என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

மனசுக்குள் மத்தாப்பூ [ நிறைவுப்பகுதி - 4 of 4]







மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதை [ நிறைவுப் பகுதி 4 of 4 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

பகுதி 1 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html

பகுதி 2 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/2-of-4.html

பகுதி 3 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/3-of-4.html




முன்கதை முடிந்த இடம்:

நம்ம ஊரு வயசுப்பொண்ணு ஒருத்தியை அதுவும் வாய் பேசமுடியாத ஒரு அப்பாவிப் பெண்ணை, எங்கிருந்தோ வந்த இவன் கட்டிப்பிடித்துத் தூக்கி விட்டான். இந்த அயோக்யனை சும்மா விடக்கூடாது. கட்டிப்போட்டு உதைக்க வேண்டும் எனப் பஞ்சாயத்தில் முடிவு ஆனது.

மனோவுக்கு மிகவும் அவமானமாகி விட்டது. அழுகையாக வந்தது. கீழ் வீட்டு வீட்டுக்கார அம்மா, அவனைப் பார்த்த பார்வையே, அவனை அப்படியே சுட்டெரிப்பது போல இருந்தது.


================================

அலாரம் மண்டையை உடைப்பது போல அடிக்க ஆரம்பித்தது. திடுக்கிட்டு எழுந்தான். அத்தனையும் கனவு என்பதை உணர்ந்தான்.

மனோவுக்கு கனவு ஏற்பட்டால் அது நிச்சயம் நடந்து விடுவதுண்டு. அவன் தந்தை ஒரு சாலை விபத்தில் இறந்து போவது போல கனவு கண்டான். அது போலவே ஒரு வாரத்தில் நடந்து விட்டது.  பிறகு ஒரு முறை அவன் தாய் கிணற்றடியில் வழுக்கி விழுவது போலக் கனவு கண்டான். ஒரு வாரத்தில் அதுபோலவே நடந்து, அவள் படுத்த படுக்கையாகி ஒரு மாதத்தில் போய்ச் சேர்ந்தும் விட்டாள். அன்று முதல் சொந்த பந்தங்கள் என்று சொல்லிக்கொள்ள யாருமின்றி, தனி மரமானான் மனோ. 

தன்னுடன் படித்த சகமாணவன் ஒருவன், பள்ளி இறுதித் தேர்வில், மிகவும் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதன் மாணவனாக வருவதாகக் கனவு கண்டான். அதன்படியே அதே மாணவன், மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலேயே முதல் மாணவனாக ஆனான்.

இன்றைய அவனுடைய கனவில் நல்ல வேளையாக அந்தக் கருநாகப்பாம்பு அனுவைக் கடிக்கவில்லை என்ற மன நிம்மதியுடன், பாத் ரூமுக்குக் குளிக்கச் சென்றான். பத்து மணிக்குள் தன்னை ரெடிசெய்து கொண்டு, அனு வீட்டில் ஆஜராகிவிட்டான், மனோ.

இவன் உள்ளே நுழையவும் அவர்கள் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வந்தவர்களை வரவேற்ற மனோவுக்கு ஒரே அதிர்ச்சி.





.

வந்தவன் பெயர் நாகப்பா. சென்னையில் ஏற்கனவே மனோ தன் தாய் தந்தையுடன் வசித்த பகுதியில், அவன் ஒரு பேட்டை ரெளடி என்று பெயர் பெற்றவன். ஏற்கனவே மனோவுக்குத் தெரிந்த வரை இரண்டு முறை திருமணம் ஆனவன். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு பலமுறை கம்பி எண்ணி வந்தவன்.   

அவனுடன் வந்திருப்பவர்களும் அவனுடைய சொந்த தாயோ தந்தையோ அல்ல. எல்லாம் திட்டமிட்ட சதிச்செயலும், ஏமாற்று வேலைகளும், கபட நாடகமும் என்பதை அனுவின் தாயாரைத் தனியே அழைத்துப்போய் மனோ விளக்கிக்கூறி விட்டான்.

அனுவின் தாயும் ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி, பெண் கொடுக்க சம்மதம் இல்லை எனக்கூறி, அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டாள்.

தங்கள் சூழ்ச்சிக்கு பெண் பலியாகாமல் தப்பித்து விட்டாளே என்ற ஆத்திரத்திலும், ஏமாற்றத்திலும் வந்தவன் பெரிதாகச் சத்தம் போட்டான்:

 “இந்த ஊமையான செவிடான உங்கள் பெண்ணை யார் கட்டிப்பாங்கன்னு நானும் பார்க்கிறேன்; ஏதோ போனாப்போகுதுன்னு பெரிய மனசு பண்ணி, ஒரு பொண்ணுக்கு வாழ்வு கொடுத்து உதவலாம்னு வந்தா மரியாதை தெரியாம இருக்கிறீங்களே!” என்று புலம்பியவாறு புறப்பட்டான்.

