என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 7 ஏப்ரல், 2012

ஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]




முதல் பகுதி [ படிக்கத் தவறியவர்களுக்காக ]

எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் Accounts Clerk-cum-Typist ஆக வேலை பார்த்து வந்தேன். அந்த நிறுவனம் லாரி பஸ் போன்ற வாகனங்களுக்கு வேண்டிய உதிரி பாகங்கள் அனைத்தும் வாங்கி விற்கக்கூடிய சற்றே பெரிய வியாபார ஸ்தாபனம். 

ஃபர்கோ, லேய்லண்ட், பென்ஸ் போன்ற பல கனரக வாகனங்களுக்கு ENGINE + CHASSIS PARTS  அனைத்தும் அங்கு கொள்முதலும் வியாபாரமும் நடைபெறும். பஸ் பாடிகட்டப் பயன்படும் அலுமினிய தகடுகள், பஸ் லாரிக்குத்தேவைப்படும் பேட்டரிகள், அதிர்ச்சியைத் தாங்கிடும் [டூ வீலரில் உள்ள ஷாக் அப்சார்பருக்கு பதிலான] கனமான சற்றே வளைவான ஸ்பிரிங் பட்டைகள், பால்பேரிங்ஸ், கிராங் ஷாப்ட், சிலிண்டர் ஹெட், ஆயில் பிஸ்டன்ஸ் என ஏராளமான ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கள் வாங்கி விற்கப்படும் ஸ்தாபனம் அது. 


அது தவிர அவர்களுக்கே சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க், தேங்காய் மட்டைகளிலிருந்து நார் எடுத்து,மெத்தைகள் செய்வதும், தாம்புக் கயிறுகள் தயாரிப்பதுமாக ஒரு ஃபாக்டரி போன்ற பல துணைத்தொழில்களும் நடைபெற்று வந்தன. 
 .
அங்கு ஏற்கனவே பணியாற்றியவர்களில் 'ஜான்பேட்டா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஒருவர் உண்டு. அவரது உண்மைப்பெயர் R. பெரியண்ணன் என்பதே. இந்த ஜான்பேட்டா என்ற பெயர் எப்படி அவருக்கு வந்தது என்றே என்னால் கடைசி வரை தெரிந்து கொள்ள முடியவில்லை.  நான் அவரை முதன்முதலாக சந்திக்கும் போதே அவருக்கு சுமாராக ஒரு 45 வயது இருக்கும். 


'ஜான்பேட்டா' என்றாலே அந்தத் தெருவிலுள்ள கைவண்டிக்காரர்கள், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள் மற்றும் தெருக்குழந்தைகள் உள்பட அனைவருக்கும் அவரை அடையாளம் தெரியும். பெரியண்ணன் என்று யாராவது அழைத்தாலும், ஜான்பேட்டாவாகிய பெரியண்ணனே கூட திரும்பிப் பார்க்க மாட்டார். 


அந்த அளவுக்கு இந்த ’ஜான்பேட்டா’ என்ற பெயர் பிரபலமாக இருந்தது. எங்கள் கம்பெனி மேனேஜர் மட்டும், ‘ஜான் பேட்டா’ வுக்கு பதிலாக சற்றே செல்லமாக ‘ஜான் டப்பா’ என்று சமயத்தில் அவரை அழைப்பதுண்டு. 


”ஜான்பேட்டா” அவர்களின் தோற்றம்:

சுமார்  ஆறு அடி உயரம். 

நல்ல கருத்த நிறம். 

 நரம்புகள் தெரியும், ஒல்லியான தேகம். 

கம்பீரமான முரட்டு மீசை. 

பெரிச்சாளி போன்ற பார்வை. 

நெற்றியில் காலை நேரங்களில் மட்டும் ஒரு பெரிய குங்குமப்பொட்டு. 

அழுக்கான ஒரு நாலு முழம் வேஷ்டி. 

முழுக்கையை அரைக்கையாக மடித்து விட்ட ஒரு காக்கி சட்டை. 

சடைகள் போல வளர்ந்த அடர்த்தியான பரட்டைத் தலைமுடி, 

தலையில் வெள்ளைக்கலர் துண்டு ஒன்றால் முண்டாசுக்கட்டு. 

கால்களில் போட் [Boat] போல வளைந்த டயர் செருப்பு. 

நடை உடை பாவனையில் ஒரு தெனாவெட்டு. 

எல்லாவற்றிலுமே ஒரு அலட்சியம். 

எதற்குமே பயப்படாத ஓர் ஆசாமி.

கிட்டத்தட்ட, சமீபத்தியப் பிரபலமான சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்ற தோற்றமுடையவராக இருந்தார், அன்றே இந்த எங்கள் ’ஜான்பேட்டா’. 


R. பெரியண்ணன் என்று சம்பள நாட்களில் மட்டும், ஒட்டப்பட்ட ரெவின்யூ ஸ்டாம்பின் மேல் கையெழுத்துப் போட மட்டுமே அவருக்குத் தெரியும். அதுவும் அவர் முழுவதுமாக கையெழுத்துப் போட்டு முடிக்க ஒரு 15 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பேனாவை அடிக்கடி உதறிக்கொண்டே இருப்பார். தரையெல்லாம் ’இங்க்’ தெளிக்கப்படும். அவர் பல்லைக்கடித்துக்கொண்டு கையொப்பம் இட்ட பிறகு அந்த பேனாவின் நிப் சற்றே வளைந்திருக்கும். [அது பால்பாய்ண்ட் பேனா வராத காலம் - ஃபெளண்டைன் பேனாவில் மை ஊற்றி எழுதிய காலம்]. மற்றபடி ஜான்பேட்டாவுக்கு எழுதப்படிக்க ஏதும் தெரியாது. ஆனாலும் அவருக்கு உலக அனுபவ அறிவு அதிகம்.


கையெழுத்து மட்டும் போடுவாரே தவிர ஒரு மாதமாவது சம்பளத்தை அவர் சம்பள நாளில் வாங்கி நான் பார்த்ததே இல்லை. அவ்வப்போது நாலு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அட்வான்ஸ் ஆகவே தேவைப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்வார். 


கோபாலன் என்று ஒரு கேஷியர் அங்கு பணியாற்றி வந்தார். அவருக்கு சுத்தமாக காது கேட்காது. பலக்கக் கத்தினால் மட்டுமே ஏதோ கொஞ்சம் அவருக்குப் புரிய வரும். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். எதிலுமே பட்டுக்கொள்ள மாட்டார். அவரிடம் அவ்வப்போது போய் பணம் வேண்டி தலையைச் சொறிவார் இந்த ஜான்பேட்டா. 


ஒரு கையை குவித்துக்காட்டினால் ஐந்து ரூபாய் தேவையென்றும், இரண்டு கைகளையும் பல்ப் ஹாரன் அடிப்பதுபோல காட்டினால் பத்து ரூபாய் என்று புரிந்து கொண்டு, அந்த கேஷியர் கோபாலனே, மாதத்தில் ஒரு முறையோ இரு முறையோ, ஒரு நோட்டில் தேதி போட்டுக் குறித்துக்கொண்டு பணம் தந்து விடுவார். 


மறுமுறை அதே மாதத்தில் ஜான்பேட்டா பணம் கேட்க வரும்போது, ”மேனேஜரிடம் போய்க்கேள்” என கையைக்காட்டி விடுவார், அந்தக் கேஷியர். மாதம் ஓரிரு முறை மேனேஜரும் ஜான்பேட்டா மேல் சற்றே இரக்கப்பட்டோ அல்லது ஒருவித பயத்தினாலோ பணம் தரச்சொல்லுவார். 


அதன் பிறகு கேட்கும் போது மேனேஜரும், ”முதலாளியைப்பார்” என்று சொல்லி விட்டு ஒதுங்கிவிடுவது வழக்கம். முதலாளி தினமும் மாலை சுமார் 5 மணிக்கு கம்பெனிக்கு காரில் வந்து இறங்குவார். ஒரு மணி நேரம் மட்டுமே அங்கு கம்பெனியில் இருப்பார். பெரும்பாலான நேரங்களில் கம்பெனிக்கு வெளிப்புறமே இருக்கும் ஜான்பேட்டா, முதலாளி அவர்கள் காரை விட்டு இறங்கும் போதே, அவரைத் துரத்திக்கொண்டே கம்பெனிக்குள் உள்ளே வருவது வழக்கம். 


முதலாளியைத் துரத்திக்கொண்டே ஜான்பேட்டாவும் வருவதைப் பார்க்கும் கேஷியர், ஒரு நிமிஷம் பதட்டமாகி, பிறகு உடனே சுதாரித்துக்கொண்டு, ஜான்பேட்டா இதுவரை இந்த மாதம் எவ்வளவு முறை பணம் அட்வான்ஸ் ஆக வாங்கியுள்ளார், மொத்தம் எவ்வளவு தொகை வாங்கியுள்ளார், இன்னும் சம்பளம் போட எவ்வளவு நாட்கள் உள்ளன, அதற்குள் மீண்டும் இவர் எவ்வளவு முறை பணம் கேட்டுத் தொல்லை கொடுப்பார் போன்ற புள்ளிவிபரங்களுடன், முதலாளியிடம் தானும் செல்வார்.


முதலாளியும் ஜான் பேட்டா மேல் இரக்க சுபாவம் உடையவர் தான். “என்னப்பா நீ அடிக்கடி இப்படிப் பணம் கேட்டுத் தொல்லை கொடுக்கிறாய்; ஒருவழியாக ஒண்ணாம் தேதி முழுச்சம்பளமாக வாங்கிக்கொள்ள மாட்டாயா” என்று லேசாகக் கடிந்து கொள்வார். அதற்கு ஜான்பேட்டா சிரித்தபடியே தலையைச் சொரிந்து கொள்வார். 


கடைசியில் ”அவன் கேட்பதைக்கொடுப்பா” என்று முதலாளி ஸ்பெஷல் சாங்ஷன் ஆர்டரை, கைஜாடையாகவே அளித்து விடுவார். 


ஜான்பேட்டா கேஷியரை ஒரு அலட்சியப்பார்வை பார்த்துவிட்டு, அவர் தரும் பணத்தை வெகு அலட்சியமாக வாங்கிக்கொண்டு ஒருவித வெற்றிப்புன்னகையுடன் வெளியேறி விடுவார்.  இது மாதாமாதம் அவ்வப்போது நடக்கும் ஒரு மிகச்சாதாரண நிகழ்ச்சியே.


பணம் கைக்குக்கிடைத்ததும் ஜான்பேட்டா நேராக அங்குள்ள பெட்டிக்கடையில் ஒரு கட்டு பீடியை வாங்கிகொண்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு, அந்த காலக்கட்டத்தில் அங்கிருந்த நாயர் டீக்கடைக்கு, ஸ்பெஷல் டீ ஆர்டர் செய்யச் சென்றிடுவார். இந்த டீக்கடை நாயரைப்பற்றி தனியே ஒரு கேரக்டர் பதிவே எழுதலாம். அவ்வளவு சுவாரஸ்யமான ஆசாமி தான் என்னைப்பொருத்தவரை அவரும்.


இந்த ’ஜான்பேட்டா’வுக்கு வீடோ வாசலோ, பெற்றோர்களோ, மனைவியோ, குழந்தைகுட்டிகளோ, உறவினர்களோ இருந்ததாக எங்கள் யாருக்குமே ஒன்றுமே தெரியாது. வருஷத்தின் 365 நாட்களும், இரவு நேரங்களிலும், ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் அவர் தங்குவது எங்கள் கம்பெனியை ஒட்டியுள்ள ஒரு பகுதியில் தான். அந்தப்பகுதியின் மேலே தகரக்கூரை வேயப்பட்டிருக்கும்.. 


அந்த தகர ஷெட்டிலேயே தான் கம்பெனியில் விற்கப்படும் பேட்டரிகள், ஆஸிட் ஜாடிகள், அலுமினிய தகடுகள், ஸ்ப்ரிங் பட்டைகள் என என்னவெல்லாமோ அடசல்கள் பூராவும் அடுக்கப்பட்டிருக்கும். அதன் நடுவே, ஒரு இத்துப்போன கயிற்றுக்கட்டில், ஒரு விசிறி, ஒரு அழுக்குத் தலையணி, ஒரு கருப்புக் கம்பளி போர்வை இதனுடனேயே ஜான்பேட்டா இரவில் படுத்திருப்பார். 


ஆடையோ கோடையோ, குளிரோ, மழையோ, பனியோ எதையும் பொருட்படுத்தாத சரீரம் அவருக்கு. வாசலில் பெயருக்கு ஒரு தகர கேட் இருக்கும். அதை ஒரு ஒப்புக்காக, ஒரு நாய்க்கழுத்து இரும்புச் சங்கிலியுடன் கூடிய ஒரு மிகச்சிறிய பூட்டைப் போட்டு பூட்டி விட்டு தான், எங்காவது வெளியே புறப்படுவார்.


அவருக்கு என்ன தான் அந்தக்கம்பெனியில் வேலை என்கிறீர்களா? அது ஒன்றும் சரியாகப் பட்டியலிடவே முடியாதது. ஒரு வேலையும் செய்யாதவர் போலத்தான் பகல் நேரங்களில்  அருகிலுள்ள பீடிக்கடையிலும், டீக்கடையிலும் நின்று கொண்டிருப்பார்.  ஆனால் அவருக்கான வேலைகள் ஏராளமாகவே உண்டு.


கம்பெனியை கூட்டிப் பெருக்குவதிலிருந்து, பானையில் குடிதண்ணீர் பிடித்து வைப்பதிலிருந்து, கம்பெனிக்குள் சுற்றும் எலி, பெருச்சாளி, மரப்பல்லி, கரப்பான்பூச்சிகளை அடித்து வெளியேற்றுவதிலிருந்து, ஒட்டடை அடிப்பதிலிருந்து எல்லாமே அவர் வேலைகளே. அந்தக்கம்பெனிக்கு வாட்ச்மேனும் அவரே. வெளி வேலைகளுக்குச் செல்வதும் அவரே. மொத்தத்தில் ஆல்-இன்-ஆல் அழகிரி ஜான்பேட்டாவே. ஒரேயடியாக ஓர் எடுபிடி ஆசாமி என்றும் அவரைச் சொல்லிவிட முடியாது. 


அங்கு கம்பெனிக்குச் சற்றே தள்ளி அமைந்திருந்த டீக்கடை வாசலில் தான் பீடியும் கையுமாக எப்போது நின்றிருப்பார். “ஜான்பேட்டா உன்னை மேனேஜர் கூப்பிடுகிறார்” என்று நாங்கள் யாராவது போய் வெற்றிலை பாக்கு வைத்து, சமயத்தில் அழைத்து வரும்படியாகவும் இருக்கும். 


அலட்சியமாக பீடியை ஒரு இழுப்பு இழுத்து புகை விட்டுக்கொண்டே “போப்பா ..... வரேன்னு சொல்லு” என்பார். ஆனால் லேசில் வரவும் மாட்டார். 


இரண்டாம் பகுதி



தொடர்ச்சி [ பகுதி 2 of 2 ] இப்போது:

காசு கொடுத்து கஷ்டப்பட்டு வாங்கிய பீடியை இறுதி வரை இழுத்து இன்பம் கண்டுவிட்டு, டீயை ருசித்துக் குடித்துவிட்டு பிறகல்லவோ அவர் வருவார்! 

உள்ளே ஜான்பேட்டா அவர்கள் வந்ததும் மேனேஜரை முறைத்தபடி, தலையை உயர்த்தி ஒரு பார்வை மட்டும் பார்ப்பார். அதற்குள் எதற்காக இவனைக் கூப்பிட்டோம் என்பதே மேனேஜருக்கு மறந்தே போய்விடும். மேனேஜர் சற்றே ஆழ்ந்து யோசிப்பதற்குள் ஜான்பேட்டா மீண்டும் எஸ்கேப் ஆகிவிடுவதும் நிகழும்.

ஜான்பேட்டா தான், சீனியர் மோஸ்ட் ஊழியர். முதலாளி அவர்களால் நெரிடையாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர். முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். மற்ற நாங்கள் எல்லோரும் மேனேஜர் உள்பட ஜான்பேட்டாவைப் பொருத்தவரை ஜூனியர்ஸ். நேற்று வந்த பொடிப்பயல்கள் என்ற ஓர் அலட்சிய மனோபாவம் அவருக்கு உண்டு.  

லாரி மற்றும் ரெயில்வே பார்ஸல் ஆபீஸ்களுக்குச் சென்று பார்ஸலில் வரும் சாமான்களை LR / RR கொடுத்து எடுத்து வருவது, மரப்பெட்டிகளில் வரும் அவற்றை கம்பெனிக்கு வந்ததும் உடைப்பது, அதில் உள்ள பொருட்களை எங்கு அடுக்கச்சொல்கிறோமோ அங்கு அடுக்குவது, புது பேட்டரிகளுக்கு ஆஸிட் + டிஸ்டில்டு வாட்டர் ஊற்றி சார்ஜ் செய்வது, சாமான்களை வண்டியில் ஏற்றுவது இறக்குவது, சாமான்களை அழகாக வேகமாகப் பேக்கிங் செய்து, வரும் கஸ்டமர்களின் வண்டியில் ஏற்றிவிட்டு, அவர்கள் கொடுக்கும் சிறு சில்லரை நாணயங்களை, தன் மடித்துவிட்ட முழுக்கைச் சட்டையின் அரைக்கை மடிப்புக்குள் பர்ஸ் போலத் திணித்துக்கொள்வது, பேங்குக்குப்போய் பணம் எடுத்தல், பணம் கட்டுதல் போன்ற பல வேலைகளை அவர் தான் பொறுப்பாகச் செய்து வந்தார்.  

அவரின் உபயோகத்திற்கு என்றே கம்பெனியில் கொடுக்கப்பட்ட ஒரு பாடாவதி சைக்கிள் உண்டு. அதில் உட்காரும் இடமெல்லாம் பிஞ்சுபோய் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். அவரைத்தவிர அந்த சைக்கிளை நாங்கள் யாருமே ஓட்ட முடியாது. அவ்வளவு பாடாவதி நிலைமையில் இருக்கும் அந்த சைக்கிள். 

அந்த சைக்கிள் இல்லாமல் தனியாக ஜான்பேட்டாவை எங்கும் மற்ற தெருக்களில் பார்க்கவே முடியாது. அந்த பாடாவதி சைக்கிளில் பட்டும் படாததுமாக உட்கார்ந்து ஓட்டிச்செல்வது அவரது ஸ்டைல். அந்த சைக்கிளில் பெல்லும் இருக்காது, பிரேக்கும் இருக்காது. சடர்ன் ப்ரேக்குக்கு பதிலாக, தன் டயர் செருப்புக் கால்களைத் தரையில் தேய்த்து, ஊன்றி நிறுத்தி விடும் சாமர்த்தியம் உண்டு அவருக்கு..

விடியற்காலை எழுந்து, படுக்கை+போர்வை+தலையணியை சுருட்டி ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, கயிற்றுக்கட்டிலையும் மடக்கிப்போட்டு விட்டு, பல்பொடி சோப்புகள் சகிதம், அந்தப் பாடாவதி சைக்கிளில் காவிரிக்குச்சென்று, குளித்துவிட்டு, துணிமணிகளையும் சோப்புப்போட்டு கசக்கிப் பிழிந்து எடுத்து வந்து கம்பெனியிலேயே ஒரு ஓரமாக அவர் கட்டியுள்ள கொடியில் காயப்போட்டு விடுவார்.  ஏற்கனவே அங்கு முதல் நாள் உலர்த்திய துணிகளை ஓர் உதறு உதறிவிட்டு அணிந்து கொள்வார்.

பெண்கள் போல சற்று நீண்ட முடி வளர்த்திருப்பார். அதைத் தன் கைகளால் உலாத்தியபடியும், ஆலம் விழுதுகள் போலத் தொங்கவிட்ட தன் முடிகளைத் துண்டினால் தட்டியபடியும் வெய்யிலில் சற்று நேரம் நின்றபடியும் காயவைப்பார். பிறகு அதை அள்ளி முடிந்து கொண்டு, அதன்மேல் ஓர் முண்டாசும் கட்டிக்கொண்டு, நெற்றியில் குங்குமப்பொட்டு சற்றே பெரிதாக வைத்துக்கொண்டு, காலை நாஸ்தா செய்துவிட்டு, பீடி குடித்து விட்டு, டீ ஒன்றை உள்ளுக்குள் செலுத்தி விட்டாரானால், அவர் அன்றாடப் பணிகளுக்குத் தயார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.  

டாண் என்று பத்து மணிக்கு பேங்க் வேலைகளுக்குப் புறப்பட ரெடியாகி விடுவார். ரூபாய் ஐயாயிரம் முதல் ரூபாய் ஐம்பதாயிரம் வரை பணம் கட்டவோ எடுக்கவோ வேண்டியிருக்கும். [இன்றைய மதிப்பில் ரூபாய் அரை லக்ஷம் முதல் ஐந்து லக்ஷம் வரை என்று வைத்துக்கொள்ளலாம்] . பேங்குக்குப் போகும்போது கையில் எந்த ஒரு பையும் எடுத்துப்போக விரும்ப மாட்டார். 

“பணம் ஜாக்கிரதை, ஜான்பேட்டா” என்று மேனேஜரோ, கேஷியரோ, நாங்களோ சொன்னால் அவருக்கு அசாத்யக் கோபம் வந்து விடும். மீசையை முறுக்கியபடி எங்களை ஏளனமாக ஒரு பார்வை பார்ப்பார், சுண்டைக்காய்ப் பணம்; இதுக்கு தனியாக ஒரு பை வேறா வேண்டும்! என்பது போல .  

எவ்வளவு பணமாக இருந்தாலும் [இப்போது போல 1000, 500 நோட்டுக்கள் அப்போது கிடையாது 100 ரூபாய் தான் அன்று மிகப்பெரிய நோட்டு ] தன் நாலு முழ வேஷ்டியின் தலைப்பில் அப்படியே மடித்து வைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவார். வேஷ்டி அவிழாமல் நழுவாமல் இருக்க பட்டையான பச்சைக்கலர் பெல்ட் ஒன்றும் அணிந்திருப்பார். 

பேங்குக்குப்போய் விட்டு வெற்றிகரமாக வேலைகளை முடித்துக்கொண்டு ஜான்பேட்டா நல்லபடியாக திரும்பி வரும்வரை கேஷியருக்கு திக்திக்கென்று இருக்கும்.  Pay-in-Slip எழுதி பூர்த்தி செய்யப்பட்ட தாள்கள் அடங்கிய புத்தகமும், இதர காசோலை வரைவோலை போன்றவைகளையும், சைக்கிள் கேரியரில் பறக்காமல் இருக்க கிளிப் போட்டு வைத்துக்கொள்வார். மழைநாட்களில் மட்டும் அவற்றை ஒரு ப்ளாஸ்டிக் போன்ற பையில் அள்ளிப்போட்டுக்கொண்டு, சைக்கிள் கேரியரில் சொருகிக்கொள்வார்.

ஜான்பேட்டாவிடம் இதுபோன்ற பேங்க் வேலைகள் எல்லாவற்றையும்  ஒப்படைத்தபின்,அவரும் பேங்குக்குக் கிளம்பியபின், என்னிடம் அந்தக்கேஷியர் இதுபற்றி புலம்பிக்கொண்டிருப்பார்.


”அவன் மிகவும் நல்லவன் தான். நாணயமானவன் தான். சாமர்த்தியமான ஆசாமி தான். இருந்தாலும் பண விஷயம் ஹேண்ட்பேக் போன்ற எதுவும் எடுத்துச்செல்லாமல், வேஷ்டித்தலைப்பில் இவ்வளவு பணத்தையும் முடிந்து கொண்டு, அந்த பெல்லும் பிரேக்கும் இல்லாத பாடாவதி சைக்கிளில் செல்கிறான். சொன்ன பேச்சே கேட்பதில்லை” என என்னிடம் புலம்புவார்.


oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


ஒருமுறை ஜான்பேட்டாவுக்கும் எங்கள் கம்பெனியின் மேனேஜருக்கும் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பாஷணை:


மேனேஜர்: 


ஜான்பேட்டா! [AIR PARCEL] ஏர் பார்ஸலில் ஒரு பொருள் மதராஸிலிருந்து வந்துள்ளது. நீ போய் உடனே அதை எடுத்து வரவேண்டும். 


கஸ்டமர் அந்தப்பொருளுக்காக வெயிட் செய்து கொண்டிருக்கிறார். 


ஏர் பார்ஸல் எடுக்கும் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?


ஜான்பேட்டா:  ஏன் தெரியாது?


மேனேஜர்: 


’உனக்கு ஏன் தெரியாது’ என்று எனக்குத் தெரியாது. 


உனக்கு அந்த ஆபீஸ் உள்ள இடம் தெரியுமா, தெரியாதா என்று பளிச்சென்று தெளிவாகச் சொல்லு.


ஜான்பேட்டா: [மேனேஜரை முறைத்துப்பார்த்தபடி] 


அதற்கான சீட்டையும் பணத்தையும் கொடுங்க, போய் வாங்கி வருகிறேனே இல்லையா என்று பாருங்க, சும்மா அனாவஸ்யக் கேள்விகளையெல்லாம் என்னிடம் கேட்காதீங்க!


oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


பொதுவான ஒருசில தகவல்கள்:


அந்தக்காலக்கட்டத்தில் அதாவது 1970 வரை லேண்ட்லைன் டெலிஃபோன் வைத்திருந்தவர்களே மிகவும் குறைவு. 


அதுவும் அதில் ஆட்டோமேடிக் டயலிங் வசதி ஏதும் கிடையாது.  டயல் செய்யும் இடம் நம்பர் ஏதும் இல்லாமல் சப்பையாகவே இருக்கும். 


ரிஸீவரை கையில் நாம் எடுத்து காதில் வைத்துக்கொண்டதும், கொர்..ர்..ர்..ர் என்று டயல் டோன் மட்டும் கேட்கும். அதே சமயம் தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றும் ஒரு பெண்மணி, ‘நம்பர் ப்ளீஸ்’ என்று நம்மிடம் இனிமையாகக் கேட்பார். நாம் தொடர்பு கொள்ள வேண்டிய மூன்று இலக்க எண்ணை அவர்களிடம் கூற வேண்டும். 


உடனே ’பி.பி காலா’ ’ஜெனரல் காலா’ என்று கேட்பார்கள். [PP Call என்றால் PARTICULAR PERSON உடன் மட்டும் நாம் பேச வேண்டும் என்ற நமது விருப்பத்தைத் தெரிவிப்பது. GENERAL CALL என்றால் அந்த நம்பரில் யாரிடம் வேண்டுமானாலும் நாம் பேசத் தயார் என்பது]   


அப்போதெல்லாம் திருச்சி போன்ற பெரிய நகரங்களுக்குக்கூட 3 இலக்க தொலைபேசி நம்பர்கள் மட்டுமே இருந்தன. 


அதாவது திருச்சி போன்ற பெருநகரத்திலேயே மொத்தம் அதிகபட்சமாக 999 பேர்களுக்கு மேல் லேண்ட் லைன் இணைப்பு கேட்க மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.


நாம் தொலைபேசி இணைப்பகத்திலிருந்து தொடர்பு கொண்ட பெண்மணியிடம் நமக்குத் தேவையான நம்பர் கொடுத்தவுடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு, டெலிஃபோன் அருகிலேயே தவமாய்த் தவமிருக்க வேண்டும். 


மீண்டும் நமக்கு தொலைபேசி இணைப்பகத்திலிருந்து அழைப்பு வரும். நாம் கேட்ட நம்பருடன் நமக்கு இணைப்புத் தருவார்கள். பிறகு தான் நாம் பேசவே முடியும். 


அதுவும் மழை பேய்க்காற்று போன்ற சமயங்களில் இந்த டெலிஃபோன் பலநாட்கள் வேலை செய்யாது. உடல் நிலை சரியில்லாமல் நீண்ட ஓய்வு எடுத்துக்கொள்ளும்.


உள்ளூர் இணைப்புகளுக்கே இவ்வளவு தொல்லைகள். வெளியூர் வெளிநாடு இணைப்புகள் தேவையென்றால், நாம் செத்தோம். மணிக்கணக்காக, நாள் கணக்காகத் தவமாய்த் தவமிருக்க வேண்டியிருக்கும். வேறு எந்த வேலையும் பார்க்கவே முடியாது. 


இன்று இந்த செல்ஃபோன் மூலம் உலகமே நம் கையில் அடங்கியுள்ளது. உலகில் எந்த மூலையில் யார் இருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும், அடுத்த நொடிப்பொழுதில் மிகச் சுலபமாகப் பேசி விட முடிகிறது.  இத்தைகைய இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை நாம் கையெடுத்துக் கும்பிடத்தான் வேண்டும்.


இதை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஜான்பேட்டாவை வெளியே ஏர்பார்ஸல் வாங்கிவர ஒருவழியாக அனுப்பிவிட்டால், அவரை பிறகு தொடர்பு கொள்ளவே முடியாது, என்பது அன்றைய சூழ்நிலை. 


அவர் அந்த ஏர்பார்ஸல் ஆபீஸுக்கு நல்லபடியாகப் போய்ச்சேர்ந்தாரா? அந்த ஏர் பார்ஸலை வாங்கி விட்டாரா? எப்போது அந்த பார்ஸல் நம் கம்பெனிக்கு வந்து சேரும்? அதுவரை அந்தப்பொருளுக்காகவே காத்துக்கிடக்கும் நம் கஸ்டமருக்கு என்ன பதில் சொல்வது? என பல கவலைகள் அந்த எங்கள் மேனேஜருக்கு.


இது போன்ற அவசரச் சூழ்நிலைகளில் ‘ஜான்பேட்டா’ போன்ற தெனாவெட்டு ஆசாமிகளின் பதில் யாருக்குமே ஒருவித எரிச்சலைத்தானே தரும்! 


ஜான்பேட்டாவிடம் பேசி வேலை வாங்குவதற்கு மிகவும் பொறுமை வேண்டும். அந்தப்பொறுமை மிகவும் இருந்தது அந்த எங்கள் மேனேஜர் வெங்கட்ரமணி அவர்களுக்கு. 


அந்த வெங்கட்ரமணி என்னும் மேனேஜரை சமீபத்தில் கடைத்தெருவில் சந்தித்தேன். வயது 85. இப்போதும் மிகவும் பொறுமையாகவே [காதில் மெஷின் வைத்தபடி] மெதுவாக கூனியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.  
     
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

இந்த ஜான்பேட்டாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். விற்கும் பொருட்களை அழகாக Packing செய்வது எப்படி என்பதை நானே என் ஆர்வத்தில் அவர் செய்வதை அருகில் இருந்து பார்த்துக் கற்றுக்கொண்டேன். 

இன்றைக்கும் என் வீட்டில் என் மகன்கள் மருமகள்கள் போன்றவர்கள் வெளியூர் வெளிநாடு செல்லும் போது பலபொருட்களை என்னிடம் ஒப்படைத்து ஊர் போய்ச்சேரும் வரை  சிந்தாமல் சிதறாமல் அழகாக Packing செய்து தரச்சொல்லி சொல்வதுண்டு. 

நானும் என்றோ நானாக விருப்பப்பட்டு ஜான்பேட்டாவிடம் கற்ற தொழில்நுட்பத்தாலும், எனக்கே உள்ள ஆர்வத்தாலும் அவற்றை அழகாக Pack செய்து தருவதுண்டு. [உதாரணமாக இட்லி, தோசை, சட்னி, எண்ணெயில் குழைத்த தோசைமிளகாய்ப்பொடி, தயிர் சாதம், புளியஞ்சாதம், பொரித்த வடாம், சாம்பார்பொடி, ஊறுகாய்கள் முதலியன சிந்தாமல் சிதறாமல் உடையாமல் மற்ற பொருட்களின் மேல் அப்பி கறை படுத்திவிடாமல் இருக்க வேண்டும் அல்லவா] இப்போதெல்லாம் மிகச்சுலபமாக Aluminium foil டப்பாக்கள் வந்து விட்டன. உணவுப் பதார்த்தங்களை Packing செய்வதும் மிகச்சுலபமாகி விட்டது. 


