’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் நம் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
33) நினைவு நதியில்
வண்ணதாசன்
[பக்கம் 207 முதல் 213 வரை]
வண்ணதாசனின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். அதனால் தான் கவிதைகள் எழுதும் போது கல்யாண்ஜி ஆகிறார்.
கதைகள் எழுதும் போது வண்ணதாசன். இவரது சகோதரர் பெயர் வல்லிதாசனாம். அதனால் இவர் வண்ணதாசன் ஆகியிருக்கிறாராம்.
வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள் தான் அவரது கதைகள் என்று ஜீவி சொல்கிறார். அந்த ஞாபகப் படிமங்கள் எப்படி கதைகளாக உருக்கொள்கின்றன என்று விவரமாக எடுத்துரைக்கிறார் ஜீவி.
வண்ணதாசனின் 'ரதவீதி' கதையை ஜீவி லேசாகக் கோடி காட்டும் பொழுதே மொத்தக் கதையும் புரிந்து விடுகிறது. அவரது 'பாம்பின் கால்' கதை பிரமாதமாய் இருக்கும் என்று தெரிகிறது. முதல் போணிக்காக இரண்டு கடைக்காரர்கள் காத்திருந்து காத்திருந்து யாரும் வராமல் அந்த இரண்டு கடைக்காரர்களுமே ஒருவொருக்கொருவர் முதல் போணியைப் பண்ணிக் கொள்ளும் கதை. ஒரு வியாபாரம் என்று வந்தால் எவ்வளவு இருக்கின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஆனந்த விகடனில் வண்ணதாசன் எழுதிய 'அகம்-புறம்' தொடர் மற்றும் மற்ற பத்திரிகைகளில் அவர் எழுதியது என்று வண்ணதாசனைப் பற்றி ஜீவி எழுதியிருப்பது எல்லாம் வாசிக்க வாசிக்க திருப்தியாக இருக்கிறது.
இவர் எழுதிய இதர கதை படைப்புகளான ‘சின்னு முதல் சின்னு வரை’, ‘தனுமை’, ‘கடைசியாய்த் தெரிந்தவர்’, ‘கிருஷ்ணன் வைத்த வீடு’, ‘உப்பு கரிக்கிற சிறகு’; இவரின் முதல் கதைத்தொகுப்பு நூலான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’; முதல் கவிதைத் தொகுப்பான ‘புலரி’ அதன்பிறகு வெளியிடப்பட்ட ‘தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்’ போன்ற பலவற்றை சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

மறந்து விடாமல் கட்டுரையின் கடைசியில் போனசாக கல்யாண்ஜியின் கவிதை ஒன்றையும் தந்திருக்கிறார். அதான் ஜீவி.
மேலும் வண்ணதாசன் பற்றி எழுதியுள்ள பக்கங்கள் மூலம், நம் ஜீவி சாரே, அந்தக்காலத்தில் இரண்டு சிற்றிதழ்கள் நடத்தியிருந்தார்கள் என்பதும் தெரிய வருகிறது.
மேலும் வண்ணதாசன் பற்றி எழுதியுள்ள பக்கங்கள் மூலம், நம் ஜீவி சாரே, அந்தக்காலத்தில் இரண்டு சிற்றிதழ்கள் நடத்தியிருந்தார்கள் என்பதும் தெரிய வருகிறது.
34) கொஞ்சு தமிழ்
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்
[பக்கம் 214 முதல் 222 வரை]
2010ம் ஆண்டு இவரின் ’சூடிய பூ சூடற்க’ என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டபோது, இவரின் அலைபேசி எண்ணை [9443057024] செய்தித்தாள் மூலம் அறிந்து, குறுஞ்செய்தியாக (SMS) வாழ்த்து அனுப்பியிருந்தேன். அடுத்த ஐந்தாவது நிமிடமே கோவை செளரிப் பாளையத்திலிருந்து என்னைத் தொடர்புகொண்டு என்னுடன் பேசி நன்றி கூறினார். அவ்வளவு பெரிய எழுத்தாளர் என்னுடன் சிறிது நேரம் பேசியது, எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. - vgk
நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் 'காலக்கணக்கு' என்ற ஒரு பாம்புக் கதையை நேர்த்தியாய் ஜீவி விவரிப்பதே சரசரவென்று பாம்பு ஊர்வது போல இருக்கிறது!
அதே மாதிரி, 'சாலப்பரிந்து' என்ற கதையையும், 'வந்தான், வருவான், வாராநின்றான்' என்ற கதையையும் கதைகளின் சுருக்கத்தைச் சொல்லி நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜீவி எழுதியிருப்பதைப் படிக்கும் பொழுதே மூலக்கதையைப் படித்த திருப்தி ஏற்படுகிறது.
நாஞ்சில் நாடனின் 'எட்டு திக்கும் மதயானை' என்னும் நாவலை எடுத்துக் கொண்டு அலசுகிறார். 'தலைகீழ் விகிதங்களை' தொட்டுச் செல்கிறார். 'மிதவை', 'சதுரங்கக் குதிரை' 'என்பிலதனை வெயில் காயும்' என்று மற்ற நாஞ்சில் நாடனின் நாவல்களைப் பற்றியும் சொல்லிச் செல்கிறார். இவை எல்லாவற்றையும் விஞ்சியதாகச் சொல்லி நாஞ்சில் நாடனின் 'விரதம்' கதையை ஓகோ என்று புகழ்கிறார்.
நாஞ்சில் நாடனின் கும்பமுனி கேரக்டரைப் பற்றியும் ஜீவி சொல்ல மறக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.
-oOo-
2010ம் ஆண்டு இவரின் ’சூடிய பூ சூடற்க’ என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டபோது, இவரின் அலைபேசி எண்ணை [9443057024] செய்தித்தாள் மூலம் அறிந்து, குறுஞ்செய்தியாக (SMS) வாழ்த்து அனுப்பியிருந்தேன். அடுத்த ஐந்தாவது நிமிடமே கோவை செளரிப் பாளையத்திலிருந்து என்னைத் தொடர்புகொண்டு என்னுடன் பேசி நன்றி கூறினார். அவ்வளவு பெரிய எழுத்தாளர் என்னுடன் சிறிது நேரம் பேசியது, எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. - vgk
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்