். இயந்திர மயமான வாழ்க்கை என மாறிவிட்டது.

    நான் சிறுவனாக இருந்த போதெல்லாம், டீ.வி.யோ, செல்ஃபோனோ , கம்ப்யூட்டரோ, இண்டர்நெட்டோ ஏதும் கிடையாது.

    மிஞ்சிமிஞ்சிப்போனால் சிலர் வீடுகளில் ரேடியோ மட்டுமே உண்டு.

    அப்போதெல்லாம் நல்ல விஷயங்களை எல்லோருக்கும் எடுத்துச்சொல்ல கதாகாலக்ஷேபங்கள் ஆங்காங்கே நடைபெறும்.

    நான் பல பிரபலங்களின் சொற்பொழிவுகளை நேரில் கேட்டுள்ளேன். அவற்றில் சேங்காலிபுரம் பிரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷதர், தூப்புல் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர், ஸ்ரீ திருமலாச்சாரியார், ஸ்ரீ கிருபானந்த வாரியார், புலவர் கீரன், திருமதி சிவானந்த விஜயலக்ஷ்மி , வானொலி ’காளிங்க நடன இசைக்கச்சேரிப் புகழ்’ பிக்ஷாண்டார்கோயில் ஸ்ரீ பாலசுப்ரமணிய பாகவதர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

    இப்போதும் கூட ஸ்ரீகல்யாணராமன், ஸ்ரீகிருஷ்ணபிரேமி, ஸ்ரீ பாண்டுரங்க விட்டல் மஹராஜ் ஸ்ரீ ஜயகிருஷ்ண பாகவதர், ஸ்ரீ ஹரிஜி, திருமதி. விசாஹா ஹரி போன்ற்வர்களின் இசைச் சொற்பொழிவுகள் திருச்சியில் நடைபெறும் போது, எனக்கு நேரமும் வசதிகளும் அமையும்போது, நான் மிகவும் ஆர்வமாகப் போய்க்கேட்டு மகிழ்வதும் உண்டு.

    சமீபத்தில் திருமதி விசாஹா ஹரி அவர்கள் நிகழ்த்திய ஒரு மணி நேர இசைச் சொற்பொழிவினை கேட்டு மகிழ்ந்த நான், அதை பதிவாகவே கூட வெளியிட்டு, பலரும் பாராட்டியுள்ளனர்.

    இணைப்பு இதோ:
    .
    http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-1-of-2.html

    http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html


    >>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK To Mrs. JAYANTHI RAMANI Madam [ தொடர்ச்சி - 2 ]

      //மேலும் உங்களது இந்த அருமையான கதைகளை புத்தக வடிவில் வெளியிடுவது வருங்கால சந்ததியினருக்கு நன்மை தரும் என்று நினைக்கிறேன். ஆவன செய்ய யோசியுங்கள்.//

      நான் இதுவரை வணிக/வியாபார நோக்கு ஏதும் இல்லாமல் என்னுடைய ஆதம திருப்திக்காகவும், வருங்கால சந்ததிகளுக்காகவும் மட்டுமே, என் சிறுகதைகளில் சிலவற்றை மூன்று சிறுகதைத்தொகுப்புகளாக வெளியிட்டுள்ளேன்.

      2009 ஆண்டில் இரண்டும், 2010 ஆண்டில் ஒன்றும்.

      அவைகளைப்பற்றியெல்லாம் ஒரே படங்களாக மட்டும் கீழ்க்கண்ட இணைப்புகளில் வெளியிட்டுள்ளேன்.

      [90% படங்கள் + 10% விளக்கங்கள்]

      தலைப்பு: “மலரும் நினைவுகள்”

      http://gopu1949.blogspot.in/2011/07/4.html

      http://gopu1949.blogspot.in/2011/07/1.html

      மேற்படி ஒவ்வொரு நூல்களிலும் 300 பிரதிகள் வீதம் நானே விலை கொடுத்து வாங்கி, என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் கையொப்பமிட்டு அன்பளிப்பாக மட்டுமே வழங்கியுள்ளேன்.

      ஒரு பிரதியினைக்கூட நான் யாருக்கும் இதுவரை விற்பனை செய்தது இல்லை.