அப்போதெல்லாம், செய்தித்தாள்கள், இலைகள், சணல் கயிறு முதலியவற்றால் தான் அழகாக சிந்தாமல் சிதறாமல் ஒழுகாமல் கட்டும்படியான நிலைமை இருந்தது. 

முன்பெல்லாம் மளிகைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, பேப்பர் பைகளில் போட்டு மடித்து, சணல் போட்டுக் கட்டித்தருவார்கள் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த சணலை தேவையான அளவுக்கு எடுத்துக்கொண்டு, லேசாக கையால் திரித்து சுலபமாக கத்தரித்து விடுவார்கள் என்பதையும் உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். அது ஒற்றைப்பரி சணல் எனப்படும். அதை சுலபமாகக் கையால் திரித்து வெட்டிவிட இயலும். 

அதுவே மூன்றாகவோ அல்லது ஐந்தாகவோ திரிக்கப்பட்டிருந்தால் கெட்டிச் சணல் கயிறு என்று அழைக்கப்படும். அதை கத்தியோ ப்ளேடோ இல்லாமல் கையால் யாராலும் அறுத்துவிட முடியாது.  

ஆனால் அத்தகைய கெட்டியான 3 பரி அல்லது 5 பரிச் சணலையும், என்னால் இன்றும் கத்தியோ ப்ளேடோ இல்லாமல், வெறும் கையால் அறுத்துவிட முடியும். 

இதுவும் ஜான்பேட்டா அவர்களிடமிருந்து நானே OUT OF MY OWN INTEREST, VOLUNTARY யாகக் கற்றுக்கொண்ட டெக்னிக். 


இப்போது நான் அதுபோன்ற கெட்டிக் கயிறுகளை அவ்வாறு கத்தியின்றி கையாலேயே அறுக்கும் போது பலரும் பார்த்து வியந்து போய் பாராட்டுவார்கள். 


”எப்படி அது எப்படி?” என சிலர் என்னிடமிருந்து தெரிந்து கொள்ளவும் முயற்சிப்பார்கள். அதுபோன்ற சமயங்களில் என் குருநாதராகிய ஜான்பேட்டாவை நான் நினைத்துக்கொள்வதுண்டு. 


அதை மிகவும் கவனமாகப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கயிறு அறுகுமோ அறுகாதோ, உள்ளங்கையை கத்திபோல அறுத்துவிடும் ஆபத்து அதில் உள்ளது.



ஒருமுறை நாங்கள் குடியிருந்த வீட்டின் குறுகிய வாசல் திண்ணையில் மிகப்பெரிய ஆட்டுக்கல்லும் குழவியும் வைத்திருந்தோம். அந்தத் திண்ணை 2 அடி உயரம் + 2 அடி அகலம் + 5 அடி நீளம் உள்ளது. அந்த மாவரைக்கும் மிகப்பெரிய ஆட்டுக்கல்லும் 2 அடி உயரம் 2 அடி நீளம் 2 அடி அகலம் உள்ளது. ஒரு கெட்டியான ஜீனிச்சாக்கில் அந்த மிகப்பெரிய ஆட்டுக்க்ல்லை வைத்து 6  முரட்டு ஆசாமிகளாக சேர்ந்து ’ஏலேலோ ஐலஸா’ போட்டு கொண்டுவரப்பட்டு, எங்கள் வீட்டு வாசல் திண்ணையில் வைக்கப்பட்ட ஆட்டுக்கல் அது. 

அது திண்ணையில் இருந்ததால் இட்லி தோசைக்கு மாவு அரைக்க மிகவும் கஷ்டமாகவே இருந்தது.   திண்ணையில் உட்கார்ந்தும் அரைக்க முடியாமல், நின்றுகொண்டும் அரைக்க முடியாமல், அதுவும் மழைகாலங்களில் மிகவும் கஷ்டமாக இருந்ததால், அதை வீட்டுக்குள் கொண்டுபோய் ஒரு ஓரமாக பூமியில் பள்ளம் பறித்து, ஆட்டுக்கல்லின் பெரும்பகுதியை பள்ளத்தில் இறக்கிவிட முடிவு செய்தோம். 

அவ்வாறு பூமியில் குழிபறித்து ஆட்டுக்கல்லை ஒண்ணேமுக்கால் அடிக்கு கீழே இறக்கிவிட்டால் தான், அதன் 2 அடி உயரம் வெறும் 3 அங்குலமாகக் குறையும். அதன் அருகே தரையில் அமர்ந்து மாவு அரைக்க வீட்டுப்பெண்மணிகளுக்குக் கஷ்டமில்லாமலும் இருக்கும் என்பதால் அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது.   [இப்போது போல கிரைண்டர், மிக்ஸி எல்லாம் வராத காலம் அது; அம்மி, ஆட்டுக்கல், குழவிகள் போன்றவைகளே பயன் படுத்தப்பட்டு வந்த காலம் அது ]  

நான் 1970 லேயே அந்த ஆட்டோமொபைல்ஸ் கம்பெனியிலிருந்து விலகி விட்டிருந்தேன்.  1974 இல் ”இந்த ஆட்டுக்கல்லை நகர்த்த தகுந்த ஆட்களை உங்களுடன் கூட்டி வந்து உதவிசெய்ய முடியுமா” என ஜான்பேட்டாவை நேரில் போய் சந்தித்துக் கேட்டேன். 


ஜான்பேட்டா அவர்கள், உடனே புறப்பட்டு என்னுடன் என் வீட்டுக்கு வந்தார். ஆட்டுக் கல்லைப் பார்வை இட்டார். ”இதை எங்கே போட வேண்டும்?” எனக் கேட்டார். நாங்கள் அந்த ஆட்டுக்கல்லைப் போட வேண்டிய இடத்தை அவருக்குக் காட்டினோம். 

”போய் உதவிக்கு ஆட்களைக் கூட்டி வாருங்கள்” என்றேன் ஜான்பேட்டாவிடம். 

“இந்த ஒரு ஆட்டுக்கல்லை நகர்த்த ஒன்பது ஆட்களாக வேண்டும்?” என்றார். 

”நானும் நீங்களும் மட்டுமே நகர்த்திப் போட்டுவிட முடியுமா என்ன?”
 என்று கேட்டேன். 

“கெட்டிச்சாக்கு இரண்டு கொண்டுவந்து கொடுத்துவிட்டு நீயும் நகரந்து போய் நில்லப்பா” என்றார். 

சாக்கை கீழே மெத்தென்று விரித்து விட்டு, அந்த மிகப்பெரிய ஆட்டுக்கல்லை தான் ஒரே ஆளாக நகர்த்தி, அந்தத்திண்ணையிலிருந்து கீழே தள்ளி விட்டார். பிறகு அதை அப்படியே உருட்டிப்போய் உள்ளேயும் போட்டு விட்டார். எனக்கும் என் அப்பாவுக்கும், தனி ஒரு ஆளாகவே செய்த ஜான்பேட்டாவின் இந்த தீரச்செயல் ஒரே ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தது. 

குடிக்கத்தண்ணீர் கொடுத்துவிட்டு ஏதோ ஒரு ஐந்து ரூபாயோ என்னவோ பணம் கொடுத்தோம். ஜான்பேட்டா அவர்கள் முதலில் அந்தப்பணத்தை வாங்க மறுத்தார். பிறகு என் அப்பா வற்புருத்திய பிறகு, ”பெரியவர் கொடுப்பதால் வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி, அந்தப்பணத்தை வாங்கிக் கண்ணில் ஒத்திக்கொண்டு, முழங்கை அருகே இருந்த சட்டை மடிப்பில் சொருகிக்கொண்டு போனார். அதன் பிறகு பல்லாண்டுகள் நான் ‘ஜான்பேட்டா’ வை நேரில் சந்திக்கவே வாய்ப்பு அமையவில்லை.

அதன் பிறகு 1975 இல் என் தந்தை காலமானார். 1981 இல் நான் திருச்சி டவுனிலிருந்து BHEL Quarters க்கு குடிமாறிச் செல்ல நேர்ந்தது. அங்கேயே ஒரு 20 வருடங்கள் [1981 முதல் 2000 வரை] இருக்கும்படி நேர்ந்து விட்டது.  

இதற்கிடையில், நான் BHEL Quarters இல் குடியிருந்த காலக்கட்டத்தில் ஜான்பேட்டா இறந்து போய் இருக்கிறார். அன்று ஜான்பேட்டவுடன் சேர்ந்து நான் வேலை பார்த்த நிறுவனத்தின் முதலாளியும் அதன்பின் காலமாகி விட்டாராம்.  அந்தக்கம்பெனியும் பிறகு சரிவர திட்டமிட்டு நடத்த ஆள் இல்லாமல் மூடப்பட்டு விட்டதாம்.    

ஜான்பேட்டா இறந்த விஷயம் எனக்கு அப்போது யாருமே தெரியப்படுத்தவில்லை. அதில் எனக்கு மிகவும் வருத்தமே. 

ஜான்பேட்டாவுக்குச் சொந்தமான யாரோ மாமனோ மச்சானோ ஓரிருவர் மட்டும் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் என்ற ஊரிலிருந்து வந்து, திருச்சியிலேயே அவரை நல்லடக்கம் செய்ததாக பிறகு ஒருநாள் நான் வேறொருவர் மூலம் கேள்விப்பட்டேன். 

இருப்பினும் அந்த 'ஜான்பேட்டா' என் நினைவலைகளில் இன்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் என்பதே உண்மை.   


ooooooooooooooo

48 கருத்துகள்:

  1. அழகா சொல்லிடீங்க-
    உங்கள் அனுபவத்தை!

    ஜான் பேட்டா -
    மனதில் வலியை-
    போட்டார்!

    பதிலளிநீக்கு
  2. VGK அவர்களுக்கு வணக்கம்! முப்பத்திரண்டு பதுமைக் கதைகளில் (விக்கிரமாதித்தன் கதைகள்) கதைக்குள் கதை வருவது போல், அந்த காலத்து டெலிபோன், பார்சல் பேக்கிங், பழைய ஆட்டுக்கல் சமாச்சாரங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யம். கடைசியில் ஜான் பேட்டா இறந்த செய்தி மனதுக்கு நெருடல்தான்.

    பதிலளிநீக்கு
  3. அனுபவத்துக்குள் பல பாடங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும் முழுவதும் படித்தேன். ஜான் பேட்டா ஒரு சுவாரஸ்யமான கேரக்டர். இதில் சிறு பகுதியாக டயல் செய்யும் நம்பர்கள் இல்லாத லேன்ட்லைன் ஃபோன் பற்றியும்!

      இதே ஃபோன் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் எழுதியிருந்த 'அந்த மாலையில்' பதிவைப் படித்திருப்பீர்கள்!

      நீக்கு
    2. ஸ்ரீராம். February 11, 2016 at 3:32 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      //மறுபடியும் முழுவதும் படித்தேன். ஜான் பேட்டா ஒரு சுவாரஸ்யமான கேரக்டர்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      //இதில் சிறு பகுதியாக டயல் செய்யும் நம்பர்கள் இல்லாத லேன்ட்லைன் ஃபோன் பற்றியும்!//

      ஆம். அவை நான் 1970 வரை, என் 20 வயதுவரை அனுபவித்தவை என்பதால் பகிர்ந்துகொண்டேன்.

      //இதே ஃபோன் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் எழுதியிருந்த 'அந்த மாலையில்' பதிவைப் படித்திருப்பீர்கள்!//

      ஞாபகம் இல்லை. போய்ப்பார்க்கிறேன், ஸ்ரீராம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  4. இந்த ஜான்பேட்டாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். விற்கும் பொருட்களை அழகாக Packing செய்வது எப்படி என்பதை நானே என் ஆர்வத்தில் அவர் செய்வதை அருகில் இருந்து பார்த்துக் கற்றுக்கொண்டேன்.//

    கற்றல் எப்போதும் , எங்கும் நடந்து கொண்டே இருக்கிறது உங்களுக்கு சார்.

    நல்ல அனுபவங்கள், அந்தக்கால பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.

    ஜான் பேட்டா இறந்து விட்டதாய் நினைக்க முடியவில்லை. உங்கள் நினைவில் வாழ்கிறார்.
    இப்போது எங்கள் நினைவிலும்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் அறிந்த ஜான் பேட்டாவை எங்கள் அனைவர மனதிலும் ஆழமாக விதைத்து விட்டீர்கள்.

    நிகழ்வுகளை வெகு சுவாரஸ்யம் பட அருகில் இருந்து பாரப்பதைப்போல் உணர்வு மிளிர எழுதிய உங்கள் எழுத்துப்புலமையை எண்ணி வியக்கிறேன்.வாழ்த்துக்கள் வி ஜி கே சார்.

    பதிலளிநீக்கு
  6. அழகா சொல்லிடீங்க-
    உங்கள் அனுபவத்தை!

    ஜான் பேட்டா -
    மனதில் வலியை-
    போட்டார்!

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான்! மறக்க முடியாத பழைய நினைவுகளில் நிறைய பாடங்களும் உண்டு. உங்கள் அனுபவங்களையும் அவற்றில் கற்றுக்கொண்ட பாடங்களையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!‌

    பதிலளிநீக்கு
  8. ஜான் பேட்டா என்ற நபரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை எங்களுக்கும் அழகாகச் சொல்லி இருக்கீங்க!

    மறக்க முடியாத மனிதர்களில் இவரும் ஒருவர் ஆகிப்போனார்!

    பதிலளிநீக்கு
  9. ”ஜான் பேட்டா”, வை.கோ சார் மிகவும் ரசித்து வாசித்தேன்.பெரியண்ணன் என்ற ஜான் பேட்டாவை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.சார் அந்த சணலை நீங்கள் எப்படி கையால் அறுத்தெடுப்பீர்கள் ஆச்சரியம்,தையல் நூலை அறுக்கவே கத்திரி தேடும் ஆட்கள் நாங்கள்.மிக நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. நல்ல வர்ணனை. மனதைத் தொட்டு வருடியது.

    பதிலளிநீக்கு
  11. சார் அருமையாக ஜான்டப்பாவை (சே எனக்கும் அப்படியே வருகிறது) எழுதியுள்ளீர்கள். அந்தக்கால நினைவுகளும் சுவராஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வை.கோ

    மலரும் நினைவுகளை - சற்றே சிந்தித்து - அசை போட்டு - மகிழ்ந்து - நீண்டதொரு கட்டுரையாக வடித்து - அனைவருக்கும் ஜான் பேட்டாவினை அறிமுகப் படுத்திய விதம் நன்று. மிக மிக இரசித்தேன். அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதனை நினைவில் நிறுத்தி குரு நாதர் என அழைப்பது தங்களின் பெருந்தன்மையினைக் காட்டுகிறது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. சுவாரசியம்.
    கடைசியில் மூணு பரிச் சணலை கையால் எப்படி அறுக்கிறதுனு சொல்லலியே சார்?

    பதிலளிநீக்கு
  14. ஜான் பேட்டா பாத்திரம் தங்கள் மனதுக்குள் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பும்,அவரிடமிருந்து கற்ற அனுபவமும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  15. செல்ஃபோன் மூலம் உலகமே நம் கையில் அடங்கியுள்ளது. உலகில் எந்த மூலையில் யார் இருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும், அடுத்த நொடிப்பொழுதில் மிகச் சுலபமாகப் பேசி விட முடிகிறது. இத்தைகைய இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை நாம் கையெடுத்துக் கும்பிடத்தான் வேண்டும்./

    நிச்சயம் நன்றி பாராட்டவேண்டும்...

    எங்கே என்ன முக்கிய வேலையில் இருந்தாலும் ,
    எந்த நேரத்திலும் அம்மா - அப்பா என்ற குரலையும் ,

    புத்திரர்களையும் பார்க்க கணிப்பொறி முன் தவம் செய்கிறோமே!

    பதிலளிநீக்கு
  16. அந்த 'ஜான்பேட்டா' என் நினைவலைகளில் இன்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் என்பதே உண்மை.

    தங்கள் பதிவுச் சிற்பத்தால் அனைவரின் நினைவலைகளிலும் வாழ்ந்துகொண்டிருப்பார்..

    பதிலளிநீக்கு
  17. தனி ஒரு ஆளாகவே செய்த ஜான்பேட்டாவின் இந்த தீரச்செயல் ஒரே ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தது. /

    மதிநுட்பத்தால் அலட்சியமாக சாதித்த செயல் --
    அருமையாக காட்சிப்படுத்தியற்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  18. கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடங்கள் நுணுக்கங்கள் நிறைந்த பகிர்வு.

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  19. நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை நான்கு நாட்கள் முன்பு நடந்த விஷயம் போல் எழுதியுள்ளது நினைவாற்றலின் உச்சக்கட்டம்.

    சேமித்து வைத்த பசுமை நினைவுகளை செழிப்பாக சொல்லியிருக்கீர்கள்.

    இக்கட்டுரையின் காரணகர்த்தா ஜான் பேட்டாவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ஒரு சாதாரண மனிதருள்ளும் போற்றத்தகுந்த அல்லது மெச்சத்தகுந்த சில சிறப்பு குணங்கள் இருக்குமென்பதற்கு ஜான்பேட்டா அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.

    அவருடைய நடை உடை பாவனைகளை இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மிகவும் நேர்த்தியாகச் சிலாகித்த விதமும், இடையிடையே அந்தக்காலம் பற்றிய தெளிவினை வாசிப்பவர்களுக்கு விளக்கிய விதமும், ஜான்பேட்டா அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட கலையை இன்னும் மறவாமல் இருப்பதும் மிகவும் வியப்பையே தருகின்றன.

    நேரில் விவரிப்பது போன்ற எழுத்துநடைக்குப் பாராட்டுகள் வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  21. ஜான்பேட்டாவிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களையும் விரிவா சொல்லியிருப்பது அருமை சார்.

    மலரும் நினைவுகளில் ஜான்பேட்டாவும் என்றுமே மறக்க இயலாதவர்.

    பதிலளிநீக்கு
  22. தி.தமிழ் இளங்கோ said...

    [பகுதி-1]

    //VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் பதிவின் மூலம், ரொம்ப நாளைக்குப் பிறகு Character Study கட்டுரை ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த டீக்கடை நாயரைப் பற்றியும் சொல்லுங்கள்.. பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி அவர்களின் “வாழ்க்கையே வாழ்க்கை” என்ற நூலைப ரசித்துப் படித்த ஞாபகம் வருகிறது.//

    ஐயா, வணக்கம். தங்கள் அன்பான வருகையும், பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி. அவர்களி “வாழ்க்கையே வாழ்க்கை” என்ற நூலை ரசித்துப்படித்தது ஞாபகம் வந்ததாகச் சொல்வதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    நான் பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி. அவர்களைப்பற்றி கேள்விப்பட்டுள்ளேனே தவிர அவரின் எழுத்துக்களைப் படிக்கும் பாக்யம் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.


    தி.தமிழ் இளங்கோ said...

    [பகுதி-2]

    //VGK அவர்களுக்கு வணக்கம்! முப்பத்திரண்டு பதுமைக் கதைகளில் (விக்கிரமாதித்தன் கதைகள்) கதைக்குள் கதை வருவது போல், அந்த காலத்து டெலிபோன், பார்சல் பேக்கிங், பழைய ஆட்டுக்கல் சமாச்சாரங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யம். கடைசியில் ஜான் பேட்டா இறந்த செய்தி மனதுக்கு நெருடல்தான்.//

    தாங்கள் அன்புடன் வருகை தந்து, என் எழுத்துக்களை மிகவும் ரஸித்துப் பாராட்டியுள்ளது எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது, ஐயா.

    தங்களுக்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. Asiya Omar said...
    //”ஜான் பேட்டா”, வை.கோ சார் மிகவும் ரசித்து வாசித்தேன்.பெரியண்ணன் என்ற ஜான் பேட்டாவை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.சார் அந்த சணலை நீங்கள் எப்படி கையால் அறுத்தெடுப்பீர்கள் ஆச்சரியம்,தையல் நூலை அறுக்கவே கத்திரி தேடும் ஆட்கள் நாங்கள்.மிக நல்ல பகிர்வு.//

    oooooooooooooooooooooooooooo

    அப்பாதுரை said...
    //சுவாரசியம்.
    கடைசியில் மூணு பரிச் சணலை கையால் எப்படி அறுக்கிறதுனு சொல்லலியே சார்?//
    oooooooooooooooooooooooooooo

    தங்கள் இருவரின் அன்பான அபூர்வமான வருகைக்கும் கருத்துக்களும் மிக்க நன்றி.

    கெட்டியான சணல் கயிறை எப்படிக்கையால் அறுப்பது என்பதை, எழுத்தில் எழுதி புரிய வைப்பது கஷ்டமான காரியம். நேரில் சந்திக்கும் போது விருப்பமானவர்களுக்கு நான் செய்து காட்டுகிறேன்.

    கற்றுத் தருகிறேன். புரிந்துகொண்டு விட்டால், நான்கு முறை செய்து பார்த்தால் சுலபமாக வந்துவிடும் கலை தான். சற்றே கவனம் மட்டும் வேண்டும்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  24. cheena (சீனா) said...

    [பகுதி-1]

    //அன்பின் வை.கோ - ஜான் பேட்டா - மனதில் வரைந்து பார்த்தேன் - இரசித்தேன் - அவரது குணமும்- எளிமையும் - முதலாளிக்கே பிடித்த அவரின் பலமும் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//


    cheena (சீனா) said...

    [பகுதி-2]

    //அன்பின் வை.கோ

    மலரும் நினைவுகளை - சற்றே சிந்தித்து - அசை போட்டு - மகிழ்ந்து - நீண்டதொரு கட்டுரையாக வடித்து - அனைவருக்கும் ஜான் பேட்டாவினை அறிமுகப் படுத்திய விதம் நன்று. மிக மிக இரசித்தேன். அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதனை நினைவில் நிறுத்தி குரு நாதர் என அழைப்பது தங்களின் பெருந்தன்மையினைக் காட்டுகிறது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//


    அன்பின் அடையாளமான சீனா ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் பல.

    இதன் 2 பகுதிகளுக்கும், தங்களுக்குள்ள பல வேலைகளுக்கிடையில் வருகை தந்து, அரிய பெரிய அழகான கருத்துக்களை எடுத்துக்கூறி என்னை உற்சாகப்படுத்தியுள்ளது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, ஐயா.

    எனக்கு ஏற்கனவே ஆர்வம் உள்ள ஒரு தொழிலை, இன்னும் செம்மையாக ஒருவரிடமிருந்து நான், கற்றுக்கொள்ளும் போது, அவரை, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், நான் என் குருநாதர் என்று தான் நினைத்துக்கொள்வேன். அது என் வழக்கம்.

    ஒவ்வொருவரிடமும் ஒரு நல்ல திறமை ஒளிந்திருக்கும். அதை மட்டும் நாம், அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும்.

    அந்த வகையில் PACKING+கயிறு அறுத்தல் போன்றவற்றை இந்த ஜான்பேட்டா அவர்களிடமிருந்து நான் சிறுவயதிலேயே கற்றுக்கொள்ள முடிந்தது.

    எனக்கே ஏற்கனவே ஆர்வமான, இந்த இரண்டு கலைகளை மேலும் செம்மையாகக் கற்றுக்கொடுத்த அவர் என் குருநாதரே.

    தங்களின் அன்பான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா!

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  25. கணேஷ் said...
    //நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை நான்கு நாட்கள் முன்பு நடந்த விஷயம் போல் எழுதியுள்ளது நினைவாற்றலின் உச்சக்கட்டம்.//

    ஒரு சிலரை மட்டும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாதே, கணேஷ்.

    இதுபோலவே என் அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்த்த Mr BKS, தமிழ்மணி, ராஜேந்திரன் போன்றவர்கள் எல்லோருமே, சூப்பர் கேரக்டர்கள் தான்.

    ஜான் பேட்டாவால் 5/36 வீட்டில் ஆட்டுக்கல்லை நகர்த்திய 1974 ஆம் ஆண்டு, நீ 3 வயது குழந்தை. சும்மா கொழுகொழுன்னு ஜோராக இருப்பாய்.

    பிறகு நீயே [உன் 15 வயது வரை] ஜான்பேட்டாவை பலமுறை சந்தித்திருப்பாய் என்று நினைக்கிறேன்.

    நம் நாணி, ரமேஷ் போன்ற எல்லோருக்கும் அவரை நன்றாகத் தெரியும்.

    அவர்கள் இவ்விடம் வரும்போது இந்தப்பதிவினைப் படிக்கச்சொல்லி கருத்துக்களை நேரிடையாகக் கேட்க ஆவலுடன் உள்ளேன்.

    அதுவும் யார் போலவும் மிமிக்ரி செய்து பேசும் நம் நாணி வாயால், ஜான்பேட்டா போலவே பேசச்சொல்லிக் கேட்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.

    //சேமித்து வைத்த பசுமை நினைவுகளை செழிப்பாக சொல்லியிருக்கீர்கள்.

    இக்கட்டுரையின் காரணகர்த்தா ஜான் பேட்டாவுக்கு நன்றி.//


    மிக்க நன்றி, கணேஷ்.

    அன்புடன் கோபு மாமா

    பதிலளிநீக்கு
  26. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பித்து எனக்கு உற்சாகம் அளித்துள்ள

    திருவாளர்கள்:
    =============

    01. சீனி Sir அவர்கள்
    02. தி.தமிழ் இளங்கோ Sir அவர்கள்
    03. ஸ்ரீராம் Sir அவர்கள்
    04. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்
    05. பழனி.கந்தசாமி Sir அவர்கள்
    06. விச்சு Sir அவர்கள்
    07. அன்பின் சீனா Sir அவர்கள்
    08. அப்பாதுரை Sir அவர்கள்
    09. G கணேஷ் அவர்கள்

    மற்றும்

    திருமதிகள்:
    ============

    01. கோமதி அரசு Madam அவர்கள்
    02. ஸாதிகா Madam அவர்கள்
    03. லக்ஷ்மி Madam அவர்கள்
    04. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்
    05. மனோ சாமிநாதன் Madam அவர்கள்
    06. ஆசியா உமர் Madam அவர்கள்
    07. ராஜி Madam அவர்கள்
    08. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்
    09. கீதமஞ்சரி Madam அவர்கள்
    10. கோவை2தில்லி Madam அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்
    vgk

    பதிலளிநீக்கு
  27. தங்களின் மனதில் வாழும் பாத்திரத்தை அவர் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் சென்று அறிமுகம் செய்தது போல் இருந்தது! அருமையான சொல்லாட்சி!
    நன்றி ஐயா!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  28. //ஜான்பேட்டாவிடம் இதுபோன்ற பேங்க் வேலைகள் எல்லாவற்றையும் ஒப்படைத்தபின்,அவரும் பேங்குக்குக் கிளம்பிய பின், என்னிடம் அந்தக் கேஷியர் இது பற்றி புலம்பிக் கொண்டிருப்பார்.

    ”அவன் மிகவும் நல்லவன் தான். நாணயமானவன் தான். சாமர்த்தியமான ஆசாமி தான். இருந்தாலும் பண விஷயம் ஹேண்ட்பேக் போன்ற எதுவும் எடுத்துச்செல்லாமல், வேஷ்டித்தலைப்பில் இவ்வளவு பணத்தையும் முடிந்து கொண்டு, அந்த பெல்லும் பிரேக்கும் இல்லாத பாடாவதி சைக்கிளில் செல்கிறான். சொன்ன பேச்சே கேட்பதில்லை” என என்னிடம் புலம்புவார்.//

    அந்த கேஷ்யரின் மன நிலையை அந்த கேஷ்யர் உங்களிடம் கவலைப் பட்டுச் சொன்ன மாதிரியே நீங்கள் இப்பொழுது எங்களிடம் சொல்லும் பொழுது, அதை அச்சு அசலாக இப்பொழுது உணர முடிகிறது. ஜான்பேட்டா பேங்கில் பணத்தைக் கட்டி ரசீது வாங்கி முடிக்கும் வரை
    தன் பொறுப்பு முடியவில்லை என்கிற மாதிரி தன் கவலையாக அதைக் கட்டிச் சுமந்திருக்கிறார் அந்த கேஷ்யர். எவ்வளவு மானியான மனிதர்கள் என்று நெட்டுயிர்க்கத் தான் முடிகிறது!

    இந்த இடத்தில் தான் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று எனக்கு ஆசை. அந்த கேஷ்யர் இந்தக் கவலையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?..

    அ) கேஷ்யர் பாடு, ஜான் பேட்டா பாடு. ஏதோ கூட வேலைசெய்கிற தோஷத்திற்கு சொல்கிறார். கேட்டுக் கொள்வோம். அல்லது கேட்டுக்கற மாதிரி பாவனையாவது பண்ணுவோம்.

    ஆ) ஜான் பேட்டா வழக்கம் போல் எல்லாவற்றையும் சரியாக முடித்துக் கொண்டு வருவான். இந்த மனுஷன் கிடந்து ஏன் இப்படிக் கவலைப் படுகி றார்?..

    இ) ஆனாலும் இந்த கேஷ்யருக்கு இதே வேலையாப் போச்சு. ஆ,ஊன்னா இதான். தன் கவலையைத் தான் சுமக்க வேண்டியது தானே? இன்னொருத்தன் தோளில் அதை ஏன் ஏற்றுகிறார்?..

    உ) ஆனாலும் இந்த ஜான்பேட்டாவுக்கு இத்தனை அழுத்தம் கூடாது. ஒழுங்கா முடித்து விட்டுத் தான் வருவான். கேஷ்யருக்கு ஆறுதலா அவனும் தான் அவர் கிட்டே ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போனால் என்னவாம்?..

    ஊ) இந்த மேனேஜர் தான் கொஞ்சம் கறாராக இவன் கிட்டே இருந்தால் என்னவாம், காசை வாங்கிக் கொண்டதற்கு கையெழுத்துப் போட்டுப் போன்னு ஜான் பேட்டா கிட்டே கண்டிஷனா சொல்லக் கூடாதா, என்ன?.. நாளைக்கு ஒண்ணுன்னா,
    அவனவன் ஒதுங்கிண்டிடுவான்.
    பண விஷயம்ன்னா, யாரானும் ஜவாப்தாரியா இருக்க வேண்டாமோ?..
    பாவம்கேஷ்யர்!... என்ன பணம் இவர் கொடுத்தார், இவன் என்ன பணம் அவர் கிட்டே வாங்கிண்டான்ங்கறதுக்கு என்ன அத்தாட்சி?.. ஒரு சீட்டு, நாட்டு கிடையாதா?.. இதென்ன, ஆபீசா சந்தை மடமா? ஜான் பேட்டா சூரன்! கொடுத்த வேலையைச் சரியாத் தான் முடிப்பான்.. இருந்தாலும், பண விஷயம் இல்லையா,சுவாமி!

    'அ'விலிருந்து 'ஊ'வரை.. எது உங்கள் சாய்ஸ் கோபால்ஜி?.. உங்கள் எழுத்தைப் படிப்பது உங்களைப் படிக்கிற மாதிரி. அவ்வளவு வெளிப்படையானது. எனக்குத் தெரியும். என்ன சொல்வீர்கள், என்று.
    இருந்தாலும் நீங்களும் சொல்லிட்டால், ஒரு அல்ப திருப்தி.
    அதுக்காகத் தான்!

    --0--

    இப்பொழுது தான் நேரம் கிடைத்தது.
    இரண்டாம் பகுதியையும் படித்து விட்டேன். நினைவுகள் என்பது நூல் நுனிமுனையைப் பற்றி இழுப்பது போலத் தான். சில பேருக்கு அந்த நுனி மட்டும் கிடைத்து விட்டால், ஆற்றொழுக்கு மாதிரி ஒன்றன் பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு அதுக்கென்று பிரத்தேயகமாக பிரயத்தனப்படாமல் வரிசைக் கிரமமாக நினைவுக்கு வரும்.

    அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்று அடிச்சுச் சொல்லலாம்.

    ரிடையர் ஆன காலத்தில் வாசல் திண்ணையின் ஒரு மூலையில் உட்கார்ந்து தனக்குத் தானே நினைத்துக் கொண்டிருக்கலாம். இல்லை, தன்னைப் போல இன்னொருவரைப் பக்கத்தில் உட்கார வைத்து பொழுது போக்குக்குக்காக பழைய நினைவுகளை ஏனோதானோ வென்று பேசிக் கொண்டிருக்கலாம்.
    இதெல்லாம் எல்லோரும் முடியும்.
    ஆனால், இதையெல்லாம் எழுத்தில் வடித்துச் சொல்லி, பிறருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளுக்கிடையில் கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் படிக்க வைத்து அவர்களும் புரிந்து பாராட்டி மகிழ வேண்டுமானால், சத்தியமாக அது லேசுப்பட்ட காரியம் இல்லை.

    அந்த லேசுப்படாத செயல் மிகமிக லேசாக இயல்பாக உங்களுக்குக் கைவந்திருக்கிறது.

    தானும் சந்தோஷப்பட்டு பிறரையும் சந்தோஷப்படுத்துவது இறைவன் கொடுத்த வரம். அதற்காகத் தான் நன்றி சொல்லத் தோன்றுகிறது.

    மிக்க நன்றி, கோபால்ஜி!

    பதிலளிநீக்கு
  29. padma hari nandan said...
    //Romba nalllllllllla irukku sir..............
    :)//

    Thank you very much, Sir for your rare entry & comments.

    vgk

    பதிலளிநீக்கு
  30. Seshadri e.s. said...
    //தங்களின் மனதில் வாழும் பாத்திரத்தை அவர் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் சென்று அறிமுகம் செய்தது போல் இருந்தது! அருமையான சொல்லாட்சி!
    நன்றி ஐயா!
    -காரஞ்சன்(சேஷ்)//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  31. ஜீவி said...
    *****ஜான்பேட்டாவிடம் இதுபோன்ற பேங்க் வேலைகள் எல்லாவற்றையும் ஒப்படைத்தபின்,அவரும் பேங்குக்குக் கிளம்பிய பின், என்னிடம் அந்தக் கேஷியர் இது பற்றி புலம்பிக் கொண்டிருப்பார்.

    ”அவன் மிகவும் நல்லவன் தான். நாணயமானவன் தான். சாமர்த்தியமான ஆசாமி தான். இருந்தாலும் பண விஷயம் ஹேண்ட்பேக் போன்ற எதுவும் எடுத்துச்செல்லாமல், வேஷ்டித்தலைப்பில் இவ்வளவு பணத்தையும் முடிந்து கொண்டு, அந்த பெல்லும் பிரேக்கும் இல்லாத பாடாவதி சைக்கிளில் செல்கிறான். சொன்ன பேச்சே கேட்பதில்லை” என என்னிடம் புலம்புவார்.*****

    //அந்த கேஷ்யரின் மன நிலையை அந்த கேஷ்யர் உங்களிடம் கவலைப் பட்டுச் சொன்ன மாதிரியே நீங்கள் இப்பொழுது எங்களிடம் சொல்லும் பொழுது, அதை அச்சு அசலாக இப்பொழுது உணர முடிகிறது. ஜான்பேட்டா பேங்கில் பணத்தைக் கட்டி ரசீது வாங்கி முடிக்கும் வரை
    தன் பொறுப்பு முடியவில்லை என்கிற மாதிரி தன் கவலையாக அதைக் கட்டிச் சுமந்திருக்கிறார் அந்த கேஷ்யர். எவ்வளவு மானியான மனிதர்கள் என்று நெட்டுயிர்க்கத் தான் முடிகிறது!//

    இப்போதும் அந்த கேஷியர் இருக்கிறார், சார். வேத சாஸ்திரங்கள் படித்தவர். மிகவும் நல்லவர். வயது 85 ஆகிறது. சற்று முடியாத்தனம் வந்துள்ளது.

    பள்ளிப்படிப்பு அதிகம் படிக்காவிட்டாலும், கணக்கு வழக்குகளில், கொடுக்கல் வாங்கலில் மிகவும் கரெக்ட்டாக இருப்பார்.

    அந்தக்காலத்தில் மணிமணியாக கணக்குகள் எழுதுவார். லெட்ஜரில் ஒரு அடித்தல் திருத்தல் ஏற்பட்டாலும் அவருக்கு அழுகை வந்துவிடும்.

    மிகவும் பொறுமையானவர், பொறுப்பானர், பொய் சொல்லத்தெரியாது அவருக்கு. அதுபோன்ற மனிதர்களை இன்று பார்ப்பதே அபூர்வம், சார்.

    //இந்த இடத்தில் தான் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று எனக்கு ஆசை. அந்த கேஷ்யர் இந்தக் கவலையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?..

    //அ) கேஷ்யர் பாடு, ஜான் பேட்டா பாடு. ஏதோ கூட வேலைசெய்கிற தோஷத்திற்கு சொல்கிறார். கேட்டுக் கொள்வோம். அல்லது கேட்டுக்கற மாதிரி பாவனையாவது பண்ணுவோம்.//

    நான் அன்று இருந்த நிலையில் (என் வயது 18) அனைவரிடமும் உள்ள நல்ல பண்புகளை, பழக்கங்களைக் கற்றுத் தெரிந்து கொள்ளவே விரும்பினேன். உலக அனுபவங்களின் முதல் படியில் நான் நின்று கொண்டிருந்தேன். ஏற வேண்டிய படிகளோ ஏராளம். எல்லோருடைய தயவும் எனக்குத் தேவைப்பட்டது. எதையும் கற்றுக்கொள்வதில் ஓர் ஆவல், ஆர்வம், தாகம் எனக்கு இருந்தது,


    //ஆ) ஜான் பேட்டா வழக்கம் போல் எல்லாவற்றையும் சரியாக முடித்துக் கொண்டு வருவான். இந்த மனுஷன் கிடந்து ஏன் இப்படிக் கவலைப் படுகி றார்?..//

    நியாயமான கவலைதான் என்றே எனக்குத் தோன்றியது.

    //இ) ஆனாலும் இந்த கேஷ்யருக்கு இதே வேலையாப் போச்சு. ஆ,ஊன்னா இதான். தன் கவலையைத் தான் சுமக்க வேண்டியது தானே? இன்னொருத்தன் தோளில் அதை ஏன் ஏற்றுகிறார்?..//

    அக்ஞானம் மிகுந்த ஆசாமி, சார் அவர்.

    நான் கூட அதே போல் தான், பண விஷய்ங்களில் மிகவும் உஷாராகவே இருப்பேன்.

    அதுவும் என் சொந்தப் பணத்தில் நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். கணக்கே பார்க்க மாட்டேன்.

    பிறர் பணம் அல்லது கம்பெனி பணம் என்றால் கண்கொத்திப் பாம்பாகவே இருப்பேன்.

    அதை TALLY செய்யாமல் புறப்படவே மாட்டேன்.

    இதுபோல ஒரு பொறுப்புடன் செயல்பட்டதால் தான் என்னால் சுமார் 3 மாமாங்கமாக CASH SECTION இல் பணியாற்றி, நல்ல பெயருடன் ஓய்வு பெற்று நிம்மதியாக வர முடிந்தது.

    கோடிக்கணக்கில் பணம் புரளும் இடத்துக்கு நான் முழுப்பொறுப்பு அதிகாரியாகவும் செயல் பட முடிந்தது.

    என் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஏதாவது shortage or excess என்றாலும், தலையை பிய்த்துக்கொண்டு, எப்படியும் கண்டு பிடித்து விடுவேன்.

    இல்லாவிட்டால் எனக்குத் தூக்கமே வராது. நிம்மதியாக எந்தக்கவலையும் இன்றி தூங்க வேண்டும். மறுநாள் Surprise Physical Cash Verification என்று எவன் Audit செய்ய வந்தாலும், நமக்கு பயமில்லாமல், ஒருவித தெளிவு இருக்க வேண்டும்.

    தொடரும்

    பதிலளிநீக்கு
  32. //உ) ஆனாலும் இந்த ஜான்பேட்டாவுக்கு இத்தனை அழுத்தம் கூடாது. ஒழுங்கா முடித்து விட்டுத் தான் வருவான். கேஷ்யருக்கு ஆறுதலா அவனும் தான் அவர் கிட்டே ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போனால் என்னவாம்?..//

    அது அவன் பிறவி குணம். நாய் வால் போல. அதை நிமிர்த்தவே முடியாது என்பது எங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியுமே.

    //ஊ) இந்த மேனேஜர் தான் கொஞ்சம் கறாராக இவன் கிட்டே இருந்தால் என்னவாம், காசை வாங்கிக் கொண்டதற்கு கையெழுத்துப் போட்டுப் போன்னு ஜான் பேட்டா கிட்டே கண்டிஷனா சொல்லக் கூடாதா, என்ன?.. நாளைக்கு ஒண்ணுன்னா, அவனவன் ஒதுங்கிண்டிடுவான்.
    பண விஷயம்ன்னா, யாரானும் ஜவாப்தாரியா இருக்க வேண்டாமோ?..
    பாவம்கேஷ்யர்!... என்ன பணம் இவர் கொடுத்தார், இவன் என்ன பணம் அவர் கிட்டே வாங்கிண்டான்ங்கறதுக்கு என்ன அத்தாட்சி?.. ஒரு சீட்டு, நாட்டு கிடையாதா?.. இதென்ன, ஆபீசா சந்தை மடமா? ஜான் பேட்டா சூரன்! கொடுத்த வேலையைச் சரியாத் தான் முடிப்பான்.. இருந்தாலும், பண விஷயம் இல்லையா,சுவாமி!//

    அந்த காலகட்டத்தில் எல்லோருக்குமே மேனேஜர் உள்பட சம்பளம் மிகக்குறைவு.

    ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை/நாணயம் அதிகம். யாரும் வேண்டுமென்றே துரோகம் செய்யப்போவது இல்லை.பொய் சொல்லப்போவதும் இல்லை.

    விதியிருந்து ஏதாவது நஷ்டம் ஏற்பட்டாலும், அந்த நல்ல முதலாளியே தான் ஏற்கப்போகிறார். சம்பந்தப்பட்டவர்களை 4 திட்டு வேண்டுமானால் திட்டுவார். வேறு ஒன்றும் பெரிய தண்டனையோ போலீஸில் புகாரோ கொடுத்து விடப் போவதில்லை என்ற தைர்யம் எங்களுக்கெல்லாம் உண்டு.

    அத்தகைய நல்ல மனிதாபிமானம் கொண்ட முதலாளி - தங்கமானவர் - திரு. N. ராமமூர்த்தி ஐயர் [N R Iyer] என்று பெயர். சிகை வைத்திருப்பார். நன்றாக கார் ஓட்டுவார். சங்கீத ஞானம் உண்டு. தானே தம்பூரா வீணை போன்றவைகள் வாசிப்பார்.

    3 வருஷங்களுக்கு ஒரு முறை காரை விற்றுவிட்டு, புத்தம் புது கார் வாங்குவார். புதிய கார் எடுத்து வந்த முதல் நாளே கார் டிக்கியில், கன்னுக்குட்டி, வைக்கோல், மாட்டுச்சாணம் முதலியன வற்றை ஏற்றுவார்.

    நிறைய வயல்கள் உண்டு. மாடு கன்னு வேலையாட்கள் உண்டு. நித்தியப்படி சிவபூஜை செய்வார். ஒரு தனி கேரக்டர் அவரும். பொதுவாக மிகவும் நல்ல மனிதர். அவரிடம் பணியாற்றியவர்களில் என்னைப்போலவே பலரும் பல நல்ல வேலைகள் கிடைத்து, வாழ்க்கையில் முன்னேறவே முடிந்தது. அஸ்திவாரம் இட்டவர் அவரே. என்னைப்பொருத்தவரை அவர் மிகவும் ராசியானவர் என்றே நான் சொல்லுவேன்.

    தொடரும்

    பதிலளிநீக்கு
  33. /'அ'விலிருந்து 'ஊ'வரை.. எது உங்கள் சாய்ஸ் கோபால்ஜி?.. உங்கள் எழுத்தைப் படிப்பது உங்களைப் படிக்கிற மாதிரி. அவ்வளவு வெளிப்படையானது. எனக்குத் தெரியும். என்ன சொல்வீர்கள், என்று. இருந்தாலும் நீங்களும் சொல்லிட்டால், ஒரு அல்ப திருப்தி.
    அதுக்காகத் தான்!//

    தங்களின் ஆர்வத்திற்கு தகுந்த தீனி போட்டுள்ளேனா என எனக்குத் தெரியவில்லை, சார். என் மனதில் தோன்றியதை, அப்படியே (அ) முதல் (ஊ) வரை எழுதியுள்ளேன்.

    --0--

    //இப்பொழுது தான் நேரம் கிடைத்தது.//

    அதனால் பரவாயில்லை, சார்.

    //இரண்டாம் பகுதியையும் படித்து விட்டேன். நினைவுகள் என்பது நூல் நுனிமுனையைப் பற்றி இழுப்பது போலத் தான். சில பேருக்கு அந்த நுனி மட்டும் கிடைத்து விட்டால், ஆற்றொழுக்கு மாதிரி ஒன்றன் பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு அதுக்கென்று பிரத்தேயகமாக பிரயத்தனப்படாமல் வரிசைக் கிரமமாக நினைவுக்கு வரும்.//

    ஆம் ஐயா, எனக்கு எல்லாமே நேற்று நடந்தது போல ஞாபகத்தில் உள்ளன. என்னைக்கவர்ந்த அல்லது பாதித்த எந்த செயல்களையும், மனிதர்களையும் என்னால் எப்போது மறக்கவே இயலாது.

    ஓரளவு இதுவரை ஞாபகசக்தியும் சராசரி அளவுக்கு மேலேயே தான் உள்ளது, கடவுள் அனுக்கிரஹத்தால்.

    //அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்று அடிச்சுச் சொல்லலாம்.//

    இருக்கலாம், ஐயா. தங்கள் கணிப்பில் தவறு இருக்க சந்தர்ப்பம் இல்லை.

    //ரிடையர் ஆன காலத்தில் வாசல் திண்ணையின் ஒரு மூலையில் உட்கார்ந்து தனக்குத் தானே நினைத்துக் கொண்டிருக்கலாம். இல்லை, தன்னைப் போல இன்னொருவரைப் பக்கத்தில் உட்கார வைத்து பொழுது போக்குக்குக்காக பழைய நினைவுகளை ஏனோதானோ வென்று பேசிக் கொண்டிருக்கலாம். இதெல்லாம் எல்லோரும் முடியும்.

    ஆனால், இதையெல்லாம் எழுத்தில் வடித்துச் சொல்லி, பிறருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளுக்கிடையில் கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் படிக்க வைத்து அவர்களும் புரிந்து பாராட்டி மகிழ வேண்டுமானால், சத்தியமாக அது லேசுப்பட்ட காரியம் இல்லை.//

    ஆமாம் ஐயா. ஆனால் ஒன்று; எனக்கு பேசுவதைவிட எதையும் எழுத்தில் வடிப்பது சுலபமாக உள்ளது.

    நேரில் ஒருவரை சந்திக்கும் போதோ, மேடைப்பேச்சுக்களிலோ சரளமாகப் பேச சற்றே சபைக்கூச்சம் வெட்கம் முதலியன வந்துவிடுவதுண்டு.

    ஒருவரிடம் எவ்வளவோ ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் பேச வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அவரை சந்திக்கும் போது என்ன பேசுவது என்றே நமக்குத்தோன்றாது.

    அப்படியே ஏதாவது பேசினாலும் என்ன பேசினோம் என்பதற்கும் RECORD இல்லாமலும் போய்விடுகிறது. எழுத்து என்றால் அது RECORD ஆகிவிடுகிறது. அதனால் அதில் சற்று அதிக கவனமும் செலுத்த வேண்டியுள்ளது.

    //அந்த லேசுப்படாத செயல் மிகமிக லேசாக இயல்பாக உங்களுக்குக் கைவந்திருக்கிறது.

    தானும் சந்தோஷப்பட்டு பிறரையும் சந்தோஷப்படுத்துவது இறைவன் கொடுத்த வரம். அதற்காகத் தான் நன்றி சொல்லத் தோன்றுகிறது.//

    எல்லாம் தெய்வானுக்கிரஹமும், தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகளுமே காரணம், ஐயா.

    நீங்கள் சொல்லும் இவையெல்லாம் யாருக்குப்புரியணுமோ அவர்களுக்குப் புரியவில்லையே என்ற ஆதங்கமும் எனக்கு மிகவும் அதிகம் உள்ளது. ;(

    //மிக்க நன்றி, கோபால்ஜி!//

    சிரமப்பட்டு மிக நீண்ட பாராட்டுரை கொடுத்து என்னை கண்கலங்கச் செய்து விட்டீர்கள், ஐயா.

    உங்கள் பின்னூட்டம் எப்போது படித்தாலும் எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருவதுண்டு.

    நன்றி, நன்றி, நன்றி.

    அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் உங்கள் vgk

    பதிலளிநீக்கு
  34. ஜான் பேட்டாவை மறக்க முடியாமல் செய்து விட்டது உங்கள் எழுத்து. அருமையான குணச்சித்திரம். உங்கள் எழுத்துத் திறன் மீண்டும் நிரூபணமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  35. ரிஷபன் said...
    ஜான் பேட்டாவை மறக்க முடியாமல் செய்து விட்டது உங்கள் எழுத்து. அருமையான குணச்சித்திரம். உங்கள் எழுத்துத் திறன் மீண்டும் நிரூபணமாகி விட்டது.//

    தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

    அன்புடன் வீ....ஜீ [vgk]

    பதிலளிநீக்கு
  36. ஜான்பேட்டா உங்க நினைவில் மட்டும் இல்லை. எங்க எல்லாருடய மனதிலும் வாழ்கிறார்

    பதிலளிநீக்கு
  37. இருப்பினும் அந்த 'ஜான்பேட்டா' என் நினைவலைகளில் இன்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் என்பதே உண்மை. //

    உங்கள் நினைவில் மட்டுமா? இதைப் படிக்கும் அனைவர் நினைவிலும் அவர் வாழ்வார்.

    சூப்பர் NARRATION அண்ணா, வழக்கம் போல்

    பதிலளிநீக்கு
  38. ஜான்பேட்டா அவர்களிடமிருந்து நீங்களும் சில விஷயங்கள கத்துகிட்டீங்க. ரசித்து படித்த நாங்க எல்லாருமே ஜான்பேட்டாவை புரிந்துகொண்டோம்

    ஏற்கனவே பின்னூட்டம் போட்டிருக்கேன் மறுபடியும் வந்துட்டேன்☺☺

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் July 24, 2015 at 4:09 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஜான்பேட்டா அவர்களிடமிருந்து நீங்களும் சில விஷயங்கள கத்துகிட்டீங்க. ரசித்து படித்த நாங்க எல்லாருமே ஜான்பேட்டாவை புரிந்துகொண்டோம்

      ஏற்கனவே பின்னூட்டம் போட்டிருக்கேன் மறுபடியும் வந்துட்டேன்☺☺//

      ஆஹா, மீண்டும் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் மிக்க நன்றி. :))

      நீக்கு
  39. இன்னாங்க இது இத்தர நல்லா மனுசர சந்தன கடத்தல் வீரப்பன்போல இருப்பாருன்னீக. ஓ ஓ பாக்குரதுக்கு அப்பூடி இருப்பாகளோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 20, 2015 at 1:43 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //இன்னாங்க இது இத்தர நல்லா மனுசர சந்தன கடத்தல் வீரப்பன்போல இருப்பாருன்னீக. ஓ ஓ பாக்குரதுக்கு அப்பூடி இருப்பாகளோ//

      தோற்றத்தில் மட்டும் அசல் அப்படியே அவரைப்போலவே இருவரும் இருப்பார் என்றுதான், அதுவும் இன்றைய நம் வாசகர்களுக்குப் புரிவதற்காகச் சொல்லியுள்ளேன்.

      நீக்கு
  40. ஜான்பேட்டா தோற்றத்திஸ் கரடு முரடாக இருந்தாலும் வேலை நேர்த்தியையும் தெளிவாகவே சொல்லி இருக்கிறீர்கள். கேஷியரின் பயம் அர்த்தமற்றதாகத்தான் தோன்றுகிறது. ஜானபேட்டா நல்ல ஒரு பாத்திர படைப்பு. அந்தக்கால லாண்ட் லைன் ஃபோன் விஷயங்களும் படிக்க வேடிக்கையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  41. ஆனால் அத்தகைய கெட்டியான 3 பரி அல்லது 5 பரிச் சணலையும், என்னால் இன்றும் கத்தியோ ப்ளேடோ இல்லாமல், வெறும் கையால் அறுத்துவிட முடியும்.

    இதுவும் ஜான்பேட்டா அவர்களிடமிருந்து நானே OUT OF MY OWN INTEREST, VOLUNTARY யாகக் கற்றுக்கொண்ட டெக்னிக்.


    இப்போது நான் அதுபோன்ற கெட்டிக் கயிறுகளை அவ்வாறு கத்தியின்றி கையாலேயே அறுக்கும் போது பலரும் பார்த்து வியந்து போய் பாராட்டுவார்கள். ///ஒவ்வொருவரிடமிருந்த்தும் நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஜான் பே(ஷ்)ட்டா ரசிக்கத்தக்க மனிதர்தான்...

    பதிலளிநீக்கு