என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 14 ஏப்ரல், 2012

சித்திரையில் சில சிந்தனைகள் !



ஸ்ரீ மத்ஸ்ய ஜயந்தி 

18.04.2012 புதன் கிழமை



பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு பூமியில் மஹாபிரளய காலத்தில் மீன் உருவத்தில் அவதரித்த நன்நாளான இன்று காலையில் மத்ஸ்ய ஸ்வரூபியான பகவானை முறையாக பூஜைகள் செய்து ஸ்தோத்ரங்கள் சொல்லி ப்ரார்த்தித்துக்கொண்டு தம்பதியாய் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் சொல்லி சுத்த ஜலத்தினால் அர்க்யம் தரலாம்.

ஸத்யவிரதோபதே3சாய ஜிஹ்மமீன ஸ்வரூப த்4ருக்
ப்ரலயாப்3தி4 க்ருதாவாஸ க்2ருஹாணார்க்4யம்
நமோஸ்துதே, மத்ஸ்ய ஸ்வரூபாய விஷ்ணவே நம: 
இதமர்க்யம், இதமர்க்யம்,இதமர்க்யம்

அநேந அர்க்4ய ப்ரதா3னேன மத்யஸ்வரூபி ப4கவான் ப்ரீயதாம்.

ooooOoooo 

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி 
62 ஆவது வருஷ ஆராதனை
18.04.2012 புதன்கிழமை



சுமார் 125 வருஷங்களுக்கு முன் மதுரைக்கு அருகில் திருச்சுழியில் பரமேஸ்வரனின் அவதாரமாகத் தோன்றி, திருவண்ணாமலையில் கடுமையான தபஸ் செய்து, ஆத்ம தரிஸனம் கண்ட மஹான் பகவான் ஸ்ரீ ரமணர். தான் கண்ட ஜோதியை ஏராளமான பக்தர்களும் காணச்செய்து அவர்களின் ஆத்ம ஜ்யோதிஸ்ஸைத் தூண்டிவிட்ட மஹான்.

திருவண்ணாமலையில் ஸமாதியில் இருந்தபடியே இன்றும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் இவரின் 62 ஆவடு ஸித்தி தினம், சித்திரை மாத க்ருஷ்ணபக்ஷ த்ரயோதஸியான இன்று [18.04.2012 புதன்கிழமை] பல இடங்களில் நடைபெறுகிறது.

நாமும் இதில் கலந்துகொண்டு இவரை நமஸ்கரித்து, இவர் இயற்றிய அருணாசல அக்ஷரமணிமாலை முதலிய ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்து, ஆத்மவிசாரம் செய்து நன்மையடைவோமாக!

-ooooooooooooOoooooooooooo- 

வைசாக ஸ்நானம் 
22.04.2012 முதல் 20.05.2012 வரை

சித்திரை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் வைகாசி மாதம் அமாவாசை வரையில் உள்ள 30 நாட்களுகு வைஸாக மாதம் என்று பெயர்.

இந்த வைசாக மாதத்தில் அதிகாலையில் [நதி, ஏரி, குளம், கிணறு முதலியவற்றில்] கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி முறையாக ஸ்நானம் செய்வதால் பாபங்கள் விலகி மனதுக்கு நிம்மதியும், நல்ல ஆஸ்தீகமான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் ஏற்படும். மாதம் முழுவதும் ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் முதல் மூன்று நாட்கள் அல்லது கடைசி மூன்று நாட்களாவது வைசாக ஸ்நானத்தை முறையாகச் செய்து நன்மையடைய முயற்சிக்கலாம்.




ஸ்நான ஸ்லோகம்:

மாத4வே மேஷகே3 பா4நெள முராரே ! 
மது4ஸூத3ன!
ப்ராத: ஸ்னாநேன மே நாத2 ! 
ப2லதோ ப4வ பாபஹந்


-oooooOooooo-


சந்திர தரிசனம் 
22.04.2012 ஞாயிற்றுக்கிழமை


ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷ த்விதீயையன்று [அமாவாசைக்கு அடுத்த இரண்டாம் நாள்] இரவில் மூன்றாம் பிறை சந்திரனை, கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி தரிஸனம் செய்வது மிகச்சிறந்தது. 

த3தி4 ஸங்க2 துஷாராப4ம் க்ஷீரோதா3ர்ணவ ஸம்ப4வம்
நமாமி ஸஸிநம் ஸோமம் ஸம்போ4ர் மகுட பூ4ஷணம்

இவ்வாறு மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிஸிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.



இந்த மூனறாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து தரிஸிக்கும் படியாக இருக்கும்.  மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.

நாலாம் பிறைச் சந்திரன் பளிச்சென்று நம் கண்களில் பட்டு விடும். அதை தரிஸிக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.

-oooooOooooo-

ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகளின் ஜயந்தி
23.04.2012 திங்கட்கிழமை


காந்தர்வ வேதமென்னும் ஸங்கீதத்தை ஸ்ரீ பகவானை ஆராதிக்க மட்டுமே உபயோகித்து, ஸாஸ்த்ரீய ஸங்கீதத்தையே [நாதத்தையே] பரப்ருஹ்மமாக பாவித்து, ஸங்கீத ஸாஸ்த்ர விதிகளைச் சிறிதளவும் மீறாமல், ஏராளமான கீர்த்தனைகள் இயற்றி, மஹானாக வாழ்ந்து, நிர்குண ப்ருஹ்மத்துடன் ஐக்யமான ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ ஸ்யாமா ஸாஸ்திரிகளின் ஜயந்தியான சித்திரை மாதம் கிருத்திகா நக்ஷத்திரம் இன்று

அவரது கீர்த்தனைகளைப் பாடி, கேட்டு, ஆனந்தித்து ஸ்ரீ பகவானை நினைத்து நன்மையை அடைவோம்.     



சுபம்


24.04.2012 செவ்வாய்க்கிழமை 
அக்ஷய த்ருதீயை+
தர்ம கட தானம்+
தண்ணீர் பந்தல் .... உதக (ஜல) தானம்.

26.04.2012 வியாழக்கிழமை
@ ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி @

27.04.2012 வெள்ளிக்கிழமை
பகவான் ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி

ஆகியவை பற்றி தனிப்பதிவுகள் 
ஓரிரு நாட்கள் முன்னதாக வெளியிடப்பட உள்ளன.

-oOo-

@”ஸ்ரீஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும”@ 

என்ற தலைப்பில், 
பள்ளிச்சிறுவர்கள், 
இரண்டரை மணி நேரங்கள் 
பங்கேற்று நடிக்கும் வண்ணம். 
தமிழில் நாடகம் எழுதித்தரச் சொல்லி 
2007 ம் ஆண்டு போட்டியொன்று அறிவித்திருந்தார்கள்.

அந்தப் போட்டியில் பங்கேற்ற 
500க்கும் மேற்பட்ட படைப்புகளில்
நான் எழுதி அனுப்பிய நாடகம் ஒன்று 
அகில இந்திய அளவில் 
மூன்றாம் பரிசினை வென்றது. 

அந்த நாடகக்காட்சிகளை 
ஒரு சில பகுதிகளாகப் பிரித்து 
ஆதி சங்கர ஜயந்தியை முன்னிட்டு
தொடராக வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.

-oOo-


25 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல்கள் அறியத்தந்தமைக்கு நிறைவான நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  2. இதமர்க்யம், இதமர்க்யம்,இதமர்க்யம்

    இதமான ஸ்லோகப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.....

    பதிலளிநீக்கு
  3. தகவல்கள் அருமை..இதைப் போல் ஸ்ரீதர அய்யாவாள் பற்றி தாங்கள் கூறி அறிய ஆவலுடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  4. அக்ஷய த்ருதீயை+தர்ம கட தானம்+தண்ணீர் பந்தல் .... உதக (ஜல) தானம்.

    அட்சய திருதியைக்கு தானத்திருநாள் என்றே பொருள் கொள்ளலாம்..

    தயிர் சாத தானம் வெகு விஷேஷம்..

    பதிலளிநீக்கு
  5. ”ஸ்ரீஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. நல்ல பல தகவல்கள்.
    நான்காம் பிறை தான் எப்போதுமே கண்ணுக்கு முன் தென்படும்.
    சிறு வயதில் என் அப்பாவுடன் சேர்ந்து மூன்றாம் பிறை பார்க்கும் போது
    ”மூன்றாம் பிறை கண்டேன்
    முத்துப் பிறை கண்டேன்”
    என்று நாலு வரிகளில் பாட்டு ஒன்று சொல்வேன். மறந்து விட்டது. போட்டுக் கொண்டிருக்கும் ஆடையில் இருந்து ஒரு சிறு நூலை பிரித்து போடுவோம். புது ஆடை கிடைக்கும் என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விஷயங்கள் பலவற்றை இப்போது படித்து அறிந்து கொண்டேன். நன்றி. ‘ஆதிசங்கரரின் வாழ்வும், வாக்கும்’ மினி தொடர் படிக்க ஆவலுடன் காத்திருப்பு.

    பதிலளிநீக்கு
  8. நல்ல செய்திகளை படித்து தெரிந்து கொள்கிறோம்.

    நீங்கள் எழுதி வெற்றி பெற்ற ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் தொடர் படிக்க ஆவல். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    அட்சய திருதியை தினத்தை பொருள் வாங்கி சேர்க்கும் திருநாளாய் விளம்பரபடுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
    கொடுக்கும் தினமாய் உங்கள் பதிவைப்டித்து தண்ணீராவது தானம் தரட்டும்.

    பதிலளிநீக்கு
  9. படங்களும் பயனுள்ள பலதகவல்களும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி

    பதிலளிநீக்கு
  10. நல்ல தகவல்கள்...

    அடுத்த தொடர் படிக்க ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
  11. 3ம் பிறை கண்ணில் படாது. தவறிப் பட்டுவிட்டால் என்ன ஆனந்தம்!
    நல்ல நல்ல தகவல்கள் சொல்லி மனசுக்கு ஹிதமாய் பதிவு போடும் உங்களுக்கு என் ஹ்ருதய பூர்வ நமஸ்காரம்.

    பதிலளிநீக்கு
  12. பயனுள்ள தகவல்கள்!

    மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.

    அருமை!

    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  13. VGK அவர்களுக்கு வணக்கம்! சித்திரை மாதத்து சிறப்புச் செய்திகள் தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்து உற்சாகம் ஊட்டியுள்ள

    திருவாளர்கள்:
    =============

    01. பழனி.கந்தசாமி SIR அவர்கள்

    02. ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி SIR அவர்கள்

    03. கணேஷ் SIR அவர்கள்

    04. வெங்கட் நாகராஜ் SIR அவர்கள்

    05. ரிஷ்பன் SIR அவர்கள்

    06. விச்சு SIR அவர்கள்

    07. E S சேஷாத்ரி SIR அவர்கள்

    08. தி.தமிழ் இளங்கோ SIR அவர்கள்

    மற்றும்

    திருமதிகள்:
    ===========

    01. இராஜராஜேஸ்வரி MADAM அவர்கள்

    02. கோவை2தில்லி MADAM அவர்கள்

    03. கோமதி அரசு MADAM அவர்கள்

    04. லக்ஷ்மி MADAM அவர்கள்

    05. மிடில் கிளாஸ் மாதவி MADAM அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது

    பதிலளிநீக்கு
  16. பரிசு பெற்ற உங்கள் நாவலைப் படிக்க அடுத்த பகுதிக்கு விரைகிறேன்.

    ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  17. பூந்தளிர் June 11, 2015 at 3:22 PM
    பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது

    பூந்தளிர் July 24, 2015 at 4:15 PM
    :))) //

    :)))))))))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  18. ?????-----எப்பூடி வுட்டுபோச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 21, 2015 at 3:48 PM

      //?????-----எப்பூடி வுட்டுபோச்சி//

      சரி, சரி .... எப்படியோ விட்டுப்போச்சு .... விட்டுங்கோ.

      நானும் என் கண்களில் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு, ஒவ்வொன்றாக வரிசையாகப் பார்த்துவிட்டு, அதன்பிறகே CONFIRMATION CERTIFICATE FOR MONTHLY COMPLETION OF COMMENTS அனுப்ப வேண்டியுள்ளது. அதனால்தான் அதில் கொஞ்சம் தாமதமும் ஆகிறது. ஓக்கேவா ?

      இதோ அனுப்புகிறேன் ........ for April 2012.

      இதன் பிறகு May 2012 to May 2013 [ 13 மாதங்களுக்கும் சேர்த்து மொத்தம் 40 பதிவுகள் மட்டுமே ] அதனால் அந்த 40 பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் கிடைத்த பிறகே, என்னிடமிருந்து ஒட்டுமொத்தமாக ACKNOWLEDGEMENT உங்களுக்குக்கிடைக்கும்.

      அதன் பிறகு ஜூன் 2013 முதல் ஒவ்வொரு மாதமும் தனித்தனியாகக் கிடைக்கும். OK யா?

      அன்புடன் குருஜி

      நீக்கு
    2. அன்புள்ள முருகு .... ஓர் இனிய செய்தி
      ===================================

      **நானும் என் கண்களில் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு, ஒவ்வொன்றாக வரிசையாகப் பார்த்துவிட்டு, அதன்பிறகே CONFIRMATION CERTIFICATE FOR MONTHLY COMPLETION OF COMMENTS அனுப்ப வேண்டியுள்ளது. அதனால்தான் அதில் கொஞ்சம் தாமதமும் ஆகிறது. ஓக்கேவா ? **

      இருப்பினும் இவ்வாறு செக்-அப் செய்ய என் கண்களில், அவ்வப்போது நான் தடவிக்கொள்ளும் விளக்கெண்ணெய்க்கான செலவு, தங்கள் யாருடைய பரிசுத்தொகைகளிலும் கழிக்கப்பட மாட்டாது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)))))

      நீக்கு
  19. நல்ல தகவல்கள் அறியதந்ததற்கு நன்றிகள் இப்பல்லாம் அடசய திருதியை நாடகளில் நகைக்கடையில்தான் குட்டம் கும்முகிறது. தங்கம் வாங்கணும்னு யாரு சொல்லி வச்சாங்களோ.

    பதிலளிநீக்கு