      மூன்றாவது வெளியீடான “எங்கெங்கும் எப்போதும் என்னோடு” என்பது மட்டும் கைவசம் கொஞ்சமான பிரதிகள் உள்ளன.

      தங்களைப்போன்ற யாரையாவது நேரில் நான் சந்திக்கும் போது, நினைவிருந்தால் கட்டாயம் என் கையொப்பமிட்டு, தேதியிட்டு அன்பளிப்பாக மட்டுமே தருவேன்.

      இதுவரை நான் அதற்காக செலவு செய்துள்ளது :-:
      ==========================================

      ரூ. 75000 + கடும் உழைப்பு + அசாத்யப்பொறுமை.

      இதுவரை நான் அதன் மூலம் பெற்றுள்ளது :-:
      =======================================
      ஆத்ம திருப்தி + ஒருசில பரிசுகள் + பாராட்டுக்கள் + பட்டங்கள் + பொன்னாடைகள். + எழுத்துலக நண்பர்கள் பலரின் அன்பான நட்புகள் + தொடர்புகள் + பெருமைகள் மட்டுமே.

      மேலும் சில சிறுகதைத்தொகுப்புகள் இதுபோலவே வெளியிட வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. அதற்கான நேரமும் வந்து சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்தால் நிச்சயமாகச் செய்வேன்.

      நான் மறைந்தாலும் என் எழுத்துக்கள் என்றும் மறையாமல் உலகெங்கும் உள்ள எல்லா நூலகங்களிலும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கும். அதை நினைக்கையில் எவ்வளவு சந்தோஷங்கள் ஏற்ப்டுகிறது! ;)

      உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து என் சிறுகதைகளை அங்குள்ள தமிழ் வாசகசாலை மூலம் படித்துவிட்டு, முன்பின் அறிமுகமே இல்லாத சிலர், அவ்வப்போது எனக்கு மின்னஞ்சல் மூலம் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

      அதுபோல உள்நாட்டில் உள்ளோர் சிலர் கடிதம் எழுதுகின்றனர். சிலர் தொலைபெசி / கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி பாராட்டி வருகின்றனர். இவையெல்லாம் எவ்வளவு ஒரு மகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள்.

      நாம் இந்த உலகில் மற்றவர்களைப்போல சராசரியான வாழ்க்கை வாழாமல், நமக்கென ஓர் தனியிடம் பெற்று வாழ்ந்ததற்கான ஓர் அடையாளம் மட்டுமே அவை.

      அதனால் இதற்காக செலவழிப்பதை நான் ஒரு செல்வு என்றே எப்போதும் நினைப்பது இல்லை. .

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  41. எப்படியோ, நம் கதாநாயகன் கதாநாயகியின் பெருமையை உணர்ந்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  42. தன் மனைவியினுடைய உருமை பெருமைகளை மற்றவர் சொன்ன பிறகு தான் புரிநுது கொள்ள முடிகிறது சில கணவனு மார் களால்.

    பதிலளிநீக்கு
  43. அதான பொஞ்சாதி பெருமய மத்தவங்க சொல்ல போக வெளங்கிகிடுவாங்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 12, 2015 at 10:00 AM

      //அதான பொஞ்சாதி பெருமய மத்தவங்க சொல்ல போக வெளங்கிகிடுவாங்களோ//

      :) அதே ... அதே ..... சபாபதே ! :)

      அவனவன் பொஞ்சாதியின் மதிப்பும் பெருமையும் பிறருக்கு தெரிந்த அளவு அவனுக்கு [சம்பந்தப்பட்ட கணவனுக்குத்] தெரியாமல்தான் உள்ளது. என்ன செய்வது? சொல்லுங்கோ ! :)

      நீக்கு
  44. நல்ல விஷயங்களை எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்ள சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் சொல்லும் விதத்தில் எடுத்துச்சொல்ல பலருக்கும் தெரிவதில்லை எப்படியோ கதையின் முடிவு நல்லாவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  45. கண்ணுக்கு முன்னாலயே வச்சுகிட்டு...புதையல தேடியிருக்கானே...ஹூம் எல்லாமே யாராச்சும் சொல்றப்பதான் புரியும்போல இருக்கு...

    பதிலளிநீக்கு
  46. மனம் திருந்திய மணவாளன்! முடிவு அருமை!

    பதிலளிநீக்கு