ரேவதி என் வீட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். கலகலப்பாக மனம் விட்டு மணிக்கணக்காக பேசிக்கொண்டே இருப்போம்.
இப்போதெல்லாம் அவள் வருகிறாள் என்றாலே என் அடி வயிற்றைக் கலக்குகிறது. அவள் மட்டும் தனியாக வந்தால் பரவாயில்லை. இலவச இணைப்பு போல நண்டு சிண்டுகளாக அவளுடைய நாத்தனார் குழந்தைகளைக் கூட்டி வந்து விடுகிறாள்.
அந்த இரண்டும் ரெண்டுங்கெட்டான்கள். இரண்டு வயது கூட ஆகாத இரட்டைக் குழந்தைகள். வீட்டில் நுழைந்தவுடன் ஒரு இடத்தில் உட்காராதுகள். வெள்ளையான டைல்ஸ் தரையில் இங்கும் அங்கும் ஓடும். ஆங்காங்கே தரையை ஈரமாக்கிவிடும். பிறகு அதிலேயே வழுக்கி விழுந்து விடும். கைக்கு எட்டும் எல்லா சாமான்களையும் எடுத்து வாரி இறைக்கும். ராக்கில் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாக விட்டெறிந்து கொண்டே இருக்கும். பேப்பர், புத்தகம் என்று எது கிடைத்தாலும் அதை கசக்கி கிழித்துப் போட்டு விடும்.
போன வாரம் வந்த போது, பெரிய சைஸ் இருமல் ஸிரப் பாட்டில் ஒன்றை கீழே போட்டு உடைத்து விட்டது, அந்தக்குழந்தகள். ஸிரப் வீணாகிப் போனதோடு மட்டுமல்லாமல், உடைந்த பாட்டில் சிதறல்கள், கை கால்களில் பட்டு காயம் படாமல், திரட்டி எடுத்து சுத்தம் செய்வதற்குள், போதும் போதும் என்று ஆகி விட்டது, எனக்கு.
அந்தக்குழந்தைகள் அழுதால் கொடுக்க ஏதாவது பிஸ்கட், பால், இட்லி, நெய்யுடன் பருப்பு அல்லது தெளிவான காரமில்லாத ரஸம் சாதம் என ஆகாரம் ஏதாவது நான் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
அவள் வரும்போதெல்லாம், என் வீட்டில் இப்படி பலவிதமான அலங்கோலங்கள் இந்தக் குழந்தைகளால் நடந்து வருவதால், எனக்கே தர்ம சங்கடமாக இருந்து வருகிறது. என்ன செய்வது, வரவேண்டாம் என்றோ, அவ்வாறு வந்தால் இதுகளைக் கூட்டி வரவேண்டாம் என்றோ, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தர்ம சங்கடமாக இருந்து வந்தேன்.
என் வீட்டுக்கு இன்று வரப்போவதாக போன் செய்து விட்டாள்., ரேவதி. “டி.வி.யில் அத்திப்பூக்கள் முடிந்த பிறகு வாடி” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டேன். நாளுக்கு நாள், விறுவிறுப்பாகப் போகும் ”அத்திப்பூக்கள்” இல் அவ்வளவு ஒரு ஈடுபாடு எனக்கு.
அவள் வீடும் என் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து ஒரு பத்து கட்டிடங்கள் மட்டும் தள்ளியிருப்பதால், சரியாக இரண்டரை மணி எப்போது ஆகும் என்று காத்திருந்து 2.35 க்கு ஆஜர் ஆகிவிடுவாள். இன்று எனக்கு மத்தியானத் தூக்கம் கிடையாது என்பது புரிந்துவிட்டது.
வாசலில் காலிங் பெல் அடித்தது. திறந்தேன். வாயெல்லாம் பல்லாக ரேவதி வந்து விட்டாள். நல்ல வேளையாக இலவச இணைப்பு இன்று, ஒன்று மட்டுமே அவளுடன் வந்திருக்கிறது. பாவம் அந்த மற்றொன்று வீட்டிலேயே தூங்கி விட்டதாக துக்கத்துடன் கூறிக் கொண்டாள். இன்று ஒற்றைத் தலைவலி மட்டும் தான் என்று நினைத்துக்கொண்டு, அவளை வரவேற்றேன்.
உள்ளே நுழைந்தவன் மிகவும் சாதுவாக படுக்கை அறைக்குள் தட்டுத்தடுமாறி சென்றான். கண் சொக்கியபடி கட்டிலில் தாவி ஏறி படுத்துக் கொண்டான். கூட்டாளி இல்லாததால் லூட்டி அடிக்க விருப்பம் இல்லையோ என்னவோ! ரேவதியும் கட்டிலில் அமர்ந்து இரண்டு தட்டு தட்டியவுடன் தூங்கிப் போனான்.
பெட்ரூம் கதவை லேசாக சாத்தி விட்டு ஹாலில் உட்கார்ந்து வெகு நாட்களுக்குப் பிறகு எங்களால் மனம் விட்டு நிம்மதியாகப் பேச முடிந்தது. தன் நாத்தனார் அடுத்த வாரம் ரெயிலேறி தன் புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுப் போக இருக்கிறாள் என்றாள். இதைக் கேட்டதும் என் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பல சமாசாரங்கள் பேசிக்கொண்டே போனதில் பொழுது போனதே தெரியவில்லை. சூடாக ரேவதிக்குக் காஃபி கலந்து கொடுத்து விட்டு நானும் குடித்தேன்.
இந்த ரேவதி என் கல்லூரித் தோழி மட்டுமல்ல. நான் இருக்கும் இடத்தில் எனக்கு பதிலாக என் கணவருக்கு மனைவியாக வந்திருக்க வேண்டியவள். ஜாதகப் பொருத்தம் இல்லை என்று என் மாமியாரால் தட்டிக் கழிக்கப்பட்டவள்.
பிறகு அவள் சொல்லித்தான், என் தந்தை என் ஜாதகத்தைக் கொடுத்து, மிகவும் பொருந்தியிருப்பதாகச் சொன்னதனால், நான் இங்கு வாழ்க்கைப்பட ஒரு விதத்தில் உதவியவளும் கூட.
வேடிக்கை என்னவென்றால் அவளுக்கும் எனக்கும் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் திருமணம் நடந்ததால் ஒருவர் திருமணத்திற்கு ஒருவர் போக முடியாமல் போனது. வீடியோக்களைப் பார்த்து திருப்தி பட்டுக்கொண்டோம்.
இப்போது கூட என் சினேகிதி ரேவதியைப் பார்க்கும் போதெல்லாம் என் கணவருக்கு ஒரு வித உற்சாகமும், விட்டகுறை தொட்டகுறை போல ஒரு வித ஏக்கமும் ஏற்படுவதுண்டு.
திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் எனக்கு இதுவரை தாய்மை அடையும் ப்ராப்தம் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு சின்ன அல்ப சந்தோஷம் என் மனதிற்குள் என்னவென்றால், ரேவதியும் என்னைப் போலவே தான், இன்று வரை அரசமரத்தைச் சுதந்திரமாகச் சுற்றி வருபவளாக இருந்து வருகிறாள், என்பது மட்டுமே.
ஒரு வீடு கட்டவே நமக்குப் ப்ராப்தம் வருவதற்குள், சிலர் இரண்டு மூன்று வீடுகளுக்கு சொந்தக் காரர் ஆகி விடுவதுண்டு. அது போல ஒன்றுக்கே தவமாய் தவமிருக்கும் எங்களுக்கு, ரேவதியின் நாத்தனாருக்கு ஒரே பிரஸவத்தில் இரட்டைக் குழந்தைகள், இரண்டும் ஆண் குழந்தைகள், என்றதும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
குழந்தைகளுக்கு தொட்டில் இட்ட அன்று நானும் ரேவதியும் தான் அம்மிக் குழவிகளைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்ய பணிக்கப் பட்டோம். அதுபோல செய்தால் விரைவில் வளைகாப்பு சீமந்தம் வரும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள், கூடியிருந்த வயதான பெண்மணிகள்.
இது போலச் சொல்லிச் சொல்லியே பல வளைகாப்புகளில், எங்களையும் மறுமனை என்ற பெயரில் அந்தப் பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, எங்களுக்கும் கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விட்டனர்.
தொடர்ந்து இது போல அழைக்கப்படும் பெண்களின் மனது எவ்வளவு தூரம் பாதிப்புக்கும், அவமானத்திற்கும், உள்ளாகும் என்பதைப் பற்றி, யாரும் கொஞ்சமும் சிந்திப்பதில்லை. இப்போது இதிலெல்லாம் எங்கள் இருவருக்கும் சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது. இப்போது அதுபோல யாராவது அழைத்தாலும் ஏற்றுக் கொள்வது இல்லை. அத்தகைய விழாக்களுக்கு செல்வதையே அடியோடு நிறுத்திக் கொண்டு விட்டோம்.
இவ்வாறு ஏதேதோ எங்களின் பிரத்யேகப் பிரச்சனைகளைப் பற்றி எங்களுக்குள் தனிமையில் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த போது, பெட்ரூமிலிருந்து ஒரு மிகப்பெரிய சப்தம் கேட்டு திடுக்கிட்டு ஓடினோம்.

[இதன் தொடர்ச்சி தனியாக பகுதி-2 இல் இப்போதே வெளியிடப்பட்டுள்ளது]