என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 30 மார்ச், 2014

VGK 09 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’அஞ்சலை’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 09 - 


” அ ஞ் ச லை “


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 









    




முதல் பரிசினை 


வென்றுள்ளவர்கள்


மொத்தம் இருவர் 





முதல் பரிசினை 

முதன் முதலாக 

வென்றுள்ளவர்





திரு.  J. அரவிந்த் குமார் அவர்கள்







”அதி சீக்ரமேவ விவாஹப் பிராப்திரஸ்து”








வலைத்தள முகவரி


My Heartiest Congratulations to you

Mr. J. Aravind Kumar Sir !





முதல் பரிசினை முதன் முதலாக வென்றுள்ள


திரு.  J. அரவிந்த் குமார் 


அவர்களின் விமர்சனம் இதோ ....







ஈட்டி எட்டின வரை பாயும் - பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்..

இந்தக் கதையில்  உன்னதமாக நாம் நினைத்திருக்கும் தாய்மை வரை பாய்ந்திருக்கிறது ..!

அது சரி .. பணம் என்றால் பிணமும் வாயைத்திறக்குமே .. அடுத்தவேளை குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கும் - தன் வயிற்றுப்பாட்டிற்கும் நேர்மையான முறையில் வழி தேடும் நிலையிலுள்ள  ஆதரவற்ற அஞ்சலைக்கு வேறு எந்த தீர்வும் இல்லைதான் ..!

கொடுத்த காசோலையிலிருந்த பூஜ்ஜியங்கள் தன்  இன்றைய இல்வாழ்க்கையை பிரதிபலிப்பதாக  எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்த அஞ்சலையின் நிதர்சன வாழ்வை காட்சிப்படுத்தும் பாங்கு பாராட்டத்தக்கது..!

அனைத்து வழிகளையும் அடைத்து இந்த ஒரு ராஜபாட்டையை மட்டுமே திறந்து வைத்து நம்மையும் ஏற்றுக்கொள்ளவைக்குமாறு அமைத்த கதையின் முடிச்சு வலிமையானது ..!

அஞ்சலையின் அடுத்த வேளை உணவுக்கு வழி செய்ய  அக்கறை காட்டாத இந்த உலகம் அவள் தக்காளி நிற மாருதி காரில் ஏறி செல்வதையும் , வெறும் வாயை மெல்லுவதற்குக்கிடைத்த அவலாக ஆவலாதி கொண்டு அலைவதைத்தடுக்கமுடியாது தான் ..!

குழந்தையை வளர்க்க சிவ குருவிடம் தருவதையும் விமர்சித்து  சட்டச் சிக்கல்களை எடுத்து முன் வைத்து தொல்லை தந்தால் அதை நிவர்த்திக்க வழியா இல்லை பணத்தால் எதுவும் முடியுமே என்று சமாதானப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அஞ்சலையும் , சிவகுருவும் , அவர் மனைவி மல்லிகாவும் நம் மனதில் இடம் பிடித்து விடுவது கதை ஆசிரியர் நுட்பமாக கதை மாந்தர்களை காட்சிப்படமாக நம் மனதில் ஓடவிட்ட திமைக்கு சான்று பர்கிறது ..!  

எளிய அஞ்சலையின் குடிசையை  நிதர்சனமாக காட்சிப்படுத்தியதில் மனதை கவருவது மணல் சிம்மாசனத்தின் மீது கொலுவிருந்து அலுமினிய ட்ம்ளரை தன் மகுடமாகச்சூடியிருக்கும் மண்பானை தான் .. 

சர்பத் வேண்டாம் அந்த மண்பானைத்தண்ணீரே போதும் என்று செல்வந்தர் சிவகுருவை மட்டுமல்ல  நம்மையும் மண்பானைத் தண்ணீருக்கு ஏங்கவைக்கிறது ..!  கதாசிரியரது  அபாரமான வர்ணனை..!!

சின்ன கோலம் எரியும் சுவாமி விளக்கு என்று மண்குடிசையானாலும் தென்றலாத்தவழும் நேர்த்தியும் தூய்மையும்  பல வசதி படைத்த இல்லங்களிலும் காணக்கிடைக்காதது ..!

எளிய மண்குடிசை, அது அமைந்திருக்கும் தெருவின் அமைப்பு , ஐந்து நட்சத்திர விடுதி , அதைச்சுற்றியுள்ள கடைகள் , சிவகுருவின் வ தியான இல்லம் என கதை நிகழும்  இடங்களை கச்சிதமான வர்ணிப்புகளால் நாம்   அந்தந்த இடங்களில் இருப்பதாக உணரவைக்கும்  கதாசிரியரின் உத்தி நேர்த்தியானது..!

அந்தந்த சூழ்நிலைகளை திரைப்படப்பாடல்களாலும் , காலக்கட்டங்களை தொலைக்காட்சி நெடுந்தொடர்களாலும் 
விளக்கும் கதாசிரியரின் தனித்திறமை வியப்பளிக்கிறது..!

வாடகைத்தாய் கதாபத்திரமான கற்பகம் அஞ்சலையின்  கவனத்தை கவர்ந்தது கூட அவள் குழந்தையை வளர்ப்பதற்கு சிவகுரு - மல்லிகா தம்பதியினருக்கு தர சம்மதிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது..

ம்பந்தமில்லாமலா கதாசிரியர் குறிப்பாக இந்த காட்சியை குறிப்பிட்டிருப்பார்  ..!  எத்தனை அழுத்தமான காட்சியமைப்பு இது
என்று வியந்து ரசிக்கிறோம் ..!! 

எத்தனையோ இல்லங்களில் படித்த நாகரிமான பெண்களுக்குக்கூட இந்தத் தொடர்களே வாழ்க்கையில் பிரதிபலிப்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறோமே..  !


தனிமையில் தவித்த அவளுக்கு, நேற்றுவரை தன்னுடன் இருந்த, தன் 

குழந்தை இப்போது தன்னுடன் இல்லாததாலும், அந்தக்குழந்தையின் 

பிரிவு தாங்கமுடியாத வேதனை அளித்ததாலும், அன்று இரவு முழுவதும் 

தூக்கமின்றித் தவித்தாலும் ....


 

நிரந்தரப்பிரிவு ஒன்றும் இல்லையே..



விடிந்ததும் போய் 



செல்வச்செழிப்பில் மிதக்கும் தன் குழந்தையை 



அ ஞ் ச லை கொஞ்சத்தானே போகிறாள் என்று எண்ணும் போது  அவள் 

வாழ்வு விடிந்து விட்டது என்று நிம்மதி அடையத் தோன்ற 

வைத்துவிடுகிறார் கதையின் ஆசிரியர் ..!


கேள்விக்கணைகளோடு அதற்கான பதில்களையும் உணரவைத்துவிடும் 

ஆசிரியரின் சாமார்த்தியமே சாமார்த்தியம்..!



அந்தக்குழந்தை அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் ஆகட்டும் , 

அதற்கான விளையாட்டுப்பொருள்களின் அணிவகுப்பு ஆகட்டும் 

சிவகுருவின் குழந்தை இல்லா ஏக்கத்தை பறைசாற்றவைக்கிறார் 

ஆசிரியர்..


கனமில்லாத பெரிய பந்தை எடுத்து அந்த குழந்தையுடன் மல்லிகா 

சிரித்து விளையாட ஆரம்பிக்கும் நேரத்தில் அவளது 

வயிற்றுப் பிரச்சினைகள் சரியாகி குழந்தைப் பாக்கியம் பெறும் 

வாய்ப்பு வந்தாலும் வரலாம் .. 


வீட்டு ஹாலின் சுவரைச்சுற்றிலும், பல்வேறு பாவனைகளில் சிரித்த 

வண்ணம் குழந்தைகள் படங்கள் நிறையவே தொங்கவிட்டு தினமும் 

ஒவ்வொன்றாக அவற்றைப்பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்த 

மல்லிகாவுக்கு நிஜ குழந்தையுடன்  ஆனந்தத்துடன் ஸ்பர்சித்து 

விளையாடி மனதில் மகிழ்ச்சி முகிழ்க்கும் போது  அவள் வாழ்வில் மலடி 

என்னும் சொல்லும் விடை பெறலாம் ..!



சந்தோஷமான முகத்துடன் தன் மனைவியைக் கண்டு ரசிக்கும்  சிவகுரு, 

தன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம்  இந்தக் 

குழந்தையின் வருகையினால் கிடைத்தாலும் .....


அந்தக் குழந்தை அஞ்சலையின் குழந்தைதான்  என்று மல்லிகா அறிய 

வந்தால் எப்படி எடுத்துக்கொள்வாளோ என்கிற எண்ணத்தை 

அறிந்துதான் பதிவு செய்த அனாதை விடுதியிலிருந்து  எடுத்து 

வந்ததாக புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில் பொயமையும் 

வாய்மயுடைத்தே என  மறைக்கிறார் கதை ஆசிரியர்..



ராமேஸ்வரம் செல்லும் சமயத்தில்  - (வேறு எதற்கு சென்றிருப்பார் - 

பிள்ளைவரம் வேண்டித்தான் சென்றிருப்பார் ..பாவம்..) 


அஞ்சலைக்கு கொடுத்த பணம் பாவம் கள்ளச்சாராயத்தினால் 

கணவனைப் பறிகொடுத்த  நிலையில் கால் வாசி லஞ்சப்பேய்க்கு 

அழுதுவிட்டு , அதுவரை குழந்தையை பார்த்துக்கொள்ளும் 

துணையாகவாவது இருந்த வாழ்க்கைத் துணையான ஒரே உறவைப் 

பறிகொடுத்துவிட்டு உற்றார் உறவு ஏதும் இல்லாத அத்தனை 

சின்னவயதுப் பெண்ணின் ஒரே பற்றுக்கோடான ஆண்குழந்தையை - 

மனதார உரிமையை விட்டுத்தர  சம்மதிக்க வறுமையைத்தவிர வேறு 

என்ன  காரணம் இருக்கமுடியும் ..!



காய்க்காத மரத்தடியில் தேனாறு பாய - 

கனிந்துவிட்ட சின்னமரம் கண்ணீரில் வாட - 

என்ன கொடுமை ..!




எந்த இடத்திலும் விறுவிறுப்பு குன்றாமல் 


சுவைபடக் கதையை நகர்த்தி அனைவரும் 


ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளை சிந்தித்து 


திட்டமிட்டு சிறப்பாக எழுதிய கதை  


உலகளாவிய சிறுகதைப் 


போட்டியில் பரிசு பெற்றதில் 


ஆச்சரியமென்ன..! 



 

 


மனம் நிறைந்த  பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்


    


முதல் பரிசினை வென்று 


பகிர்ந்து கொண்டுள்ள 


மற்றொருவர்



திருமதி. 


இராஜராஜேஸ்வரி 


அவர்கள்




http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"






  











முதல் பரிசினை வென்றுள்ள 

திருமதி. 


இராஜராஜேஸ்வரி


 அவர்களின் விமர்சனம்:



 





பெறும் பேறுகளில் சிறந்த செல்வமாக போற்றப்படுவது மழலைச் செல்வம் .. ! குழந்தை இல்லாத ஏக்கம் என்பது சாதாரணமானதல்ல .. ! 

மழலைச்செல்வம் இல்லாத  மனதின் உணர்வுப் போராட்டமும் தியாகம் செய்த தாயின் நிலையும் மனதில் அப்படியே கனமாய் கதை ஆசிரியரின் எழுத்தால் இறங்கிவிட்டது போல சிறப்பான சிறுகதை. 

கைக்குழந்தையுடன் கணவனை இழந்த ஒரு எழைப்பெண்ணின் மனப்போராட்டம், குழந்தை பாக்யம் இதுவரை கிடைக்காமல் உள்ள ஒரு பணக்கார தம்பதியின் ஏக்கங்கள், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்க எண்ணி எடுத்துள்ள அவசர முடிவுகளுடன் ......

கதையைப்பாதியில் முடித்து, பிறகு என்னென்ன நடந்திருக்கும் என்பது, வாசகர்கள் யூகித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்ட நுட்பம் எண்ணி எண்ணி வியக்கவைக்கிறது..!

ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும் தான்.. ஆனால் இழப்பதின் வலி பெறுவதின் சுகத்தை விட அதிகம்.. இந்த பிசாத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு அஞ்சலை தினம் விடும் கண்ணீர்த் துளிகளுக்கு ஈடாகுமா? ஆக, பணத்தினால் எதுவும் வாங்கலாம், பச்சை மண் முதற்கொண்டு!

ஆனாலும்  எழுத்தின் லாவகம் குறைகளை நிவர்த்தி செய்திருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..

உலக அளவில் போட்டியிட்டு பரிசு பெற்ற கதை நம்மனதையும் கவரும் வகையில் அழகான கட்டமைப்புடன் பொருத்தமான படங்களுடன் அமைந்திருக்கிறது..

அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு திரைப்படப்பாடல்கள் தொலைக்காட்சித்தொடர்கள் ஆகியவற்றை சிறப்பாகப்பயன்படுத்தி கதைக்கு பொலிவூட்டுகிறார் கதை ஆசிரியர்..

கதை நடந்த காலக் கட்டத்தையும் தெள்ளத்தெளிவெனப் புரியவைத்துவிடுவதால் அந்த காலக்கட்டத்தில் அவர் குறிப்பிடும் தொகையின் மதிப்பு  அப்போது பெரியதுதான்..!

.இப்போதைய காலக்கட்டத்திற்கு இங்கு குறிப்பிட்ட தொகைக்கு வேலைக்காரர்கள் கிடைப்பதில்லை..! 

வாடகைத்தாய் கதாபாத்திரமான கற்பகம் அஞ்சலைக்குப் பிடித்துப்போக அவளே அந்தமாதிரி சூழ்நிலைக்கு ஆட்படுவது - கதாசிரியரின் நேர்த்தியான கதை அமைப்பு வியக்கவைக்கிறது..

அதற்கான அங்கீகாரமும் கிடைத்திருப்பதற்கு அஞ்சலையின் வேதனைகளையும் மன குழப்பங்களையும் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப எத்தனிக்கும் போராட்டங்களையும் அருமையாக வெளிப்படுத்தி சிறப்பான கதையாக்கியிருக்கிறார் கதை ஆசிரியர்..

இடைவேளைக்கு முன்பு வரை எளிமையான குடிசையின் அமைப்பை காட்சிப்படுத்திய ஆசிரியர் இடைவேளையின் போது அதற்கு நேர் எதிர்ப்பதமாக செல்வச்செழிப்பில் மிதக்கும் ஐந்து நட்சத்திர விடுதியையும், இடைவேளைக்குப்பிறகு சகலவசதிகளுடனான பல அறைகளைக்கொண்ட சிவகுருவின் இல்லத்தையும்   தன் கைதேர்ந்த நுணுக்கமான வர்ணணைகளால் காட்சிப்படுத்தும் நுட்பம் பாராட்டத்தக்கது..!

தாளாலே தான் உண்ட நீரைத் தலையாலே தான் தரும் தென்னம்பிள்ளை போல தனக்கு தக்கசமயத்தில் பண உதவிசெய்த முதலாளிக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஆயிரம் வேலைகள் செய்வதோடு நம்பிக்கையும் நாணயமும் நிரம்பிய அஞ்சலை தன் உதிரத்தில் உதித்த அழகுக்குழந்தையையும் குழந்தை பேறை எதிர்பார்த்து ஏங்கும் சிவகுருவின் மனைவி மல்லிகா  வளர்ப்பதற்குத் தருகிறாள். 

காலத்தினால் செய்த உதவி ஞாலத்தில் மாணப்பெரிதல்லவா.!

தன் உரிமையை விட்டுக்கொடுத்து தினமும் குழந்தையை பேணுவதற்கு வாய்ப்பும் அதற்கு சம்பளமும், பெரியதொரு தொகையை நிரந்தரவைப்புத்தொகையாகவும் அதற்கு மாதாமாதம் சுளையாக வட்டியும் பெறும் அதிர்ஷ்டமும் கிடைப்பது எத்தனை யோசித்து சிக்கல்களை எல்லாம் ஆராய்ந்து தீர்வும் பெறும் வகையில் கதை அமைத்திருப்பது ஆசிரியரின் திட்டமிடுதலுக்கு சான்று பகர்கிறது..

தினைத் துணை உதவி செய்யினும் 
பனைத்துணையாக கொள்ளும் - பயன் தெரிவாரைப்போல
சீர்தூக்கிப்பார்த்தால் கள்ளச்சாராய சாவுக்கு தன் கணவனைப் பறிகொடுத்து உற்றார் உறவினர் யாருமற்ற அஞ்சலைக்கு கஷ்டம் தான் விடிந்துவிட்டதே.. !

அவள் கற்பனைக்கும் எட்டாத கோலாகலத்துடன் அவள் வாரிசு வளர்வதை கண்கூடாகக் காணும் பாக்கியமும் பெறுகிறாளே...!

வெறும் உரிமை மட்டும் கொண்டாடிக்கொண்டு வறுமையில் வாடி அன்றாடம் காய்ச்சியாக ஏங்கி வாழ்வதை விட - சகல வசதிகளோடு குழந்தை வாழ்வதை அதனை பராமரிக்கும் இனிய பொறுப்பும் ஏற்று கரும்பு தின்னக்கூலியாக சம்பளமும் பெறப்போகிறாளே அஞ்சலை..!

இதை விட அவள் வாழ்வு விடிந்துவிட்டது என்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமா என்ன..!

இருளும் நீங்கியது, கோழி கூவி பொழுது விடிந்து புதுவசந்தம் பூத்துவிட்டது .. அஞ்சலை வாழ்வில் மட்டுமல்ல .. சிறந்த கதை என்று பரிசு பெற்று பாராட்டும் வாங்கித் தந்திருக்கிறது கதை ஆசிரியருக்கு..!       




 


மனம் நிறைந்த  பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்


    




மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.




நடுவர் அவர்களின் 
வழிகாட்டுதல்களின்படி
முதல்  பரிசுக்கான தொகை 
இவ்விருவருக்கும் 
சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.

-oOo-


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 
இடைவெளிகளில் ஏற்கனவே 
வெளியிடப்பட்டுள்ளன.

இணைப்புகள் இதோ:



காணத்தவறாதீர்கள் !





அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு 
சிறப்பிக்க வேண்டுமாய் 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo


இதுவரை முதல் ஒன்பது கதைகளுக்கான 
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 

முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.


  [[
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! 


இதுவரை ஹாட்-ட்ரிக் 
வெற்றியாளர்கள் 
பட்டியலில் உள்ளோர் :





1] திரு. ரமணி அவர்கள் 
[VGK-01 to VGK-04]



2] திருமதி. 
இராஜராஜேஸ்வரி அவர்கள் 
[VGK-04 to VGK-06] 


3] திருமதி கீதா மதிவாணன் **அவர்கள்
[VGK-07 to VGK-09] 

ஆகிய மூவர் மட்டுமே !


இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?


இதைப்படித்துக்கொண்டிருக்கும்
நீங்களாகவும் இருக்கலாம் !

oooooOooooo

** ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் 
பட்டியலில் இம்முறை
புதிதாக இடம் பெற்றுள்ள


திருமதி.  

        கீதா மதிவாணன்  

 [கீத மஞ்சரி ] 

அவர்களுக்கு

நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 
நல்வாழ்த்துகள்.

இவரின் தொடர் வெற்றியினைப்பொறுத்து
ஹாட்-ட்ரிக் பரிசுக்கான தொகை பிறகு நிர்ணயிக்கப்படும்.
அது பற்றிய மேலும் விபரங்களுக்கு இணைப்பு:

oooooOooooo


இந்த வார சிறுகதை 
விமர்சனப் போட்டிக்கான 

கதையின் தலைப்பு:

VGK 11 - 


” நாவினால் சுட்ட வடு 

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 

03.04.2014  

இந்திய நேரம் 

இரவு 8 மணிக்குள்.



உடனே எழுதி அனுப்புங்கோ !












என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்



34 கருத்துகள்:

  1. விமர்சனங்கள் அருமை...

    முதல் பரிசினை பெற்ற திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும், திருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சுப விவாஹப் பிராப்திரஸ்து அரவிந்த் குமார் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் அரவிந்த் குமார் - பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. இரண்டு பேரின் விமர்சனமும் மிகவும் அருமை..

    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு அரவிந்த்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. முதல் பரிசினை முதன் முதலாக வென்றுள்ள அரவிந்த் குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்..

    கல்லூரியில் கட்டுரைப்போட்டிகளில் வென்று வெள்ளிப்பேனா பரிசு பெற்று மகிழ்வித்தவர் இந்த விமர்சனப்போட்டியிலும் வெற்றிபெற்றத்ற்கு மகிழ்ச்சியான வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
  6. எமது விமர்சனத்தை முதல் பரிசுக்கு தேர்வு செய்தமைக்கு இனிய நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  7. முதல் பரிசினை முதன் முதலாக வென்றுள்ள திரு.அரவிந்த் குமார் மற்றும் ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் திருமதி.இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. திரு. அர்விந்த்குமாருக்கும், திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. முதல் பரிசினை வென்றுள்ள திரு. அர்விந்த் குமார் அவர்களுக்கும் திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும், திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அருமையான விமர்சனங்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. இருவரின் விமரிசனங்களும் மிக அருமை.

    திரு அரவிந்த குமார் மற்றும் திருமதி ராஜராஜேஸ்வரி இருவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. பரிசு பெற்ற அனைவருக்கும்
    பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    நடுவே இணைக்கப்பட்ட நடுவரின் குறிப்பு மிகவும் பயனுள்ளதாய்
    உள்ளது.

    இணைப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. முதல் பரிசு பெறும் ராஜராஜேஸ்வரி மற்றும் அரவிந்த்குமார் ஆகியோருக்குப் பாராட்டுகக்ள்! முதல் தடவையாக முஹ்டல் பரிசு பெறும் அரவிந்த்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. ஹாட்ரிக் பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் கீதாவுக்குப் பாராட்டுக்கள்!மென்மேலும் பரிசுகள் வென்று சாதனை படைத்திட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. முதல் பரிசினை வென்ற திரு J. அரவிந்த்குமார் அவர்களுக்கும் மற்றும் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. இருவரின் விமரிசனங்களும் மிக அருமை.

    முதல் பரிசினை பெற்ற திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும், திருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ஹாட்ரிக் பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் கீதாவுக்குப் பாராட்டுக்கள்!மென்மேலும் பரிசுகள் வென்று சாதனை படைத்திட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. முதல் பரிசு பெற்ற இரு விமர்சனங்களும் சிறப்பு. பரிசு பெற்ற அரவிந்த் குமார் அவர்களுக்கும் இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
    ஹாட்ரிக் பரிசு வரிசையில் என் பெயரும் இடம்பிடித்திருப்பது அளவிலா மகிழ்ச்சி. இப்படியொரு வாய்ப்பினை வழங்கிய தங்களுக்கே அப்பெருமை சாரும். மிக்க நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  19. முதல் பரிசு பெறும் ராஜராஜேஸ்வரி மற்றும் அரவிந்த்குமார் ஆகியோருக்குப் பாராட்டுகக்ள்!

    பதிலளிநீக்கு
  20. முதல் பரிசை வென்ற அரவிந்த் குமார் மற்றும் ராஜேஸ்வரி அவர்களைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 மார்ச் வரையிலான 39 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  21. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், திரு அரவிந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 மார்ச் வரை முதல் 39 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  22. முதல் பரிசினை வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அரவிந்தகுமார் அவர்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 28, 2015 at 9:20 AM

      //முதல் பரிசினை வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அரவிந்தகுமார் அவர்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்//

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கான உளம் கனிந்த கனிவான தங்களின் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  23. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 மார்ச் மாதம் வரை முதல் 39 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  24. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு அரவிந்தகுமாரவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 மார்ச் மாதம் வரை, முதல் 39 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் அல்லது சில பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    பதிலளிநீக்கு
  26. திருமதி இராஜராஜஸ்வரிமேடம் திருஅரவிந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  27. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 மார்ச் மாதம் முடிய, என்னால் முதல் 39 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  28. கேள்விக்கணைகளோடு அதற்கான பதில்களையும் உணரவைத்துவிடும்

    ஆசிரியரின் சாமார்த்தியமே சாமார்த்தியம்..!//
    // வெறும் உரிமை மட்டும் கொண்டாடிக்கொண்டு வறுமையில் வாடி அன்றாடம் காய்ச்சியாக ஏங்கி வாழ்வதை விட - சகல வசதிகளோடு குழந்தை வாழ்வதை அதனை பராமரிக்கும் இனிய பொறுப்பும் ஏற்று கரும்பு தின்னக்கூலியாக சம்பளமும் பெறப்போகிறாளே அஞ்சலை..!

    இதை விட அவள் வாழ்வு விடிந்துவிட்டது என்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமா என்ன..!//
    ரசித்தேன். ஊன்றிப்படித்தபின் எழுதிய விமர்சனங்கள். வாழ்த்துகள்..



    பதிலளிநீக்கு
  29. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    509 out of 750 (67.86%) that too within
    13 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 மார்ச் மாதம் வரை, என்னால் முதல் 39 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  30. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அரவிந்தகுமார் அவர்களுக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. //”அதி சீக்ரமேவ விவாஹப் பிராப்திரஸ்து”//

    http://jaghamani.blogspot.com/2016/01/blog-post_28.html

    20.01.2016 அன்று கோவை சாரதாம்பாள் ஆலயத்தில் வெகு விமரிசையாக திருமணம் நிகழ்ந்த திருநிறைச்செல்வன் J. அரவிந்த்குமார் அவர்களுக்கும் திருநிறைச்செல்வி சிந்து அவர்களுக்கும் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் + நல்லாசிகள். :)

    கோவை அன்னை சாரதாம்பாள் அருளால் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், எல்லா நலங்களும் வளங்களும் பெற்று நீடூழி வாழ பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு