கதையின் தலைப்பு
VGK 03 ]
” சுடிதார் வாங்கப் போறேன் ”
இணைப்பு:
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
கணிசமான எண்ணிக்கையில் பலரும்,
மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு,
வெகு அழகாக விமர்சனங்கள்
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
திருமதி
அவர்கள்
geethamanjari.blogspot.in
கீதமஞ்சரி
முதல் பரிசினை வென்றுள்ள
திருமதி
கீதா மதிவாணன்
கீதா மதிவாணன்
மூன்று பகுதிகளாக இருந்தாலும் முழுவீச்சில் வாசிக்கத்தூண்டும் தங்குதடங்கலற்ற எழுத்துநடையும் அனுபவமா கற்பனையா என்று வியக்கவைக்கும் வண்ணம் பெரும் ஈடுபாட்டுடன் எழுதியிருப்பதும், சம்பவங்களை சீராக கொண்டுசென்ற விதமும், கதைமாந்தர்களின் குணாதிசயங்களை கதாசிரியருடையது உட்பட நேர்த்தியாக கதையுடனேயே இழைந்து விவரித்த பாங்கும் இக்கதையின் ப்ளஸ் பாயிண்டுகள்.
உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள்தான் கில்லாடிகள் என்பார்கள். அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிவிட்டார் கதாசிரியர். என்னவொரு ஈடுபாட்டுடனும் லயிப்புடனும் ஆடைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அதுவும் பெண்களுக்கான ஆடைகளை. புடவை தேர்ந்தெடுப்பதில் நிபுணர் என்பதை அவருடைய எழுத்துக்களே பறைசாற்றுகின்றன. தேர்ந்தெடுப்பதோடு எப்படிப்பட்ட புடவை எப்படிப்பட்டவர்களுக்குப் பொருந்தும் என்பதையும் அழகாக சொல்கிறார்.
மிகத் தேர்ந்த ரசனையோடு மனைவிக்கு புடவைகளைத் தேர்ந்தெடுப்பவர் தனக்கு உரிய அங்கீகாரத்தையோ பாராட்டையோ மனைவியின் வாயால் எதிர்பார்ப்பது என்ன தவறு? ஆனால் மனைவியோ எதையும் வாய்திறந்து சொல்வதில்லை. மேலோட்டமாக கணவரிடத்தில் கோபம், அலட்சியம் காட்டுவது போல் தோன்றினாலும் தன் கணவர் மேல் அதீத பாசமும் பரிவும் கொண்டவராகவே இருக்கிறார்.
அடுத்த பெண் கணவரைப் பாராட்டுவதைக் கண்டு பொறாமை கொள்கிறாரே. அதையும் கதாசிரியரே தன் எழுத்தின்மூலம் உறுதிப்படுத்திவிடுகிறார்.
அடுத்த பெண் கணவரைப் பாராட்டுவதைக் கண்டு பொறாமை கொள்கிறாரே. அதையும் கதாசிரியரே தன் எழுத்தின்மூலம் உறுதிப்படுத்திவிடுகிறார்.
புடவை தேர்ந்தெடுப்பதில் கதாசிரியருக்கிருக்கும் அனுபவம் சுடிதார் தேர்ந்தெடுப்பதில் இல்லையென்பதை அவரே ஒத்துக்கொண்ட போதிலும் கடையில் விற்பனைப் பெண்ணிடம் அவர் கேட்கும் கேள்விகள் இன்னும் சுடிதார் விஷயத்தில் அவருடைய அறியாமையைப் பறைசாற்றுகின்றன. அதற்கான காரணத்தை அவர் நேரடியாக சொல்லவில்லை என்றாலும் தனக்குப் பெண்குழந்தைகள் இல்லை என்று சொன்னதன் மூலம் மறைமுகமாக சொல்லிவிடுகிறார்.
சுடிதார் வாங்கும் விஷயத்தில் தனக்கு அனுபவமில்லை என்றபோதும் விடாமுயற்சியோடு முயன்று அதிலும் ஒரு புதுவித அனுபவத்தைக் கற்றுக்கொண்டதோடு கதையை வாசிக்கும் பல ஆண்களுக்கும் கற்றுத்தருகிறார்….... கடையில் கையில்லாத சுடிதாரைக் கண்டு பிற ஆண்கள் கதாசிரியரைப் போன்று மிரளாமல் குழம்பாமல் இருக்கமுடியுமே…...
கதையில் பல இடங்களில் நகைச்சுவை நடமிட்டுத் துள்ளுகிறது.
கடையில் விற்பனைப் பெண்களின் சாதுர்யத்தையும் நகைச்சுவையூடே காட்டுகிறார்.
கடையில் நுழைந்த கணத்திலிருந்து வெளியே வரும்வரை நகைச்சுவைக் கொண்டாட்டம்தான் நமக்கு. சான்றுக்கு சில…
கடையில் விற்பனைப் பெண்களின் சாதுர்யத்தையும் நகைச்சுவையூடே காட்டுகிறார்.
கடையில் நுழைந்த கணத்திலிருந்து வெளியே வரும்வரை நகைச்சுவைக் கொண்டாட்டம்தான் நமக்கு. சான்றுக்கு சில…
1. இருக்கும் சில முடிகளையும் பறக்கச்செய்யும் ஜில் காற்று… ப்ரைன் வாஷ் செய்வதற்கென்றே…
2. அன்ரிஸர்வ்டு ரயில் பயணிகள் போன்ற… ஏக்கத்துடன் தொங்கும் குறைந்த விலை சுடிதார்கள்
3. ஃபர்ஸ்ட் க்ளாஸ் பயணிகள் போன்று சுகமாக வசதியாக அடுக்கப்பட்ட சுடிதார்கள்
4. சுடிதாரைத் தொட்டதும் வயதுப்பெண்ணைத் தொடுவது போன்ற கூச்சம்
5. மேசை மேலிருக்கும் சுடிதார்களை ஜோசியக்கிளி அட்டைகளைத் தள்ளுவது போல் ஒவ்வொன்றாகத் தள்ளியது…
6. சுடிதாரோடு அங்கவஸ்திரமும் கேட்ட அழகு…
இதுபோல் ஏராளமான சின்னச்சின்ன விஷயங்களிலும் சிரிக்கவைக்கிறார். அதுமட்டுமா?
மனைவிக்கு சுடிதார் அணிவித்துப் பார்த்து ஒரு புகைப்படம் பிடித்துவைத்து தினமும் ரசிக்க ஏங்கும் மனம் சிருங்கார அழகு.
ஹாஸ்யம், சிருங்காரம் மட்டுமா… நவரசங்களில் இல்லாத இன்னும் எவ்வளவு உணர்வுகளை அள்ளி இறைத்துள்ளார் கதையோட்டத்தில்.
ஹாஸ்யம், சிருங்காரம் மட்டுமா… நவரசங்களில் இல்லாத இன்னும் எவ்வளவு உணர்வுகளை அள்ளி இறைத்துள்ளார் கதையோட்டத்தில்.
மனைவி தன்னைப் பாராட்டுவதில்லையே என்று ஏக்கம்,
கடைக்குள் நுழைந்து சுடிதார் பிரிவைப் பார்வையிடுகையில் உண்டாகும் வியப்பு,
சுடிதாரைத் தொட்டுப் பார்க்கையில் எழும் கூச்சம்,
விற்பனைப் பெண்ணின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் தவிப்பு,
சுடிதாரை வாங்கும்போது மனத்தில் உண்டாகும் குழப்பம்,
சுடிதாரும் கால்குழாயும் பொருத்தமில்லாத நிறமாய் இருப்பது குறித்து மனக்குறுகுறுப்பு,
இது மருமகளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று கவலை,
மனைவிக்கு சுடிதார் அணிவித்துப் பார்க்க எழும் ஆசை,
தன் ஆசை பூர்த்தியாகாதபோது வரும் ஏமாற்றம்,
தான் தேர்ந்தெடுத்த சுடிதார் மனைவிக்குப் பிடித்திருப்பதில் திருப்தி,
மருமகளுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி,
400 கி.மீ.க்கு அப்பாலிருக்கும் மகனும் அதைப் பார்த்து ரசித்ததை அறிந்து வியப்பு
என்று தனக்கேற்பட்ட எல்லாவித உணர்வுகளையும் ஒரு சிறுகதையில் கொண்டுவந்தமை சிறப்பு.
முதல் பரிசினை
தொடர்ச்சியாக
தொடர்ச்சியாக
மூன்றாம் முறையாக
திரு. S. ரமணி
அவர்கள் மட்டுமே
yaathoramani.blogspot.com
” தீதும் நன்றும் பிறர் தர வாரா “
முதல் பரிசினை வென்றுள்ள
விமர்சனம் இதோ:
சுடிதார் வாங்கப் போன இந்தக் கதை
எனக்கு மிக அசாதாரணமான ஒரு விஷயத்தை
வேண்டுமென்றே மிகச் சாதாரணமாகச் சொல்லிப்
போனதைப் போலப்பட்டது
ஒருவேளை எனக்குத்தான் இப்படிப்படுகிறதோ
என எனக்குச் சந்தேகம் வந்ததால் என் நண்பனை
ஒருமுறைப்படிக்கச் சொல்லி அவன் கருத்தைச்
சொல்லுமாறு கேட்டேன்
அவனும் எனக்காகப் படித்து "சுடிதார் வாங்கிய
விஷயத்தை விரிவாக எழுதியுள்ளார். எழுத்துத் திறமை
மிக்க படைப்பாளியாய் இருப்பதால் நாமும் அவருடன்
இருந்து சுடிதார் வாங்குவதைப் போன்று
உணரவைக்கிறார்" என்றான்
"வேறு எதுவும் தோன்றவில்லையா ?"என்றேன்
"இல்லை " என்றான்
அவன் பதில் எனக்கு ஆச்சரியமளிப்பதாகத்தான் இருந்தது
இந்தக் கதை படிப்பதற்கு முன்னால் இப்படி ஒரு
சூழல் நேர்ந்திருக்குமெனில் "சட்டென உனக்கு
இலக்கிய ரசனை கம்மி என்றோ அல்லது
இன்னும் ஆழமாகப் படித்து பொருள் கொள்ளும்
பக்குவத்தை நீ வளர்த்துக் கொள்ளவேண்டும்" என்றோ
உரிமை கொடுத்த தைரியத்தில் அசட்டுத்தனமாகப்
பேசி இருப்பேன்
இந்தக் கதைப் படித்து நேர்ந்த பாதிப்பில் அப்படிப்
பேசத் தோன்றவில்லை
"மிகச் சரியாகத்தான் சொல்கிறாய். ஆயினும் இன்னும்
சற்று ஊன்றிப் படித்திருந்தால் இன்றைய வாழ்வில்
நாம் உறவு முறையிலும் நட்பு வகையிலும்
நெருக்கத்தையும் இறுக்கத்தையும் இழந்து வருவதற்கான
உண்மையான காரணம் புரியும்" என்றேன்
அவன் புரிந்து கொள்ள முயல்பவன் போல
ஆர்வத்துடன் என்னைக் கவனிக்கத் துவங்கினான்
நான் தொடர்ந்தேன் "ஒரு மூன்று மாமாங்க காலமாக
மிகச் சரியாகச் சொன்னால் திருமணம் ஆனதிலிருந்து இன்று
எனக்கு மிக அசாதாரணமான ஒரு விஷயத்தை
வேண்டுமென்றே மிகச் சாதாரணமாகச் சொல்லிப்
போனதைப் போலப்பட்டது
ஒருவேளை எனக்குத்தான் இப்படிப்படுகிறதோ
என எனக்குச் சந்தேகம் வந்ததால் என் நண்பனை
ஒருமுறைப்படிக்கச் சொல்லி அவன் கருத்தைச்
சொல்லுமாறு கேட்டேன்
அவனும் எனக்காகப் படித்து "சுடிதார் வாங்கிய
விஷயத்தை விரிவாக எழுதியுள்ளார். எழுத்துத் திறமை
மிக்க படைப்பாளியாய் இருப்பதால் நாமும் அவருடன்
இருந்து சுடிதார் வாங்குவதைப் போன்று
உணரவைக்கிறார்" என்றான்
"வேறு எதுவும் தோன்றவில்லையா ?"என்றேன்
"இல்லை " என்றான்
அவன் பதில் எனக்கு ஆச்சரியமளிப்பதாகத்தான் இருந்தது
இந்தக் கதை படிப்பதற்கு முன்னால் இப்படி ஒரு
சூழல் நேர்ந்திருக்குமெனில் "சட்டென உனக்கு
இலக்கிய ரசனை கம்மி என்றோ அல்லது
இன்னும் ஆழமாகப் படித்து பொருள் கொள்ளும்
பக்குவத்தை நீ வளர்த்துக் கொள்ளவேண்டும்" என்றோ
உரிமை கொடுத்த தைரியத்தில் அசட்டுத்தனமாகப்
பேசி இருப்பேன்
இந்தக் கதைப் படித்து நேர்ந்த பாதிப்பில் அப்படிப்
பேசத் தோன்றவில்லை
"மிகச் சரியாகத்தான் சொல்கிறாய். ஆயினும் இன்னும்
சற்று ஊன்றிப் படித்திருந்தால் இன்றைய வாழ்வில்
நாம் உறவு முறையிலும் நட்பு வகையிலும்
நெருக்கத்தையும் இறுக்கத்தையும் இழந்து வருவதற்கான
உண்மையான காரணம் புரியும்" என்றேன்
அவன் புரிந்து கொள்ள முயல்பவன் போல
ஆர்வத்துடன் என்னைக் கவனிக்கத் துவங்கினான்
நான் தொடர்ந்தேன் "ஒரு மூன்று மாமாங்க காலமாக
மிகச் சரியாகச் சொன்னால் திருமணம் ஆனதிலிருந்து இன்று
பேரன் பேத்தி எடுக்கிற காலம் வரை தன் மனைவியிடம்
ஒரு சிறு அங்கீகாரத்தைப் பெறுவதற்காக கதை நாயகனிடம்
இருக்கும் பெரும் ஏக்கமும் அதைத் தீர்ப்பத்தற்காக
அவர் செய்து தோற்கும் முயற்சிகளையும்
சேலையை ஒரு குறியீடாகக் கொண்டு மிக மிக
அருமையாக விவரிக்கிறார்.
இத்தனைக்கும் இந்த தம்பதிகள் இருவரும்
சராசரித் தம்பதிகளைப் போல அல்லாது
ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அன்பினையும் பற்றுதலையும்
கொண்ட அருமையான தம்பதிகள்தான்
ஆயினும் ஒருவருக்காக ஒருவர் செய்கிற செயல்களை
அங்கீகரித்துப் பாராட்டும் ஒரு சிறு நற்பழக்கம் இன்மையால்
அவர்களுக்கும் இருக்கும் அன்னியோன்யம்
இருந்தும் வெளிப்படாது பூமிக்கடிப் புதையல் போல்
இருப்பதை பூடகமாகச் சொல்லிப் போனது
மிக மிக அருமை
உண்மையில் நம் போன்ற பழைய தலைமுறை நபர்களின்
பெரிய குறைபாடே இதுதான்
கதாசிரியர் சேலையையும் சுடிதாரையும் மிக மிக
அருமையாக தலமுறைக்கான குறியீடாகக் கொள்வதுதான்
இந்தப் படைப்பின் மிகச் சிறப்பு
மிகச் சரியான சுடிதாரைத் தேடுவதற்கான
அதீத முயற்சிக் கூட அடுத்த தலைமுறையின்
ரசனையை, பண்பை, அவர்கள் வாழ்க்கை முறையை
புரிந்து கொள்வதற்கான முயற்சியும்
தன் தலைமுறை புரிந்து கொண்டு அங்கீகரிக்காத
பாராட்டாத நம் முயற்சியை அடுத்த தலைமுறையிடமாவது
பெற்றுவிட வேண்டும் என்கிற அதிக ஆவலைச்
சுட்டிக்காட்டத்தான் கதாசிரியர் அந்தப் பகுதியில்
அதிக கவனம் கொண்டிருக்கிறார் என்பதை
கொஞ்சம் கருத்துடன் படித்தால் புரியும்
நம் தலைமுறையைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் தொட்டுக் கொள்ளும் படியான நெருக்கத்தில் இருந்தும் மனதளவில் வெகு தூரம் விலகி இருப்பதும்
படிப்பு பணிச் சூழல் காரணமாக இந்தத் தலைமுறையினர்
இடத்தால் வெகு தூரம் விலகி இருந்தாலும் மனத் தளவில் மிக நெருக்கமாக இருப்பதுவும்
கஞ்சத்தனமின்றி பாராட்ட வேண்டிய விஷயங்களை
காலம் தாழ்த்தாது மிகச் சிறப்பாக எப்படிப் பாராட்டவேண்டுமோ அப்படிப் பாராட்டி உரியவர்களை மகிழ்விப்பதோடு அல்லாமல் தானும் மகிழ்ச்சி கொள்வதும்
இப்படி மூன்றாம் பகுதியில் மிக அருமையாகச்
சொல்லிப்போன விஷயங்களையெல்லாம் நான்
ஒவ்வொன்றாக விளக்கினால் அதிக நேரமாகும் "
என நான் சொல்லி முடிப்பதற்குள் என் நண்பனே
சட்டென என் கையைப் பிடித்து இப்படிச் சொன்னான்
"போதும் போதும்.எனக்கு உண்மையில் இதுவரை
குறியீடுகளைப் புரிந்து கொள்ளுகிற பக்குவம் மட்டும் அல்ல
புரியச் சொல்லுகிற விஷயத்தைத் தாண்டி
நாமாகவே புரிந்து தெளியட்டும் என விட்டுச் செல்லும்
விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை.
நாமாகவே புரிந்து தெளியட்டும் என விட்டுச் செல்லும்
விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை.
இப்போது நீ சொன்ன விஷயங்களை உள்வாங்கி
இன்னொரு தடவை இந்தக் கதையைப் படித்து
மிகச் சரியாக விமர்சனம் செய்கிறேன் "
என்றான் நம்பிக்கையுடன்
எனக்கும் அவன் நிச்சயம் இனி கதைகளை
புரிந்து படிக்கத் துவங்குவான் மிகச் சரியாகவும்
விமர்சிப்பான் என்கிற நம்பிக்கை எனக்குள்ளும்
துளிர்விடத் துவங்கியது
விமர்சனம் என்பது படைப்பை உதறிக்
காயப்போடுவதும், அலசி உலற வைப்பது
மட்டும் அல்ல
அது வாசகனின் ரசனைத் தன்மையை
உயர்த்துவதும் நல்ல படைப்புகளைத் தேடும்படி
அவனை ஆற்றுப்படுத்துவதும் தான் என்பதை
நிச்சயம் அவன் புரிந்து கொண்டுவிட்டான்
என்றேப் படுகிறது எனக்கு
உங்களுக்கு ?
இன்னொரு தடவை இந்தக் கதையைப் படித்து
மிகச் சரியாக விமர்சனம் செய்கிறேன் "
என்றான் நம்பிக்கையுடன்
எனக்கும் அவன் நிச்சயம் இனி கதைகளை
புரிந்து படிக்கத் துவங்குவான் மிகச் சரியாகவும்
விமர்சிப்பான் என்கிற நம்பிக்கை எனக்குள்ளும்
துளிர்விடத் துவங்கியது
விமர்சனம் என்பது படைப்பை உதறிக்
காயப்போடுவதும், அலசி உலற வைப்பது
மட்டும் அல்ல
அது வாசகனின் ரசனைத் தன்மையை
உயர்த்துவதும் நல்ல படைப்புகளைத் தேடும்படி
அவனை ஆற்றுப்படுத்துவதும் தான் என்பதை
நிச்சயம் அவன் புரிந்து கொண்டுவிட்டான்
என்றேப் படுகிறது எனக்கு
உங்களுக்கு ?
முதல் பரிசினை வென்றுள்ள
திருமதி
கீதா மதிவாணன்
அவர்கள்
மற்றும்
திரு. ரமணி அவர்கள்
ஆகிய இருவருக்கும்
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
இனிய நல்வாழ்த்துகள்.
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.
’போனஸ் பரிசு’ பற்றிய
மகிழ்ச்சியானதோர் தகவல்
’சுடிதார் வாங்கப் போறேன்’ என்ற
விமர்சனம் எழுதி அனுப்பியுள்ள ஒவ்வொருவருக்குமே
மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால்
’போனஸ் பரிசாக ’
அளிக்கப்பட உள்ளது என்பதை
பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும்.
நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களு க்கும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.
அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.
முதன் முதலில் என் டும்.. டும்.. டும்.. டும்.. போட்டி அறிவிப்பினில் http://gopu1949.blogspot.in/ 2014/01/blog-post.html தெரிவிக்கப்பட்டுள்ள ஊக்கப்பரிசுக்கும், இந்த போனஸ் பரிசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
அது வேறு தனியாக ! இது வேறு போனஸாக !!
மகிழ்ச்சி தானே ! தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், முதல் பரிசினை வென்ற சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கும் மற்றும் கவிஞர் ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம் ஐயா... முதல் பரிசு பெற்ற கீதமஞ்சரி அவர்களுக்கும் மற்றும் கவிஞர் ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவணக்கம் கோபால கிருஷ்ணன் ஐயா இதோ வந்து விட்டேன் :))
பதிலளிநீக்குசிறப்பான விமர்சனங்கள் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மென்மேலும் இது போன்ற சிறுகதை விமர்சனப் போட்டிகள் சிறந்து விளங்கட்டும் .ஊக்குவிப்புக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஐயா .ஆஹா இந்தப் பூசாரை எங்கே பிடித்தீர்கள் ?கொள்ளை அழகு :))
முதல் பரிசு பெற்றுள்ள திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமூன்றாம் முறையாக மீண்டும் முதல் பரிசு வென்றுள்ள கவிஞர் ரமணி ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை; இருப்பினும் வாழ்த்துகிறேன்.
முதல் பரிசு பெற்ற திருமதி. கீகீதா மதிவாணன் அவர்களுக்கும் திரு.ரமணி ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎன் மனம் கவர்ந்த அற்புதமான பதிவர்
பதிலளிநீக்குகீத மஞ்சரி அவர்களின் சிறுகதை விமர்சனம்
மிக மிக அருமை.
அவருடன் நான்
முதல் பரிசினைப் பகிர்ந்து கொள்வதை
மிகப் பெருமையாகக் கருதுகிறேன்
வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த நன்றிகள் வை.கோ.சார். இப்படியொரு புதுவிதமான போட்டியை யோசித்ததோடு பரிசுகளும் கொடுத்து ஊக்குவிப்பது தங்கள் பெருந்தனையே. மிகவும் நன்றி தங்களுக்கு.
பதிலளிநீக்குஒவ்வொருவருடைய விமர்சங்களை வாசிக்கும்போதும் கதை பற்றிய மறுபட்டக் கண்ணோட்டங்களும் சிந்தனைகளும் தெரியவருகின்றன. அனைத்திலிருந்தும் புதிய புதிய செய்திகளைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
ரமணி சாரின் விமர்சனம் பற்றிக் கேட்கவே வேண்டாம். விமர்சனம் செய்ய விரும்புபவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாய் விளங்குகிறார் என்று சொன்னால் மிகையில்லை. அவருடைய விமர்சங்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டதுதான் இன்றென்னைப் பரிசுக்குரியவளாய்த் தேர்ந்தெடுத்திருக்கிறது. அவரிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்பதை இந்த சிறுகதையின் விமர்சனமே சொல்லிவிடுகிறது. ரமணி சாருக்கு சிறப்புப் பாராட்டுகள்.
தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும், போட்டியை வெற்றிகரமாக நடத்தும் தங்களுக்கும் மிக்க நன்றி.
போட்டியில் பரிசு பெற்ற சக பதிவர்களுக்குப் பாராட்டுகள். ஆர்வத்துடன் பங்கேற்ற ஏனைய பதிவர்கள் அடுத்தடுத்தப் போட்டிகளில் பரிசு பெற இனிய வாழ்த்துக்கள்.
இங்கு பாராட்டுகளைத் தெரிவிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள் பல.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்றுள்ளதிருமதி
திருமதி கீதா மதிவாணன் அவர்கள் மற்றும்
திரு. ரமணி அவர்கள் ஆகிய இருவருக்கும்மனம் நிறைந்த பாராட்டுக்கள் ..இனிய வாழ்த்துகள்..!
கீதா மதிவாணன் அவர்களுக்கும், திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். தொடர்ந்து மூன்றாம் முறையாக முதல் பரிசு வாங்கும் திரு ரமணி சிறப்புப் பாராட்டுகளுக்கு உரியவர் ஆகிறார்.
பதிலளிநீக்குசகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கும் மற்றும் கவிஞர் ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமுதல் பரிசு வென்ற கீதமஞ்சரிக்கும், திரு ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇருவர் கதை விமர்சனம் மிக அருமை.
பாராட்டிக் கொள்வதைப் பற்றி ரம்ணி சார் சொல்வது மிக உண்மை. இப்போது உள்ள குழந்தைகள் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள் சின்ன செயலையும் வாய் விட்டு பாராட்டிக் கொள்கிறார்கள். என் பேரன் ஆச்சி உன் சாரி நல்லா இருக்கு, என்பான் நன்றி சொன்னால் வெல்கம் என்பான். அம்மாவின் சமையலை புகழவான், அப்பாகார் ஓட்டுவதை புகழவான். எல்லோரையும் மகிழ்ச்சிபடுத்த தெரிகிறது.
பாராட்டு என்பது பயிரை வாழ செய்யும் வான் மழை போன்றது. அனபை வளர்க்கும் நேசமழை போன்றது. ரமணிசாருக்கு பாராட்டுக்கள்.
கீதா சொன்னது போல் வை.கோ சார் கதையில் நவரசங்களும் இருக்கிறது. அவரின் ஒரு சின்ன செயலும் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது போலவே இருக்கும் ஒரு சிறுகதையில் கீதா சொன்னது போல் எவ்வளவு விஷ்யங்களை உள்ளடக்கி விட்டார் சார்.
வாழ்த்துக்கள் கீதா.
அது போலவே கதையிலும் குடும்ப உறுப்பினர்களின் தேவை அறிந்து , சமயம் அறிந்துபரிசு, பாராட்டு என்று அசத்தும் கதாநாயகர் பாத்திரம் அருமை. வரபோகும் மருமகளிடம் நல்லபெயர் வாங்கி விட்டார், பிறந்தநாள் பரிசாக கொடுத்து எதிர்கால மருமளை மகிழ்ச்சி படுத்தி விட்டார்..
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்
முதல்ப் பரிசினை வென்ற கீத மஞ்சரி அவர்களுக்கும்,திரு ரமணி அவர்களுக்கும் வாழ்த்துகளும்,பாராட்டுகளும். இந்த பரிசுகளின் மூலம் விமரிசனம் எழுத யாவருக்கும் நல்ல கருத்துகளை அறிய முடிகிறது. அன்புடன்
பதிலளிநீக்குமுதல் பரிசு பெற்ற கீதமஞ்சரி அவர்களுக்கும் மற்றும் கவிஞர் ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
http://yaathoramani.blogspot.in/2014/02/httpgopu1949.html
திரு. ரமணி அவர்கள்
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]
இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இணைப்பு: http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஇணைப்பு:
http://www.geethamanjari.blogspot.com.au/2014/04/blog-post.html
தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
கீதா மணிவாணன் மற்றும் ரமணி அவர்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குதிருமதி கீதமஞ்சரி மற்றும் திரு ரமணிசார் அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும், மூன்றாவது முறையாக முதல் பரிசை வென்றுள்ள திரு ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
நீக்குகீதாமதிவாணன் ரமணி வங்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதிருமதி கீதாமதிவாணன் திரு ரமணி சார்வாழ்த்துகள் கீதா மேடம் கதாசிரியரின் எழுத்துதிறமையை சிறப்பாக நினைக்கிறார்கள் திரு ரமணி சார் கணவன் மனைவி பேச்சு பழக்கம் ஊடல் கூடலை ரசிக்கிறார் கதாசிரியரின் எழுத்து திறமையை பாராட்டி சைல்கிறார்.
பதிலளிநீக்குவிமர்சனம் என்பது படைப்பை உதறிக்
பதிலளிநீக்குகாயப்போடுவதும், அலசி உலற வைப்பது
மட்டும் அல்ல
அது வாசகனின் ரசனைத் தன்மையை
உயர்த்துவதும் நல்ல படைப்புகளைத் தேடும்படி
அவனை ஆற்றுப்படுத்துவதும் தான் என்பதை
நிச்சயம் அவன் புரிந்து கொண்டுவிட்டான்
என்றேப் படுகிறது எனக்கு// முற்றிலும் சரி. பெரும்பாலும் விக்கெட் கீப்பர்கள் ஓரளவுக்கு பேட்ஸ்மேனாக ஸ்கோர் செய்வதும் இதே ரகம்தான். முதல் ஹாட்ரிக் வெற்றியாளர். வாழ்த்துகள் ரமணி சார். வாழ்த்துகள் சகோதரி கீதா
அருமையான விமர்சனம் எழுதி பரிசினை வென்ற திருமதி கீதாமதிவாணன் மற்றும் திரு ரமணி சார் அவர்களுக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குமேற்படி என் சிறுகதையினை மிகவும் பாராட்டி, ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவரும் எனது ஆருயிர் நண்பருமான திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ஓர் தனிப்பதிவு எழுதி இன்று ’ஸ்ரீராமநவமி’ புண்ணிய தினத்தில் (25.03.2018) வெளியிட்டுள்ளார்கள்.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:
https://tthamizhelango.blogspot.com/2018/03/vgk-03.html
இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
珞