அமைதியும் அழகும் அறிவும் நிறைந்த இந்த அனுவைக்கட்டிக்கொள்ள எவனுக்காவது கசக்குமா என்ன? என்று நினைத்துக்கொண்டான், மனோ.

தன் கனவில் வந்த கருநாகப்பாம்பு தான், இந்த நாகப்பா ரூபத்தில் இப்போது அனுவைக் கொத்த வந்துள்ளது. கனவில் அந்த கருநாகப் பாம்பிடமிருந்து அனுவைக் காப்பாற்றியது போலவே, இப்பவும் இந்த நாகப்பாவிடமிருந்தும் நம் அனுவை எப்படியோ ஒரு வழியாகக் காப்பாற்றி விட்டோம், என மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான், மனோ.

நல்ல நேரத்தில் தெய்வம் போல வந்து தன் மகளின் வாழ்க்கை வீணாகாமல் காப்பாற்றிய மனோவுக்கு அனுவின் தாய் கண்ணீருடன் நன்றி கூறினாள். எல்லாவற்றையும் புரிந்து கொண்ட புத்திசாலிப்பெண் அனுவும் கைகூப்பி மனோவை வணங்கினாள்.

தான் கண்ட கனவில் அனு “அம்மா” என்று கத்தியதுபோல, விரைவில் தகுந்த சிகிச்சைகள் மேற்கொண்டால், அவள் வாய் திறந்து பேசவும் வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை டாக்டர் மனோவுக்குத் தோன்றியது.

மனோவின் கனவு என்றுமே பலிக்காமல் இருந்தது இல்லை. அவளை அவன் அலாக்காகக் கட்டிப்பிடித்துத் தூக்கியது, பிள்ளைத்தாச்சியான அவளைப் பிரிய மனமில்லாமல், கட்டி அணைத்தவாறு அமர்ந்தது உள்பட, நிச்சயம் ஒரு நாள் நடந்தே தீரும், என்ற நம்பிக்கையில், மனோவின் மனசுக்குள் மத்தாப்பூக் கொளுத்தியது போன்றதொரு மகிழ்ச்சி ஏற்பட்டது.   

மறுநாள் அதிகாலையின் அனு போட்டிருந்த இதயம் போன்ற [ஹாட்டீன் வடிவ] கோலத்தில் Welcome! Thank You !! Happy Deepavali !!! போன்ற அழகான வார்த்தைகளைப் பார்த்த மனோவுக்கு, அவளின் மனத்திலும் தான் புகுந்து விட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

அப்புறம் என்ன! அடுத்த தீபாவளி அனுவுக்கும் மனோவுக்கும் நிச்சயமாகத் தலை தீபாவளியாகத் தானே இருக்கும்!    நாமும் அவர்களை மனதார வாழ்த்திடுவோம்!!



-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-




இது 2011 ஆண்டுக்கான என் 150 ஆவது பதிவு என்பதை நினைத்து மகிழ்கிறேன்.


இந்த என் சிறுகதையை, முழுவதும் ஒரே பகுதியாக 
"வல்லமை" மின் இதழில் ”தீபாவளி 2011 ஸ்பெஷல்” ஆக 
வெளியிட்டுள்ளார்கள் என்பதையும் 
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

-oOo-


மேலும் ஒரு மகிழ்ச்சிப் பகிர்வு

வரும் 31.10.2011 திங்கட்கிழமை   முதல் 06.11.2011 ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்மணத்தில், என்னை நட்சத்திரப் பதிவர் ஆக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்து, அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்கள். அதன்படி அந்த ஏழு நாட்களுக்கும் தினமும் ஓரிரு பதிவுகள் வீதம் என் வலைப்பூவில் நான் வெளியிட வேண்டும். 

தாங்கள் அனைவரும் தொடர்ந்து வருகை தந்து உற்சாகம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில், தமிழ்மணத்தின் அன்பான அழைப்பினை ஏற்றுக் கொண்டுள்ளேன்.  


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-

40 கருத்துகள்:

  1. கடைசியில் எல்லாம் சுபம்.... நல்ல சிறுகதை ஐயா...

    வல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

    இன்றைய பகிர்வு முழுவதுமே வாழ்த்துகள் சொல்ல நிறைய இருக்கிறது.

    இந்த வருடத்தின் 150-ஆவது பகிர்வுக்கும், தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கப்போவதற்கும் வாழ்த்துகள்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  2. இது 2011 ஆண்டுக்கான என் 150 ஆவது பதிவு என்பதை நினைத்து மகிழ்கிறேன்.


    வாழ்த்துக்ள்..

    பதிலளிநீக்கு
  3. வல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....


    தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கப்போவதற்கும் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  4. அடுத்த தீபாவளி அனுவுக்கும் மனோவுக்கும் நிச்சயமாகத் தலை தீபாவளியாகத் தானே இருக்கும்! நாமும் அவர்களை மனதார வாழ்த்திடுவோம்!!/

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை
    கனவுகள் பலிக்கட்டும்
    தாங்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்பது
    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
    அதிக எதிர்பார்ப்பையும் தூண்டிப்போகிறது
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  6. மனசுக்குள் மத்தாப்பூவாக சிற்ப்பான மகிழ்ச்சியான நிறைவான
    பல செய்திகள்... பகிர்வுகளுக்கு
    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. ஐயா,

    தமிழ்மண நட்சத்திரமாய்த் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு உளமார்ந்த வாழ்த்துகள்!

    வல்லமை இதழில் குறுநாவல் வெளியானதற்கு நல்வாழ்த்துகள்!!

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. தீபாவளி பண்டிகைக்கேற்ற தலைப்பைக் கொடுத்ததும், முன்கூட்டியே தீர்மானித்து
    கதையை தீபாவளிக்கு முதல் நாள் முடித்ததும் தனிச்சிறப்பு.

    பதிலளிநீக்கு
  9. சரியாக தீபாவளிக்கு முதல் நாள் கொண்டு வந்து முடித்து விட்டீர்கள் ! செம பிளானிங் போல...!! :)

    இறுதியில் சுபமாக அழகாக நிறைவு செய்துவிட்டீர்கள்.

    தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்க போவதற்கு என் வாழ்த்துகள் + தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. இறுதிப் பாகம் ஒருவித அவசரத்துடன் முடிந்து விட்டது போல பிரமை. எனினும் ஹாப்பி எண்டிங். வல்லமைக்கும், தமிழ்மணத்துக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. நட்சத்திர வாழ்த்துக்களும், இனிய தீபாவளி வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  12. 'மனசுக்குள் மத்தாப்பூவின்' பிரகாசம் வர்ண ஜாலங்களாய் மிக அழகாய் இருக்கிறது!

    150 வது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!!

    வல்லமையில் இந்தக் கதை வெளியானதற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

    எல்லாவற்றுக்கும் மேலே தமிழ்மண நட்சத்திரப்பதிவர் ஆனதற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

    பதிலளிநீக்கு
  13. 150 வது பதிவு..
    தமிழ்மண நட்சத்திரம்..
    சுபமான முடிவு..

    தீபாவளி நல்வாழ்த்துகளும்..

    அன்பும் மகிழ்ச்சியும் எல்லாவற்றுக்கும்.

    பதிலளிநீக்கு
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    தமிழ்மண நட்சத்திரத்துக்கு
    பொருத்தமானவர் ஐயா நீங்கள்.
    தங்கள் பணி சிறப்புற இறைவன்
    அருள்புரியட்டும்.
    தொடர்ந்து வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  15. மூன்று பாகங்களில் இருந்த கவனம் கடைசி பாகத்தில் இல்லை, முடிவில் தமிழ் படம் பார்த்தது போல் இருந்தது...

    பதிலளிநீக்கு
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    பதிலளிநீக்கு
  17. Haha! As I rightly guessed, it was dream after all! Any way, all is well that ends well.

    Congrats and best wishes to you on Tamizh Manam selection. Well deserved.

    Happy Deepavali to you and family.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள 1)தீபாவளிக்கு
    2)நட்சத்திரப் பதிவர் தேர்வுக்கு
    3)வல்லமையில் வெளியானதுக்கு.

    பதிலளிநீக்கு
  19. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. இந்த பகுதியிலும் முதல் வரியிலேயே திருப்பம்.அருமை.
    கனவுகள் நினைவாக வாழ்த்துக்கள்.

    தங்களின் 150 வது பதிவுக்கும் தமிழ் மணம் நட்சத்திர பதிவர் அழைப்பிற்கும் வாழ்த்துக்கள்,ஐயா.

    பதிலளிநீக்கு
  22. 150 வது பதிவு..வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  23. தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவர் இந்த வாரம். எங்கள் மனத்தில் என்றோ தாங்கள் மின்னிக்கொண்டு இருக்கிறீர்கள் நட்சத்திர பதிவராக.. என்றாலும் வாழ்த்துகள் ஐயா. பூத்துக்குலுங்கி கண்ணைப் பறிக்கும் நட்சத்திரக் கூட்டங்களைக் கண்டு ரசிக்க ஆவலாய்
    வாழ்த்துகளைத் தூவிக்கொண்டு... நாங்களும்.. உங்களுட்ன்..

    பதிலளிநீக்கு
  24. இனிய நட்சத்திர, தீபாவளி நல்வாழ்த்துகள் :-)

    பதிலளிநீக்கு
  25. 150 ஆவது படைப்பிற்கும் வல்லமையில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்.தங்கள் கதையினை தற்போதுதான் படிக்க இயன்றது,தாமதமான பினூட்டத்திற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  26. நல்லவேளை நாட்டாமை கனவோடு போய்விட்டார். சார்! எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடித்து விட்டீர்கள்!.
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
    உறவுக்குக் காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
    ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    - பாடல்: கண்ணதாசன் ( படம்: இரவும் பகலும் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஐயா, வாருங்கள், வணக்கம்.

      தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது தான்.

      //உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு -
      அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு//

      சூப்பரோ சூப்பரான வரிகள்! ;)))))

      அன்புடன்
      vgk

      நீக்கு
  27. என் இந்த சிறுகதையின் நிறைவுப் பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, மிகுந்த சந்தோஷமாக என்னை உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அனைத்துத் தோழர்களுக்கும் மற்றும் தோழிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    பதிலளிநீக்கு
  28. :)....மனோ கனவுகளின் நாயகன் என்று நினைக்கின்றேன் ..:))
    மனசுக்குள் மத்தாப்பூ :)) மலர்களை மத்தாப்பாய் தூவினார்போல இருந்தது
    நான்கு பகுதிகளையும் ஒரு சேர வாசித்தேன் ..அங்கிங்கு நின்று பின்னூட்டமிட நிற்கவில்லை சுவாரஸ்யம் அடுதடுத்த பகுதிகளுக்கு தாவ வைத்தது ..

    பதிலளிநீக்கு
  29. angelin October 24, 2012 8:59 AM
    :)....மனோ கனவுகளின் நாயகன் என்று நினைக்கின்றேன் ..:))
    மனசுக்குள் மத்தாப்பூ :)) மலர்களை மத்தாப்பாய் தூவினார்போல இருந்தது.//

    வாங்கோ நிர்மலா. ரொம்பவும் சந்தோஷம் ... நிர்மலா.

    //நான்கு பகுதிகளையும் ஒரு சேர வாசித்தேன் ..அங்கிங்கு நின்று பின்னூட்டமிட நிற்கவில்லை சுவாரஸ்யம் அடுதடுத்த பகுதிகளுக்கு தாவ வைத்தது ..//

    ”ஒவ்வொரு பகுதிக்கும் பின்னூட்டமிட நேரமில்லாமல், ஆர்வத்தில் தாவித்தாவி அடுத்தடுத்த பகுதிகளையும் ஒருசேர படித்து முடித்தேன்” என தாங்கள் சொல்வது கேட்க எனக்கும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது, நிர்மலா. மிக்க நன்றி.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  30. எதுக்கெல்லாம் வாழ்த்து சொல்வதுன்னே திரியல.சந்தோஷமான முடிவு.கதை நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 19, 2015 at 2:04 PM

      //எதுக்கெல்லாம் வாழ்த்து சொல்வதுன்னே தெரியல. சந்தோஷமான முடிவு. கதை நல்லா இருக்கு//

      ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்துப் பக்கம் பக்கமா கருத்துக்கள் எழுதிவந்த பழைய பூந்தளிர் எங்கே ? :(

      எப்படியோ நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் பூந்தளிர் மீண்டும் பூத்தெழுந்து மீண்டும் வந்து, தளிராகவாவது கொஞ்சூண்டாவது, பின்னூட்ட வரிகள் எழுதி போட்டியில் கலந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

      வாழ்க !

      நீக்கு
  31. நல்ல வேளை, நான் உங்க கதையை எல்லாம் படிக்க லேட்டா வந்தேன். இல்லைன்னா உங்க சஸ்பென்ஸ் தாங்காம என் மண்டையே உடைஞ்சிருக்கும்.

    எனக்குப் பிடிச்ச மாதிரி சுப முடிவு. ஆனா அந்த கல்யாணத்தையும் முடிச்சு வெச்சிருந்தீங்கன்னா நன்னா இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  32. இதுவும் கனவா...... அடுத்த தீவாளி அவங்களுக்கு தல நீவாளிதானே. நல்ல சந்தோசமான முடிவுதா.

    பதிலளிநீக்கு
  33. மனோவின் ஒவ்வொரு கனவும் அவனுக்கு இன்டைரக்டா நடக்கப்போவதை உணர்த்தி இருக்கு. கண்டிப்பா அவர்களுக்கு அடுத்த தீபாவளி தலை தீபாவளிதான்.சந்தேகமே இல்லை.

    பதிலளிநீக்கு
  34. //மனசுக்குள் மத்தாப்பூ// இப்புடி கதைய படிக்கும் வாய்ப்பு கிடைச்சவுங்களுக்கு ....தினமும்....தினமும்....

    பதிலளிநீக்கு
  35. தீபாவளிக்குப் பொருத்தமான தலைப்பு! இனியெல்லாம் சுகமே! அருமை!

    பதிலளிநீக்கு