ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
”ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்”
வாழ்க்கை வரலாறு
ஸங்கீத மும்மூர்த்திகள்
’ஜனனாத் கமலாலயே’ என்பதாக பிறந்தாலே முக்தி ஏற்படும் ஸ்ரீ புரம் என்னும் திருவாரூரில் பிறந்து, ’கர்மா’ ’பக்தி’ ’ஞானம்’ என்ற மூன்று வழிகளிலும் பகவானை உபாஸித்த ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள் + ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆகிய மூவரும் ஸங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்படுகின்றனர்.
வைதீஸ்வரன் கோயில் ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமியின் அருளால் ஸ்ரீ ராமஸ்வாமி தீக்ஷிதருக்கு மூத்த குமாரராக ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கி.பி. 1775 ஆம் ஆண்டு மன்மத வருஷம் பங்குனி மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.
ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி
தனது தந்தையிடமே காவ்யம், நாடகம், வ்யாக்ரணம், ஸங்கீதம் முதலியவற்றை கற்றுணர்ந்தார். திரு. சின்னையா முதலியார் என்பவரின் ஆதரவோடு சென்னை மணலியில் வஸித்து வந்த தீக்ஷிதரை, ஸ்ரீ சிதம்பரநாத ஸ்வாமிகள் என்பவர் தன்னுடன் காசி யாத்திரைக்கு அழைத்துச்சென்றார். அவருக்கு ஸ்ரீ வித்யா தீக்ஷை தந்து மந்த்ர உபதேசமும் செய்து வைத்தார்.
அங்கு ஹிந்துஸ்தானி ஸங்கீதம் கற்று, தொடர்ந்து 5 வருஷம் மந்த்ர ஜபம் த்யானம் செய்து ஸித்தி செய்த ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு ஒரு நாள் கங்கையில் ஸ்நானம் செய்து அர்க்யம் கொடுப்பதற்காக கைகளால் ஜலத்தை எடுக்கும்போது ”ஸ்ரீராமா” என்னும் மந்த்ரம் பதித்த ஓர் அழகான வீணை தட்டுப்பட்டது.
அதை தன் குருநாதரிடம் காண்பிக்க, “இது தெய்வத்தால் தரப்பட்ட தெய்வீக வீணை; நீ திருத்தணி சென்று முருகனை உபாஸனை செய்” என்று ஆணையிட்டு திருத்தணிக்கு அனுப்பி வைத்தார்.
திருத்தணி முருகன்
’குருகுஹா’ என்னும் நாமாவைச்சொல்லிக்கொண்டே திருத்தணி மலையில் ஏறிக்கொண்டிருந்த ஸ்ரீ தீக்ஷிதரின் எதிரில் தோன்றிய ஒரு முதியவர் [முருகன்] ”வாயைத்திற” என்று சொல்லி கற்கண்டை, ஸ்ரீ தீக்ஷிதரின் வாயில் போட்டு மறைந்து போனார்.
அந்த க்ஷணமே ஸ்ரீ தீக்ஷிதரின் வாக்கிலிருந்து ’ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி’ என்று நாதவாணி துள்ளி வந்தது. அதுமுதல் ”குருகுஹ” என்னும் முத்திரையைப் பதித்து ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினார்.
பற்பல க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை சென்ற ஸ்ரீ தீக்ஷிதர் வாக்கிலிருந்து அந்தந்த க்ஷேத்ரங்களின் தெய்வ சக்தியே, க்ஷேத்ர [தல] மஹிமைகளைப் பாடல்களாக வெளிவரச்செய்தன.
கி.பி.1835 ஆம் ஆண்டு, தீபாவளியன்று,
மீனாக்ஷியின் கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டே
’சிவேபாஹி சிவேபாஹி’
என்னும் நாமாவைச் சொல்லிக்கொண்டே
ஸ்ரீ அம்பாளின் சரணத்தை அடைந்தார் ஸ்ரீ தீக்ஷிதர்.
-oOo-
[ சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஜயந்தி
27.03.2012 செவ்வாய்க்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது.]
27.03.2012 செவ்வாய்க்கிழமை
மேலும் சில விசேஷங்கள்
1) லக்ஷ்மீபஞ்சமி - ஸ்ரீபஞ்சமி
சுக்லாய மத2 பஞ்சம்யாம் சைத்ரே மாஸி சுபா4நநா
ஸ்ரீர் விஷ்ணுலோகான் மாநுஷ்யம் ஸம்ப்ராப்தா
கேசவாக்2ஞயா, தஸ்மாத் தாம் பூஜயேத் தத்ர ய்ஸ்தம்
லக்ஷ்மீர் ந முஞ்சதி
[ஸ்மிருதி கெளஸ் 92]
ஸ்ரீ விஷ்ணுவின் ப்ரேரணையால் தேவர்களும் அஸுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றிய நன்நாளே ஸ்ரீபஞ்சமி அல்லது லக்ஷ்மி பஞ்சமி எனப்படுகிறது.
சைத்ரமாத சுக்லபக்ஷ பஞ்சமியான இன்று ஸ்ரீ விஷ்ணுவுடன் ஸ்ரீ லக்ஷ்மீ தேவியை பூஜை செய்து மல்லிகைப்பூவால் லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து லக்ஷ்மீ ஸ்தோத்ரம் சொல்லிப் ப்ரார்த்தித்தால் லக்ஷ்மீ கடாக்ஷம் ஏற்படும். ஏழ்மை விலகும்.
2) ஹய [குதிரை] பூஜை
ஹயம் என்றால் குதிரை. குதிரையை பூஜிக்க வேண்டிய நாளே ஹய பஞ்சமீ. அதாவது தேவாஸுரர்கள் மந்தரமலையை மத்தாக்கி வாஸுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது கடலிலிருந்து ”உச்சைஸ்ரவஸ்” என்னும் [பறக்கும் சக்தியுடைய] தேவக்குதிரை தோன்றிய நாள் தான் சைத்ர சுக்ல பஞ்சமி.
இன்று குதிரையை (சில கந்தர்வர்களுடன் சேர்த்து) பூஜித்து, குதிரைக்கு கொள்ளு தான்யத்தை சாப்பிடத்தர வேண்டும். இதனால் நீதிமன்ற வ்யவஹாரங்களில் (சத்ருக்களிடமிருந்து) வெற்றி கிட்டும். வியாபார லாபமும் ஏற்படும்.
[சமீபத்தில் ஒரு ஆன்மிக மாத இதழில் படித்த செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளேன்]
சுபம்














































