2
ஸ்ரீராமஜயம்
சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை ‘செக்யூலரிஸம்’ என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது.
இந்த ‘செக்யூலரிஸம்’ என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
இது சரியான கருத்தல்ல என்று எடுத்துக்காட்டி, ‘செக்யூலரிஸம்’ என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது.
தற்போது எண்ணுவதுபோல, அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து இல்லாமல், அதாவது மதத்தொடர்பே அற்று இருப்பதால், இதைச் சொல்ல வேண்டியுள்ளது.
மாறாக ’செக்யூலரிஸம்’ என்பது, ’அதாவது அரசாங்கமானது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே’ என்பது தான் சரியான பொருள்.
ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து, பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும்.
oooooOooooo
பெரியவாளும் ஆங்கிலமும்
மொழி ஆராய்ச்சியில் எடுத்தாலும் அப்படித்தான் பெரியவா பேசும் ஆங்கிலம் மிகவும் கடினமாக உயர்ந்ததாக இருக்கும்.
அகராதியைப் புரட்டாமல் அர்த்தம் தெரியாது. நூறு வருடத்துக்கு முன்பே அவர் கான்வென்டில் படித்தவர்.ஆகவே அற்புதமாக ஆங்கிலத்தில் உரையாடுவார்.
ஒரு முறை விமான நிலையத்தைக் காண, பெரியவா மீனம்பாக்கம் சென்றார். எல்லா இடங்களையும் பார்வையிட்டபின் இன்ஜினீயரிங் செக்ஷன் வந்தது.
அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப் பிரயத்தனப் பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை. ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே என்று நினைத்தார்.
அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப் பிரயத்தனப் பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை. ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே என்று நினைத்தார்.
"ஓ! அதைத்தானே Stratosphere-னு சொல்லுவா!" என்று பெரியவர் சொல்ல... பொறியாளருக்குத் தூக்கிவாரிப்போட்டது.
'இத்தனை நேரம் தமிழ் வார்த்தைகளையே தேடிக் கொண்டிருந்தேனே.. இவருக்கு போய் ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தேனே!' என்று வெட்கினார்.
இப்படித்தான் அடிக்கடி உத்தியோகம் மாறுகிற ஒருவர் வந்தார்.
"இப்போ எதில் இருக்கே?" என்று கேட்கிறார் பெரியவர்.
அவருக்குப் புரியணுமேன்னு நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு, "அந்தக் கணக்கு போடற யந்திரத்துக்கு பேப்பர் தரும் வேலை!" என்றார்.
"Computer Stationery -தானே நீ சொன்னது?" என்று பெரியவர் அவர் சங்கடத்தைத் தவிர்க்கிறார்.
எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆழம் கண்டவராயிற்றே!
[Thanks to Amritha Vahini]
oooooOooooo
பெரியவாளின் ஞாபகசக்தி
தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மஹா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார. ஒரு மாத காலமாக மஹான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.
இந்தக் கும்பலில் அஞ்சல்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மஹான் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது ஓய்வு நேரத்தில், மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மஹானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்த்து. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிறார் என்பதே, அருள் பெற்றது போலத்தானே?
.........
சில தினங்களில் மஹான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார்.
இது நடந்து பல வருடங்களுக்குப் பின், மஹான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்றவண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபாலகிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்தபின், இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்தபின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.
தீர்த்தம் கொடுக்கும் முன், மஹான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுருக்கி இவரைப் பார்த்தார்.
எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகாரி, “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க, மஹான் புன்முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து, “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.
இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்துவிட்டது என்றாலும், அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கைதூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால், ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
[Thanks to Amritha Vahini 26 09 2013]
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
செக்யூலரிஸம் பற்றிய விளக்கமும், பெரியவாளின் மொழியின் ஆழமும், ஞாபகசக்தியும் மிகவும் அருமை ஐயா... நன்றிகள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குWell said about secularism, Blessed to read such divine things about great Periyava
பதிலளிநீக்குசிறப்பான தகவல்களைத் தாங்கிய பதிவு. தங்களால் தான் பெரியவாளின் அற்புதங்களைத் தெரிந்து வருகிறேன். ஆன்மீகத்தில் சிந்தனையை செலுத்துவது என்பது எவ்வளவு ஆரோக்கியமான விடயம் என்பதையும் புரிந்து கொண்டேன். உங்களைப் போன்ற அனுபவமுள்ளவர்கள் சொல்வதைப் பின்பற்றவே விரும்புகிறது மனது. அழகான பதிவுக்கு நன்றீங்க அய்யா.
பதிலளிநீக்குReally very great post Sir. Feeling happy reading about Periyava.
பதிலளிநீக்குviji
எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும்.//
பதிலளிநீக்குபெரியவாளின் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டால் நாடு நலம் பெறும்.
பெரியவாளின், அறிவு, புலமை, நினைவாற்றல் இவை எல்லாம் படிக்க ,படிக்க ஆனந்தமாய் இருக்கிறது.
பகிர்வுக்கு மிகவும் நன்றி.
வாழ்த்துக்கள்.
பெரியவாளைப் பற்றி முன்பு படித்தது யாவும் நினைவுக்கு வருகிரது.
பதிலளிநீக்குஸெக்யூலரிஸம் பதத்திற்கு அர்த்தம் அருமையாக உள்ளது.
ஒவ்வொரு பதிவில் ஒவ்வொரு விசேஶ அர்த்தம்..
ஞாபக சக்திதான் வியக்கும்படி யிருக்கிறது.. அன்புடன்
பெரியவாளின் ஆங்கில புலமையும், ஞாபகசக்தியும் வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குவை.கோ சார் உங்களுக்கும் ஞாபக சக்தி அதிகம்!
’செக்யூலரிஸம்’ என்பது, ’அதாவது அரசாங்கமானது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே’ என்பது தான் சரியான பொருள்.
பதிலளிநீக்குஅருமை ஐயா
மதசார்பற்ற அரசு பற்றிய விளக்கமும்! பெரியவாளின் மொழி அறிவும் ஞாபக சக்தியும் பிரமிக்க வைத்தது! சிறப்பான பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅரசாங்கம் பற்றிய பெரியவரின் கருத்துகள்.....
பதிலளிநீக்குஅருமை.....
எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும்.
பதிலளிநீக்கு/அருமையான் விளக்கம்! பெரியவாளின் ஞாபகசக்தி வியக்கும்படிதான் உள்ளது! பகிர்விற்கு நன்றி ஐயா!
பெரியவாளின் நியாபக சக்தி வியப்பு தான். அதுவும் அவருக்கு இருக்கும் கோடிக்கனக்கான பக்தர்களில் இப்படி தனிஒருவரின் கோத்திரம் முதற்கொண்டு சொல்கிறார் என்றால்........அவர் ஒவ்வொருவரிடமும் காட்டும் அக்கறை ஆச்சர்யம் தான்.
பதிலளிநீக்குதொடருங்கள் .....வாழ்த்துக்கள்.
செக்யூலரிஸம்’ என்பது, ’அதாவது அரசாங்கமானது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே’ என்பது தான் சரியான பொருள்.
பதிலளிநீக்குஆழ்ந்த பொருளை அருமையாக உணர்த்திய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து, பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும்.
பதிலளிநீக்குஉண்மையான செக்யூலரிஸத்தை
உணர்த்திய உன்னத வரிகள்..!
எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆழம் கண்டவராயிற்றே!
பதிலளிநீக்குபெரியவாளின் மொழிப் புலமை ரசிக்கவைக்கிறது..!
மஹானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்த்து. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிறார் என்பதே, அருள் பெற்றது போலத்தானே?
பதிலளிநீக்கு...
ஆத்மார்த்தமான அருள் பெற்ற பாக்கியசாலி..!
அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கைதூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால், ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
பதிலளிநீக்குஆற்றல் மிக்க ஆக்க சக்தியாக ஒளிர்ந்தவரின்
நினைவுத்திறன் வியக்கவைக்கிறது..!
Really great post. Nice information .. Thank you for sharing.. Each and every time, after read your article about periyava, ஆனந்தத்தில் கண்கள் குளமாகின்றன .
பதிலளிநீக்குஇன்னும் எத்தனை இருக்கிறது அவரது அற்புதங்கள்...?!
