என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 21 மே, 2017

'நாலடி கோபுரங்கள்’ - மின்னூல் - மதிப்புரை


மின்னூல் ஆசிரியர்

திருமதி.

ஜெயஸ்ரீ

அவர்கள்

 


 


மின்னூல்கள் மூலம்
இவரைப்பற்றி நாம் அறிவது

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.




என் பார்வையில் 
’நாலடி கோபுரங்கள்’ 
மின்னூல்

மொத்தம் 82 பக்கங்கள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு நூலாகிய இதில் மொத்தம் நான்கு சிறுகதைகள் உள்ளன. அவற்றின் தலைப்புகள்:

(1) 11-12-13
(2) தாய்மையின் தாகம்
(3) நாலடி கோபுரங்கள்
(4) கண்கள் மாற்றும்

ஒவ்வொரு கதை பற்றியும், சுருக்கமாக ஒருசில வரிகள் மட்டும் இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.



(1) 11-12-13

கதையின் புதுமையான தலைப்பு: 11-12-13 

மிகவும் அருமையான விறுவிறுப்பான கதை. அசத்தலான உரையாடல்கள். இந்தக் கதையில் நான் எதைப் பாராட்டிச் சொல்வது, எதைப் பாராட்டாமல் விடுவது என்பதுதான் எனக்குள்ள மாபெரும் சிக்கலாக உள்ளது. ஒவ்வொரு சம்பவத்தையும் அவ்வளவு அழகாக நேரேட் செய்து எழுதியுள்ளார்கள்.

மதுரைப் பக்கத்து ஒரு கிராமத்து ஏழைப் பெண். பெயர் உமா. பிரஸவத்திற்காக மதுரை டவுனில் உள்ள புகுந்த வீட்டிலிருந்து, தன் பிறந்த வீட்டுக்கு (கிராமத்திற்கு) வந்திருக்கிறாள். அவளுக்கு இது தலைப்பிரசவம். படிப்பறிவு அதிகம் இல்லாத தாய், தந்தை. பட்டணத்தில் சினிமாவில் சண்டைக்காட்சிகள் சிலவற்றில் டூப் போட்டு நடித்துவரும் ஓர் தம்பி. எப்போதாவது சில சமயம் மட்டும் இங்கு தன் வீட்டுக்கு வருவான். 

தனக்கு நல்ல படியாக பிரஸவம் ஆகுமா? தாயும் சேயும் காப்பாற்றப்படுவோமா? பிறக்கப்போவது தன் மாமியார் சொல்லியனுப்பியுள்ளபடி ஆண் குழந்தையாக மட்டுமே இருக்குமா? அவ்வாறு இல்லாது போனால் 20 பவுன் நகையல்லவா கொண்டுவரணும்ன்னு அந்த மாமியார் சொல்லி அனுப்பியிருக்கிறாள், அதைத்தன் ஏழைத்தாயினால் கொடுக்க முடியுமா? என்ற பலவித கவலைகள் உமா என்ற அந்த வெள்ளந்தியான பெண்ணுக்கு. 

அருகில் உள்ள டவுனில் பிரபலமாக உள்ள டாக்டரம்மாவைத் தன் தாயுடன் சந்திக்கச் செல்கிறாள். தன் கவலைகள் அத்தனையும் ஒவ்வொன்றாக அந்த டாக்டர் அம்மாவிடமும், தன் அம்மாவிடமும் அழுது புலம்புகிறாள். அந்தப்பெண்ணின் தவிப்புக்களை ஜெயஸ்ரீ மேடம் தன் எழுத்துக்களில் வடித்துள்ளது மிகவும் அருமையோ அருமையாக உள்ளது. 

டாக்டரம்மா அவளுக்கு நம்பிக்கை அளிக்கிறாள். ”எல்லாம் சரியாகத் தான் உள்ளது. இன்னும் நான்கு நாட்களில் அதாவது வரும்  11.12.13 அன்று நல்லபடியாக நார்மலாகவே பிரஸவம் நிகழும். 10-ம் தேதியே இங்கு வந்து அட்மிட் ஆகிவிடு.  உன் கூடவே நான் இருப்பேன். எதற்கும் நீ கவலைப்படாதே” என்கிறாள்.  

வீடு திரும்பும் வரை தாயுக்கும் மகளுக்கும் நடக்கும் உரையாடல்கள் நூலில் படித்தால் மட்டுமே ருசிக்கும். நடுவில் அவர்கள் இருவரும் இளநீர் குடிக்கும் இடமும், இளநீர் வியாபாரியும் இவர்களும் பேசும் பேச்சுக்களும் இளநீர் போன்ற நல்லதொரு ருசியாக உள்ளன. 


மகளுக்கும் தாய்க்கும் நடக்கும் ஓர் சின்ன உரையாடல்:

”எம்மா....... இந்தக் கொளந்த பொண்ணாப் பொறந்துடுமா?”

”ஏண்டி...... இந்த இளுவு இளுக்குறே... நீ எனக்கு சொகப்பிரெசவம்... நீ பொட்டை தானே முதல்ல....  உனக்கு என்ன வந்துச்சு..? எதுவா இருந்தா என்ன களுத, கை காலு நல்லா இருந்தா அதுவே போதும்”.

”இல்ல..... பொம்புளப் புள்ள பொறந்தா, பொறந்த வூட்டுலேந்து வரக்கொள்ள ஒரு இருபது பவுனு சேர்த்து எடுத்தாடின்னு என் மாமியா சொல்லிச்சு. அதான் ஒரே வெசனாமாருக்கு. நீ இருக்குற இருப்புல, பாப்பாவாப் பொறந்துச்சுன்னு வெய்யி, இருவது பவுனுக்கு எங்குட்டுப் போறது?”

”எடு வெளக்கமாத்த. சொமக்கறது நீயு.. அந்த எடுபட்ட சிறுக்கிக்கு இருபது பவுனு கேக்குதோ? அங்கனயே நீ இத்தச் சொல்லியிருக்கலாமில்ல.. நாலு வார்த்தை நாக்கப் புடுங்றாப்போல கேட்டு வெச்சிட்டு வந்திருப்பனே. அவ கிடக்கா விடு. அதுக்கா இம்புட்டு ரோசனை. புள்ளயப்பெத்து ஆறு மாசம் வீட்டோட செவனேண்டு இரு சொல்றேன். பெறவு பாரு தன்னால வளிக்கு வருவாப்பல”.


  
அதன்பின் பஸ் பிடிக்கக் காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஓர் சைக்கிள் ரிக்‌ஷாவில் அவர்கள் இருவரும் ஏற நேரிடுகிறது. சைக்கிள் ரிக்‌ஷாக்காரருக்கும் இவர்களுக்கும் நடக்கும் உரையாடல் மிகவும் நல்லதொரு தமாஷ் மட்டுமல்லாமல், மேலும் நாம் படித்து அறியப்போகும் கதைக்கு மிக நல்லதொரு அச்சாரமாக அமைந்துள்ளது.  

தட்டுத்தடுமாறி இவர்கள் ஒருவழியாக தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தால்,  சினிமாவில் க்ரூப் டான்ஸ் ஆடும் க்ரேஸ் என்ற எவளோ ஒருத்தி அங்கு இவர்கள் வீட்டுக்குள் அமர்ந்திருக்கிறாள். 

யார் என்று கேட்டால் .... ”சினிமாவில் டூப் போடும் ஸ்டண்ட் மாஸ்டரான உங்கள் பிள்ளை ‘குஸ்தி குமாரின் காதலி’ நான். எனக்கு வரும் 11-12-13 அன்று பிறந்த நாள். அன்றைக்கே நானும் குமாரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்துள்ளோம். அவர்தான் என்னை இங்கு கூட்டியாந்தார் .... இப்போது எனக்கு டிஃபன் வாங்கியார வெளியே போயிருக்கிறார்” என்கிறாள்.

”அவன் டிஃபன் வாங்கி வருவதற்குள் இங்கிருந்து நீ மரியாதையாக ஓடிப்போய்விடு” என குஸ்தி-குமாரின் அம்மா அவளை மிரட்டுகிறாள். ”அவர் வந்து அவ்வாறு சொல்லிவிட்டால், நான் போய்விடுகிறேன்” என்கிறாள், சென்னையிலிருந்து மதுரைப் பக்கத்திற்கு வந்துள்ள பெண்ணான அந்த கிரேஸ். 

இதற்கிடையில் வெளியே சென்ற குஸ்தி-குமார் டிஃபன் பொட்டலத்துடன் வீட்டுக்குள் நுழைய வீட்டிலுள்ள ஒருவருக்கொருவர் குஸ்தி ஏற்பட்டு விடுகிறது. கோபத்தில் குஸ்தி குமார் தன் வயதான தாயாரையும், வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் அக்கா உமாவையும் அடித்து நெற்றியில் காயப்படுத்தி விடுகிறான். 

இதைப் பார்த்து அரண்டுபோய், அவனின் சுயரூபம் தெரிந்து, அவன் மேல் வெறுப்புக்கொண்ட, கிரேஸ் அவசரம் அவசரமாக கடிதம் ஒன்றை எழுதி அங்கு வைத்துவிட்டு, அந்த அவர்களின் வீட்டைவிட்டுத் தப்பி ஆட்டோவில் ஏறி, ஆட்டோக்காரருக்கு ரூ. 300 பேசி, சென்னை பஸ்ஸை அவசரமாகப் பிடிக்க மாட்டுத்தாவணிக்குப் பறக்கிறாள். நடுவில் ஆட்டோக்காரர் தயவால், ரோட்டுக்கடையொன்றில் நான்கு இட்லிகளைப் பார்ஸலாக வாங்கி அவசரமாக தன் வயிற்றுப்பசிக்கும் சாப்பிட்டுக்குக் கொள்கிறாள்.  

இப்படியொரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தப்பிச்சென்று விட்டாளே என ஆத்திரம் அடைகிறான் குஸ்தி குமார்.  இதனால் மிகவும் ஏமாற்றமடைந்த குமார், கிரேஸ் என்ற அந்தப்பெண்ணை எப்படியாவது மதுரைக்குள் மடக்கிவிட திட்டமிட்டு, அவசரம் அவசரமாக ஊர் பூராவும் தேடிக்கொண்டு செல்கிறான். 

11-12-2013 நெருங்கி விடுகிறது. அன்று அதே ஆஸ்பத்தரியில் பெட் நம்பர் 11-இல் ஒருவரும், 12-இல் ஒருவரும், 13-இல் ஒருவரும் அட்மிட் ஆகி தீவிர சிகிச்சை பெறுகிறார்கள். யார் யார் அட்மிட் ஆனார்கள், எதற்காக அட்மிட் ஆகிறார்கள். யார் யாருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உமாவுக்குக் குழந்தை பிறந்ததா? அது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? குமார்-கிரேஸ் லவ் மேரேஜ் என்ன ஆச்சு? எல்லாவற்றிற்கும் விடைகள் இந்த மின்னூலில் உள்ளன. அவசியம் படித்துப் பாருங்கள்.


(2) தாய்மையின் தாகம்


இது ஒரு மிகச்சிறப்பான படைப்பாக உள்ளது. இதில் வரும் கதாநாயகியான உமா வேலைக்குச்சென்று தனிமையில் தங்கி வாழும் ஓர் முதிர்க்கன்னியாக இருக்கிறாள்.

உமாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாள். அக்கம் பக்கத்துக்கு குழந்தைகள் அனைவருமே உமா ஆன்டியுடன் மட்டுமே தங்களின் பெரும் பொழுதினை விளையாடியும், பாடங்கள் படித்தும், அவளிடம் பாடங்களில் சந்தேகங்கள் கேட்டுக்கொண்டும், அவள் உதவியால் வீட்டுப்பாடங்களை முடித்தும் தங்களின் வகுப்புக்களில் கூடுதலாக மார்க் வாங்கி வருகிறார்கள்.  

’பெற்றால் தான் பிள்ளையா?’ என நினைத்து சந்தோஷமாக அந்தக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறாள், உமா. இருப்பினும் தன்னை ’அம்மா’ என்று ஏதேனும் ஒரு குழந்தையாவது அழைக்காதா என்ற நியாயமான ஏக்கமும் மனதில் உள்ளது அவளுக்கு.

ஒருநாள் ஏதோவொரு சிறு பிரச்சனை ஏற்பட்டதில், அனைத்துக் குழந்தைகளின் தாய்மார்களும், தங்கள் குழந்தையை இனி அந்த உமா ஆன்டி வீட்டுக்குச் செல்லக்கூடாது என தடை போட்டு, கண்டித்துக் கட்டுப்படுத்தி விடுகிறார்கள். இதனால் உமாவுக்கு மட்டுமல்லாது அந்தக் குழந்தைகளுக்கும் தவிப்பு ஏற்பட்டு விடுகிறது. பெற்றோர்களும் அடுத்த ஓரிரு நாட்களிலேயே, உமா ஆன்டியைப் பார்க்காததால் ஏற்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளின் ஏக்கங்களையும், மனவாட்டங்களையும் பார்த்து சகிக்க முடியாமல் தவித்துப் போய் விடுகின்றனர்.

இதன் நடுவே வெளியூரில் உள்ள உமாவின் அண்ணனும் அண்ணியும் உமாவுக்குத் திருமணம் முடிக்க நினைக்கிறார்கள். ஊருக்கு உடனே புறப்பட்டு வரச்சொல்லுகிறார்கள். 

ஏற்கனவே பத்து வயதில் ஓர் பெண் குழந்தையுள்ள, மனைவியை இழந்து ஆறு வருடங்கள் ஆன ஒருவருக்கு இரண்டாம் தாராமாக வாழ்க்கைப்பட வேண்டி உமாவை அவளின் அண்ணி வற்புருத்திக் கேட்டுக்கொள்கிறாள்.  
மிகவும் விறுப்பான இந்தக் கதையில் மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை இந்த மின்னூலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கோ.



(3) நாலடி கோபுரங்கள்

இதுவரை நான் படித்துள்ள கதைகளிலேயே ஒரு மிக அருமையான கதையாக இதனை நினைத்து நான் எனக்குள் மகிழ்ந்து கொண்டேன். மிகவும் உன்னதமான இந்தக்கதையின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் எத்தனை எத்தனையோ ஆழமாக கருத்துக்களை எடுத்துச் சொல்லி அசத்தியுள்ளார்கள் இந்தக்கதாசிரியர்! 

கதைக்கான தலைப்பு மிகப்பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த உலகில் பிறக்கும் மனிதர்கள் எல்லோருமே உருவத்திலும், உயரத்திலும், நிறத்திலும், குணத்திலும் வேறு பட்டவர்களாகவே உள்ளனர். 

குண்டு-ஒல்லி-நடுத்தரம்; உயரம்-குட்டை-நடுத்தரம்; சிகப்பு-கருப்பு-மாநிறம்; அழகானவர்-அழகற்றவர்; மனத்தாலும் குணத்தாலும் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உயரத்தில் சுமார் மூன்றரை அடிக்கு மேல் வளராத, ’ராஜா’ என சுருக்கமாக அழைக்கப்படும் ’ராஜராஜன்’ என்ற பெயருள்ள ஒருவரின் சோகக் கதையான இது படிக்கப்படிக்க என் நெஞ்சைப் பிழிந்து விட்டது. அவர் பிறரிடம் கேட்ட ஏச்சுக்களும், பேச்சுக்களும், அவர் தன் வாழ்க்கையில் பட்ட அவமானங்களும் ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்துக்களில் படித்த நான் நிஜமாலும் ஆங்காங்கே கண்ணீர் விட்டு அழுதே விட்டேன். மிக உன்னதமான எழுத்தாளரான ஜெயஸ்ரீ அவர்களின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொள்ளணும் போலத் தோன்றியது.  
பொதுவாகப் பிறரைப்போல நார்மலாக இல்லாமல், இவ்வாறு ஒரு சின்ன குறையுடன் உயரம் குறைந்து பிறந்துவிட்ட இதில், இவருடைய குறையாக நாம் எதைச் சொல்லமுடியும்? இவருக்கும் பிறரைப் போன்ற நல்ல மனஸோ, ஆசாபாசங்களோ, உணர்வுகளோ இருக்கத்தானே இருக்கும். 

இவர் பிறக்கக் காரணமாக இருந்த இவரின் பெற்றோர்களுக்கே ஒரு ஸ்டேஜில் இவர் மேல் வெறுப்பு ஏற்பட்டு, அதனால் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுச் சண்டைகளால், இவரின் இந்த அதிசயப் பிறப்பினை மட்டுமே காரணமாகக் காட்டி, அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிடுவது கொடுமையின் உச்சக்கட்டமாக உள்ளது.  

’காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்று சொல்வார்கள் இந்த மனிதர்கள். அது காக்கைகளுக்கு மட்டுமே பொருந்தி, மனிதர்களுக்குப் பொருந்தாதோ என்னவோ. 

இதில் .. கூடப்படித்த மாணவர்களின் கிண்டல் கேலிகளையோ, தெருவில் செல்லும் பிற பொது ஜனங்களின் ஏச்சு பேச்சுக்களையோ, அலுவலக சக ஊழியர்களின் அலட்சியங்களையோ இங்கு என்னால் ஒவ்வொன்றாகச் சொல்லில் எடுத்துரைக்க முடியாமல் உள்ளன. கதாசிரியரின் ஒவ்வொரு சொற்களும் ஈட்டியாகப் பாய்ந்து,  யாருக்குமே இதுபோன்றதொரு கஷ்டம் வரக்கூடாது என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது. 

இந்தக்கதையினில் ராஜாவுக்கு,  அவன் வாழ்க்கையில் ஓர் தன்னம்பிக்கை அளித்து, அவனின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, அவனை வாழ்க்கையில் முன்னேறச்செய்ய உதவியுள்ள ஒரே கதாபாத்திரம் அவனுடன் பள்ளியில் படித்த மாணவி ’ரேணுகா’ என்பவள் மட்டுமே.

ரேணுகாவுக்கும் நம் ராஜாவுக்கும் நிகழ்ந்த ஓர் உரையாடலை மட்டும் இங்கு நான் அப்படியே உங்கள் பார்வைக்குக் கொடுக்க விரும்புகிறேன்.


அம்மாவும் அப்பாவும் இணைந்ததற்கு ஆதாரமா நான் வந்து பொறந்தேன் .... அதே நான் இப்படி வந்து பொறந்ததால் அவா ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படிப் பிரிஞ்சு போயிட்டாளே ....  என்னோட துரதிஷ்டத்தை நினைச்சு நினைச்சு என் மனசும் உடல் போலக் குறுகிப்போச்சு.

பள்ளியில் ஒருநாள் இதையே நினைச்சுக்கிட்டு நான் தனியா அழுதுண்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். கூடப்படிக்கும் ரேணுகாதான் என் அருகில் வந்து............ 

“ஏண்டா ராஜா அழறே? என்ன விஷயம்? பரிட்சையில் ஃபெயில் ஆயிட்டயா என்ன?

“இல்லை... நான் அதுக்கு அழலை”

”பின்ன.... ஏன் அழற ராஜா?”

”எனக்குச் சிரிக்கத் தெரியலையே... சிரிக்க முடியலையே.... என்ன செய்வேன், ரேணுகா. என்னைப் பார்த்தால் எல்லோரும் சிரிக்கறா.... என்னால் சிரிக்க வைக்க மட்டும்தான் முடிகிறது;

வீட்டில்தான் என்மீது அன்பு செலுத்த யாருமே இல்லைன்னு நினைச்சா இங்க க்ளாஸிலேகூட என்னைப் பார்த்தாலே எல்லோரும் கேலி செய்யறா. அப்பாவும் எங்களை விட்டுட்டு வீட்டை விட்டே எங்கேயோ போயிட்டா. இப்போ நான் வாழறதே வீண்;

இன்னிக்கு சயன்ஸ் பீரியடுலே பசங்க ’இவன் தான் ஹூமன் ஹைப்ரீட்’ அல்லது ’மனித பொன்சாய்’ எனச் சொல்லிச் சிரிச்சப்போ... அப்படியே ஏதாவது கடல்ல விழுந்து செத்துப் போயிடலாமான்னு தோன்றது ரேணுகா.... அப்படியே நான் விழுந்து செத்தாலும் என்னைப் பிணமா பார்க்கிறவாகூடத் தொட பயந்துண்டு தொட மாட்டாளேன்னு கவலையா இருக்கு.

”என்ன ராஜா நீ.... இப்படி அசட்டுப் பிசட்டுன்னு பேசாதே. பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம்ன்னு என் அம்மா சொல்லுவா. ஆனால் எந்த ஒரு உபயோகமும் இல்லாத யாருமே பிறப்பதும் இல்லையாம்.  சிறு துரும்பும் பல்குத்த உதவும்ன்னு கேள்விப் பட்டிருக்க தானே....? உயரமானவரோட பல் என்பதால் யாராவது கத்தி, கபடா, கடப்பாறையைப் பல் குத்த உபயோகிப்பாரா?  நீயே நினைச்சுப்பாரேன். அதுமாதிரிதான் நீயும்... ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பா நடக்கும்.... உயிர் வாழ உயரம் மட்டுமே தகுதி இல்லைன்னு நீ புரிஞ்சுக்கோ”.

”நீ பேசும்போது கேட்க நன்னாத்தான் இருக்கு. நீ மட்டும் என்மேல் இருக்கும் அன்பில் என் குறை தெரியாம பேசற .... ரேணுகா.”

”உனக்கு என்ன குறை? உயரம் மட்டும் தானே. அதெல்லாம் ஒருகுறையே இல்லை. உன்னையாச்சும் எல்லோரும் குள்ளன்னு மட்டும்தான் சொல்றா. ஆனா இந்த உலகத்திலே எல்லோரும் எப்படியெல்லாம் இருக்கா தெரியுமா? எல்லாத்தையும் விடக் கொடுமை என்னவா இருக்குன்னு நினைக்கிறே நீ....?

போன வாரம் என் அம்மாவோடு என் மாமாவாத்துக்குப் போயிட்டு திரும்பி வந்துண்டு இருந்தோம். அப்போ எங்க கம்பார்ட்மெண்ட்டுக்குள் நாலு பேர் பிச்சை கேட்டுக்கொண்டு வந்தாங்க. எங்கம்மா சொன்னாங்க... அவங்க திருநங்கைகளாம். அப்படி இருக்கவங்களை வீட்டை விட்டுத் துரத்திப்புடுவாங்களாம். அவங்க இப்படித்தான் கூட்டம்கூட்டமா கைத்தட்டி எல்லோர்கிட்டயும் கையேந்தி ஜீவனம் நடத்துவாங்களாம். எவ்வளவு கஷ்டம் இல்லையா? ஒரு பெண் தன்னைப் பெண் என்று சொல்லமுடியாத நிலை. ஒரு ஆண் தன்னை ஆண் என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலை. இதைவிட நீ தேவலைடா ராஜா. நீயாவது உன் குறையை வாய்விட்டுச் சொல்லிடறே ... பேச முடியாதவா எல்லாம் என்ன பண்ணுவா ... யோசிச்சியா?

நம்ம இங்க்லீஷ் டீச்சர்கூட அன்னிக்குச் சொன்னாளே .... ’காலில் செருப்பு இல்லையேன்னு கவலைப்படுபவன்... ரெண்டு காலுமே இல்லாதவனைப் பார்க்கும் வரையில்தான் அப்படிக் கவலைப்பட முடியும்ன்னு’ .... நீயும் அவங்க சொன்னதைக் கேட்டல்ல.

”ம்ம்... கேட்டேன். நம்ம இங்க்லீஷ் டீச்சர் ரொம்பவும் நல்லவர். என்னிடம் ரொம்ப அன்பா பேசுவார்”                                    

ராஜாவுக்கு எதுவோ கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. 

”ரேணுகா நீ சொல்வது ஒரு விதத்தில் சரிதான். இருந்தாலும் எனக்குள் இருக்கும் பையனைப்பற்றி இவர்கள் ஏன் யாரும் புரிந்துகொள்வது இல்லை. எனக்கு நேர்ந்த இந்தச் சின்ன மாற்றம் யாருக்கு வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கும் இல்லையா? இது எனக்கு மட்டும் விதிச்ச விதியா என்ன?

”ராஜா.... அவர்கள் உன் வெளி உருவத்தை மட்டும்தான் பார்த்து கேலியும் கிண்டலும் செய்ய முடியும்.  அதுவே நீ நன்கு படித்து உன்னை ஒரு நிலைக்கு உயர்த்திக்கொண்டால், அவர்களுக்கு உன் இந்த உயரம் இணையாகி கண்ணுக்கு உன் குறையே தெரியாது. உன் உயரமே மறந்து மறைந்து போகுமடா ... நீ வேணாப் பாரேன்.  என்னிக்காச்சும் நான் சொன்னதை நீ நினைத்துப் பார்க்கும் காலம் வரும்”.

அதற்குள் பள்ளிக்கூட மணி அடிக்க இருவரும் கலைந்து போனோம். இன்றும் அது என் நினைவுக்குள் இருக்குது.

ரேணுகா அன்று என் பதினைந்து வயதில், என் சின்ன மனதில், அன்போடு விதைத்த சின்ன நம்பிக்கை விதைதான்.. இன்று வரை எனக்குள் மரமாக வளர்ந்து என்னை ஒரு உயரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இல்லாவிட்டால் நானும் இந்த சமூகத்தின் சாட்டைப் பார்வையிலிருந்து தப்பிக்க எனக்குள் நானே ஒரு முகமூடி போட்டுக்கொண்டு, கூடாரத்திற்குள் எல்லோரும் சுற்றிலும் கைக்கொட்டிச் சிரிக்க, நான் ஒரு ஓரமாக பல்டி அடித்துக்கொண்டு, பந்து விளையாடிக்கொண்டும், தொப்பியைத்தூக்கி எறிந்துகொண்டும் இருந்திருப்பேன். இப்போ நாலடி இருக்கும் எனக்குள் ஒரு நாலடியாரே குடியிருக்கிறார்.  



கதையின் இறுதிப் பகுதியில் ராஜா மேலாளராக உள்ள அந்த அலுவலகத்தில் ஓர் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. யாராலும் துணிந்து செய்ய முடியாத ஒரு செயலை, ஆபத்பாந்தவனாக,  ராஜாவால் மட்டுமே செய்ய இயல்கிறது. அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் சுரக்கிறது. 

ராஜாவின் பிறவிப்பயன் என்னவென்பதே ராஜாவுக்கும், மற்றவர்களுக்கும் அன்றைக்கு மட்டுமே தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அவரை இதுவரை கிண்டலும் கேலியும் செய்து வந்தவர்கள் வெட்கித் தலை குனிய நேரிடுகிறது. 

இதுவரை நாலடி கோபுரமாகவே பார்த்துப்பழகியவர்கள் கண்களுக்கு, இன்று மனிதாபிமானம் மிக்க ராஜா நானூறு அடி கோபுரமாக, மிக உயர்ந்து நிற்கிறார். 

அனைவரும் அவசியமாக ரஸித்துப் படிக்க வேண்டியதோர் அருமையான கதை இது. 


(4) கண்கள் மாற்றும்

அறுபத்து ஐந்து வயதான மாமியார். இதுவரை குடும்பத்துக்கு உதவியாக நல்ல உழைப்பாளியாக இருந்தவள் மட்டுமே. இப்போது கொஞ்சம் நாட்களாக கண்களில் ஏதோ பிரச்சனை. கண்களின் பார்வை  மங்கி வருகின்றன.  

ஊசி குத்துவது போன்ற தன் பேச்சுகளாலேயே மனதை நோகடிக்கும் ஓர் பொல்லாத மருமகள். இவளை மருமகளாகக் கொண்டுவர தான் பட்ட பாட்டையும், தன் மகனை சம்மதிக்க வைத்ததையும் நினைத்துப் பார்த்து மருகுகிறாள். கண் டாக்டரிடம்கூட கூட்டிச் செல்ல மறுக்கும் மருமகள். எல்லாம் வெளியூர் போயிருக்கும் உங்கள் மகன் இன்னும் இரண்டு நாட்களில் வருவார் .... அவர் கூட்டிட்டுப்போவார் என்கிறாள் வெகு அலட்சியமாக. அவன் கூட்டிக்கிட்டுப்போவான் என்று சொல்ல நீ யார்? என மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள், அந்த மாமியார்.

வயதான அந்தத்தாயின் மகனும், மற்ற எல்லா ஆண்களையும் போலத் தன் மனைவிக்குப் பரிந்தே போக வேண்டிய நிலையாகத்தான் உள்ளது.


இடையில் நிகழும் ஒருசில சுவாரஸ்யமான காட்சிகளும் உரையாடல்கள்களும்:

”கீதா, இன்னைக்கு என்ன தேதி…? ”

”ஏன் உங்களுக்கு முதலமைச்சர் கிட்டே ஏதாவது மீட்டிங் கீட்டிங் இருக்கா என்ன..? தேதி பார்த்துண்டு என்னத்தைக் கிழிக்கப் போறேள் பெரிசா? என்றாள் …” அவள் குரலில் தான் ஏகப்பட்ட நையாண்டித்தனம்.

”இந்த மாதம் பத்தாம் தேதி இங்கே பக்கத்து தெருவிலே ஏதோ ஒரு அறக்கட்டளையும் அரவிந்த் கண் மருத்துவமனையும் சேர்ந்து ‘இலவசக் கண் பரிசோதனை முகாம்’ போடறாளாம். எதிர் வீட்டு கோமதி நேற்று தான் சொன்னா.. ”என்ன மாமி உங்களுக்கு இப்போல்லாம் சரியா கண் தெரியலையா? எல்லாத்தையும் தடவி எடுக்கறேளேன்னு சொல்லிட்டு, அந்த முகாமுக்கு போங்க, கண் புரை இருந்தா அறுவை சிகிச்சை இலவசமாகவே பண்ணுவாங்கன்னு. அதான் தேதியைக் கேட்டேன் தெரிஞ்சுக்கலாமேன்னு தான்”.

மாட்டுப்பெண் கீதா அவள் பெண் ஹரிணிக்கு தலை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்டதும், எதிராளாத்து கோமதியா..? அவள் எதுக்கு இங்கே வந்தாள் ? அவகிட்டே நீங்க என்ன வம்பு பேசினேள்? இங்கே இருந்துண்டு அங்கே எங்களைப் பத்தி குற்றம் சொல்லிக் கொடுத்திருப்பேள், வேறென்ன, திங்கறது ஒரு இடம், கோள் சொல்றது இன்னொரு இடமாகும்” என்றபடி ‘நேராக் காட்டேண்டி’ என்று சொல்லி ஹரிணியின் தலையில் ஒரு இடி இடித்தாள் கீதா. 

-oOo-

வீடு பூரா பூரியும் கிழங்கு மசாலாவும் மணத்துக் கொட்ட, ஆசையாய் காத்திருக்கிறாள் மாமியார்.  ஆனால் அவளுக்கு மட்டும் கேழ்வரகு கஞ்சி தான் வருகிறது.


சபலத்தில் வாய் விட்டு கேட்டும்கூட, ”உங்களுக்கு சக்கரை இருக்கோன்னோ… பொறிச்சது, வறுத்தது இதெல்லாம் உடம்புக்கு ஆகாது… ஆசைக்கு ஒண்ணு ஆஸ்த்திக்கு ஒன்ணுன்னெல்லாம் இனிமேல் நாக்குக்காக வாழக்கூடாதாக்கும்” என்று நீட்டி முழக்கி கூனிக் குறுக வைக்கிறாள் கீதா என்ற அந்த ராக்ஷஸி 

-oOo-

”அவளைப் பொறுத்தவரை பையனைக் கல்யாணம் பண்ணிக்க கொடுத்துவிட்டால், அத்தோடு கடமை முடிந்து போச்சுன்னு விலகிண்டுடணுமாம். இல்லாவிட்டால் ராமா கிருஷ்ணான்னு ஒரு ஓரத்துல கிடைக்கணுமாம்;


அதெப்படி முடியும்? எத்தனை வருஷங்கள்… ஓடியாடிய உடம்பு. மனசுலயும், உடம்புலயும் இன்னும் தெம்பும், திடமும் இருக்கும் போது, எப்படி ஓரமா ஒதுங்கி வாழ முடியும்? நானும் நாலெழுத்து படிச்சவள் தான். சம்பாதிச்சவள் தான். முதுமை இப்போ தான் வந்தது. அந்தக் காலத்துல நான் பண்ணின வேலைகளிலே கால் பங்கு கூட இப்போ இவள் பண்றது கிடையாது. அதுக்குள்ளே போய் ரேழியில கிடன்னு சொன்னால் எப்படி?

இப்போது கொஞ்சம் கண் பார்வை மங்கியுள்ளதே தவிர, மூக்கோ, நாக்கோ, காதோ இன்னும் செயல்பட்டுக்கொண்டுதானே உள்ளது” என நினைத்துக்கொள்கிறாள் மாமியார். 

”கணவன் என்பவன் ஒரு பெண்ணுக்கு ஒரு இரும்பு வேலி மாதிரி. அவர் இருக்கும் வரை இப்படியெல்லாம் ஒரு நாளாவது பேசியிருப்பாளா இவள்… அவர் போனதுக்கப்பறம் தான் இப்படி என்கிட்ட வாலாட்டறாள். வெங்கிட்டுக்கு பார்த்துப் பார்த்து தலையில் கணம், மடியில் கணம், தோளில் கனம் பார்க்காமல், அவனையும் சம்மதிக்க வைச்சு இந்தக் கல்யாணத்தை முடிக்க நான் பட்ட பாடு நேக்குத் தான் தெரியும்” என மனதுக்குள் புலம்புகிறாள் அந்த மாமியார்.

-oOo-

வாசலில் காய்கறிக்காரியிடம் கீதா பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

”ஒரே விலை…ஆறு பூ ஐம்பது ரூபாய்…..” அவளது கறாரான குரலுக்கு எதிர் பேசாது…

”சரி எடுத்துக்க தாயீ … பூ நல்ல வெளஞ்சது தாயி ... பார்த்த்தியா எம்புட்டு பெரிசா இருக்குண்டு... அய்யர் ஊட்டம்மா எடுக்கும்னு தான் நானும் அம்புட்டையும் அள்ளியாந்தேன். வெலை கட்டாது தான்... என்ன செய்யிறது? தலை பாரமாச்சும் குறையுமே… வெய்யில் கொஞ்சமாவா அடிக்குது... சரி பணத்தை கொடு… இன்னும் நாலு வீடு போகணும்... என்றவள் பாட்டிம்மா இல்லியா?” என்கிறாள்.


”பாட்டிம்மா வாங்கினா ஒரு பூ தான் வாங்குவா….? இந்தாப் பணம் வாங்கிட்டு நடையைக் கட்டு….” என்றவள் கை கொள்ளாத வாழைப்பூக்களை கொண்டு வரும்போதே ”பாட்டிம்மா இல்லியா தோட்டிம்மா இல்லையான்னு ஒரு கேள்வி, என்னமோ இவளோட அவ கூட ஒட்டிட்டு பொறந்தா மாதிரி” ன்னு சொல்லிக் கொண்டே வந்து டைனிங் டேபிள் மேல் பூக்களை தொப்பென்று வைக்கிறாள் ... மருமகள் கீதா.

”இதோ.. இன்னைக்கு வாழைப்பூ உசிலி பண்ணிட்டு, வாழைப்பூ தொக்கு பண்ணிடலாம்னு தான் இத்தனை வாங்கினேன்… கொஞ்சம் ஆய்ஞ்சு வெச்சு பொடிஸா நறுக்கித் தாங்கோ…” என்றவள் கூடவே கத்தி ஒன்றையும் கொண்டுவந்து அருகில் வைத்தபடி சொல்லிவிட்டுப் போகிறாள்.



”போச்சுடா….. என் அரை குறை கண்ணை வெச்சுண்டு வாழைப்பூ நறுக்குவதாவது?” முடியாதுன்னு சொல்லவும் மனசு வராது.




கமகமவென்று வாழைப்பூவின் வாசனை அந்த இடத்தை ஆட்கொண்டது. அந்த மனத்தை ஆசைதீர முகர்ந்து பார்த்துக் கொண்டாள் … ”நல்லவேளை மூக்கு நன்னா வேலை செய்யறது….” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.... அருகில் யாருமில்லை என்ற தைரியத்தில்.



”ஏன்….நாக்குக்கு என்ன குறைச்சல்? அதான் நாலு முழம் நீளர்தே… அதை பண்ணித் தா…. இதைப் பண்ணித்தான்னு… காதோ கேட்கவே வேண்டாம்… பாம்புக் காது... நான் அங்க பேசினா இங்கேர்ந்துண்டு என்ன சொல்றே?ன்னு கத்துவேள். ம்ம்ம்…கொஞ்சம் சீக்கிரம் நறுக்கிடுங்கோ. நான் சமையலை முடிச்சுட்டு கொஞ்சம் வெளில போகணும்” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்த போது மனசுக்குள் ஏனோ… ”இன்னும் நான் யாருக்காக இந்த உயிரை வெச்சுண்டு இருக்கணும்னு” தோணித்து அந்த மாமியாருக்கு. 

”எத்தனையோ கஷ்டப்பட்டாச்சு. கடைசி காலத்துலயாவது நிம்மதியா எனக்காக வாழணும்னு தோணறது. எனக்குன்னு நிறைய நிறைவேற்றிக்காத ஆசைகளை இன்னும் மனசுக்குள்ள வெச்சுண்டிருக்கேனே ... கூண்டுக்குள் கிடக்கும் குருட்டுப் பறவை போன்ற நிலைமைக்கு நானும் வந்தாச்சு.... சிவ சிவா,” எனப் புலம்புகிறாள்.

வெங்கிட்டுவும் ஊரிலிருந்து வந்தான். நேரம் பார்த்து அவனிடம் சொன்னாள் அந்தத்தாய். அதுக்கு உடனே அவள் மேலேயே வார்த்தையால் பாய்ந்தான். அது தான் வேதனை.

”நானா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணிவைன்னு அடம் பண்ணினேன் . நீயாத் தானே இவளைப் பார்த்துட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒத்தைக் கால்ல நின்னு அழிச்சாட்டியம் பண்ணினே. இப்போ எனக்கே தலைக்கு உசந்த பெண்குழந்தை இருக்கு. இன்னும் உன்னால தான் அவளை ஏத்துக்க முடியலை. கண்ணுக்கு பார்க்கணும்னு சொல்லு. பார்த்து விடறேன். அதை விட்டு அவாளை பத்தி எங்கிட்ட ஓதாதே. ஒண்ணும் நடக்காது. என்ன நடந்தாலும் நீ தான் அனுசரித்துப் போகணும். வயசாறதில்லையா…?”



இதைக் கேட்டதும், மேற்கொண்டு பேச அந்தத்தாயிடம் எதுவுமில்லை. சொல்ல நினைத்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள். கண்கள் மடை திறக்கக் காத்திருந்தது அதையும் அப்படியே உள்ளே அடக்கினாள். இனி அழக்கூடாது. தயங்கியபடி, ”அப்போ….வெங்கிட்டு…எ..ன்..னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துலே சேர்த்துடேன், புண்ணியமாய் போகும்...” தயங்கியபடியே சொன்னாள்.



”ஓ….அப்படியா…ம்ம்ம்.. அவளும் அதைத் தான் சொன்னாள். இதோ பாரும்மா... என்னாலே ரெண்டு பக்கமும் தவில் மாதிரி அடி வாங்க முடியலை. உன் இஷ்டப் படி செய்யறேன்” என்றவன் ஒருவித நிம்மதியுடன் எழுந்து கொண்டான்.



”சீ....இதுதானா நீ?” அவன் சொல்வதைக் கேட்கக் கேட்க பூமி பிளந்து தன்னை இழுத்துக் கொள்ளாதா என ஏங்குகிறது அந்தத்தாயின் உள்ளம். இனியும் இங்கு இருப்பதில்….. மனம் யோசிக்க முடியாது ஸ்தம்பித்தது.

மேற்கொண்டு என்ன ஆச்சு? மின்னூலில் படித்து அறியவும். மிகவும் அருமையான சுபமான, சுகமான, வித்யாசமான முடிவாகவே கொடுத்துள்ளார்கள், திருமதி ஜெயஸ்ரீ அவர்கள்.



புதிய மின்னூல் ஆசிரியர் ‘ஜெயஸ்ரீ’ அறிமுகம்

’தணியாத தாகங்கள்’ - மின்னூல் - மதிப்புரை

’தொலைத்ததும் கிடைத்ததும்’ - மின்னூல் - மதிப்புரை

’பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ - மின்னூல் - மதிப்புரை

’காய்க்காத மரமும்....!’ - மின்னூல் - மதிப்புரை

’டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் - மதிப்புரை

  

  
  
 

   



     

  



   


அறுசுவை விருந்தென 
 தனது ஆறு மின்னூல்களை இதுவரை
 அன்பளிப்பாக எனக்கு அனுப்பி வைத்து 
வாசிக்க வாய்ப்பளித்துள்ள
 திருமதிஜெயஸ்ரீ மேடம் 
அவர்களுக்கு 
என் அன்பான நன்றிகளைத் 
தெரிவித்துக்கொள்கிறேன்







 

இந்த  மின்னூல்களை முழுமையாகப் படிக்க விரும்புவோர் இதோ 
இந்த இணைப்பிற்குச் சென்று BUY NOW என்பதை க்ளிக் செய்யவும். 
மின்னல் வேகத்தில் மின்னூல்கள் உங்களை வந்தடையும்.    

 படிச்சு ..... சும்மாக் கலக்குங்கோ !

 

’ஜெயஸ்ரீ’ 
அவர்களின் மின்னூல் மதிப்புரைகள் இத்துடன்
தற்காலிகமாக நிறைவடைகின்றன.


 





என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


122 கருத்துகள்:

  1. நான்கு கதைகளும் நான்கு வைரங்கள் போல் இருக்கின்றன. உங்கள் விமரிசனங்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு.பா .கந்தசாமி அவர்களுக்கு,

      தங்களின் மேலான முதல் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்.ஆம்...இந்த
      4 கதைகளுக்குள்ளும் ஒரு நல்ல மனித உணர்வுகளுக்கு உரம் போன்றதொரு
      விஷயம் உள்ளது. படிக்கும்போது உணரலாம். கற்பனையும் இறைவன் கொடுத்த
      வரம்.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

      நீக்கு
    2. ப.கந்தசாமி May 21, 2017 at 3:59 AM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //நான்கு கதைகளும் நான்கு வைரங்கள் போல் இருக்கின்றன.//

      ஆஹா, இந்த என் பதிவுக்கு தங்களின் முதல் வருகையும், வைரமான இந்த வரிகளும் இந்தப்பதிவையே சும்மா ஜொலிக்க வைக்கின்றன.

      //உங்கள் விமரிசனங்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.//

      ஆஹா, தங்களுக்கே ஆர்வத்தைத் தூண்டியிருக்கும்போது, மற்றவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      //பாராட்டுகள்.//

      மிக்க நன்றி, ஸார்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  2. நல்ல மதிப்புரை. உங்களைக் கவர்ந்த பகுதிகளையும் உரையாடல்களையும் சுட்டிக்காட்டியது சிறப்புக்குரியது.

    உமா ஆன்டியை ஆண்டியாக்கிவிட்டீர்களே. ஒருவரை ஏழையாக்குவதில் மகிழ்ச்சியா? அபூர்வமான எழுத்துப் பிழை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு.நெல்லைத் தமிழன் அவர்களுக்கு,

      மதிப்புரையைப் பாராட்டி கருத்தளித்தமைக்கு மேலான நன்றிகள்.

      எத்தனை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தாலும் சில எழுத்துக்கள்
      கண்ணை ஏமாற்றி விட்டு, தவறுதலாக அச்சேறிவிடும் அபூர்வமும் உண்டு.

      நன்றிகள்.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன் May 21, 2017 at 6:55 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //நல்ல மதிப்புரை. உங்களைக் கவர்ந்த பகுதிகளையும் உரையாடல்களையும் சுட்டிக்காட்டியது சிறப்புக்குரியது.//

      மிகச் சுருக்கமாக ஏதோ கொஞ்சம் சொல்லி முடித்துக்கொண்டு விட்டீர்கள். எனினும் அதுவும் என்னைக் கவர்ந்த சிறப்புகுரியதுதான்.

      //உமா ஆன்டியை ஆண்டியாக்கிவிட்டீர்களே.//

      தவறுதான். ஆ-ன்-டி என்றுதான் ஒவ்வொரு முறையும் நான் அடித்துள்ளேன். அது ஏனோ ஆ-ண்-டி என்றே விழுந்து விடுகிறது. சிஸ்டத்தில் தமிழ் அடிக்கும்போது ஏற்பட்டுவரும் கோளாறுகளில் இதுவும் ஒன்று. ’ஆ ன் டி’ என்று கொண்டுவர, ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளி விட்டு கவனமாக அடித்து, பிறகு இடைவெளிகளை நீக்க வேண்டியதாக உள்ளது. சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. உடனடியாக அதனை நானும் சரிசெய்துவிட்டேன்.

      //ஒருவரை ஏழையாக்குவதில் மகிழ்ச்சியா?//

      நானே குசேலன் போன்ற ’பரம ஏழை எளிய அந்தணன்’ ஆக இருப்பதால், உலகிலுள்ள மற்ற அனைவருமாவது குபேரர்களாக இருக்கட்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு எப்போதும் என் மனதில் உண்டு.

      ஒரு ஊரில் ஒரு விலைமாது இருந்தாளாம். அவள் மிகவும் நல்லவளாம். அவளால் அந்த ஊரில் பலரும் லக்ஷாதிபதியாகி விட்டார்களாம்.

      அது எப்படி என்று விசாரித்ததில், அவளின் தொடர்புகளுக்கு முன்பு அவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக இருந்தவர்களாம். :)

      அதனால் நான் யாரையும் ஏழையாக்கி மகிழவில்லை என்பதை மட்டும் இங்கு சொல்லிக்கொள்கிறேன், ஸ்வாமீ.

      //அபூர்வமான எழுத்துப் பிழை.//

      ஆம். எவ்வளவு முறை, மீண்டும் மீண்டும் சரி பார்த்தாலும்கூட, ஒருசில மட்டும், இதுபோல நம் கண்களுக்கு எட்டாமல் போய் விடத்தான் செய்கிறது.

      தங்களின் அன்பான வருகைக்கு நன்றிகள், ஸ்வாமீ.

      நீக்கு
  3. "தாய்மையின் தாகம்" வாசிக்க ஆவல் கூடுகிறது...

    திருமதி ஜெயஸ்ரீ சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திருதிண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,

      அவசியம் "தாய்மையின் தாகம்" சிறுகதையைப் படிக்கவும். ஜனரஞ்சகமாகப் போகும் ஒரு எளிய கதை.
      தங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.


      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

      நீக்கு
    2. திண்டுக்கல் தனபாலன் May 21, 2017 at 8:09 AM

      //"தாய்மையின் தாகம்" வாசிக்க ஆவல் கூடுகிறது...

      திருமதி ஜெயஸ்ரீ சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்...//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  4. கதைகள் அருமை. வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீக்கு.
    அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கோமதி அரசு அவர்களுக்கு,

      தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நந்தி.
      விமர்சனத்தைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.


      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

      நீக்கு
    2. கோமதி அரசு May 21, 2017 at 9:43 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கதைகள் அருமை. வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீக்கு.
      அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள் சார்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  5. ஒன்றைச் சுட்டிக்காட்டினால், யார் என்று பார்க்காமல், என்ன தவறு என்று பார்த்து உடனே சரி செய்யும் தன்மை, மிகவும் பாராட்டுதலுக்குரியது. கோபு சார்.. உங்களைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நல்ல விமரிசனம் கோபால் ஸாரின் இந்த மஹத்தான பதிவுகளால் நிறையவாசிப்பு அநுபவம் கிடைக்கிறது.. ஒரே பதிவில் நாலு கதை சுருக்கங்களும் போஆமல் தனி தனி பதிவா போட்டிருக்கலாமோ

      நீக்கு
    2. ஆல் இஸ் வெல்....... May 21, 2017 at 11:39 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ரொம்ப நல்ல விமரிசனம். கோபால் ஸாரின் இந்த மஹத்தான பதிவுகளால் நிறையவாசிப்பு அநுபவம் கிடைக்கிறது.//

      மிகவும் சந்தோஷம்.

      //ஒரே பதிவில் நாலு கதை சுருக்கங்களும் போடாமல், தனி தனி பதிவா போட்டிருக்கலாமோ//

      போட்டிருக்கலாம்தான். எப்படிப் போட்டாலுமேகூட சிலர் மட்டுமே ஊன்றிப் படிப்பதுண்டு. அதனால் இப்படியே இருக்கட்டும் என்ற முடிவுக்கு நானும் வந்து விட்டேன்.

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  6. அன்பின் கோபு ஸார் ,

    நன்றி கலந்த வணங்கங்கள். சமீப காலமாய் உடல்நிலை சரியில்லை. அத்தோடு கூட
    கணினியும் இணையமும் சேர்த்து அவ்வப்போது அடம் பிடித்ததால் என்னால் தங்களின்
    விமரிசங்களுக்கும்,உடனே நண்பர்களின் கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களும் நன்றி சொல்லி
    பதில் எழுத இயலாத சூழ்நிலை,தற்பொழுது குணமான நிலையில் , எனது இந்த தாமதத்திற்கு
    மன்னிப்புக் கோருகிறேன். மின்னூல்கள் அனைத்தையும் மிகவும் பொறுமையாகப் படித்து
    அதற்குத் தகுந்தாற்ப்போல் தங்களது பாணியில் விமரிசனம் செய்து "விமர்சன வித்தகராகி ", தங்களின்
    அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கெல்லாம் தலைவாழை இலையில் அறுசுவை அன்னம் படைத்த விதம் அருமை.
    தங்களுக்கு எனது மேலான நன்றிகளை இதன் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது மேலான
    எழுத்துக்களுக்கும் என்னையும் ஒரு பொருட்டாக எடுத்து நான் அனுப்பி வைத்த அத்தனை கதைகளையும்
    படித்து தங்களது வலைப்பூவில் எனக்கொரு இடம் தந்து பதிவிட்டமைக்கு நன்றிகள். இப்படிப் பிரகடனப் படுத்தி
    எழுதுவீர்கள் என்று எண்ணவில்லை. எதிர்பாராத ஆச்சரியமாகவே உள்ளது.
    வணக்கத்துடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயஸ்ரீ ஷங்கர் May 21, 2017 at 11:58 AM

      //அன்பின் கோபு ஸார், நன்றி கலந்த வணங்கங்கள்.//

      வாங்கோ என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய, என் மனதுக்கினிய எழுத்துலகப் பிரபலமான ஸ்ரீ மேடம் அவர்களே. வணக்கம்.

      //சமீப காலமாய் உடல்நிலை சரியில்லை.//

      தங்களைப் பற்றியும், தங்களின் தங்கமான எழுத்துக்கள் பற்றியும் எங்கோ எவரோ ஒரு சாமான்யரும் சாதாரணமானவருமான ஒருவரால், மனதாரப் புகழ்ந்து பாராட்டி எழுதி வெளியிடப்பட்டு, அவை பலரின் கவனங்களுக்கும் சென்று கொண்டிருப்பதால், ஒருவேளை கண் திருஷ்டி போல உங்களின் உடல்நிலை பாதித்திருக்கலாமோ என அஞ்சி நடுங்கிப்போனேன் .... தங்களின் தங்கமான எழுத்துக்களின் மேல் எப்படியோ தணியாத தாகமும் மோகமும் கொண்டுவிட்ட தாஸாதி தாஸனாகிய ... அடியேன்.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> ஜெயஸ்ரீ (2)

      //அத்தோடு கூட கணினியும் இணையமும் சேர்த்து அவ்வப்போது அடம் பிடித்ததால் என்னால் தங்களின் விமரிசங்களுக்கும், நண்பர்களின் கருத்துக்களுக்கும், உடனே பாராட்டுதல்களும், நன்றி சொல்லி பதில்களும் எழுத இயலாத சூழ்நிலை, தற்பொழுது குணமான நிலையில், எனது இந்த தாமதத்திற்கு மன்னிப்புக் கோருகிறேன்.//

      எப்படியோ தங்களைப்பற்றிய நூல்களின் மதிப்புரை என்ற எனது மெகா சீரியல் தற்சமயம் ஒரு ஸ்டேஜில் தற்காலிகமாகவாவது நிறைவடைந்துள்ள இந்த பொன்னான நேரத்தில், தற்போது தங்கள் உடல்நிலையும் குணமாகியுள்ளது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      இதற்கெல்லாம் ’மன்னிப்பு’ என்ற மிகப்பெரிய வார்த்தைகளெல்லாம் நமக்குள் எதற்கு? அதனால் என்னால் உங்களின் இந்த தாமதத்தினை மன்னிக்கவே முடியாதாக்கும். :)

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> ஜெயஸ்ரீ (3)

      //மின்னூல்கள் அனைத்தையும் மிகவும் பொறுமையாகப் படித்து, அதற்குத் தகுந்தாற்ப்போல் தங்களது பாணியில் விமரிசனம் செய்து//

      கரும்பு தின்னக் கூலியா வேண்டும்?

      தாங்கள் அளித்துள்ள மின்னூல்களான கரும்புகளின் சுவையும் இனிமையும் நான் இதுவரை ருசித்துப் பார்த்து அறியாததொன்று.

      அதனால் நான் அவற்றை நன்கு ரஸித்து ருஸித்து மகிழ்ந்ததுடன், கசக்கிப்பிழிந்து, சக்கை நீக்கி, சாறு எடுத்து, ஜூஸ் ஆக ஆக்கி அனைவரும் எளிதில் பருகும் வண்ணம், ஏதோ எனக்குத் தெரிந்த முறையில் மட்டுமே சொட்டுச் சொட்டாகப் பருகக் கொடுத்துள்ளேன்.

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> ஜெயஸ்ரீ (4)

      //"விமர்சன வித்தகராகி",//

      நான் விமர்சன வித்தகரும் அல்ல .... நான் செய்துள்ளது விமர்சனமும் அல்ல.

      நூல் ’மதிப்புரை’ அல்லது ’புகழுரை’ என்று வேண்டுமானால் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

      >>>>>

      நீக்கு
    5. கோபு >>>>> ஜெயஸ்ரீ (5)

      //தங்களின் அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கெல்லாம் தலைவாழை இலையில் அறுசுவை அன்னம் படைத்த விதம் அருமை. //

      அதெல்லாம் தடபுடலாக எப்போதுமே நான் கொடுத்துவிடுவது என் வழக்கம். இதற்கு என்ன நமக்குக் காசா-பணமா செலவு? :)

      தாங்கள் எனக்குக் கொடுத்துள்ள மாபெரும் அறுசுவை விருந்தினை, நான் கொஞ்சமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். அவ்வளவுதான்.

      >>>>>

      நீக்கு
    6. கோபு >>>>> ஜெயஸ்ரீ (6)

      //தங்களுக்கு எனது மேலான நன்றிகளை இதன் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி மேடம். IN FACT என்னை இவ்வாறு எழுதத்தூண்டியுள்ளதே தங்களின் மிகச்சிறப்பான எழுத்துக்கள் மட்டுமே.

      அதற்காக நான் தான் உங்களுக்கு என் மேலான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

      >>>>>

      நீக்கு
    7. கோபு >>>>> ஜெயஸ்ரீ (7)

      //தங்களது மேலான எழுத்துக்களுக்கு, என்னையும் ஒரு பொருட்டாக எடுத்து, நான் அனுப்பி வைத்த அத்தனை கதைகளையும் படித்து தங்களது வலைப்பூவில் எனக்கொரு இடம் தந்து பதிவிட்டமைக்கு நன்றிகள்.//

      என்னையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு, இதுவரை தங்களின் நூல்களை என் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ள, கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் (பதிவர்களின்) எழுத்துக்கள் அத்தனையையும் படித்து என் வலைப்பதிவினில் அவ்வப்போது எழுதி சிறப்பிடம் தந்துள்ளேன்.

      1) http://gopu1949.blogspot.in/2015/09/part-1-of-5.html ’கீதமஞ்சரி’ வலைப்பதிவர் ‘விமர்சன வித்தகி’ திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒருநாள்’ என்ற நூலுக்கான என் மதிப்புரை - மொத்தம் ஐந்து பகுதிகளாக.

      2) http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html ‘சும்மா’ வலைப்பதிவர் நம் ‘ஹனி மேடம்’ திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் ‘தேன் சிந்திடும் - பெண் பூக்கள்’ என்ற கவிதை நூலுக்கான என் மதிப்புரை.

      3) http://gopu1949.blogspot.in/2016/03/1.html ‘பூ வனம்’ வலைப்பதிவர் உயர்திரு. ஜீவி ஸார் அவர்களின் ‘மறக்க முடியாத தமிழ் உலகம் - ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை’ என்ற கட்டுரை நூலுக்கான என் மதிப்புரை - மொத்தம் இருபது பகுதிகளாக.

      4) http://gopu1949.blogspot.in/2016/07/blog-post_26.html ‘சிட்டுக்குருவி’ வலைப்பதிவர் திரு. விமலன் அவர்களின் ’இச்சி மரம் சொன்ன கதை’ என்ற சிறுகதை தொகுப்பு நூலுக்கான என் மதிப்புரை - இரு பகுதிகளாக.

      5) http://gopu1949.blogspot.in/2016/09/1.html மீண்டும் ‘சும்மா’ வலைப்பதிவர் நம் ‘ஹனி மேடம்’ திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் ’சிவப்புப் பட்டுக் கயிறு’ என்ற சிறுகதை தொகுப்பு நூலுக்கான என் மதிப்புரை - ’தேன் கூடும் ... தேன் துளிகளும்’ என்ற தலைப்பினில் மொத்தம் ஆறு பகுதிகளாக.

      6) http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_21.html ‘ஊஞ்சல்’ வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்களின் ‘புதிய வேர்கள்’ என்ற மின்னூல் சிறுகதைத் தொகுப்புக்கான என் மதிப்புரை.

      7) http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_23.html மீண்டும் ‘ஊஞ்சல்’ வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்களின் ‘புதைக்கப்படும் உண்மைகள்’ என்ற மின்னூல் சிறுகதைத் தொகுப்புக்கான என் மதிப்புரை.

      இந்த வரிசையில் தாங்கள் தற்சமயம் என் வலைப்பதிவுகளில் லேடஸ்ட் ஆகக் காட்சி அளித்து மகிழ்வித்து வருகிறீர்கள்.

      தங்களின் ஆறு மின்னூல்களுக்காக நான் ஏழு பதிவுகள் வெளியிடும் வாய்ப்பு, இப்போது எனக்குக் கிட்டியுள்ளது.

      அதனை, நான் செய்துள்ளதொரு பெரும் பாக்யமாக நினைத்து நானும் மகிழ்கிறேன்.

      >>>>>

      நீக்கு
    8. கோபு >>>>> ஜெயஸ்ரீ (8)

      //இப்படிப் பிரகடனப் படுத்தி எழுதுவீர்கள் என்று எண்ணவில்லை. எதிர்பாராத ஆச்சரியமாகவே உள்ளது. வணக்கத்துடன் ஜெயஸ்ரீ ஷங்கர்.//

      இப்படித் தங்களைப் பிரகடனப் படுத்தி எழுதும் ஓர் அரிய வாய்ப்பு, தங்கள் மின்னூல்கள் மூலம் அடியேனுக்குக் கிடைக்கும் என்று நானும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எண்ணவில்லை. எனக்கும் இது கனவா நனவா என மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது. :)

      எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். எங்களுக்கெல்லாம் எழுதுவதற்கான சரஸ்வதி கடாக்ஷம் ஏதோ ஒரு குட்டியூண்டு டேபிள் ஸ்பூனில் மட்டுமே மிகக்குறைவாக அளிக்கப்பட்டுள்ளது.

      தங்களுக்கோ அதே சரஸ்வதி கடாக்ஷம் அண்டா அண்டாவாக அண்டாக்களில் அளிக்கப்பட்டுள்ளது.

      எனவே தாங்கள் மென்மேலும் மிகச்சிறப்பாக எழுதி எழுத்துலகில் என்றும் மிகச்சிறப்பாக ஜொலிக்க வேண்டுமாய் அன்புடன் தங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

      என்றும் பிரியத்துடன் கோபு

      நீக்கு
  7. கோப்பு சார்,

    திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் கதை விமரிசனம் கதியைப் படிக்கத் தூண்டுவதாய் உள்ளது. மீதியை புச்தகாவில் காண்க ....என்று விறுவிறுப்பான இடத்தில் விட்டு விட்டீர்களே.
    அருமையான் ஒரு கதாசிரியரை உங்கள் பதிவின் மூலமாக எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்.
    வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ஜெயஸ்ரீ மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam May 21, 2017 at 2:09 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கோப்பு சார்,//

      என்னை அப்படியே FILE ஆக்கிவிட்டீர்கள். நல்லவேளையாக டீச்சர் என்னை FAIL ஆக்காமல் விட்டதில் மகிழ்ச்சியே. :)

      //திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் கதை விமரிசனம் (கதியைப்?) கதையைப் படிக்கத் தூண்டுவதாய் உள்ளது.//

      மிக்க மகிழ்ச்சி மேடம்.

      //மீதியை புஸ்தகாவில் காண்க .... என்று விறுவிறுப்பான இடத்தில் விட்டு விட்டீர்களே. //

      :))))) அதனால் மட்டுமே அந்த இடம் ஓர் விறுவிறுப்பான இடமாக உங்களுக்குத் தோன்றியுள்ளது. :)))))

      //அருமையான ஒரு கதாசிரியரை உங்கள் பதிவின் மூலமாக எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்.//

      ஆஹா. மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ஜெயஸ்ரீ மேடம்.//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - நன்றியுடன் கோபு

      நீக்கு
  8. எழுத்தாளர் ஜெயஸ்ரீக்கு பாராட்டுகள். நிறைய கதைகளை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நன்றிகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி May 21, 2017 at 4:22 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //எழுத்தாளர் ஜெயஸ்ரீக்கு பாராட்டுகள். நிறைய கதைகளை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நன்றிகள். அன்புடன்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மாமி.

      நீக்கு
  9. நான்கு கதைக்களங்களும்
    மிக மிக வித்தியாசமாக இருப்பதும்

    அந்த அந்த கதைக்களத்திற்கு
    ஏற்றார்போல மொழி நடை மிக
    இயல்பாய் பொருந்தச் சொல்லிச்
    சென்ற விதமும்

    இந்த நூல்கள் அனைத்தையும்
    மிக மிக அருமையாக அறிமுகப்படுத்திய
    தங்கள் சிரத்தையும் மிக்க மகிழ்வளிக்கிறது

    மிகச் சிறந்த எழுத்தாளராக
    தொடர்ந்து பவனி வர திருமதி
    ஜெயஸ்ரீ அவர்களுக்கு என்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S May 21, 2017 at 4:33 PM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //நான்கு கதைக்களங்களும் மிக மிக வித்தியாசமாக இருப்பதும் அந்த அந்த கதைக்களத்திற்கு ஏற்றார்போல மொழி நடை மிக இயல்பாய் பொருந்தச் சொல்லிச் சென்ற விதமும் இந்த நூல்கள் அனைத்தையும் மிக மிக அருமையாக அறிமுகப்படுத்திய தங்கள் சிரத்தையும் மிக்க மகிழ்வளிக்கிறது.//

      தங்கள் வாயிலாக இதனைக் கேட்க நானும் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      //மிகச் சிறந்த எழுத்தாளராக தொடர்ந்து பவனி வர திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான ஆழ்ந்த ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், கதாசிரியருக்கான தங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  10. சிறப்பான சிறுகதைகளுக்கு உங்களின் அருமையான விமர்சனம் நவரத்தினங்கள் பதித்த கிரீடத்தை சூட்டியிருக்கின்றன! எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்! எப்போதும்போல ரொம்பவும் சிரத்தையோடு, அக்கறையோடு திறனாய்வு செய்த உங்களுக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் May 21, 2017 at 5:44 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //சிறப்பான சிறுகதைகளுக்கு உங்களின் அருமையான விமர்சனம் நவரத்தினங்கள் பதித்த கிரீடத்தை சூட்டியிருக்கின்றன!//

      ஆஹா, இதனைத் தங்கள் வாயிலாகவும் இங்கு நான் கேட்க தன்யனானேன். ’நவரத்தினங்கள் பதித்த கிரீடத்தையே சூட்டி’ மகிழ்வித்துள்ளீர்கள் .... அதனைத் தொடர்ந்து பத்திரமாக என்னிடம் நான் பாதுகாக்கணுமே என்ற புதியதோர் கவலை எனக்கு இப்போது ஏற்பட்டுவிட்டது. :)

      //எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்!//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //எப்போதும்போல ரொம்பவும் சிரத்தையோடு, அக்கறையோடு திறனாய்வு செய்த உங்களுக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்!//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், சிரத்தையான அக்கறையுடன் கூடிய அழகான கருத்துக்களுக்கும், மனங்கனிந்த ஸ்பெஷல் பாராட்டுகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  11. முதலில் ஜெயஸ்ரீ மேடம் அவர்களுக்கு பாராட்டுகளையும்... வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன் (அப்பரம் மறந்துபோயிடும்).....

    ஆமா பெரிப்பா கமெண்ட்ல ஒருவர் சொல்லியிருந்தபடி ஒவ்வொரு கதை விமரிசனமும் தனி தனி பதிவா போட்டிருக்கலாம்... இது எப்படி இருக்கு தெரியுமோ...... காலை டிபன்...மதிய லஞ்ச்...இரவு டின்னரை ஒரே நேரத்தில் பரிமாறி சாப்பிட சொன்னமாதிரி இருக்குஃஃஃ பதிவு பெரிசா இருந்தா படிக்க பொறுமையே வர மாட்டறது.. நாலு கதை சுருக்கமும் நன்னாதான் இருக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy May 21, 2017 at 5:50 PM

      வாடா .... என் தங்கமே, ஹாப்பி. வணக்கம். உன் வருகையால் நானும் இப்போது ஹாப்பியானேன். :)

      //முதலில் ஜெயஸ்ரீ மேடம் அவர்களுக்கு பாராட்டுகளையும்... வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி....டா ஹாப்பி.

      //(அப்புறம் மறந்துபோயிடும்).....//

      வெரி குட். நீ எப்போதுமே இதிலெல்லாம் மிகவும் உஷார் பேர்வழியாச்சே ! :)

      //ஆமா பெரிப்பா கமெண்ட்ல ஒருவர் சொல்லியிருந்தபடி ஒவ்வொரு கதை விமரிசனமும் தனி தனி பதிவா போட்டிருக்கலாம்... இது எப்படி இருக்கு தெரியுமோ...... காலை டிபன்... மதிய லஞ்ச்... இரவு டின்னரை ஒரே நேரத்தில் பரிமாறி சாப்பிட சொன்னமாதிரி இருக்கு.//

      ஹைய்யோ ..... நல்ல உதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறாய்.

      என்றைக்கோ நான் படித்த ஒளவையாரின் நல்வழி பாடல் என் நினைவுக்கு வந்துவிட்டது. இதோ அந்தப்பாடல்:

      -=-=-=-=-=-

      ”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
      இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
      என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
      உன்னோடு வாழ்தல் அரிது.”

      அதன் பொருள்:

      என் வயிறே! இன்று உணவு கிடைக்கவில்லை. இன்று ஒரு நாளைக்கு மட்டும் சாப்பிடாமல் இரு என்று சொன்னால் இருக்கமாட்டேன் என்கிறாய். வயிற்றுப் பசி கிள்ளுகிறது.

      இன்று நிறைய உணவு கிடைத்திருக்கிறது. இரண்டு நாளைக்குச் சாப்பிட்டுகொள் என்று சொன்னாலும் சாப்பிடமாட்டேன் என்கிறாய்.

      உணவுக்காக நான் போராடும் துன்பம் உனக்குத் தெரியவில்லை. உடம்புத் துன்பத்தை அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறாய்.

      அதனால் வயிறே! எப்படியும் உன்னோடு நிம்மதியாக வாழமுடியவில்லை.

      -=-=-=-=-=-

      //பதிவு பெரிசா இருந்தா படிக்க பொறுமையே வர மாட்டறது..//

      அந்தப் பொறுமையின்மை உன் வயசுக்கோளாறு மட்டுமே. போகப்போகப் பொறுப்புகள் வந்ததும் உன்னிடம் பொறுமையும் வந்து தானாகவே ஒட்டிக்கொள்ளும்.

      //நாலு கதை சுருக்கமும் நன்னாதான் இருக்கு....//

      எதையும் பொறுமையாப் படிக்காமலேயே நீ இங்கு சொல்லியுள்ள இந்தக் கமெண்ட்ஸும் நன்னாத்தான் இருக்கு. :)

      உன் அன்பான வருகைக்கு மிக்க நன்றிகள்.....டா, ஹாப்பி.

      அன்புடன் பெரிப்பா

      நீக்கு
  12. 11--12--13....கதையில் பெண்குழந்தை பிறந்தா இப்பகூட இப்படி நடந்துக்கறவங்க இருக்காங்களான்னு நினைக்க தோணுது.

    ஒவ்வொருகதை விமரிசனம் படிக்கும்போதும் ஜெயஸ்ரீ மேடம் அவர்களின் கற்பனை வளம் எழுத்து திறமை நன்றாகவே புரிய முடியுது... எங்கியோ யார்வீட்டிலோ நடக்கும் விஷயங்கள்தானே நம் கற்பனையில் கதையாக உருவாகிறது.

    ஜெயஸ்ரீ அவர்களின் கற்பனா சக்திக்கும் அதை வெளிப்படுத்தும் திறமையான எழுத்துக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... May 21, 2017 at 6:24 PM

      வாங்கோ, வணக்கம்.

      //11--12--13....கதையில் பெண்குழந்தை பிறந்தா இப்பகூட இப்படி நடந்துக்கறவங்க இருக்காங்களான்னு நினைக்க தோணுது.//

      ஆங்காங்கே இதுபோலவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் .... என்ன செய்ய? பெண் குழந்தையே பிறக்கணும் என மிகவும் ஆசைப்படுபவர்களும், அதற்காகவே பிரார்த்தித்துக்கொள்பவர்களும் சிலர்கூட இருக்கத்தான் இருக்கிறார்கள். உலகம் பலவிதம்.

      //ஒவ்வொருகதை விமரிசனம் படிக்கும்போதும் ஜெயஸ்ரீ மேடம் அவர்களின் கற்பனை வளம் எழுத்து திறமை நன்றாகவே புரிய முடியுது...//

      அவர்களின் கற்பனை வளமும், எழுத்துத்திறமையும், மிக இயல்பான மிக அழகான எழுத்து நடையும் எனக்கும் மிகவும் பிடித்துள்ளது.

      //எங்கியோ யார்வீட்டிலோ நடக்கும் விஷயங்கள்தானே நம் கற்பனையில் கதையாக உருவாகிறது.//

      ஆம். நாம் சந்திக்கும் மனிதர்கள், கேள்விப்படும் செய்திகள், சொந்த அனுபவங்கள் இவற்றுடன் நம் கற்பனை வளமும் சேரும் போது, மிகச்சிறப்பான ஆக்கங்கள் உருவாகின்றன என்பதே உண்மை. வெறும் கற்பனை மட்டுமே இல்லாமல் இதுபோல உண்மை நிகழ்வுகளும் சேரும் போதுதான், அந்தக்கதை நன்கு மெருகேறி வாசிக்க ருசியாகவும், கதையில் உயிரோட்டம் உள்ளவைகளாகவும் மாறி ஜொலிக்கின்றன.

      //ஜெயஸ்ரீ அவர்களின் கற்பனா சக்திக்கும் அதை வெளிப்படுத்தும் திறமையான எழுத்துக்கும் வாழ்த்துகள்...//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான அபூர்வ அதிஸய வருகைக்கும், நயமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  13. ஸ்ரத்தா அவர்கள்

    பெண் குழந்தை பிறந்தால் இப்படியெல்லாம்
    நடந்து கொள்வார்களா என
    பின்னூட்டம் இட்டிருந்ததைப் படித்தேன்

    மாமியாராவது அப்படித்தான் இருப்பார்கள்
    என சகித்துக் கொள்ளலாம்

    என் உறவினர் ஒருவர் மூன்றாவதும் பெண்
    குழந்தை பிறந்தெதென குழந்தையைப் பார்க்கவே
    ஆறு மாதம் வரவில்லை

    பின் எல்லோரும் சமாதானம் செய்து
    கணவன் கொஞ்சம் மாறினார்

    இதில் இப்போது முக்கிய விஷயம்

    இந்த மூன்றாவது குழந்தைதான்
    அவருக்கு இயலாமல் கிடக்க
    அன்னையினைப் போல அவரைப்
    மிக நன்றாகப் பார்த்துக் கொள்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் Mr. RAMANI Sir, தாங்கள் சொல்வது மிகவும் வாஸ்தவம்தான். ஆணோ பெண்ணோ வேண்டாம் எனத் தடுக்க நினைக்கும் குழந்தைகூட எப்படியோ தப்பிப்பிழைத்துப் பிறந்து, மற்ற எல்லாக்குழந்தைகளையும் விட புத்திசாலியாகவும், பொறுப்பாகவும் இருந்து தன் பெற்றோரைக் கடைசி காலத்தில் கை விடாமல் காப்பதும் உண்டு.

      என் உறவினர்களில் ஒரு தம்பதிக்கு வரிசையாக அடுத்தடுத்து இரண்டு வருட இடைவெளியில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர்.

      அடுத்தடுத்து பெண் குழந்தைகள் என்பதால் எப்படிக் கல்யாணம் செய்துகொடுப்போம் என நினைத்து, மிகவும் வெறுத்தே போய்விட்டனர் அவர்கள்.

      மூன்று பெண் குழந்தைகளும் தங்க விக்ரஹம் போல சிகப்பாக மிக அழகாக இருந்தனர். மூவருக்கும் மிகச் சுலபமாக கல்யாணமும் ஆகிவிட்டது.

      மாப்பிள்ளை வீட்டார்கள், அதிக செலவு ஏதும் வைக்காமல், இது போல ஒரு பெண் கிடைத்தால் போதுமென நினைத்துக் கொத்திக்கொண்டு போய் விட்டார்கள்.

      இப்போது குழந்தை குட்டிகளுடன் அந்த மூன்று பெண்களுமே HOUSE WIFE ஆக, செளக்யமாக வாழ்ந்து வருகின்றனர்.

      அதே மேற்படி என் உறவினர் தம்பதியினருக்குத் தவமாய் தவமிருந்து நான்காவதாக அவர்கள் ஆசைப்படியே ஒரு ஆண் குழந்தை பிறந்தான்.

      இப்போது அவனுக்கு 35 வயது ஆகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண் தேடி வருகிறார்கள். இன்னும் எதுவும் பொருந்தி அமையவே இல்லை.

      தங்கள் பிள்ளைக்கு பொருத்தமான ஒரு பெண் கிடைக்காமல் இப்போதும் வெறுத்துப்போய் உள்ளனர்.

      மிகவும் வேடிக்கையான உலகம் இது.

      நீக்கு
  14. பெண்குழந்தைகளை வெறுக்கும் அவலம் என்று தீருமோ :(
    நான்கும் அருமை //ஆனால் உயர கோபுரமாக மனதில்நிற்பது ராஜா ..
    வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ மேடத்துக்கும் ..அழகான விமர்சனங்களை தந்த கோபு அண்ணாவுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin May 21, 2017 at 9:24 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பெண்குழந்தைகளை வெறுக்கும் அவலம் என்று தீருமோ :(//

      பெண் குழந்தைகளை எல்லோரும் வெறுப்பது இல்லை. இப்போது TREND மிகவும் மாறித்தான் வருகிறது. பெண் குழந்தைதான் வேண்டுமென்று ஆசைப்படுவோருக்கு அது ஏனோ கிடைக்கும் பாக்யம் இருப்பது இல்லை. :(

      //நான்கும் அருமை. ஆனால் உயர கோபுரமாக மனதில் நிற்பது ராஜா ..//

      மிக்க மகிழ்ச்சி.

      //வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ மேடத்துக்கும் .. அழகான விமர்சனங்களை தந்த கோபு அண்ணாவுக்கும்.//

      நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  15. அச்சச்சோ முடியல்ல ஆண்டவா என்னால முடியல்ல.. 4 கதைகளா?.. அந்தக் கடைசியா தப்பி ஓடும் காரின் பின் பூட் ல ஒளிச்சிருந்து தப்பி ஓடுவது நாந்தேன்...:) காசிலயே இருந்திருக்கலாம் தெரியாம திரும்பி வந்திட்டனே:)..

    இருப்பினும் உங்களுக்கு ரொம்பப் பொறுமை... அழகா படிச்சு.. விமர்சனமும் எழுதி நிறைவேத்திட்டீங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira May 21, 2017 at 9:59 PM

      வாங்கோ, வணக்கம். மீண்டும் ஏன் இப்படி உங்களின் குட்டையான அழகான பெயரை மாற்றிக்கொண்டீர்கள். நான் யாரோ என்னவோ என ஒரு நிமிடம் பதறிப்போய் விட்டேன். இருப்பினும் சிதறிப்போகாமல் தப்பி விட்டேன். இந்த மிக நீளமான புதிய பெயர் எனக்கு என்னவோ பிடிக்கவில்லை.

      அதனால் பழைய பெயரில் வந்து, வழக்கப்படி இன்னும் நிறைய பின்னூட்டங்கள் கொடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      //அச்சச்சோ முடியல்ல ஆண்டவா என்னால முடியல்ல..//

      ஏன் என்ன ஆச்சு? ஏதேனும் மஸக்கைக் கோளாறுகளாக இருக்குமோ? அப்படியாயின் மீண்டும் இரட்டைக்குழந்தைகளே பிறக்க என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

      //4 கதைகளா?..//

      ஆம். வெறும் நாலே நாலு மட்டும் தானாக்கும்.

      //அந்தக் கடைசியா தப்பி ஓடும் காரின் பின் பூட் ல ஒளிச்சிருந்து தப்பி ஓடுவது நாந்தேன்...:) //

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

      //காசிலயே இருந்திருக்கலாம் தெரியாம திரும்பி வந்திட்டனே:).. //

      ’காசிக்குப்போனாலும் கருமம் தொலையாது’ என்று சொல்லுவினம். தாங்கள் அறியாதோ!

      //இருப்பினும் உங்களுக்கு ரொம்பப் பொறுமை...//

      இதனை தாங்களும் பொறுமையாகப் புரிந்துகொண்டுள்ளதற்கு நன்றிகள்.

      //அழகா படிச்சு.. விமர்சனமும் எழுதி நிறைவேத்திட்டீங்க வாழ்த்துக்கள்.//

      வெரி குட். தங்களின் அன்பான வருகைக்கும் இந்த வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  16. அனைத்துக் கதைகளையும் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதி வெளியிட்ட ஜெயஸ்ரீ அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira May 21, 2017 at 10:03 PM

      //அனைத்துக் கதைகளையும் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதி வெளியிட்ட ஜெயஸ்ரீ அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.//

      ஜெயஸ்ரீ அக்காவை வாழ்த்தியுள்ள தங்கச்சிக்கு, ஜெயஸ்ரீ அக்கா சார்பிலும் என் சார்பிலும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  17. சிறப்பான எழுத்தைச் சிறப்பிக்கும் திறனாய்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை பித்தன் May 22, 2017 at 12:06 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //சிறப்பான எழுத்தைச் சிறப்பிக்கும் திறனாய்வு.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  18. அருமையான விமர்சனம்! தங்களுக்கும் ஜெயஸ்ரீ அவர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் உரியது! நீண்ட நாளாயிற்று!நலமா ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் இராமாநுசம் May 22, 2017 at 1:29 PM

      வாங்கோ ஐயா, நமஸ்காரங்கள்.

      //அருமையான விமர்சனம்!//

      மிக்க மகிழ்ச்சி, ஐயா.

      //தங்களுக்கும் ஜெயஸ்ரீ அவர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் உரியது!//

      தங்களின் அன்பான வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கு மிகவும் சந்தோஷம் ஐயா.

      //நீண்ட நாளாயிற்று! நலமா ஐயா!//

      ஆம். நாம் சந்தித்து நீண்ட நாட்கள் ஆயிற்றுதான். தங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசியால் நான் நலமே ஐயா.

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கு மிக்க நன்றிகள், ஐயா.

      நீக்கு
  19. திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் ‘நாலடி கோபுரங்கள்’ என்ற மின்னூலை தங்களின் பார்வையில் எங்களை பார்க்க (படிக்க) வைத்ததற்கு நன்றி!

    நான்கு கதைகளையும் தங்கள் பாணியில் நறுக்காக திறனாய்வு செய்துள்ளீர்கள்.

    ‘11-12-13’ கதையின் தலைப்பே புதுமையாய் இருக்கிறது. மகளுக்கும் தாய்க்கும் நடக்கும் உரையாடல் கதையின் கடைசியில் ஒரு மாற்றம் காத்திருக்கிறது என்பதை சூகமாக தெரிவிக்கிறது என நினைக்கிறேன்.

    ‘தாய்மையின் தாகம்’ கதையில் ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற கருத்தை மய்யமாகக் கொண்டது என நினைக்கிறேன். உமா அவளது அண்ணியின் வற்புறுத்தலால் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாளா என அறிந்துகொள்ள ‘மின்னூலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கோ’ என்று சொல்லிவிட்ட தங்களின் அன்புக்கட்டளையை மீற முடியுமா என்ன!

    ‘நாலடி கோபுரங்கள்’ கதையில் வரும் ராஜாவின் நிலையைப் பார்க்கும்போது

    ‘மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
    உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
    மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்’

    என்ற ஔவைப் பாட்டியின் மூதுரை நினைவுக்கு வருகிறது.

    மனிதாபிமானம் மிக்க ராஜா எப்படி அனைவர் முன்னிலும் உயர்ந்து நிற்கிறார் என்பதை நிச்சயம் இரசித்துப் படிப்பேன்.


    ‘கண்கள் மாற்றும்’ கதை இக்கால பிள்ளைகளுக்கு ஒரு அறிவுரையாக இருந்து அவர்களின் போக்கை மாற்றும் என எண்ணுகிறேன்.

    நான்கு கதைகளையும் முடிவைத் தராமல் சுவையாய் சுருக்கித் தந்து படிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு பாராட்டுகள்!

    அன்றாட வாழ்வில் நாம் காணுகின்ற நிகழ்வுகளை அருமையான கதைகளாகப் படைத்த திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி May 22, 2017 at 4:35 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் ‘நாலடி கோபுரங்கள்’ என்ற மின்னூலை தங்களின் பார்வையில் எங்களை பார்க்க (படிக்க) வைத்ததற்கு நன்றி! நான்கு கதைகளையும் தங்கள் பாணியில் நறுக்காக திறனாய்வு செய்துள்ளீர்கள்.//

      என் திறனாய்வையே திறனாய்வு செய்து நறுக்-சுருக்கென நயம்படச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி, ஸார். :)

      //‘11-12-13’ கதையின் தலைப்பே புதுமையாய் இருக்கிறது. மகளுக்கும் தாய்க்கும் நடக்கும் உரையாடல் கதையின் கடைசியில் ஒரு மாற்றம் காத்திருக்கிறது என்பதை சூகமாக தெரிவிக்கிறது என நினைக்கிறேன்.//

      இருக்கலாம் .... இருக்கலாம் .... அப்படியும் ஒருவேளை இருக்கலாம்.

      //‘தாய்மையின் தாகம்’ கதையில் ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற கருத்தை மய்யமாகக் கொண்டது என நினைக்கிறேன். உமா அவளது அண்ணியின் வற்புறுத்தலால் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாளா என அறிந்துகொள்ள ‘மின்னூலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கோ’ என்று சொல்லிவிட்ட தங்களின் அன்புக்கட்டளையை மீற முடியுமா என்ன!//

      ஆஹா ...... என் அன்புக்கட்டளைக்கு அடிபோக இருக்கும் ஒரு சிலரில் தாங்களும் ஒருவர் என்பது கேட்க மகிழ்ச்சியே.

      //‘நாலடி கோபுரங்கள்’ கதையில் வரும் ராஜாவின் நிலையைப் பார்க்கும்போது

      ‘மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
      உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
      மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்’

      என்ற ஔவைப் பாட்டியின் மூதுரை நினைவுக்கு வருகிறது. //

      Very Good Excellent Example, Sir. அதே.... அதே.... ஸார்.

      //மனிதாபிமானம் மிக்க ராஜா எப்படி அனைவர் முன்னிலும் உயர்ந்து நிற்கிறார் என்பதை நிச்சயம் இரசித்துப் படிப்பேன்.//

      மிகவும் சந்தோஷம் ஸார்.

      மனிதாபிமானம் மிக்க ஒண்டிக்கட்டையான ராஜாவை ”தன் தம்பியின் படிப்புக்கு ஏதேனும் உதவ முடியுமா” எனக் கேட்டு ஒரு ஏழை அண்ணன் தொடர்பு கொள்கிறார்.

      ”எவ்வளவு பணம் தேவைப்படும்?” என ராஜா கேட்கிறார்.

      ரூ.6000 கொடுத்தால் இந்த ஆண்டு படிப்புச் செலவுக்குக் கவலையில்லாமல் இருக்கும் என தங்கள் தாயார் கேட்கச் சொன்னதாகச் சொல்கிறார் அண்ணனாக வந்தவர்.

      மிகவும் சந்தோஷமாக அதற்கான காசோலையை உடனடியாக எழுதித்தந்துவிட்டு, ”ஒவ்வொரு ஆண்டும் உன் தம்பியின் படிப்புச் செலவுக்காக என்னிடம் இதுபோல வாங்கிக்கொண்டு செல்” என்று சொன்னதுடன், தன்னுடைய ஷர்ட்களில் நல்லதாக சிலவற்றை தேர்ந்தெடுத்துக் கொடுத்து ”உன் தம்பிக்கு அநேகமாக இவை சரியாக இருக்கலாம் - அவனைப் போட்டுக்கொள்ளச் சொல்” என தாராள மனஸுடன் அள்ளித்தருகிறார் ராஜா.

      ”என் தம்பியேயானாலும் அவன் நன்கு வளர்ந்து விட்டான் ஸார், இவையெல்லாம் அவனுக்குச் சேரவே சேராது” எனச் சொல்லி வாங்கிச் செல்ல மறுத்துவிடுகிறார் அந்த அண்ணன்.

      இதைக்கேட்டு மிகவும் மனம் நொந்துபோன ராஜா எதற்குமே உதவாத தன் அத்தனைச் சட்டைகளையும் குப்பைத்தொட்டியில் எறிந்துவிட நேரிடுகிறது.

      இத்தகைய பொருத்தமான சம்பவங்களைக் கதையில் ஆங்காங்கே கொண்டுவந்து, படிக்கும் நம்மை கண்கலங்க வைக்கிறார், கதாசிரியர் ஜெயஸ்ரீ அவர்கள்.

      //‘கண்கள் மாற்றும்’ கதை இக்கால பிள்ளைகளுக்கு ஒரு அறிவுரையாக இருந்து அவர்களின் போக்கை மாற்றும் என எண்ணுகிறேன். //

      இக்கால பிள்ளைகளுக்கு ஒரு அறிவுரையாக இருக்குமோ என்னவோ .... இருப்பினும் கதைக்கு ஓர் வித்யாசமான நல்ல முடிவாகக் கொடுத்து .... தன்னைப்போன்ற ஆதரவற்ற முதியவர்களுக்கு ஓர் நிரந்தரத் தீர்வு ஏற்படுமாறு அந்த வயதான தாய் ஒரு சமூக சேவையே செய்திருப்பதாகக் காட்டியுள்ளார்கள், திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள்.

      //நான்கு கதைகளையும் முடிவைத் தராமல் சுவையாய் சுருக்கித் தந்து படிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு பாராட்டுகள்! //

      மிகவும் சந்தோஷம், ஸார்.

      //அன்றாட வாழ்வில் நாம் காணுகின்ற நிகழ்வுகளை அருமையான கதைகளாகப் படைத்த திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்! //

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பு அனுபவங்களுக்கும், அழகான விரிவான கருத்துக்களை தங்கள் பாணியில் சொல்லி மகிழ்வித்துள்ளதற்கும், தங்களின் மதிப்பு மிக்க பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  20. அருமையான விமர்சனத்திற்கு நன்றி. உங்களது மதிப்பீடானது அவரது நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது. நூலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd),
      Tamil University May 23, 2017 at 11:35 AM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம் ஐயா.

      //அருமையான விமர்சனத்திற்கு நன்றி. உங்களது மதிப்பீடானது அவரது நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது. நூலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், எனது மதிப்பீட்டினை
      ’தமிழ் பல்கலைக்கழகம்’ ஆகிய தாங்களும் மிகச் சரியாக மறு மதிப்பீடு செய்து, நூலாசிரியரையும் என்னையும் பாராட்டி கெளரவித்து இங்கு கருத்துச் சொல்லியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  21. அற்புதமான எழுத்துக்கள் மற்றும் இந்த எழுத்தாளர் "ஜெயஸ்ரீ" பற்றி தெரிந்துகொண்டேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Uma Maheswari Anandane May 23, 2017 at 1:20 PM

      வாங்கோ வணக்கம். என் வலைத்தளத்திற்கு தங்களின் முதல் வருகை .... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)

      //அற்புதமான எழுத்துக்கள் மற்றும் இந்த எழுத்தாளர் "ஜெயஸ்ரீ" பற்றி தெரிந்துகொண்டேன். நன்றி!//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும் நூலாசிரியரைப் பற்றி தெரிந்துகொண்டுள்ளதாகச் சொல்லியுள்ளதற்கும், அற்புதமான எழுத்துக்கள் என்ற பாராட்டுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  22. கோபூஜி ...... இது யாரு புதுசா ஒரு ஜெயஸ்ரீ மேடம்? அவங்களைப்பற்றியே வரிசையாக இதுவரை ஏழு பதிவு கொடுத்து அசத்திட்டு வரீங்க ..... எங்களையெல்லாம் சுத்தமா இப்படி மறந்துட்டீங்களே ..... கோபூஜி ..... இது நியாயமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:19 PM

      வாங்கோ ’மீனா-முன்னா-மெஹர்-மாமி’, வணக்கம்.

      கடைசியில் இப்போ உன் விருப்பப்படியே, உன் மனம் போல் மாங்கல்யமாக, உனக்குக் கல்யாணம் ஆகி ரொம்ப சந்தோஷமா இருக்கிறாய் என்பது உன்னுடைய ஏராளமான பின்னூட்டங்களிலேயே தெரிகிறது. உனக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். :))

      கல்யாண சாப்பாடாவது போடுவாய் என்று மிகவும் எதிர்பார்த்து, முன்னா பார்க் நட்புகள் எல்லோருமே ஏமாந்து போனோம். :(

      //கோபூஜி ...... இது யாரு புதுசா ஒரு ஜெயஸ்ரீ மேடம்?//

      இவர்கள் ஒன்றும் புதிது அல்ல. மிகப்பிரபலமான பழைய பதிவர்தான். குடத்திலிட்ட விளக்குபோல, ’இருக்கும் இடம் தெரியாமல்’ மிகவும் அமைதியாக இருப்பவர்கள்.

      ’நிறைகுடம் தளும்பாது’ என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமானவர்கள் இவர்கள்.

      என் மனதைக்கவர்ந்த உலகின் உன்னத தமிழ் எழுத்தாளர்களில் இவருக்கும் ஒரு மிக முக்கிய இடம் உண்டு.

      மின்னூல் வெளியீடுகளுக்கு மட்டுமே இவர் புதியவராகும்.

      //அவங்களைப்பற்றியே வரிசையாக இதுவரை ஏழு பதிவு கொடுத்து அசத்திட்டு வரீங்க ..... //

      அவர்களின் மிகச் சிறப்பான மின்னூல் வெளியீடுகளில் முதல் ஆறு நூல்களை என் பார்வைக்கு ‘ஃப்ரீ கிஃப்ட் - அன்பளிப்பு’ ஆக அனுப்பியிருந்தார்கள்.

      அவற்றைப் படித்து அசந்துபோன நான், இதனைப்பற்றி என் வலைத்தளத்தினில் சிறப்பித்து எழுதி, மற்றவர்களின் கவனத்திற்கும் இவர்களின் அருமை பெருமைகளைக் கொண்டு செல்லவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டுமே எழுதி வருகிறேன்.

      [அதிலேயே நான் மிகவும் (அசந்து) களைத்துப்போய் விட்டேனாக்கும். :))))) ]

      //எங்களையெல்லாம் சுத்தமா இப்படி மறந்துட்டீங்களே ..... கோபூஜி ..... இது நியாயமா?//

      நான் யாரையுமே மறக்கவில்லை. நமது நட்பெல்லாம் மறக்கக்கூடியதா? உன்னுடைய முதல் 400 பதிவுகளுக்கும் மேல் தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டுள்ளவன் நான் ஒருவன் மட்டும்தானே.

      கடைசியாக உன் 425-வது பதிவுக்கு செப்டம்பர் 2016 இல் நான் வருகை தந்து கருத்தளித்துள்ள ஞாபகம் எனக்கு உள்ளது.

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/roja-roja.html

      நீக்கு
  23. சும்மாச் சொல்லக்கூடாது ..... ஒவ்வொரு பதிவிலேயும் மாமி நல்லா சூப்பரா தளதளன்னு தக்காளி போல அழகாத்தான் இருக்காங்கோ.

    எங்கட கோபூஜி நட்பின் செலெக்‌ஷன்னா சும்மாவா ! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:20 PM

      //சும்மாச் சொல்லக்கூடாது ..... ஒவ்வொரு பதிவிலேயும் மாமி நல்லா சூப்பரா தளதளன்னு தக்காளி போல அழகாத்தான் இருக்காங்கோ.//

      அடடா, ஒரு பெண்ணின் அழகைப்பார்த்து மற்றொரு பெண்ணே இவ்வாறு சொல்வது என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நீ மட்டும் என்னவாம் .... சும்மா உரித்த உருளைக்கிழங்கு போல கும்முன்னு இருப்பாய் என நானும் எங்காளு ஒருத்தி மூலம் கேள்விப்பட்டுள்ளேனாக்கும்.

      //எங்கட கோபூஜி நட்பின் செலெக்‌ஷன்னா சும்மாவா ! :)//

      ’கொழுப்பு எடுத்த குந்தாணி .... லங்கிணி .... வெல மோரிலே வெண்ணெய் எடுப்பவள்’ என்றெல்லாம் நான் உன்னைச் சொன்னால் கொஞ்சம் கோபித்துக்கொள்வது போல நீ என்னிடம் பாசாங்கு செய்து நடிப்பாய் + சிரிப்பாய்.

      பொதுவாக பெண்கள் எல்லோருமே சாக்ஷாத் அம்பாள் ஸ்வரூபம் மட்டுமே. அந்த அகிலாண்டகோடி பிரும்மாண்ட நாயகியான அம்பாளின் திவ்யமான தேஜஸ் இந்த ஜெயஸ்ரீ மேடம் முகத்திலும் பிரதிபலிப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்.

      நாம் இருவருமே இரு கரம் கூப்பி அவர்களை அம்பாளாக நினைத்து வணங்கி வழிபடுவோம்.

      அவர்களின் ஆசியால் நீயும் விரைவில் தாய்மை அடைய என் அன்பான ஆசிகள். :)

      நீக்கு
  24. 11-12-13 கதையில் //”எடு வெளக்கமாத்த. // என்ற வரிகளைப் படிச்சதும் எங்கட அம்மா ஞாபகம் வந்திடுச்சு, கோபூஜி. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:20 PM

      //11-12-13 கதையில் //”எடு வெளக்கமாத்த...... // என்ற வரிகளைப் படிச்சதும் எங்கட அம்மா ஞாபகம் வந்திடுச்சு, கோபூஜி. :) //

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எனக்கும் நினைவுக்கு வந்திடுச்சு. சமீபத்தில் 11-12.02.2017 இல் நீ வாங்கிய செமயான அடிகள் அல்லவா அவை.

      மறக்க மனம் கூடுதில்லையே ..... !

      நீக்கு
  25. அன்று அதே ஆஸ்பத்தரியில் பெட் நம்பர் 11-இல் ஒருவரும், 12-இல் ஒருவரும், 13-இல் ஒருவரும் அட்மிட் ஆகி தீவிர சிகிச்சை பெறுகிறார்கள். யார் யார் அட்மிட் ஆனார்கள், எதற்காக அட்மிட் ஆகிறார்கள். யார் யாருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உமாவுக்குக் குழந்தை பிறந்ததா? அது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? குமார்-கிரேஸ் லவ் மேரேஜ் என்ன ஆச்சு? எல்லாவற்றிற்கும் விடைகள் இந்த மின்னூலில் உள்ளன. அவசியம் படித்துப் பாருங்கள்.//

    ஆமாம் .... இவ்வளவு சொன்ன நீங்க அதையும் சொல்லியிருக்கக்கூடாதோ .... முடிவு தெரியாமல் என் மண்டையே வெடித்திடும் போல இருக்குதே .... கோபூஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:21 PM

      **அன்று அதே ஆஸ்பத்தரியில் பெட் நம்பர் 11-இல் ஒருவரும், 12-இல் ஒருவரும், 13-இல் ஒருவரும் அட்மிட் ஆகி தீவிர சிகிச்சை பெறுகிறார்கள். யார் யார் அட்மிட் ஆனார்கள், எதற்காக அட்மிட் ஆகிறார்கள். யார் யாருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உமாவுக்குக் குழந்தை பிறந்ததா? அது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? குமார்-கிரேஸ் லவ் மேரேஜ் என்ன ஆச்சு? எல்லாவற்றிற்கும் விடைகள் இந்த மின்னூலில் உள்ளன. அவசியம் படித்துப் பாருங்கள்.**

      //ஆமாம் .... இவ்வளவு சொன்ன நீங்க அதையும் சொல்லியிருக்கக்கூடாதோ .... முடிவு தெரியாமல் என் மண்டையே வெடித்திடும் போல இருக்குதே .... கோபூஜி.//

      கதையின் முடிவையும் நானே சொல்லிவிட்டால், அந்த மின்னூலை வாங்கிப்படிக்கணும் என்ற ஆர்வமே போய்விடுமே, மீனா.

      அதனால் அதுபோலெல்லாம் நூல் மதிப்புரையில் விரிவாக எதுவும் நாம் சொல்லவேகூடாது.

      நீக்கு
  26. தாய்மையின் தாகம்’ கதையில் வரும் முதிர்கன்னி உமாவுக்குக் கடைசியிலே கல்யாணம் ஆச்சா என்பதை எனக்கு மட்டும் மெயில் மூலம் சொல்லிடுங்க கோபூஜி ...... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:22 PM

      //தாய்மையின் தாகம்’ கதையில் வரும் முதிர்கன்னி உமாவுக்குக் கடைசியிலே கல்யாணம் ஆச்சா என்பதை எனக்கு மட்டும் மெயில் மூலம் சொல்லிடுங்க கோபூஜி ...... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.//

      உன்னைப்போலவே யாருக்குமே தெரியாமல் .... அவளுக்கும் திடீரென்று ரிஜிஸ்டர் மேரேஜ் ஆகக் கல்யாணம் ஆகியிருக்கும் என நான் நம்புகிறேன். :)

      நீக்கு
  27. நாலடி கோபுரங்கள்’ கதையில் ராஜாவும், ரேணுகாவும் பேசிக்கொள்வது மிகவும் அழகாக உள்ளது.

    எங்கட கோபூஜி, என் வாழ்க்கையில் எனக்குத் தன்னம்பிக்கை கொடுத்தது போலவே அந்த ரேணுகா என்ற பொண்ணு அந்த ராஜாவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறாள்.

    எங்கட கோபூஜியும் கதையில் வரும் ரேணுகாவும் வாழ்க !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:22 PM

      //நாலடி கோபுரங்கள்’ கதையில் ராஜாவும், ரேணுகாவும் பேசிக்கொள்வது மிகவும் அழகாக உள்ளது.//

      ஆமாம். எனக்கும் அது மிகவும் அழகாகவே தோன்றி மகிழ்ச்சியளித்தது. :)

      //எங்கட கோபூஜி, என் வாழ்க்கையில் எனக்குத் தன்னம்பிக்கை கொடுத்தது போலவே அந்த ரேணுகா என்ற பொண்ணு அந்த ராஜாவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறாள். //

      ஆஹா, உன்னை இதற்காகவே நான் மெச்சுகிறேன். எல்லாம் கடவுள் செயல் மட்டுமே.

      //எங்கட கோபூஜியும் கதையில் வரும் ரேணுகாவும் வாழ்க !//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மீனா.

      நீக்கு
  28. மாட்டுப்பெண் கீதா அவள் பெண் ஹரிணிக்கு தலை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்டதும், ”எதிராளாத்து கோமதியா..? அவள் எதுக்கு இங்கே வந்தாள் ? அவகிட்டே நீங்க என்ன வம்பு பேசினேள்? இங்கே இருந்துண்டு அங்கே எங்களைப் பத்தி குற்றம் சொல்லிக் கொடுத்திருப்பேள், வேறென்ன, திங்கறது ஒரு இடம், கோள் சொல்றது இன்னொரு இடமாகும்” என்றபடி ‘நேராக் காட்டேண்டி’ என்று சொல்லி ஹரிணியின் தலையில் ஒரு இடி இடித்தாள் கீதா. //

    மாமியார் தலையில் போய் ஒரு இடி இடிக்க நினைத்த கீதா தன் பெண் ஹரிணி தலையில் இடிப்பதாகச் சொல்லியுள்ளது அருமை.

    எப்படியெல்லாம் இப்படி சூப்பராக கதை வரிகளைக் கொண்டு வராங்களோ! டி.வி.யிலே நிறைய சீரியல் பார்ப்பாங்களோ என்னவோ ! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:23 PM

      **மாட்டுப்பெண் கீதா அவள் பெண் ஹரிணிக்கு தலை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்டதும், ”எதிராளாத்து கோமதியா..? அவள் எதுக்கு இங்கே வந்தாள் ? அவகிட்டே நீங்க என்ன வம்பு பேசினேள்? இங்கே இருந்துண்டு அங்கே எங்களைப் பத்தி குற்றம் சொல்லிக் கொடுத்திருப்பேள், வேறென்ன, திங்கறது ஒரு இடம், கோள் சொல்றது இன்னொரு இடமாகும்” என்றபடி ‘நேராக் காட்டேண்டி’ என்று சொல்லி ஹரிணியின் தலையில் ஒரு இடி இடித்தாள் கீதா.**

      //மாமியார் தலையில் போய் ஒரு இடி இடிக்க நினைத்த கீதா தன் பெண் ஹரிணி தலையில் இடிப்பதாகச் சொல்லியுள்ளது அருமை. //

      கரெக்டா நீயும் அந்தப் பாயிண்டைப் பிடித்து விட்டாய்.

      //எப்படியெல்லாம் இப்படி சூப்பராக கதை வரிகளைக் கொண்டு வராங்களோ! டி.வி.யிலே நிறைய சீரியல் பார்ப்பாங்களோ என்னவோ ! :) //

      தெரியவில்லை. நான் டி.வி. சீரியல்கள் பார்ப்பதே இல்லை.

      நீக்கு
  29. வீடு பூரா பூரியும் கிழங்கு மசாலாவும் மணத்துக் கொட்ட, ஆசையாய் காத்திருக்கிறாள் மாமியார். ஆனால் அவளுக்கு மட்டும் கேழ்வரகு கஞ்சி தான் வருகிறது.//

    இதைப் படிக்கும் எனக்கே மிகவும் கொடுமையாகத்தான் உள்ளது.

    பூரி-மஸால் பிரியரான எங்கட கோபூஜிக்கு எப்படி இருந்திருக்கும், என எனக்குள் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:24 PM

      **வீடு பூரா பூரியும் கிழங்கு மசாலாவும் மணத்துக் கொட்ட, ஆசையாய் காத்திருக்கிறாள் மாமியார். ஆனால் அவளுக்கு மட்டும் கேழ்வரகு கஞ்சி தான் வருகிறது.**

      //இதைப் படிக்கும் எனக்கே மிகவும் கொடுமையாகத்தான் உள்ளது. //

      படிக்கும்போது இந்த இடம் எனக்கும் மிகவும் வருத்தமாகவே இருந்தது.

      //பூரி-மஸால் பிரியரான எங்கட கோபூஜிக்கு எப்படி இருந்திருக்கும், என எனக்குள் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். :) //

      ஆஹா, என்றைக்கோ நான் சொன்னதை இன்னும் நீ உன் நினைவில் வைத்திருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. :)

      நீக்கு
  30. பாட்டிம்மா வாங்கினா ஒரு பூ தான் வாங்குவா….? இந்தாப் பணம் வாங்கிட்டு நடையைக் கட்டு….” என்றவள் கை கொள்ளாத வாழைப்பூக்களை கொண்டு வரும்போதே ”பாட்டிம்மா இல்லியா தோட்டிம்மா இல்லையான்னு ஒரு கேள்வி, என்னமோ இவளோட அவ கூட ஒட்டிட்டு பொறந்தா மாதிரி” ன்னு சொல்லிக் கொண்டே வந்து டைனிங் டேபிள் மேல் பூக்களை தொப்பென்று வைக்கிறாள் ... மருமகள் கீதா.//

    கோபூஜி ...... உங்களை மாதிரியே மிகவும் அசத்தலாகத்தான் எழுதியிருக்காங்கோ இந்த ஜெயஸ்ரீ மேடம். என் ஸ்பெஷல் பாராட்டுக்களை அவங்களிடம் சொல்லிடுங்கோ கோபூஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:25 PM

      **பாட்டிம்மா வாங்கினா ஒரு பூ தான் வாங்குவா….? இந்தாப் பணம் வாங்கிட்டு நடையைக் கட்டு….” என்றவள் கை கொள்ளாத வாழைப்பூக்களை கொண்டு வரும்போதே ”பாட்டிம்மா இல்லியா தோட்டிம்மா இல்லையான்னு ஒரு கேள்வி, என்னமோ இவளோட அவ கூட ஒட்டிட்டு பொறந்தா மாதிரி” ன்னு சொல்லிக் கொண்டே வந்து டைனிங் டேபிள் மேல் பூக்களை தொப்பென்று வைக்கிறாள் ... மருமகள் கீதா.**

      //கோபூஜி ...... உங்களை மாதிரியே மிகவும் அசத்தலாகத்தான் எழுதியிருக்காங்கோ இந்த ஜெயஸ்ரீ மேடம். //

      நானே ஒருவரின் எழுத்துக்களைப் பாராட்டிச் சொல்கிறேன் என்றால், அவர்களின் எழுத்துக்களைப் பற்றி நீயே இதுபோலப் படித்துத்தான் புரிந்துகொள்ளணுமாக்கும். :)

      //என் ஸ்பெஷல் பாராட்டுக்களை அவங்களிடம் சொல்லிடுங்கோ கோபூஜி//

      நிச்சயமாகச் சொல்வேன். உனக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மீனா.

      நீக்கு
  31. படங்களுடன் கூடிய இந்த மிகப் பெரிய பதிவு ஜோராக்கீதூ கோபுஜி.

    கதாசிரியர் ஜெயஸ்ரீ அவர்களுக்கும், அவர்களை எனக்கு இன்று அறிமுகப்படுத்தியுள்ள எங்கட கோபுஜிக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் சொல்லிக்கிட்டு ஜூட் ஆகிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 23, 2017 at 6:25 PM

      //படங்களுடன் கூடிய இந்த மிகப் பெரிய பதிவு ஜோராக்கீதூ கோபுஜி. //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மீனா.

      //கதாசிரியர் ஜெயஸ்ரீ அவர்களுக்கும், அவர்களை எனக்கு இன்று அறிமுகப்படுத்தியுள்ள எங்கட கோபுஜிக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் சொல்லிக்கிட்டு ஜூட் ஆகிக்கொள்கிறேன்.//

      உன் அன்பான வருகைக்கும், மணமான மகிழ்ச்சித்துள்ளலுடன், மனம் நிறைந்துபோய் இங்கு வாரி இரைத்துள்ள ஏராளமான + தாராளமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மீனா.

      பிரியமுள்ள கோபூஜி

      நீக்கு
  32. பெரிப்பா... நானும் வந்துட்டேனே.
    முதல் கதையில் பெண்குழந்தை பிறந்தா 20-- பவுன் நகையோட வரணும்னு சொல்றாங்களே.. அப்படி நகை கொண்டு போனா பெண்...ஆணாக மாறிடுமா...... இப்பலாம் பெண்கம்தான் சாதனை பண்றாங்க. சமீபத்துல வெளியான..12-----10---- தேர்வுகளில் பெண்கள்தானே சாதனை பண்ணி டாப்ல வந்திருக்காங்க.. வீட்டையும் கவனிச்சுண்டு வேலைக்கும் போயிண்டு எவ்வளவு திறமையா சமாளிக்கறாங்க.. பாக்க போனா வயசான பெரியவங்களை அன்புடனும் பாசத்துடனும் கவனிப்பது பெண்கள்தான்....

    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy May 24, 2017 at 9:57 AM

      //பெரிப்பா... நானும் வந்துட்டேனே.//

      வாடா..... என் செல்லமே, ஹாப்பி .... நீ திரும்பத்திரும்ப இங்கு வருவாய் என நானும் எதிர்பார்த்தேனாக்கும்.

      21-ம் தேதி நீ வந்துட்டு, ஏதோ அரைகுறையாச் சொல்லிட்டு ஓடியே போய் விட்டாய்.

      சரி.... வெயில் வீணாப்போகிறதே என்ற கவலையில் வத்தல் போட்டு, வடாம் பிழியப் போய் இருப்பாய் என எனக்குள் நானே நினைத்துக்கொண்டேன்.

      //முதல் கதையில் பெண்குழந்தை பிறந்தா 20-- பவுன் நகையோட வரணும்னு சொல்றாங்களே.. அப்படி நகை கொண்டு போனா பெண்...ஆணாக மாறிடுமா......//

      அதானே ..... இந்த மனுஷ்யாலெல்லாம் எப்படி எப்படிப் பேசறாள்ன்னு நீயே பார்த்துக்கோ.

      இந்த வம்பெல்லாம் உன் விஷயத்தில் வேண்டவே வேண்டாம்ன்னு நினைச்சுத்தான், நான் உன் அப்பாவை நேரில் சந்தித்து, அவரை அப்படியே கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்துகொண்டு, அவருக்குக் காலணா செலவு இல்லாமல், உன்னைக் கையோடு கொத்திக்கொண்டு வந்து ஆலமரம் போன்ற எங்கள் குடும்பத்தில் உள்ள ஏதேனும் ஒரு பயலுக்கு, முழுக்க முழுக்க எங்கள் செலவிலேயே, கட்டி வெச்சுப்புடலாம்ன்னு ஆசை ஆசையா மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருந்தேன்.

      அதுதான் நடக்காம போயிடுச்சு. பகவத் சங்கல்ப்பம் வேறு விதமா இருந்துடுச்சு. எங்களுக்கு அந்தக் கொடுப்பிணை இல்லாமல் போயிடுச்சு. :(

      //இப்பலாம் பெண்கள்தான் சாதனை பண்றாங்க. சமீபத்துல வெளியான..12-----10---- தேர்வுகளில் பெண்கள்தானே சாதனை பண்ணி டாப்ல வந்திருக்காங்க..//

      இப்போ மட்டுமல்லா. எப்போதுமே தொடர்ந்து இந்தப் பெண் குட்டிகள் மட்டும்தான் படிப்பினில் சாதனை செய்து வருகிறார்கள்.

      //வீட்டையும் கவனிச்சுண்டு வேலைக்கும் போயிண்டு எவ்வளவு திறமையா சமாளிக்கறாங்க..//

      இதனை நீ உங்காத்து பேர்களையே வைத்து, மிகவும் நன்கு உணர்ந்து, மிக அழகாகச் சொல்லியிருக்கிறாய்.

      வேலைக்குச் செல்லாவிட்டாலும், வீட்டு நிர்வாகத்தைத் திறம்பட கவனிக்கவே, உன்னைப்போன்ற ஒரே ஒருத்தி வீட்டில் இருந்தாலே போதும். அந்த வீட்டில் ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் அப்படியே பொங்குமே. :)

      //பாக்க போனா வயசான பெரியவங்களை அன்புடனும் பாசத்துடனும் கவனிப்பது பெண்கள்தான்....//

      அதே ..... அதே ..... ஹாப்பி. மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறாய். அன்புடனும் பாசத்துடன் கவனிக்க எங்கட ஹாப்பியைப் போன்ற பெண் ஒருத்தி எங்காத்தில் இல்லையே என்ற ஏக்கம் வருகிறது .... வயசான பெரியவனான எனக்கும் இப்போது இதைப் படித்ததும். :(

      நீக்கு
  33. ரெண்டாவது கதையிலும் உமா...வா...ஜெஸ்ரீ மேடம் உங்களுக்கு உமாங்கற பேரு ரொம்ப பிடிக்குமோ.. முதிர் கன்னியின் மனநிலை தெளிவாக விளக்கி இருக்கிங்க. ரெண்டாவது கல்யாணமானாலும் நல்ல மனுஷாளா கிடைச்சா சம்மதிக்கலாமே. கூடவே போனஸா பிள்ளையும் கிடைக்குதே...எப்படிலாம் யோசிச்சு எழுதுறிங்க..

    உங்க போட்டோ..( இந்தபதிவுல) நீங்க ஒரு கம்பீரமான அழகோட ஜொலிக்கறேள்.. உதடுகளில் மென்மையான சிறு புன்னகை கண்களில் சாந்தம் கருணை நீல புடவை..ப்ளவுஸில் கைகட்டி நிற்கும் அழகு சாதிச்சுட்டேனேங்கற பெருமிதம் எல்லா மே அட்டகாசம் மாமி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy May 24, 2017 at 10:06 AM

      //ரெண்டாவது கதையிலும் உமா...வா...//

      ஆமாமில்லே. ஹாப்பி .... நீ சொன்ன பிறகுதான் நானும் இதனை ஊன்றி கவனித்தேன். உன் கண்கள் படு ஷார்ப் ஆக (கழுகு போல) உள்ளன. வெரி குட். கீப்...இட்...மேலே. :)))))

      //ஜெயஸ்ரீ மேடம் உங்களுக்கு உமாங்கற பேரு ரொம்ப பிடிக்குமோ..//

      அவங்க பெயரும், அவங்களுக்குப் பிடிச்ச எல்லாப்பெயர்களும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும், ஹாப்பி. வேறொரு நெடுங்கதையில் இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சித்ரா, கெளரி, லாவண்யா முதலியவர்கள் என் நெஞ்சில் நிறைந்து நின்றதனால் மட்டுமே எங்களின் ஆத்மார்த்தமான நட்பு மிகவும் ஸ்ட்ராங் ஆகிவிட்டது, ஹாப்பி.

      //முதிர் கன்னியின் மனநிலை தெளிவாக விளக்கி இருக்கிங்க.//

      அதெல்லாம் ஜோராகவே விளக்கிப்புடுவாங்கோ. எனக்கு மிகவும் பிடித்தமான மிகச் சிறந்த + மிகப்பிரபல எழுத்தாளர் ஆச்சே. :)

      //ரெண்டாவது கல்யாணமானாலும் நல்ல மனுஷாளா கிடைச்சா சம்மதிக்கலாமே. கூடவே போனஸா பிள்ளையும் கிடைக்குதே...எப்படிலாம் யோசிச்சு எழுதுறிங்க..//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நீயும் எப்படியெல்லாம் யோசிச்சு ‘போனஸ்’ என்ற மிக அருமையான வார்த்தையையும் உபயோகித்து இதனை எழுதியிருக்கிறாய் .... ஹாப்பி.

      ரியல்லி ஐ யம் வெரி வெரி ஹாப்பி டு ரீட் திஸ், ஹாப்பி. :)

      //உங்க போட்டோ.. (இந்தபதிவுல) நீங்க ஒரு கம்பீரமான அழகோட ஜொலிக்கறேள்..//

      அப்படிப் போடு... போடு... போடு... ஒரே அசத்தா அசத்திப்புட்டாய் ..... நீ.

      //உதடுகளில் மென்மையான சிறு புன்னகை, கண்களில் சாந்தம் + கருணை, நீல புடவை.. ப்ளவுஸில் கைகட்டி நிற்கும் அழகு.... சாதிச்சுட்டேனேங்கற பெருமிதம் எல்லா மே அட்டகாசம் மாமி..//

      நான் ஒரு பக்கத்திற்கு மேல் வர்ணிக்க, எனக்குள் நினைத்திருந்தவற்றை, நீ ஒரே வரியில் சிம்பிளாக அழகாக என் சார்பில் சொல்லி விட்டாய். தேங்க் யூ டா ஹாப்பி. :)

      ஆனாலும் மிகவும் சங்கோஜியான இந்த மாமியிடம், ஒரு மாறுதலுக்காக, ஒருசில போட்டோக்களை நான் வாங்குவதற்குள், நான் பட்டபாடு எனக்கு மட்டுமே தெரியும்.... டா ஹாப்பி.

      நீக்கு
  34. வாழையின் பூ ஒரு சுவை, காய் ஒரு சுவை, கனி ஒரு சுவை, தண்டு ஒரு சுவை என்பதைப்போல தொகுப்பின் ஒவ்வொரு சிறுகதையும் இருக்கிறது...மிகச் சுவாரசியமான அறிமுகங்கள் அளித்து அதைவிட மிகச்சரியாக டுவிஸ்ட் வரும் இடம் பார்த்து... மற்றவற்றை மின்னூலில் காண்க...இது வாத்யாரோட டச்சுங்கோ...போறபோக்க பாத்தா எல்லோரும் மின்னூலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணியேபுடுவாங்க போல இருக்கே...அருமையான கதைக்களங்கள்...அருமையான அறிமுகம்...சகோதரி ஸ்ரீ-மதி ஜெய-ஸ்ரீ அவர்களது தந்தையைப்போல எனது தந்தையும் ரயில்வே ஓய்வூதியர் என்பது கூடுதல் மகிழ்ச்சி...கட்டுத்தறியே கவிபாடுமென்றால்...செல்(வ)ல மகள் கதையாடு(ளு)வதில் வியப்பென்ன...???மேன்மேலும் நூல்கள் வெளியிடவும், அறிமுகங்கள் தொடரவும் வாழ்த்துகள்...மிகவும் மகிழ்ச்சி...நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI May 24, 2017 at 1:38 PM

      வாங்கோ வாத்யாரே ! வணக்கம். பொன்மனச்செம்மல் + பின்னூட்ட வள்ளலான எங்கட வாத்யாரை இந்தப்பக்கம் வெகு நாட்களாகக் காணுமே என மிகவும் கவலையாப்போச்சுது. :(

      //வாழையின் பூ ஒரு சுவை, காய் ஒரு சுவை, கனி ஒரு சுவை, தண்டு ஒரு சுவை என்பதைப்போல தொகுப்பின் ஒவ்வொரு சிறுகதையும் இருக்கிறது...//

      மிக்க மகிழ்ச்சி. மனிதர்களின் குழந்தைப்பருவமும், பேரெழுச்சி மிக்க இளமையும், தடுமாறும் பேரிளமையும், சுத்த வழுவட்டையான முதுமையும் கூட இப்படித்தான் .... ஓர் மரத்தின் இலை-பூ-பிஞ்சு-காய்-கனி-பழுத்த இலை-சரகு, என்பதுபோல ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு தனி அழகு தான்-பக்குவம்தான். :)

      நன்கு அடர்த்தியான முடி வளர்ந்த ஆசாமிகளும் கூட வழுக்கையைத்தான் விரும்புகின்றனர் .... இளநீர் வாங்கி அருந்தும்போது மட்டும். :)

      //மிகச் சுவாரசியமான அறிமுகங்கள் அளித்து அதைவிட மிகச்சரியாக டுவிஸ்ட் வரும் இடம் பார்த்து... மற்றவற்றை மின்னூலில் காண்க...இது வாத்யாரோட டச்சுங்கோ...//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எங்கட சின்ன வாத்யார் ஒருவரே இந்தப் பெரிய வாத்யாரை நன்கு புரிந்துகொண்டுள்ளவராக்கும்.

      https://gopu1949.blogspot.in/2014/10/6-mgr.html

      https://gopu1949.blogspot.in/2014/08/vgk-28-01-03-first-prize-winners.html

      //போறபோக்க பாத்தா எல்லோரும் மின்னூலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணியேபுடுவாங்க போல இருக்கே...//

      ஆமாம். எல்லோரும் க்யூவில் நின்று கொண்டு இருக்கிறார்கள். மின்னூல் வெளியிட்டுள்ள எங்கள் எல்லோருக்கும் வருமானம் சும்மாக் கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது. இன்றுவரை எனக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ராயல்டி தொகை ரூ.76/50 .... இது என்னைப் பொறுத்தவரை சுமார் 76-77 கோடி ரூபாய்களுக்குச் சமமாகும். :))))))

      //அருமையான கதைக்களங்கள்... அருமையான அறிமுகம்...//

      மிக்க மகிழ்ச்சி வாத்யாரே ! :)

      //சகோதரி ஸ்ரீ-மதி ஜெய-ஸ்ரீ அவர்களது தந்தையைப்போல எனது தந்தையும் ரயில்வே ஓய்வூதியர் என்பது கூடுதல் மகிழ்ச்சி... கட்டுத்தறியே கவிபாடுமென்றால்...செல்(வ)ல மகள் கதையாடு(ளு)வதில் வியப்பென்ன...??? மேன்மேலும் நூல்கள் வெளியிடவும், அறிமுகங்கள் தொடரவும் வாழ்த்துகள்... மிகவும் மகிழ்ச்சி...நன்றி...//

      தங்களின் தனிப்பாணியில் ப்ராக்கெட் போட்டுள்ள சொல்லாடல்கள் வெகு அருமை வாத்யாரே. :)

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், ஆழ்ந்த-ஆத்மார்த்தமான-அசத்தலான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், வாத்யாரே.

      அன்புடன் VGK

      நீக்கு
  35. வித்தியாசமான, சரளமான எழுத்துக்கள். சமூகப் பிரச்னைகளை மையம் கொண்ட கதைகள். அத்தனையும் அருமை. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ.

    கோபு அண்ணா உங்களுக்கு வாழ்த்து சொல்லியே கையும், வாயும் வலிக்கறது போங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 24, 2017 at 7:15 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      //வித்தியாசமான, சரளமான எழுத்துக்கள். சமூகப் பிரச்னைகளை மையம் கொண்ட கதைகள். அத்தனையும் அருமை. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ.//

      எதையும் படிக்காமலேயே எதையோ, அவசர அவசரமாக, ஸ்டாண்டர்ட் ஆக அள்ளித்தெளித்து விட்டு, வாழ்த்தியுள்ளதற்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

      //கோபு அண்ணா உங்களுக்கு வாழ்த்து சொல்லியே கையும், வாயும் வலிக்கறது போங்கோ.//

      இனி உங்கள் கையும் வாயும் வலிக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன், ஜெயா.

      இனி எங்கட ஜெயாவோ ஜெயஸ்ரீயோ அன்புக்கட்டளைகள் இட்டால் மட்டுமே இந்த என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் வெளியாகுமாக்கும்.

      குறிப்பாக இந்த என் பதிவுக்கும், இதற்கு அடுத்து வரும் என் பதிவுக்கும் இடையே ஒரு பதிவுகூட நான் வெளியிட மாட்டேன் என்பதை உறுதியாக இங்கு எங்கள் ஊர் உச்சிப்பிள்ளையாரை சாட்சியாக வைத்து, நான் சொல்லிக்கொள்கிறேன். :)

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ஏதோ நல்லாக் குழப்பிவிட்டு பதில் கொடுத்தாச்சு.

      அனைத்துக்கும் மிக்க நன்றி, ஜெயா.

      நீக்கு
  36. நான் நலம் ஐயா,தாங்கள் நலமா...தங்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக எழுதமுடியும்.ஜெயாவுக்கு வாழ்த்துக்கள் !!
    வலைப்பூவில் வேலைபளுவின் காரணத்தால் எழுதுவது குறைந்துவிட்டது ஐயா !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Menaga sathia May 24, 2017 at 9:14 PM

      ஆஹா, வாங்கோ மேனகா, வணக்கம்.

      தங்களை இங்கு சந்தித்து பல வருஷங்கள் ஆச்சு. 2013 மே முதல் 2014 ஜனவரி வரை நான் தொடர்ச்சியாக வெளியிட்டிருந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய ஆன்மிகத் தொடரிலுள்ள மொத்தம் 108 பகுதிகளில் 105 பகுதிகளுக்கு பின்னூட்டமிட்டு சிறப்பிடம் பெற்றிருந்தீர்கள்.

      இதோ அதற்கான சிறப்புப் பதிவுக்கான இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/01/108108.html

      இன்று மீண்டும் உங்களை இங்கு சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

      //நான் நலம் ஐயா, தாங்கள் நலமா...//

      மிகவும் சந்தோஷம்மா. நானும் இங்கு நலமே. :)

      //தங்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக எழுதமுடியும்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      ஜெயாவுக்கு வாழ்த்துக்கள் !!//

      ஜெயஸ்ரீ க்கான வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      //வலைப்பூவில் வேலைபளுவின் காரணத்தால் எழுதுவது குறைந்துவிட்டது ஐயா !!//

      பரவாயில்லை. இங்கு என் நிலையும் அப்படியே. நான் எழுதுவதையும் பெரும்பாலும் குறைத்துக்கொண்டு விட்டேன்.

      2011 முதல் 2015 வரை மொத்தம் 806 பதிவுகள் கொடுத்துள்ள நான், 2016-ம் ஆண்டு வெறும் 33 பதிவுகளும், இந்த 2017-ம் ஆண்டு இதுவரை வெறும் 16 பதிவுகளும் மட்டுமே கொடுத்துள்ளேன். அதுவும் இவை எல்லாமே பெரும்பாலும் நூல் அறிமுகங்கள் மட்டுமே.

      தங்களின் அபூர்வ வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  37. நான்கு முத்தான கதைகளை அருமையாக மதிப்பிட்டுக் கிரீடம் சூட்டி நாலடி கோபுரம் என்று கதாசிரியர் எழுதியிருந்தால் அதனைத் தாங்கள் 32 அடிக்கும் மேல் உயர்த்தி 'கோபு'ரமாய் உயர்த்தி அழகு செய்துவிட்டீர்கள்! அனைத்து கதைகளையும் வாசிக்கத் தூண்டும் வரிகள்!! கதையாளரின் எழுத்தும்!

    வாழ்த்துகள் பாராட்டுகள் எழுத்தாளர் ஜெயஸ்ரீ அவர்களுக்கும்....தங்களுக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu May 24, 2017 at 9:19 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நான்கு முத்தான கதைகளை அருமையாக மதிப்பிட்டுக் கிரீடம் சூட்டி நாலடி கோபுரம் என்று கதாசிரியர் எழுதியிருந்தால் அதனைத் தாங்கள் 32 அடிக்கும் மேல் உயர்த்தி 'கோபு'ரமாய் உயர்த்தி அழகு செய்துவிட்டீர்கள்! அனைத்து கதைகளையும் வாசிக்கத் தூண்டும் வரிகள்!! கதையாளரின் எழுத்தும்!

      வாழ்த்துகள் பாராட்டுகள் எழுத்தாளர் ஜெயஸ்ரீ அவர்களுக்கும்....தங்களுக்கும்!!//

      தங்களின் அன்பான வருகைக்கும், கிரீடம் சூட்டிச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், குறிப்பாக **‘கோபு’ரமாய்** என்ற இனிய பொருத்தமான சொல்லாடலுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      ‘கோபு’ + ’ரம்’ = கோபுரம்.

      எனவே படித்ததும் ‘கிக்’ ஆகிவிட்டது கோபுவுக்கு. :))))))

      நீக்கு
  38. பிரமாதமான மதிப்புரை . ஜெயஶ்ரீ அவர்களின் கற்பனைத் திறமையை அறிந்து பாராட்டுகிறேன் . ராஜா பற்றிய கதை மிக நன்று . முடிவுதான் சினிமா பாணியில் வலிந்து அமைக்கப்பட்டுள்ளது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொ.ஞானசம்பந்தன் May 25, 2017 at 8:54 AM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //பிரமாதமான மதிப்புரை.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //ஜெயஶ்ரீ அவர்களின் கற்பனைத் திறமையை அறிந்து பாராட்டுகிறேன்.//

      மிகவும் சந்தோஷம், ஸார். :)

      //ராஜா பற்றிய கதை மிக நன்று.//

      ராஜாவின் வாழ்க்கையில் அவன் சந்திக்க நேரும் பல்வேறு அவமானங்களைச் சொல்லிச் சென்றுள்ள பாணியும், எழுத்து நடையும், என்னை மிகவும் வியக்க வைத்து, கதையில் அப்படியே சொக்கி லயிக்க வைத்து விட்டது. அபாரமான கற்பனைகள் மட்டுமே.

      //முடிவுதான் சினிமா பாணியில் வலிந்து அமைக்கப்பட்டுள்ளது.//

      முடிவுக்கான சில அச்சாரங்கள் முதலிலேயே ஆங்காங்கே கதையில் கொண்டுவரப் பட்டுள்ளன. முழுக்கதையையும் படித்துப்பார்த்ததால், அந்த முடிவு சினிமா பாணியில் வலிந்து அமைக்கப்பட்டுள்ளதாக என்னால் ஏனோ நினைக்கத் தோன்றவில்லை.

      இருப்பினும் கதை என்று ஒன்று எழுத ஆரம்பித்து விட்டபிறகு ஏதேனும் ஒரு முடிவு கொடுத்து அதனை முடிக்கத்தானே வேண்டும். அதை ராஜாவுக்கு சாதகமாக கொடுத்து முடித்துள்ளார்கள். ஓரளவு நாம் (வாசகர்கள்) ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் அது அமைந்துள்ளது.

      அதைப் பற்றி முழுவதும் இங்கு நானே வர்ணித்து விட்டால், பிறகு கதை படிக்கும் சுவாரஸ்யமே போய் விடும் என்பதால், ராஜா மேனேஜராக உள்ள அலுவலகத்தில் ஓர் ’விபத்து’ நேர்ந்தது என்று மட்டும் ஓர் புதிய சொல்லைத் தேடிப்பிடித்து போட்டு நானும் இங்கு என் மதிப்புரையை முடித்துள்ளேன்.

      அந்த சம்பவத்தில் தன் உயிரையே பணயம் வைத்து செயல்பட்ட ராஜா என்ற குள்ள மனிதரால் மட்டுமே (வேறு யாராலும் அவசரமாக துணிந்து செய்யவே முடியாத) உயிர்சேதமோ, பொருட்சேதமோ இல்லாமல் தவிர்க்கப்பட்டதாகக் காட்டியுள்ளார்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கூர்ந்து நோக்கி வாசித்துள்ள தங்களின் பழுத்த அனுபவத்திற்கும், தங்களுக்கு மனதில் தோன்றியுள்ள கருத்துக்களை இங்கு தவறாமல் சுட்டிக்காட்டியுள்ளதற்கும், தங்களின் அனைத்துப் பாராட்டுகளும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  39. பெரிப்பாஆஆஆஆ...ரெண்டு கதைக்கு மட்டும் கமெண்ட் போட்டுட்டு எங்க ஓடிபோனேன்னு... சொப்பனத்துல வந்து மிரட்டறேளே...)))) அதான்.. இப்பவும் வந்துட்டேன்.... ராஜா உயரமோ குள்ளமோ.. மனசு உயர்ந்திருக்கே. அத புரிஞ்சுண்ட சிநேகிதியாக ரேணுகா கிடைச்சிருக்காளே..

    //எனக்குச் சிரிக்கத் தெரியலையே... சிரிக்க முடியலையே.... என்ன செய்வேன், ரேணுகா. என்னைப் பார்த்தால் எல்லோரும் சிரிக்கறா.... என்னால் சிரிக்க வைக்க மட்டும்தான் முடிகிறது;//

    எவ்வளவு ஐயோபாவம்.. உடம்புக்குள்ள புகுந்து யாரு மனச பாக்கறா..கண்முன்னால தெரியற. உருவத்த வச்சுத்தானே மனுஷாள. எடை போடறா..

    பாக்கப்போனா...என் வயசுக்கு மீறிய. வளர்த்திதான் ஆத்தங்கரைக்கு போறப்போ தோழிகள்லாம்...நீ எந்த கடைலடீ அரிசி வாங்கறேன்னு கேலியும் கிண்டலும்.. பண்ணிண்டேதான் இருப்பா.... கேட்டு..கேட்டு பழகிட்டதால. நானும் கண்டுக்கவே மாட்டேன்

    இத்தனைக்கும் ஆத்துல. எல்லா காரியமும் நான்தான் பண்றேன்.. அப்படி என்ன பெரிய காரியமாம்னு நினைப்பேள்..அதைல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது....

    ராஜாவுக்கு நல்ல தோழியா ரேணுகா கிடைச்ச மாதிரி எனக்கு...(எங்க எல்லாருக்கும்).... நீங்க கிடைச்சிருக்கேள்

    20__வயசோ..80__ வயசோ எல்லாரையும் நட்பு வட்டத்துக்குள்ள. அரவணைச்சுக்கறேள்... பாக்க போனா எங்க. பெரிப்பாவும் ஓவர் வெயிட்னு அடிக்கடி சொல்லுவா.( பெரி.....ஸாரி)

    அவரோட வெயிட்டு நம்ம யாருக்குமே உறுத்தலா தோணலயே..நல்ல நட்பு இருப்பசால. மனச மட்டும் தானே பார்க்கறோம்

    கதைக்கு பொறுத்தமான தலைப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy May 25, 2017 at 11:39 AM

      //பெரிப்பாஆஆஆஆ...ரெண்டு கதைக்கு மட்டும் கமெண்ட் போட்டுட்டு எங்க ஓடிபோனேன்னு... சொப்பனத்துல வந்து மிரட்டறேளே...)))) அதான்.. இப்பவும் வந்துட்டேன்....//

      வாடா ...... என் செல்லமே / தங்கமே, ஹாப்பி.

      சொப்பனத்திலும் நான் வந்து காட்சி அளித்து உன்னை மிரட்டினேனா. நீ சொல்வது நிஜமோ பொய்யோ ... ஆனால் நீ மீண்டும் மீண்டும் இங்கு வருவாய் என்பது நான் மிகவும் எதிர்பார்த்தது மட்டுமே. இதற்குப் பிறகும்கூட இங்கு நிச்சயமாக வருவாய்.

      உனக்கு என் மீது, என்னைப்போலவே அளவு கடந்த ஆத்மார்த்தப் பிரியம் உண்டு என்பது எனக்கும் நன்னாத் தெரியுமாக்கும். உன் மீண்டும் மீண்டும் வருகையில் எனக்கும் மிகவும் ஹாப்பிதான்....டா ஹாப்பி.

      //ராஜா உயரமோ குள்ளமோ.. மனசு உயர்ந்திருக்கே. அத புரிஞ்சுண்ட சிநேகிதியாக ரேணுகா கிடைச்சிருக்காளே..//

      எல்லோருக்குமே இதுபோல உயர்ந்த மனசைப் பார்த்து மட்டுமே சிநேகிதிகள் அமைவது இல்லை. :(

      >>>>>

      நீக்கு
    2. கோபு பெரிப்பா >>>>> ஹாப்பி (2)

      **எனக்குச் சிரிக்கத் தெரியலையே... சிரிக்க முடியலையே.... என்ன செய்வேன், ரேணுகா. என்னைப் பார்த்தால் எல்லோரும் சிரிக்கறா.... என்னால் சிரிக்க வைக்க மட்டும்தான் முடிகிறது;**

      //எவ்வளவு ஐயோபாவம்.. உடம்புக்குள்ள புகுந்து யாரு மனச பாக்கறா.. கண்முன்னால தெரியற. உருவத்த வச்சுத்தானே மனுஷாள. எடை போடறா.. //

      கரெக்ட். மனமும் குணமும் ஒழுக்கமும் எப்படியிருந்தாலும், பார்வைக்கு ’ஆள் அழகா துப்பட்டிக்காரா’ என்று இருக்கணும் என்பதே, இன்று நிறைய பெண்கள் எதிர்பார்த்து ஏமாறுவதாகும்.

      >>>>>

      நீக்கு
    3. கோபு பெரிப்பா >>>>> ஹாப்பி (3)

      //பாக்கப்போனா...என் வயசுக்கு மீறிய வளர்த்திதான் ஆத்தங்கரைக்கு போறப்போ தோழிகள்லாம்... நீ எந்த கடைலடீ அரிசி வாங்கறேன்னு கேலியும் கிண்டலும்.. பண்ணிண்டேதான் இருப்பா.... கேட்டு..கேட்டு பழகிட்டதால. நானும் கண்டுக்கவே மாட்டேன்.//

      இதையும் நான் உன் மூலம் கேட்டுக் கேட்டு பழகிட்டேன். ஆனால் நான் உன்னை கண்டுக்கவே மாட்டேன்னு நினைக்காதே.

      உன் குழந்தைத்தனமான அந்த சிரித்த + சிங்கார முகத்தையும், கொள்ளை அழகையும் பார்த்துட்டுதான் ஏதேதோ எனக்குள் திட்டம் போட்டேனாக்கும். :)))))

      கன்னத்தில் குழி விழும் சிரிப்பு .... அமுல்பேபி போல மொழுமொழு கொழுகொழு என்ற தேக வாகு .... இதெல்லாம் உன்னைப்போன்ற லக்ஷத்தில் ஒருத்திக்கே அதிர்ஷ்டமாக அமையகூடியதாகும்.

      உன்னைக் கிண்டலும் கேலியும் செய்து வரும், வயிற்றெரிச்சல் பிடிச்ச, வத்தக்காய்ச்சிகள் எல்லோரையும் நீ ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிடு.

      நானும் நீயும் பிறந்த தேதியும் மாதமும் ஒன்றே தான். வருஷங்களில் மட்டுமே கொஞ்சம் வித்யாசமாகிவிட்டது. நான் பிறந்த காலம் கம்ப்யூட்டர் கண்டு பிடிக்காத காலம். அதனால் பிரும்ம தேவன் எனக்குக் கொடுக்க வேண்டிய அழகையும், தேஜஸ்ஸையும் சேர்த்து உனக்கே கொடுத்து, கம்ப்யூட்டர் மூலம் உன்னை இப்படி பேரழகியாக வடிவமைத்து விட்டான் என எனக்குள் நான் நினைத்து மகிழ்ந்துகொண்டேன்...டா ஹாப்பி.

      >>>>>

      நீக்கு
    4. கோபு பெரிப்பா >>>>> ஹாப்பி (4)

      //இத்தனைக்கும் ஆத்துல. எல்லா காரியமும் நான்தான் பண்றேன்.. அப்படி என்ன பெரிய காரியமாம்னு நினைப்பேள்..அதைல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது....//

      நீ தான் ஆத்துக் ’காரியங்களில் கப்பல்’ ஆச்சே. நீ அவ்வப்போது சொல்லிச்சொல்லி எனக்கே நன்கு தெரியுமே. மேலும் என்னத்தை நீ சொல்லி எனக்குப் புரிய வைக்கணும். எனக்குத் துளி சொன்னாலே கற்பூரம் போல டக்குன்னு என் மூளையில் பத்திக்கொண்டு, அது பெர்மணெண்ட் ஆகப் பதிவாகிவிடுமாக்கும். :)

      தினமும் விடியற்காலம் ஜீவ நதியில் ஸ்நானம். ஆத்து வாசலில் பிரும்மாண்டமான கோலம். கொல்லையோடு வாசல் வீட்டினைக் கூட்டிப் பெருக்கி மொழுகி சுத்தப்படுத்துதல். வேலைக்குச் செல்ல வேண்டிய அப்பா, அண்ணா, மன்னி ஆகியோருக்கும், பள்ளிக்குச் செல்லும் அண்ணா குழந்தைக்கும், உனக்குமாக தினமும் டிஃபன், சாப்பாடு, பலகாரம் என கிச்சன் குயின் அல்லவா நீ.

      அதுதவிர அனைத்து விதமான ஸ்வீட்ஸ் + காரங்கள் முதலியன சுவையாக ஆத்திலேயே செய்வதில் நீ தான் எக்ஸ்பர்ட் ஆச்சே. உன் காரியங்களுக்குக் கொடுத்து வெச்சுருக்கணுமே.

      >>>>>

      நீக்கு
    5. கோபு பெரிப்பா >>>>> ஹாப்பி (5)

      //ராஜாவுக்கு நல்ல தோழியா ரேணுகா கிடைச்ச மாதிரி எனக்கு... (எங்க எல்லாருக்கும்).... நீங்க கிடைச்சிருக்கேள்.//

      ஹைய்யோ ..... நீயும் வரவர ரொம்ப நன்னாவே சொக்குப்பொடி தூவி எழுத ஆரம்பித்து விட்டாய். மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது.....டா ஹாப்பி.

      //20__வயசோ..80__ வயசோ எல்லாரையும் நட்பு வட்டத்துக்குள்ள. அரவணைச்சுக்கறேள்... //

      90ஐ த்தாண்டிய ஆண்களும் பெண்களும் கூட என் வலையுலக நட்பு வட்டத்தில் உள்ளார்களாக்கும்.

      இருப்பதிலேயே குட்டியூண்டு வெள்ளரிப்பிஞ்சு போல, குட்டியூண்டு நொங்கு போல ..... நீ ஒருத்தி மட்டுமே இன்று எனக்கு. :))))) அதனால் எனக்கும் உன் மீது ஒரு தனி பாசமும் நேசமும் அன்பும் பிரியமும் ஏற்பட்டுவிட்டது.

      >>>>>

      நீக்கு
    6. கோபு பெரிப்பா >>>>> ஹாப்பி (6)

      //பாக்க போனா எங்க. பெரிப்பாவும் ஓவர் வெயிட்னு அடிக்கடி சொல்லுவா.( பெரி.....ஸாரி). அவரோட வெயிட்டு நம்ம யாருக்குமே உறுத்தலா தோணலயே.. நல்ல நட்பு இருப்பதால. மனச மட்டும் தானே பார்க்கறோம்.//

      இதுபோல எதையாவது சொல்லி, என்னைத் தனிமைப்படுத்தித் தவிக்க விடாதே...டா கண்ணு.

      நாம் எல்லோருமே (நீ, நான், இந்த ஜெயஸ்ரீ மாமி ஆகியோர்) சூதுவாது இல்லாத நல்ல மனசு உடையவர்களாக்கும்.

      அதனால் மட்டுமே இப்படிக்கொஞ்சம் ஓவர் வெயிட் ஆக உள்ளோம். இதெல்லாம் அவாஅவா சரீர வாகு + பரம்பரை ஜீன்ஸ் அடிப்படையில் ஏற்படுவதாகும்.

      இதைப் பற்றியெல்லாம் நாம் ஓவராகக் கவலைப்படவே கூடாது. அப்புறம் நாம் முழுப்பட்டனி கிடந்தாலும் மேலும் மேலும் வெயிட் ஆகிவிடுவோம் ..... காற்றடித்த சைக்கிள்-மோட்டார் வாகன ட்யூப்ஸ் போல. :)))))

      //கதைக்கு பொறுத்தமான தலைப்பு.. //

      மிக்க மகிழ்ச்சி.... டா ஹாப்பி. அனைத்துக்கும் மிக்க நன்றி.

      அன்புடன் கோபு பெரிப்பா

      நீக்கு
  40. வணக்கம் கோபு சார்! அத்தனை மின்னூல்களையும் உடனே படித்து விரிவான மதிப்புரை எழுதிய உங்கள் சுறுசுறுப்பைக் கண்டு வியக்கிறேன்.
    இந்த நான்கு கதைகளின் சுருக்கத்தைக் கொடுத்து மேலும் படிக்கத் தூண்டுமாறு எழுதிய விமர்சனம் மிகவும் நன்று.
    பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் இன்றும் நடக்கத்தான் செய்கின்றன. அதனைக் கருவாக்கிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்!
    உருவம் கண்டு இகழாமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் ராஜா கதையும் அருமை.
    இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்+ வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி May 25, 2017 at 11:10 PM

      //வணக்கம் கோபு சார்! //

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அத்தனை மின்னூல்களையும் உடனே படித்து விரிவான மதிப்புரை எழுதிய உங்கள் சுறுசுறுப்பைக் கண்டு வியக்கிறேன்.//

      இது கொஞ்சம் சிரமமான காரியமாகத்தான் இருந்தது மேடம். இருப்பினும் எனக்கு சிறுகதைகள் மேல் உள்ள தனிப்பட்ட ஆர்வத்தினால் மட்டுமே, இதனை என்னால் ஒரு ஈடுபாட்டுடனும், அர்பணிப்புடனும் முடிக்க முடிந்தது. மேலும் தங்களின் மின்னூல்கள் பற்றிய மதிப்புரைகள் இரண்டை நான் சமீபத்தில் இரண்டு தனிப்பதிவுகளாக, என் வலைத்தளத்தினில் எழுதி வெளியிட்டிருந்ததால், அந்த ஒரு அனுபவமும் எனக்குக் கொஞ்சம் கை கொடுத்து உதவியது.

      மேலும் இவர்களின் கதைகளில் பலவற்றை முன்பே இவர்கள் எனக்கு மெயில் மூலம் அவ்வப்போது அனுப்பி வைத்து, நான் படித்து மகிழ்ந்து எனக்குள் நான் கிரஹித்துக்கொண்டும் உள்ளதால் சற்றே சுலபமாகவும் இந்தப்பணியை என்னால் முடிக்க முடிந்தது.

      ’High Light’ செய்ய வேண்டும் என நான் நினைக்கும் சில பகுதிகளை மின்னூலிருந்து Copy & Paste செய்ய முடியாமல் இருப்பது, குறிப்பாக எனக்கு மிகவும் சோர்வு அளிப்பதாக இருந்தது. அச்சு நூலாக இருந்தால்கூட அதனைப் பார்த்து சுலபமாக அப்படியே நாம் தட்டச்சு செய்திட முடியும். இது மின்னூலாக இருப்பதால் தனித்தனியாக இரண்டு விண்டோஸ் ஓபன் செய்துகொண்டு, நான்கு நான்கு வார்த்தைகளாக அங்கிருந்து மனதில் ஏற்றிக்கொண்டு இங்கு வந்து அடிக்க வேண்டியதாக இருந்தது மட்டுமே எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

      இந்த யக்ஞம் ஒரு ஸ்டேஜில் என் பக்கம் முடிந்துள்ள இந்த நேரத்தில் இவர்களின் வெற்றிகரமான அடுத்த 7-வது மின்னூலான ’ஆத்மாவின் கோலங்கள்’ என்ற நெடுங்கதைத் தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. :)

      இருப்பினும் இதுவரை அது இன்னும் என் பார்வைக்கு, அவர்களிடமிருந்து வந்து சேரவில்லை என்பதால் நானும் கொஞ்சம் இப்போது மூச்சு விட்டுக்கொண்டுள்ளேன். :))

      //இந்த நான்கு கதைகளின் சுருக்கத்தைக் கொடுத்து மேலும் படிக்கத் தூண்டுமாறு எழுதிய விமர்சனம் மிகவும் நன்று.//

      மிக்க மகிழ்ச்சி மேடம்.

      //பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் இன்றும் நடக்கத்தான் செய்கின்றன. //

      ஆங்காங்கே சில இடங்களில், நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக, இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கூடும் என்றே நானும் உங்களைப் போலவே நினைக்கிறேன்.

      //அதனைக் கருவாக்கிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்!//

      ’பெண் குழந்தையா அல்லது ஆண் குழந்தையா? என்ற சந்தேகக் கருவையே’ கருவாக்கிய ஆசிரியரை நானும் உங்களுடன் சேர்ந்து பாராட்டுகிறேன். :)

      //உருவம் கண்டு இகழாமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் ராஜா கதையும் அருமை.//

      யெஸ் மேடம் அருமைதான் ..... மிகவும் சந்தோஷம், மேடம்.

      //இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் + வாழ்த்துகள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான கருத்துக்களுக்கும், மனமார்ந்த பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  41. //

    தினமும் விடியற்காலம் ஜீவ நதியில் ஸ்நானம். ஆத்து வாசலில் பிரும்மாண்டமான கோலம். கொல்லையோடு வாசல் வீட்டினைக் கூட்டிப் பெருக்கி மொழுகி சுத்தப்படுத்துதல். வேலைக்குச் செல்ல வேண்டிய அப்பா, அண்ணா, மன்னி ஆகியோருக்கும், பள்ளிக்குச் செல்லும் அண்ணா குழந்தைக்கும், உனக்குமாக தினமும் டிஃபன், சாப்பாடு, பலகாரம் என கிச்சன் குயின் அல்லவா நீ.

    அதுதவிர அனைத்து விதமான ஸ்வீட்ஸ் + காரங்கள் முதலியன சுவையாக ஆத்திலேயே செய்வதில் நீ தான் எக்ஸ்பர்ட் ஆச்சே. உன் காரியங்களுக்குக் கொடுத்து வெச்சுருக்கணுமே.//..

    ஹையோ...பெரி..... இதெல்லாம் நான் சொல்லியிருந்தா தற்புகழ்ச்சி ஆயிடுமே....

    ஆப்புறம்..இட்லி..தோசைக்கெல்லாம் ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கறது...அடி பம்புல பத்து பாத்திரம் தேய்ச்சு அலம்பறது... ஆத்தங்கரை...வாய்க்கால்லேந்து "குடம் குடமா"..( இதை நாங்கள்ளாம் "தோண்டி"..னு சொல்லுவோம்...))))))))

    ஜலம் கொண்டுவரதுனு எல்லாமே உடல் உழைப்புக்கான வேலைகள்.. ஆனாலும் வெயிட் குறயமாட்றதே...

    போட்டும்...அடுத்த கதைக்கு போலாமா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy May 26, 2017 at 9:56 AM

      வாடீ...ம்மா ..... ஹாப்பி. இந்த என் பதிவுக்கான பின்னூட்ட சிறப்பு எண்ணிக்கைகளான 100 மற்றும் 101 எங்கட ஹாப்பிக்கே கிடைத்துள்ளது என்பதில் எனக்கு மிகவும் ஹாப்பியோ ஹாப்பியாக உள்ளது. எங்கட ஹாப்பி மிகவும் அதிர்ஷ்டக்காரக் குட்டியாக்கும். :)

      அஷ்டோத்திர அதிர்ஷ்ட எண்ணான 108 + பெருமாளுக்குரிய 111 ஆகியவை கிடைக்க யார் அதிர்ஷ்டம் செய்திருக்கிறார்களோ ! :)

      **தினமும் விடியற்காலம் ஜீவ நதியில் ஸ்நானம். ஆத்து வாசலில் பிரும்மாண்டமான கோலம். கொல்லையோடு வாசல் வீட்டினைக் கூட்டிப் பெருக்கி மொழுகி சுத்தப்படுத்துதல். வேலைக்குச் செல்ல வேண்டிய அப்பா, அண்ணா, மன்னி ஆகியோருக்கும், பள்ளிக்குச் செல்லும் அண்ணா குழந்தைக்கும், உனக்குமாக தினமும் டிஃபன், சாப்பாடு, பலகாரம் என கிச்சன் குயின் அல்லவா நீ. அதுதவிர அனைத்து விதமான ஸ்வீட்ஸ் + காரங்கள் முதலியன சுவையாக ஆத்திலேயே செய்வதில் நீ தான் எக்ஸ்பர்ட் ஆச்சே. உன் காரியங்களுக்குக் கொடுத்து வெச்சுருக்கணுமே.**

      //ஹையோ...பெரி..... இதெல்லாம் நான் சொல்லியிருந்தா தற்புகழ்ச்சி ஆயிடுமே.... //

      எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகச் சொன்னால் என் குண்டுக் குழந்தைக்கு திருஷ்டியாகப் போயிடும்ன்னு நினைச்சு பாதியை நானே விட்டு விட்டேனாக்கும். :)

      அது என்ன உன் பெரிப்பாவை சுருக்கமாகப் ’பெரி....’
      என்று ஆக்கிவிட்டாய் ..... இதுவும் பேரிக்காய் போல செல்லமாக நல்லாத்தான் இருக்குது.

      //(ஆ)அப்புறம்.. இட்லி.. தோசைக்கெல்லாம் ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கறது... அடி பம்புல பத்து பாத்திரம் தேய்ச்சு அலம்பறது... ஆத்தங்கரை... வாய்க்கால்லேந்து "குடம் குடமா"..( இதை நாங்கள்ளாம் "தோண்டி"..னு சொல்லுவோம்...)))))))) ஜலம் கொண்டுவரதுனு ......//

      எங்க அம்மாவும் (1910 to 1997 வாழ்ந்தவர்கள்) குடத்தைத் தோண்டி என்றுதான் சொல்லுவா. சின்னக்குடமானால் சின்னத் தோண்டி என்றும், பெரிய குடமானால் பெரிய தோண்டி என்றும் சொல்லுவா.

      உன்னைப்போன்ற கடும் உழைப்பாளியான என் அம்மாவைப்பற்றி இதோ இந்தப்பதிவுகளில் நான் எழுதியிருக்கிறேன்: (1) http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html and (2) http://gopu1949.blogspot.in/2013/04/6.html

      ஆற்றங்கரை மணலைத் தோண்டித் தோண்டி நீரூற்று ஏற்படுத்தி, மடியாக சுத்த ஜலமாக எடுத்துக்கொண்டு வருவதால் அது ’தோண்டி’ என்ற பெயர் பெற்றதோ என நானும் எனக்குள் ஆராய்ச்சிகள் செய்தது உண்டு.

      //எல்லாமே உடல் உழைப்புக்கான வேலைகள்.. ஆனாலும் வெயிட் குறயமாட்றதே...//

      குட்டிக் குழந்தையான உனக்கு வெயிட் குறையவே கூடாது.....டா. அதுதான் உன் இன்றைய அழகையும் பெர்சனாலிடியையும் ஜோரா பிறருக்கு, பன்ருட்டி பலாச்சுளைபோல பளிச்சுன்னு எடுத்துக் காட்டி வருகிறது... புதுஸா வெளியில் எடுத்த மைசூர் சாண்டல் சோப்பு போல ... கும்முன்னு... ஜிம்மின்னு... வாஸனையுடன் கூட....

      //போட்டும்...அடுத்த கதைக்கு போலாமா....//

      ஆஹா .... உன் ஸித்தம் .... என் பாக்யம்...டா ! :)

      (102)

      நீக்கு
  42. //நிஜமோ பொய்யோ ... ஆனால் நீ மீண்டும் மீண்டும் இங்கு வருவாய் என்பது நான் மிகவும் எதிர்பார்த்தது மட்டுமே. இதற்குப் பிறகும்கூட இங்கு நிச்சயமாக வருவாய். //

    ஆஹா...பெரி....... என்மேல என்ன ஒரு நம்பிக்கை.....








    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy May 26, 2017 at 10:03 AM

      **நிஜமோ பொய்யோ ... ஆனால் நீ மீண்டும் மீண்டும் இங்கு வருவாய் என்பது நான் மிகவும் எதிர்பார்த்தது மட்டுமே. இதற்குப் பிறகும்கூட இங்கு நிச்சயமாக வருவாய்.**

      //ஆஹா...பெரி....... என்மேல என்ன ஒரு நம்பிக்கை.....//

      உங்கள் ஊரிலுள்ள ஆடுகள், மாடுகள், தெரு நாய்கள், குரங்குகள் போன்றவற்றின் ஜேஷ்டைகளைக்கூட நீ சொல்லி நான் நம்பிக்கையுடனும் ஆவலுடனும் கேட்டுள்ளேன். :) அப்படியிருக்கும் போது உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்காதா.....டா, ஹாப்பி.

      (104)

      நீக்கு
  43. //வீடு பூரா பூரியும் கிழங்கு மசாலாவும் மணத்துக் கொட்ட, ஆசையாய் காத்திருக்கிறாள் மாமியார். ஆனால் அவளுக்கு மட்டும் கேழ்வரகு கஞ்சி தான் வருகிறது.


    சபலத்தில் வாய் விட்டு கேட்டும்கூட, ”உங்களுக்கு சக்கரை இருக்கோன்னோ… பொறிச்சது, வறுத்தது இதெல்லாம் உடம்புக்கு ஆகாது… ஆசைக்கு ஒண்ணு ஆஸ்த்திக்கு ஒன்ணுன்னெல்லாம் இனிமேல் நாக்குக்காக வாழக்கூடாதாக்கும்” என்று நீட்டி முழக்கி கூனிக் குறுக வைக்கிறாள் //

    கீதா இப்படி சொல்றத பாத்தா கஷ்டமாதான் இருக்கு.. அவாளுக்கும் ஒருநாள் வயசாகத்தானே போகுது.. ஆனாலும்... 60--- வயசுக்குமேல நாக்கு கடுடுப்படுத்தறதுதான் நல்லது. பூரியும்மஸாலாவும் சாப்பெட்டு ஐயோ வாயு கொண்டுடுத்தே வயத்தவலிக்குதேன்னு அவங்களும் கஷ்டபட்டுண்டு மத்தவங்களுக்கும் கஷ்டம் கொடுக்கலாமா... அவங்களுக்காக ஆத்துல இருக்கறவாளும் பத்தியமா இருக்கணுமா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy May 26, 2017 at 10:13 AM

      **வீடு பூரா பூரியும் கிழங்கு மசாலாவும் மணத்துக் கொட்ட, ஆசையாய் காத்திருக்கிறாள் மாமியார். ஆனால் அவளுக்கு மட்டும் கேழ்வரகு கஞ்சி தான் வருகிறது.**

      **சபலத்தில் வாய் விட்டு கேட்டும்கூட, ”உங்களுக்கு சக்கரை இருக்கோன்னோ… பொறிச்சது, வறுத்தது இதெல்லாம் உடம்புக்கு ஆகாது… ஆசைக்கு ஒண்ணு ஆஸ்த்திக்கு ஒன்ணுன்னெல்லாம் இனிமேல் நாக்குக்காக வாழக்கூடாதாக்கும்” என்று நீட்டி முழக்கி கூனிக் குறுக வைக்கிறாள்**

      //கீதா இப்படி சொல்றத பாத்தா கஷ்டமாதான் இருக்கு.. அவாளுக்கும் ஒருநாள் வயசாகத்தானே போகுது..//

      அதானே ..... இளமை என்றுமே ஊஞ்சலாடிக்கொண்டா இருக்கப்போகுது?

      //ஆனாலும்... 60--- வயசுக்குமேல நாக்கு கடுடுப்படுத்தறதுதான் நல்லது.//

      அடாடா .... என்ன ஒரேயடியாக இப்படிச் சொல்லி என் காலை வாரிவிட்டு விட்டாய்?

      சுடச் சுட உப்பலான பூரியும், சுடச்சுட மஞ்சள் நிறத்தில் உருளைக்கிழங்கு .. வெங்காயம் .. பச்சை மிளகாய் முதலியன போட்ட காரசாரமான மஞ்சள் கலர் மஸாலும் இருந்தால் போதும் எனக்கு .... என் மாட்டுப்பொண்ணு சுடச்சுட இலுப்பைச்சட்டியிலிருந்து எடுத்து வந்து எனக்கு இரண்டு இரண்டா உப்பலாகப் போட்டுக்கிட்டே இருப்பா .... பாரு. தேவாமிர்தமாக இருக்கும் .... சொர்க்கத்தில் மிதப்பேன் நான் .... இருப்பினும் ஒரு 10-12 ஆனதும், நெஞ்சைக் கரித்துக்கொண்டு ஒரு சின்ன ஏப்பம் வரும் பாரு .... அப்போ டக்குன்னு போதும் போதும் எனச் சொல்லிவிட்டு எழுந்திருக்க நினைப்பேன்.

      இன்னும் ரெண்டே ரெண்டு மட்டும் .... ரொம்ப சூடாவும் உப்பலாவும் இருக்கு .... இதை மட்டும் போட்டுக்கோங்கோ எனச் சொல்லி அன்புடன் என் தட்டில் போட்டுவிட்டு, மேலும் இரண்டு கரண்டி மஸாலைப் போட்டு விட்டு நகர்வாள். நானும் தட்டாமல் ஏற்றுக்கொள்வது உண்டு. :)

      கையையும் தட்டையும் அலம்பிக் கொண்டு நான் வந்ததும், உடனே சுடச்சுட நுரையுடன் கூடிய ஃபில்டர் காஃபியும், மிகப்பெரிய டவரா டம்ளரில் வந்து விடும். இரண்டு ஆத்து ஆத்திக் குடித்திடும் போது என்ன ஜோரா இருக்கும் தெரியுமா ..... ஹாப்பி. :)))))

      //பூரியும் மஸாலாவும் சாப்பிட்டு ஐயோ வாயு கொண்டுடுத்தே வயத்தவலிக்குதேன்னு அவங்களும் கஷ்டபட்டுண்டு மத்தவங்களுக்கும் கஷ்டம் கொடுக்கலாமா...//

      அதெல்லாம் நான் ஒன்னும், அப்படியெல்லாம் சொல்ல மாட்டேனாக்கும். நான் தான் ஒரு டஜன் பூரிகள் உள்ளே போனதும், பத்தியமாக அத்தோடு நிறுத்திக்கொண்டு விடும் டைப் ஆச்சே. அடுத்த 4-5 மணி நேரங்களுக்கு எதுவுமே சாப்பிட விரும்ப மாட்டேனே.

      //அவங்களுக்காக ஆத்துல இருக்கறவாளும் பத்தியமா இருக்கணுமா..//

      அது சரி ..... ஸேம் ஸைடே கோல் போடுகிறாயே நீ ..... வயதான அவாளுக்கு கஞ்சியைக் கொடுத்துவிட்டு ..... வாசனை மூக்கைத் தூக்கிடும் பூரி-மஸால்
      ஆத்திலேயே செய்து, இவாள் மட்டும் மொசிக்கினால் எப்படி.....ம்மா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

      (105)

      நீக்கு
  44. அப்புறம் இந்த வாழைபுபூ..... எங்காத்துலாம் வாழப்புூ பருப்புசிலி பண்ணினாதான் பிடிக்கும் ஆனா வாழைப்பூவில் கள்ளன் ஆஞ்சுதரவோ பொடிசா நறுக்கி கறுத்துபோகாம இருக்க மோருஞ்ஜலத்திலோ போட யாருமே வரமாட்டா.. வாழைப்பூ.. வாழைக்கூய்... தண்டு நறுக்கும்போது கையெல்லாம் கறுத்து விரல் நகம் எல்லாமே இசுக்..பிசுக்காயிடும்.. அதுவும் வாழைத்தண்டு மகா பாடாபடுதுதிடும் விரல் விரலா நூலை சுத்தி எடுத்துட்டு நறுஅகணும்.. நமக்கே இத்தனை பாடுன்னா அந்த வயசானபாட்டிம்மாவால எப்படி முடியும் எதை வளர்த்துண்டு இருக்கோமோல்லியோ நாக்கை மட்டும் வக்கணையா வளர்த்துண்டிருக்கோம்.. மோர்க்குழம்புனா...கொத்தவரை பருப்புசிலி.. சின்னவெங்காயஸாம்பார்னா முறுமுறுனு உருளை ரோஸ்ட்... வத்துழம்புனா வழுமூன பருப்புதுவையல் ....இப்படி சொல்லிண்டேபோலாம்தான்

    பெனி......இப்படி நாலு கதை சுருக்கத்தையும் மேலோட்டமா சொல்லிட்டு மீதியை மின்னூலில் படிச்சு தெரிஞ்சைக்குங்கோனு சொல்லிட்டேளே.......

    எங்க ஊருலலாம் டெண்டு கொட்டாய்ல படம்போடுவா மூணு நாளுக்கு ஒருபடம் மாத்திடுவா அந்த கொட்பாயை நாங்க வேடிக்கையா தூரமணா கொட்டாய்னு சொல்லுவோம்...)))))))))

    மூணுநாள்..படம்லயா... அதான்...
    இதை எதுக்கு சொல்லவந்தேன்னா.... தெரு..தெருவா மாட்டுவண்டில படம்ளத்தி டி..நோட்டீஸ்விநியோகம் பண்ணுவா... அதுல தைசுருக்கம் போட்டிருக்கும்.. பாதி கதை போட்டுட்டு மிீதியை வெள்ளித்திரையில் கண்டு மகிழுங்கள்....னு போட்டிருப்பூ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy May 26, 2017 at 10:45 AM

      //அப்புறம் இந்த வாழைப்பூ ..... எங்காத்துலெல்லாம் வாழைப்பூ பருப்புசிலி பண்ணினாதான் பிடிக்கும் ஆனா வாழைப்பூவில் கள்ளன் ஆஞ்சுதரவோ பொடிசா நறுக்கி கறுத்துபோகாம இருக்க மோரு ஜலத்திலோ போட யாருமே வரமாட்டா..//

      பொதுவாக வாழைப்பூவில் பருப்பு உசிலி ஜோராகத்தான் இருக்கும். நாங்கள் மேல் பூவை மட்டும் முதல் நாள் வெறும் கறியாகவோ அல்லது பருப்பு உசிலியாகவோ செய்துவிட்டு, உள் பூவை மட்டும் மறுநாள் கூட்டு செய்வோம். வாழைத்தண்டு ஒன்று தவிர அனைத்துக் காய்கறிகளையும் அழகாக, சுத்தப்படுத்தி அலம்பி, புழு பூச்சிகள் இல்லாமல் சோதனைகள் செய்து, ஒவ்வொன்றையும் கத்தியால் பொடிப்பொடியாக அழகாக பொறுமையாக நறுக்கித்தருவது தினமும் எங்காத்தில் என் வேலை மட்டுமே. இதனை ஒரு ஆர்ட் ஒர்க் போல நினைத்து ஆசையுடன் நான் செய்து கொடுப்பேன்.

      //வாழைப்பூ.. வாழைக்காய்... தண்டு நறுக்கும்போது கையெல்லாம் கறுத்து விரல் நகம் எல்லாமே இசுக்.. பிசுக்காயிடும்..//

      லேஸாக் கொஞ்சம் கை விரல்களுக்கும், கத்திக்கும் எண்ணெய் தடவிக்கொண்டால், கையில் ஒட்டாமல் இருக்குமே.

      //அதுவும் வாழைத்தண்டு மகா பாடாபடுத்திடும் விரல் விரலா நூலை சுத்தி எடுத்துட்டு நறுக்கணும்..//

      ஆம். இந்த வாழைத்தண்டு வழிக்கு மட்டும் நான் இதுவரை போனது இல்லை. இன்னும் அத்தோடு நான் நறுக்கப் பழகிக்கொள்ளவில்லை.

      என் பெரிய அண்ணா ஒருவர் இருந்தார். அவர் இதனைப் பார்த்து கடையில் வாங்குவதிலும், நூல் நீக்கி, வட்டவட்டமாக ஆக்கிக்கொண்டு நறுக்குவதிலும் மிகவும் எக்ஸ்பெர்ட் ஆக இருந்து வந்தார்.

      வாழைத்தண்டு கறி, கூட்டு, காரசாரமான மோர்க்கூட்டு என்றால் நான் ஒரு பிடி பிடிப்பதோடு சரி. :)

      //நமக்கே இத்தனை பாடுன்னா அந்த வயசானபாட்டிம்மாவால எப்படி முடியும்//

      என்ன இருந்தாலும் பாட்டி மேல் உனக்கு கரிசனம் உள்ளது. அம்மாவைப் பெற்ற அம்மா மட்டுமல்லாமல், உனக்கு மாமியாராகவும் வரப்போறவா ஆச்சே. இந்த தனிப்பிரியமும், பச்சாதாபமும் இருக்கத்தான் இருக்கும். :) வெரி குட்.

      //எதை வளர்த்துண்டு இருக்கோமோல்லியோ நாக்கை மட்டும் வக்கணையா வளர்த்துண்டிருக்கோம்..//

      அதானே ..... சபாஷ்.....டா. வக்கணையா சாப்பிடுவதில் தான் பேரின்பமே உள்ளதாக்கும். மற்றதெல்லாம் சுத்த வேஸ்ட் ஆக்கும். இது என் பாலிஸியாக்கும். :)

      //மோர்க்குழம்புனா...கொத்தவரை பருப்புசிலி.. சின்ன வெங்காய ஸாம்பார்னா மொறுமொறுன்னு உருளை ரோஸ்ட்... வத்தக்குழம்புன்னா வழுமூன பருப்புத் துவையல் ....இப்படி சொல்லிண்டேபோலாம்தான்.//

      அடாடா ..... என் பசியை நீ இப்போது நன்கு கிளப்பி விட்டு விட்டாய். :(

      //பெரி......இப்படி நாலு கதை சுருக்கத்தையும் மேலோட்டமா சொல்லிட்டு மீதியை மின்னூலில் படிச்சு தெரிஞ்சைக்குங்கோனு சொல்லிட்டேளே.......//

      ஆமாம். அதுதான் நல்லது. இதுவே இவ்வளவு நீண்ண்ண்ண்ண்ட பதிவா ஹனுமார் வால் போல உள்ளதே.

      //எங்க ஊருலலாம் டெண்டு கொட்டாய்ல படம்போடுவா மூணு நாளுக்கு ஒருபடம் மாத்திடுவா அந்த கொட்டாயை நாங்க வேடிக்கையா தூரமணா கொட்டாய்னு சொல்லுவோம்...))))))))) மூணுநாள்.. படம்லயா... அதான்...//

      அச்சுச்சோ ...... அப்போ ஆம்பளைகள் நாங்களெல்லாம் ...... அந்தப்பக்கம் எட்டிப் பார்க்கவே முடியாதோ? :) துரத்தி விட்டுடுவேளோ? :)

      //இதை எதுக்கு சொல்லவந்தேன்னா.... தெரு.. தெருவா மாட்டுவண்டில படத்தினைப் பற்றி... நோட்டீஸ் விநியோகம் பண்ணுவா... அதுல கதைச்சுருக்கம் போட்டிருக்கும்.. பாதி கதை போட்டுட்டு மீதியை வெள்ளித்திரையில் கண்டு மகிழுங்கள்....னு போட்டிருப்பா...//

      தெரியும் ..... தெரியும் ..... இதுபற்றியெல்லாம் எனக்கும் தெரியுமாக்கும். அந்த நோட்டீஸ் எல்லாம் ஒன்-சைடு பேப்பராக இருந்தால் நான் பின் பக்கம் ஏதாவது பாடங்கள் எழுதவோ, கணக்குகள் போடவோ என் சின்ன வயசில் உபயோகப்படுத்திக்கொண்டதும் உண்டு. :)

      (106)

      நீக்கு
  45. பெரி.....ஸாரி.... போன. கமண்டுல. எக்க சக்கமா எழுத்து பிழை வந்துடுத்து நோஓஓஓஓஓஓ. கோபம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy May 26, 2017 at 11:46 AM

      //பெரி.....ஸாரி....//

      ’ஸாரி’யெல்லாம் நான் அணிவது இல்லை. வேஷ்டி அல்லது பேண்ட் மட்டுமே. (ஆனாலும் ஸாரியை எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும்)

      //போன. கமண்டுல. எக்கச்சக்கமா எழுத்து பிழை வந்துடுத்து.//

      அதனால் என்ன? அதையெல்லாம் நான் அட்ஜஸ்ட் செய்து திருத்திக்கொண்டு விட்டேன். இதுபோன்ற எழுத்துப்பிழைகள் வருவது எல்லோருக்குமே சகஜம் தான்....டா ஹாப்பி.

      //நோஓஓஓஓஓஓ. கோபம்....//

      கோபமா? அதுவும் எங்கட ஹாப்பியிடமா? நோஓஓஓ நோ சான்ஸ் அட் ஆல். அனைத்துக்கும் நன்றி....டா ஹாப்பி.

      (107)

      நீக்கு
  46. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள் . வட்டார மொழிகள் எல்லாம் இயல்பாய் வந்து விழுந்திருக்கின்றன. எங்களுக்கு இவற்றை அறிமுகம் செய்த வை.கோ அவர்களுக்கு நன்றி. பொறுமையாய் உரை எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha May 26, 2017 at 12:37 PM

      வாங்கோ ஷக்தி, வணக்கம். செளக்யமா? தங்களின் அபூர்வ வருகை மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //கதாசிரியருக்கு வாழ்த்துக்கள். வட்டார மொழிகள் எல்லாம் இயல்பாய் வந்து விழுந்திருக்கின்றன.//

      :) மிகவும் சந்தோஷம்.

      //எங்களுக்கு இவற்றை அறிமுகம் செய்த வை.கோ அவர்களுக்கு நன்றி. பொறுமையாய் உரை எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், எனது பொறுமையை அருமையாகப் பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஷக்தி.

      01.06.2017 முதல் 15.06.2017 வரை ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் எட்டு பதிவுகளாக வேறொரு நூல் பற்றிய மதிப்புரை வெளியிட உள்ளேன். முடிந்தால் வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. அன்புள்ள ஷக்தி,

      தாங்கள் 26.05.2017 அனுப்பியுள்ள மேற்படி பின்னூட்டம் ஏனோ SPAM இல் மாட்டிக்கொண்டு இருந்தது. இப்போதுதான் அதனை நான் தேடிப் பார்த்து கண்டுபிடித்து வெளியிட நேர்ந்தது. எதிர்பாராத இந்த தாமதத்திற்கு Sorry ஷக்தி.

      அன்புடன் கோபு

      (120)

      நீக்கு
  47. என்னடா ஹாப்பி .... நாமெல்லாம் பலபேரும் இப்படி இங்கு வந்து கும்மியடிச்சுக் கோலாட்டம் போட்டுக்கிட்டு வருகிறோம் .... ஆனாக்க இதில் மிகவும் சம்பந்தப்பட்ட நம்ம ஜெயஸ்ரீ மாமி மட்டும் இந்தப்பக்கம் வராமலே இருக்காங்களே .... அவங்களைக் காணவே காணுமே .... பாரா முகமா .... நெஞ்சழுத்தமா கம்ம்ம்முன்னு இருக்காங்களே. நேக்கு ஒரே கவலையா இருக்குது.

    ஒருவேளை சமத்தோ சமத்து .... அழுந்தச் சமத்தா அமைதியா இருப்பாங்களோ.

    அப்போ நானும் நீயும்தான் அசடோ? :)

    (108)

    பதிலளிநீக்கு
  48. வாசிக்க ஆவல் கூடுகிறது..
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mohamed althaf May 26, 2017 at 3:46 PM

      //வாசிக்க ஆவல் கூடுகிறது.. நன்றி//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      (110)

      நீக்கு
  49. அன்புடையீர்,

    அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    29.04.2017 அன்று ஆரம்பித்து 21.05.2017 வரை 23 நாட்களில் அடியேன் திருமதி. ஜெயஸ்ரீ அவர்களைப்பற்றியும், அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முதல் ஆறு மின்னூல்கள் பற்றியும் என் வலைத்தளத்தினில் தொடர்ச்சியாக ஏழு பதிவுகள் வெளியிட்டு சிறப்பித்திருந்தேன்.

    அவற்றிற்கு ஒட்டுமொத்தமாக என் பதில்கள் உள்பட இதுவரை 409 பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன.

    இவ்வாறு இந்த ஏழு பதிவுகளுக்கும் தொடர்ச்சியாகவோ அல்லது அவ்வப்போதோ வருகை தந்து, பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துள்ள தங்கள் அனைவரின் (20 பெண்கள் + 22 ஆண்கள் = ஆக மொத்தமாக 42 பேர்கள்) பெயர்களையும் கீழே பட்டியலிட்டுள்ளேன். அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமதி. ஜெயஸ்ரீ அவர்களும் எனக்கு எழுதியுள்ள தனது நன்றிக் கடிதத்தில், ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொருவரின் பின்னூட்டத்திற்கு தன்னால் தனித்தனியே பதில் அளிக்க முடியாமல் தனது உடல்நிலை இருப்பதாகவும், அனைவருக்கும் தன் நன்றி கலந்த அன்பான வணக்கங்களைத் தெரிவித்து விடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே உள்ள புள்ளிவிபரத்தில், 26.05.2017 அன்றே பின்னூட்டம் கொடுத்துள்ள, மற்றொரு பெண் பதிவர் பெயர் மட்டும் தவிர்க்க இயலாத காரணங்களால் விடுபட்டுப்போய் உள்ளது.

      அதனால் 21 பெண்கள் + 22 ஆண்கள் = ஆக மொத்தமாக 43 பேர்கள் எனவும், மொத்தப்பின்னூட்ட எண்ணிக்கைகள்: 411 எனவும் மாற்றிப்படிக்கவும்.

      அன்புடன் கோபு - 01.06.2017

      நீக்கு
  50. Position As on 27.05.2017 - 5.45 PM (IST)

    அன்புடன் வருகை தந்து பின்னூட்டமிட்டுள்ள பெண் மணிகள்:

    திருமதிகள்:

    01) ஞா. கலையரசி அவர்கள் 7 out of 7 *******
    02) அதிரா அவர்கள் 7 out of 7 *******
    03) கோமதி அரசு அவர்கள் 7 out of 7 *******
    04) ஜெயந்தி ஜெயா அவர்கள் 7 out of 7 *******

    05) ஏஞ்ஜலின் அவர்கள் 6/7

    06) ஜெயஸ்ரீ அவர்கள் 5/7

    07) காமாக்ஷி மாமி அவர்கள் 4/7

    08) அன்பின் (செல்வி) ஹாப்பி 3/7
    09) அன்பின் சிப்பிக்குள் முத்து மீனா-முன்னா 3/7

    10) தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் 2/7
    11) மிடில்-கிளாஸ்-மாதவி அவர்கள் 2/7
    12) கீதா சாம்பசிவம் அவர்கள் 2/7
    13) மனோ சுவாமிநாதன் அவர்கள் 2/7

    14) அன்பின் ஷாமைன்ஜீ 1/7
    15) அன்பின் முருகு 1/7
    16) அன்பின் ப்ராப்தம் சாரூ 1/7
    17) அன்பின் சித்ரா 1/7
    18) ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 1/7
    19) உமா மஹேஸ்வரி அவர்கள் 1/7
    20) மேனகா சத்தியா அவர்கள் 1/7

    அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இந்த என் சிறிய தொடருக்கு 100% பின்னூட்டமிட்டுள்ள பெண்களில் செவன் ஸ்டார்கள் (*******) வாங்கியுள்ள முதல் நால்வருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் கோபு

    🙏🤗🙏

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலேயுள்ள புள்ளி விபரப்பட்டியலில் 26.05.2017 அன்றே பின்னூட்டம் கொடுத்துள்ள திருமதி. ஷக்திப்ரபா அவர்களின் பெயரையும் கடைசியாக Sl. No. 20/A ஆகச் சேர்த்துக்கொள்ளவும்.

      அவர் 26th May 2017 அன்றே அனுப்பி வைத்திருந்த பின்னூட்டம் ஏனோ என்னிடம் SPAM இல் மாட்டிக்கொண்டுவிட்டதால் இன்றுதான் (01.06.2017) அதனை என்னால் அகஸ்மாத்தாகப் பார்த்து வெளியிட முடிந்துள்ளது.

      அன்புடன் கோபு - 01.06.2017

      நீக்கு
  51. Position As on 27.05.2017 - 5.45 PM (IST)

    அன்புடன் வருகை தந்து பின்னூட்டமிட்டுள்ள ஆண்கள்:

    திருவாளர்கள்:

    21) வெ. நடன சபாபதி அவர்கள் 7 out of 7 *******
    22) நெல்லைத் தமிழன் அவர்கள் 7 out of 7 *******
    23) S. ரமணி அவர்கள் 7 out of 7 *******

    24) முனைவர் பழனி கந்தசாமி அவர்கள் 4/7
    25) ஆல் இஸ் வெல் அவர்கள் 4/7
    26) வெங்கட் நாகராஜ் அவர்கள் 4/7
    27) சென்னை பித்தன் அவர்கள் 4/7
    28) செல்லப்பா யக்ஞசாமி அவர்கள் 4/7

    29) முனைவர். B. ஜம்புலிங்கம் அவர்கள் 3/7

    30) முகமது அல்தப் அவர்கள் 2/7
    31) சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் 2/7
    32) திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 2/7

    33) ஸ்ரீராம் அவர்கள் 1/7
    34) கே.பி. ஜனா அவர்கள் 1/7
    35) ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள் 1/7
    36) புலவர் இராமநுசம் ஐயா அவர்கள் 1/7
    37) ரவிஜி ரவி அவர்கள் 1/7
    38) துளசிதரன் தில்லையக்காது அவர்கள் 1/7
    39) மாது அவர்கள் 1/7
    40) வெண்ணிறப் புரவியில் வந்தவன் 1/7
    41) கில்லர்ஜி அவர்கள் 1/7
    42) ரூபன் 1/7

    அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இந்த என் சிறிய தொடருக்கு 100% பின்னூட்டமிட்டுள்ள ஆண்களில் செவன் ஸ்டார்கள் (*******) வாங்கியுள்ள முதல் மூவருக்கும் (Sl. Nos. 21 to 23) என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் கோபு

    🙏🤗🙏

    பதிலளிநீக்கு
  52. நேர்த்தியான அறிமுகம் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mathu S May 29, 2017 at 7:11 AM

      //நேர்த்தியான அறிமுகம் ஐயா//

      வாங்கோ ... வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      (115)

      நீக்கு
  53. nangavathu kathai padithathum manadhu ennavo pol aagivittathu. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan May 30, 2017 at 1:15 PM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //nangavathu kathai padithathum manadhu ennavo pol aagivittathu. :( நான்காவது கதை படித்ததும் மனது என்னவோ போல் ஆகிவிட்டது :( //

      அடடா .... அப்படியா? அடப்பாவமே!

      அப்போ நீங்க மீதி மூன்று கதையையும் படிக்கவே இல்லையா? :)

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு