ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-10
ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !
[ஸ்ரீமத் ராமாயணம்]
ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !
[ஸ்ரீமத் ராமாயணம்]
பட்டாபிராமனையும், சீதாதேவியையும் பட்டாபிஷேக கோலத்தில் மனதில் கீழ்க்கண்டவாறு த்யானம் செய்துகொண்டால் நாம் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம்.
யாதவாப்யுதயத்தில் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகர் சொல்கிறார்:
ஸ்ரீவத்ஸ ஸம்ஸ்தானஜுஷா ப்ரக்ருத்யா,
ஸ்தானேன ஜிஹ்னேன ச லக்ஷ்ணியெள !
த்ருஷ்டாவபீஷ்டம் (த்ருஷ்டா அபீஷ்டம்)
பஜதாம் ததாதே ஜகத்பதி தாவிஹ தம்பதி த்வெள !!
ஸ்ரீ கிருஷ்ணனும் ருக்மினி தேவியும் கல்யாண கோலத்தில் இருக்கும்போது த்யானம் செய்கிறவர்களுக்கு அபீஷ்டத்தைக் கொடுத்தார். Perfect Tense ’ததாதே’ Present Tense இலும் வரும். ஆதலால் இப்போதும் ருக்மினி கல்யாண சரித்திரம் கேட்கிறவர்கள், அந்த தம்பதியை த்யானம் செய்தால் எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பார்.
இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யத்தை வைத்துக்கொண்டு ஸ்ரீ ராம பட்டாபிஷேக கோலத்தில் [ஸ்ரீ ராமரையும் ஸ்ரீ சீதாதேவியையும்] த்யானம் செய்கிறவர்களுக்கும் [மனக்கண்ணால் பார்க்கிறவர்களுக்கும்] எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பார் என்று ஸ்ரீ ஸ்வாமிகள் சொல்லுவது வழக்கம். நாம் எல்லோரும் ஸ்ரீராம பக்தி சாம்ராஜ்யத்தில் நிம்மதியாக இருக்கலாம்.
இப்போது நாம்
நம் மனக்கண்ணால்
கற்பனை செய்து பார்ப்போமா!
அயோத்யா நகரம்
ஆயிரங்கால் மண்டபம்
ஸ்வர்ணமயமான ஸிம்ஹாஸனம்
ரத்ன மயமான பீடம்
ஸ்ரீராமரின் திவ்ய ஸ்வரூபம்
பட்டாபிராமர்
ஸிரஸில் ரத்தின க்ரீடம்
திலக ஸோபிதமான நெற்றி
வளைந்த புருவங்கள்
தாமரஸ நேத்ரங்கள் (கண்கள்)
கருணா கர்பித கடாக்ஷம் [பார்வை]
காதுகளில் மகரகுண்டலங்கள்
பருத்த கன்னங்கள்
உன்னத நாஸிகை (மூக்கு)
திவ்ய அதர பிம்பம்
ஸுந்தர மந்த ஹாஸம்
சங்கம் போன்ற கண்டம் (கழுத்து)
திருமார்பில் சந்தனம், முத்துமாலை + புஷ்ப மாலை
தோள்களில் தோள் வளையங்கள்
திருக்கரங்களில் ரத்தின கங்கணங்கள் + கோதண்டம் (வில்)
விரல்களில் ரத்தின மயமான மோதிரங்கள்
சின்முத்திரை
இடுப்பில் பீதாம்பரம் + தங்க ஒட்டியாணம்
பாதங்களில் ரத்தின நூபுரம்
இவ்வாறு கோடி மன்மதப் பொலிவோடு ஸ்ரீ பட்டாபிராமர் ஜொலிக்கிறார்.
ஸ்ரீ சீதாதேவி ஸ்ரீ ராமருடன்
ஸ்ரீ சீதாதேவி
ஸிரஸில் சூடாமணி
நெற்றியில் குங்குமம்
கண்களில் மை
காதுகளில் தாடங்கம்
மூக்கில் புல்லாக்கு
கழுத்தில் வைர அட்டிகை
திருமார்பில் முத்துமாலை
தோள்களில் தோள்வளைகள்
திருக்கரங்களில் வைரவளைகள்+தாமரை புஷ்பம்
இடுப்பில் பட்டாடை
தங்க ஒட்டியாணம்
பாதங்களில் ஸ்ரீ லக்ஷ்மணஸ்வாமி அன்றாடம் ஸேவிக்கும் ரத்ன நூபுரம், பாத ஸரம்.
இவற்றுடன் கூடிய தங்க விக்ரஹம் போன்றும், மின்னல் கொடி போன்றும் விளங்கும் மஹாலக்ஷ்மியும் நித்ய கல்யாணியுமான சீதாதேவியோடு சேர்ந்திருக்கும் ஸ்ரீராமரைப்பார்க்கும் போது
மின்னல்கொடி
மேக மண்டலம்
கற்பகக்கொடி
கற்பக வ்ருக்ஷம்
பத்மராக ரத்னம்
இந்த்ரநீல ரத்னம்
இவைகள் ஒன்று சேர்ந்தாற்போல் திவ்ய தம்பதியினர் பிரகாசிக்கிறார்கள்.
அவதார காலத்தில் அயோத்யா நகரவாசிகள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் ஸ்ரீ சீதாதேவியையும் தரிஸனம் செய்து என்ன ஆனந்தத்தை அனுபவித்தார்களோ, அதே ஆனந்தத்தை, மேற்கண்டவாறு பட்டாபிஷேக கோலத்தில் மனக்கண்களால் பார்க்கிறவர்களும், இந்தக் கலியுகத்தில் அனுபவிக்கலாம்.
-o-o-o-o-o-o-

ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் - நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மனு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு..(ஸ்ரீ ராம)
கொண்டல்மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலைக் குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீகத் தாளனுக்கு பூச்சக்ர வாளனுக்கு
தண்டுளவத் தோளனுக்கு ஜானகி மணாளனுக்கு..(ஸ்ரீ ராம)
-o-o-o-o-o-
[ இதன் அடுத்த பகுதியில் மிக முக்கியமான
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸம்தாத்ரத்தின்
மஹிமை பற்றி ஸ்ரீ ஸ்வாமிகள் சொன்னது
இடம்பெற உள்ளது. மிகவும் பயனுள்ள
விஷயங்கள் அதில் அடங்கியுள்ளன. ]
தொடரும்









