பதிலளிநீக்குசெக்யூலரிஸம் குறித்த விளக்கம் அற்புதம்!! காஞ்சி மஹான் பற்றிய அற்புதத் தகவல்களைத் தொடர்ந்து தந்து வருவது போற்றத்தக்க சேவை. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!.
பதிலளிநீக்குசெக்யூலரிஸம் பற்றிய விளக்கமும் பெரியவர் ஞாபகசக்தி, மொழியறிவுஇ அற்புதக் கதை.
பதிலளிநீக்குமிக நன்றி. இறையாசழ நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
"எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும்." சரியான விளக்கம் எடு்த்துக்காட்டியமைக்கு நன்றி
பதிலளிநீக்குபெரியவாளின் ஞாபக சக்தி ஆச்சரியப்படுத்துகிறது.
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குஅருமை அருமை - மத சார்பற்ற அரசு - பதிவு அருமை அருமை
//ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து, பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும். // சிந்தனை நன்று நன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குபெரியவாளும் ஆங்கிலமும் - பதிவு நன்று - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா ஏறத்தாழ 100 ஆண்டுகட்கு முன்னதகாவே கான்வெண்டில் ஆங்கிலம் படித்தவர். அவருக்குப் புரியாத ஆங்கிலச் சொற்களா ? நாம் தான் அவருக்குப் புரியுமோ புரியாதோ எனகுழம்புவோம். அவரின் பல் மொழிப் புலமை நமக்கெல்லாம் புரியாது - நல்லதொரு விளக்கம் - பெரியவாளும் ஆங்கிலமும் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்கு“பெரியவாளின் நினைவாற்றல் - அபூர்வமானது - பலரும் அறிந்ததே ! - பதிவு நன்று - பரத்வாஜ கோத்ரம் - பலீச்சென்று வரும் சொற்கள் - பக்தரை மகிழ்விக்கும் சொற்கள் - பெரியவா பெரியவா தான் - ஐயமே இல்லை .
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நேற்று பார்த்தவரை இன்று நினைவு இருப்பதில்லை. எத்தனையோ வருடங்களுக்கு முன் பார்த்த பக்தரை நினைவில் வைத்துக் கொண்டு அதுவும் அவரது கோத்திரத்தைச் சொன்ன பெரியாவாளின் நினைவாற்றலை என்னவென்று சொல்ல?
பதிலளிநீக்குஆங்கிலமொழிப் புலமையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
செக்யூலரிசம் குறித்த விளக்கம் "தெய்வத்தின் குரலில்" படிச்சிருக்கேன். போஸ்ட் மாஸ்டர் பத்தின செய்தியைத் தவிர மற்ற இரண்டும் படிச்சிருக்கேன். போஸ்ட் மாஸ்டரோட கோத்திரம் கூட நினைவில் வைச்சிருக்காரே! போஸ்ட் மாஸ்டர் அதிர்ஷ்டக்காரர் தான்! நல்ல பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசட்டம் என்பது மக்களின்
பதிலளிநீக்குபாதுகாப்புக்காக உள்ளது.
ஆனால்பல சட்டங்கள்
புத்தகத்தில் மட்டும் உள்ளது.
நடைமுறையில் இருக்கும் சட்டங்களும் முறைப்படி அமல்படுத்தப்படுவதில்லை.
அவைகள் ஆளும் வர்க்கத்தினரால்
வழக்கறிஞர்கள் மட்டும்
அரசியல்வாதிகளால் அவரவர்சுயலாபதிர்க்காக பயன்படுத்தப்படுகின்றன.
அதைபோல்தான் இந்த செகுலர் கொள்கையும். .
பாரபட்சமற்ற ,நடுநிலை
எண்ணம் கொண்டவர்கள் ஆட்சியில்
அமரும்போதுதான் இந்த கொள்கை
முறையாக செயல்படும்.
அதுவரை இந்த குழப்பங்கள்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
பெரியவாவின் அறிவுரைகள்
விரைவில் நடைமுறைபடுத்த
அவரிடமே பிரார்த்திப்போம்.
பெரியவாளின் நினைவாற்றல் வியக்க வைக்கின்றது.
பதிலளிநீக்குபெரியவரின் பன்முகங்களைக்காட்டும் பதிவு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! பெரியவருக்கு இருந்த ஞாபகசக்தி உண்மையிலேயே வியக்கத் தக்கது. இறைவன் கொடுத்த வரம்.
பதிலளிநீக்குபெரியவாளின், ஆங்கில அறிவும் ஞாபகசக்தியும் அப்பூடியே அதிராவுக்குக் கிடைக்கோணும் என ஆண்டவனை வேண்டுங்கோ கோபு அண்ணன்:).. அதிகம் பேச மாட்டேன் இங்கின:).. குறையப் பேசு நிறையக் கேள் என அம்மம்மா சொல்லியிருக்கிறா:)..
பதிலளிநீக்குஎப்பூடியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகவேண்டியிருக்கே ஆண்டவா:).
பெரியவரின் ஆங்கில புலமை வியக்கவைக்கிறது..நன்றி ஐயா!!
பதிலளிநீக்கு//ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து, பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும். // அருமையான டெஃபனிஷன்!
பதிலளிநீக்குVery nice post sir, felt really divine reading the post. Thank you very much sir for sharing.
பதிலளிநீக்குமதச்சார்பற்ற அரசு எப்படியிருக்கவேண்டும் என்னும் மகாபெரியவரின் கருத்தும் அவரது ஆங்கிலப்புலமையும் ஞாபகத்திறனும் என்று ஒவ்வொன்றாய் அறிந்து மென்மேலும் வியந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.
பதிலளிநீக்குமதசார்பின்மை என்ற வார்த்தையிலேயே அர்த்தம் இருக்கு ஆனால் நம் நாட்டில் அரசியல்வாதிகளின் காலத்துக்கேற்ற சந்தர்ப்பவாதத்தினால் புதுஅர்த்தமாகி விட்டது மஹாபெரியவாளின் ஆங்கிலம் பற்றிய செய்தி பிரமாதம் நல்ல பகிர்வு நன்றி
பதிலளிநீக்குமஹான்களின் ஞாபக சம்தி அபூர்வமானது.
பதிலளிநீக்குமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
நீக்குஅன்புடையீர்,
வணக்கம்.
31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 செப்டெம்பர் வரையிலான 33 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)
என்றும் அன்புடன் VGK
மஹா பெரியவாளின் ஒவ்வொரு திறமையும் மகிமையும் சிறப்பாக சொல்லி வரீங்க. இதுவும் அந்த மஹானின் ஆகஞைதான் போல இருக்கு
பதிலளிநீக்குபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
நீக்குவணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 செப்டெம்பர் வரை முதல் 33 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
// எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும்.//
பதிலளிநீக்குபெண் எடுத்து பெண் கொடுக்க வேண்டாம். ஆனால் மற்ற மதத்தினருடன் நட்பாக இருக்கலாமே.
மகா பெரியவாளின் ஆங்கிலப் புலமையும், ஞாபக சக்தியும் வியக்கத்தான் வைக்கிறது.
அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
நீக்குஅன்புள்ள ஜெயா,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 செப்டம்பர் மாதம் வரை முதல் 33 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.
பிரியமுள்ள நட்புடன் கோபு
வார்த்தக்கு அர்த்தம் சொல்லிபிட்டது நல்லாருக்குது
பதிலளிநீக்குஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
பதிலளிநீக்குஅன்புள்ள (mru) முருகு,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 செப்டம்பர் மாதம் வரை, முதல் 33 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு
பெரியவாளின் அபார ஞாபக சக்திக்கு கோடி வந்தனம். செக்யூலரிசம் என்பது மதச்சார்பின்மை என்பது தான் சரியான அர்த்தம். எவ்வளவு தெளிவான விளக்கம்.
பதிலளிநீக்குஅன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
பதிலளிநீக்குதிரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 செப்டம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 33 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
செக்யூலரிசம் - விளக்கம், பெரியவரின் ஞாபகசக்தி...அருமை
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
404 out of 750 (53.86%) within
11 Days from 26th Nov. 2015.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 செப்டெம்பர் மாதம் வரை, என்னால் முதல் 33 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
இந்த பதிவின் ஒருசில பகுதிகள் மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (01.07.2018) பகிரப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்புகள்:-
1) https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=429870657515634
2 ) https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=429871477515552
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு