என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 11 ஜனவரி, 2014

108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை ?

2
ஸ்ரீராமஜயம்




ஆஞ்சநேயருக்கு 
ஏன் வடைமாலை ?


ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க  வந்தார்.  மனம் குளிரும் வண்ணம் அவரது தரிஸனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். 

இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம் கேளுங்கோ” என்றார்.

அந்த வடநாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஓர் சந்தேகம் நெடுநாட்களாகவே இருந்து வந்தது. 

இது குறித்துப்பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. 

அவர் அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார். 

“ஆஞ்சநேயர் பற்றி எனக்கோர் சந்தேகம் ....” இழுத்தார், அன்பர்.

“வாயு புத்திரனைப்பத்தியா ... கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.

“ஸ்வாமி ... ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லோரும் அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித்தான் என் சந்தேகம் .....”

பெரியவா மெளனமாக இருக்கவே .... அன்பரே தொடர்ந்தார்.

“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான  மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்யாசப்படுகிறது?”

பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார், வட நாட்டிலிருந்து வந்த அன்பர். 

தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. 

கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல .... பெரியவா சொல்லப்போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர். 

ஒரு புன்முறுவலுக்குப்பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

”பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா ....” என்று  சந்திரனை அந்தக்குழந்தைக்கு வேடிக்கை காட்டி, உணவை வைப்பார்கள் பெண்கள்.

அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத்தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.

சாதாரண குழந்தைகளுக்கு ’நிலா’ விளையாட்டுப்பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு ’சூரியன்’ விளையாட்டுப்பொருள் ஆனது. 

அதுவும்  எப்படி? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன்  கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.  

http://balhanuman.files.wordpress.com/2010/10/hanuman_sun.jpg?w=400&h=400


அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது, வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ’ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்துவிட்டது.

மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். 

வாயுபுத்திரன் அல்லவா? அடுத்த கணமே அது தன் கையில் வந்துவிட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். 

பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப்பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. 

ஆனால் அனுமன் சென்ற வேகத்தில், ராகு பகவானால் செல்ல முடியவில்லை. 

சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேஸில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப்போனார். 

இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். 

அதாவது தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப்பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வாங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும், நிவர்த்தி ஆகிவிடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

இந்த உணவுப்பண்டம், எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். 

அதாவது தன் உடல் போல் [பாம்பு போல்] வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். 

அதைத்தான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். 

ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகிவிடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.


http://balhanuman.files.wordpress.com/2010/10/hanuman_vadai_maalai_2.jpg?w=300&h=400

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். 

வடையாகட்டும் .... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். 

தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளிநாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல்போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சாத்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. 

தவிர வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும் அவர்களுக்குக் காலை நேரத்திலேயே .... அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். 

எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்குச் சாத்தி வழிபடுகிறார்கள். 

எது எப்படியோ அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக்கொண்டபடி, உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.  

அது உப்பாக இருந்தால் என்ன ... சர்க்கரையாக இருந்தால் என்ன ... மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தார், மஹா பெரியவா. 

  http://balhanuman.files.wordpress.com/2010/10/hanuman_vadai_maalai.jpg?w=432&h=576 http://balhanuman.files.wordpress.com/2010/10/jangiri.jpg?w=250&h=250 


பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக்கேட்ட வட நாட்டு  அன்பர் முகத்தில் பரவசம். 

சடாரென மஹானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். 

கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

-=-=-=-=-=-



[ 2 ]

அம்மனோ .... சாமியோ !
அத்தையோ .... மாமியோ !!
கம்பனூர் .... நீதியோ !!!
கல்யாண .... சேதியோ !!!!

[இது 1967ல் வெளிவந்த, செல்வி. ஜெயலலிதா அவர்கள் நடித்த ,
“நான்” என்ற மிக அருமையான திரைப்படத்தில் வரும் பாடல்]


ஒரு கல்யாண வீடு. நாதஸ்வரம் தடபுடலாக மேளதாளத்துடன் வாசிக்கும் சப்தம், குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு விளையாடும் சப்தம். 
காரண, கார்யமே இல்லாமல் சும்மாவாவது வேகவேகமாக நடந்து கொண்டிருக்கும் உறவும் நட்பும் என்று களைகட்டிக் கொண்டிருந்தது.
இதோ பையன் காஸி யாத்ரை கிளம்பினான். பெண்ணைப் பெற்றவர் அவன் காதில் ஏதோ கிசுகிசுவென்று சொன்னார். 
திரும்பி வந்தான்; பெண்ணுக்கும் பையனுக்கும் ஊஞ்சல் ஆனது. திருஷ்டி என்று நாலாபக்கமும் பொத்து பொத்தென்று கலர்சாத உருண்டைகள் வீசப்பட்டன; பையனும் பெண்ணும் கையைக் கோர்த்துக் கொண்டு மணமேடையில் வந்து உட்கார்ந்தார்கள்.


திடீரென்று அத்தனை சந்தோஷமும் ஏக காலத்தில் நின்றது! ஒரே பரபரப்பு! ஏன் ?



உட்கார்ந்திருந்த கல்யாணப்பெண் அப்படியே மயங்கிச் சாய்ந்தாள்! கூடவே fits வந்து, கையும் காலும் இழுத்துக் கொள்ள, வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது! பாவம்! 

பெற்றவர்களுக்கு உயிரே போய்விட்டது! இரண்டு குடும்பமும் தவித்தன. 

யாரோ சொந்தக்கார டாக்டர் உடனே வந்து உள்ளே தூக்கிக்கொண்டு போய் முதலுதவி பண்ணினார்.

இனி என்ன செய்வது? கல்யாணம் நடக்குமா? ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.




”பகவானே! என்ன சோதனை? இப்போதுதான் முதல் முறையாக பெண்ணுக்கு fits வந்திருக்கிறது. அவளுக்கு எதிர்காலமே இனி இல்லாமல் போய்விடுமோ?” பெண்ணின் பெற்றோர் புலம்பினர்.



இரண்டு குடும்பமுமே பெரியவாளிடம் பக்தி பூண்ட குடும்பம். பத்திரிகை அடித்ததும் முதலில் பெரியவாளிடம் சமர்ப்பித்து அவருடைய அனுக்ரஹத்தோடுதான் நடக்கிறது. பின் ஏன் இப்படி?

கல்யாணம் பண்ணி வைத்துக் கொண்டிருந்த "ஆத்து வாத்யார்" [வைதீகர்] அம்ருத தாரை மாதிரி ஒரு யோஜனை சொல்லி, எல்லார் வயிற்றிலும் பாலை வார்த்தார்!

" இங்க பாருங்கோ! யாரும் அச்சான்யப்படவேண்டாம்! 

லக்னத்துக்கு இன்னும் நெறைய டைம் இருக்கு. நேக்கு என்ன தோண்றதுன்னா... 

நம்ம மாதிரி திக்கத்தவாளுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் பெரியவாதான்! 

பேசாம, பெரியவாகிட்ட விஷயத்தை சொல்லச் சொல்லி, என்ன பண்ணலாம்ன்னு கேளுங்கோ!.. அவர் என்ன சொல்றாரோ, அந்த உத்தரவுப்படி நடப்போம்.." 

என்றதும், உடனே மடத்தின் மானேஜருக்கு விஷயத்தைச் சொல்லி, அவரும் உடனேயே பெரியவாளிடம் சொன்னார்.


கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த பெரியவா, 

"பொண்ணாத்துக்காராளுக்கு குலதெய்வம்.. ஒரு மஹமாயி! 
அவளுக்கு ப்ரார்த்தனை பண்ணிண்டு, ஒரு வேப்பிலைக் கொத்தை எடுத்துப் பொண்ணோட தலேல சொருகணும்... 
அனேகமா செரியாப் போய்டும்.."



உடனே மானேஜர் போனில் விஷயத்தை சொன்னதும், பெண்ணின் அம்மா, குலதெய்வமான மஹமாயியை வேண்டிக்கொண்டு, வேப்பிலைக் கொத்தை பெண்ணின் தலையில் சொருகினாள். 

ஆச்சர்யமாக, மயங்கிக் கிடந்த பெண், உடனேயே பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்!



பையன் குடும்பத்தார், பெரியவாளுடைய உண்மையான பக்தர்கள் என்பதால், எந்தவித ஆக்ஷேபணையோ, முகச்சுளிப்போ இல்லாமல் உடனேயே பெண்ணையும், மாப்பிள்ளையையும் மணமேடையில் உட்கார வைத்து, குறித்த நேரத்தில் நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. 

சேஷ ஹோமம் ஆனதும், காஞ்சிபுரம் நோக்கி இருவீட்டாரும் ஓடினார்கள்.


"பெரியவா அனுக்ரஹத்தால கல்யாணம் நன்னா நடந்தது..." நன்றிக் கண்ணீரோடு பெற்றவர்கள் கூறினார்கள்.



"மஹமாயி அனுக்ரஹத்தால...ன்னு சொல்லு!..." புன்னகைத்தார் பெரியவா.


"வந்து.....பொண்ணுக்கு இப்டி fits வந்துடுத்தே பெரியவா! ..." அப்பா இழுத்தார்.

"FIT ...ன்னு சொல்லு!.." சமத்காரமாக பெரியவா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, "க்ஷேமமா இருப்பா!" என்று திருக்கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். இது போறுமே !


Fits வந்தது, தெய்வ குத்தம்; 
FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!

[Thanks to my beloved friend Mr. RISHABAN Srinivasan Sir for sharing this Miracle incident from Sage of Kanchi on 09/01/2014]



[ 3 ]


ஜன்மராசியில் குரு வந்தால்


ஒரு குருப்பெயர்ச்சி தினத்தன்று பெரியவாளை ஒரு பக்தர் தரிஸித்தார். 

“எனக்கு ஜன்ம ராசியில் குரு பகவான் வந்திருக்கிறார் என்று ஜோஸ்யர் சொல்லுகிறார். 

இதனால் எனக்கு எதாவது கஷ்டம் வருமா?” என்று அந்தப் பக்தர் கேட்டார். 

“அப்படியில்லை, ஸ்ரீ ராமர் காட்டில் தவம் செய்துகொண்டு, பல முனிவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். 

செயற்கரிய பல செயல்களைச் செய்தார். 

அது போகட்டும், ராமர் காட்டுக்குப் போனதாலே, நீயும் காட்டுக்குப் போகனுமோன்னு பயப்படறே... அவ்வளவுதானே? 

வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், சண்பகாரண்யம், தர்ப்பார்ண்யம்னு பல காட்டு க்ஷேத்திரங்கள் நம் நாட்டுக்குள்ளேயே இருக்கு. 

இதில் ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப் போய் இரண்டு மூன்று நாள் தங்கி, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வா. 

உனக்கும் மனச் சாந்தி கிடைக்கும். 

ஜோஸ்யர் சொன்னதும் சரியாக போனமாதிரி இருக்கும்” 

என்று பெரியவா கூறியதும், அந்த பக்தர் பெருத்த நிம்மதி அடைந்தார்.

-=-=-=-=-=-=-

Root or Fruit ?

Dharma is the Root of our Religious Tree.
Bhakthi and Gnana are its Flowers and Fruits.
It is our Duty to preserve the Root from getting Dry.

- Sri Sri Sri Maha Periyava

-=-=-=-=-=-=-


28.05.2013 குருப்பெயர்ச்சியன்று 
“வெயிட்லெஸ் விநாயகர்” 
என்ற தலைப்பில்



’பிள்ளையார்’இல் துவங்கிய இந்தத்தொடர் 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் 
இன்று  11.01.2014 சனிக்கிழமை
’ஹனுமன்’இல் நிறைவடைந்துள்ளது.


இந்த மெகா தொடரின் 
பகுதி-1 க்கான இணைப்பு:  

-=-=-=-=-=-=-




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 

 ’அனுக்ரஹ அமுத மழை ’ பற்றி

இன்னும் ஆயிரக்கணக்கான

விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள 
எனக்கு ஆசையிருப்பினும்,
இப்போதைக்கு இத்துடன் 
முடித்துக்கொள்கிறேன்.




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானம்.



இந்த மிக நீண்ட மெகா தொடர் 
இன்றுடன் , இத்துடன் நிறைவடைகிறது.


இந்தத்தொடரின் 
108 பகுதிகளுக்கும் சேர்த்து
ஒட்டுமொத்தமான
‘கிளி’ ப்பதிவு மட்டும் 
விரைவில் தனியாக வெளியிடப்படும்


 

சுபம் 

oooooooooooooooooooooooooooooooooo

  




 

சிறுகதை விமர்சனப் போட்டி !


ஆண்டு முழுவதும் பரிசுகள் !

அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!

மொத்த பரிசுத்தொகை  
Minimum: Rs.12,000 
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants ]

   

வெற்றிபெற அட்வான்ஸ் 
நல்வாழ்த்துகள் !!!


சிறுகதை விமர்சனப் போட்டிக்கான
முதல் சிறுகதை 14.01.2014 செவ்வாய்க்கிழமை
’தைப்பொங்கல்’ 
பண்டிகையன்று
வெளியாக உள்ளது.

காணத்தவறாதீர்கள் !

போட்டியில் 
கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !!


மேலும் முழு விபரங்களுக்கு


என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்





83 கருத்துகள்:

  1. அன்பின் வை.கோ

    தங்களின் கண் பிரச்னை எப்படி இருக்கிறது - மாதக் கடைசியில் அறுவை சிகிட்சை செய்து கொள்வதாக இருக்கிறீர்கள் - இணையத்தை சற்றே மறந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் - கண்ணுக்கு அதிக சுமை அளிக்காதீர்கள் - கண் பிரச்ணை விரைவினில் தீர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வை.கோ

    ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை - பதிவு அருமை - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் விளக்கம் அருமை - வ்டை மாலை - ஜாங்கிரி மாலை - விளக்கிய பெரியவா பெரியவா தான்.

    நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வை.கோ

    //மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தார், மஹா பெரியவா. //

    மஹாப் பெரியவா இடி இடியெனச் சிரிப்பவரா ? கண்டதில்லை - கேள்விப்பட்டதில்லை

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வை.கோ

    ஒரு திருமணத்தில் நடந்த் நிகழ்வினை பதிவாக வெளியிட்டது நன்று - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரிய்வாளின் அனுக்கிரகம் இருக்கும் வரை எதற்கும் கவலைப்பட வேண்டாம் - திருமணம் நல்ல படியாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வை.கோ

    "பெரியவா அனுக்ரஹத்தால கல்யாணம் நன்னா நடந்தது..." நன்றிக் கண்ணீரோடு பெற்றவர்கள் கூறினார்கள்.

    "மஹமாயி அனுக்ரஹத்தால...ன்னு சொல்லு!..." புன்னகைத்தார் பெரியவா. - அவர்தான் பெரியவா

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வை.கோ

    ஜன்ம ராசியில் குரு வந்தால் என்ன செய்ய வேண்டுமென மகாப் பெரியவா கூறியதைப் ப்ற்றிய பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வை.கோ

    //
    ’பிள்ளையார்’இல் துவங்கிய இந்தத்தொடர்
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில்
    இன்று 11.01.2014 சனிக்கிழமை
    ’ஹனுமன்’இல் நிறைவடைந்துள்ளது.
    //

    தங்களீன் கடும் உழைப்பும் ஈடுபாடும் - துவங்கிய செயலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளீன் ஆசியினால் ந்லல முறையில் முடித்ததும் பாராட்டுக்குரிய செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வை.கோ

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்

    ’அனுக்ரஹ அமுத மழை ’ பற்றி

    //
    இன்னும் ஆயிரக்கணக்கான
    விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள
    எனக்கு ஆசையிருப்பினும்,
    இப்போதைக்கு இத்துடன்
    முடித்துக்கொள்கிறேன்.
    //

    கவலை வேண்டாம் - ஓய்வெடுத்துக் கொண்டு - கண் சிகிட்சை செய்து கொண்டு - இணையத்தைச் சற்றே மறந்து - பிறகு ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரிய்வாளின் அனுக்கிரஹத்தால் அமுத மழையினை மீண்டும் தொடர்க. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. தெய்வீக மெகா தொடரை மிகவும் சிறப்பாகத் தொடங்கி சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள் ! வாழ்த்துக்கள் ஐயா .ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் தரிசனத்தைக் கண்டு மகிழ்ந்ததற்கு ஒப்பான தகவல்களைத் தொடர்ந்தும் எங்களுக்கு வழங்கி வந்த தங்களுக்கு அம்பாளடியாளின் நன்றி கலந்த பாராட்டுக்களும் அன்புப் பரிசாக அழகிய மலர்க் கொத்தும் பரிசாகத்
    தந்து விடை பெறுகின்றேன் .மிக்க நன்றி ஐயா சிறப்பான பகிர்வுகளுக்கு .

    பதிலளிநீக்கு
  10. வடை மாலைக்கான காரணம் இதுவரை
    அறியாதது.தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
    மிக மிக அற்புதமான 108 பதிவுகள்
    தந்து அனைவருக்கும் மகாப் பெரியவரின்
    மகாத்மியங்களை அறியச் செய்தமைக்கு
    எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    தொடர்ந்து குறைவின்றி எல்லா நலங்களையும்
    வளங்களையும் வாரி வழங்கவேணுமாய்
    அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
  11. வடை மாலைக்குள் இவ்வளவு பெரிய செய்தி இருப்பதை அறிந்த வியந்தேன் ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
  12. /108 /வது மெகா பகுதிக்கு.மற்றும் உளுந்துவடை /ஜாங்கிரி மாலைகள்பற்றிய .மிக அருமையான விளக்கங்களுடன் அருமையாக பகிர்ந்த வல்லமையாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ../

    பதிலளிநீக்கு
  13. அற்புதமான தொடர்!!.. அழகாகத் துவங்கி, மிக அருமையாக நிறைவு செய்து விட்டீர்கள்... குருவருள் எங்களுக்கும் கிடைக்கச் செய்த தங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது!!.. ஸ்ரீமஹா பெரியவர், நம் அனைவருக்கும் நல்லாசிகளைத் தந்து வழி நடத்தக் கோருகிறேன்... மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. //இன்னும் ஆயிரக்கணக்கான
    விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள
    எனக்கு ஆசையிருப்பினும்,
    இப்போதைக்கு இத்துடன்
    முடித்துக்கொள்கிறேன். //

    எடுத்துக் கொண்ட விஷயத்தில் சிரத்தையுடன் ஆசை கூடிச் செய்வது பாக்கியம். அந்த அனுபவம் உங்களுக்கு வாய்த்தது நீங்கள் பெற்ற செல்வம். அந்த செல்வத்தை வாரி வழங்கியிருப்பது 'ஊருணி நீர் நிறைந்தற்றே' செயல். இப்பொழுதைக்குத் தான் நிறைவு செய்திருக்கிறீர்கள் என்று
    தெரிகிறது. செளகரியப்பட்ட பொழுது தொடருங்கள். வாசித்து ஜென்மம் கடைத்தேறக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி, கோபு சார்.

    பதிலளிநீக்கு
  15. பதிவில் சொல்லப்பட்ட
    எல்லா விஷயங்களும் அருமை.
    படங்களும் அருமை.

    தெரிந்த செய்திகளாயிருந்தாலும்
    மகானின் மகிமைகளை eththanai
    முறை படித்தாலும்
    இன்பம் தருகிறது துன்பம் போக்குகிறது
    மனதிற்கு சாந்தி தருகிறது. (நீங்கள் நினைக்கும் சாந்தி அல்ல )
    .
    ஊனக் கண் ஓய்வு எடுக்கும் நேரத்தில் உலக சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உள்ளிருக்கும் அகக் கண்ணை திறக்க முயற்சி செய்யுங்கள்.

    இதுபோன்ற வாய்ப்பு உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. உங்கள் குணம் அப்படி.

    எண்ணங்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
    Say Hari amd dont worry

    பதிலளிநீக்கு
  16. சாதாரண குழந்தைகளுக்கு ’நிலா’ விளையாட்டுப்பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு ’சூரியன்’ விளையாட்டுப்பொருள் ஆனது.

    சிவாம்சமான அனுமனுக்கு ஜொலிக்கும் சூரியனே வ்ளையாட்டுப்பொருள் ஆகியது ரசிக்கவைத்தது ..!

    பதிலளிநீக்கு
  17. அது உப்பாக இருந்தால் என்ன ... சர்க்கரையாக இருந்தால் என்ன ... மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” //
    கூட உளுந்தும் சேர்ந்து புரதசத்து உடலுக்கு அளித்து மனதுக்கு மகிழ்ச்சியும் அளிக்கும் சத்தான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  18. //இன்னும் ஆயிரக்கணக்கான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசையிருப்பினும், இப்போதைக்கு இத்துடன்
    முடித்துக் கொள்கிறேன். //

    தாங்கள் மேற்கொண்ட பணி மகத்தானது.
    குருவருளும் திருவருளும் உடனிருந்து காப்பதாக!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  19. Fits வந்தது, தெய்வ குத்தம்;
    FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!

    அனுக்ரஹங்களை அமுதமழையாக வர்ஷித்த ஆனந்தப்பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  20. வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், சண்பகாரண்யம், தர்ப்பார்ண்யம்னு பல காட்டு க்ஷேத்திரங்கள் நம் நாட்டுக்குள்ளேயே இருக்கு.

    இதில் ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப் போய் இரண்டு மூன்று நாள் தங்கி, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வா. //

    ஆத்மார்த்தமான பரிகாரம் ..!

    பதிலளிநீக்கு
  21. வடைமாலை விளக்கம் உட்பட மற்ற அனைத்தும் அருமை... சிறப்பான தொடர் ஐயா... நன்றிகள்... வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  22. ’பிள்ளையார்’இல் துவங்கிய இந்தத்தொடர்
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் இன்று 11.01.2014 சனிக்கிழமை’ஹனுமன்’இல் நிறைவடைந்துள்ளது.//

    ஸ்திரவாரமும் , வைகுண்ட ஏகாதசியும் , கூடாரவல்லியும் இணைந்த விஷேசமான நாளில் சிறப்பான 108 -வது அமுதமழை என்பது மிகச்சிறப்பான திட்டமிடல் ..
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  23. இந்த மிக நீண்ட மெகா தொடர்
    இன்றுடன் , இத்துடன் நிறைவடைகிறது.

    இரண்டாவது பகுதி மீண்டும் தொடரட்டும்...
    இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  24. அனுமனுக்கு தென்னிந்தியாவில் வடைமாலை; வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை. அவரவர் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ப இறை வழிபாடு. நல்ல விளக்கம்!

    இந்த வடைமாலை பற்றி படித்ததும் , நமது மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்கள், உளுந்த வடையில் மட்டும் ஏன் ஓட்டை போடுகிறார்கள் என்ற காரணம் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. கூகிளில் தேடிப் பிடித்தேன். அந்த பதிவு இதோ “ ஹனுமாரும் வடைமாலையும்! ”
    http://chennaipithan.blogspot.com/2011/10/blog-post_29.html

    நல்லவேளை அந்த மணப்பெண் மயக்கம் மட்டும் அடைந்தாள்..
    படத்தில் வருவது போல் “ அத்தையோ மாமியோ “ என்று அருள் வந்து ஆடியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?

    அஷ்டமத்தில் சனி, ஜென்ம ராசியில் குரு என்று அடிக்கடி ஜோசியம் பார்ப்பவர்கள் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறேன். எல்லாமே ஒரு கணக்கு, நம்பிக்கைதான்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அனைவருக்கும், எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! கண் அறுவை சிகிச்சை செய்வதாக இருக்கிறீர்கள்! நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளவும். வலைப்பதிவு வேலைகளை சற்று ஒதுக்கி வைக்கவும். ஆர்வக் கோளாறு காரணமாக கம்ப்யூட்டர் பக்கம் செல்வதை, சில நாட்களுக்கு தள்ளி வைக்கவும். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. 108 ம் அருமை.. தெய்வீக மழையில் நனைந்தோம் குரு கிருபை எல்லோருக்கும் கிடைக்க உங்கள் எழுத்துக்கள் உதவும் நன்றி..

    பதிலளிநீக்கு
  27. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதின் ரகசியம் விளங்கியது. .ஜாங்கிரி மாலை கூடவா? ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அதன் தாத்பர்யம் நன்கு விளங்கியது இப்போது. திருமணப்பெண் உடல் நிலை சரியாக மகா பெரியவர் அருளிய விதம் அருமை.
    அருளமுதம் அருமையாய் நிறைவு செய்திருக்கிறீர்கள்.

    உங்கள் கண் சிகிச்சை முடிந்ததா? அதிகமாக வலைப் பக்கம் வராமல் கண்ணிற்கு ரெஸ்ட் கொடுங்கள் சார்.
    Wish you a speedy recovery !

    பதிலளிநீக்கு
  28. ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை என்பதை விவரமாக சொன்ன பெரியவரின் கருத்தைப் படித்து அறிந்து கொள்ள முடிகிறது... அருமை ஐயா...

    கண் சிகிச்சை முடிந்ததா? சீனா ஐயா சொல்வது போல் கொஞ்சம் ஓய்வெடுங்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  29. அனுமனுக்கு உளுந்து வடை சாத்துவதற்கும், ஜாங்கிரி மாலை (எனக்கு இது புதிய தகவல்!) சாத்துவதற்கும் காரணங்கள் எத்தனை இயல்பாக இருக்கிறது!
    fits வந்த பெண் fit ஆனது மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
    உங்களது பதிவு 'பிள்ளையார் பிடிக்க (ஆரம்பம்) குரங்காய் முடிந்தது (முடிவு) நல்ல ஆரம்பம் நல்ல முடிவு!

    கண் ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முன்பைவிட ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
    கண் ஆபரேஷன் செய்துகொண்டு கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுங்கள் கோபு ஸார். மறுபடி பதிவுகள் போட்டுவலைப்பதிவில் கலக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. பிள்ளையாரையும், ஆஞ்சநேயரையும் தவிர்த்து, மற்றப்படங்கள் கண்ணில் படவே இல்லை. என்ன காரணம்னு புரியவில்லை.

    கண் ஆபரேஷனா? கவனமாக இருக்கவும். குறைந்தது ஒரு மாசத்துக்காவது இணையத்துக்கு வர வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  31. ஜாங்கிரி மாலையும் பார்த்திருக்கேன். வடைமாலையும் பார்த்திருக்கேன். :)))))

    பதிலளிநீக்கு
  32. வடக்கிற்கும் தெற்கிற்கும் கடவுள் விஷயத்தில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. எல்லாத்துக்கும் தகுந்த காரணம் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது தங்களின் இந்த பதிவால்.

    பதிலளிநீக்கு
  33. வடையாகட்டும் .... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். //
    இதற்கு மஹானின் விளக்கம் மிக அருமை.

    குருவின் அருளால் கண் அறுவைசிகிச்சை நலமாய் நடந்து ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் வந்து பதிவுகள் தாருங்கள்.
    108 பதிவுகள் குருவைப்பற்றி ஒரு தவம் போல் அதை செய்து இருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    குருவின் அனுக்கிரக மழையில் நனைய வைத்த உங்கள் கருணைக்கு நன்றி.
    திருமண பெண்ணுக்கு மகமாயி அருளை குரு பெற்று தந்த விஷயம் மெய்சிலிர்க்கிறது.


    பதிலளிநீக்கு
  34. அற்புதமான தொடர்! அழகான முத்தாய்ப்பு!! பகிர்வுக்கு மிக்க நன்றி!
    //Dharma is the Root of our Religious Tree.
    Bhakthi and Gnana are its Flowers and Fruits.
    It is our Duty to preserve the Root from getting Dry.// நிச்சயம்!!

    உங்கள் கண்களில் பிரச்னை இருந்தும் இவ்வளவு சிரத்தையோடு இந்தத் தொடரை வெளியிட்டுள்ளீர்க்ள்; மஹா பெரியாளின் அனுக்ரஹத்தால் கண் பிரச்னை சீக்கிரம் சரியாகிவிடும். சிற்து ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இறங்குங்கள்!!

    பதிலளிநீக்கு
  35. அற்புதமான தொடர்! அழகான முத்தாய்ப்பு!! பகிர்வுக்கு மிக்க நன்றி!
    //Dharma is the Root of our Religious Tree.
    Bhakthi and Gnana are its Flowers and Fruits.
    It is our Duty to preserve the Root from getting Dry.// நிச்சயம்!!

    உங்கள் கண்களில் பிரச்னை இருந்தும் இவ்வளவு சிரத்தையோடு இந்தத் தொடரை வெளியிட்டுள்ளீர்க்ள்; மஹா பெரியாளின் அனுக்ரஹத்தால் கண் பிரச்னை சீக்கிரம் சரியாகிவிடும். சிற்து ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இறங்குங்கள்!!

    பதிலளிநீக்கு
  36. வடைமாலை குறித்த விளக்கங்கள் அறிந்து மகிழ்ந்தேன்! இடையில் சில பதிவுகள் படிக்க முடியவில்லை! பிறகு படிக்கிறேன்! அருமையான தொடரை அஷ்டோத்திரமாக கோர்த்து நிறைவு செய்தமை அழகு! த்ரிஸதி, சகஸ்ரநாமா அளவுக்கு பெரியாவாளின் புகழை கூறீக்கொண்டே செல்லலாம்! எங்களுக்கும் படிக்க அருமையாக இருக்கும்! ஆலோசிக்கவும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  37. வடை மாலை - திருமண நிகழ்வு என் நல்ல பதிவுடன் இணைந்திருந்தோம் இனிய நன்றி.
    இறையாசி நிறையட்டும்.'
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  38. ஆஞ்சனேயருக்கு வடைமாலை ஜாங்கிரி மாலை பரமாச்சார்யளின் விளக்கம் அருமையாக இருந்த்து.மஹமாயி அருளோடு மஹாபெரியவாளின் அனுக்ரஹமும் சேர்ந்து திருமணம் இனிதே முடிந்த சம்பவம் நெகிழவைத்தது.நன்றி

    பதிலளிநீக்கு
  39. அஷ்டோத்திர பதிவுகள் முடிந்துள்ளதுஇனி பலஸ்ருதி இதை படித்தவர்களுக்கும்.பின்னூட்டம் ஒருமுறையாவது இட்டவர்களுக்கும் ,மஹாபெரியவாளின் அனுக்ரஹம் பூரணமாககிடைத்து மனநிம்மதியுடன் எல்லாவளமும் பெற்று வாழ்வார்கள்.

    பதிலளிநீக்கு
  40. தாங்கள் கண் அறுவை சிகிச்சை முடிந்து தேவையான ஒய்வுக்குப்பிறகு நல்ல புத்துணர்வுடன் மீண்டும் பல பதிவுகளை வெளீயிடவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மஹாபெரியவாளின் அனுக்ரஹம் தங்களுக்கு கிடைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  41. தாங்கள் கண் அறுவை சிகிச்சை முடிந்து தேவையான ஒய்வுக்குப்பிறகு நல்ல புத்துணர்வுடன் மீண்டும் பல பதிவுகளை வெளீயிடவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மஹாபெரியவாளின் அனுக்ரஹம் தங்களுக்கு கிடைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  42. வடஇந்தியாவிலும், மும்பையிலும் கூட தமிழ்நாட்டுக் கோவில்களில் வடைமாலை சாற்றப்படுகிறது. எனக்கு ,வீட்டில் பிள்ளையின்கார் வசதிகளிருந்தால் கூட தனியாகப் பகவர தெம்பு இல்லை. ஆனால் இன்று கோயிலுக்குப்போய் ஹநுமனை வடைமாலை,வெண்ணெய் சாற்றினபடி தரிசனம் செய்தது தொடர்ந்து அமுத மொழிகேட்டு, ஹனுமாரைத்தரிசித்ததுதான் காரணம் என்று தோன்றியது. அடுத்த 15ம்தேதி வடைமாலை டாற்ற பமமும் கட்டினான் எனது பிள்ளை. இதெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் நிகழ்ந்தது எப்படி?
    ஆஞ்சநேய பரமானந்த மூர்த்தே. அகணித குண கீர்த்தே தான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  43. இதையெல்லாம் யாருக்குச் சொல்ல வேண்டும்? என் மனதின் மகிழ்ச்சி அனுமனுக்குரியது. மாலை சாற்றும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்தால் ஸரி என்ற பெரியவாளின் வாக்கு மனதில் நின்றது. மனதால்தான் நமஸ்காரம்கூட!!!!
    அன்புடன்

    பதிலளிநீக்கு
  44. fits----fit என்ற சொல்லாக மாறியது அவரின் அனுக்ரஹ பலனே அன்புடன்

    பதிலளிநீக்கு
  45. ஜன்மராசியில் குரு வந்தால் கஷ்டம் வருமா? பக்தரின் கேள்வி.
    வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரம்யம், சண்பகாரண்யம்
    தர்பாரண்யமென காட்டுச் சேத்திரங்கள் நாட்டிலேயே இருக்கிறது.
    ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப்போய் 2 நாளிருந்து தரிசனம் செய்து விட்டுவா.
    எவ்வளவு பொருள் பொதிந்த அனுக்கிரஹம்.

    நாம் எந்த ஆரண்யத்திற்குப் போகமுடியும்? மனது சிந்திக்க வைக்கிறது.
    பொருமையாக கண் ஆபரேஷன் செய்து அனுகூலமான பின்பு
    இந்த ப்ளாக் எல்லாம் போடுங்கள். எல்லோருடைய நல்லெண்ணங்களும் உங்கள் நன்மையை வேண்டும். ஆதலால்
    கடவுளருளால் எல்லாமே நன்மையாக முடியும்.
    மேன்மேலும் அருள் கிட்டும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  46. ஓய்வு என்பது அவசியம். நலம் பெருக. அன்புடன்

    பதிலளிநீக்கு
  47. I had read the story of vadai maalai earlier but not the story of fits...anyway we get energy whenever anything about such great souls are heard or read...
    thank you

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ananthasayanam T January 11, 2014 at 10:10 PM

      வாங்கோ, வணக்கம்.

      //I had read the story of vadai maalai earlier but not the story of fits...anyway we get energy whenever anything about such great souls are heard or read...
      thank you//

      Most Respected & Dear Sir,

      WELCOME !

      I am so so so so so so Happy in seeing your Valuable Comments in my Blog, for the very first time, that too on an auspicious day.

      இன்று ஸ்திர வாரம் [ சனிக்கிழமை ], வைகுண்ட ஏகாதஸி, கூடாரைவல்லித் திருநாள் எல்லாமே சேர்ந்து அமைந்துள்ளது ஓர் விசேஷம் என்றால், அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளிக்கொண்டிருக்கும் ‘அனந்த சயன’ப் பெருமாளே’ நேரில் எழுந்தருளி, ஸேவை சாதித்து. இந்த அடியேனின் பதிவுக்கு வருகை தந்து, சிறப்பித்துக் கருத்துச்சொல்லியுள்ளது மற்றொரு மிகப்பெரிய விசேஷமல்லவா !

      இதற்கு அடியேன் என்ன பாக்யம் செய்தேனோ? !!!!!!!! ;))))))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், Sir.

      Yours affectionately,
      V. Gopalakrishnan

      நீக்கு
  48. Vadai maalai kathai nandraaga irukkirathu. idu theriyaamaleye romba varusham naan vadai maalai hanumarukku saatriyirukken!

    Inda thodar migavum nandraaga irukkkirathu!

    பதிலளிநீக்கு
  49. என்னுடைய பின்னூட்டங்களில் எழுத்துப் பிழைகள். அவஸரமாகப் போஸ்ட் செய்ததின் விளைவு. திருத்திப் படிக்கவும்.
    அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi January 12, 2014 at 10:48 AM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //என்னுடைய பின்னூட்டங்களில் எழுத்துப் பிழைகள். அவஸரமாகப் போஸ்ட் செய்ததின் விளைவு. திருத்திப் படிக்கவும்.//

      அதனால் பரவாயில்லை, மாமி. இது இன்று பலருக்கும் மிகவும் சகஜமாக ஏற்படக்கூடிய எழுத்துப்பிழைகள் தான்.

      தாங்கள் இந்த வயதிலும் இவ்வளவு ஆர்வமாக எழுதிவருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  50. வணக்கம். தங்களின் மகாப் பெரியவரின் அற்புதங்கள் தொடரினைப் படித்து என்னையே நான் செம்மைப்படுத்திக்கொண்டேன். மிகவும் அருமையாக எழுதிவந்தீர்கள். மகாப் பெரியவரின் அன்பில் நானும் மூழ்கியிருக்கிறேன். அருமை. தங்களின் பயணம் தொடரவும், இனி மேன்மேலும் பல அரிய விடயங்கள் எழுத இறைவன் தங்களுக்கு நீணட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும்தர வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  51. Mail Message from Mr. Kasiviswanath Ramanathan Sir:

    //kasiviswanath ramanathan has left a new comment on your post
    "108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை ?": //

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  52. எது எப்படியோ அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக்கொண்டபடி, உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.




    அது உப்பாக இருந்தால் என்ன ... சர்க்கரையாக இருந்தால் என்ன ... மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தார், மஹா பெரியவா. //
    "வந்து.....பொண்ணுக்கு இப்டி fits வந்துடுத்தே பெரியவா! ..." அப்பா இழுத்தார்.
    "FIT ...ன்னு சொல்லு!.." சமத்காரமாக பெரியவா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, "க்ஷேமமா இருப்பா!" என்று திருக்கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். இது போறுமே !Fits வந்தது, தெய்வ குத்தம்;
    FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!//
    நிறைவு செய்த விதம் அருமை! தெய்வம் சிரித்து சிரிக்க வைத்த விதம் அருமை! தங்களின் இந்தப் பதிவுகளைப் படிக்கும் பாக்யம் பெற்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  53. வடை மாலை, ஜாங்கிரி மாலை ஏன்? என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது...

    பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் நிறைவடைந்த இந்த தொடரை எப்போது படித்தாலும், பெரியவாளின் அனுக்கிரஹம் எல்லோருக்கும் கிடைக்கும்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி சார்... கண்களுக்கு சற்று ஓய்வு கொடுங்கள்...

    பதிலளிநீக்கு
  54. அருமையான பதிவு ...ஆ ஞ்சநேய ருக்கு வடைமாலை சார்த்துவதன் தாத்பர்யம் இப்போது தான் புரிந்தது...நன்றி ...

    பதிலளிநீக்கு
  55. சிறப்பான பகிர்வுகள்....

    சிறப்பான தொடர் முடிந்து விட்டதே எனத் தோன்றுகிறது. ஆஞ்சனேயர் மாலை விஷயம் நன்று.

    தொடர்ந்து சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  56. ஸ்ரீ மஹா பெரியவாளின் தரிசனம் கிடைக்கப்பெற்று மகிழ்ந்தோம்.

    108 மாலைகளாக முத்தாகதொடுத்து தந்துள்ளீர்கள் அருளில் திiளைத்து மகிழ்ந்தோம் மிக்கநன்றிகள்.

    மேலும் அமுத மழையில் நனைய ஆவல் கொள்கின்றோம்.நன்றி

    பதிலளிநீக்கு
  57. மிக அற்புதமான தொடர்.
    அழகிய படங்கள்.
    எதிர்பார்த்து ஆவலுடன் வணங்கிய படங்கள்.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  58. வடைமாலை விளக்கம் பற்றி அறிந்தேன்....மிக அற்புதமான தொடர்.மீண்டும் தொடருங்கள் ஐயா!!

    பதிலளிநீக்கு
  59. ஆஞ்சநேய பகவானுக்கு வடை மாலைன்னா ப்ரீதின்னு தான் நான் நினைச்சுட்டு இருந்தேன் இத்தனை நாளும். இப்படி ஒரு அர்த்தம் இருக்குன்னு தெரியாமலேயே வீட்டில் அம்மா அடிக்கடி அனுமந்தனுக்கு வடைமாலை சார்த்துவா.. அதில் இத்தனை ஆழ்ந்த விஷயங்கள் இருக்குன்னு மஹா பெரியவா சொல்லி தான் தெரிகிறது.

    வாயுப்புத்திரனின் வேகத்துக்கு ராகுபகவானாலேயே ஈடுக்கொடுக்கமுடியலையே. அதனால் தான் அனுமந்தனை கும்பிடறவாளுக்கெல்லாம் வெற்றி ஜெயமாகிறதோ.

    ஜாங்கிரி ஆனால் என்ன வடைமாலை ஆனால் என்ன அங்கு பக்தி என்பது தான் சிறப்பான விஷயம் என்று சொல்லி நிறுத்தாமல் அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கார் பெரியவா... அற்புதம் அண்ணா... சீனா அண்ணா சொன்னது போல கண்கள் இருந்தால் தான் சித்திரம் தீட்டமுடியும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கோ. உடல்நலம் பார்த்துக்கோங்க அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manjubashini Sampathkumar February 1, 2014 at 2:09 PM

      மை டியர் மஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊ,

      வாங்கோ வாங்கோ, வணக்கம். நல்லா நலமா இருக்கீங்களா? சந்தோஷம்.

      என் கண் விஷயமாக தங்களிடம் நான் சொல்லிக்கொள்ள வில்லை. வருத்தப்படுவீர்கள் என்று மட்டுமே.

      இப்போது நான் உள்ள நிலை பற்றி அனைவரும் அறியட்டுமே என ஓர் தனிப்பதிவு கொடுத்துள்ளேன்.

      தலைப்பு: கண்ணான கண் அல்லவா !

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/01/blog-post_24.html

      அதில் எல்லா விபரங்களும் உள்ளன. படிச்சுக்கோங்கோ மஞ்சு. நானும் மன்னியும் நலமாக உள்ளோம்.

      தாங்கள் விரும்பினால் என் வலைத்தளத்தில் வாராவாரம் நடைபெற்று வரும் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ களில், கலந்துகொண்டு, கலக்குங்கோ.

      என்னுடைய லேடஸ்டு 475வது பதிவைப்பாருங்கோ:

      http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

      அதே கதைக்கு தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்த பின்னூட்டங்களைப்படித்தேன். ரஸித்தேன். சிரித்தேன் மகிழ்ந்தேன். ;)))))

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  60. கல்யாண நேரத்தில் ஃபிட்ஸ் வந்துட்டுதேன்னு பதறி பெரியவாளிடம் சொன்னால் அதற்கான நிவாரணம் சொல்லி ஆசுவாசப்படுத்துகிறார், மஹமாயிக்கான பிரார்த்தனை பாக்கி இருப்பதால் என்று. ஃபிட்ஸ் ஃபிட் ஆக்கிவிட்டார் மஹா பெரியவா..

    பதிலளிநீக்கு
  61. துன்பம் என்றால் பகவானை நாடுவதும். துன்பங்கள் தீர்ந்ததும் பகவானை மறந்துவிடுவதும் மனிதனின் இயற்கை குணங்கள். ஸ்ரீராமன் காட்டுக்கு சென்று பட்ட இன்னல்கள் எல்லாம் எங்கே தானும் பட்டுவிடுவேனோ என்ற பயத்தில் அலறும்போது மஹாப்பெரியவா எத்தனை அருமையான விஷயம் சொல்றார். காட்டைப்போல இருக்கும் கோயில்கள் இங்கேயே இருக்கு. சென்று மூன்று நாள் தங்கி தரிசனம் செய்துவிட்டு வா. எல்லாம் சரியாகும் என்று. அற்புதமான தொடர் அண்ணா.. இப்போது தான் நிதானமாக வரத்தொடங்கி இருக்கிறேன். இனி மெல்ல எல்லாம் படித்து கருத்திடுவேன். அண்ணா மன்னி இருவருக்கும் என் அன்பு நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
  62. ஒவ்வொரு படமும் மனதை அள்ளுகிறது அண்ணா... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  63. I have started from 107-108 then from first post.
    Thankyou so much sir.

    பதிலளிநீக்கு
  64. I started from 107th post
    then 108
    would now start on from first post.
    Thankyou is not enough.

    பதிலளிநீக்கு
  65. பெரியவா கருணைப் பிரவாகம் 108 ந்திகளாக ஓடி சமுத்திரத்தில் கலந்து விட்டது. அதன் சாரத்தை நாம் தினமும் பருகுவோமாக.

    பதிலளிநீக்கு
  66. வடை மாலை ஜாங்கிரி மாலை விளக்கம் நல்லா இருக்கு. இந்த உளுந்து பற்றி ஒரு விஷயம் இங்க சொன்னா சரியா இருக்குமா தெரியல.. கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கு பேர் போன ஊர். எல்லாருக்குமே தெரிந்த விஷயம்தான். தெரியாத விஷயம் என்னன்னா அந்த ஊர்ல முக்காவாசி பேருக்கு காது சரியா கேக்காது. உளுத்தம்பருப்பு சேர்த்த பண்டம் நிறய சாப்பிட்டா காது கேக்காதாம்.. இது செவி வழி செய்திதான். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 25, 2015 at 10:27 AM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //வடை மாலை ஜாங்கிரி மாலை விளக்கம் நல்லா இருக்கு.//

      மிகவும் சந்தோஷம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொன்னது ஆச்சே ! அது நன்னாத்தான் இருக்கும்.

      //இந்த உளுந்து பற்றி ஒரு விஷயம் இங்க சொன்னா சரியா இருக்குமா தெரியல.. கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கு பேர் போன ஊர். எல்லாருக்குமே தெரிந்த விஷயம்தான். தெரியாத விஷயம் என்னன்னா அந்த ஊர்ல முக்காவாசி பேருக்கு காது சரியா கேக்காது. உளுத்தம்பருப்பு சேர்த்த பண்டம் நிறய சாப்பிட்டா காது கேக்காதாம்.. இது செவி வழி செய்திதான். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியாது.//

      இருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம். உளுந்து அதிகம் உண்பதால் காது கேட்காதது பற்றிய செவிவழிச் செய்தி என்னைச் சிரிக்க வைத்தது.

      வரவர ஜோராகவே தமிழில் அதுவும் நகைச்சுவையாகவே எழுத ஆரம்பித்து விட்டீர்கள். :))))))))))))))))))))))))))))

      பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

      நீக்கு
  67. இந்த வடை, ஜாங்கிரி விஷயம் முன்பே படித்திருக்கிறேன்.

    நிற்க, இன்று மாலை BHEL NAGAR ஆஞ்சனேயர் கோவிலில் வடைமாலைக்கு கொடுத்திருக்கிறோம். என்ன ஒரு CO-INCIDENCE பார்த்தீர்களா?

    பூந்தளிர் சொன்னது போல் எங்க அம்மாவும் சொல்லுவா, உளுந்து ரொம்ப சாப்பிட்டா காது கேக்காம போயிடும்ன்னு.

    ஆனா இவ்வளவு வடை மாலைகளை சாப்பிட்டும் (அவர் வாசனையை மட்டும்தானே நுகர்கிறார்) அனுமனுக்கு ராமா என்றால் காது கேட்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 26, 2015 at 3:55 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //இந்த வடை, ஜாங்கிரி விஷயம் முன்பே படித்திருக்கிறேன்.// :)

      //நிற்க,// எழுந்து நின்றுவிட்டேன், பெளயவமாக ... :)

      //இன்று மாலை BHEL NAGAR ஆஞ்சனேயர் கோவிலில் வடைமாலைக்கு கொடுத்திருக்கிறோம். என்ன ஒரு CO-INCIDENCE பார்த்தீர்களா?//

      ஆஹா, அதுவும் BHEL NAGAR ஆஞ்சநேயருக்கு என்று கேட்கும் போது, BHEL ஞாபகமும் வந்து மகிழ்வித்தது. பெல் = மணி ... மணி மணியான இனிய நினைவலைகள்.
      எனக்கு பிரஸாதம் (வடைகள்) உண்டா இல்லையா ? :( அவா அவா கவலை அவா அவாளுக்கு என்று நீங்க அங்கு சொல்வது எனக்கு இங்கே கேட்கிறது ... காதில் மிக நன்றாக ..... :)

      //பூந்தளிர் சொன்னது போல் எங்க அம்மாவும் சொல்லுவா, உளுந்து ரொம்ப சாப்பிட்டா காது கேக்காம போயிடும்ன்னு.//

      இது பொதுவாக எல்லோருமே சொல்வதுதான். வடை Shortage ஆகாமல் எல்லோருக்கும் சமமாக பிரஸாதமாக விநியோகம் செய்வதற்காக ஒருவேளை இதுபோல காது செவிடாகிவிடும் எனச் சொல்லியிருப்பார்களோ, என்னவோ. :)

      //ஆனா இவ்வளவு வடை மாலைகளை சாப்பிட்டும் (அவர் வாசனையை மட்டும்தானே நுகர்கிறார்) அனுமனுக்கு ராமா என்றால் காது கேட்கிறதே.//

      அவர் என்னைப்போலவே, பாம்புச்செவி கொண்டவராக இருப்பாரோ என்னவோ ..... காரியச்செவிடு என்று சிலர் உண்டு. தனக்கு ஆதாயமான விஷயங்களை மட்டுமே காதில் வாங்கிக்கொண்டு, அனாவஸ்யமான மேட்டர்களில் காது கேட்காத செவிடுபோல நடந்துகொள்வார்கள். :)

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெ.

      நீக்கு
  68. // Fits வந்தது, தெய்வ குத்தம்;
    FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!//

    ஆமாமய்யா ஆமாம்

    // இதில் ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப் போய் இரண்டு மூன்று நாள் தங்கி, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வா. //

    என்ன ஒரு தீர்வு.

    // ’பிள்ளையார்’இல் துவங்கிய இந்தத்தொடர்
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில்
    இன்று 11.01.2014 சனிக்கிழமை
    ’ஹனுமன்’இல் நிறைவடைந்துள்ளது.//

    பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியாம பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிந்ததே.

    மகிழ்ச்சியுடனும்,
    வாழ்த்துக்களுடனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 26, 2015 at 3:59 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **’பிள்ளையார்’இல் துவங்கிய இந்தத்தொடர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் இன்று 11.01.2014 சனிக்கிழமை ’ஹனுமன்’இல் நிறைவடைந்துள்ளது.**

      //பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியாம பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிந்ததே.//

      உங்களுக்காகவே என்னால் ஆரம்பிக்கப்பட்டது இந்தத்தொடர்.

      இதோ இந்த என் முதல் பதிவு (TRIAL POST) http://gopu1949.blogspot.in/2009/03/trial.html இதில் உள்ள தங்களின் பின்னூட்டத்தினைப் போய்ப் படித்துப்பார்க்கவும்.

      எடுத்த காரியம் ... அது நல்லபடியாக நிறைவு பெற்றதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  69. ஊரு வட மாலக்குள்ளார இம்பூட்டு வெவரமா இருக்குது

    பதிலளிநீக்கு
  70. வடைமாலை ஜாங்கிரி மாலை சாத்தி வழிபடுவதில்கூட இவ்வளவு விஷயமிருக்கே. ராகு பகவானுக்கு உகந்த தானியம் உளுந்து என்று தெரிந்து கொள்ள முடிந்தது. எங்க ஊரான களக்காடு திருநெல்வேலி ஜில்ஸாவில் தானிருக்கு.. இங்கயும் அந்த செவி வழி செய்தி உண்டுதான்.

    பதிலளிநீக்கு
  71. நாங்களும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தியதுண்டு!!! அதன் விளக்கம் இன்றுதான் புரிந்துகொண்டோம்..மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  72. நிறைவு செய்த விதம் அருமை! தெய்வம் சிரித்து சிரிக்க வைத்த விதம் அருமை! தங்களின் இந்தப் பதிவுகளைப் படிக்கும் பாக்யம் பெற்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி! வடைமாலை விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு
  73. ஆஞ்சனேயருக்கு வடைமாலையின் காரணத்தை அறிந்துகொண்டேன். என்றைக்காவது யாராவது தமிழ்'நாட்டுக்கோயிலொன்றில் ஜாங்கிரி மாலை சார்த்தமாட்டார்களா?

    "Fits வந்தது, தெய்வ குத்தம்; FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!" - முதல் முறையாக இந்த நிகழ்ச்சியைப் படிக்கிறேன். பெரியவாளின்மேல் அவர்கள் கொண்ட பக்திவிசுவாசம் அளத்தற்கரியது. அதனால்தான் அவரின் கடாக்ஷம் கிடைத்தது.

    "வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், சண்பகாரண்யம், தர்ப்பார்ண்யம்னு பல காட்டு க்ஷேத்திரங்கள் நம் நாட்டுக்குள்ளேயே இருக்கு" - இது கேள்வி கேட்டவருக்கு மட்டுமல்ல. இந்த தசை அல்லது பலன் உள்ள எல்லோருக்கும்தான்.

    108 என்பதற்காக இத்துடன் முடித்திருக்கவேண்டாம். சமயம் கிடைக்கும்போது மீண்டும் ஆரம்பியுங்கள். இதனைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் பக்தியைத் தூண்டுகிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

    பதிலளிநீக்கு
  74. 'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 8:26 PM

    வாங்கோ, வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    //108 என்பதற்காக இத்துடன் முடித்திருக்கவேண்டாம். சமயம் கிடைக்கும்போது மீண்டும் ஆரம்பியுங்கள். இதனைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் பக்தியைத் தூண்டுகிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.//

    இதையே மிகச்சிறிய அளவில்தான் 108 பகுதிகளாக நான் எழுதத் திட்டமிட்டு ஆரம்பித்திருந்தேன். இதற்கான வரவேற்புகள் அதிகமாகி வரும்போது, என் நண்பர்கள் + உறவினர்கள் சிலர், தாங்கள் படித்த சில சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எனக்கு அனுப்பி, அவற்றையும் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவற்றில் எனக்கும் பிடித்த சிலவற்றை, ஆங்காங்கே சில பகுதிகளில் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டே வரும்படி ஆகிவிட்டது. இதனால் ஆரம்பத்தில் சிறுசிறு பகுதிகளாகக் கொடுத்து வந்தது போகப்போக பெரிய பகுதிகளாக மாறிவிட்டன. எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹம் மட்டுமே இந்த அளவுக்கு வெற்றிகரமாக என்னால் கொடுக்கப்பட முடிந்தது.

    எல்லாம் அவர் செயல். நம்மிடம் ஏதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  75. பெரிப்பா சூப்பர்.. வடைமாலை எங்களுக்கு வாரத்துல மூணு நாள் பிரசாதமாக கிடைக்கறது. வடை மாலை ஜாங்கிரி மாலைக்குள்ள இவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கே..பதிவும் படங்களும்ரொம்ப நல்லா இருக்கு... எங்க ஊர்ல உளுந்து அதிகம் சேர்த்துண்டா காது கேக்காதுன்னு சொல்லுவா..மேல கமெண்ட்லயும் யாரோ சொல்லி இருக்காங்க..ஆனா தெருவுக்கு நாலு அப்பளக்கடையும் எங்க ஊருலதான் இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy October 21, 2016 at 6:28 PM

      வாம்மா, ஹாப்பி. செளக்யமா?

      பகுதி-1 லிருந்து ஆஞ்சநேயர் போல ஒரே தாவாகத்தாவி பகுதி-108 இல் வந்து குதித்து விட்டாயே !!!!!

      பேஷ், பேஷ். சபாஷ்.

      //பெரிப்பா சூப்பர்.. வடைமாலை எங்களுக்கு வாரத்துல மூணு நாள் பிரசாதமாக கிடைக்கறது.//

      வெரி குட். நான் அங்கு வந்தால் எனக்கும் வடையைப் பிரஸாதமாகத் தருவாய் என நம்புகிறேன்.

      //வடை மாலை ஜாங்கிரி மாலைக்குள்ள இவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கே..//

      வடை & ஜாங்கிரி என்றால் சும்மாவா, பின்னே !

      //பதிவும் படங்களும்ரொம்ப நல்லா இருக்கு...//

      மிகவும் சந்தோஷம்மா.

      //எங்க ஊர்ல உளுந்து அதிகம் சேர்த்துண்டா காது கேக்காதுன்னு சொல்லுவா.. மேல கமெண்ட்லயும் யாரோ சொல்லி இருக்காங்க..//

      ஆமாம். அதுபோலச் சிலர் சொல்லுவார்கள். நானும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் உளுந்து ஒன்று மட்டுமே வெஜிடேரியன்ஸ் ஆகிய நமக்கு அதிகம் புரதச்சத்தினைத் தரும் தானியமாகும்.

      //ஆனா தெருவுக்கு நாலு அப்பளக்கடையும் எங்க ஊருலதான் இருக்கு...//

      தெரியும். கல்லிடக்குறிச்சி அப்பளம்தான் உலகப் பிரஸித்தி பெற்றது ஆச்சே.

      உன் அன்பு வருகைக்கும், அழகுக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..... டா தங்கம்.

      நீக்கு