2
ஸ்ரீராமஜயம்
பிள்ளையார் ஏழை எளியவர்களுக்கெல்லாம் ஸ்வாமி. மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணியிலும்கூட எவரும் ஒரு பிள்ளையாரைப் பிடித்துப் பூஜை செய்துவிடலாம். அவர் எளிதில் சந்தோஷப்படுகிறவர்.
எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து அந்தக்கல்லோ, களிமண்ணோ, அதற்குள்ளிருந்து கொண்டு அருள் செய்வார்.
அவரை வழிபட நிறைய சாஸ்திரங்கள் படிக்க வேண்டும் என்பதில்லை. ஒன்றும் படிக்காதவனுக்கும், அவன் கூப்பிட்ட குரலுக்கு வந்து விடுவார்.
தோப்புக்கரணம் போடுவதால் நம் நாடிகளின் சலனம் மாறும். மனசில் தெய்வீகமான மாறுதல்கள் உண்டாகும். நம்பிக்கையோடு செய்தால் பலன் தெரியும்.
தமிழ்நாட்டின் பாக்கியமாக திரும்பிய இடமெல்லாம் அமர்ந்திருக்கும் அவரை நாம் எந்நாளும் மறக்கக்கூடாது.
நாம் எல்லோரும் தவறாமல் பிள்ளையார் கோயிலுக்குப்போவது, தேங்காய் உடைப்பது, விநாயகர் அகவல் சொல்வது என்று வைத்துக் கொண்டால் இப்போதிருக்கிற இத்தனை ஆயிரம் கோயிலுங்கூடப் போதாது. புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும்.
நமக்கும், நாட்டுக்கும் உலகுக்கும் எல்லா க்ஷேமங்களும் உண்டாவதற்கு ஒளவையார் பாடிய ’விநாயகர் அகவல்’ மூலம் பிள்ளையாரைப் வழிபடுவதே வழி.
oooooOooooo
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
பாலும் தெளிதேனும் பாகும்பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா !
-oOo-
விநாயகர் அகவலின் முழுப்பொருளையும்
எளிய தமிழில் சுலபமாக அறிந்துகொள்ள
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின்
வெற்றிகரமான 1000 மாவது பதிவினில்
படித்து மகிழுங்கள்.
இணைப்புக்குச்செல்ல சுலபமான வழி இதோ:
இணைப்பு இதோ:
அனைவருக்கும் இனிய
பிள்ளையார் சதுர்த்தி
நல்வாழ்த்துகள்.
-oOo-
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியிடப்படும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியிடப்படும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
08.09.2013
08.09.2013
அன்பின் வை.கோ - அருமையான பதிவு - ஓடி வந்தருளும் பிள்ளையார் - அருமை அருமை - விநாயகர் அகவல் பாடல் பகிர்வினிற்கு நன்றி
பதிலளிநீக்குபடங்களும் சுட்டிகளூம் அருமை - அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி சென்று பார்த்து படித்து மகிழ்ந்து மறுமொழியும் இட்டு விடுகிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் வை.கோ - இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஎளிமையானவர் பிள்ளையார், அச்சு வெல்லம்,மஞ்சள், களிமண், பசுஞ்சாணம் எல்லாவ்ற்றிலும் எளிதாக அமர்ந்து கொள்வார் உண்மை.
பதிலளிநீக்குஅழகான அரசமரம், ஆலமரம், ஆற்று ஓரத்தில் பிள்ளையாரை வைத்தால் போதும். பெரிய கோவிலை எல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டார்.
சிறு வயது முதல் விநாயகர் அகவல் படித்து வருகிறேன்.
//நமக்கும், நாட்டுக்கும் உலகுக்கும் எல்லா க்ஷேமங்களும் உண்டாவதற்கு ஒளவையார் பாடிய ’விநாயகர் அகவல்’ மூலம் பிள்ளையாரைப் வழிபடுவதே வழி.//
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதத்தில் அவர்கள் சொன்னது போல் விநாயகர் அகவல் மூலம் பிள்ளையாரை வழி படுவோம். வாழ்க்கையில் நலம் பெறுவோம்.
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் 1000வது பதிவில் விநாயகர் அகவல் படித்து மகிழ்ந்தேன்.
அழகான படங்களுடன் பதிவு அருமை.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
விநாயகனே! வினை தீர்ப்பவனே ... ... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதேனாக இருக்கும் பதிவை ரசித்தேன்.
பதிலளிநீக்குஇனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅய்யாவிற்கு வணக்கம், அழகான பதிவு வினாயகர் அகவல் பாடல் மிக அருமை. ஒளவையார் வினாயகரைப் பார்த்து பாடுவது போல் படம் அமைந்திருப்பது சிறப்பு. தங்களுக்கு வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி அய்யா.
பதிலளிநீக்குவிநாயகர் அகவல் பாடல் அருமை
பதிலளிநீக்குஇனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....
அவ்வை அகவலை
பதிலளிநீக்குஅன்று முதல் இன்று வரை
ஆராதித்து மகிழ்ந்தேன் எனினும்
இன்றும் ஒருமுறை
இனிதே பாடி
உளம் மகிழ்ந்திடவே
ஊக்கம் அளித்த வாய்ப்பு தந்த
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
சுப்பு தாத்தா பாடி அவர் வலை தனில்
நாளை இடுவார்.
நான்
வளர்ந்த
நம் வீதியில் ஆம். ஆண்டார் வீதியில்
அரசர மரத்து பிள்ளையாருக்கும்
நடு வாய் இருக்கும் ஏழைப்பிள்ளையாருக்கும்
உச்சி பிள்ளையாருக்கும்
நாகநாத சுவாமி கோவிலில் குடி கொண்ட
விநாயகனுக்கும்
உங்கள் துணையுடன் மானசீகமாக
நாலு வீதிகளையும் சுற்றி மகிழ்ந்து
விநாயகன் பாடல் பாடி மகிழ்வேன்.
சுப்பு இரத்தின சர்மா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
//sury SivaSeptember 7, 2013 at 8:28 PM
நீக்குஅவ்வை அகவலை அன்று முதல் இன்று வரை ஆராதித்து மகிழ்ந்தேன் எனினும் இன்றும் ஒருமுறை இனிதே பாடி உளம் மகிழ்ந்திடவே ஊக்கம் அளித்த வாய்ப்பு தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நான் வளர்ந்த நம் வீதியில் ஆம். ஆண்டார் வீதியில் அரசர மரத்து பிள்ளையாருக்கும் நடு வாய் இருக்கும் ஏழைப்பிள்ளையாருக்கும் உச்சி பிள்ளையாருக்கும் நாகநாத சுவாமி கோவிலில் குடி கொண்ட விநாயகனுக்கும் உங்கள் துணையுடன் மானசீகமாக நாலு வீதிகளையும் சுற்றி மகிழ்ந்து விநாயகன் பாடல் பாடி மகிழ்வேன்.
சுப்பு இரத்தின சர்மா.
www.vazhvuneri.blogspot.com www.subbuthatha72.blogspot.com//
வாங்கோ நமஸ்காரம், வணக்கம்.
நாம் வளர்ந்த திருச்சி வடக்கு ஆண்டார் தெரு அரசமரப் பிள்ளையார் முதல் உச்சிப்பிள்ளையார் வரை பிரதக்ஷணமாக அமைந்துள்ள அனைத்துப் பிள்ளையார்கள் பற்றியும் எழுதியுள்ளேன். அதில் “ஏழைப்பிள்ளையார்”க்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் காட்டியுள்ளேன்.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html
தலைப்பு: ஏழைப் பிள்ளையார்
மேலும் நம் குலதெய்வங்களான மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்பரவனேஸ்வரர் + ஸ்ரீ கருப்பர், ஸ்ரீ சமயபுரம் மஹமாயீ, ஸ்ரீ குணசீலம் பெருமாள் மற்றும் அந்த நம் குலதெய்வங்களின் பிரதிநிதியாக நம் வடக்கு ஆண்டார் தெருவுக்கு அருகிலேயே குடிகொண்டுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லீ அம்பாள் ஸமேத ஸ்ரீ நாகநாதர், கருப்பர், வாணப்பட்டரை மஹமாயீ, ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் [கிருஷ்ணன் கோயில்] ஆகியவற்றை தனிப்பதிவாகத் தந்துள்ளேன்.
தலைப்பு: குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன்.
இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html
இவை தங்களின் தனிப்பட்ட தகவலுக்காக மட்டுமே.
VGK
you can listen the VINAYAKAR AKAVAL HERE:
நீக்குhttps://www.youtube.com/watch?v=850DhT0HDdY
SUBBU THATHA.
//you can listen the VINAYAKAR AKAVAL HERE:
நீக்குhttps://www.youtube.com/watch?v=850DhT0HDdY
SUBBU THATHA.//
தகவலுக்கு மிக்க நன்றி.
எனக்குப் பாட்டுப் போட்டுக் கேட்பதற்கெல்லாம் நேரமோ, பொறுமையோ, ஆர்வமோ இப்போதெல்லாம் மிகவும் குறைந்து போய்விட்டது. Now-a-days சுத்தமாக இல்லை எனவும் வைத்துக்கொள்ளலாம். அதனால் என்னை மன்னிக்கவும்.
எல்லோருடைய டேஸ்டும், எல்லா நேரங்களிலும், ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அதனால் பிறரை வற்புருத்தவும் கூடாது.
ஆனால் நான் இசையை ஒரேயடியாக வெறுப்பவனும் கிடையாது. எல்லாம் ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு விதமான ரஸனை. அவ்வளவுதான்.
வைகோ சார்,
பதிலளிநீக்குமுழு முதற் கடவுளான விநாயகர் அகவல் படித்தேன். நன்றி.
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
அகவலுடன் கூடிய அருமையான விநாயக சதுர்த்தி
பதிலளிநீக்குசிறப்புப் பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
விநாயகர் அகவல் பாடல் பகிர்வினிற்கு நன்றி
பதிலளிநீக்குAha....
பதிலளிநீக்குVery opt for Ganesh chaturthi...
Useful too.
Thanks for the post.
viji
பதிலளிநீக்குபெரியவர் சொல்படி நாளும் விநாயகனைத் துதித்து வளம் பெறுவோம். விநாயகச் சதுர்த்தி அன்று அவனுக்கென்று மோதகம் படைத்து நாமும் உண்டு மகிழ்வோம். வாழ்த்துக்கள்.
Vazhthukkalaukku Nandri Sir. Anaivarukkum iniya Vinayagar chaturthi nal vazhthukkal
பதிலளிநீக்குதோப்புக்கரணம் போடுவதால் நம் நாடிகளின் சலனம் மாறும்.
பதிலளிநீக்குமனசில் தெய்வீகமான மாறுதல்கள் உண்டாகும்.
நம்பிக்கையோடு செய்தால் பலன் தெரியும்.
சூப்பர் பிரெயின் யோகா - என்று இன்று விஞ்ஞானம் கண்டுபிடித்து
அயல் நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறதாம் ...
நம் மெய்ஞானிகள் கண்டுணர்த்திய அருமையான பிரார்த்தனை..!
நமக்கும், நாட்டுக்கும் உலகுக்கும் எல்லா க்ஷேமங்களும் உண்டாவதற்கு ஒளவையார் பாடிய ’விநாயகர் அகவல்’ மூலம் பிள்ளையாரைப் வழிபடுவதே வழி.
பதிலளிநீக்குஎளிமையான சொற்கள் ஆழ்ந்த பொருள் கொண்டவை..
அனுபவமும் வயதும் ஏற ஏற உண்மைப்பொருள்
ஒளிர்வதை உணரமுடியும் ..!
அமுத மழையாய் அருமையான பகிர்வுகளுக்கும் எமது பதிவுக்கு வழிகாட்டியமைக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
பதிலளிநீக்குஅந்தப்பதிவில் அதிகப்படியான பின்னூட்டங்கள் மற்றும் ஒரு தனிப் பதிவாக வெளியிட நினைக்கிறேன்..!
விநாயகர் அகவல் - நம்வாழ்வில் மங்கலங்களைத் தரவல்லது!.. அகவலுடன் அருமையான பதிவு!..
பதிலளிநீக்குவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!..
Rightly said about Vinayagar agaval,Happy vinayaga chathurthi to you n your loved one's :)
பதிலளிநீக்குஇனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவிநாயகர் அகவல் பாடல் பகிர்வினிற்கு நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! நன்றி!
பதிலளிநீக்குஇனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....!
பதிலளிநீக்குஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!..
பதிலளிநீக்குவிநாயகர் அகவலுடன் அழகான அருமையான பதிவு ஐயா!
பதிலளிநீக்குஒற்றைக் கொம்பனை
ஓமென்ற மந்திரத்தை
பற்றிட நன்றெ
பறந்திடும் வினைகளே!
விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!
ஐயன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
இளமதி September 8, 2013 at 9:41 AM
நீக்கு//விநாயகர் அகவலுடன் அழகான அருமையான பதிவு ஐயா!
ஒற்றைக் கொம்பனை ஓமென்ற மந்திரத்தை பற்றிட நன்றெ
பறந்திடும் வினைகளே! விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!
ஐயன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!//
தங்களின் அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎங்கள் பள்ளியில் விநாயகர் அகவலை முழுக்க சொல்லிக் கொடுத்தார்கள். திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தில் மறுபடி அதைப் படித்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் வினை தீர்க்கும் விநாயகரின் அருள் கிடைக்கட்டும் இந்த நல்ல நாளில்.
நல்ல பதிவு.நன்றி.
பதிலளிநீக்குஎப்படி ஏழை விநாயகர் ஆண்டார் தெருவில் உள்ளாரோ அது போல லால்குடி மெயின் ரோடில் பணக்காரப் பிள்ளையார் அமைந்துள்ளார்.செல்வ விநாயகரைத்தான் மக்கள் பணக்காரப் பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.அதற்கேற்றார்ப் போல எப்போதும் துதிக்கையில் நாணயங்களைப் பதித்து வைத்து அலங்காரம் செய்ய்கிறார் அக்கோயில் குருக்கள்.
சேலம் ராஜகணபதி மிகவும் சக்திவாய்ந்தவர் மட்டுமல்ல, புகழ் வாய்ந்தவரும் கூட.தேர்முட்டி என்னும் இடத்தில், முதல் அக்கிரஹாரம் மற்றும் இரணடாவது அக்கிரஹாரம் சேரும் இடத்தில் கோவில் கொண்டுள்ளார்.
தஞ்சையிலும் பிள்ளையார்பட்டி ஒன்று இருக்கிறது. அங்கு பிரம்மாண்டமான கணபதி இருக்கிறார்.அவரைப்பற்றி இங்கே எழுதியுள்ளேன்.
தலைப்பு:"பிள்ளையார் கனவில் வந்து சொல்லட்டும் அப்போது நிறுத்துகிறேன்"
http://classroom2007.blogspot.in/search?updated-max=2012-03-28T18:30:00%2B05:30&max-results=3
தலைப்பு:"குறையிருந்தாலும் குறைவதுண்டோ?"
http://classroom2007.blogspot.in/search?updated-max=2012-04-04T18:30:00%2B05:30&max-results=3&reverse-paginate=true
விநாயகர் சதுர்த்தித் திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா! அகவலுடன் கூடிய அருமையான பதிவிற்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களின் ஏழைப் பிள்ளையார் & குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன் பதிவை படித்தேன். அருமையான பதிவு ஐயா. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்கு//தமிழ்நாட்டின் பாக்கியமாக திரும்பிய இடமெல்லாம் அமர்ந்திருக்கும் அவரை நாம் எந்நாளும் மறக்கக்கூடாது. // அங்கு மட்டுமா .. உலகமெல்லாம் தனக்கென ஓர் இடம் பிடித்து, எல்லோரும் கொழுக்கட்டை தாங்கோ என லெவலாகக் கேட்கிறார்ர்.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கோபு அண்ணன், மீ இண்டைக்கு கொழுக்கட்டை கொடுக்கப் போறேன் எங்கட பிள்ளையாருக்கு...
பதிலளிநீக்குமீயும் ஒவ்வொரு சதுர்த்தியிலும், விநாயகர் அகவல் படிப்பது வழக்கம்.. இப்போ சில வேளைகளில் நேரமில்லாமல் விட்டுவிடுவதுமுண்டு இனித் தொடரோணும்.
விநாயகர் அகவலுடன் சிறப்பான பகிர்வு. தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅருமையான வினாயகர் பதிவு. எங்களூரில் ஏரிக்கரையில் ஒரு மரத்தடிப் பிள்ளையார் உண்டு. அவரிடம் வேண்டினால் எல்லா காரியங்களும் நடக்கும் என்று சொல்வார்கள். ஒன்றும் வேண்டாம்,
பதிலளிநீக்குநம்ம ஏரிக்கரைப் பிள்ளையாரை நினைத்தாலே போதும் என்றும் சொல்வார்கள். அப்படி பிள்ளையார் ஞாபகம் வந்தது. பிள்ளையாருக்குத்தான் எத்தனைத் திருநாமங்கள். எளிமையான பிள்ளையார் எல்லோருக்கும் நன்மைகளைக் கொடுக்க வேண்டுகிறேன்.அன்புடன்
நேரமின்மையால் பதிவுகளில் உடனடியாக கருத்திட முடியாத எனக்கு, பிள்ளையார் சதுர்த்தி அன்று படிக்க நேர்ந்தது பாக்கியமே!
பதிலளிநீக்குமிக நன்றி திரு கோபு சார். விநாயகர் அகவல் கொடுத்த அவ்வை வாழ்க,. சம்சாரத்தின் பல துன்பங்களையும் நொடியில் அகற்றிடுவார் நம் பிள்ளையார். இனிய வாழ்த்துகல்.
பதிலளிநீக்குhttp://tamilbloggersunit.blogspot.in/2013/09/blog-post.html
பதிலளிநீக்குவிநாயகர் அகவலைப்
பற்றிய தகவல்கள் அருமை
உங்கள் மொழியில்
சொல்லவேண்டுமென்றால்
இனிப்பான அவல் கேசரி
போல் இனித்தது
பாராட்டுக்கள்
விநாயகர் குறித்து இவன்
பதிவு 'மூலாதார மூர்த்தி'
காண வேண்டுகிறேன்
அதன் இணைப்பு மேலே
http://tamilbloggersunit.blogspot.in/2013/09/blog-post.html
பதிலளிநீக்குவிநாயகர் அகவலைப்
பற்றிய தகவல்கள் அருமை
உங்கள் மொழியில்
சொல்லவேண்டுமென்றால்
இனிப்பான அவல் கேசரி
போல் இனித்தது
பாராட்டுக்கள்
விநாயகர் குறித்து இவன்
பதிவு 'மூலாதார மூர்த்தி'
காண வேண்டுகிறேன்
அதன் இணைப்பு மேலே
விநாயகர் அகவல் படித்து இன்புற்றேன்...
பதிலளிநீக்குபிள்ளையார் எல்லோருக்குமே நண்பர். MY FRIEND GANESHA :)
இப்போழுது விநாயகர் அகவல் படித்து வந்தேன்,இங்கே உங்க பதிவில் மீண்டும் படித்தேன்,மிக்க மகிழ்ச்சி ஐயா!!
பதிலளிநீக்குவிநாயகர் அகவலும் தகவல்களும் படித்து அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குமனத்துக்கு இதம் தருவதான எனக்குப் பிடித்த விநாயகர் அகவலை இங்குத் தந்தருளிய சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.
பதிலளிநீக்கு"எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து அந்தக்கல்லோ, களிமண்ணோ, அதற்குள்ளிருந்து கொண்டு அருள் செய்வார்." பணிவோம் அவன் பாதம்.
பதிலளிநீக்குவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
தாமதமான விநாயக சதுர்த்தி வாழ்த்துகள். அருமையான இடுகை. விநாயகர் அகவல் பகிர்வுக்கும் நன்றி. வெல்லப் பிள்ளையாரைப் பிடிச்சு வைச்சு அவரையே கிள்ளி நிவேதனமும் பண்ணலாம். ஒண்ணும் கோவிச்சுக்க மாட்டார். :))))
பதிலளிநீக்குஓம் வக்ரதுண்டாயஹூம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம ஸர்வ ஸங்கடம் நிவாரயஸ்வாஹா விநாயகருக்கு பிள்ளையார் என்று பெயர்வரக்காரணம் ராஜராஜசோழன் தான் தஞ்சை பெரு உடையார் ஈஸனாரின் பிள்ளையை மரியாதையாக பிள்ளையார் என அழைத்தார் அதுமுதல் வழக்கத்தில்வந்தது என படித்தசெய்தி
பதிலளிநீக்குஎங்கள் வீட்டு கல்யாணங்களில் சாணிப் பிள்ளையாரைத்தான் வழிபட்டு காரியங்கள் செய்வோம்.
பதிலளிநீக்குவிநாயகர் அகவல் - இப்ப லயாக்குட்டி முக்கால் வாசி விநாயகர் அகவல மனப்பாடமா சொல்லறா. தொப்பையப்பன் புகழ் பாடி வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குஅவசியம் திருமதி ராஜ ராஜேஸ்வரியின் வலைத்தளத்துக்கு நான் சென்றே ஆக வேண்டும். ஏன்னா லயாக்குட்டி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கேக்கறா.
என்ன செய்ய சுயநலம் தான்.
விநாயகர் அகவலுடன் பிள்ளையார் பெருமையுடன் பகிர்வு சிறப்பு
பதிலளிநீக்குபுள்ளயாரு பண்டிகயா. இந்த கொளுக்கட்ட பண்டிகதான.
பதிலளிநீக்குபிள்ளையார் பெருமை வினாயகர் அகவல் சிறப்பான பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநமக்கும், நாட்டுக்கும் உலகுக்கும் எல்லா க்ஷேமங்களும் உண்டாவதற்கு ஒளவையார் பாடிய ’விநாயகர் அகவல்’ மூலம் பிள்ளையாரைப் வழிபடுவதே வழி. // சில் நேரம் எனக்கு இடைஞ்சல் வந்த பொழுது நான் தொடர்ந்து படித்து பலன் பெற்ற அனுபவம் உண்டு..
பதிலளிநீக்குவிநாயகர் அகவல் படித்து இன்புற்றேன்...
பதிலளிநீக்குபிள்ளையார் எல்லோருக்குமே நண்பர்
Termite Insect
eliminate termites naturally
Flying Termites vs Flying Ants
how to eliminate flying termites
Aditya Wibowo February 19, 2018 at 8:12 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//விநாயகர் அகவல் படித்து இன்புற்றேன்...
பிள்ளையார் எல்லோருக்குமே நண்பர் //
என் பதிவுப்பக்கம் தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.