சனி, 28 ஜனவரி, 2017

நினைவாற்றல் - பகுதி 1 of 3




நினைவாற்றல் என்பது இறைவனால் நம்மில் சிலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள ஓர் வரம். 

எனக்கு ஓரளவு நினைவாற்றல் உள்ளது என, என்னைச் சுற்றியுள்ள பலராலும் அடிக்கடி சொல்லப்படுவதில், எனக்கும் கொஞ்சம் சந்தோஷம் ஏற்படுவதுண்டு. 

என் நினைவாற்றல்களின் உதவியினால் மட்டுமே, நான் என்றோ நடந்த என் பள்ளிவாழ்க்கையைப் பற்றி, 40-45 ஆண்டுகளுக்குப்பின், 7+1=8 பகுதிகளாக, ஓர் சுவையான தொடர் பதிவாகத் தர முடிந்தது.  சுமார் 500 பின்னூட்டங்களுடன் பலரின் பாராட்டுக்களை நான் பெறவும் முடிந்தது.   

அந்தத் தொடரின் ஆரம்பப்பதிவின் இணைப்பு: 

பொதுவாக நேற்று நாம் என்ன சாப்பிட்டோம்; எந்த உடையை உடுத்தியிருந்தோம்; எங்கெல்லாம் சென்று வந்தோம்; யார் யாரை சந்தித்தோம் என்பதே நமக்குப் பெரும்பாலும் மறந்து விடுகிறது என்பதே உண்மை. இவையெல்லாம் எனக்கும்கூட மறந்துதான் போகும். ஏனெனில் இதெல்லாம் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த சமாச்சாரங்களே அல்ல. அன்றாடம் நடைபெறும் மிகச்சாதாரண சில நிகழ்வுகள் என்பதால் மட்டுமே.

அந்த நிகழ்வால் நமக்கு ஒரு பெரும் ஆதாயமோ அல்லது பெரும் பாதிப்புகளோ ஏற்பட்டால் மட்டுமே அவற்றை நம்மால் லேஸில் மறக்க முடிவது இல்லை. 


’நன்றி மறப்பது நன்றன்று’ எனச்சொல்லுவார்கள். அதுபோல நாம், நம்மிடம் பாசமும் நேசமும் காட்டிவரும் நம் நல்ல உறவினர்களையும், நல்ல நண்பர்களையும், நம் நலம் விரும்பிகளையும், அவர்கள் அவ்வப்போது நமக்குச் செய்துள்ள சிறுசிறு உதவிகளையும்கூட, நாம் என்றுமே மறக்காமல் இருப்பதே நல்லது.

’மறப்போம் மன்னிப்போம்’ என்பதுபோல  மறதி என்பதும் ஓர் வரமே என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். 

உதாரணமாக, நம்மிடம் இருந்த நகைகளோ, பெரியதொரு தொகையோ திருட்டுப்போய் விட்டது அல்லது நம் அன்புக்குரிய ஒருவர் திடீரென இறந்துவிட்டார் என அறிந்ததும் ஓர் அதிர்ச்சி, அழுகை, துக்கம் முதலியன வரத்தான் செய்யும். சிலர் விஷயத்தில் அவை ஒருசில ஆண்டுகள் வரை நம்மிடம் நீடிக்கவும் செய்யும். 

இருப்பினும், நாம் இழந்துவிட்ட அவைகள் அல்லது அவர்கள் நினைவாகவே நாம் எப்போதும் அழுதுகொண்டு, சாப்பிடாமல், தூங்காமல், வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் இருந்து விடவே முடியாது என்பதுதானே நிதர்சனமான உண்மையாக உள்ளது

இதன்படி, நல்லவைகளையும், நல்ல நட்புகளையும், வாழ்க்கையின் மிக முக்கியமான சில சம்பவங்களையும், கூடுமான வரையில் நாம் என்றும் மறக்கவே கூடாது. அதே சமயம் மறக்க வேண்டிய சிலவற்றை நாம் மறந்துதான் ஆக வேண்டியதாகவும் உள்ளது. 

இதில் காலமும், மறதியும் மற்றும் இன்று நடக்கும் சில சந்தோஷமான அல்லது துக்கமான நிகழ்ச்சிகளும் மட்டுமே நமது பழைய துக்கங்களைக் குறைக்க உதவும் காரணிகளாக உள்ளன. 

இதையெல்லாம் ஏன் இங்கு நான் சொல்லுகிறேன் என்றால், வயதானாலும் மிகச்சிறப்பான நினைவாற்றல் உள்ள, தனித்திறமைகள் வாய்ந்த, ஒரு நபரை நான் மூன்றாம் முறையாக 25.01.2017 புதன்கிழமை ஓர் நிகழ்ச்சியில் நேரில் சந்திக்க நேர்ந்தது.  



அந்த நிகழ்ச்சியின் மெயின் ஹீரோவே அவர்தான். ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 பேர்கள் கலந்துகொண்ட இனிய நிகழ்ச்சி அது. 

அவரை நான் முதன் முதலாக சந்தித்த நாள்: 02.08.2014


இரண்டாம் முறையாக சந்தித்த நாள்: 22.02.2015 


 


70+ ஆன வயதிலும்
நினைவாற்றலில் இன்றும் 
ஓர் புலியாகத் திகழ்ந்து வரும் இவர் பெயர்:
அஷ்டாவதானி 
திரு. V. மஹாலிங்கம் அவர்கள்.
M.Com., L.L.B., C.A.I.I.B., 

Phone: 0431-2432340
Mobile: 9952469372
e-mail:-  vmaali@gmail.com

Residing now at

Dhanraj Complex
B-6, First Floor
15, Veereswaram Main Road
Srirangam  
Thiruchirappalli-620 006  

-oOo-

 

அந்த சிறப்பு நிகழ்ச்சிக்கான
அழைப்பிதழ் இதோ



Book Club Trichy Invites you
to our  meeting
on 25th January, 2017 at 6.30 pm.

For a Lecture Demonstration
on Ashtaavadaanam
by
Sri V.Mahalingam, 
(Former AGM, UCO BANK- Retd.)


Time:  6.30 PM to 8 PM
Venue: Thathachariar House,
No.152, South Chitra Street, 
Srirangam, Trichy-620006.

Note : Ashtaavadaanam is an ancient Indian art which was in active practice in our Country Earlier .   Literally means  doing eight things simultaneously  Please Do make it a point  not to miss this meeting

Invitees are requested to bring each a pencil and pen and INDIA TODAY ENGLISH EDITION with Cover date 23 January 2017 and Thuglak Tamil Magazine with Cover date 18 January 2017. This will help to  understand and appreciate the skills of the ASHTAVADHANI


The Book Club Trichy meets on the Fourth Wednesday of every month.
E-Mail: bookclubtrichy@gmail.com 
Coordinator: Brigadier B. Narayanswamy, EME (Retd)
Tel: 2761497. Mobile: 94437- 71497





நான் நேரில் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், என் பார்வையில், அங்கு நடைபெற்ற சிறப்பம்சங்கள் + வியப்புகள் பற்றி இதன் அடுத்த பகுதியில் தொடர்வேன். 

என்றும் அன்புடன் தங்கள்,

 

(வை. கோபாலகிருஷ்ணன்)



89 கருத்துகள்:

  1. அருமையான மனிதர்.. ஆசையாய் படிக்கக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் January 28, 2017 at 3:37 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான மனிதர்.. //

      மிகவும் அருமையான அபூர்வமான மனிதர்தான்.

      தாங்கள் 21.01.2017 அன்றே மெயில் மூலம் இந்த நிகழ்ச்சி நடக்கப்போவதைப் பற்றி எனக்கு அறிவித்திருந்தும்கூட, நான் அதனை சுத்தமாக மறந்து போய் உள்ளதை நினைத்து மிகவும் வெட்கப்பட்டேன்.

      என் நினைவாற்றல் வர வர மழுங்கி வருகிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும் எனவும் நினைத்துக்கொண்டேன்.

      நல்லவேளையாக நிகழ்ச்சி துவங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு, எனக்கு ஓர் நினைவூட்டல் SMS கிடைத்தது. உடனே ஓர் ஆட்டோ பிடித்து அங்கு ஓடி வந்து விட்டேன்.

      //ஆசையாய் படிக்கக் காத்திருக்கிறேன்.//

      அன்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தாங்களே இவ்வாறு “ஆசையாய் படிக்கக் காத்திருக்கிறேன்” என்று சொல்வது, மேலும் எனக்கு ஓர் தனி உற்சாகத்தைத் தந்து உதவுகிறது.

      இந்த என் புதிய தொடருக்கு, தங்களின் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  2. முன்னுரையே எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது. சிறப்பான அந்த நிகழ்வைப் பற்றி அறியக் காத்திருக்கிறேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். January 28, 2017 at 3:44 PM

      வாங்கோ ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!’ வணக்கம்.

      //முன்னுரையே எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது. சிறப்பான அந்த நிகழ்வைப் பற்றி அறியக் காத்திருக்கிறேன். தொடர்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். :)

      நீக்கு
  3. திரு மாலி ஒரு அருமையான நண்பர் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன் அவரது அஷ்டாவதானம் கண்டதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M Balasubramaniam January 28, 2017 at 3:52 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //திரு மாலி ஒரு அருமையான நண்பர் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன் அவரது அஷ்டாவதானம் கண்டதில்லை.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  4. மறதிகளும், நினைவுகளும் நிச்சயம் மனிதனுக்கு அவசியமே... மறதி இல்லையெனில் மரணங்களை மறக்க முடியாது, நினைவுகள் இல்லையெனில் நன்றிகளை மறந்து விடுவர்,

    முன்னுரை அசத்தல் ஐயா தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KILLERGEE Devakottai January 28, 2017 at 4:32 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மறதிகளும், நினைவுகளும் நிச்சயம் மனிதனுக்கு அவசியமே... மறதி இல்லையெனில் மரணங்களை மறக்க முடியாது, நினைவுகள் இல்லையெனில் நன்றிகளை மறந்து விடுவர்.//

      மிகவும் அழகாகவும், தெளிவாகவும் சொல்லியுள்ளீர்கள்.

      //முன்னுரை அசத்தல் ஐயா தொடர்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  5. //நல்லவைகளையும், நல்ல நட்புகளையும், வாழ்க்கையின் மிக முக்கியமான சில சம்பவங்களையும், கூடுமான வரையில் நாம் என்றும் மறக்கவே கூடாது. அதே சமயம் மறக்க வேண்டிய சிலவற்றை நாம் மறந்துதான் ஆக வேண்டியதாகவும் உள்ளது.//

    நீங்கள் சொல்வது உண்மை.
    சில விஷயங்கள் மறந்து விட்டால் நல்லது, சில விஷயங்கள் மறக்காமல் காட்சிகளாய் கண்முன் விரிந்து கொண்டே போனால் மகிழ்ச்சி.

    பேரன் ஊருக்கு போய் விட்டான், அவனின் விளையாட்டும், சிரிப்பும் , பேச்சும் மனகண்முன் அகலாமல் இருக்கிறது.

    சிறப்பம்சங்கள் + வியப்புகள் பற்றி தொடரை படிக்க ஆவலாக இருக்கிறேன்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு January 28, 2017 at 4:51 PM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      **நல்லவைகளையும், நல்ல நட்புகளையும், வாழ்க்கையின் மிக முக்கியமான சில சம்பவங்களையும், கூடுமான வரையில் நாம் என்றும் மறக்கவே கூடாது. அதே சமயம் மறக்க வேண்டிய சிலவற்றை நாம் மறந்துதான் ஆக வேண்டியதாகவும் உள்ளது.**

      //நீங்கள் சொல்வது உண்மை. சில விஷயங்கள் மறந்து விட்டால் நல்லது, சில விஷயங்கள் மறக்காமல் காட்சிகளாய் கண்முன் விரிந்து கொண்டே போனால் மகிழ்ச்சி.//

      நான் சொல்லியுள்ளதை உண்மை என்று தாங்களும் ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

      //பேரன் ஊருக்கு போய் விட்டான், அவனின் விளையாட்டும், சிரிப்பும் , பேச்சும் மனகண்முன் அகலாமல் இருக்கிறது.//

      மிகவும் சந்தோஷம், மேடம். :)

      //சிறப்பம்சங்கள் + வியப்புகள் பற்றி தொடரை படிக்க ஆவலாக இருக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  6. ச்ருதி கூடி விட்டது....ஆவலுடன் காத்திருக்கிறேன் ..

    மாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. V Mawley January 28, 2017 at 4:53 PM

      வாங்கோ, ஸார். நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.

      //ச்ருதி கூடி விட்டது....ஆவலுடன் காத்திருக்கிறேன் -
      மாலி//

      ஆஹா, மேற்படி விழாவின் கதாநாயகரான நீங்களும் ஆவலுடன் காத்திருக்கிறீர்களா? என்னே என் பாக்யம். தன்யனானேன்.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. ப.கந்தசாமி January 28, 2017 at 5:31 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //காத்திருக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  8. //பொதுவாக நேற்று நாம் என்ன சாப்பிட்டோம்; எந்த உடையை உடுத்தியிருந்தோம்; எங்கெல்லாம் சென்று வந்தோம்; யார் யாரை சந்தித்தோம் என்பதே நமக்குப் பெரும்பாலும் மறந்து விடுகிறது என்பதே உண்மை.//

    ஒரு திருத்தம். நேற்று இல்லை, இன்று நடந்ததே நினைவில் இருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜே மாமீஈஈஈஈ எப்படி இருக்கிறீங்க? பார்த்து எவ்ளோ நாளாச்சூ??? என்னை மறந்திட்டீங்களோ?:) எப்பூடி மறப்பீங்க.. நான் புளொக் பக்கம் மட்டுமே இப்போ வருகிறேன்.. உங்களைக் கண்டது மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
    2. Jayanthi Jaya January 28, 2017 at 6:03 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      **பொதுவாக நேற்று நாம் என்ன சாப்பிட்டோம்; எந்த உடையை உடுத்தியிருந்தோம்; எங்கெல்லாம் சென்று வந்தோம்; யார் யாரை சந்தித்தோம் என்பதே நமக்குப் பெரும்பாலும் மறந்து விடுகிறது என்பதே உண்மை.**

      //ஒரு திருத்தம். நேற்று இல்லை, இன்று நடந்ததே நினைவில் இருப்பதில்லை.//

      கரெக்டூஊஊஊஊஊ. ‘ஜெ’ சொன்னால் எதுவுமே மிகவும் கரெக்டாக ஆணித்தரமாக யாராலும் மறுத்தோ எதிர்த்தோ பேச முடியாமல்தான் இருக்கும் .... ஒரே போடு போட்டு முற்றிய தேங்காயை பளிச்சென்று இரு மூடிகளாக உடைப்பது போலவே.

      மிக்க நன்றி, ஜெயா.

      நீக்கு
  9. //நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்//

    நீங்களே சிலாகித்து பேசுகிறீர்கள், அவரைப் பற்றி எழுதவும் போகிறீர்கள் என்றால் அவர் என்ன சாமானியராகவா இருப்பார். ‘மகா’லிங்கமாகத்தான் இருப்பார். உங்கள் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya January 28, 2017 at 6:07 PM

      //நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
      கற்றாரைக் கற்றாரே காமுறுவர்//

      இதெல்லாம் மிகவும் ஓவர் ..... ஜெயா !

      //அவர் என்ன சாமானியராகவா இருப்பார். ‘மகா’லிங்கமாகத்தான் இருப்பார்.//

      அவர் என்னவோ ‘ம ஹா’ லிங்கம்தான். இதை மறுக்கவே முடியாது.

      //நீங்களே சிலாகித்து பேசுகிறீர்கள், அவரைப் பற்றி எழுதவும் போகிறீர்கள் என்றால் .....//

      மிகச் சாதாரணமானவனான என்னைப்போய் நீங்க ஒருத்திதான் அடிக்கடி இப்படி ஏதாவது சொல்லிச்சொல்லி ........... :(

      ’நினைவாற்றலில்’ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம் அவருக்கும் எனக்கும் என்பதைத் தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கோ ஜெயா.

      //உங்கள் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      நீக்கு
  10. //நான் நேரில் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், என் பார்வையில், அங்கு நடைபெற்ற சிறப்பம்சங்கள் + வியப்புகள் பற்றி இதன் அடுத்த பகுதியில் தொடர்வேன். //

    அப்படியானால் சுவையாகத்தான் இருக்கும். உங்கள் கழுகுப் பார்வைக்கு எதுவும் தப்ப முடியாதே. அதனால் முழுமையாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya January 28, 2017 at 6:09 PM

      **நான் நேரில் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், என் பார்வையில், அங்கு நடைபெற்ற சிறப்பம்சங்கள் + வியப்புகள் பற்றி இதன் அடுத்த பகுதியில் தொடர்வேன். **

      //அப்படியானால் சுவையாகத்தான் இருக்கும். உங்கள் கழுகுப் பார்வைக்கு எதுவும் தப்ப முடியாதே. அதனால் முழுமையாகவும் இருக்கும்.//

      மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ... நான் மிக மிகச் சாதாராணமானவன் மட்டுமே. எனினும் தாங்கள் என்னைப்பற்றி (தவறானாலும்) உயர்வாகவே நினைத்துக்கொண்டுள்ளதற்கு என் நன்றிகள், ஜெயா.

      நீக்கு
  11. //வயதானாலும் மிகச்சிறப்பான நினைவாற்றல் உள்ள, தனித்திறமைகள் வாய்ந்த, ஒரு நபரை நான் மூன்றாம் முறையாக 25.01.2017 புதன்கிழமை ஓர் நிகழ்ச்சியில் நேரில் சந்திக்க நேர்ந்தது. //

    அப்படியே நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள ஏதாவது டிப்ஸ் இருந்தால் கேட்டு எங்களுக்கும் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya January 28, 2017 at 6:10 PM

      **வயதானாலும் மிகச்சிறப்பான நினைவாற்றல் உள்ள, தனித்திறமைகள் வாய்ந்த, ஒரு நபரை நான் மூன்றாம் முறையாக 25.01.2017 புதன்கிழமை ஓர் நிகழ்ச்சியில் நேரில் சந்திக்க நேர்ந்தது.**

      //அப்படியே நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள ஏதாவது டிப்ஸ் இருந்தால் கேட்டு எங்களுக்கும் சொல்லவும்.//

      அதெல்லாம் கிடக்கட்டும். ஜெயா .... நீங்கள் எனக்கு, நெய்யில் செய்த உதிர் உதிரான, மிகச்சுவையான 108 Nos. சீர் அதிரஸங்கள் அனுப்பி வைக்க வேண்டியுள்ளது .... கடந்த மூன்று வருடங்களாக இன்னும் பெண்டிங் ஆகவே உள்ளது. :(

      அதனை நீங்களும் சுத்தமாக மறந்து விட்டு, என்னையும் மறக்கடித்து வருகிறீர்கள்.

      அதற்கு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து மேலும் தாமதிக்காமல் அனுப்ப ஏற்பாடு செய்யும்படி டிப்ஸ் அளிக்கிறேன்.

      அதற்கான என் Reminder No.1 இதோ இந்தப்பதிவினில் உள்ளது:

      http://gopu1949.blogspot.in/2014/10/9.html

      நீக்கு
  12. ஆவலுடன் காத்திருக்கிறேன். மிகவும் எதிர்பார்த்த நிகழ்ச்சி. கலந்து கொள்ள முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam January 28, 2017 at 6:12 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஆவலுடன் காத்திருக்கிறேன்.//

      சந்தோஷம்.

      //மிகவும் எதிர்பார்த்த நிகழ்ச்சி. கலந்து கொள்ள முடியவில்லை.//

      அமெரிக்காவிலிருந்து செளக்யமாக திரும்ப திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் வந்து சேர்ந்ததும், தங்களின் வெற்றிகரமான ஃபாரின் ட்ரிப்பைக் கொண்டாடும் விதமாக, தங்கள் இல்லத்திற்கே அவரை வரவழைத்து, மற்ற நூற்றுக்கணக்கான வலையுலக நண்பர்களையும் பார்வையாளர்களாக வரவழைத்து, நிகழ்ச்சியை தங்களின் முன்னிலையில் மீண்டும் ஒருமுறை நடத்தச்சொல்லி, மறக்காமல் வருகை தரும் எல்லோருக்கும் மாபெரும் விருந்தளித்து, மகிழுங்கோ.

      நீக்கு
  13. அடுப்பை விட்டு இறக்கும் முன்னே
    பசியைத் தூண்டும் இரச வாசம்
    பதிவு வரும் முன்னே மனதில்
    எழுச்சி கூட்டியவிதம் அட்டகாசம்
    பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்து..
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S January 28, 2017 at 6:22 PM

      வாங்கோ Mr RAMANI Sir, வணக்கம்.

      //அடுப்பை விட்டு இறக்கும் முன்னே பசியைத் தூண்டும் இரச வாசம் பதிவு வரும் முன்னே மனதில் எழுச்சி கூட்டியவிதம் அட்டகாசம்.//

      ஆஹா, தங்களின் இந்த வர்ணனை நல்ல தெளிவான ரஸம் போலவே மிகவும் ருசியாக உள்ளது.

      //பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்து.. வாழ்த்துக்களுடன்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  14. உங்கள் நினைவாற்றல் எல்லோருக்கும் பயனளிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு January 28, 2017 at 6:30 PM

      //உங்கள் நினைவாற்றல் எல்லோருக்கும் பயனளிக்கும்.//

      தங்களின் மீண்டும் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் January 28, 2017 at 9:01 PM

      வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.

      //காத்திருக்கிறேன் ஐயா...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  16. அவர் Mahalingam அல்ல!
    Maha'link'am!
    அதாகப் பட்டது link memory யில் புலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி

      வாங்கோ, வணக்கம்.

      //அவர் Mahalingam அல்ல! Maha'link'am!
      அதாகப் பட்டது link memory யில் புலி!//

      நான் மூன்று பகுதிகளில் சொல்லியுள்ளதைத் தாங்கள் மூன்றே வார்த்தைகளில் நகைச்சுவையாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      நீக்கு
  17. பதில்கள்
    1. பரிவை சே.குமார் January 28, 2017 at 11:07 PM

      //அருமை ஐயா... காத்திருக்கிறேன்...//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  18. வாவ்வ்வ் கோபு அண்ணன் ஏன் எதுவும் எழுதுவதில்லை இப்போ, என கேட்கோணும் என நினைச்சிருந்தேன்ன்ன் ஆரம்பிச்சிட்டீங்க.. என்னிடம் இருக்கும் குட்டியூண்டு இதயத்தால பெரிய வாழ்த்துக்கள்.. சொல்லித் தொடர்கிறேன்ன்... சந்தோசம் தொடருங்கோ... “அங்கின” நீங்க அஞ்சுவைக் கூவி அழைத்ததை இப்போதான் பார்த்து... உடனேயே அஞ்சுக்கு சொல்லிட்டேன்ன்.. பூஸோ கொக்கோ:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira January 29, 2017 at 1:59 AM

      //வாவ்வ்வ் கோபு அண்ணன்//

      வாங்கோ அதிரா, வணக்கம். நல்லா இருக்கீங்களா? பார்த்துப் பலநாட்கள் ஆகிவிட்டன. நீண்ண்ண்ட நாட்களுக்குப்பின், இங்கு தங்களைப் பார்த்தது சந்தோஷமாக உள்ளது.

      //ஏன் எதுவும் எழுதுவதில்லை இப்போ, என கேட்கோணும் என நினைச்சிருந்தேன்ன்ன் ஆரம்பிச்சிட்டீங்க..//

      பிரபலங்கள் யாரையாவது நான் நேரில் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது நம் பதிவுலகப் பிரபலங்கள் சிலர் அன்புடன் அனுப்பி வைக்கும் அவர்களின் நூல்களை முழுவதுமாக நான் படிக்க நேரிட்டாலோ, அதைப்பற்றி ஓர் பதிவு வெளியிடுவது என மட்டுமே நான் இப்போதெல்லாம் வைத்துக்கொண்டுள்ளேன். கடந்த ஓராண்டாகவே பெரும்பாலும் இவை மட்டும்தான் என் வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றன என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

      //என்னிடம் இருக்கும் குட்டியூண்டு இதயத்தால பெரிய வாழ்த்துக்கள்.. சொல்லித் தொடர்கிறேன்ன்... சந்தோசம் தொடருங்கோ...//

      தங்களின் குட்டியூண்டு இதயத்திலிருந்து வெளிப்பட்டுள்ள பெரிய வாழ்த்துகளுக்கும், ’தொடர்கிறேன்’ என்று சந்தோஷமாகச் சொல்லியுள்ள உறுதிமொழிக்கும் என் நன்றிகள், குட்டிம்மா.

      //“அங்கின” நீங்க அஞ்சுவைக் கூவி அழைத்ததை இப்போதான் பார்த்து... உடனேயே அஞ்சுக்கு சொல்லிட்டேன்ன்.. பூஸோ கொக்கோ:))..//

      நான் கூவி அழைத்தும்கூட, அங்கின வரவே ’அஞ்சி’ன ’அஞ்சு’வையே அங்கின வரவழைத்துள்ள ...... பூஸோ அல்லது கொக்கோவுக்கு ....... என் நன்றிகள். :)))))

      நீக்கு
  19. ///எனக்கு ஓரளவு நினைவாற்றல் உள்ளது என, என்னைச் சுற்றியுள்ள பலராலும் அடிக்கடி சொல்லப்படுவதில், எனக்கும் கொஞ்சம் சந்தோஷம் ஏற்படுவதுண்டு.////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆரம்பமே ஓவரா உங்களை நீங்களே புகழக்கூடா சொல்லிட்டேன்ன்ன்ன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira January 29, 2017 at 2:01 AM

      **எனக்கு ஓரளவு நினைவாற்றல் உள்ளது என, என்னைச் சுற்றியுள்ள பலராலும் அடிக்கடி சொல்லப்படுவதில், எனக்கும் கொஞ்சம் சந்தோஷம் ஏற்படுவதுண்டு.**

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆரம்பமே ஓவரா உங்களை நீங்களே புகழக்கூடா சொல்லிட்டேன்ன்ன்ன்:)//

      ஆஹா, அதிரடி அதிராவின் அலம்பல் ஆரம்பித்து விட்டதே. 29.01.2017 ஞாயிறு அன்று இது அதிராவால் எழுதப்பட்டுள்ளது. அன்று என் நக்ஷத்திரமான புனர்பூசத்திற்கு சந்திராஷ்டமம் என்று போடப்பட்டுள்ளது.

      நல்ல வேளையாக ’தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு’ என நினைத்துக்கொள்கிறேன். :)

      OK அதிரா ..... Accepted !

      நீக்கு
    2. ஹா ஹா ஹா சந்திராஸ்டம காலங்களில் ப்போஸ்ட்டும் போடக்குடா:) வாயும் திறக்கக்கூடா.. இது முன்பு எனக்கு தெரியாது, ஏனெனில் இலங்கையில் பெரிதாக சந்திராஸ்டமம் பார்க்க மாட்டோம்.. ஆனா இப்போ கொஞ்சக் காலமாகத்தான் ஒரு தமிழ்நாட்டு அண்ணன் சொல்லியதிலிருந்து கவனமாக இருக்கிறேன்... உணர்ந்தும் இருக்கிறேன்.

      நீக்கு
    3. athira February 7, 2017 at 5:46 PM

      //ஹா ஹா ஹா சந்திராஸ்டம காலங்களில் ப்போஸ்ட்டும் போடக்குடா:) வாயும் திறக்கக்கூடா..//

      ஓகே .. இனி இதனை நான் என் நினைவில் வைத்துக்கொள்கிறேன்.

      //இது முன்பு எனக்கு தெரியாது, ஏனெனில் இலங்கையில் பெரிதாக சந்திராஸ்டமம் பார்க்க மாட்டோம்..//

      நீங்கள் இருப்பது இலங்கையிலா? நான், ஒருவேளை லண்டனிலோ என தப்பாக நினைத்துக்கொண்டு இருக்கிறேன். {தேம்ஸ் எங்குள்ளது அதிரா? இலங்கையிலா அல்லது பிரித்தானியாவிலா?}

      //ஆனா இப்போ கொஞ்சக் காலமாகத்தான் ஒரு தமிழ்நாட்டு அண்ணன் சொல்லியதிலிருந்து கவனமாக இருக்கிறேன்... உணர்ந்தும் இருக்கிறேன்.//

      அதிராவை திருத்த முயன்றுள்ள அந்தத் தமிழ் நாட்டு அண்ணன் வாழ்க !

      நீக்கு
  20. ////’நன்றி மறப்பது நன்றன்று’ எனச்சொல்லுவார்கள். அதுபோல நாம், நம்மிடம் பாசமும் நேசமும் காட்டிவரும் நம் நல்ல உறவினர்களையும், நல்ல நண்பர்களையும், நம் நலம் விரும்பிகளையும், அவர்கள் அவ்வப்போது நமக்குச் செய்துள்ள சிறுசிறு உதவிகளையும்கூட, நாம் என்றுமே மறக்காமல் இருப்பதே நல்லது.///

    ஓகே...

    ///மறப்போம் மன்னிப்போம்’ என்பதுபோல மறதி என்பதும் ஓர் வரமே என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். ////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போ முடிவா என்னதான் சொல்ல வாறீங்க கோபு அண்ணன்ன்ன்???? மறவாமை நல்லதா? மறதி நல்லதோ?:)) ஹா ஹா ஹா சூப்பரா மாட்டிட்டார் கோபு அண்ணன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போ முடிவா என்னதான் சொல்ல வாறீங்க கோபு அண்ணன்ன்ன்???? மறவாமை நல்லதா? மறதி நல்லதோ?:)) ஹா ஹா ஹா சூப்பரா மாட்டிட்டார் கோபு அண்ணன்:)//

      ஆமாம். அதிரா .... உங்களிடம் தெரியாத்தனமா வசமா மாட்டிக்கிட்டேன். நீங்கள் இவ்விடம் வருகை தந்துள்ள 29th January 2017 அன்றைக்கு எனக்கு சந்திராஷ்டமம் என்று சொல்லியிருக்கிறேனே ... மேலே என் பதிலில். :)

      நீக்கு
  21. ///இதில் காலமும், மறதியும் மற்றும் இன்று நடக்கும் சில சந்தோஷமான அல்லது துக்கமான நிகழ்ச்சிகளும் மட்டுமே நமது பழைய துக்கங்களைக் குறைக்க உதவும் காரணிகளாக உள்ளன.///

    மிக அருமையாக விளக்கிட்டீங்க உண்மையேதான், சிலர் இருக்கிறார்கள் தேவையில்லாததை மறக்காமலும், தேவையானதை மறந்தும் விடுவினம்...
    இது வாழ்க்கைக்கு மிக தேவையான தத்துவம்.. 3 பாகமாக பிரித்து குட்டியாக்கி எழுதியமையால படிக்க இண்டஸ்ரா இருக்கு...

    இங்கே அஞ்சுவைக் காட்டியும் நேக்கு ஞாபகசக்தி அதிகம் என்பதை மிகவும் பெருமையுடன்:)) சொல்லிக்கொண்டு, அமர்கிறேன்ன்.. நன்றி.[எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காதாக்கும்ம்ம்ம்]...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira January 29, 2017 at 2:08 AM

      **இதில் காலமும், மறதியும் மற்றும் இன்று நடக்கும் சில சந்தோஷமான அல்லது துக்கமான நிகழ்ச்சிகளும் மட்டுமே நமது பழைய துக்கங்களைக் குறைக்க உதவும் காரணிகளாக உள்ளன.**

      //மிக அருமையாக விளக்கிட்டீங்க உண்மையேதான், சிலர் இருக்கிறார்கள் தேவையில்லாததை மறக்காமலும், தேவையானதை மறந்தும் விடுவினம்... இது வாழ்க்கைக்கு மிக தேவையான தத்துவம்.. 3 பாகமாக பிரித்து குட்டியாக்கி எழுதியமையால படிக்க இண்டஸ்ரா இருக்கு... //

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் பின்னூட்டங்களெல்லாம் படிக்க எனக்கும் மிகவும் இண்டரெஸ்டிங் ஆகத்தான் இருக்குது.

      //இங்கே அஞ்சுவைக் காட்டியும் நேக்கு ஞாபகசக்தி அதிகம் என்பதை மிகவும் பெருமையுடன்:)) சொல்லிக்கொண்டு, அமர்கிறேன்ன்.. நன்றி.//

      இந்த வரிகளில் ஏன், மிகவும் சமத்தாக அமைதியாக எங்கோ இருக்கும், நம்ம ’அஞ்சு’வைப் போய் அநாவஸ்யமாக வம்புக்கு இழுக்கிறீர்கள், அதிரா?

      //[எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காதாக்கும்ம்ம்ம்]...//

      இங்கு வருகை தரும் யாருக்குத் தெரியுமோ தெரியாதோ .... இதுபற்றிய உண்மைகள் எனக்கும் அஞ்சுவுக்கும் மட்டும் மிக நன்றாகவே தெரியும். :)))))

      நீக்கு
  22. அந்தப் பெரியவர் இன்னும் பலகாலம் நல்ல ஞாபக சக்தியோடும் நல்ல நலத்தோடும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira January 29, 2017 at 2:09 AM

      //அந்தப் பெரியவர் இன்னும் பலகாலம் நல்ல ஞாபக சக்தியோடும் நல்ல நலத்தோடும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.//

      தங்களின் இந்த பிரார்த்தனைகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா.

      நீக்கு
  23. //மறப்போம் மன்னிப்போம்’ என்பதுபோல மறதி என்பதும் ஓர் வரமே என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். //எனக்கு பிரச்சினையே நல்லதும் கெட்டதும் மறக்கவே மறக்காது :)
    நாட்டு நடப்பு சகலத்தையும் விரல் நுனியில் டீடெய்ல்ஸ் தருபவர் கோபு அண்ணா தான் .நீங்களே ஒருவரை அஷ்டாவதானி என்று பாராட்டுகிறீர்கள் என்றால் அவரை பற்றி மேலும் அறிய ஆவலாயிருக்கு அந்த சுட்டிகளுக்கு சென்று படிச்சிட்டு வரேன் .
    .நான் உங்களை முதலில் சந்தித்தது எங்கேன்னு சொல்லட் டா ..ஆச்சியின் பதிவில் :)



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin January 29, 2017 at 5:11 AM

      **மறப்போம் மன்னிப்போம்’ என்பதுபோல மறதி என்பதும் ஓர் வரமே என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.**

      //எனக்கு பிரச்சினையே நல்லதும் கெட்டதும் மறக்கவே மறக்காது :)//

      இது மிகப்பெரிய பிரச்சனையான விஷயம் ஆச்சே.

      ‘நல்லதும் கெட்டதும்’ என்றால் நானும் அதிராவும் என்று அர்த்தமா? :)

      //நாட்டு நடப்பு சகலத்தையும் விரல் நுனியில் டீடெய்ல்ஸ் தருபவர் கோபு அண்ணாதான்.//

      ஹைய்ய்ய்ய்யோ .... நம் அதிராவுக்காகவே இதனை இங்கு குறிப்பிட்டு எழுதியிருக்கீங்களா, அஞ்சு?

      //நீங்களே ஒருவரை அஷ்டாவதானி என்று பாராட்டுகிறீர்கள் என்றால் அவரை பற்றி மேலும் அறிய ஆவலாயிருக்கு அந்த சுட்டிகளுக்கு சென்று படிச்சிட்டு வரேன்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //நான் உங்களை முதலில் சந்தித்தது எங்கேன்னு சொல்லட் டா ..ஆச்சியின் பதிவில் :) //

      உங்கள் நினைவாற்றல் அருமையாக உள்ளது. பாராட்டுகள். இருப்பினும் அந்த ஆச்சி யார்? என்று கேட்கணும் போல உள்ளது இப்போது எனக்கு, என் நினைவாற்றலில். :)))))

      தினமும் என் வாட்ஸ்-அப் தொடர்பு எல்லைக்குள் இருப்பினும், இப்போதெல்லாம் இங்கு என் பதிவுகள் பக்கமே வருவது இல்லை, நம் ஆச்சி. :((((( ஃபேஸ்-புக்கில் கலக்கிக்கொண்டு இருப்பதாகக் கேள்வி.

      நானே அவ்வபோது அவங்க முகம் மறக்காமல் இருக்க இதோ இந்தப்பதிவுக்குப் போய்ப் பார்ப்பது வழக்கம்.

      http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html

      தங்களின் அன்பான வருகைக்கும், நினைவாற்றலுடன் கூடிய அழகான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  24. //இங்கே அஞ்சுவைக் காட்டியும் நேக்கு ஞாபகசக்தி அதிகம் என்பதை மிகவும் பெருமையுடன்:))///

    கர்ர்ர்ர் ..எனக்கு அனுப்ப வேண்டிய 500 £ இன்னும் வந்து சேரலை மறக்காம அனுப்பி விடுங்க நா போன வருஷம் கொடுத்தது :)))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @angelin கர்ர்ர்ர் ..எனக்கு அனுப்ப வேண்டிய 500 £ இன்னும் வந்து சேரலை மறக்காம அனுப்பி விடுங்க நா போன வருஷம் கொடுத்தது :)))))))))))))/////

      அச்சச்சோ இந்தக் கொடுமையை எங்கின போய்ச் சொல்லுவேன், கோபு அண்ணன் உங்களை சாட்சியா வச்சு உங்க முன்னாடிதானே வட்டியோடு திருப்பிக் கொடுத்தனே அதை ... இருவருமே மறந்திட்டீங்களா????
      கொஞ்சம் ஞாபகப்படுத்தி அஞ்சுக்கு சொல்லுங்கோ கோபு அண்ணன் , இல்லையெனில் அக்காசுக்கு நீங்கதான் பொறுப்பூஊஊஊஊ:)

      நீக்கு
    2. Angelin January 29, 2017 at 5:13 AM

      ****இங்கே அஞ்சுவைக் காட்டியும் நேக்கு ஞாபகசக்தி அதிகம் என்பதை மிகவும் பெருமையுடன்:)) - அதிரா****

      //கர்ர்ர்ர் ..எனக்கு அனுப்ப வேண்டிய 500 £ இன்னும் வந்து சேரலை மறக்காம அனுப்பி விடுங்க நா போன வருஷம் கொடுத்தது :)))))))))))))//

      அப்படிப் போடு அருவாளை ! மிகவும் ரஸித்தேன். சிரித்தேன். :)))))))))))))

      நீக்கு
    3. athira January 29, 2017 at 1:34 PM

      ****கர்ர்ர்ர் ..எனக்கு அனுப்ப வேண்டிய 500 £ இன்னும் வந்து சேரலை மறக்காம அனுப்பி விடுங்க நா போன வருஷம் கொடுத்தது :))))))))))))) - angelin ****

      //அச்சச்சோ இந்தக் கொடுமையை எங்கின போய்ச் சொல்லுவேன், கோபு அண்ணன் உங்களை சாட்சியா வச்சு உங்க முன்னாடிதானே வட்டியோடு திருப்பிக் கொடுத்தனே அதை ... இருவருமே மறந்திட்டீங்களா????

      கொஞ்சம் ஞாபகப்படுத்தி அஞ்சுக்கு சொல்லுங்கோ கோபு அண்ணன், இல்லையெனில் அக்காசுக்கு நீங்கதான் பொறுப்பூஊஊஊஊ:)//

      அச்சச்சோ ..... இந்த அதிரா தன் அய்யம்பேட்டை வேலையை, அதுவும் நம்மிடமே, ஆரம்பிச்சுட்டாளே, அஞ்சு. எனக்கு இப்போ கையும் ஓடலை .... லெக்கும் ஆடலை. :)

      அய்யம்பேட்டை வேலை என்றால் என்ன என்ற விளக்கம், இதோ இந்த என் பதிவினில், பின்னூட்டப்பகுதியில், திரு. அப்பாதுரை ஸார் அவரின் ஓர் கேள்விக்கான என் பதிலாக இடம் பெற்றுள்ளது.

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

      பின்னூட்ட எண்கள்: 21 மற்றும் 22 out of 174

      நீக்கு
  25. //இதன்படி, நல்லவைகளையும், நல்ல நட்புகளையும், வாழ்க்கையின் மிக முக்கியமான சில சம்பவங்களையும், கூடுமான வரையில் நாம் என்றும் மறக்கவே கூடாது. அதே சமயம் மறக்க வேண்டிய சிலவற்றை நாம் மறந்துதான் ஆக வேண்டியதாகவும் உள்ளது. //மிக்க அருமையா சொல்லியிருக்கீங்க ..உண்மையில் பல நேரம் நீங்கள் சொல்வதை யோசித்து பார்த்திருக்கிறேன் ..நிச்சயம் பின்தொடர முயல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin January 29, 2017 at 5:18 AM

      **இதன்படி, நல்லவைகளையும், நல்ல நட்புகளையும், வாழ்க்கையின் மிக முக்கியமான சில சம்பவங்களையும், கூடுமான வரையில் நாம் என்றும் மறக்கவே கூடாது. அதே சமயம் மறக்க வேண்டிய சிலவற்றை நாம் மறந்துதான் ஆக வேண்டியதாகவும் உள்ளது.**

      //மிக்க அருமையா சொல்லியிருக்கீங்க .. உண்மையில் பல நேரம் நீங்கள் சொல்வதை யோசித்து பார்த்திருக்கிறேன் .. நிச்சயம் பின்தொடர முயல்கிறேன்.//

      தாங்களும் அதிராவும் இவ்விடம் வருகை தந்து, பின்னூட்டப்பகுதியினை அதிரடியாகக் கலகலப்பாக்கி மகிழ்வித்துள்ளீர்கள். அனைத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  26. பதில்கள்
    1. D. Chandramouli January 29, 2017 at 5:36 AM

      Dear Sir, WELCOME to you, Sir.

      //Interesting topic. Will look forward to further posts.//

      Thank you very much, Sir. :) - With affection VGK

      நீக்கு
  27. ஸ்வாரஸ்யமான ஆரம்பம். நானும் அவரை ஒரு முறை சந்தித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. திருச்சியில் இச்சமயத்தில் இல்லாததால் சந்திக்க இயலவில்லை.... உங்கள் பதிவுகள் வழியாக நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் January 29, 2017 at 9:46 AM

      வாங்கோ, வெங்கட் ஜி, வணக்கம்.

      //ஸ்வாரஸ்யமான ஆரம்பம். நானும் அவரை ஒரு முறை சந்தித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. திருச்சியில் இச்சமயத்தில் இல்லாததால் சந்திக்க இயலவில்லை.... உங்கள் பதிவுகள் வழியாக நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வெங்கட்ஜி. :)

      நீக்கு
  28. பல்லாண்டுகள் முன்பு அஷ்டாவதானி ஒருவரின் செயலாற்றலை ஒரு நிகழ்ச்சியில் கண்டு மெய்மறந்தேன். இன்றும் சிலர் அக்கலையை விடாமல் காத்துவருவது மகிழ்ச்சிக்குரியது. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chellappa Yagyaswamy January 29, 2017 at 9:52 AM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //பல்லாண்டுகள் முன்பு அஷ்டாவதானி ஒருவரின் செயலாற்றலை ஒரு நிகழ்ச்சியில் கண்டு மெய்மறந்தேன்.//

      ஆமாம் ஸார். பார்வையாளர்களாகிய நம்மை அப்படியே மெய்மறக்க வைத்து விடுகிறார்கள் என்பதே உண்மை.

      //இன்றும் சிலர் அக்கலையை விடாமல் காத்துவருவது மகிழ்ச்சிக்குரியது. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  29. கோபு சார்.. உங்கள் புதிய தொடரைப் படிக்க ஆவலாயிருக்கிறேன்.

    'நன்றல்ல மறப்பது நன்றன்று நன்றி
    அன்றே மறப்பது நன்று' என்றுதானே பெரும்பாலும் எல்லோரும் பின்பற்றுகிறார்கள்.

    நினைவாற்றல் வரமல்ல. மறதிதான் வரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இல்லாட்டா, யாரும் நம்மோடு பேசினால், அவர்கள் எந்த எந்த சமயத்தில் நமக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்பது ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும்.

    ஆரண்ய'நிவாஸ் சார் சொன்னதுபோல், லிங்க்'னால் அவர் நினைவுபடுத்திக்கொண்டாலும், இது ஒரு பெரிய திறமை. நல்ல நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு எங்களுக்கும் அறியத்தருவதற்கு நன்றி.

    மற்ற இடுகைகளையும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் January 29, 2017 at 11:30 AM

      வாங்கோ, வணக்கம்.

      //கோபு சார்.. உங்கள் புதிய தொடரைப் படிக்க ஆவலாயிருக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //'நன்றல்ல மறப்பது நன்றன்று நன்றி அன்றே மறப்பது நன்று' என்றுதானே பெரும்பாலும் எல்லோரும் பின்பற்றுகிறார்கள்.

      நினைவாற்றல் வரமல்ல. மறதிதான் வரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இல்லாட்டா, யாரும் நம்மோடு பேசினால், அவர்கள் எந்த எந்த சமயத்தில் நமக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்பது ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும்.//

      தங்களின் வித்யாசமான கருத்துக்கள் படிக்கவும், சிந்திக்கவும் மிகச் சிறப்பாக உள்ளன. :)

      //ஆரண்ய'நிவாஸ் சார் சொன்னதுபோல், லிங்க்'னால் அவர் நினைவுபடுத்திக்கொண்டாலும், இது ஒரு பெரிய திறமை. நல்ல நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு எங்களுக்கும் அறியத்தருவதற்கு நன்றி. மற்ற இடுகைகளையும் படிக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  30. ஆவல் அதிகரிக்கிறது அடுத்து வருவனவற்றை அறிய! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. January 29, 2017 at 1:54 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆவல் அதிகரிக்கிறது அடுத்து வருவனவற்றை அறிய! நன்றி!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  31. முன்னுரையே மிக சுவாரஸ்யம். அடுத்த பதிவு படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam January 29, 2017 at 6:17 PM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //முன்னுரையே மிக சுவாரஸ்யம்.//

      மிக்க மகிழ்ச்சி மேடம்.

      //அடுத்த பதிவு படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.//

      மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  32. அன்புள்ள V.G.K அவர்களுக்கு, உங்களுடைய இந்த பதிவைப் படித்ததும், உங்கள் புண்ணியத்தில் ஸ்ரீரங்கத்தில், ஆசிரியை ருக்குமணி அம்மாள் இல்லத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பும், அஷ்டாவதனி மாலி என்ற மகாலிங்கம் அவர்கள் வந்து இருந்ததும் நினைவுக்கு வருகின்றன. கூடவே ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள், மாலியை தங்கள் இல்லத்திற்கு அழைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும், அன்று அங்கு வந்து இருந்த வலைப்பதிவர்களையும் வரச் சொல்ல வேண்டும் என்றும் பிரியப்பட்டது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ January 29, 2017 at 10:26 PM

      //அன்புள்ள V.G.K அவர்களுக்கு,//

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //உங்களுடைய இந்த பதிவைப் படித்ததும், உங்கள் புண்ணியத்தில் ஸ்ரீரங்கத்தில், ஆசிரியை ருக்குமணி அம்மாள் இல்லத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பும், அஷ்டாவதனி மாலி என்ற மகாலிங்கம் அவர்கள் வந்து இருந்ததும் நினைவுக்கு வருகின்றன. கூடவே ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள், மாலியை தங்கள் இல்லத்திற்கு அழைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும், அன்று அங்கு வந்து இருந்த வலைப்பதிவர்களையும் வரச் சொல்ல வேண்டும் என்றும் பிரியப்பட்டது நினைவுக்கு வருகிறது.//

      ஆமாம் ஸார் .... நான், நீங்கள், மற்றும் சிலர் அந்தப் பிரபல அஷ்டாவதானியுடன் சேர்ந்து அமர்ந்துள்ள அரிய புகைப்படங்கள் சில இதோ இந்தப் பதிவினில் உள்ளது.

      http://gopu1949.blogspot.in/2015/02/7.html

      மறக்கவே முடியாததோர் அருமையான அழகான நிகழ்ச்சி அது.

      இங்கு தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நினைவலைகளை மீட்டுச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள்.

      நீக்கு
  33. நினைவாற்றல் என்பது ஒரு வரப்பிரசாதம் என்பேன் நான். இது எல்லோருக்கும் கிட்டுவதில்லை.அந்த வகையில் தாங்கள் கொடுத்துவத்தவர் தான். பாராட்டுகள்!
    தாங்கள் கலந்து கொண்ட எண்கவனகர் திரு மகாலிங்கம் அவர்களை சந்தித்த அந்த நிகழ்வு பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி January 30, 2017 at 5:31 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //நினைவாற்றல் என்பது ஒரு வரப்பிரசாதம் என்பேன் நான். இது எல்லோருக்கும் கிட்டுவதில்லை.//

      ஆமாம் ஸார். தாங்கள் சொல்வது மிகச்சரியே.

      //அந்த வகையில் தாங்கள் கொடுத்து வைத்தவர் தான். பாராட்டுகள்! //

      மிக்க மகிழ்ச்சி.

      //தாங்கள் கலந்து கொண்ட எண்கவனகர் திரு மகாலிங்கம் அவர்களை சந்தித்த அந்த நிகழ்வு பற்றி அறிய காத்திருக்கிறேன். //

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  34. >>> மறப்போம் மன்னிப்போம் - என்பது போல மறதி என்பதும் ஓர் வரமே!.. <<<

    மகத்தான வார்த்தைகள்..

    வேலை நெருக்கடியால் சற்றே தாமதம்.. தொடர்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ January 31, 2017 at 9:34 AM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      >>> மறப்போம் மன்னிப்போம் - என்பது போல மறதி என்பதும் ஓர் வரமே!.. <<<

      //மகத்தான வார்த்தைகள்..//

      மிகவும் சந்தோஷம் :)

      //வேலை நெருக்கடியால் சற்றே தாமதம்..//

      அதனால் என்ன? பரவாயில்லை பிரதர்.

      //தொடர்கின்றேன்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  35. மறதியும் நினைவாற்றலும் குறித்து மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் கோபு சார். என்னுடைய மாமனாருக்கு அடுத்த மாதம் 91 நிறைவடையப் போகிறது.. ஆனால் இன்றைக்கும் அவரது நினைவாற்றலை நாங்கள் வியந்து போற்றுகிறோம்.. அவ்வளவு துல்லியமாக அந்நாளைய நினைவுகளை வருடத்தோடு பகிர்ந்துகொள்வார்.. அது ஒரு வரம்தான். எல்லோருக்கும் அவ்வரம் வாய்ப்பதில்லை.. அப்படியொரு வரம் பெற்றவர் குறித்து இப்பதிவின் மூலம் அறிய ஆவல் எழுகிறது. என்னுடைய இணைய வேகம் வெகு சுமார் என்பதால் பல சமயம் தளங்கள் திறப்பதே இல்லை.. முட்டிமோதி இன்று ஓரளவு வர முடிந்ததில் மகிழ்ச்சி. மற்றப் பகுதிகளையும் வாசித்துக் கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி January 31, 2017 at 2:12 PM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //மறதியும் நினைவாற்றலும் குறித்து மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் கோபு சார். //

      சந்தோஷம். :)

      //என்னுடைய மாமனாருக்கு அடுத்த மாதம் 91 நிறைவடையப் போகிறது.. ஆனால் இன்றைக்கும் அவரது நினைவாற்றலை நாங்கள் வியந்து போற்றுகிறோம்.. அவ்வளவு துல்லியமாக அந்நாளைய நினைவுகளை வருடத்தோடு பகிர்ந்துகொள்வார்..//

      தெரியும். அத்துடன் இன்றைக்கும், அருமையான + பழமையான + சுவையான செய்திகளை தன் பதிவுகள் மூலம் தந்துவரும், மூத்த வலைப்பதிவராகவும்கூட உள்ளாரே !!!!! அவர் பதிவுகளை நான் தவறாமல் வாசித்து மகிழ்வதும் வியப்பதும் உண்டு. :)

      //அது ஒரு வரம்தான். எல்லோருக்கும் அவ்வரம் வாய்ப்பதில்லை.. அப்படியொரு வரம் பெற்றவர் குறித்து இப்பதிவின் மூலம் அறிய ஆவல் எழுகிறது.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      >>>>>

      நீக்கு

  36. மறதியும் நினைவாற்றலும் குறித்து மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் கோபு சார். என்னுடைய மாமனாருக்கு அடுத்த மாதம் 91 நிறைவடையப் போகிறது.. ஆனால் இன்றைக்கும் அவரது நினைவாற்றலை நாங்கள் வியந்து போற்றுகிறோம்.. அவ்வளவு துல்லியமாக அந்நாளைய நினைவுகளை வருடத்தோடு பகிர்ந்துகொள்வார்.. அது ஒரு வரம்தான். எல்லோருக்கும் அவ்வரம் வாய்ப்பதில்லை.. அப்படியொரு வரம் பெற்றவர் குறித்து இப்பதிவின் மூலம் அறிய ஆவல் எழுகிறது. என்னுடைய இணைய வேகம் வெகு சுமார் என்பதால் பல சமயம் தளங்கள் திறப்பதே இல்லை.. முட்டிமோதி இன்று ஓரளவு வர முடிந்ததில் மகிழ்ச்சி. மற்றப் பகுதிகளையும் வாசித்துக் கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு >>>>> கீத மஞ்சரி (2)

      //என்னுடைய இணைய வேகம் வெகு சுமார் என்பதால் பல சமயம் தளங்கள் திறப்பதே இல்லை..//

      எனக்கும் இங்கு அதே நிலைதான். BSNL 24 Hours Unlimited Plan என்று பெத்த பெயர் மட்டுமே. No speed at all. Very very Poor Service. Speed Increase செய்யணுமானால் தனியாக பணம் கட்டணுமாம். அதற்கு வெட்டியாக தினமும் ஏராளமாக நினைவூட்டல் குறுந்தகவல்கள் வேறு. பகற்கொள்ளை என்பது இது மட்டுமே என நினைத்துக்கொண்டேன்.

      //முட்டிமோதி இன்று ஓரளவு வர முடிந்ததில் மகிழ்ச்சி.//

      என்னாலும் முட்டி மோதி இன்றுதான் இந்த முதல் பகுதிக்கு வந்துள்ள பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்கவே முடிந்துள்ளது.

      //மற்றப் பகுதிகளையும் வாசித்துக் கருத்திடுகிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  37. கொஞ்ச நாட்களாக நெட் தகறாறு. இப்பதான் வர முடிந்தது. கோபால்ஸார் பதிவென்றால் சுவாரசியம் அதிகமாகவே இருக்கும். நினைவாற்றல் மறதி ஒரு வரமேதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... January 31, 2017 at 5:44 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கொஞ்ச நாட்களாக நெட் தகறாறு. இப்பதான் வர முடிந்தது.//

      அதனால் பரவாயில்லை. நெட் தகராறு என்பது லஞ்சம் மற்றும் ஊழல் போல எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் போலிருக்குது.

      //கோபால்ஸார் பதிவென்றால் சுவாரசியம் அதிகமாகவே இருக்கும்.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. :)

      //நினைவாற்றல் மறதி ஒரு வரமேதான்.//

      அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  38. இதன்படி, நல்லவைகளையும், நல்ல நட்புகளையும், வாழ்க்கையின் மிக முக்கியமான சில சம்பவங்களையும், கூடுமான வரையில் நாம் என்றும் மறக்கவே கூடாது. அதே சமயம் மறக்க வேண்டிய சிலவற்றை நாம் மறந்துதான் ஆக வேண்டியதாகவும் உள்ளது. //
    நல்லாச் சொன்னீங்க சார். அடுத்த பதிவுக்கு தாவுகிறேன். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சேர்வதாக நாங்களும் அறிய இருக்கிறோம். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் February 3, 2017 at 7:45 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      **இதன்படி, நல்லவைகளையும், நல்ல நட்புகளையும், வாழ்க்கையின் மிக முக்கியமான சில சம்பவங்களையும், கூடுமான வரையில் நாம் என்றும் மறக்கவே கூடாது. அதே சமயம் மறக்க வேண்டிய சிலவற்றை நாம் மறந்துதான் ஆக வேண்டியதாகவும் உள்ளது.**

      //நல்லாச் சொன்னீங்க சார்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //அடுத்த பதிவுக்கு தாவுகிறேன்.//

      தயவுசெய்து அப்படியெல்லாம் தாவாதீங்கோ. [>>> இன்னும் தாவினால் போலத் தெரியவில்லை :) <<<] மெதுவாக நேரம் கிடைக்கும்போது + நெட் கிடைக்கும்போது வாங்கோ போதும். :)))))

      //நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சேர்வதாக நாங்களும் அறிய இருக்கிறோம். நன்றி!//

      ஆஹா .... மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், தாவிச் சொல்லியுள்ள அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  39. Seeni January 28, 2017 at 6:55 PM

    //பகிர்வுக்கு நன்றி//

    வாங்கோ, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. அட ஸ்வாரஸ்யமான பதிவு மிஸ் ஆகிப் போனது. உங்கள் முன்னுரையே பலமாக உள்ளது. நினைவாற்றல் எவ்வளவு முக்கியமோ மறதியும் அவ்வளவு முக்கியம். சில வேண்டாத விஷயங்கள் பலவற்றை மறன்டுவிடுவது நல்லது இல்லையா சார்!! தொடர்கிறோம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அட ஸ்வாரஸ்யமான பதிவு மிஸ் ஆகிப் போனது. உங்கள் முன்னுரையே பலமாக உள்ளது.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //நினைவாற்றல் எவ்வளவு முக்கியமோ மறதியும் அவ்வளவு முக்கியம். சில வேண்டாத விஷயங்கள் பலவற்றை மறந்துவிடுவது நல்லது இல்லையா சார்!!//

      ஆம். அழகாக உணர்ந்து சொல்லியுள்ளீர்கள்.

      //தொடர்கிறோம்.. - கீதா//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  41. வணக்கம் கோபு சார். வேலை மிகுதியால் முன் கூட்டியே உங்கள் பதிவுகளுக்கு வர முடியவில்லை. தாமதமாக வருவதற்கு வருந்துகிறேன். அஷ்டாவதனி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனேயொழிய அந்த மாதிரி நிகழ்ச்சிகளை நேரில் கண்டதில்லை. இவர் பற்றியறிய ஆவலாயிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி February 17, 2017 at 8:53 PM

      //வணக்கம் கோபு சார்.//

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //வேலை மிகுதியால் முன் கூட்டியே உங்கள் பதிவுகளுக்கு வர முடியவில்லை. தாமதமாக வருவதற்கு வருந்துகிறேன்.//

      அதனால் பரவாயில்லை மேடம். பல்வேறு காரணங்களால் இதுபோன்ற தாமதமான வருகை நம் எல்லோருக்குமே மிகவும் சகஜம் மட்டுமே.

      //அஷ்டாவதனி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனேயொழிய அந்த மாதிரி நிகழ்ச்சிகளை நேரில் கண்டதில்லை. இவர் பற்றியறிய ஆவலாயிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி சார்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆர்வத்துடனும் ஆவலுடனும் இதுபற்றி மேலும் படித்து அறியப்போவதாகச் சொல்லியிருப்பதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  42. I record with deep regret the sudden demise of Mr. Mahalingam (Ashtavathani) on 03.11.2017 evening. :(

    Face Book message released by his daughter is given below:

    -=-=-=-=-=-

    3rd November 2017, between 6.31 and 6.35 am- my father, Mahalingam Venkatramani, breathed his last. The cancer tried to steal his mind through its power to give him pain. He had the last laugh- for he suffered no pain during those final minutes. He was at home.. with me and my mother holding him as he sat in a chair. My mother's prayers and my calling him - "Appa" ( father) were the last words he heard.. he was at home.. it happened just the way he wanted it to happen.. at home.. with his family.. I thank all those who supported us through these days.. - Matangi Mawley

    -=-=-=-=-=-

    பதிலளிநீக்கு