செவ்வாய், 11 மார்ச், 2014

VGK 06 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - "உடம்பெல்லாம் உப்புச்சீடை”





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 06 - ” உடம்பெல்லாம் உப்புச்சீடை ”


இணைப்பு:


மேற்படி 'நெடுங்கதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து













இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 




  


மற்றவர்களுக்கு: 





    



முதல் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்  




அதில் ஒருவர்



திருமதி. 



உஷா ஸ்ரீகுமார்  



அவர்கள்







வலைத்தளம்: 

உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்

usha-srikumar.blogspot.in






முதல் பரிசினை வென்றுள்ள 




திருமதி 



உஷா ஸ்ரீகுமார் 



 அவர்களின் விமர்சனம் இதோ:




பயணங்கள்...அறிவையும், மனதையும், கண்ணோட்டத்தையும் விசாலப்படுத்தும்...

சாதாரண பயணங்களே இதை செய்யும் போது மிகப்புனிதப்  பயணமான காசி யாத்திரை இன்னும் ஒரு படி மேலே போய் மன அழுக்கை எப்படி சலவை செய்து கதை நாயகன் பட்டாபியின் மன அழுக்கை கரைத்து சுத்தப் படுத்தியது என்பதை கையளவு கதாபாத்திரங்களை வைத்து தெளிவான நடையில் கூறி இருக்கிறார் கதாசிரியர்.

தந்தையின் அஸ்தியை கரைக்க குடும்பத்தோடு காசிக்கு ரயிலில் பயணிக்கும் போது சக பயணி -சரும நோயால்  "உடம்பெல்லாம் உப்புசீடை "காய்த்து பார்க்க முகம் சுளிக்க வைக்கும் தோற்றத்துடன்...

இயற்கை தான்... இப்படி ஒரு தோற்றத்தில் உள்ளவருடன் ரயில் சிநேகம் கொள்ள நம்மில் பலரும் தயங்குவர்... அப்படி ஒருவர் தான் நம் கதை நாயகர் பட்டாபியும்...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - என்ற பழமொழியை பலரும் கேள்வி கேட்காமல் நம்புவதால் புற அழகு இல்லாத பலர் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறார்கள்.... அப்படிபட்டநிலையில் தான் குழந்தைகள் சட் என்று ஓட்டிகொள்ளும் அந்த "உப்புசீடை" மாமா இருக்கிறார்...

குழந்தைகளிடம் உள்ள தெய்வத்தன்மை அவர்கள் வளர வளர குறையும் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்கள் விகல்பமில்லாமல் உப்புசீடை மனிதருடன் பேசி ஸ்னேகமாகப்பழகுவதை அவர்கள் பெற்றோர் பொறுத்துக்கொள்ள  முடிவதில்லை...

காரணம்.... வயது தரும் விபரம் என்று கூட நியாயப்படுத்தலாம் - நோய் தொற்று பற்றிய பயம் / முன் பின் தெரியாதவர் தரும் பொருட்களை குழந்தைகள் மற்றும் பெரியவர்  வாங்கி உண்பதை காவல் துறையே எச்சரிக்கிறதே... அதனால் அதை எல்லாம் பட்டாபி தம்பதியரின் மிகப்பெரிய தவறுகளாகப் பார்க்க தோன்றாவிட்டாலும்...கோபத்தில் பட்டாபி அந்த சக பயணியை  புண்படுத்துவது "உப்புசீடை" காரர் மீது நமக்கு கரிசனம் வர வைத்தாலும், பட்டாபியின் பக்குவமில்லாத மனநிலையை தான் காட்டுகிறதே ஒழிய, அவரை ஒரு மிக தப்பான ஆளாக காட்ட வில்லை .
.

தந்தையின், மரணம், பயணம், நடக்கும் காரியம் நன்கு நடக்க வேண்டுமே... என்ற பல பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளும் அவர் நடத்தையை  நமக்கு புரிய வைக்கிறது...

கடைசியில்,ஒரு திருப்பம் - உப்புசீடை மாமாவின் உதவியால் தான் இவர் தந்தையின் காரியம் நடைபெறப்போகிறது... என்பது கொஞ்சம் cinematic ஆக இருந்தாலும், 

அழகு புற தோற்றம் சம்பந்தப்பட்டதல்ல.... மனம் / குணம் சம்பந்தப்பட்டது என்பதை வாசகர் மனதில் ஆணி அடித்தால் போல இறங்க உதவுகிறது.

ஆனால் தந்தையின் அஸ்தியை அந்த மனிதர் தொடும் படி ஆகிவிட்டதே என்று நினைக்கும் பட்டாபி நாயகன் ஸ்தானத்திலிருந்து ரொம்ப கீழே இறங்கி விடுகிறார்.

கதை முடிவு எதிர்பார்தார்ப்போவே  இருக்கிறது...

படங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன .

ஒரு நல்ல கருத்துள்ள கதையை ஆசிரியர் அழகுற எழுதியிருக்கிறார்...

இந்தக்கதைக்கு விமரிசனம் எழுதும் போது ஒரு நிஜத்தை சொல்லவா -

இதே போல ஒரு உப்புசீடை மனிதரை, 10-15  வருஷம் முன் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிடும் போது பார்த்தேன். இன்று வரை அந்த முகம் மறக்கவில்லை.

அப்போது எனக்கு மட்டும் அல்ல என் உடன் வந்தவர்கள், மற்றும்  மேஜை களில் உள்ளவர்கள் அனைவருக்கு  உள்ளேயும் உள்ள பட்டாபி குணம் கொஞ்சம் கொஞ்சம் தலை தூக்கி முகம் சுளிக்கவைத்தது நிஜம்.

அவர் எழுந்து போன பிறகு அங்கே ஒரு 10சதம் கலகலப்பு கூடியது என்பது உண்மை....

அதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் காலம் தான் எனக்கு கொடுத்திருக்கிறது.

Regards,
Usha

 







மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




     





முதல் பரிசினை 


வென்றுள்ள


மற்றொருவர் யார் ?



திரு. ரமணி அவர்கள்






வலைத்தளம்:


”தீதும் நன்றும் பிறர் தர வாரா” 

yathooramani.blogspot.com




முதல் பரிசினை வென்றுள்ள 



திரு.  ரமணி   அவர்களின்



 விமர்சனம் இதோ:






பதிவுலக சிறுகதை ஜாம்பவான் திருவாளர் 


வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் தீவீர விசிறி நான்



அவர் பதிவில் வெளியிட்டுள்ள அனைத்துச்

சிறுகதைகளையும் நான் விரும்பிப் படித்துள்ளேன்.



ஆயினும் இந்த உப்புச் சீடைக் கதைதான்

என்னை மிகவும் பாதித்த,

யோசிக்க வைத்த கதை என்றால்

நிச்சயம் அது மிகையான கூற்றில்லை.



நிர்வாக இயலில் மிக உயர்ந்த கருத்தாக இப்போது

வள்ளுவரின்

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல் "

என்னும் குறளை அதிகம் மேற்கோளாகக் காட்டுவதைப்போல

விமர்சனம் எனில் வள்ளுவரின்"

"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு "
என்னும் குறளையே வழிகாட்டியாகக் கொண்டால்...

(அறிவு என்பதனை விமர்சன அறிவு எனப்
பொருள்  கொண்டால்,
மெய்ப்பொருள் என்பதனை கதை சொல்லியின்
நோக்கம் என்ன என்பதனை புரிந்து கொள்ளுதல்
எனக் கொண்டால்)

நிச்சயம் யாரும் எந்தப் படைப்பையும்
மிகச் சிறப்பாக விமர்சிக்க முடியும்
பரிசு பெறவும் முடியும் என்பது எனது கருத்து.
.
(இப்போட்டியில் பரிசு பெற்றவர்களின் விமர்சனங்களை
சற்று கூர்ந்து படித்ததில் என்னுள் இக்கருத்துத்தான்
உறுதியானது )

அந்த வகையில் திருவாளர் வை.கோ அவர்கள் இந்தக்
கதையை எழுதியதன் நோக்கத்தை
இந்தக் கதைக்கான மெய்ப்பொருளை மிகச் சரியாக
அனுமானித்தாலே நிச்சயம் அது மிகச் சிறந்த
விமர்சனமாகத்தான் அமையும்

வாழ்க்கை என்பதற்கான உவமையாக  எத்தனையோ
சொல்லப்பட்டிருந்தாலும் கூட வாழ்க்கை ஒரு
பயணம் போன்றது என்பதைப் போல
மிக அருமையான மிக எளிமையான மிக மிகச் சரியான
உவமை வேறு இல்லை என நிச்சயம் சொல்லலாம்

பயணிக்காது பயணிப்பவர்களைப் பார்த்தே காலத்தை
ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்,

பயணத்திற்கான நோக்கம் இன்றி
பயணத்தை வெற்று அலைச்சலாக்கித் திரிபவர்கள்

பயணத்தை அனுபவிக்காது அலுத்துத் தானே அதனையும்
ஒரு நரகமாக்கிக் கொள்பவர்கள்,

பூர்வ புண்ணிய பாக்கியத்தால்
சொகுசாக பயண செய்யக் கொடுத்துவைத்தவர்கள்

டிக்கெட் கிடைத்தும் இடம் கிடைக்காது அவதியுடன்
பயணிக்க நேர்ந்தவர்கள்,

பயணத்தின் நோக்கத்தையே மறந்து
இடையில் ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளால்
திசை மாறித் தொலைப்பவர்கள்

இப்படி பயணிப்பதில் உள்ள பல்வேறு
நிலைகளை வாழ்வின் நிலைகளுடன்  ஒப்பிட்டுப் பார்த்து
சிறிது நேரம் யோசித்துவிட்டுப் பிறகு
இந்தக் கதையைப் படிக்கப்புகுந்தால் இந்தக் கதை
நமக்குள் விளைவித்துப் போகும்
அனுபவம் நிச்சயம் வித்தியாசமானதாகத்தான் இருக்கும்

அந்த நோக்கத்தோடுதான்
வாழ்வின் சம நிலை கொண்டர்களின் உன்னதங்களையும்
அது தவறியவர்களின் அவதிகளையும்
வாழ்வின் மிக முக்கிய அம்சமாகச்சொல்ல விரும்பும் கதாசிரியர்
இரு மாறுபட்ட கதாபாத்திரங்களை உருவாக்கியதோடு
பயணத்தையே தன் கதையின் முக்கிய 
நிகழ்வாகக் கொண்டிருக்கிறார் என்பது எனது அபிப்பிராயம்

இக்கதையின் நாயகரும் ஒரு நோக்கத்தோடுதான்
பயணிக்கத் துவங்குகிறார்.சராசரி மனிதருக்குரிய
அத்தனை திறமைகளும் சுதாரிப்புக் குணங்களும்
அவரிடம் நிறைந்திருக்கிறது என்பதனை அவரது
சுதாரிப்பு நடவடிக்கைகளும் பயணச் சுகத்திற்காக அவர்
செய்து கொண்ட உணவு முதலான ஏற்பாடுகளும்
நமக்கு விளக்கிப் போகின்றன.

ஆயினும் அவரிடம் இருக்கும்
அவரை விட அடுத்தவர் குறித்து அதிகம்
அலட்டிக் கொள்ளும் குணமும்,
அடுத்தவரின் செயல்பாடுகள் மூலம் அவரை அனுமானிக்காது
அவரது வெளித் தோற்றத்தைவைத்து எடை போடும் விதமும்
எதிலும் தேவையற்ற அதிக உணர்ச்சிப் படுபவர் என்பதுவும்
நிச்சயம் இவர் வயதானவர்தான் ஆயினும்
வாழ்வைப் புரிந்து கொள்ளாதவர் ,
முதிர்ச்சி கொள்ளாதவர் என்பதனை மிகத் தெளிவாகப்
புரியவைத்துப் போகிறது.

அதுவும் கதை துவக்கத்திலேயே மூச்சிரைக்க புகைவண்டியின்
வால் முதல் தலைவரை ஓடித் திரும்பும் அவர்
எதிலும் ஒரு சம நிலையற்றவர் என்பதையும்
முடிவாக புகைவண்டி விட்டு இறங்குகையில்
எதில் கவனம் கொள்ள வேண்டுமோ அதில்
கவனம் கொள்ளாது எதில் கவம் கொள்ளத் தேவையில்லையோ
அதில் கவனம் கொள்ளுதல் மூலம் அவர்
வாழ்வின் சூட்சுமம் புரியாதவர் என்பதை
நாசூக்காகப் புரியச் செய்து போவது மிக மிக அருமை

அறியாமை காரணமாக வித்தியாசமானவராகத் தெரிவதால்
பயம் கொள்கிற பெண்ணிடம்,
தனக்குக் கிடைத்த ஜன்னலோர
இருக்கையையும் அந்தப் பெரியவர் மூலம் கிடைத்த
ஐஸ்ஸை ரசித்தபடி அவருடைய உப்புச் சீடை கொப்புளம்
வலியெடுக்கிறதா என்கிற நோக்கில் தொட்டுப் பார்க்கிற
அந்த ரவியிடம்  இருக்கும் மனித நேயமும்  கூட இல்லாது
அவர் மனம் புண்படும்படி பேசிவிடுகிற அந்த
மனிதரைப்பற்றிப்புரிந்தவுடன்,

சரி இவர் ஏதோ ஒன்றை இழக்கப் போகிறார்
அடையவேண்டிய எதையோ அடையாது போகப் போகிறார்
எனத் தெளிவாக முதலிலேயே புரியவைத்துப் போவது
கதையில் மிக மிகச் சிறப்பு

புறச் சூழல் காரணமாக நாம் சம நிலை தடுமாறும்
பல சமயங்களில்தான் நாம் வாழ்வில் பல்வேறு
இழப்புகளைச் சந்திக்கிறோம். தியானம் பக்தி முதலான
விஷயங்கள்  கூட நாம் சமநிலை தவறாது நம்மை நாம்
அவ்வப்போது சரிபடுத்திக் கொள்வதற்காகத்தான் என்பதைப்
புரிந்து கொண்டாலே நாம்  வாழ்வின் ரகசியத்தை
பாதிப் புரிந்தவர்கள் ஆகிவிடுவோம்.

அதீத உணர்வு அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும்
பல சமயங்களில் கற்ற கல்வி, கற்ற வித்தைகள்
உற்ற காலத்தில் பெரும்பாலும் பயன்படாமல் போவது
இந்தச் சமநிலை தவறும் மனோபாவத்தால்தான்.

அலகபாத் வந்துவிட்டது இறங்க வேண்டும்  என்பதில்
அதிகக் கவனம் கொள்ளாது,
தான் தன்னுள் அந்தப் பெரியவரின் மேல் கொண்ட
அருவருப்பின் காரணமாகவே அவர் முகத்தில் விழிக்காது
இறங்கவேண்டும் என்பதற்காக லைட்டை போட்டால்
அவர் விழித்துவிடக் கூடும் என்பதற்காகவே
அரை குறை வெளிச்சத்தில் சாமானை இறக்க முயலும்
அந்தப் பெரியவரின் முயற்சிதான் எத்தனைக் கேலிக் கூத்தானது

அந்த சம நிலை தவறிய நிலைதான் அவர் பயணத்திற்கான
ஆதாரத்தையே விட்டுவிட்டு பயண சுகத்திற்கென
கொண்டு வந்த பொருட்களில் மட்டும் கவனம் செலுத்த
வைத்துவிடுகிறது. கதையின் மையப் புள்ளி அதுதான்

அந்த உப்புச் சீடையை உடலில் கொண்டப் பெரியவரின்
செயல்பாடுகள் அனைத்தும் மிக நேர்த்தியாய்
முதிர்ச்சிபெற்றவர் என்பதைவிட ஞானம் பெற்றவர் என்பதை
சிறு சிறு நிகழ்வுகள் மூலம் சொல்லிப்போனவிதமும்
அவர் குறித்து பிறர் மூலம் அவர் உன்னதங்களைச்
சொல்லிப்போனவிதமும் மிக மிக அருமை.

மிகக் குறிப்பாக அந்தப் பெரியவரை அது அந்த ஆசாமி
என அரைவேக்காட்டு மனிதர் கண்ணோட்டத்திலேயே
சொல்லிப்போனவிடமும்

கதை முடிவில் பிறர் மூலம் அவர் சிறப்பைச்
சொல்லிப்போன விதமும் மிக மிக அருமை

விமர்சனம் என்பது என்னைப் பொருத்தவரை
ஒரு வழிகாட்டி மரமாகத்தான் இருக்கவேண்டும் ....
வழித் துணையாய் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு
இம்சைப்படுத்தக் கூடாது

உணவின் ருசியை மணம் மூலமும்
நிறம் மூலமும் குறிப்பாக உணர்த்துவதாகத் தான்
இருக்கவேண்டுமே ஒழிய
வலுக்கட்டாயமாக ஊட்டுவதாக இருக்கக் கூடாது

அந்த வகையில் கதையில் நாம் அவசரத்தில்
கவனிக்காது போய்விடக் கூடிய வாய்ப்புள்ள இடங்களை மட்டும்
மிக லேசாக இந்த விமர்சனம் மூலம்
வெளிச்சமிட்டுக்காட்டியுள்ளேன்

பசியுள்ளவர்களுக்கு ருசியின் தரம் அறிந்தவர்களுக்கு
இந்தக் கதை சத்துள்ள அற்புதமான விருந்து

நல்விருந்துப் படைத்த பதிவுலக சிறுகதை மன்னருக்கு
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.




  








மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




     


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.







நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



-oOo-




இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.


இணைப்புகள் இதோ:


http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-03-03-third-prize-winner.html 



காணத்தவறாதீர்கள் !







அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo








மீண்டும் ஓர் புதிய பரிசு 



பற்றிய அறிவிப்பு








போட்டிக்கான நிபந்தனைகள்  பற்றிய என் முதல் டும் .. டும் .. டும் .. டும் .. அறிவிப்புப் பதிவினில் அடியேன் தெரிவித்துள்ளது ’ஊக்கப்பரிசு’. 

இது நான் என் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’க்காக வெளியிட நினைக்கும் 40 கதைகளில் ஏதாவது 30 கதைகளுக்காவது விமர்சனம் எழுதி அனுப்பி, போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, கடைசிவரை, நடுவர் அவர்களால் ஒருமுறையேனும் பரிசுக்குத் தேர்வாகாத நபர்களுக்கு மட்டும், என்னால் தனியாகத் தரப்படப் போவது இந்த  ”ஊக்கப்பரிசு”



அதுபற்றிய விபரம் காண இணைப்பு:




-oOo-



அதன்பின் நான் அறிவித்துள்ளது ’போனஸ் பரிசு’ என்பதாகும். 

இது போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்குமே  என்னால் அளிக்கப்பட உள்ள ஓர் சிறப்பு வாய்ந்த மகிழ்ச்சிப் பரிசாகும். ஆனால் இந்தப்பரிசு, நான் என் மனதில் நினைத்துள்ள,  ஒருசில குறிப்பிட்ட கதைகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.

இந்த போனஸ் பரிசு என்பது, என் மனதில் நான் நினைத்துள்ள அந்தக் குறிப்பிட்ட ஒருசில கதைகளுக்கான விமர்சனப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்குமே கூடுதலாகக் கிடைக்கும் ஒன்றாகும். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வானவர்கள், தேர்வாகாதவர்கள் என அனைவருக்குமே கிடைக்கக்கூடியது இந்த ”போனஸ் பரிசு”


உதாரணம்: VGK 03 “சுடிதார் வாங்கப் போறேன்”

அதுபற்றிய விபரம் காண இணைப்புகள்:



இந்த போனஸ் பரிசினால் மேலே சொல்லியுள்ள ஊக்கப்பரிசு கிடைப்பது எந்த விதத்திலும் யாரையும் பாதிக்காது.  இது வேறு, அது வேறு.


-oOo-


இப்போது மேலும் ஓர் 
புதிய பரிசு பற்றிய அறிவிப்பு 

இதன் பெயர் ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்பதாகும்.

இந்தப்புதிய ’ஹாட்-ட்ரிக்’ பரிசினை 

இப்போது அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஹாட்-ட்ரிக் பரிசு பற்றிய விபரங்கள்:

முதல் பரிசோ, 
இரண்டாம் பரிசோ 
அல்லது மூன்றாம் பரிசோ 
எதுவாக இருந்தாலும் 
தொடர்ச்சியாக அடுத்தடுத்து மும்முறை 
’சிறுகதை விமர்சனப் போட்டி’யில்
பரிசு வென்றவர்களுக்கு மட்டும் 
இந்த ’ஹாட்-ட்ரிக்’ பரிசு 
கூடுதலாக வழங்கப்பட உள்ளது.



தொடர்ச்சியாக அடுத்ததடுத்து மூன்று முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 50] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.


தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்கு முறைகள்  பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, இரண்டாம் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 100] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.


தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஐந்து முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, முதல் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 150] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.


தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறு முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, ஊக்கப் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 200] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.

ஆறுமுறைகளுக்கு மேல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பரிசுக்குத் தேர்வாகி சாதனை படைப்பவர்களுக்கு மட்டும், ஒவ்வொரு ஆறுடனும் கணக்கினை முடித்துக்கொண்டு, அதற்கு மேலான வெற்றிகளை, புதிய சங்கலித் தொடராக 1 to 3, 1 to 4, 1 to 5, 1 to 6 என பாவித்து மேற்படி அட்டவணைப்படி மீண்டும் கணக்கிட்டு, மீண்டும் ‘ஹாட்-ட்ரிக்’ பரிசு கூடுதலாக வழங்கப்படும்.

-oOo- -oOo- -oOo- -oOo-


இந்த புதிய அறிவிப்பின் படி 

முதல் நான்கு கதைகளுக்கும் 
[ VGK-01 to VGK-04 ] அடுத்தடுத்து, தொடர்ச்சியாகப் 
பரிசினை வென்றுள்ள 


திரு. ரமணி அவர்களுக்கு, 

இரண்டாம் பரிசுக்குச் சமமான தொகை 
கூடுதலாக 'ஹாட்-ட்ரிக் பரிசு' என்ற பெயரில் 
வழங்கப்பட உள்ளது.

இவரே மேலும் பலமுறை இதே 
‘ஹாட்-ட்ரிக்’ பரிசினைப்பெறவும் 
வாய்ப்புகள் உள்ளன.


-oOo- -oOo- -oOo- -oOo-



VGK-04 to VGK-06

ஆகிய மூன்று கதைகளுக்கும் 

அடுத்தடுத்து, தொடர்ச்சியாகப் 

பரிசினை வென்றுள்ள 


திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 

இந்த ’ஹாட்-ட்ரிக்’ பரிசினைப்பெற 
முற்றிலும் தகுதியுள்ளவராக 
இப்போது ஆகியுள்ளார்கள் 
என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் 
தெரிவித்துக்கொள்கிறேன்.



[ அவர்களின் தொடர் வெற்றியினைப்பொறுத்து,
மேலே சொல்லியுள்ள அட்டவணைப்படி,
அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய 
‘ஹாட்-ட்ரிக்’ பரிசுத்தொகை பிறகு நிர்ணயிக்கப்படும். ]


-oOo- -oOo- -oOo- -oOo-



ஹாட்-ட்ரிக் பரிசுகளைக் கூடுதலாகப் 
பெறப்போகும் இவர்கள் இருவருக்கும்

என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். 

அன்பான இனிய நல்வாழ்த்துகள். 





-oOo-

இனி வரப்போகும் ஒவ்வொருவார
போட்டி முடிவுகளிலும் 
நாம் எவ்வளவோ 
ஹாட்-ட்ரிக்” 
வெற்றியாளர்களை
தொடர்ந்து பார்க்கத்தான் போகிறோம் !



ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !!

சிறுகதை விமர்சனதாரர்களா ..... 
கொக்கா !!!

-oOo-


ஒருசில மகிழ்ச்சியான செய்திகள்

கண்ணன் பிறந்தான் எங்கள் 

கண்ணன் பிறந்தான் ....


புதுக் கவிதைகள் 

பிறந்ததம்மா ....



மன்னன் பிறந்தான்  எங்கள்  

மன்னன் பிறந்தான்  ....


மனக் கவலைகள் மறந்ததம்மா ....


09.03.2014 ஞாயிறு 

அதிகாலை  2.47 மணிக்கு 

என் வாரிசுக்கு வாரிசு பிறந்துள்ளது.

இவரின் புதிய வருகையைச் சேர்த்து 

‘VGK’ குடும்ப உறுப்பினர்கள்


எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மீதி 11 பேர்கள் யார் ... யார்? எனக் காண
இதோ இணைப்பு

http://gopu1949.blogspot.in/2011/07/1.html


-oOo-


நம் வேலூர் பதிவர் திருமதி. ’உஷா அன்பரசு’ அவர்கள் கேள்விகள் கேட்க என் அன்பு மனைவி விரிவாக பதிலளிக்க,  அந்த சிறப்புப்பேட்டிச் செய்திகள், 08.03.2014 தினமலர் - பெண்கள் மலர் - பக்கம் 22 இல் பெட்டிச்செய்தி போல, மிகவும் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ளது, என்பதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


தலைப்பு:

குடும்பத்தின் மகிழ்ச்சி ..... 

கூட்டுக்குடும்பமா ?  தனிக்குடும்பமா  ?


-oOo-


இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 




கதையின் தலைப்பு:


 



”அமுதைப்பொழியும் நிலவே !”





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


13.03.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.
















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

28 கருத்துகள்:

  1. முதல் பரிசு வென்ற திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

    அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. முதல் நான்கு கதைகளுக்கும்
    [ VGK-01 to VGK-04 ] அடுத்தடுத்து, தொடர்ச்சியாகப்
    பரிசினை வென்று கூடுதலாக 'ஹாட்-ட்ரிக் பரிசுகளையும் வென்ற திரு. ரமணி ஐயா அவர்களுக்கு, மனம் நிறைந்த வாழ்த்துகள்/.

    முதல் பரிசு பெற்ற அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!


    பதிலளிநீக்கு
  3. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும், திரு. ரமணி ஐயா அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    இரு அருமையான குறள்களோடு விமர்சனம் அற்புதம்... மிகவும் ரசித்தேன்... மூன்றாம் / இரண்டாம் பரிசுகளில் ரமணி ஐயா இல்லையென்றால், முதல் பரிசு ரமணி ஐயா பெறுவார்...! ஹா... ஹா...

    நீங்கள் சொன்னது போல் மேலும் பலமுறை இதே ‘ஹாட்-ட்ரிக்’ பரிசுகளை கண்டிப்பாகப் பெறுவார்... எங்களின் கவிதை + கட்டுரைப் போட்டி நடுவருக்கு வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  4. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி உஷாஸ்ரிகுமார் அவர்களுக்கும், திரு. ரமணி அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.உங்கள் மனிவிக்கும் எனது வாழ்த்துக்கள் பேட்டி வெளியானதற்கு.

    பதிலளிநீக்கு
  5. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. உஷா ஶ்ரீகுமார் அவர்களுக்கும் திரு. ரமணி ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சகோதரி உஷா ஸ்ரீகுமார் மற்றும் கவிஞர் ரமணி இருவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் போல் முதல் பரிசு வென்றிருக்கும் திரு ரமணி அவர்களுக்கும், அருமையான விமர்சனம் எழுதி முதல் பரிசு வென்றிருக்கும் உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! ஹாட்ரிக் பரிசு வென்றிருக்கும் ரமணி அவர்களுக்கும் ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  8. முதல் பரிசினை அமோகமாய் வென்றிட்ட திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் திரு ரமணி ஐயா அவர்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. சுருக்கமாக எனினும் மிகச் சிறப்பாக
    விமர்சனம் வழங்கியுள்ள உஷா ஸ்ரீ குமார்
    அவர்கள் முதல் பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது
    அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. எனக்கு விமரிசனம் எழுத வாய்ப்பளித்த திரு vgk அவர்களுக்கும்,அதை முதல் பரிசுக்கு உறியதாக தேர்ந்தெடுத்த நடுவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளகிறேன் .

    வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் பணிவார்ந்த நன்றிகள்...

    hat trick வின்னர் திரு.ரமணி அவர்களுடன் இந்த பரிசை பகிர்ந்து கொள்ளவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி .

    இந்த பரிசு என் எழுது ஆர்வத்தை தூண்டி இருக்கிறது...நன்றாக எழுத வேண்டுமே என்ற சிரத்தையை அதிகரித்து உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Usha Srikumar March 12, 2014 at 10:57 AM

      வாங்கோ, வணக்கம்.

      //எனக்கு விமரிசனம் எழுத வாய்ப்பளித்த திரு vgk அவர்களுக்கும்,அதை முதல் பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்த நடுவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளகிறேன்.//

      உறியில் திரண்டு வந்த வெண்ணெய் போல, அழகாகவும் சுவையாகவும், சுருக்கமாகவும், யதார்த்தமான சிந்தனைகளுடனும் விமர்சனம் எழுதி, முதல் பரிசினை வென்றுள்ள தங்களுக்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும், அன்பான இனிய நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      இந்த சிறுகதை விமர்சனப்போட்டியில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல பரிசுகளை தாங்கள் வென்றிட வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      நீக்கு
    2. Usha Srikumar March 12, 2014 at 10:57 AM

      //இந்த பரிசு என் எழுது ஆர்வத்தை தூண்டி இருக்கிறது... நன்றாக எழுத வேண்டுமே என்ற சிரத்தையை அதிகரித்து உள்ளது...//

      ஓவியம் + வெகு அழகான கைவேலைத்திறமைகள் மிக்க சகலகலாவல்லியான தங்களால் எதையுமே மிகச்சுலபமாகச் சாதிக்க முடியும். மீண்டும் என் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      நீக்கு
  11. மிக அழக்காக விமரிசித்து முதல் பரிசை வென்று hat trick அடித்திருக்கும் திரு. ரமணி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  12. முதல் பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சனத் திலகம் ரமணி சார் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. முதல் பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்கள் விமர்சனம் மிக அருமை. வாழ்த்துக்கள் உஷா அவர்களுக்கு.
    ரமணி சாரின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.
    ரமணி சாரின் விமர்சனம் மிக அருமை.
    தங்க மங்கையில் வெளிவரப்போகும் தங்கள் துணைவி அவர்களின் பேட்டி படிக்க ஆவல், அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.


    குடும்பத்திற்கு வந்த புதுவரவுக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியை அளிக்க வந்த கண்ணனுக்கு, மன்னனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    எங்கள் ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு March 13, 2014 at 7:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //குடும்பத்திற்கு வந்த புதுவரவுக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியை அளிக்க வந்த கண்ணனுக்கு, மன்னனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
      எங்கள் ஆசிகள்.//

      கண்ணன், மன்னன் என்று பாராட்டிச் சொல்லி, குட்டிப்பயலுக்குக் கொடுத்துள்ள வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  14. தங்கள் துணைவிஅவர்கள் பேட்டி , தினமலர் பத்திரிக்கையில் பெண்கள் மலர் என்பதற்கு பதில் தவறுதலாய் வேறு பெயர் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு March 13, 2014 at 7:04 AM

      //தங்கள் துணைவிஅவர்கள் பேட்டி , தினமலர் பத்திரிக்கையில் பெண்கள் மலர் என்பதற்கு பதில் தவறுதலாய் வேறு பெயர் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.//

      அதனால் பரவாயில்லை மேடம். பேட்டி பற்றிய முழு விபரங்களும் கீழ்க்கண்ட பதிவின், பின்னூட்டப்பகுதியில், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நான் அளித்துள்ள பதில்களில் உள்ளன. நேரம் கிடைக்கும்போது பாருங்கோ.

      http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-03-03-third-prize-winner.html

      அன்புடன் VGK

      நீக்கு
  15. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    மூன்று முறை வென்ற தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. இந்த இரு வெற்றியாளர்களும் தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://yaathoramani.blogspot.in/2014/03/blog-post_12.html#comment-form
    திரு. ரமணி அவர்கள்

    http://usha-srikumar.blogspot.in/2014/03/blog-post_12.html?showComment=1394643433809#c4281237619640018184
    திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  17. உஷா ஸ்ரீகுமார் மற்றும் திரு ரமணி அவர்களின் விமரிசனங்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  18. பரிசு வென்றவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  19. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சக வித்தகர் திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 27, 2015 at 10:36 PM

      //திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சக வித்தகர் திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      வாங்கோ, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      நீக்கு
  20. பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. திருமதி உஷாஸ்ரீகுமார் திரு ரமணி சாருக்கு வாழ்த்துகள் உஷா அவர்கள் குழந்தைகள் அவரின் உருவம் பார்த்து அசூயைப்படாமல் சகஜமாக அவருடன் பழகுவதை ரசிச்சு சொல்லி இருக்காங்க. ரமணி சார் எழுத்தாளரின் எழுத்து திறமையை வியக்கிறார்.

    பதிலளிநீக்கு
  22. அதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் காலம் தான் எனக்கு கொடுத்திருக்கிறது.// காலம் உண்மையில் எல்லோர்க்கும் ஒரு நல்லாசான். வாழ்த்துகள் சகோதரி.

    அதீத உணர்வு அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும்
    பல சமயங்களில் கற்ற கல்வி, கற்ற வித்தைகள்
    உற்ற காலத்தில் பெரும்பாலும் பயன்படாமல் போவது
    இந்தச் சமநிலை தவறும் மனோபாவத்தால்தான்.// மிகச் சரியாகச்சொன்னீர்கள் ஐயா. அலசி ஆராய்ந்து எழுதிய நேர்த்தியான விமர்சனம். வாழ்த்துகள்.
    இந்த போட்டியில் கலந்துகொள்ள அப்போது தெரியாமல்போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.


    பதிலளிநீக்கு
  23. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு