மின்னூல் ஆசிரியர்
திருமதி.
ஜெயஸ்ரீ
அவர்கள்
மின்னூல்கள் மூலம்
இவரைப்பற்றி நாம் அறிவது
1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.
என் பார்வையில்
'டெளரி தராத
கெளரி கல்யாணம்’
மின்னூல்
இது ஒரு மிகப்பெரிய நாவல். மொத்தம்: 384 பக்கங்களும் 31 அத்யாயங்களும் கொண்டது. படிக்க மிகவும் சுவாரஸ்யமான முழு நீளக் கதையாகும்.
ஐ.டி. கம்பெனியில் மிக நல்ல உத்யோகத்தில், நல்ல சம்பளத்தில் இருப்பவள் இதில் வரும் கதாநாயகி கெளரி. எதற்காகவும், யாருக்காகவும் தன் இயல்புகளை மாற்றிக் கொள்ள தயாராக இல்லாததோர் அபூர்வமான கதாபாத்திரம் இந்த கெளரி.
மாப்பிள்ளை வீட்டார் தன்னைப் பெண் பார்க்க வரும்போது பட்டுப்புடவையோ, சாதா புடவையோ தலைப்பு சரியாக வருமாறு தானே கட்டிக்கொள்ளத் தெரியாதவள்.
அவளின் அம்மா சித்ரா கஷ்டப்பட்டு உதவி செய்து புடவையைக் கட்டிவிட்டாலும், உடம்பு பூராவும் ஏதோ பாரம் ஏற்றினால் போல இருப்பதாகச் சொல்லி, அதனை உடனடியாக அவிழ்த்துப் போட்டு விட்டு சுடிதார் அணிபவள். தலையில் பூக்கள் சூடவும் தயாராக இல்லாதவள். இருப்பினும் கூட்டுக்குடும்பத்தில் நாட்டம் உள்ளவள்தான்.
ஆடம்பரமான கல்யாணமோ, டெளரி கொடுத்தலோ கூடவே கூடாது என்பதில் கெளரியும் அவளின் தந்தை ஈஸ்வரனும் ஒரே கட்சியாகப் பிடிவாதமாக இருக்க, கெளரியின் தாய் ’சித்ரா’வுக்குத் தன் பெண்ணைப்பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
கெளரியின் தாய் சித்ரா இந்த நாவலில் மிகச்சிறப்பானதோர் இடத்தினைப் பிடிக்கும் கதாபாத்திரமாகச் செதுக்கப்பட்டுள்ளார்கள். கெளரிக்கு அம்மா என்றே சொல்ல முடியாதபடிக்கு, இளமையுடனும், அழகுடனும், எதிலும் ஓர் ஆர்வத்துடனும், ஆசையுடனும் கெளரியின் அக்கா என்று சொல்லலாம் போலவே காட்சியளிக்கிறார்கள். பெண்களுக்கே உரித்தான பட்டுப்புடவைகள், தங்க நகைகள், கவரிங் நகைகள், தலையில் பூக்கள் என அனைத்திலுமே ஆசையும், ஆர்வமும், ஈடுபாடுகளும் உண்டு அந்த சித்ரா மாமிக்கு.
கெளரிக்கு ஏற்கனவே இருமுறை பெண் பார்க்கும் படலங்கள் முடிந்திருந்தும், பெண்ணுக்குப் பிள்ளையையும், பிள்ளைக்குப் பெண்ணையும் பிடித்திருந்தும், பிள்ளையின் பெற்றோர்களின் டெளரி போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகளால் மட்டுமே கல்யாணம் தட்டிப் போய் விட்டது என்பதில் சித்ராவுக்கு மிகவும் வருத்தம். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அப்பாவும் மகளும் அவளின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் இருந்து விட்டனர்.
மூன்றாவதாக கார்த்திக் என்பவன் கெளரியைப் பெண் பார்க்க வருகிறான் இந்த 15 பக்கங்கள் கொண்ட முதல் அத்யாயத்தில் ..... அதில் சில காட்சிகள்:
-=-=-=-=-
கமகமவென்று வீடெல்லாம் பரவியது நரசுஸ்
காப்பி மணம்.
எல்லோரது கையிலும் மணக்க மணக்க காப்பியும்,
தட்டில் டிஃபன் வகையுமாக நாவில்
காப்பி மணம்.
எல்லோரது கையிலும் மணக்க மணக்க காப்பியும்,
தட்டில் டிஃபன் வகையுமாக நாவில்
நீர் சுரக்க வைத்தன.
கார்த்திக்கின் அம்மா வந்திருந்த ஒவ்வொருவரையும்
இவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு…. கௌரியைப்
பார்த்த பார்வையில் திருப்தி தெரிந்தது.
கார்த்திக்கின் அம்மா வந்திருந்த ஒவ்வொருவரையும்
இவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு…. கௌரியைப்
பார்த்த பார்வையில் திருப்தி தெரிந்தது.
அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.
அருமையான சொஜ்ஜிக்கும் பஜ்ஜிக்கும் அம்மாவை
வாயாரப் பாராட்டினார்கள்..
”இந்தக் காலத்துல யாரு இதெல்லாம் பண்றா .....
நீங்கள் ரொம்ப ஸ்ரமப்பட்டு செய்திருக்கேள் ..
ஒரு காப்பி மட்டும் இருந்தாப் போறுமாயிருக்கும்.
நாங்க இதெல்லாம் எதிர் பார்க்கவே இல்லை…”
என்று வந்தவர்கள் பேருக்கு சொல்லிக் கொண்டார்கள்.
அருமையான சொஜ்ஜிக்கும் பஜ்ஜிக்கும் அம்மாவை
வாயாரப் பாராட்டினார்கள்..
”இந்தக் காலத்துல யாரு இதெல்லாம் பண்றா .....
நீங்கள் ரொம்ப ஸ்ரமப்பட்டு செய்திருக்கேள் ..
ஒரு காப்பி மட்டும் இருந்தாப் போறுமாயிருக்கும்.
நாங்க இதெல்லாம் எதிர் பார்க்கவே இல்லை…”
என்று வந்தவர்கள் பேருக்கு சொல்லிக் கொண்டார்கள்.
”எங்காத்துல இவளுக்கு எல்லாமே முறைப்படி நடக்கணுமாக்கும்…
இந்தசின்ன சின்ன சம்பிரதாயத்தை எல்லாம் விடப் படாதுன்னு
அடிக்கடி சொல்லிப்பாள்” என்று ஈஸ்வரன் மனைவியைப் பார்த்துக்
கொண்டே பெருமையுடன் சொல்கிறார்.
இந்தசின்ன சின்ன சம்பிரதாயத்தை எல்லாம் விடப் படாதுன்னு
அடிக்கடி சொல்லிப்பாள்” என்று ஈஸ்வரன் மனைவியைப் பார்த்துக்
கொண்டே பெருமையுடன் சொல்கிறார்.
”ம்ம்… வாசல்ல போட்டிருந்த கோலத்தைப் பார்த்ததும்
புரிஞ்சுண்டோம்”
புரிஞ்சுண்டோம்”
என்ற மாப்பிள்ளையின் அம்மா,
”அதுவும் நல்லதுக்குத் தானே… ஒரு சந்தோஷம்.. ஒரு நிறைவு…”
”அதுவும் நல்லதுக்குத் தானே… ஒரு சந்தோஷம்.. ஒரு நிறைவு…”
என்றவர்… கௌரியைப் பார்க்கிறார்.
”கோலமெல்லாம் நான் போடலை.. நேக்கு அதெல்லாம் வராது….
இந்த டிஃபன் எல்லாம் அம்மா செஞ்சதாக்கும் … கோலம் கூட
அம்மாவாக்கும் போட்டா …” என்று சொல்லி
இந்த டிஃபன் எல்லாம் அம்மா செஞ்சதாக்கும் … கோலம் கூட
அம்மாவாக்கும் போட்டா …” என்று சொல்லி
விட்டு தன் அம்மாவைப் பெருமையோடு பார்த்துக் கொண்டே
சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் கௌரி.
சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் கௌரி.
லேசாக தொண்டையைச் செருமிக்கொண்டு….
”பெண்ணை எங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கு… என்று கார்த்திக்கின்
முகத்தைப் பார்த்தபடியே சொல்கிறார் … பிறகு ”இல்லையோடா
கார்த்திக்… நோக்கும் சம்மதம் தானே?” என்று கேட்கவும்…
கார்த்திக் தலை நிமிர்ந்து உட்கார்ந்தபடியே
”பெண்ணை எங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கு… என்று கார்த்திக்கின்
முகத்தைப் பார்த்தபடியே சொல்கிறார் … பிறகு ”இல்லையோடா
கார்த்திக்… நோக்கும் சம்மதம் தானே?” என்று கேட்கவும்…
கார்த்திக் தலை நிமிர்ந்து உட்கார்ந்தபடியே
ஒரு ஆட்டு ஆட்டி ”பரம சம்மதம்” என்று சொல்கிறான்.
நிமிர்ந்த கௌரி தலை குனிந்து புன்னகை பூக்கிறாள்!
நிமிர்ந்த கௌரி தலை குனிந்து புன்னகை பூக்கிறாள்!
அரைக்கிணறு தாண்டியாச்சு….
சித்ரா மனசுக்குள் மகிழ்ந்தாள்.
சித்ரா மனசுக்குள் மகிழ்ந்தாள்.
”அப்போ மேற்கொண்டு பேசறதுன்னு ஏதாவது இருந்தால்..
இப்பவே பேசி முடிச்சுக்கலாம் நாங்க மத்தவா மாதிரி ஆத்துக்கு
போய் ஃபோன் பண்றோம் என்றெல்லாம் சொல்லிக்கலை”
என்று நாசூக்காக பேச்சை மாற்றுகிறார் கார்த்திக்கின் அப்பா.
இப்பவே பேசி முடிச்சுக்கலாம் நாங்க மத்தவா மாதிரி ஆத்துக்கு
போய் ஃபோன் பண்றோம் என்றெல்லாம் சொல்லிக்கலை”
என்று நாசூக்காக பேச்சை மாற்றுகிறார் கார்த்திக்கின் அப்பா.
ஆமாம் ஆமாம் என்று அங்கிருந்த மீதி தலைகளும் ஆடின.
”அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் தனியா இவர் கிட்ட பேசிக்கலாமா?”
என்று கௌரி கார்த்திக்கைக் காட்டி கேட்டது தான் தாமதம்…
அங்கிருந்த அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி ..
ஆச்சரியம்… குழப்ப ம்… சித்ராவுக்கும் அதே கதி தான்.
அங்கிருந்த அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி ..
ஆச்சரியம்… குழப்ப
”ஓ....பேஷா ……” என்று தடுமாறிய கார்த்திக் அப்பாவின் குரல்…
சம்மதத்தை தெரிவித்தது. ஆனால் கார்த்திக் அம்மாவுக்கு
திக்கென்றது! பெண்ணிய வாதியா இவள்? .......
கார்த்திக் எழுந்து நின்றான்.
சம்மதத்தை தெரிவித்தது. ஆனால் கார்த்திக் அம்மாவுக்கு
திக்கென்றது! பெண்ணிய வாதியா இவள்? .......
கார்த்திக் எழுந்து நின்றான்.
”மொட்டை மாடிக்கி அழைச்சுண்டு போயேன்…”
ஈஸ்வரன் சொல்ல… ”அங்க வேண்டாம்பா…. என் ரூமுக்கு....”
என்று சொல்லிவிட்டு…
”வாங்க மிஸ்டர் கார்த்திக்…” என்று அழைத்துக் கொண்டு
அவளது அறைக்குச் சென்று…
”உட்காருங்கோ…” என்று சொல்லிவிட்டு அங்கு தயாரா இருந்த
இன்னொரு சேரில் இவளும் உட்கார்ந்து கொள்கிறாள்.
ஈஸ்வரன் சொல்ல… ”அங்க வேண்டாம்பா…. என் ரூமுக்கு....”
என்று சொல்லிவிட்டு…
”வாங்க மிஸ்டர் கார்த்திக்…” என்று அழைத்துக் கொண்டு
அவளது அறைக்குச் சென்று…
”உட்காருங்கோ…” என்று சொல்லிவிட்டு அங்கு தயாரா இருந்த
இன்னொரு சேரில் இவளும் உட்கார்ந்து கொள்கிறாள்.
”மிஸ்டர். கார்த்திக்…. உங்களை நான் பேர் சொல்லி
கூப்பிடலாம் இல்லையா?” அழகாக ஆங்கிலத்தில்
கேட்கிறாள் கௌரி.
கூப்பிடலாம் இல்லையா?” அழகாக ஆங்கிலத்தில்
கேட்கிறாள் கௌரி.
”மை ப்ளெஷர் ….” மென்மையாகச் சொன்னார் கார்த்திக்.
”நான் இப்படி தனியாப் பேசணும்னு சொன்னதை உங்காத்து
மனுஷா எப்படி எடுத்துப்பான்னு தெரியலை.
நான் பெண்ணியவாதி அல்ல !
மனுஷா எப்படி எடுத்துப்பான்னு தெரியலை.
நான் பெண்ணியவாதி அல்ல !
நீங்க அப்பறமா உங்காத்து பெரியவாட்ட சொல்லி
புரிய வெச்சுக்கோங்கோ”.
புரிய வெச்சுக்கோங்கோ”.
”இட்ஸ்…. ஆல் ரைட்… அதை நான் பார்த்துக்கறேன்…
இப்போ நீங்க சொல்லுங்கோ…
இப்போ நீங்க சொல்லுங்கோ…
என்ன பேசணும்னு கூப்பிட்டேள்?
என்னை என் பெயர் சொல்லி ஒருமையில் கூட
என்னை என் பெயர் சொல்லி ஒருமையில் கூட
நீங்கள் அழைக்கலாம்..”
புன்னகை மாறாத முகத்துடன் சொல்கிறார் கார்த்திக்.
புன்னகை மாறாத முகத்துடன் சொல்கிறார் கார்த்திக்.
”ம்ம்ம்…தெரியும்.!”
”இதுக்கு முன்னாடி ரெண்டு அலையன்ஸ் வந்து விட்டுப் போச்சு.
எல்லாம் டௌரி விஷயமாத்தான்… யு நோ எனக்கு டௌரி தந்து
என் கல்யாணம் நடப்பது பிடிக்கலை.”
எல்லாம் டௌரி விஷயமாத்தான்… யு நோ எனக்கு டௌரி தந்து
என் கல்யாணம் நடப்பது பிடிக்கலை.”
”ஃபைன்…எனக்கும் டௌரி வாங்கி என் லைஃப்
ஆரம்பிக்கப் பிடிக்கலை....”
ஆரம்பிக்கப் பிடிக்கலை....”
சொல்லும்போது கார்த்திக்கின் முகத்தில் குறும்பு
இழையோடுவதைக் காணத் தவறவில்லை கௌரி.
இழையோடுவதைக் காணத் தவறவில்லை கௌரி.
கௌரி தொடர்ந்தாள்:
”மூணு வருஷமா ‘விப்ரோ’ வில் இருக்கேன்.
ரொம்ப சாலேன்ஜிங் ஸீட்….
ரெஸ்பான்சிபிலிட்டீஸ் ஜாஸ்தி.
ரெஸ்பான்சிபிலிட்டீஸ் ஜாஸ்தி.
என் கல்யாணம் என்னோட ப்ரொபெஷனலை
பாதிக்காமல் இருக்கணும்….
பாதிக்காமல் இருக்கணும்….
என்னால வேலையை விட முடியாது.
அதே சமயம்…. வீட்டையும் என்னால
அதே சமயம்…. வீட்டையும் என்னால
நெக்லெக்ட் செய்ய முடியாது.
ஸோ .. எனக்கு ஒரு ஹெல்தி டிஸ்டன்ஸ்,
ஸோ .. எனக்கு ஒரு ஹெல்தி டிஸ்டன்ஸ்,
அதே சமயம் புரிஞ்சுக்கற ஒரு
ஃ ப்ரெண்ட்லி லைஃப்
பார்ட்னர் வேண்டும்…….
ஃ ப்ரெண்ட்லி லைஃப்
பார்ட்னர் வேண்டும்…….
அது நீங்களா இருந்தால் ஐ ஆம் வெரி ஹாப்பி..
இன் கேஸ்.. இல்லாவிட்டாலும் …..
இன் கேஸ்.. இல்லாவிட்டாலும் …..
பரவாயில்லை… ஐ கேன்.....;
”தென்…. இம்பார்டண்டா இதைச் சொல்ல மறந்துட்டேனே….
நான் ஆத்துக்கு ஒரே பெண்ணாக இருக்கறதால என் அம்மா
அப்பாவுக்கு என்னோட துணை, பண உதவி
நான் ஆத்துக்கு ஒரே பெண்ணாக இருக்கறதால என் அம்மா
அப்பாவுக்கு என்னோட துணை, பண உதவி
எப்பவாவது தேவைப் படலாம்… இப்போ இல்லாட்டாலும்
எதிர்காலத்தில் என் உதவி முழுவதும் தேவைப் படலாம்….
அப்போ நான் வருவதைப் போவதை … அல்லது
எதிர்காலத்தில் என் உதவி முழுவதும் தேவைப் படலாம்….
அப்போ நான் வருவதைப் போவதை … அல்லது
அவர்கள் நம்மோட இருப்பதை நாம எல்லாரும்
ஒரே குடித்தனக் கூட்டுக் குடும்பமா
ஒரே குடித்தனக் கூட்டுக் குடும்பமா
இருக்க முடிஞ்சா ரொம்ப ரொம்ப சந்தோஷம் …..
அது இல்லாத பட்சத்தில் அவர்களைப் வந்து பார்த்துக்க
வேண்டி வந்தால் தடுக்காமல் இருக்கணும்….
அது இல்லாத பட்சத்தில் அவர்களைப் வந்து பார்த்துக்க
வேண்டி வந்தால் தடுக்காமல் இருக்கணும்….
இது ஒரு ரெக்வெஸ்ட்.. அப்போ நம்மளோட ஸ்ரிங்க்கான
ஃபாமிலி கண்டிப்பா எலாபரேட் ஆகும்..;
ஃபாமிலி கண்டிப்பா எலாபரேட் ஆகும்..;
”அதே மாதிரி… கல்யாணம் என்ற பேரில் ரொம்ப செலவு செய்து,
தாம் தூம்னு கஷ்டப் பட்டுசம்பாதிக்கும் பணத்தை ஆடம்பரமா செலவு
செய்றதில் எனக்கு உடன்பாடே இல்லை.
அதற்கு ஆகும் செலவை சேமிப்பில்
தாம் தூம்னு கஷ்டப் பட்டுசம்பாதிக்கும் பணத்தை ஆடம்பரமா செலவு
செய்றதில் எனக்கு உடன்பாடே இல்லை.
அதற்கு ஆகும் செலவை சேமிப்பில்
போட்டு வெச்சா நம்ம ஃபுயூச்சருக்கு ஆகும்.. கஷ்டப் பட்டு கடன் வாங்கி
கல்யாணம் பண்ணீண்டு அப்பறம் வாழ்நாள் பூரா வட்டி கட்டி கடன்
கட்டிண்டு இருக்கற எத்தனை ஃபாமிலி இருக்கா தெரியுமா?
இதெல்லாம் என்னோட வியூஸ் தான்… உங்களுக்குன்னு
ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்கோ… நாம வெளிப்படையா
பேசி ஓர் மண ஒப்பந்தம் செய்து கொள்வோம்..”
என்று சிறிது நேரம் அமைதியானாள். பின்பு,
”உங்களைச் மீட் பண்ணி பேசினதில் நான் ரொம்ப ஹாப்பி”
பேசி ஓர் மண ஒப்பந்தம் செய்து கொள்வோம்..”
என்று சிறிது நேரம் அமைதியானாள். பின்பு,
”உங்களைச் மீட் பண்ணி பேசினதில் நான் ரொம்ப ஹாப்பி”
என்று நிறுத்துகிறாள் கௌரி.
”ஸேம் ஹியர்... கௌரி…
உங்க தாட்ஸ் ரொம்ப சரி தான். வெரி நைஸ்…..
ஐ அப்ரிஸியேட் யுவர் வால்யூஸ்.
யூ ஆர் ரைட் அண்ட் குட்..
எனக்கும் அதே போலத்தான்.
உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன்.
ஈவன் ஐ லைக் யூ ..”
ஐ அப்ரிஸியேட் யுவர் வால்யூஸ்.
யூ ஆர் ரைட் அண்ட் குட்..
எனக்கும் அதே போலத்தான்.
உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன்.
ஈவன் ஐ லைக் யூ ..”
என்று தங்கு தடையின்றிக் கம்பீரமாகச் சொல்லி
நிறுத்துகிறான் கார்த்திக்.
நிறுத்துகிறான் கார்த்திக்.
”ஐ கேரண்டி… தாங்க்ஸ்” என்று நாணத்துடன் சொல்லிவிட்டு
“அப்போ நாம் ஹாலுக்குப் போகலாமா” என்று எழுந்து
கொள்கிறாள் கௌரி…!
“அப்போ நாம் ஹாலுக்குப் போகலாமா” என்று எழுந்து
கொள்கிறாள் கௌரி…!
இருவரும் வெளியில் வருகிறார்கள். அவர்கள் முகத்தில்
என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க நினைத்துத் தோற்றுப்
போகிறார்கள் அங்கிருந்த பெரியவர்கள்.
என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க நினைத்துத் தோற்றுப்
போகிறார்கள் அங்கிருந்த பெரியவர்கள்.
இவள் என்னத்தத் தனியாப் பேசறேன்னு சொல்லி காரியத்தைக்
கெடுத்து வெச்சிருக்காளோ .. என்று பயந்த படியே மகளின்
முகத்தைப் பார்க்கிறாள் சித்ரா.
கெடுத்து வெச்சிருக்காளோ .. என்று பயந்த படியே மகளின்
முகத்தைப் பார்க்கிறாள் சித்ரா.
பேசியாச்சா? என்று கார்த்திக்கின் அப்பா மகனைப்
பார்த்துக் கேட்கிறார் ...
பார்த்துக் கேட்கிறார் ...
அவனும் “ம்ம்…ம்ம்…” என்று தலையாட்டுகிறான்.
”அப்போ நாங்க பெரியவா…. பேசலாமோன்னோ..”
என்று அவர் கேட்கவும்…. ஈஸ்வரன் குறுக்கிட்டு
”பேசலாம்…. கேளுங்கோ.. என்ன கேட்கப் போறேள் ?
என்று பீடிகையோடு ஆரம்பிக்க.
என்று அவர் கேட்கவும்…. ஈஸ்வரன் குறுக்கிட்டு
”பேசலாம்…. கேளுங்கோ.. என்ன கேட்கப் போறேள் ?
என்று பீடிகையோடு ஆரம்பிக்க.
“எங்களுக்கு இருப்பது கருவேப்பலை கொத்தாட்டமா
ஒரே பையனாக்கும்… அவனோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு
நடத்திப் பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை…
அதனால கல்யாணத்தை மட்டும் கொஞ்சம் கிராண்டா
பண்ணிடுங்கோ… நாங்க வேற ஒண்ணும் அது வேணும்..
இது வேணும் ன்னு டிமாண்ட் பண்ணலையாக்கும்.
உங்களுக்கும் ஒரே பொண்ணு தானே…
ஒரே பையனாக்கும்… அவனோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு
நடத்திப் பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை…
அதனால கல்யாணத்தை மட்டும் கொஞ்சம் கிராண்டா
பண்ணிடுங்கோ… நாங்க வேற ஒண்ணும் அது வேணும்..
இது வேணும் ன்னு டிமாண்ட் பண்ணலையாக்கும்.
உங்களுக்கும் ஒரே பொண்ணு தானே…
இதே ஆசை உங்களுக்கும் இருக்காதா என்ன…?
என்று கார்த்திக்கின் அப்பா பேசிக் கொண்டே போக, அம்மா…
ஆமாம்.. அதை நாம சொல்லணுமா என்ன?
அவா பொண்ணுக்கு அவா நன்னா செய்வா….
ஆமாம்.. அதை நாம சொல்லணுமா என்ன?
அவா பொண்ணுக்கு அவா நன்னா செய்வா….
இல்லையா? நாம ஒண்ணுமே கேட்க வேண்டாம்.
அவாளுக்கே தெரியும்.
அவாளுக்கே தெரியும்.
எங்களோட ஒரே டிமாண்ட் கொஞ்சம் தடபுடலா,
கச்சேரிக் காட்சியோடு மேரேஜ் நடக்கணும், அவ்வளவுதான்.
அதுக்கப்பறம் நீங்க செய்றதெல்லாம்
கச்சேரிக் காட்சியோடு மேரேஜ் நடக்கணும், அவ்வளவுதான்.
அதுக்கப்பறம் நீங்க செய்றதெல்லாம்
உங்க பெண்ணுக்குத் தான்” என்று நிறுத்துகிறாள்.
கார்த்திக் என்ன செய்வதென்று தெரியாமல் நெளிவதை
கௌரி பார்க்கிறாள். அவனது கண்கள் கௌரியை கெஞ்சுவது
போலப் பார்த்து விட்டு நகருகிறது.
கௌரி பார்க்கிறாள். அவனது கண்கள் கௌரியை கெஞ்சுவது
போலப் பார்த்து விட்டு நகருகிறது.
ஈஸ்வரன் மனசுக்குள் கணக்குப் போட ஆரம்பிக்கிறார்…
இந்தக் காலத்தில் டீசண்ட், க்ராண்ட் கச்சேரி மேரேஜ் எல்லாம்…
குறைந்தது பத்து லக்ஷத்தில் கொண்டு போய் நிறுத்தும்.
இத்தனைக்கும் ரெண்டு பேருமே ஐ.டி யில் வேலை பார்க்கிறவா…
இந்தக் காலத்தில் டீசண்ட், க்ராண்ட் கச்சேரி மேரேஜ் எல்லாம்…
குறைந்தது பத்து லக்ஷத்தில் கொண்டு போய் நிறுத்தும்.
இத்தனைக்கும் ரெண்டு பேருமே ஐ.டி யில் வேலை பார்க்கிறவா…
கூட்டத்துக்குக் கேட்கணுமா? நம்மால தாங்குமா ?
விரலை ஒரு தடவை பார்த்துக் கொள்கிறார்.
இந்த வீக்கத்தை இந்த விரல் தாங்குமா?
மனசு கால்குலட்டரை நீட்டுகிறது..
விரலை ஒரு தடவை பார்த்துக் கொள்கிறார்.
இந்த வீக்கத்தை இந்த விரல் தாங்குமா?
மனசு கால்குலட்டரை நீட்டுகிறது..
சித்ரா அங்கிருந்து.. கணவரின் காதருகில் வந்து
“சரின்னு சொல்லுங்கோன்னா….
இந்த சம்பந்தம் போனால் வராது…..
“சரின்னு சொல்லுங்கோன்னா….
இந்த சம்பந்தம் போனால் வராது…..
வீட்டை அடமானம் வெச்சுடலாம்..
தேவையானால் வித்துடலாம்…..”
தேவையானால் வித்துடலாம்…..”
என்று சமாதானப் படுத்தும் வகையில் ஈஸ்வரனின்
காதில் கிசு கிசுக்கிறாள்.
காதில் கிசு கிசுக்கிறாள்.
இந்த நேரம் பார்த்து கௌரியின் கைபேசியில்
ஆங்கிலப் பாடல் அலறுகிறது…..
ஆங்கிலப் பாடல் அலறுகிறது…..
Tonight we dance,
I leave my life in your hands.
We take the floor,
Nothing is forbidden anymore.
Don’t let the world in outside.
Don’t let a moment go by.
Nothing can stop us tonight!
[Chorus]
Bailamos! – We Dance
Let the rhythm take you over…
Bailamos!
இந்தப் பாடலைக் கேட்டதும் கார்த்திக்கும் கால்களால்
தாளம் போட ஆரம்பிக்கின்றான் …
தாளம் போட ஆரம்பிக்கின்றான் …
அதைப் பார்த்துக் கொண்டே கௌரி புன்னகைத்தபடியே
மொபைலை எடுத்து சர்வ சாதாரணமாக பேச ஆரம்பிக்கிறாள்.
”ஹலோ ரேவ்ஸ்…. ஹௌஸ் லைஃப்? எனி இம்ப்ரூவ்மெண்ட்…..?
“………………….” அந்த பக்கம் சொன்ன பதில் ஒன்றும் இவர்கள்
காதில் விழவில்லை.
வாவ்….தட்ஸ் குட் ஐடியாடி…..
செப்பரேடா போறேளா?
வீடு பார்த்தாச்சா?
ம்ம்… தனிக் குடித்தனமாக்கும்….!
கடைசீல நினைச்சதை சாதிச்சுட்டே…
பின்ன உன் ஹஸ்பண்டை டென் லாக்ஸ் கொடுத்து வாங்கிருக்க….
பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்டோட டாட்டர்…..
ம்ம்ம் நீ இழுத்த இழுப்புக்கு வந்து தானே ஆகணும்….?
எனிவே கங்க்ராட்ஸ்…..
ம்ம்ம் நீ இழுத்த இழுப்புக்கு வந்து தானே ஆகணும்….?
எனிவே கங்க்ராட்ஸ்…..
பை தி பை இங்க இப்போ வீட்டில் என்னைப் பார்க்க வந்திருக்கார்
மாப்பிள்ளை வீட்டார் ஃபாமிலியோட….!
“……………………….…………”
அஃப் கோர்ஸ்…ஐ பிரிஃபர் அண்ட்
ஐ லைக் ஜாயிண்ட் ஃ பாமிலி ஒன்லி…!
“……………………….…………”
நாட் யெட் ரேவ்ஸ்….
ஸீ யூ…பை…பை.. என்ஜாய் .!
என்று கைபேசியை மூடினாள் கௌரி.
யார் முகத்திலும் ஈயாடவில்லை…..
சித்ரா ஓரமாக உட்கார்ந்து கொண்டு கௌரியைப்
பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
”இந்த நேரத்தில் இப்படி ஒரு ஃபோன் பேசலைன்னு
யாராக்கும் அழுதா? காரியத்தைக் கெடுத்துண்டுடுத்து …
தவளை தன் வாயால கெடுமாம்…..! என்று
என்னவெல்லாமோ நினைக்க ஆரம்பிக்கிறாள். மனம் பூரா
சித்ரா ஓரமாக உட்கார்ந்து கொண்டு கௌரியைப்
பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
”இந்த நேரத்தில் இப்படி ஒரு ஃபோன் பேசலைன்னு
யாராக்கும் அழுதா? காரியத்தைக் கெடுத்துண்டுடுத்து …
தவளை தன் வாயால கெடுமாம்…..! என்று
என்னவெல்லாமோ நினைக்க ஆரம்பிக்கிறாள். மனம் பூரா
“வட போச்சே…” சோகம் கப்பியது. நேரங்காலம் தெரியாமல்
ரேவதி ஏன் தான் போன் செய்தாளோ ? என்று அவளை சபித்தது.
”அப்போ நாங்க புறப்படறோம்…
அதான் பேச வேண்டியதைப் பேசியாச்சே…
மேற்கொண்டு ஆத்துக்குப் போய் கலந்து
பேசீண்டு ஃபோன் பண்றோம்” என்று அரை குறையாக
’மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை என்பதைச்
சொல்லாமல் சொல்லிவிட்டு’ அதிகம் நாட்டம்
காண்பிக்காதபடி கிளம்புகிறார்கள்.
அதான் பேச வேண்டியதைப் பேசியாச்சே…
மேற்கொண்டு ஆத்துக்குப் போய் கலந்து
பேசீண்டு ஃபோன் பண்றோம்” என்று அரை குறையாக
’மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை என்பதைச்
சொல்லாமல் சொல்லிவிட்டு’ அதிகம் நாட்டம்
காண்பிக்காதபடி கிளம்புகிறார்கள்.
கார்த்திக்கின் பார்வை கெளரியின் கண்களைத் தொட்டுச் சென்றது.
அதில் “நீதானே எந்தன் பொன் வசந்தம்..” என்ற காதல் தூது இருந்தது.
அதைப் புரிந்து கொண்டு கௌரி நிமிர்ந்து மென்மையாகச் சிரிக்கிறாள்.
அதில் சம்மதம் என்று எழுதி இருந்தது.
காரில் ஏறும்போது கௌரியின் கண்ணோடு கார்த்திக்கின் கண்கள்
ஆழமாகப் பார்த்தது. அப்போது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
கௌரி கார்த்திக்கின் கல்யாணம் ….. நடக்கப் போவதற்கு அச்சாரமாக
அந்தப் பார்வை அவர்களுக்குள் காதலை ஆரம்பித்தது.
சித்ராவுக்குப் புரிந்து போனது இந்த வரனும் ‘கோவிந்தா’ என்று.
அதனால் வந்த கோபத்துடன் அறைக்குள் நுழைந்து கதவை டமார்
என்று அறைந்து சார்த்திக் கொள்கிறாள்.
ஈஸ்வரனோ [ மனதுக்குள் ]
“நன்னாச்சு”…. இதில்லைன்னா இன்னொண்ணு என்று
சமாதானமாகி எதுவுமே நடக்காதது போல தட்டு நிறைய
பஜ்ஜியை எடுத்து வைத்துக் கொண்டு “ஜீ தமிழ்’ சானலில்
ஜான்சி ராணி சீரியல் பார்க்க உட்கார்ந்து கொண்டார்.
“நன்னாச்சு”…. இதில்லைன்னா இன்னொண்ணு என்று
சமாதானமாகி எதுவுமே நடக்காதது போல தட்டு நிறைய
பஜ்ஜியை எடுத்து வைத்துக் கொண்டு “ஜீ தமிழ்’ சானலில்
ஜான்சி ராணி சீரியல் பார்க்க உட்கார்ந்து கொண்டார்.
கௌரியின் மனம் மட்டும் எதையோ இழந்தது போல
வலிக்க ஆரம்பித்தது.. அப்போ என்னையும் மீறி நான்
வலிக்க ஆரம்பித்தது.. அப்போ என்னையும் மீறி நான்
அவரை…. நினைக்கும் போதே சிலிர்த்துப் போகிறாள்....
கூடிய விரைவில் ‘டௌரி தராத கௌரி கல்யாணம்’
கார்த்திக்கோடுதான் நடக்கும் என்று அவளுக்குப் புரியவும்
வெட்கப்பட்டுச் சிரித்துக் கொள்கிறாள்.
கார்த்திக்கோடுதான் நடக்கும் என்று அவளுக்குப் புரியவும்
வெட்கப்பட்டுச் சிரித்துக் கொள்கிறாள்.
கார்த்திக்கின் தாயாருக்கு கெளரி நடந்துகொண்ட விதமும் போக்கும் பிடிக்காமல் போனாலும், தங்கள் பிள்ளை கார்த்திக்குத்தான் இந்த சம்பந்தத்தில் அவ்வளவாக பிடித்தம் இல்லை என்பதுபோல, கெளரியின் தாயார் சித்ராவுக்கு போன் செய்து சொல்லிவிட்டு மேலும் "கெளரி மிகவும் நல்ல பொண்ணு - எங்களுக்குத்தான் அவளை மருமகளாக அடைய ப்ராப்தம் இல்லாமல் போய்விட்டது. அவளுக்கு வேறு ஏதேனும் நல்ல இடமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லி நழுவி, தப்பிக்க நினைக்கிறாள்.
இருப்பினும் கெளரியும், கார்த்திக்கும் ஒருவரையொருவர் மனதார காதலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அடிக்கடி நேரிலும் சந்திக்கின்றனர். கெளரி தன் உத்யோக விஷயமாக விமானத்தில் ஏறி டெல்லிக்குச் சென்று ஒரு பதினைந்து நாட்கள் தங்க நேரிடுகிறது.
டெல்லிக்குப் பறப்பதற்கு முதல்நாள் கார்த்திக்குடன், அவன் அலுவலகத்தில் நடந்த எதோ ஒரு விசேஷமான பார்ட்டியில் கெளரியும் கலந்துகொள்ள நேரிடுகிறது. இரவு லேட்டான போது, இடியுடன் கூடிய பலத்த மழை பொழிகிறது. வேறு வழியில்லாமல் மழை நிற்கும் வரை அங்கேயே உள்ள விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்கி விடுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்கள் நிலை மறந்து ‘எப்படியும் நாம் கல்யாணம் செய்துகொள்ளத்தானே போகிறோம்’ என்ற நம்பிக்கையில், அந்த ஒரேயொரு நாள், பலகீனமான தருணத்தில் ஒன்றரக் கலந்தும் விடுகிறார்கள். அந்த இன்பமான புதிய அனுபவத்தின் நினைவலைகளுடன், மறுநாள் விமானத்தில் மன மகிழ்ச்சியுடன் பறக்கிறாள் கெளரி.
அந்த ஒருநாள் சுகானுபவத்திலேயே கெளரி கர்ப்பம் தரிக்க நேரிட்டுள்ளது என்பதை அவளாலேயே பிறகுதான் உணர முடிகிறது. இந்த ஸ்வீட் நியூஸ்கள் இரண்டையும் கார்த்திக்கிடம் நேரில் போய்ச் சொல்லி சர்ப்ரைஸ் கொடுக்கணும் என கெளரி நினைக்கிறாள்.
கார்த்திக்குக்கு இன்ப அதிர்ச்சியாக டபுள் ஸ்வீட் நியூஸ் கொடுக்க ஆசையுடன் ஓடி வந்துள்ள கெளரியிடம், தான் அதைவிட ஒரு அவசர நியூஸ் சொல்லப்போவதாகவும், அதற்காக தன்னை கெளரி தப்பாக நினைக்காமல், தான் செய்துள்ள தியாகத்தைப் பாராட்டத்தான் செய்வாள் என்றும் நினைத்து, தனக்கு திடீரென்று தவிர்க்க முடியாததோர் இக்கட்டான சூழ்நிலையில் ’லாவண்யா’ என்ற சொந்தக்காரப் பெண்ணுடன் கல்யாணம் ஆகிவிட்டதாக ஒரு அணு குண்டைத்தூக்கிப் போடுகிறான். அந்த ஒரு நிமிடத்தில் மனம் நொறுங்கிப்போன கெளரி, தான் சொல்லவந்த இரண்டு ஸ்வீட் நியூஸ்களையும் சொல்லாமலேயே, அவனிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறாள்.
இதற்கிடையில் திடீர் சாலை விபத்தொன்றில் தன் கணவர் ஈஸ்வரனைப் பறிகொடுத்துள்ள, கெளரியின் தாய் சித்ரா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பிடிவாதமாக தன் கர்ப்பத்தை கலைக்க விரும்பாமல், குழந்தை பெற்றுக்கொண்டே தீர்வது என முடிவெடுக்கிறாள் கெளரி.
கல்யாணம் ஆகாமலேயே கெளரிக்கு இரட்டைக்குழந்தைகள் .. இரண்டும் ஆண் குழந்தைகளாகப் பிறக்கின்றன.
கல்யாணம் ஆகாமலேயே கெளரிக்கு இரட்டைக்குழந்தைகள் .. இரண்டும் ஆண் குழந்தைகளாகப் பிறக்கின்றன.

இதன் பின் வரும் அடுத்தடுத்த அத்யாயங்களில் பலவிதமான அதிர்ச்சிகள். திருப்பங்கள். கதை எங்கெங்கோ எப்படி எப்படியோ புயல் காற்றுபோல சுழன்று அடித்து, பயங்கர இடி, பலத்தமழை, மின்னல், சுனாமி போலச் செல்கிறது. இருப்பினும் கடைசிவரை கதையில் நல்லதொரு விறுவிறுப்பு உள்ளது.
உலக யதார்த்தங்களையும், தனக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையையும், நெஞ்சுறுதி மிக்க, படித்த ஓர் இளம் பெண், எப்படி எப்படியெல்லாம், உறவுகளையும், சமூகத்தையும் எதிர்த்து நின்று துணிச்சலுடன் முடிவெடுத்துச் சமாளிக்கிறாள் என்பதையும், மிக அழகாகச் சொல்லியுள்ளார்கள், கதாசிரியர்.
இறுதியில் கெளரிக்கு தன் வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒரு சடங்கு ஏதும் நடந்ததா .... அது யாருடன், எங்கு, எப்படி, ஏன் நடந்தது என்பதை இங்கு நான் சொல்லாமல் சஸ்பென்ஸுடன் விட்டுவிட விரும்புகிறேன்.
அனைவரும் அவஸ்யமாகப் படிக்க வேண்டியதோர் சுவாரஸ்யமான நாவல் இது.

பொதுவாக சிறுகதைகளைப் படிக்கும் ஆர்வம், எனக்கு நாவல்கள் போன்ற பெரிய தொடர்கதைகளைப் படிப்பதில் இருப்பது இல்லை. பெரிய நாவல்கள் ஏதும் இதுவரை நான் ஆர்வமாகப் படித்ததும் இல்லை.
இருப்பினும் திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள், எழுதியுள்ள இந்த மிகப் பெரிய தொடர்கதையினை மட்டும் நான் படித்து மிகவும் வியந்து, மகிழ்ந்து போனேன்.
‘டெளரி தராத
கெளரி கல்யாணம்’
என்ற தனது மின்னூலை அன்பளிப்பாக
எனக்கு அனுப்பி வைத்து
வாசிக்க வாய்ப்பளித்துள்ள
எனக்கு அனுப்பி வைத்து
வாசிக்க வாய்ப்பளித்துள்ள
திருமதி. ஜெயஸ்ரீ மேடம்
அவர்களுக்கு
என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இணைப்பிற்குச் சென்று BUY NOW என்பதை க்ளிக் செய்யவும்.
மின்னல் வேகத்தில் மின்னூல் உங்களை வந்தடையும்.
திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின்
அடுத்த மின்னூல் மதிப்புரையில்
மீண்டும் நாம் சந்திப்போம்.
மீண்டும் நாம் சந்திப்போம்.
என்றும் அன்புடன் தங்கள்,













