வியாழன், 17 அக்டோபர், 2013

66] புகையைத்தாண்டித்தான் நெருப்பைக்காண வேண்டும்.

2
ஸ்ரீராமஜயம்




பொதுவாக உத்தமமான இன்பத்தில், மூச்சு வலது நாசித் துவாரத்தில் வரும். வெறும் புலன் இன்பம் என்றால் இடது நாசித்துவாரத்தில் வரும். 

இத்தனை உணர்ச்சிகளுக்கும் ஆதாரமான பொருளில் தியானம் வலுவாகிற போது ஒரே சீராக மிக மெதுவாக இரு நாசிகளிலும் சமமாக மூச்சு வரும்.

தியான லட்சியத்தில் ஒன்றுபட்டு விடுகிறபோது மூச்சே நின்று விடும். ஆனால் உயிர் இருக்கும். ஞானம் என்ற பேருணர்வு பூரித்து இருக்கும்.

வெறும் ஆன்மீக நடைமுறை கடமைகளை மாத்திரம் செய்துகொண்டு, இறைவனை எவனொருவன் உணராமல் இருக்கிறானோ, அவன் நெருப்பில் விறகைப்போட்டு, புகையை மட்டும் எழுப்பிக்கொண்டிருக்கிறான். 

அவன் மூடன், அவன் ஆத்ம சொரூபத்தை ஒரு நாளும் அறிந்து கொள்ளமாட்டான்.

oooooOooooo

இந்த சம்பவம் சுமார் 
எழுபது வருஷங்களுக்கு முன் நடந்தது.

பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார். 

அப்போது மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வருஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். 

இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே மகனுக்குத் தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?

மஹாபெரியவா - திக்கற்றவருக்கு தெய்வமே துணை! 

ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.

“மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது. 

மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா…………நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.

ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்…… ஆச்சர்யம்! அந்த வீட்டுப் பெரியவர் ஏற்கனவே காலகதி அடைந்துவிட்டார். 

அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு! 

“எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்…….. ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக சொல்லிவிட்டார். 

அவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார். 

ரெண்டுபக்கத்து நியாயத்தையும் கேட்டதும், பெரியவா முகத்தில் புன்னகை.

“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ… நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை திருப்பித் தரணும்னா…… யோசிப்போம்! 

அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. 

இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம் எப்டி? 

வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்…….. குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்…… ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா? 

அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். 

ரெண்டு பேரும் சேர்ந்து காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.




[நன்றி: அமிர்த வாஹிணி 10 09 2013]





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

57 கருத்துகள்:

  1. வெறும் ஆன்மீக நடைமுறை கடமைகளை மாத்திரம் செய்துகொண்டு, இறைவனை எவனொருவன் உணராமல் இருக்கிறானோ, அவன் நெருப்பில் விறகைப்போட்டு, புகையை மட்டும் எழுப்பிக்கொண்டிருக்கிறான். //
    இறைவழிபாட்டை உணர்ந்து செய்ய வேண்டும் என்பதை அழகாய் கூறிய அமுத மொழி .

    //வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்…….. குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்…… ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா?
    அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். //

    தர்மம் தெரிந்த பிள்ளைகள்! அடுத்தவர் பொருளுக்கு ஆசை படாத பிள்ளைகள்.
    அருமையான பெற்றோர்கள்.பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகள் தர்மத்தை கடைபிடிப்பதில் இருந்து எப்படி தவறுவார்கள்!


    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொன்னவை எல்லாம் அருமையாக பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    நன்றி சார்.



    பதிலளிநீக்கு

  2. ரெண்டு பேரும் சேர்ந்து காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.\
    Seriyana thirpu.



    பதிலளிநீக்கு
  3. ரெண்டு பேரும் சேர்ந்து காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.

    அமுத மழையாய் அருமையான ஆசீர்வாதம் ..!

    பதிலளிநீக்கு
  4. வெறும் ஆன்மீக நடைமுறை கடமைகளை மாத்திரம் செய்துகொண்டு, இறைவனை எவனொருவன் உணராமல் இருக்கிறானோ, அவன் நெருப்பில் விறகைப்போட்டு, புகையை மட்டும் எழுப்பிக்கொண்டிருக்கிறான்.

    பாலில் படு நெய்யாய்
    விறகில் தீயாய் திகழும் இறைவனை உணர்தலே ஞானம்..!

    பதிலளிநீக்கு
  5. சரியான தீர்ப்பு...

    தலைப்பும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான்!.. இறைவனை உணர்வதே ஞானம். தர்மத்தை சிந்தையில் வைத்தவர்கல் எந்நாளும் தவறுவதே இல்லை!.. பரமாச்சார்ய ஸ்வாமிகளின் அருளுரைகளை அமுத மழை என எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளும் தங்கள் பணி வாழ்க!..

    பதிலளிநீக்கு
  7. Very good verdict, lovely and very interesting.... day after day so many divine post from you sir... thank you very much...

    பதிலளிநீக்கு
  8. தர்மம் பற்றி பெரிய்வா விளக்கம் நாம் வாழ்வில் கடைபிடிக்க பெரியவாளை பிரார்த்திப்போம் நல்ல பதிவு அளித்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. /// வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்…….. குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்…… ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா?

    அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான்./// ரொம்ப அருமையா சொல்லி இருக்கார். மகா பெரியவா இல்லையா அதான் :)

    பதிலளிநீக்கு
  10. வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்…….. குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்…… ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா?

    அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான்./// ரொம்ப அருமையா சொல்லி இருக்கார் மஹா பெரியவர் :)

    பதிலளிநீக்கு
  11. தர்மம் பற்றிய விளக்கம் படித்து மகிழ்ந்தோம்....
    அமுத மழையாக பொழிகிறது உங்கள் வலைப்பூ!
    மேலும் மேலும் படிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. வெறும் ஆன்மீக நடைமுறை கடமைகளை மாத்திரம் செய்துகொண்டு, இறைவனை எவனொருவன் உணராமல் இருக்கிறானோ, அவன் நெருப்பில் விறகைப்போட்டு, புகையை மட்டும் எழுப்பிக்கொண்டிருக்கிறான். // உண்மை வரிகள்! கலியுகத்திலும் நேர்மையான இரண்டு பேரை பெரியவாளின் நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. //ரெண்டு பேரும் சேர்ந்து காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.//

    //அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். //

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப்பெரியவாளின் வாக்கு :

    ஆக இங்கு இருவருமே தர்மத்தினைக் காப்பாற்ருகிறார்கள்.

    பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க பெரும்பாலானவர்களுக்கு யோசனை வருவது இயல்பு. தான் பெற்ற கடனை மகன் மூலம் கொடுக்க நினைத்த மனிதரும்... தந்தை சொல்லாததால் கொடுத்த கடனை வாங்க மறுத்த மகனும்... பெரியவரின் சொல்லும்... சிறப்பான பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  15. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர் தர்மத்தைக் காப்பாற்றுகிறார். நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  16. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படாதவர் தர்மத்தைக் காப்பாற்றுகிறார். எளிய வார்த்தையில் பெரிய உண்மை ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
  17. 'தர்மோ ரக்ஷதி ரக்ஷித:'. மிக அருமையான பகிர்வு. மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  18. என்ன ஒரு நியாயமான தீர்ப்பு. கொடுத்தவர், வாங்கியவர் இருவருக்குமே மனதிற்கு சந்தோஷம் கொடுக்கும் தீர்ப்பு! இதனால் தான் இவர் மஹா பெரியவர் ஆனாரோ?

    பதிலளிநீக்கு
  19. மகா பெரியவர் ஆச்சே! அழகான தீர்ப்பை தந்து விட்டார். கடன் கொடுத்தவரின் விலாசத்தைக் கூறியது கண்டு வியப்பாக இருக்கிறது. தர்மம் பற்றியும், இறைவனை உணராதவன் எதைப் போன்றவன் என்பதையும் விளக்கிய விதம் சிறப்பு அய்யா. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. மனதை நெகிழ வைத்த கதை .இப்படியெல்லாம் வாங்கின
    கடனைக் கொடுக்க நினைத்தால் எவ்வளவு சௌகர்யமாக இருக்கும் :)))மாங்கனிச் சாற்றை அருந்திய மகிழ்வு மனதிற்குக் கிட்டியது ஐயா :)))

    பதிலளிநீக்கு
  21. அருமையான தீர்ப்பு கொடுத்து எல்லோருடைய மனதையும் திருப்தியடைய செய்து விட்டாரே மஹா பெரியவர்.

    பதிலளிநீக்கு
  22. விடாக் கண்டன் கொடாக் கண்டன் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட இவர்களோ “உன் பணம் எனக்கு வேண்டாம் “ என்ற நேர்மையாளர்களாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  23. இனிய வணக்கம் ஐயா..
    தியானத்தின் சிறப்பு பற்றிய வார்த்தைகள்
    நிதர்சனமானது. உள்ளுனர்வுகளுடன்
    கடவுளை நாடவேண்டும் என்று உரைக்கும்
    உன்னதமான சொற்கள்.

    பதிலளிநீக்கு
  24. புகையிலை புகையை இழுப்பவர்களும் அதைதான் செய்துகொண்டு அணு அணுவாக மடிந்துகொண்டிருக்கிரார்கள்.

    இறை சிந்தனை வேண்டும் எதை செய்தாலும்

    நற்செயல் செய்பவனை அது மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

    தவறு செய்பவனையும் திருத்தி நல்வழிக்கு கொண்டு செல்லும்.

    எனவே இறைவனை மறவாதீர் எந்நேரமும்.

    நமக்கு நல்வழி காட்டும் குருவையும் மறவாதீர்.

    பதிலளிநீக்கு
  25. "அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். " உண்மையான வார்த்தைகள்.
    கடன் கொடுத்தவரின் விலாசத்தைக் கூறியது வியப்பாக இருக்கிறது. நல்லதொரு பதிவு

    பதிலளிநீக்கு
  26. அழகான பதிவு...


    நேர்மை தான் எப்பொழுதும் காப்பாற்றும்....

    பதிலளிநீக்கு
  27. ''..பொதுவாக உத்தமமான இன்பத்தில், மூச்சு வலது நாசித் துவாரத்தில் வரும். வெறும் புலன் இன்பம் என்றால் இடது நாசித்துவாரத்தில் வரும்..''
    இது எனக்குப் புதிய தகவல் . மிக்க நன்றி ஐயா.
    அடுத்து பெரியவா - கடன்- கதை அருமை.
    உலகம் இப்படி மாறவேண்டும்!
    ஆனால்இன்று எப்படி மாறியுள்ளது!...
    இனிய பாராட்டு.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  28. உண்மை! நாணயம்! நல்ல பதிவும்! நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  29. நேர்மைதான் எப்போழுதும் நம்மை காப்பாறும்,பெரியவா அழகா சொல்லியிருக்கார்...

    பதிலளிநீக்கு
  30. நல்ல பதிவு. தர்மத்தை நினைத்து இந்த அவசர உலகத்தில் சற்று நேரம் ஆழமாக என்னை சிந்திக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  31. ஆகா! இதுவல்லவோ தர்மம்! மஹா பெரியவாளின் அமுதமொழி தொடரட்டும்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  32. அடுத்தவாளின் பொருளுக்கு ஆசைப் படாதவர்களால்தான் தர்மம் காப்பாற்றப்படும். எவ்வளவு அர்த்தமுள்ள வரிகள். இரண்டுபேருமாக அம்பாளின் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.
    பொதுவான நியாயம். மிகவும் நல்ல பதிவு. திரும்பவும் வாசித்தேன். அமுதமொழியல்லவா? அன்புடன்

    பதிலளிநீக்கு
  33. மிகச் சுருக்கமாயினும்
    தர்மத்தின் விளக்கம் படித்து நெகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  34. \\வெறும் ஆன்மீக நடைமுறை கடமைகளை மாத்திரம் செய்துகொண்டு, இறைவனை எவனொருவன் உணராமல் இருக்கிறானோ, அவன் நெருப்பில் விறகைப்போட்டு, புகையை மட்டும் எழுப்பிக்கொண்டிருக்கிறான். \\
    சிந்திக்கவைக்கும் கருத்து. கடமைக்காக அல்லாமல் ஆழ்ந்த மனத்தோடு பக்தியில் ஈடுபடுபவர்களுக்கே தெய்வம் செவிசாய்க்கும். பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  35. அமுதமொழிகளை படித்து தெரிந்து கொண்டேன்.

    சரியான தீர்ப்பு..

    பதிலளிநீக்கு
  36. //இத்தனை உணர்ச்சிகளுக்கும் ஆதாரமான பொருளில் தியானம் வலுவாகிற போது ஒரே சீராக மிக மெதுவாக இரு நாசிகளிலும் சமமாக மூச்சு வரும்.//

    இது எனக்கும் கிடைக்கட்டும் என பிரார்த்தனை செய்யத் தான் முடிகிறது......


    அந்த பணம் அவளோடது - சரியான தீர்ப்பு.....

    பதிலளிநீக்கு
  37. Sharans Samayalarai October 22, 2013 at 6:56 AM

    WELCOME to you Madam. ;)))))

    //Very divine post sir.. first time on your space..//

    Thank you very much for your kind very first visit to my space & for your valuable sweet comments too. I feel so Happy. All the Best. - VGK.

    பதிலளிநீக்கு
  38. ///பொதுவாக உத்தமமான இன்பத்தில், மூச்சு வலது நாசித் துவாரத்தில் வரும். வெறும் புலன் இன்பம் என்றால் இடது நாசித்துவாரத்தில் வரும்.

    இத்தனை உணர்ச்சிகளுக்கும் ஆதாரமான பொருளில் தியானம் வலுவாகிற போது ஒரே சீராக மிக மெதுவாக இரு நாசிகளிலும் சமமாக மூச்சு வரும்.//// புதுத்தகவல்.. ஆச்சரியமாக இருக்கு.

    ஊசிக்குறிப்பு:)
    மீயும் இப்பதிவுக்கு இப்போதான் முதல் முறையா வாறனாக்கும்:))

    பதிலளிநீக்கு
  39. ஆஹா.. வாஅங்கிய பணத்தை கோயில் உண்டியலில் போட்ட காலம் எங்கே... உண்டியலையே திருடி உண்ணும் இன்றைய காலம் எங்கே... காலம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது.. பழசை நினைச்சுப் பெருமூச்சு விடுவதில் அர்த்தமேயில்லை எனத்தான் தோணுது.

    பதிலளிநீக்கு
  40. "அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். நல்ல விளக்கம்.

    பதிலளிநீக்கு
  41. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத இருவர் பற்றிய பகிர்வுக்கு நன்றி. ஶ்ரீரமணி அண்ணா எழுதி படிச்ச நினைவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  42. ///அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். ///

    இதை மெய்ப்பித்த இருவரும் மெய்சிலிர்க்க செய்தனர்

    பதிலளிநீக்கு
  43. ////வெறும் ஆன்மீக நடைமுறை கடமைகளை மாத்திரம் செய்துகொண்டு, இறைவனை எவனொருவன் உணராமல் இருக்கிறானோ, அவன் நெருப்பில் விறகைப்போட்டு, புகையை மட்டும் எழுப்பிக்கொண்டிருக்கிறான்.////

    அருமையான உபதேசம் ! படித்தோம் முடித்தோம் என்று எண்ணாமல் பின்பற்ற வேண்டிய வரிகள் .

    நன்றி . இந்த நாள் இனிதே துவங்கியது உங்கள் பதிவுடன் .நன்றி நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  44. இரண்டு புதல்வர்களும் புண்ணியாத்மாக்கள்!! வாழ்க!

    பதிலளிநீக்கு
  45. கடனை நிவர்த்திப்பதுதான் தர்மம்.

    பதிலளிநீக்கு
  46. ரெண்டு பேரும் சேர்ந்து காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.
    கடன் வாங்கினவரோ திருப்பித்தர நினைக்கிறார். கொடுத்தவரோ வாங்க மருக்கிறார். ஆச்சார்யார் சரியான தீர்ப்பு சொல்லிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  47. //வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்…….. குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்…… ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா? //

    கிருஷ்ணனிடம் இருவர் வந்தார்களாம்.

    அதில் ஒருவர் “சுவாமி, நேற்று என்னுடைய நிலத்தை இவருக்கு விற்றேன். அந்த நிலத்தில் இருந்து பொற்கிழி கிடைத்ததாம். அது எனக்குத்தான் சொந்தம் என்று இவர் என்னிடம் கொடுக்க வந்தார். நான் தான் நேற்றே நிலத்தை விற்று விட்டேனே. அதனால் நிலத்தில் கிடைத்த பொற்கிழி இவருக்குத் தானே சொந்தம்” என்று சொன்னாராம்.

    மற்றொருவர், “சுவாமி நிலத்தை நான் நேற்று வாங்கினேன். இருந்தாலும் இந்தப் பொற்கிழியை எடுத்துச் செல்ல எனக்கு மனம் வரவில்லை. அதை இவருக்கே கொடுக்க விருப்பப் படுகிறேன்” என்றாராம்.

    மாயக் கண்ணனல்லவார், சிரித்துக் கொண்டே, “சரி நாளைக்கு வாருங்கள், தீர்ப்பு சொல்கிறேன்” என்றாராம்.

    மறு நாள் இருவரும் வந்தனாராம்.

    நேற்று நிலத்தை விற்றுவிட்டேன் என்று சொன்னவர். தனக்குத்தான் பொற்கிழி சொந்தம், வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னாராம்.

    மற்றவர் நிலம் தனக்குத்தான் சொந்தம், அதனால் பொற்கிழியும் தனக்கே சொந்தம் என்றாராம்.

    இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கண்ணனின் அமைச்சர், “ஒரே நாளில் என்ன ஆயிற்று இருவருக்கும்” என்று கேட்டாராம். அதற்குக் கண்ணன், “ம். கலியுகம் பிறந்து விட்டது” என்றாராம்.

    ஆனால் இந்தக் கலியுகத்திலும் தந்தை வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் மகனும், தனக்கு விஷயம் தெரியாததால் அதை வாங்கிக் கொள்ள மறுப்பவரும் இருப்பதால் தான் உலகத்தில் மழை பெய்கிறது.

    மகா பெரியவாளின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 12, 2015 at 6:59 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      //கிருஷ்ணனிடம் இருவர் வந்தார்களாம். .......................
      அதற்குக் கண்ணன், “ம். கலியுகம் பிறந்து விட்டது” என்றாராம்.//

      இந்தக்கதையும் (கலியுகத்தில்) படிக்க சுவாரஸ்யமாகவே உள்ளது. மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு


      நீக்கு
  48. வாப்பா வாங்கிகிட்ட கடன அடைக்க இவரு போனாகாட்டியும் அந்தாளு வாங்க மாட்டுராரு. கோவிலு உண்டில போடரதுதா சரியான தீர்வோ.

    பதிலளிநீக்கு
  49. பணத்தை காமாட்சி உண்டியலில் போட்டுவிட்டால் அவள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடுவாள். அதனால்தானே பெரியவா அப்படி சொல்லி இருக்கா.

    பதிலளிநீக்கு
  50. ரெண்டு பேருக்கும் பொருத்தமான ஜட்ஜ்மெண்ட்...

    பதிலளிநீக்கு
  51. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (10.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=438611633308203

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு