’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
15) ‘பாவை விளக்கு’
அகிலன்
[பக்கம் 96 முதல் 99 வரை]
'பாவை விளக்கு' அகிலன் என்று ஜீவி சொல்கிறார்.
’பாவை விளக்கு’ நாவல் கல்கியில் தொடராக வந்த சமயம், இந்த நாவலில் வரும் உமா என்ற கதாபாத்திரதை அகிலன் கதையில் சாகடித்து விடக்கூடாது என்று வாசகர்களிடமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தபால்கள் கல்கி அலுவலகத்திலே குவிந்ததாம்.
ஜீவி இந்த மாதிரி அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை நிறைய இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையெல்லாம் படிக்கும் பொழுது பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளை எவ்வளவு ஆசை ஆசையாக வாசகர்கள் படித்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பரவசப்பட்டேன். இப்பொழுதெல்லாம் அந்த மாதிரி எழுதறவங்களும் இல்லை, வாசிக்கறவங்களும் இல்லை என்று நினைத்துப் பார்க்க வருத்தமாக இருந்தது.
1975-இல் அகிலனுக்கு அவரின் ‘சித்திரப்பாவை’ நாவலுக்கு ஞானபீடப்பரிசு தேடி வந்தது. இப்படியாக தமிழுக்கு முதல் ஞானபீடப் பரிசைப் பெற்றுத்தந்த பெருமையைத் தேடிக்கொண்டவர் அகிலன்.
இவரின் ‘பெண்’ ‘எங்கே போகிறோம்’ ’பால் மரக்காட்டினிலே’ ’நெஞ்சினனைகள்’ ‘கறுப்புத்துரை’ ‘புதுவெள்ளம்’ ஆகியவை குறிப்பிடத்தக்க பெருமை பெற்றவை. அகிலன் எழுதிய ‘கயல்விழி’ தான் பிறகு, ’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற திரைப்படமாக ஆக்கப்பட்டது, என பல்வேறு செய்திகளைச் சொல்லியுள்ளார், ஜீவி.
16) சிறுதைச் செம்மல்
கு. அழகிரிசாமி
கு. அழகிரிசாமி
இவரும் கல்கி பத்திரிகையில்தான் நிறைய எழுதியிருக்கிறாராம். இவரைப் பற்றியும் இன்னொரு கரிசல் பூமிக்காரர் கி. ராஜநாராயணன் பற்றியும் ஜீவி சொல்லியிருக்கிறார்.
கி.ரா. அவர்களுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கிய அந்தஸ்து பெற்றவை என்று ஜீவி குறிப்பிடுகிறார். அழகிரிசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகளைப் பற்றி ஜீவி எழுதியிருப்பது படிக்கப் படிக்க சுவையாக இருக்கிறது.
இவர் எழுதிய ‘சுயரூபம்’ என்றோர் கதை, பசியின் கொடுமையில் அவஸ்தைப்பட்ட ஓர் மனிதனின் வேதனையைச் சொல்லும் கதை. இவரது கதைகள் பெரும்பாலும் கல்கியில் வெளியானவைகளாகும். ‘திரிவேணி’ ‘’ராஜா வந்தான்’ போன்ற கதைகளும், ‘டாக்டர் அனுராதா’ ’தீராத விளையாட்டு’ ’புது வீடு புது உலகம்’ ’வாழ்க்கைப் பாதை’ போன்ற புதினங்களும் தன் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளதாகச் சொல்கிறார் ஜீவி.
இவர் மலேசியாவில் தமிழ் ஆசிரியராக இருந்ததும், மலேசியப் பத்திரிகை தமிழ்நேசனுக்கு ஆசிரியராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அழகிரிசாமி அவர்கள் கட்டுரைகள் எழுதுவதிலும் ஒப்பாய்வு செய்வதிலும் வல்லவராவார். ‘எங்கனம் சென்றிருந்தேன்’ ‘காணிநிலம்’ என்ற இரண்டு ஒப்பாய்வு நூல்கள் என்றென்றும் இவர் பெயரைச்சொல்லும், என இவரைப்பற்றி மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார் ஜீவி.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்
பதிலளிநீக்குஇன்றைய அறிமுகத்தில் உள்ள அகிலன் என்கிற திரு அகிலாண்டம் அவர்களை எனது அண்ணன் மூலம் அறிவேன்.அவரது ‘பாவை விளக்கு’ நாவலை பலமுறை படித்திருக்கிறேன். அது திரைப்படமாக வந்தபோது உடனே அந்த படத்தை திரையில் பார்த்து இரசித்திருக்கிறேன். எனது அண்ணன் திரு அகிலனின் விசிறியாக இருந்து பின்னர் அவரோடு நட்பை ஏற்படுக்கொண்டவர். அவர் பேரில் உள்ள பிரியத்தால் தனது மகனுக்கு அகிலநாயகம் என்ற பெயரை வைத்திருக்கிறார்.திரு அகிலனின் நாவல்கள் அனைத்தும் என் அண்ணனிடம் உண்டு. அஞ்சல் துறையில் பணிபுரிந்த அவர் எழுத்தின் மேல் உள்ள காதலால் அந்த பணியினைத் துறந்து முழு நேர எழுத்தாளராக ஆனார் என்று என் அண்ணன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
கரிசல் மண்ணுக்கு சொந்தக்காரரான திரு கு.அழகிரிசாமி அவர்களின் படைப்புகளைப் படித்ததில்லை. இனி படிக்கவேண்டும்.
திரு அகிலன் மற்றும் திரு கு.அழகிரிசாமி ஆகியோர் பற்றி அறிமுகம் செய்துள்ள திரு ஜீ.வி அவர்களுக்கும்! தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
முன்பெல்லாம் இரயிலிலேயே தபால்களை பிரித்து அடுக்குவார்கள் இல்லையா, அந்த அஞ்சல் துறை சார்ந்த RMS பிரிவில் பணி புரிந்தார். அதற்குப் பிறகு ஆல் இந்தியா ரேடியோ.
நீக்குவே.நடனசபாபதி March 30, 2016 at 6:03 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//இன்றைய அறிமுகத்தில் உள்ள அகிலன் என்கிற திரு அகிலாண்டம் அவர்களை எனது அண்ணன் மூலம் அறிவேன். அவரது ‘பாவை விளக்கு’ நாவலை பலமுறை படித்திருக்கிறேன். அது திரைப்படமாக வந்தபோது உடனே அந்த படத்தை திரையில் பார்த்து இரசித்திருக்கிறேன்.//
ஆஹா, இவற்றைக் கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
//எனது அண்ணன் திரு அகிலனின் விசிறியாக இருந்து பின்னர் அவரோடு நட்பை ஏற்படுக்கொண்டவர். அவர் பேரில் உள்ள பிரியத்தால் தனது மகனுக்கு அகிலநாயகம் என்ற பெயரை வைத்திருக்கிறார்.//
ஆஹா, எப்பேர்ப்பட்டதோர் பிரியம் இது. கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. :)
//திரு அகிலனின் நாவல்கள் அனைத்தும் என் அண்ணனிடம் உண்டு.//
ஓஹோ. மிக்க மகிழ்ச்சி.
//அஞ்சல் துறையில் பணிபுரிந்த அவர் எழுத்தின் மேல் உள்ள காதலால் அந்த பணியினைத் துறந்து முழு நேர எழுத்தாளராக ஆனார் என்று என் அண்ணன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.//
1983 to 1995 எனக்கு Immediate Boss (Controlling Officer) ஆக Mr. K.M.Balasubramaniam என்ற ஒருவர் இருந்தார். இன்னமும் இங்கு திருச்சி உறையூரில்தான் இருக்கிறார். சமீபத்தில் அவரின் பேத்தி கல்யாணத்திற்குக்கூட நான் சென்று வந்தேன். அவரின் தற்போதைய வயது: 79 அவர் மிகவும் நல்ல மனிதர். என்னிடம் அவருக்கு அலாதியான பிரியமுண்டு.
நான் எழுதும் கதைகளையெல்லாம் அவ்வப்போது Manuscript ஆகவே வாங்கிப்படித்து மகிழ்வார். உடனுக்குடன் கைகொடுத்துப் பாராட்டுவார்.
அவர், ஞானபீடம் விருதினை வென்ற பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்களைப் பற்றியும், அவர் நம்மைப்போலவே சாதாரண ஆபீஸ் குமாஸ்தா வேலையில் இருந்துகொண்டு, கதைகள் எழுதி பிரபலமாகி முன்னுக்கு வந்தவர் என்பது பற்றியும், நிறைய என்னிடம் சொல்லியுள்ளார்.
”எழுத்துலகில் அகிலன் போல நீங்கள் ஆகவேண்டும்” எனச்சொல்லிச் சொல்லி என்னையும் என் எழுத்துக்களையும் மிகவும் ஊக்குவித்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். தங்களின் வரிகளைப் படித்ததும் ஏனோ அவரின் ஞாபகம் எனக்கு இப்போது வந்தது.
//கரிசல் மண்ணுக்கு சொந்தக்காரரான திரு கு.அழகிரிசாமி அவர்களின் படைப்புகளைப் படித்ததில்லை. இனி படிக்கவேண்டும். //
மிக்க மகிழ்ச்சி, சார்.
//திரு அகிலன் மற்றும் திரு கு.அழகிரிசாமி ஆகியோர் பற்றி அறிமுகம் செய்துள்ள திரு ஜீ.வி அவர்களுக்கும்! தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! //
தங்களின் தொடர் வருகைக்கும், தொய்வில்லாத பல்வேறு ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK
எங்கள் இளம்வயதில் வார மாத இதழ்களுக்குப் பின்
பதிலளிநீக்குஅனேகமாக என் வயதொத்தவர்கள் வாசிக்கத்
துவங்கிய நாவல்களாக இருந்தால் அது
மு.வ, நா.பா,அகிலன்,கு. அழகிரிசாமி முதலானோரின்
நாவல்களாகத்தான் பெரும்பாலும் இருக்கும்
அந்த வகையில் அகிலன் அவர்களின்
குஅழகிரிசாமி அவர்களின் கதைகள்
சிலவற்றைப் படித்திருக்கிறேன்
கு. அழகிரிசாமி அவர்களின் தவப்பயன்,
வரப்பிரசாதம் ,சிரிக்கவில்லை ஆகிய கதைகள்
லேசாக நினைவில் இருக்கிறது
அகிலன் அவர்களின் எழுத்தில் ஏற்பட்ட ஈர்ப்பின்
அவரைப் பற்றி தெரிந்து கொள்ள அவரின்
சுய சரிதை நூலான வெற்றியின் இரகசியங்கள் ( ? )
வாங்கிப் படித்த நினைவு
என மனம் கவர்ந்த எழுத்தாளர்களை
மீண்டும் நினைவுறுத்தி மீண்டும்
படிக்கும்படியான எண்ணத்தைத் தூண்டியமைக்கு
மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்களுடன்...
Ramani S March 30, 2016 at 6:40 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//எங்கள் இளம்வயதில் வார மாத இதழ்களுக்குப் பின் அனேகமாக என் வயதொத்தவர்கள் வாசிக்கத் துவங்கிய நாவல்களாக இருந்தால் அது மு.வ, நா.பா, அகிலன், கு. அழகிரிசாமி முதலானோரின் நாவல்களாகத்தான் பெரும்பாலும் இருக்கும். அந்த வகையில் அகிலன் அவர்களின் கு.அழகிரிசாமி அவர்களின் கதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி சார்.
//கு. அழகிரிசாமி அவர்களின் தவப்பயன், வரப்பிரசாதம், சிரிக்கவில்லை ஆகிய கதைகள் லேசாக நினைவில் இருக்கிறது.//
ஆஹா, சூப்பர். நம் ஜீவி சார் பிரஸ்தாபித்துச் சொல்லியுள்ள இவரின் கதைகள் பலவற்றில் தாங்கள் சொல்லும் ‘தவப்பயன்’ என்பதும் உள்ளது. தங்களின் நினைவாற்றலை நினைத்து மகிழ்ந்தேன். :)
//அகிலன் அவர்களின் எழுத்தில் ஏற்பட்ட ஈர்ப்பின், அவரைப் பற்றி தெரிந்து கொள்ள அவரின் சுய சரிதை நூலான வெற்றியின் இரகசியங்கள் ( ? ) வாங்கிப் படித்த நினைவு.//
வெரி குட், சார்.
//என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களை மீண்டும் நினைவுறுத்தி மீண்டும் படிக்கும்படியான எண்ணத்தைத் தூண்டியமைக்கு மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்களுடன்...//
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான பல்வேறு அனுபவக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பிப்பதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK
அகிலன் 'கதைக்கலை' என்றும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். கதை எழுத்துவது எப்படி என்று எடுத்துச் சொல்லும் நூல் அது.
நீக்குஎன்னைக் கவர்ந்த பதிவுகள் - 2
பதிலளிநீக்குதொடர் பதிவு By ஞா.கலையரசி அவர்கள்
வலைத்தளம்: ஊஞ்சல்
http://unjal.blogspot.com/2016/03/2.html
மேற்படி பதிவினில், பிரபல பதிவரும், விமர்சன வித்தகியுமான, கீதமஞ்சரி வலைப்பதிவர், திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் கொடுத்துள்ள பின்னூட்டத்திலிருந்து ஒருசில வரிகள் மட்டும் தங்கள் அனைவரின் பார்வைக்காகவும்:
***********
கோபு சாரின் சிறுகதை விமர்சனப்போட்டிகள் எந்தக் காலத்திலும் எவராலும் முறியடிக்கப்பட இயலாத சாதனை என்பது மறுக்கமுடியாத உண்மை.
கோபு சார் வாசிக்கும் ஒவ்வொரு நூலையும் அறிமுகம் & விமர்சனம் செய்யும் பாங்கு பிறரிலிருந்து வித்தியாசமாய் அமைந்து அனைவரையும் கவரும் வகையில் இருப்பது சிறப்பு. நிதானமாய் அடித்து ஆடி ரன்கள் குவிப்பது போல் ஜீவி சாரின் நூலை எவ்வளவு அழகாக ஒவ்வொரு எழுத்தாளராக அவர் அறிமுகப்படுத்துகிறார்.
***********
இது ஓர் தகவலுக்காக மட்டுமே இங்கு என்னால் கொடுக்கப்பட்டுள்ளது.
கீதமஞ்சரி வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பிரியமுள்ள கோபு
அகிலனின் சித்திரப்பாவை படித்திருக்கிறேன். கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்காரு வாசித்திருக்கிறேன். "ஐயோ ஒங்க வீட்டுக்குத் தானா ராஜா வந்திருக்காரு. எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்காரு. வேணும்னா வந்து பாரு" என்று ஏழைச்சிறுமி மங்கம்மா எகத்தாளமாக பணக்கார பையன் ராமசாமியிடம் சொல்லுமிடம் அற்புதம். பணக்கார வீட்டுக்கு வந்திருப்பது ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த ராஜா. இவள் குடிசைக்கு வந்திருப்பதோ ராஜா என்ற பெயர் கொண்ட கோவணம் மட்டுமே கட்டிய அனாதை சிறுவன். குழந்தைகள் மூலம் எவ்வளவு உயரிய விஷயங்களை நமக்குச் சொல்கிறார் இவர் என்று வியக்க வைத்த கதையிது. என்னை மிகவும் கவர்ந்த கதையிது. கீதா மதிவாணன் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதையும் இங்குக் கொடுத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. வழக்கம் போல் சுவையான அறிமுகம். பாராட்டுக்கள் கோபு சார்!
பதிலளிநீக்குஞா. கலையரசி March 30, 2016 at 11:40 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//அகிலனின் சித்திரப்பாவை படித்திருக்கிறேன். //
ஆஹா, மிக்க மகிழ்ச்சி, மேடம்.
//கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்காரு வாசித்திருக்கிறேன். "ஐயோ ஒங்க வீட்டுக்குத் தானா ராஜா வந்திருக்காரு. எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்காரு. வேணும்னா வந்து பாரு" என்று ஏழைச்சிறுமி மங்கம்மா எகத்தாளமாக பணக்கார பையன் ராமசாமியிடம் சொல்லுமிடம் அற்புதம். பணக்கார வீட்டுக்கு வந்திருப்பது ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த ராஜா. இவள் குடிசைக்கு வந்திருப்பதோ ராஜா என்ற பெயர் கொண்ட கோவணம் மட்டுமே கட்டிய அனாதை சிறுவன். குழந்தைகள் மூலம் எவ்வளவு உயரிய விஷயங்களை நமக்குச் சொல்கிறார் இவர் என்று வியக்க வைத்த கதையிது. என்னை மிகவும் கவர்ந்த கதையிது.//
தங்களின் வாசிப்பு அனுபவத்தில், தங்களைக் கவர்ந்துள்ள இந்தக்கதையின், இந்தக்காட்சியை வெகு அருமையாக வியந்து விவரித்து, இங்கு நாங்களும் அறியச் சுட்டிக்காட்டியுள்ளது, வெகு அழகாக உள்ளது. என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.
//கீதா மதிவாணன் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதையும் இங்குக் கொடுத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.//
திருமதி கீதா மதிவாணன் அவர்கள், தன் பின்னூட்டத்தைக்கூட எவ்வளவு பொறுமையாக, அழகாக, விரிவாக, விளக்கமாக, ஒரு சின்ன எழுத்துப்பிழைகூட இல்லாமல், அற்புதமாக எழுதி வருகிறார் என நினைக்கும் போது, எனக்கு வியப்பு மேலிடுவதுடன், அவர்களின் எழுத்தாற்றல் மேல் எனக்கு அடிக்கடி பொறாமையே ஏற்பட்டு வருகிறது. SHE IS REALLY A 'GEM' IN OUR TAMIL BLOG WORLD :)))))
தங்கள் தளத்தின் அந்த பதிவு பற்றியும், அதில் அவர்கள் எழுதியுள்ள மிகப்பெரிய பின்னூட்டத்தில் என்னைப்பற்றி எழுதியுள்ள ஒருசில வரிகளைப் பற்றியும், இங்கு வருகை தருபவர்களில் சிலருக்காவது அறியச் செய்வதற்காகவும் மேலும் For my own records & future reference க்கு ஆகவும் இங்கு வெளியிட்டுக்கொண்டுள்ளேன்.
அதில் தங்களுக்கும் மகிழ்ச்சி என்பதைக்கேட்க என் மகிழ்ச்சி மேலும் அதிகமாகிறது. என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.
//வழக்கம் போல் சுவையான அறிமுகம். பாராட்டுக்கள் கோபு சார்!//
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆதரவான விரிவான கருத்துக்களுக்கும், சுவையான அறிமுகம் என்று சொல்லி பாராட்டியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
நன்றியுடன் கோபு
இங்க எல்லாருமே நான் அறியாதவர்கள்.அவங்க எழுதிய ஒரு புஸ்தகம் கூட கேள்வி பட்டதில்ல. ஆனாகூட இவ்வளவு ஆர்வமா திரு, ஜி. வி. ஸாரும்,, கோபூ..... ஸாரும் எல்லா பிரபல எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி வராங்க. அவங்களைத்தெரிந்தவங்க பல பேரு இருக்காங்க என்பது பின்னூட்டம் மூலமாகத்தெரிந்து கொள்ள முடிகிரது.. நன்றிகள். வேர என்ன சொல்லனும்னு தெரியல்லே.....
பதிலளிநீக்குபூந்தளிர் March 31, 2016 at 12:18 PM
நீக்குவாங்கோ பூந்தளிர். வணக்கம்மா. நீண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு கண்டதில் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. நன்னா செளக்யமா, சந்தோஷமா, ஜாலியா இருக்கீங்களா? ஓரிரு நாட்கள் முன்புகூட தங்களைப்பற்றி யாரோ என்னிடம் விஜாரித்த ஞாபகம் எனக்கு உள்ளது.
//இங்க எல்லாருமே நான் அறியாதவர்கள். அவங்க எழுதிய ஒரு புஸ்தகம் கூட கேள்வி பட்டதில்ல.//
நான் மட்டும் அறிந்துள்ளேனாக்கும். எனக்கும் இதில் பலரையும் தெரியாது. கேள்விப்பட்டதுகூட இல்லை. நம் ஜீவி சார் எழுதியுள்ள இந்த நூலை நான் முழுவதுமாகப் படித்ததனால் மட்டுமே, இவர்கள் எல்லோரையும் பற்றி ஓரளவுக்காவது என்னால் இப்போது தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடிந்தது. அதனையே மற்றவர்களுடன், இந்த என் தொடர் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
தமிழ் பதிவர்கள் + எழுத்தாளர்கள் எல்லோருக்கும் எல்லோரையும் பற்றி எப்போதும் தெரியணும் என்ற எந்தவொரு அவசியமும் இல்லை. தலைமுறை இடைவெளிகளால் அது சாத்யமும் இல்லை. சிலருக்கு மட்டும் சிலரைத் தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். அது அவரவர்களின் வயது + வாசிப்பு ருசி + அனுபவம் + ஆர்வம் + பொறுமை ஆகியவைகளைப் பொறுத்ததாகும்.
//ஆனாகூட இவ்வளவு ஆர்வமா திரு. ஜீ.வி. ஸாரும், கோபூ..... ஸாரும் எல்லா பிரபல எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி வராங்க.//
ஏதோ ஒரு ஆசையில் இந்த ஒரு பணியைத் தொடங்கிவிட்டேன். முழுவதுமாக இதற்கான 20 பகுதிகளையும் அழகாக வடிவமைத்து வெளியிடத்தயாராகவும் ஆகிவிட்டேன். அந்த நேரத்தில்தான் சற்றும் நான் எதிர்பாராத பல்வேறு சோதனைகளும் எனக்கு வந்து என்னை மிகவும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டன. தொடங்கிவிட்ட இந்த ஒரு தொடரை மட்டுமாவது, அம்பாள் அருளால் நல்லபடியாக கடைசிவரை வெற்றிகரமாக நான் முடித்துவிட்டால் ஓக்கேதான். வேறொன்றும் பெரியதாக எனக்கு இந்த வலையுலகில் சாதிக்கணும் என்ற ஆசையே இப்போது சுத்தமாக இல்லை.
//அவங்களைத்தெரிந்தவங்க பல பேரு இருக்காங்க என்பது பின்னூட்டம் மூலமாகத்தெரிந்து கொள்ள முடிகிறது.//
ஆமாம். என்னாலும் அதனை அவ்வப்போது நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது.
// நன்றிகள். வேற என்ன சொல்லனும்னு தெரியல்லே.....//
பரவாயில்லை. நீங்க ஒன்றும் சொல்லவே வேண்டாம். முறையாக பள்ளியில் தமிழ் படிக்க வாய்ப்புகள் கிடைக்காத வடநாட்டில் படித்துள்ள தாங்கள் இவ்வளவு தூரம் சொன்னதே மிகப்பெரிசு.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பூந்தளிர்.
பிரியமுள்ள கோபு
இன்றய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். பாவை விளக்கு படத்தில் வரும் " வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்".... என்ற பாட்டு இப்பகூட நினைவில் இருக்கு.(இந்தப்பாட்டு இந்தப்படத்தில்தான் என்று நினைக்கிறேன். எழுதிய பிறகு டவுட் வந்தது......பின்னூட்டத்தில் திருமதி கலையரசி மேடம் சுவாரசியமா சொல்லியிருக்காங்க. உங்க ரிப்ளை பின்னூட்டமும் சிறப்பாக இருக்கு.
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... March 31, 2016 at 1:27 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.//
மிக்க மகிழ்ச்சி. :)
//பாவை விளக்கு படத்தில் வரும் "வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்".... என்ற பாட்டு இப்பகூட நினைவில் இருக்கு. (இந்தப்பாட்டு இந்தப்படத்தில்தான் என்று நினைக்கிறேன்). எழுதிய பிறகு டவுட் வந்தது......//
’பாவை விளக்கு’ 1960-இல் வெளிவந்த சிவாஜி படம். எனக்கு அப்போது 10 வயது மட்டுமே.
தாங்கள் சொல்லியுள்ள ஸ்வீட் சாங்க் இந்தப்படத்தில் வருவது மட்டுமே. கேட்கக்கேட்க திகட்டாத இனிமையான பாடல் அது.
இந்தப்படத்தில் மொத்த ஆறு பாடல்கள் என்று கேள்வி:
1) ஆயிரம் கண் போதாது ..... வண்ணக்கிளியே .....
2) காவியமா ..... நெஞ்சின் ஓவியமா ..... அதன் ஜீவியமா ..... தெய்வீகக்காதல் சின்னமா ....
3) மங்கியதோர் நிலவினிலே ..... கனவில் இது கண்டேன் .....
4) நான் உன்னை நினைக்காத .....
5) நீ சிரித்தால் .....
6) வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்! ..... கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள் !!
இதில் உள்ள பெரும்பாலான பாடல்களை எழுதியவர்: A. மருதகாசி
இதில் உள்ள பெரும்பாலான பாடல்களைப் பாடியவர்கள்: C.S. ஜெயராமன் + P. சுசிலா
இசையமைப்பாளர் : K.V. மஹாதேவன்
படத்தயாரிப்பு: ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
//பின்னூட்டத்தில் திருமதி கலையரசி மேடம் சுவாரசியமா சொல்லியிருக்காங்க.//
அவர்கள் எது சொன்னாலும் சுவாரஸ்யமாக மட்டுமே சொல்லுவார்கள். அவர்கள் குடும்பப் பரம்பரை அப்படி. இவர்கள், இவர்களின் தந்தை, இவர்களின் தங்கை, இவர்களின் அண்ணி எல்லோருமே பிரபல எழுத்தாளர்கள் + பிரபல பதிவர்கள் ஆவார்கள். :))))
//உங்க ரிப்ளை பின்னூட்டமும் சிறப்பாக இருக்கு.//
மிக்க மகிழ்ச்சி. :)
தங்களின் அன்பான வருகைக்கும், அழகிய வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK
கோபால் ஸார் உங்க தகவல்களுக்கும் நன்றி. சினிமா பாடல்கள் அதுவும் நல்ல பாடல்கள் என்றுமே நினைவை விட்டு நீங்காமல் இருக்கும்போல இருக்கு....
நீக்குஸ்ரத்தா, ஸபுரி... March 31, 2016 at 3:31 PM
நீக்குவாங்கோ .....
//கோபால் ஸார் உங்க தகவல்களுக்கும் நன்றி. சினிமா பாடல்கள் அதுவும் நல்ல பாடல்கள் என்றுமே நினைவை விட்டு நீங்காமல் இருக்கும்போல இருக்கு....//
ஆம் அந்தக்காலப் பாடல்களில் பெரும்பாலானவை நன்கு அர்த்தம் விளங்குவதாக இருக்கும். அந்த இசையுடன் கூடிய பாடல்களைக் கேட்க நம் காதுகளுக்கு மிகவும் இனிமையாகவும் இருக்கும். அப்போதெல்லாம் சினிமாக் கொட்டகைகளில் ‘பாட்டுப் புஸ்தகம்’ என்றே தனியாக விற்பனை செய்வார்கள். நானே அவற்றில் சிலவற்றை வாங்கியுள்ளேன். அப்போதெல்லாம் ஓர் ஆண் மட்டுமோ, அல்லது ஒரு பெண் மட்டுமோ, அல்லது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்தோ பாடும் காட்சிகளே பெரும்பாலும் திரைப்படங்களில் இடம்பெறும். அவை மிகவும் பொறுப்புள்ள பாடல்களாகவே இருக்கும். நடிப்பிலும் காட்சிகளிலும் ஓரளவு நல்ல நாகரீகம் இருக்கும். எதையும் ’இலை மறை காயாக’ மட்டுமே சொல்லிப் புரிய வைப்பார்கள்.
இப்போது வரும் படங்களில், பெரும்பாலும் க்ரூப் டான்ஸ் பாடல்களாகவே உள்ளன. செக்ஸுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். என்னதான் சொல்லிப் பாடுகிறார்கள் என்பதே சுத்தமாகப் புரிவது இல்லை.
என் போன்றோருக்கு இந்தக்காலப்பாடல்களில் பல சுத்தமாகப் பிடிப்பதும் இல்லை. இவற்றைக் கேட்டால் எங்கள் காதில் இரத்தமே வந்து விடுகிறது.
மீண்டும் வருகைக்கு நன்றி. - VGK
அகிலன் அவர்களுடைய கயல்விழி நாவலை ஒரே மூச்சில் வாசித்தது நினைவுக்கு வருகிறது. அப்போது என் வயது 10. எழுத்தாளர் பெயரோ கதையின் தலைப்போ கூட நினைவில் நிற்காத பருவம். என் ஆத்தா (அப்பாவின் அம்மா) கல்கியில் வந்த பல தொடர்கதைகளைத் தொகுத்து புத்தகங்களாக அடுக்கி வைத்திருந்தார். ஆர்வமிகுதியால் அவ்வளவு கதைகளையும் அப்போது வாசித்திருக்கிறேன். அதன்பின் அப்படியான வாய்ப்புகள் அமையவில்லை. அகிலன் அவர்களின் வேங்கையின் மைந்தன் புதினம் சமீபத்தில் கணவரால் பரிசளிக்கப்பட்டது.
பதிலளிநீக்குகு. அழகிரிசாமி அவர்களின் கதைகள் சிலவற்றை இணையத்தில் வாசித்துள்ளேன். அவற்றுள் சுயரூபமும் ஒன்று. என்ன ஒரு அற்புதமான எழுத்து. அவர் படைப்புகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவல் பிறக்கிறது.
கீத மஞ்சரி March 31, 2016 at 1:52 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//அகிலன் அவர்களுடைய கயல்விழி நாவலை ஒரே மூச்சில் வாசித்தது நினைவுக்கு வருகிறது. அப்போது என் வயது 10. எழுத்தாளர் பெயரோ கதையின் தலைப்போ கூட நினைவில் நிற்காத பருவம்.//
’விளையும் பயிர் முளையிலே’ என சும்மாவாச் சொல்லி இருக்கிறார்கள். இதனைத் தங்கள் வாயிலாக (10 வயது மழலைப் பேச்சுப்போலக்) கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
//என் ஆத்தா (அப்பாவின் அம்மா) கல்கியில் வந்த பல தொடர்கதைகளைத் தொகுத்து புத்தகங்களாக அடுக்கி வைத்திருந்தார். ஆர்வமிகுதியால் அவ்வளவு கதைகளையும் அப்போது வாசித்திருக்கிறேன். அதன்பின் அப்படியான வாய்ப்புகள் அமையவில்லை.//
தங்களுக்கு இதுபோல ஒரு பொற்காலம் தங்களின் பாட்டி மூலம் அன்று அமைந்துள்ளது கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.
//அகிலன் அவர்களின் வேங்கையின் மைந்தன் புதினம் சமீபத்தில் கணவரால் பரிசளிக்கப்பட்டது. //
ஆஹா, இன்றைய பதிவுலக + எழுத்துலக வேங்கைக்கு ஏற்ப மிகச்சரியான பரிசாகத்தான் அளித்துள்ளார், அவர். அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகளைத் தெரிவிக்கவும்.
//கு. அழகிரிசாமி அவர்களின் கதைகள் சிலவற்றை இணையத்தில் வாசித்துள்ளேன். அவற்றுள் சுயரூபமும் ஒன்று. என்ன ஒரு அற்புதமான எழுத்து. அவர் படைப்புகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவல் பிறக்கிறது. //
மிக்க மகிழ்ச்சி.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு
கலையரசி அக்காவின் பதிவில் நான் இட்டப் பின்னூட்டத்திலிருந்து தங்களைப் பற்றிய வரிகளைத் தாங்கள் இங்கு மேற்கோள் காட்டியிருப்பதற்கு மிகவும் நன்றி கோபு சார். பின்னூட்டம் இடுபவர்களை சிறப்பிக்கும் தங்கள் பெருந்தன்மைக்கு இதுவும் ஒரு சான்று.
பதிலளிநீக்குகீத மஞ்சரி March 31, 2016 at 1:52 PM
நீக்குவாங்கோ.....
//கலையரசி அக்காவின் பதிவில் நான் இட்டப் பின்னூட்டத்திலிருந்து தங்களைப் பற்றிய வரிகளைத் தாங்கள் இங்கு மேற்கோள் காட்டியிருப்பதற்கு மிகவும் நன்றி கோபு சார். பின்னூட்டம் இடுபவர்களை சிறப்பிக்கும் தங்கள் பெருந்தன்மைக்கு இதுவும் ஒரு சான்று.//
அது என்ன சாதாரணமானதோர் பின்னூட்டமா? அல்லது சாதாரணமான யாரோ எழுதியுள்ள பின்னூட்டமா? நான் அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்க.
என் நலம் விரும்பியும், ’விமர்சன வித்தகி’யுமாகிய தாங்கள் எழுதியுள்ள மிக அருமையான அசத்தலான பின்னூட்டம் அல்லவா அது !
பின்னூட்டத்தைக்கூட எவ்வளவு பொறுமையாக, அழகாக, விரிவாக, விளக்கமாக, ஒரு சின்ன எழுத்துப்பிழைகூட இல்லாமல், அற்புதமாக எழுதி வருகிறீர்கள் நீங்கள் என நினைக்கும் போது, எனக்கு வியப்பு மேலிடுவதுடன், தங்களின் எழுத்தாற்றல் மேல் எனக்கு அடிக்கடி பொறாமையே ஏற்பட்டு வருகிறது.:)
அதனால் அதிலுள்ள சில வரிகளை இங்கு இந்தப் பதிவினிலும் வெளியிட்டுக்கொண்டு நான் பெருமை அடைந்துள்ளேன். தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள், மேடம்.
பிரியத்துடன் கோபு
அந்த பாட்டு 'வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி..' இந்தப் படத்தில் தான். தாஜ்மஹாலில் பாடும் 'காவியமா, இல்லை ஓவியமா?' என்னும் அற்புதமான பாடலும், படகாட்சியும் இந்தப் படத்தில் தான். இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர் சி.எஸ்.ஜெயராமன்.
பதிலளிநீக்குதணிகாசலம்-- பெயர் ஞாபகம் இருக்கா?.. கதையிலும், படத்திலும் அதே பெயர் தான். சிவாஜி கணேசன் தணிகாசலமாக இயல்பாக நடித்திருப்பார்.
ஜி.வி. ஸாருக்கு நன்றி. காவியமா நெஞ்சில் ஓவியமாக ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா.....ஸி.எஸ். ஜெயராமன் அவர்களின் கனத்த சாரீரத்தில் அந்தபாட்டுக்கள் சூப்பராகீது இருக்கும்...
பதிலளிநீக்குஅந்த ஆயிரம்கண்போதாது வண்ணக்கிளியே பாட்ட இங்க பாத்ததும..... தில்லானா மோகனாம்பாள் படத்துல ஃபாரினர்ஸ் முன்னாடி சிவாஜி ஸார்& பார்ட்டிகள் நாதஸ்வரத்தில் பின்னி பெடலெடுத்திருப்பாங்களே அது நினைப்பில் வந்தது.
பதிலளிநீக்குஇன்றய அறிமுக பிரபலங்களுக்கு வாழ்த்துகள்.....
சிப்பிக்குள் முத்து. March 31, 2016 at 3:40 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அந்த ஆயிரம்கண்போதாது வண்ணக்கிளியே பாட்ட இங்க பாத்ததும..... தில்லானா மோகனாம்பாள் படத்துல ஃபாரினர்ஸ் முன்னாடி சிவாஜி ஸார் & பார்ட்டிகள் நாதஸ்வரத்தில் பின்னி பெடலெடுத்திருப்பாங்களே அது நினைப்பில் வந்தது.//
ஆஹா, தங்களின் இந்தத் தனிரசனையை நானும் நன்கு ரஸித்தேன். ’தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் நான் பலமுறை பார்த்து மகிழ்ந்துள்ளேன். நினைவூட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி. :)
//இன்றைய அறிமுக பிரபலங்களுக்கு வாழ்த்துகள்...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK
இன்றய பிரபல எழுத்தாளர்கள் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்....பின்னூட்டத்திலும் அவர்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியுது....
பதிலளிநீக்குsrini vasan March 31, 2016 at 3:42 PM
நீக்கு//இன்றய பிரபல எழுத்தாளர்கள் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்....பின்னூட்டத்திலும் அவர்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியுது....//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.vgk
திரு அகிலன்அவர்கள, திரு கு. அழகிரிசாமி அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.......
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்..... March 31, 2016 at 3:47 PM
நீக்கு//திரு அகிலன் அவர்கள, திரு கு. அழகிரிசாமி அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.......//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.-VGK
ஒரு சிலருக்குத்தான் விரிவாக எழுத சரஸ்வதி கடாக்ஷம் வாய்க்கிறது. உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது இந்த எண்ணம்தான் என் மனதில் தோன்றுகிறது. அதே சமயம் என்னால் இப்படி எழுத முடியவில்லையே என்ற ஆதங்கமும் தோன்றுகிறது. வாழ்க உங்கள் எழுத்துத் திறமை.
பதிலளிநீக்குபழனி.கந்தசாமி April 1, 2016 at 6:16 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//ஒரு சிலருக்குத்தான் விரிவாக எழுத சரஸ்வதி கடாக்ஷம் வாய்க்கிறது. உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது இந்த எண்ணம்தான் என் மனதில் தோன்றுகிறது.//
அடடா, என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெரியவராகிய தங்கள் மூலம், ’மிகச் சாதாரணமானவன்’ ஆன அடியேன் இதைக் கேட்பதில், தன்யனானேன். ஒருவித கூச்சத்துடன், என் மிக்க மகிழ்ச்சிகளையும், மிக்க நன்றிகளையும் தங்களுக்கு இங்கு தெரிவித்துக்கொள்கிறேன், சார்.
//அதே சமயம் என்னால் இப்படி எழுத முடியவில்லையே என்ற ஆதங்கமும் தோன்றுகிறது.//
தாங்கள் இப்போது எழுதிவரும் கற்பனை + நகைச்சுவை தொடர் ஒன்றே போதும். தங்களின் எழுத்துக்களில் உள்ள தனித்திறமைகளை எடுத்துக்காட்ட.
எவ்வளவோ பேர் எவ்வளவோ விஷயங்களை பக்கம் பக்கமாக இலக்கியத் தரத்துடன் எழுதி வருவதாகத் தங்களுக்குள் நினைத்து இறுமாப்பு கொள்ளலாம்.
நகைச்சுவை என்பது சுட்டுப்போட்டாலும் அவர்களுக்கு வரவே வராது. அதனால் அவர்களின் படைப்புக்களை யாரும் வந்து எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். அப்படியே ஒருவேளை வந்து எட்டிப்பார்த்தாலும் ரஸித்துப்படிக்கவோ, கருத்துக்கள் எழுதவோ மாட்டார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என ஒரே ஒட்டமாக ஓடி விடுவார்கள்.
நகைச்சுவை இல்லாத எந்த இலக்கியமும், கடும் வெயிலில் நம் கால்களையும் உடம்பையும் வருத்தும் வறண்ட பாலைவனம் போல மட்டுமே என்பது எனது அபிப்ராயம்.
தங்களின் தற்போதைய தொடரின் ஓர் பகுதியில் நான் எழுதியுள்ளதோர் பின்னூட்டத்தை மீண்டும் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்:
-=-=-=-=-=-
http://swamysmusings.blogspot.com/2016/03/3.html
வை.கோபாலகிருஷ்ணன்திங்கள்,
7 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 4:05:00 IST
Most Respected Sir, ’வாஷிங்கடனில் திருமணம்’ எழுதிய சாவி அவர்கள் போல தங்களிடம் ஏராளமான நகைச்சுவை உணர்வுகளும், எழுத்துத்திறமையும் குவிந்துள்ளன.
ஒரு துக்கச்செய்தியைக் கேள்விப்பட்டு உடலும் உள்ளமும் மிகவும் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவ்வப்போது அழுதுகொண்டிருக்கும் எனக்குத் தங்களின் இந்த நகைச்சுவைப் பதிவுதான் மனதுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல ஓர் ஆறுதலைத் தந்து வருகிறது.
ஒவ்வொரு வரியையும் ரஸித்து ருசித்துப் படித்து வருகிறேன்.
இந்தத்தொடரை சீக்கரமாக முடித்துவிடாமல், ஒரு 100 பகுதிகள் கொண்ட மிக நீள நகைச்சுவைத் தொடராக எழுத வேண்டும் எனத்தங்களை நான் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள். அன்புடன் VGK
-=-=-=-=-=-
//வாழ்க உங்கள் எழுத்துத் திறமை.//
நீண்ட நாட்களுக்குப்பின், இன்றைய தங்களின் அபூர்வ வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK
சில எழுத்தாளர்களை கேள்விப்பட்டு இருக்கிறேன். சிலர் அறியாதவர்கள். அண்ணி தொடர்ந்து கல்கி வாசிப்பார்கள். இந்த புத்தகங்களை எல்லாம் வாசிக்க வேண்டும் என ஆவல் எழுகிறது. நன்றி ஐயா. தொடர்ந்து உறவுகளின் வருகை, என நேரம் இல்லாது போய் விட்டதால் தொடர்ந்து வர சில நாட்கள் ஆகும் ஐயா. நன்றி
பதிலளிநீக்குR.Umayal Gayathri April 1, 2016 at 8:39 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சில எழுத்தாளர்களை கேள்விப்பட்டு இருக்கிறேன். சிலர் அறியாதவர்கள். அண்ணி தொடர்ந்து கல்கி வாசிப்பார்கள். இந்த புத்தகங்களை எல்லாம் வாசிக்க வேண்டும் என ஆவல் எழுகிறது. நன்றி ஐயா.//
வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுவிட்டதல்லவா. அதுபோதும். வாசிக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. இந்த நூல் அறிமுகத்தின் நோக்கமே அனைவருக்கும் ஓர் ஆவலை ஏற்படுத்துவது மட்டுமே :)
//தொடர்ந்து உறவுகளின் வருகை, என நேரம் இல்லாது போய் விட்டதால் தொடர்ந்து வர சில நாட்கள் ஆகும் ஐயா. நன்றி.//
பரவாயில்லை மேடம். தாங்கள்தான் இந்த என் தொடரின் முதல் பகுதிக்கு பிள்ளையார் சுழிபோல, முதன்முதலாக வருகை தந்து, முதல் பின்னூட்டமும் இட்டிருந்தீர்கள்.
oooooooooooooooooo
http://gopu1949.blogspot.in/2016/03/1.html
R.Umayal Gayathri March 14, 2016 at 2:58 PM
தாங்கள் மீண்டும் வந்தமைக்கு ரொம்ப சந்தோஷம் ஐயா....
ஜீவி ஐயாவின் இந்த நூலை கண்டிப்பாக வாங்கி வாசிக்கிறேன்.
48 மணி நேர இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்... தங்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது :).
oooooooooooooooooo
அதன் பிறகு (48க்கு பதிலாக 480 மணி நேர இடைவெளி கொடுத்து) இன்றுதான் இங்கு வந்து எட்டிப்பார்த்துள்ளீர்கள். :)
தங்கள் ராசி ... ஏதோ இதுவரை இந்தத்தொடரும் வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டு இருக்கிறது. எனக்கும் மகிழ்ச்சியே.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
அகிலன் அவர்கள் பாவைவிளக்கு சினிமா பார்த்து இருக்கிறேன், சித்திரப்பாவை சென்னை தொலைக்காட்சியில் நாடகமாய் பார்த்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டுமே நன்றாக இருக்கும். கயல்விழி படித்து இருக்கிறேன்.
திரு. அழகிரிசாமி அவர்கள் நூல்கள் படித்தது இல்லை படிக்க வேண்டும். உங்கள் மறுமொழிகளையும், ஜீவி சார் மறுமொழிகளையும் படிக்க மீண்டும் வருகிறேன். அவற்றில் இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் படிக்கும் அனுபவத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தியமைக்கு.
கோமதி அரசு April 1, 2016 at 9:33 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அகிலன் அவர்கள் பாவைவிளக்கு சினிமா பார்த்து இருக்கிறேன், சித்திரப்பாவை சென்னை தொலைக்காட்சியில் நாடகமாய் பார்த்து இருக்கிறேன். இரண்டுமே நன்றாக இருக்கும். கயல்விழி படித்து இருக்கிறேன்.//
ஆஹா, இவற்றையெல்லாம் கேட்கவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
//திரு. அழகிரிசாமி அவர்கள் நூல்கள் படித்தது இல்லை படிக்க வேண்டும்.//
சரி. ஓக்கே. வாய்ப்புக்கிடைக்கும்போது படியுங்கோ, போதும்.
//உங்கள் மறுமொழிகளையும், ஜீவி சார் மறுமொழிகளையும் படிக்க மீண்டும் வருகிறேன். அவற்றில் இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது.//
அடடா, இதுதான் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்யாசம். பல நேரங்களில், பின்னூட்டச்செய்திகளை வாசிப்பது, பதிவினில் உள்ள செய்திகளை வாசிப்பதைவிட, மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது என்னுடைய அனுபவமும் கூட. என்னைப்போலவே நினைக்கும் தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
//உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் படிக்கும் அனுபவத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தியமைக்கு.//
மிக்க மகிழ்ச்சி, மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK
இவர்களது புத்தகங்கள் எல்லாம் எங்கள் வீட்டு கலெக்ஷனில் உண்டு. அப்பா சேகரித்து வைத்திருக்கிறார். பாவை விளக்கு எப்போதோ படித்த நினைவு. ஆனால் படித்ததையே படித்து படிக்காமல் நிறைய விட்டிருக்கிறேன் என்று இப்போது உணர்கிறேன்!
பதிலளிநீக்குஸ்ரீராம். April 1, 2016 at 7:21 PM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.
//இவர்களது புத்தகங்கள் எல்லாம் எங்கள் வீட்டு கலெக்ஷனில் உண்டு. அப்பா சேகரித்து வைத்திருக்கிறார்.//
ஆஹா, அவை எல்லாமும் ஆஸ்திகள் அல்லவா !
//பாவை விளக்கு எப்போதோ படித்த நினைவு. ஆனால் படித்ததையே படித்து, படிக்காமல் நிறைய விட்டிருக்கிறேன் என்று இப்போது உணர்கிறேன்!//
:) தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வேடிக்கையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம். - VGK
அகிலன் அவர்களின் பாவை விளக்கு வாசித்த நினைவு இருக்கிறது. ஆனால் இன்னும் நிறைய வாசிக்க இருக்கிறது என்றும் நினைக்கின்றோம்...உங்கள் அறிமுகங்களே எங்களுக்கு உதவுகிறது மெதுவாக வாசித்துவிட வேண்டும்..
பதிலளிநீக்குஅருமை சார்..
Thulasidharan V Thillaiakathu April 3, 2016 at 12:06 AM
நீக்குஅகிலன் அவர்களின் பாவை விளக்கு வாசித்த நினைவு இருக்கிறது. ஆனால் இன்னும் நிறைய வாசிக்க இருக்கிறது என்றும் நினைக்கின்றோம்...உங்கள் அறிமுகங்களே எங்களுக்கு உதவுகிறது மெதுவாக வாசித்துவிட வேண்டும்..
அருமை சார்..//
வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அருமை என்ற அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
குருஜி மேலா பார்க் இருக்குதுல அது சூப்ராகீது. அங்கிட்டு நாலு சூரல் நாக்காலி போட்டு நாமல்லா முன்னா பார்க்குல அலப்பர பண்ணுரது போல இங்கூட்டும் பண்ணிகிடலாம்லா.....
பதிலளிநீக்குmru April 3, 2016 at 12:40 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//குருஜி மேலா பார்க் இருக்குதுல அது சூப்ராகீது.//
ஆமாம் முருகு, அந்த மலர்கள் பூங்கா படம், மிகவும் அழகாகத்தான் உள்ளது. தங்களின் தனி ரசனைக்கு என் நன்றிகள். :)
//அங்கிட்டு நாலு சூரல் நாக்காலி போட்டு நாமல்லா ’முன்னா’ பார்க்குல அலப்பர பண்ணுரது போல இங்கூட்டும் பண்ணிகிடலாம்லா.....//
ஆஹா, அந்த சூரல் நாற்காலி தங்களின் மனதில் அப்படியே பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சே, அதை மிகச் சரியாக இங்கு பயன் படுத்தியுள்ளீர்களே .... சமத்தோ சமத்து எங்கட முருகு. மிக்க மகிழ்ச்சி. :) நீங்க எங்கு வேண்டுமானாலும் என்னென்ன அலப்பர வேண்டுமானாலும் பண்ணிக்கிடலாம், முருகு.
ஆனால் அந்த நம் நான்கு நாற்காலிகளில் அமரும் நால்வரில் ஒருவர் இப்போதெல்லாம் ஒழுங்கா வருவதே இல்லை. அது ஏன் எனக்கேட்டுச் சொல்லுங்கோ, முருகு. ’நம்மாளு’ வராட்டி ‘முன்னா’ பார்க்குக்கு நானும் வர மாட்டேன் என ஸ்ட்ரிக்டாகச் சொல்லிடுங்கோ.
தங்களின் அன்பான வருகைக்கும், அலப்பரை கருத்துக்களுக்கும் என் நன்றிகள், முருகு.
அன்புடன் குருஜி கோபு
எழுத்தாளர் அகிலன் திருச்சியில் ரொம்பகாலம் வசித்தவர் ( உறையூர்) என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இவரது நூல்களை நான் அதிகம் படித்ததில்லை.
பதிலளிநீக்குகு.அழகிரிசாமி பதிப்பித்து வெளியிட்ட கம்பராமாயணத்தின் ’சுந்தரகாண்டம்’ என்ற நூலை முழுதும் வசித்து இருக்கிறேன். முக்கியமான இடங்களில், நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் இவர் எழுதிய அடிக்குறிப்புகள் நிறைய தகவல்கள் அடங்கியதாக இருக்கும். எழுத்தாளர் கி.ராஜநாரயாணன் இவரைப்பற்றி எழுதிய ‘கடுதாசி’ நினைவுகள் சுவையானவை.
தி.தமிழ் இளங்கோ April 3, 2016 at 10:25 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//எழுத்தாளர் அகிலன் திருச்சியில் ரொம்பகாலம் வசித்தவர் ( உறையூர்) என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இவரது நூல்களை நான் அதிகம் படித்ததில்லை.//
ஆஹா, ஞானபீடம் விருது வாங்கிய அகிலன் நம் ஊர் உறையூரில் ரொம்ப காலம் வசித்தவரா? இது நமக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம் அளிக்கும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. தற்சமயம் திருச்சி உறையூரில் தேவாங்கு நெசவாளர் காலனியில் வசித்துவருபவரும், அகிலனைப்பற்றி எனக்கு பல விஷயங்கள் எடுத்துச்சொன்னவருமான Mr. KMB Sir அவர்கள் இது விஷயத்தை ஏனோ எனக்குச் சொல்லவில்லை. அவரிடம் என்றாவது ஒரு நாள் இதுபற்றியும் நான் கேட்பதாக உள்ளேன். தங்களின் இந்தத்தங்கமான தகவலுக்கு ஸ்பெஷல் நன்றிகள், சார்.
//கு.அழகிரிசாமி பதிப்பித்து வெளியிட்ட கம்பராமாயணத்தின் ’சுந்தரகாண்டம்’ என்ற நூலை முழுதும் வசித்து இருக்கிறேன். முக்கியமான இடங்களில், நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் இவர் எழுதிய அடிக்குறிப்புகள் நிறைய தகவல்கள் அடங்கியதாக இருக்கும். எழுத்தாளர் கி.ராஜநாரயாணன் இவரைப்பற்றி எழுதிய ‘கடுதாசி’ நினைவுகள் சுவையானவை. //
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK
இந்த பதிவு எப்படி விட்டுப் போச்சு????? இப்ப வந்தாச்சு. இரண்டு பிரபல எழுத்தாளர்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி....
பதிலளிநீக்குப்ராப்தம் April 4, 2016 at 12:35 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இந்த பதிவு எப்படி விட்டுப் போச்சு?????//
அது எப்படியோ நடுவிலே விட்டுப்போச்சு, அதனால் பரவாயில்லை. இதெல்லாம் மிகவும் சகஜம் தான்.
//இப்ப வந்தாச்சு.//
நீங்க விட்டாலும் அது உங்களை விடாமல், இப்போ வந்து நீங்களாகவே ஒட்டிக்கிட்டீங்கோ. சந்தோஷமே :)
//இரண்டு பிரபல எழுத்தாளர்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி....//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK
மிகப் பிரபலமாயிற்றே என்று பாவை விளக்கு நூலை எடுத்துப் படிக்க முனைந்து முதல் ஐந்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாமல் நிறுத்தியது மட்டுமே நினைவில். இதே போல் படிக்க முனைந்து நிறுத்திய படைபுகள் நிறைய உண்டு - பொன்னியின் செல்வன் சேர்த்து.
பதிலளிநீக்குஅப்பாதுரை April 8, 2016 at 12:07 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//மிகப் பிரபலமாயிற்றே என்று பாவை விளக்கு நூலை எடுத்துப் படிக்க முனைந்து முதல் ஐந்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாமல் நிறுத்தியது மட்டுமே நினைவில். இதே போல் படிக்க முனைந்து நிறுத்திய படைப்புகள் நிறைய உண்டு - பொன்னியின் செல்வன் சேர்த்து.//
தங்களின் அன்பான வருகைக்கும், மனதில் பட்டதை ’பட்-பட்-படா பட்’ என்று சொல்லிவிடும் துணிவுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.- VGK
பாவை விளக்கு கதை கிட்டத்தட்ட அகிலனின் சுயசரிதை என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மைனு தெரியாது. பாவை விளக்கு தவிர இவரின் புதுவெள்ளமும் உணர்ச்சிக் கலவை தான்! அகிலனின் கதைகளே உணர்ச்சி மேலோங்கியவையாகவே இருக்கும். அந்தக் காலத்தில் ரசித்துப் படித்தவை இவை எல்லாம். கு.அழகிரிசாமியின் ஆக்கங்களை ஓரளவுக்குப் படித்துள்ளேன்.
பதிலளிநீக்குGeetha Sambasivam April 12, 2016 at 1:48 PM
நீக்கு//பாவை விளக்கு கதை கிட்டத்தட்ட அகிலனின் சுயசரிதை என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மைனு தெரியாது. பாவை விளக்கு தவிர இவரின் புதுவெள்ளமும் உணர்ச்சிக் கலவை தான்! அகிலனின் கதைகளே உணர்ச்சி மேலோங்கியவையாகவே இருக்கும். அந்தக் காலத்தில் ரசித்துப் படித்தவை இவை எல்லாம். கு.அழகிரிசாமியின் ஆக்கங்களை ஓரளவுக்குப் படித்துள்ளேன்.//
வாங்கோ மேடம். வணக்கம். மிக்க மகிழ்ச்சி.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK
அப்பாதுரை சொல்வது போல் இப்போது பாவை விளக்கு கதையை மீண்டும் படிப்பேனா என்பது சந்தேகமே! ஆனால் பொன்னியின் செல்வன் விதிவிலக்கு! இதுவரை லக்ஷம் முறை படிச்சிருப்பேன். :)
பதிலளிநீக்குGeetha Sambasivam April 12, 2016 at 1:49 PM
நீக்குவாங்கோ ......
//அப்பாதுரை சொல்வது போல் இப்போது பாவை விளக்கு கதையை மீண்டும் படிப்பேனா என்பது சந்தேகமே!//
ஓஹோ !
//ஆனால் பொன்னியின் செல்வன் விதிவிலக்கு! இதுவரை லக்ஷம் முறை படிச்சிருப்பேன். :)//
அடேங்கப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா .... நான் மயக்கமே போட்டு விழுந்துட்டேன், ’லக்ஷம் முறை’ என்ற இதைப்படித்ததும்.
ஏனெனில் நான் ஒருமுறைகூட படித்தது இல்லை. :(
VGK