10.10.2015 ..... 11.10.2015
புதுக்கோட்டை
செல்லும் முன்
மலைக்கோட்டையில்
சில பதிவர்கள் சந்திப்பு
முனைவர்
திரு. பழனி கந்தசாமி ஐயா
அவர்கள்
அவர்கள்
வலைத்தளம்: மன அலைகள்
swamysmusings.blogspot.com
இன்று 10.10.2015 பகல் 11.30 மணிக்கு
முதலில் திருச்சி ‘நியூ மதுரா ஹோட்டல்’ இல்
முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு
விருந்து உபசாரம் அளிக்கப்பட்டது.
பிறகு என் இல்லத்தில்
முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு
மாலை மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
^மேலேயுள்ள இரு படங்கள் பற்றிய மேலும் முழு விபரங்கள்^
31.12.2015 அன்று தனிப்பதிவாக வெளியிடப்பட உள்ளது.
முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா
அவர்களின் திருக்கரங்களால்
அடியேனுக்கு ஓர் பொன்னாடை சார்த்தி
அவர்கள் கோவையிலிருந்து அன்புடன் வாங்கி வந்திருந்த
திண்பண்டங்கள் பலவும் வழங்கப்பட்டன.
swamysmusings.blogspot.com
இன்று 10.10.2015 பகல் 11.30 மணிக்கு
முதலில் திருச்சி ‘நியூ மதுரா ஹோட்டல்’ இல்
முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு
விருந்து உபசாரம் அளிக்கப்பட்டது.
பிறகு என் இல்லத்தில்
முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு
மாலை மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
^மேலேயுள்ள இரு படங்கள் பற்றிய மேலும் முழு விபரங்கள்^
31.12.2015 அன்று தனிப்பதிவாக வெளியிடப்பட உள்ளது.
முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா
அவர்களின் திருக்கரங்களால்
அடியேனுக்கு ஓர் பொன்னாடை சார்த்தி
அவர்கள் கோவையிலிருந்து அன்புடன் வாங்கி வந்திருந்த
திண்பண்டங்கள் பலவும் வழங்கப்பட்டன.
எங்களின் முதல் சந்திப்பு: 02.04.2014
{'சந்தித்த வேளையில்... சிந்திக்கவே இல்லை... தந்துவிட்டேன் என்னை...’}
திரு. GMB ஐயா அவர்கள்
வலைத்தளம்: gmb writes
gmbat1649.blogspot.comஇன்று 10.10.2015 மாலை 06.30 மணிக்கு
AT ROOM No. 321, BREEZE RESIDENCY,
TIRUCHIRAPPALLI JUNCTION AREA
சந்தனமாலையில் மணக்கும்
நம் திரு. ஜி.எம்.பி. ஐயா அவர்கள்
Mrs. & Mr. GMB Sir with their son Mr. Prasad
-oOo-
இன்றைய சந்திப்பின்போது உடன் இருந்தோர்:
பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ சார் அவர்கள்
பதிவர் திரு. ரிஷபன் ஆர். ஸ்ரீநிவாஸன் சார் அவர்கள்
பதிவர் ஆரண்யநிவாஸ் திரு. ஆர். இராமமூர்த்தி அவர்கள்
மற்றும்
One Mr. M.P.Ramasamy Sir, with his Mrs.
{A Retired Employee from BHEL }
-oOo-
Mr. GMB Sir அவர்கள் கையொப்பமிட்டு வழங்கிய
‘வாழ்வின் விளிம்பில்’ என்ற நூல் கிடைக்கப்பெற்றேன்.
எங்களின் முதல் சந்திப்பு: 03.07.2013
இடம்: AT ROOM NO. 317, HOTEL PL.A. KRISHNA INN,
[ NEAR TIRUCHI JUNCTION BUS STAND ]
புதுக்கோட்டை
’தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா-2015’இல்
கலந்துகொள்ள, பேரெழுச்சியுடன்
திருச்சியிலிருந்து புறப்பட்டுச் செல்லும்
இவ்விரு இளைஞர்களுக்கும்
நம் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மேலும் சில இனிய செய்திகள்
மகிழ்ச்சி அளித்த
’பஞ்சு மிட்டாய்’
மஞ்சு !
‘கதம்ப உணர்வுகள்’
வலைப்பதிவர்
திருமதி.
மஞ்சுபாஷிணி
29.07.2015 புதன்கிழமை திடீரென
என் இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது.
திடீர் வருகை தந்து மகிழ்வித்த
’மஞ்சு’வுக்கு என் அன்பான
இனிய நல்வாழ்த்துகள் !
எற்கனவே ’மஞ்சு’வுடன் 11.06.2013 நிகழ்ந்த
முதல் சந்திப்புக்கான படங்கள்
இதோ இந்தப்பதிவுகளில் உள்ளன.
http://gopu1949.blogspot.in/
http://gopu1949.blogspot.in/
சமீபத்திய சாதனையாளர் பற்றிய
ஓர் இனிய செய்தி !
தினமலர் நிறுவனர்
அமரர் டி.வி.ஆர். நினைவுச்சிறுகதைப் போட்டி -2015 இல்
கலந்துகொண்ட நம் அன்புக்குரிய பதிவர்
http://pavithranandakumar.
திருமதி.
பவித்ரா நந்தகுமார்
அவர்களின்
’சொந்த வீடு’
என்ற சிறுகதை
மிகப்பெரியதோர்
பரிசுக்குத் தேர்வாகியுள்ளது. :)
பரிசுக்குத்தேர்வான மேற்படி சிறுகதை 04.10.2015
தினமலர் வாரமலரில் வெளியாகியுள்ளது.
மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!
நம் பேரன்புக்குரிய சாதனையாளர்
’பவித்ரா’
அவர்களின் பல்வேறு
சிறப்புக்களைப்பற்றி மேலும் அறிய
http://gopu1949.blogspot.in/
என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]
பதிலளிநீக்குஎனக்கு எதிராக வழக்கு தொடுக்க மூன்று இளைஞர்கள் கூடிய கூட்டம் போல அல்லவா இருக்கிறது. இனிம நா தலைமறைவாகத்தான் வாழனும் போல இருக்கிறதே?
Avargal Unmaigal October 11, 2015 at 2:36 AM
நீக்குவாங்கோ தம்பி .... என் தங்கக்கம்பி, வணக்கம்.
தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
//எனக்கு எதிராக வழக்கு தொடுக்க மூன்று இளைஞர்கள் கூடிய கூட்டம் போல அல்லவா இருக்கிறது.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! புதுக்கோட்டைப்பயணம் மேற்கொண்ட அவர்கள் இருவர் + நம் திரு. தமிழ் இளங்கோ ஆகிய மூவரையும் குறிப்பிட்டுள்ளீர்கள் என நம்புகிறேன். மூவரும் பேரெழுச்சி மிக்கவர்கள் என்பதில் சந்தேகமே கொஞ்சமும் இல்லை.
நான் அவர்கள் அளவுக்கு எழுச்சியில்லாத வழுவட்டை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். எழுச்சி/வழுவட்டை பற்றியெல்லாம் அறிய இதோ ஓர் நகைச்சுவையான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html
எனக்கு பெரும் கூட்டம் என்றாலே ஏனோ இப்போதெல்லாம் பிடிப்பது இல்லை. அங்கு நேரில் சென்று வருவதைவிட, வீட்டில் ஜாலியாக படுத்துக்கொண்டே அதே விழாவினை மிகச்சிறப்பாகப் பார்க்கும் வசதிகள் வந்துள்ளதும் ஓர் காரணமாக உள்ளது.
//இனிம நா தலைமறைவாகத்தான் வாழனும் போல இருக்கிறதே?//
என்னால் உங்களுக்குத் தொல்லை ஏதும் இருக்காது. தலையை மறைக்காமலேயே வாழுங்கள். வாழ்த்துகள்.
அன்புடன் VGK
Very great. Hot news. Thank you so much for your hospitality, honours conferred and your love.
பதிலளிநீக்கு(Posted from my mobile)
பழனி. கந்தசாமி October 11, 2015 at 4:27 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//Very great. Hot news. Thank you so much for your hospitality, honours conferred and your love. (Posted from my mobile)//
தங்களை அன்று நேரில் சந்தித்து பேசி மகிழும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.
இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிலிருந்தே அளித்துள்ள அவசரமான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், சார்.
பிரியமுள்ள VGK
கொடுத்துவைத்தவர் கோபு சார் நீங்கள்... பதிவர் சந்திப்புப் பெருவிழாக்கு முன்னாலேயே ஒரு குட்டிப் பதிவர் சந்திப்புத் திருவிழாவா? படங்களில் உங்கள் அனைவரின் உற்சாகமும் தெரிகிறது. உடனுக்குடன் படங்களோடு பதிவர் சந்திப்பின் விவரங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅவர்கள் நடத்தியது குட்டிபதிவர் சந்திப்பு அல்ல குறும்பர்கள் பதிவு சந்திப்பு
நீக்குஎங்கள் நிஜக் குறும்பை நீங்கள் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.
நீக்குகீத மஞ்சரி October 11, 2015 at 4:55 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//கொடுத்துவைத்தவர் கோபு சார் நீங்கள்... பதிவர் சந்திப்புப் பெருவிழாக்கு முன்னாலேயே ஒரு குட்டிப் பதிவர் சந்திப்புத் திருவிழாவா? படங்களில் உங்கள் அனைவரின் உற்சாகமும் தெரிகிறது. உடனுக்குடன் படங்களோடு பதிவர் சந்திப்பின் விவரங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.//
இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அன்புடன் கோபு
பழனி. கந்தசாமி October 12, 2015 at 9:42 AM
நீக்குto Avargal Unmaigal
//எங்கள் நிஜக் குறும்பை நீங்கள் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.//
:))))) - vgk
Avargal Unmaigal October 12, 2015 at 7:10 AM
நீக்குto கீத மஞ்சரி
//அவர்கள் நடத்தியது குட்டிபதிவர் சந்திப்பு அல்ல குறும்பர்கள் பதிவு சந்திப்பு//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
இந்த சந்திப்பினில் குட்டியோ / புட்டியோ / குறும்புகளோ ஏதும் இல்லை ஸ்வாமி. சாதாரண சந்திப்புகள் மட்டுமே. அதுவும் இருவரும் என்னைவிட வயதிலும், எழுத்திலும் அனுபவத்திலும், செல்வச் செழிப்பிலும், அனைத்திலும் பெரியவர்கள். வெளியூரிலிருந்து திருச்சிக்கு வந்துள்ளவர்கள்.
மிகச்சாதாரணமான அடியேன் இவர்களைச் சந்தித்தது ஓர் மரியாதை நிமித்தமாக மட்டுமே. :)
அன்புடன்
VGK
[தாங்கள் எனக்கு வைத்துள்ள பெயர் மட்டும்
‘குறும்புக்கார இளைஞன்’]
நான் இன்னும் அதே ஏழைத் தொழிலாளியின் மகன்தான். இப்போது ஏதோ அரசு புண்ணியத்தில் போதுமான ஓய்வூதியம் வந்து கொண்டிருக்கிறது. இன்றும் ஒரு ரூபாயை பெரிதாக மதிக்கிறவன் நான். ஆனாலும் உங்கள் பரந்த மனதிற்கு முன்னால் என் அனைத்து குணங்களும் தூசுதான்.
நீக்கு//குட்டியோ / புட்டியோ //
நீக்குஇரண்டையும் பார்த்து விட வேண்டும். அதுவும் சீக்கிரமே. ஏனெனில் இனி அதிக ஆயுள் இல்லை.
பழனி. கந்தசாமி October 12, 2015 at 9:46 PM
நீக்குவாங்கோ, மீண்டும் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.
//நான் இன்னும் அதே ஏழைத் தொழிலாளியின் மகன்தான். இப்போது ஏதோ அரசு புண்ணியத்தில் போதுமான ஓய்வூதியம் வந்து கொண்டிருக்கிறது. இன்றும் ஒரு ரூபாயை பெரிதாக மதிக்கிறவன் நான். //
நானும் கூட மிகவும் கெளரவமான குடும்பத்தில் ஆனால் மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்து இளமையில் வறுமையை நன்கு அனுபவித்தவன்.
அதுவே என்னை புடம்போட்டு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடவைத்ததுடன், ஏதோ என் கடுமையான உழைப்பு + சாமர்த்தியமான திட்டமிட்ட சேமிப்பினால், இன்று அன்றாடச் செலவுகளுக்கு யார் கையையும் [Including my own sons] எதிர்பார்க்காமல் ஏதோ அனைத்து நவீன சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு வண்டியோட்ட முடிகிறது.
PSU - Retired என்பதால் எனக்கு சொல்லிக்கொள்ளும் படியான பென்ஷனும் கூடக் கிடையாது என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவூட்டிக்கொள்கிறேன்.
//ஆனாலும் உங்கள் பரந்த மனதிற்கு முன்னால் என் அனைத்து குணங்களும் தூசுதான்.//
இப்போதெல்லாம் எனக்கு எதையும் நான் பரிசாகப் பெறுவதைவிட, நானே பிறருக்கு பரிசு அளிப்பதில்தான் உண்மையான இன்பம் ஏற்படுகிறது. போகும்போது எதைக்கொண்டு போகப்போகிறோம் என்ற மனப்பக்குவமும் வந்துவிட்டது.
மேலும் நம் மீது அன்பு வைத்து, அறிவிக்கும் போட்டிகளில் கலந்துகொள்பவர்களின் கடுமையான உழைப்புக்கும், திறமைக்கும், ஆர்வத்திற்கும் முன்னால் நாம் அளிப்பது ஓர் சுண்டைக்காய்த் தொகை மட்டுமே எனவும் நினைத்து நான் அடிக்கடி வருந்துவது உண்டு.
ஏதோ ஒரு பொழுதுபோக்கு + ஜாலி டைம் பாஸிங் மட்டுமே.
தாங்கள் எனக்களித்த தின்பண்டங்கள் அனைத்தும் மிகவும் ஜோர் ஜோர் ..... அனைத்தையும் சுவைத்து மகிழ்ந்தோம். மிக்க நன்றி சார்.
அன்புடன் VGK
பழனி. கந்தசாமி October 12, 2015 at 9:48 PM
நீக்கு//குட்டியோ / புட்டியோ //
இரண்டையும் பார்த்து விட வேண்டும். அதுவும் சீக்கிரமே. ஏனெனில் இனி அதிக ஆயுள் இல்லை.//
:))))) நூறாண்டுக்கு மேல் வாழ்க ! நோய் நொடியில்லாமல் (குட்டி/புட்டி இல்லாமல்) வாழ்க !! :)))))
அருமையான படங்களுடன் சுடச் சுடச் செய்திகள்.. பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குரிஷபன் October 11, 2015 at 5:58 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//அருமையான படங்களுடன் சுடச் சுடச் செய்திகள்.. பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துகள்//
இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் சார்.
பலத்த மழை பயமுறுத்திய நிலையிலும், தங்களுக்கு அன்று அலுவலகத்தில் இருந்த பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும், தாங்களும், திரு. ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி அவர்களும் என் இல்லத்திற்கே வருகை தந்து, போகவர கார் ஏற்பாடுகள் செய்து என்னைக் கூட்டிப்போகாவிட்டால் என்னால் அன்று திரு. GMB Sir அவர்களை சந்தித்திருக்கவே முடியாது.
தங்கள் இருவரின் அன்புக்கும் மிக்க நன்றி சார்.
பிரியமுள்ள வீ......ஜீ
அன்புள்ள திரு. ரிஷபன் சார் ....
நீக்குஇன்னொரு மிக முக்கியமான விஷயம்.
தாங்களும் திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்களும் என்னிடம் அன்று அளித்த மாதுளைப் பழங்களை இப்போதுதான் நறுக்கி ருசித்து சாப்பிட்டோம்.
ஸ்வீட்டோ ஸ்வீட்டு .... டேஸ்டோ டேஸ்ட்டு .... சும்மா செக்கச்செவேல்ன்னு தளதளன்னு பளபளன்னு படு ஜோரா ..... ஜோக்கா இருந்துச்சு. :)))))
கனிந்த கனிகள் அளித்த கனிவான நண்பர்களாகிய தங்கள் இருவருக்கும் என் நன்றியோ நன்றிகள்.
அன்புடன்
வீ...........ஜீ
நெடுநாட்களுக்குப்பின்னர் உங்களின் பதிவு, அதுவும் சகோதர பதிவர்களுடனான புகைப்படங்களுடன்!! தகவல்களும் அனைத்து புகைப்படங்களும் மிக இனிமை!
பதிலளிநீக்குமனோ சாமிநாதன் October 11, 2015 at 7:20 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நெடுநாட்களுக்குப்பின்னர் உங்களின் பதிவு, அதுவும் சகோதர பதிவர்களுடனான புகைப்படங்களுடன்!! தகவல்களும் அனைத்து புகைப்படங்களும் மிக இனிமை!//
இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அன்புடன் VGK
சந்திப்புக்கும் அவற்றைப் பகிர்ந்து கொண்டதுக்கும் நன்றி, வாழ்த்துகள்.
பதிலளிநீக்குGeetha Sambasivam October 11, 2015 at 7:34 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சந்திப்புக்கும் அவற்றைப் பகிர்ந்து கொண்டதுக்கும் நன்றி, வாழ்த்துகள்.//
இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அன்புடன் கோபு
ஆஹா திரு பழனிகந்தசாமி ஐயா லக்கி. யாரு இந்த போட்டில கெலிச்சாலும் இப்பூடில்லா அமர்க்களமா வரவேற்பு கிடக்குமா. அது ஏனுங்க ஹோட்டலில கூட்டினு போனிங்க. உங்கூட்டு சாப்பாடெல்லாதா சூப்பரா பண்ணினுவீங்களே. போட்டோ படலா பாக்கயிலே ஆச ஆசயா வருது.
பதிலளிநீக்குஅது ஓட்டல் அல்ல. அதுவும் கோபு சார் வீடு மாதிரிதான். அந்த ஓனர் பற்றி ஒரு சிறப்புப் பதிவு வரப்போகுது.
நீக்குஅங்க கிடைச்ச சாப்பாடு மாதிரி அவர் வீட்ல கிடைக்குமோ என்னமோ, என் வீட்டில் நிச்சயமாக கிடைக்காது. நான் வீட்டில் சாப்பிடும் அளவைப்போல் இரு மடங்கு, நிஜமாக இரு மடங்கு சாப்பிட்டேன்.
mru October 11, 2015 at 8:11 AM
நீக்குவாங்கோ முறுக்கு ஸாரி முருகு, வணக்கம்.
//ஆஹா திரு பழனி கந்தசாமி ஐயா லக்கி.//
ஏனோ?
வயதிலும், அனுபவத்திலும், ஆற்றலிலும், அனைத்திலுமே என்னைவிட மிகவும் பெரியவர் .... மிகவும் நல்லவர் .... உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரியாதவர் .... வெளிப்படையானவர். கொஞ்சம் நகைச்சுவை கலந்து எதையும் எழுதக்கூடியவர். STRAIGHT FORWARD TYPE. அதனால் அவரை எனக்குக் கூடுதலாகவே பிடித்துள்ளது.
//யாரு இந்த போட்டில கெலிச்சாலும் இப்பூடில்லா அமர்க்களமா வரவேற்பு கிடக்குமா.//
முதலில் கெலிச்சுப்பாருங்கோ. அதன்பிறகு தங்கள் விருப்பம் எப்படியோ அதற்குத்தகுந்தார்ப்போல மட்டுமே
இப்படியெல்லாம் அமர்க்களமா வரவேற்பு தரமுடியுமா என யோசித்து முடிவு செய்யப்படும். எப்படியும் வெற்றிபெற்றால், நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் பரிசுப்பணம் உங்கள் கைளுக்கு வந்து சேர்ந்துவிடும். கவலைப்பட வேண்டாம்.
//அது ஏனுங்க ஹோட்டலில கூட்டினு போனிங்க. உங்கூட்டு சாப்பாடெல்லாதா சூப்பரா பண்ணினுவீங்களே. //
அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவர் விடியற்காலமே கோவையை விட்டு கிளம்பி ரெயிலில் புறப்பட்டு விட்டார். வழியில் டிபன் ஏதும் சரிவர சாப்பிட்டிருக்கவில்லை. காலை 10.45 மணிக்கு திருச்சி ஜங்ஷனில் வந்து இறங்கிவிட்டார். பிறகு 11.20க்கு எங்கள் ஏரியாவில் ஓர் குறிப்பிட்ட இடத்தில் பஸ்ஸில் வந்து இறங்குவதாகப் போன் செய்தார். நான் உடனே ஒரு ஆட்டோவை எடுத்துக்கொண்டு போய் அவரை அங்கிருந்து நேராக என் வீட்டுக்கு அருகேயுள்ள மதுரா ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று, தலைவாழை இலை போட்டு, பீட்ரூட் கறி, புடலங்காய்க்கூட்டு, அப்பளாம், நல்ல பச்சரிசி சாதம், சாம்பார், மோர்க்குழம்பு, சூப்பர் ரஸம், கப்பில் தயிர், மோர், கிடாரங்காய் ஊறுகாய் என UNLIMITED MEALS வாங்கி இருவருமே ஜாலியாக சேர்ந்து சாப்பிட்டோம். செல்ஃபீயில் அதனை ஓர் படம் எடுத்துக் கொண்டேன். மஹாளய பக்ஷத்தில், அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் ஒரு பெரியவருக்கு சாப்பாடு போட்ட புண்ணியம் கிடைக்கப்பெற்றேன். பசி வேளையில் எங்கள் வீட்டில் இதெல்லாம் ரெடியாக இருக்காது அல்லவா! தயார் செய்ய ஒருவேளை மேலும் தாமதமாகலாம் என்பதால் அங்கு நேராக அவரைக்கூட்டிச்சென்றேன். நானும் அவருடன் அங்கேயே சாப்பிட்டேன். மேலும் HOMELY MEALS போல அங்கு எல்லாமே சூப்பராகத்தான் இருக்கும். பசி வேளையில் உடனடியாகவும் கிடைக்கும்.
//போட்டோ படலா பாக்கயிலே ஆச ஆசயா வருது.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா. :)
தொடர்ச்சி ......
நீக்குஉண்ட களைப்பில் என் இல்லத்து AC அறையில், ஓர் கட்டிலில் படுத்து 1 மணி நேரம் நன்றாகத் தூங்கிப்போனார். பிறகு அவர் எழுந்ததும் சூடான பஜ்ஜி, மற்றும் பிஸ்கட் போன்ற ஒருசில தின்பண்டங்களுடன், நல்ல ஃபில்டர் காஃபி அளித்து, அவரை புதுக்கோட்டைக்கு வழியனுப்பி வைத்தோம்.
மதிய உணவைப் பற்றி திரு வைகோ சொன்னது நூற்றுக்கு நூறு சரியானவை அங்கு நான் சாப்பிட்ட மாதிரி வீட்டில் சாப்பிட்டிருக்க மாட்டேன். உண்மையில் அந்த உணவு வீட்டுச் சாப்பாடைடவிட சுவையாகவும் வயிற்றுக்கு எந்த விதமான தொந்திரவுகளும் தராததாக இருந்தது. அங்கு சாப்பிட்ட ரசம் போல் நான் என் ஆயுளில் சாப்பிட்டதில்லை. அந்த ரசத்திற்காகவே இன்னொரு முறை திருச்சுக்குப் போகலாம் என்று இருக்கிறேன். ஆனால் அப்படிப்போனால் ஹோட்டல் பில் நான்தான் கொடுப்பேன்.
நீக்குபழனி. கந்தசாமி October 12, 2015 at 9:11 PM
நீக்கு//மதிய உணவைப் பற்றி திரு வைகோ சொன்னது நூற்றுக்கு நூறு சரியானவை அங்கு நான் சாப்பிட்ட மாதிரி வீட்டில் சாப்பிட்டிருக்க மாட்டேன். உண்மையில் அந்த உணவு வீட்டுச் சாப்பாடைடவிட சுவையாகவும் வயிற்றுக்கு எந்த விதமான தொந்திரவுகளும் தராததாக இருந்தது. அங்கு சாப்பிட்ட ரசம் போல் நான் என் ஆயுளில் சாப்பிட்டதில்லை. அந்த ரசத்திற்காகவே இன்னொரு முறை திருச்சிக்குப் போகலாம் என்று இருக்கிறேன்.//
வாழ்க்கையில் இந்த ஒரு திருப்தி + மனநிறைவுதான் சார் நமக்குத் தேவை. எவ்வளவு பணம் செலவழித்தாலும் எல்லா இடங்களிலும் இந்தத் திருப்தி + மனநிறைவு நமக்குக் கிடைப்பது இல்லை.
அதனாலேயே பெரும்பாலும் பிற இடங்களுக்குச் செல்வதோ, வெளியூருக்குச் செல்வதோ, ஆங்காங்கே கிடைப்பதை விதியே என விழுங்குவதோ எனக்குப் பிடிப்பது இல்லை.
கொஞ்சம் சாப்பிட்டாலும் அது நல்ல டேஸ்டாகவும், ரிச் ஆகவும், மனதுக்கும் உடம்புக்கும் ஒத்து வருவதாகவும் இருக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். நம் வீடு + பழகிய நம்ம ஊர் இவைகளே நமக்கு என்றும் சோறு போடும் சொர்க்கமாகும். :)
பழனி. கந்தசாமி October 12, 2015 at 8:43 PM
நீக்கு//அது ஓட்டல் அல்ல. அதுவும் கோபு சார் வீடு மாதிரிதான்.//
ஆஹா, மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். நாங்களே மாதத்தில் ஒருசில நாட்கள் எங்கள் வீட்டில் சமைக்காமல், அங்கிருந்து வரவழைத்து சாப்பிட்டு மகிழ்வதுண்டு. Just for a change only.
//அந்த ஓனர் பற்றி ஒரு சிறப்புப் பதிவு வரப்போகுது.//
அவரைத் தங்களுக்கும், தங்களை அவருக்கும் நான் அறிமுகம் செய்துவைத்தபோது, நீங்க அவரை போட்டோ பிடித்துக் கொண்டீர்களே .... சிறப்புப் பதிவு வராமலா இருக்கும். :)
//அங்க கிடைச்ச சாப்பாடு மாதிரி அவர் வீட்ல கிடைக்குமோ என்னமோ, என் வீட்டில் நிச்சயமாக கிடைக்காது. நான் வீட்டில் சாப்பிடும் அளவைப்போல் இரு மடங்கு, நிஜமாக இரு மடங்கு சாப்பிட்டேன்.//
அந்த ஹோட்டல் ஓனர் பெயர்: சுவாமிநாத ஐயர். அவர்கள் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கிராமமான நாகைநல்லூர் காரர்கள்.
அந்தக்காலங்களில் கல்யாணங்களில் நாகைநல்லூர் சமையல் என்றாலே, இந்தப்பக்கமெல்லாம் மிகவும் பிரபலமாகும்.
அடுத்து ஜி எம் பி ஐயா மவன் மருமக்களோட வந்தாகளா. யாரு வராகாட்டியும் மால மரிவாதல்லா பண்ணி போடுவீகளா.
பதிலளிநீக்குmru October 11, 2015 at 8:14 AM
நீக்கு//அடுத்து ஜி எம் பி ஐயா மவன் மருமக்களோட வந்தாகளா. //
அவர் தன் மனைவி + இளைய மகனுடன் காரில் டிரைவர் போட்டு பெங்களூரிலிருந்து வந்திருந்தார். திருச்சி ஜங்ஷன் பக்கம் ஓர் லாட்ஜில் ரூம் எடுத்துத்தங்கி இருந்தார்கள்.
//யாரு வராகாட்டியும் மால மரிவாதல்லா பண்ணி போடுவீகளா.//
பொதுவாக எனக்கு 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட நபர்களுடனும் பேசவும், பழகவும் மிகவும் பிடிக்கும். உலகத்தை அவர்கள் பார்க்கும் அவர்களின் பார்வை வித்யாசமானது. அழகானது. அது ஓர் தனி அனுபவம் நிறைந்தது. பலவற்றை நாம் புதிதாக இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். பொதுவாக என்னைவிட வயதில் பெரியோர்களை என்னால் முடிந்த அளவு மதித்து மரியாதை கொடுக்கவே எப்போதும் நினைப்பேன்.
ஓ ஓ அடுத்து மஞ்சுபாஷினி அக்காவும் வந்திருந்தாகளா. எல்லா மொகத்துலயு இன்னா ஒரு சிரிப்பாணி. சூப்பரு.
பதிலளிநீக்குmru October 11, 2015 at 8:17 AM
நீக்கு//ஓ ஓ அடுத்து மஞ்சுபாஷினி அக்காவும் வந்திருந்தாகளா. //
அவங்க இந்த ஆண்டு இங்கு என் வீட்டுக்கு வந்துப்போய் சுமார் 2-3 மாதங்கள் ஆச்சுது. நான் மிகவும் தாமதமாக இந்தப்பதிவினில் அதையும் சேர்த்துள்ளேன்.
//எல்லா மொகத்துலயு இன்னா ஒரு சிரிப்பாணி. சூப்பரு.//
நம் அன்பின் மஞ்சுவுக்கு எப்போதும் சிரித்த முகம் மட்டுமே. :) தங்கச்சி மிகவும் தங்கமானவங்களாக்கும் !
அடுத்து பவித்ரா அகுகா பெரிய எளுத்தாளிங்க போல உங்க போல. உங்கூட்டுக்கு வாராதவங்களே கெடயாதோ.
பதிலளிநீக்குஇன்னக்கு ஸன்டேல காலேல7--மணிக்கே ஒரக்கம் கலஞ்சிடுச்சி. அப்பலேந்து கமண்டு போட ட்ரை பண்ணிபோட்டேருக்கேன் நெட் புடிக்கவேல்ல. அப்ப நோ கமண்டுன்னு இருந்திச்சி.
mru October 11, 2015 at 8:22 AM
நீக்கு//அடுத்து பவித்ரா அகுகா பெரிய எளுத்தாளிங்க போல உங்க போல.//
ஹைய்யோ ! அவங்க மிகப்பெரிய எழுத்தாளராக்கும். என்னுடனெல்லாம் அவங்களை நீங்க ஒப்பிடவேக்கூடாது. அவங்க ஆரணி என்ற ஊரில் [ஆரணிப்பட்டுப்போல :) ] இருக்கிறார்கள். எழுத்து மட்டும் இல்லாமல், மேடைப் பேச்சு போன்ற இன்னும் பல்வேறு திறமைகள் உள்ளவர்கள். பத்திரிகை எழுத்தாளரும் கூட. என்னால் அவர்களைக் கிட்டவே நெருங்க முடியாது.
//உங்கூட்டுக்கு வாராதவங்களே கெடயாதோ. //
இந்த பவித்ரா என்பவர் என் வீட்டுக்கு இன்னும் வந்ததே இல்லை. நாங்கள் இருவரும் இதுவரை நேரில் சந்தித்ததே இல்லை.
//இன்னக்கு ஸன்டேல காலேல 7--மணிக்கே ஒரக்கம் கலஞ்சிடுச்சி. அப்பலேந்து கமண்டு போட ட்ரை பண்ணிபோட்டேருக்கேன் நெட் புடிக்கவேல்ல. அப்ப நோ கமண்டுன்னு இருந்திச்சி.//
இங்கும் சில சமயம் நெட் கிடைப்பதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கிறது. என்ன செய்ய?
போட்டோ படங்கல்லா சூப்பரா கீது. நைட் ஒறங்கிடவே மாட்டீகளோ.
பதிலளிநீக்குmru October 11, 2015 at 8:23 AM
நீக்கு//போட்டோ படங்கல்லா சூப்பரா கீது.//
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றிம்மா.
//நைட் ஒறங்கிடவே மாட்டீகளோ.//
பகல் இரவு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தூக்கம் வரும்போது தூங்கிவிடுவேன். தூங்கினாலும் கணினியை எப்போதுமே நான் SWITCH OFF செய்வது கிடையாது.
தங்களின் அன்பான வருகைக்கும், இந்த ஒரு பதிவுக்கே அடுத்தடுத்து ஐந்து முறை பின்னூட்டமிட்டுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் குருஜி
புதுப்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு முதல் நாள் இரு இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பும் உபசரிப்பும் திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளைகளுக்கு நடக்கும் உபசரிப்பு போல் இருந்தது! படங்களும் எழுத்தில் வடிக்காததை காட்சியில் தெரிவித்துவிட்டன. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!
பதிலளிநீக்குவே.நடனசபாபதி October 11, 2015 at 9:00 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு முதல் நாள் இரு இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பும் உபசரிப்பும் திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளைகளுக்கு நடக்கும் உபசரிப்பு போல் இருந்தது! //
மிகச்சரியான பொருத்தமான உதாரணமாகச் சொல்லியுள்ளீர்கள். அதே... அதே... :) மிக்க மகிழ்ச்சி சார்.
//படங்களும் எழுத்தில் வடிக்காததை காட்சியில் தெரிவித்துவிட்டன. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்! //
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பொருத்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
அன்புடன் VGK
Superb!!
பதிலளிநீக்குmiddleclassmadhavi October 11, 2015 at 4:27 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம். நலம். நலமறிய ஆவல்.
//Superb!!//
எல்லாவற்றையும்விட அத்திப்பூத்தது போன்ற தங்களின் அபூர்வ வருகை மட்டுமே எனக்கு Superb!! ஆக உள்ளது. மிக்க நன்றி, மேடம்.
அன்புடன் கோபு
அருமை. இனிமை.
பதிலளிநீக்குஸ்ரீராம். October 11, 2015 at 7:04 PM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
//அருமை. இனிமை.//
:) அருமையான இனிமையான வருகை + கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம் :)
அட புதுக்கோட்டைக்கு முன் மலைக்கோட்டையில் சந்திப்பு....
பதிலளிநீக்குவாழ்த்துகளும் பாராட்டுகளும்.
வெங்கட் நாகராஜ் October 11, 2015 at 7:58 PM
நீக்குவாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.
//அட புதுக்கோட்டைக்கு முன் மலைக்கோட்டையில் சந்திப்பு.... வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, வெங்கட்ஜி.
வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் October 12, 2015 at 8:31 AM
நீக்கு//வாழ்த்துக்கள் ஐயா...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, Mr. DD Sir.
நினைவுகளைத்தட்டி எழுப்பும் பதிவு அதுவும் சுடச் சுட வாழ்த்துக்கள் கோபுசார்.
பதிலளிநீக்குG.M Balasubramaniam October 12, 2015 at 5:32 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//நினைவுகளைத்தட்டி எழுப்பும் பதிவு அதுவும் சுடச் சுட வாழ்த்துக்கள் கோபுசார்.//
தங்களை குடும்ப சஹிதம் மீண்டும் திருச்சியில் அன்று சந்திக்க பிராப்தம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி சார். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, சார்.
அன்புடன் கோபு
புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கு முன் மலைக்கோட்டையில் சந்திப்பு நடந்த விபரமறிந்து மகிழ்ச்சி. தமிழ் இளங்கோ அவர்களிடம் சுய அறிமுகம் செய்து கொண்டு பேசினேன். அவரும் ஸ்டேட் வங்கியில் வேலைசெய்தவர். மற்ற இருவரும் தங்களை அறிமுகம் செய்த போது தெரிந்து கொண்டேன். என்னை அவர்களுக்குத் தெரியாது என்பதால் போய்ப்பேசவில்லை. வீட்டில் இருந்துகொண்டு காணொளியில் விழாவைக் கண்டு களித்தது அறிந்து மகிழ்ச்சி. குட்டிப்பதிவர் சந்திப்புப் பற்றிய விபரங்களைச் சுவையாகத் தொகுத்து வழங்கியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார்!
பதிலளிநீக்குஎன்னிடமும் பேசியிருக்கலாமே, கலையரசி.
நீக்குஞா. கலையரசி October 12, 2015 at 8:18 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கு முன் மலைக்கோட்டையில் சந்திப்பு நடந்த விபரமறிந்து மகிழ்ச்சி.//
சந்தோஷம் மேடம்.
//தமிழ் இளங்கோ அவர்களிடம் சுய அறிமுகம் செய்து கொண்டு பேசினேன். அவரும் ஸ்டேட் வங்கியில் வேலைசெய்தவர்.//
மிக்க மகிழ்ச்சி. அவரும் என்னிடம் ஃபோனில் சொன்னார்.
//மற்ற இருவரும் தங்களை அறிமுகம் செய்த போது தெரிந்து கொண்டேன். என்னை அவர்களுக்குத் தெரியாது என்பதால் போய்ப்பேசவில்லை.//
அடடா, ஜஸ்ட் ஒரு ஹலோ சொல்லி பேசியிருக்கலாமே, மேடம். ஆனால் அந்தக் கும்பலில் இதெல்லாம் மிகவும் கஷ்டம்தான். என்னால் இதனை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.
//வீட்டில் இருந்துகொண்டு காணொளியில் விழாவைக் கண்டு களித்தது அறிந்து மகிழ்ச்சி.//
ஆமாம் மேடம். அதனால் மட்டுமே புதுக்கோட்டைக்கு நேரில் செல்லமுடியவில்லையே என்ற மனக்குறை நீங்கியது.
//குட்டிப்பதிவர் சந்திப்புப் பற்றிய விபரங்களைச் சுவையாகத் தொகுத்து வழங்கியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார்!//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.
நன்றியுடன் கோபு
மிக்கநன்றி. சுடச்சுடச் செய்திகள் அறிய ஆவலாகவுள்ளேன்.
பதிலளிநீக்குChandragowry Sivapalan October 12, 2015 at 9:40 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம். நலம் தானே? தங்களை நீண்ட நாட்களுக்குப்பின் இங்கு என் பதிவினில் மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
//மிக்கநன்றி. சுடச்சுடச் செய்திகள் அறிய ஆவலாகவுள்ளேன்.//
நான் புதுக்கோட்டைக்கு நேரில் செல்லவில்லை மேடம். காணொளியில் மட்டுமே நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தேன். பிறர் பதிவுகளில் எழுதியுள்ளதையும் படித்து வருகிறேன்.
நீங்களும் அந்தக் காணொளியை இந்த இணைப்பில் காணலாம்.
http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_12.html
அன்புடன் VGK
நானும் தங்களால் பதிவர்
பதிலளிநீக்குபழனி. கந்தசாமி அவர்களுக்குவழங்கப்பட்ட
அற்புதமானப் பரிசினைப் பார்த்தேன்
வேலைப்பாட்டில் அன்பும் பாசமும்
அதனால் விளைந்த அக்கறையும்
தெளிவாகப் புரிந்தது
வாழ்த்துக்களுடன்...
Ramani S October 13, 2015 at 5:59 AM
நீக்குவாங்கோ Mr. Ramani Sir, வணக்கம்.
//நானும் தங்களால் பதிவர் பழனி. கந்தசாமி அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமானப் பரிசினைப் பார்த்தேன். வேலைப்பாட்டில் அன்பும் பாசமும் அதனால் விளைந்த அக்கறையும் தெளிவாகப் புரிந்தது. வாழ்த்துக்களுடன்...//
மிக்க மகிழ்ச்சி சார்.
சொல்லப்போனால் நான் அந்த இரு படங்களையும்
(குறிப்பாக பரிசுத்தொகை அலங்கரிப்பு அட்டைகளை)
தெளிவாக வெளியிடவே இல்லை. நான் அறிவித்துள்ள
இப்போதைய போட்டிக்கான நிறைவு நாள் 31.12.2015 என
அறிவித்துள்ளதாலும், இதுவரை வெற்றியாளரான
இவரைத்தவிர, வெற்றி பெற்ற மேலும் சிலர் இருப்பதாலும், மேலும் வெற்றிபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளவர்களும் இருப்பதாலும் அதைப்பற்றி, போட்டியின் நிறைவு நாளான 31.12.2015 இரவு ஓர் பதிவு வெளியிடுவதாக உள்ளேன். அதில் எல்லாப்படங்களும் தனித்தனியே மிகத் தெளிவாக இருக்கும். வெற்றிபெற்றுள்ள அனைவரைப் பற்றிய சிறப்புச்செய்திகளும் அதில் நிச்சயமாக இடம்பெறும்.
தங்களின் அன்பான வருகைக்கும், புரிதலுக்கும், அழகான
கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
அன்புடன் VGK
சந்திப்புகள் என்றுமே இனிமையானவை
பதிலளிநீக்குதிருச்சியிலும் ஒரு பதிவர்சந்திப்பு அறிந்து
கண்டு மகிழ்ந்தேன் ஐயா
கரந்தை ஜெயக்குமார் October 13, 2015 at 6:36 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சந்திப்புகள் என்றுமே இனிமையானவை. திருச்சியிலும் ஒரு பதிவர்சந்திப்பு அறிந்து கண்டு மகிழ்ந்தேன் ஐயா//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். உங்கள் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்த பிறகு (குறிப்பாக மதுரா லாட்ஜ் சாப்பாடு) பற்றி நிறைய எழுத ஆசை. அவசரமாக ஒருவரைப் பார்க்க தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு செல்லுகிறேன். வந்து விரிவாக எழுதுகிறேன். நீங்கள் கேட்டபடி வலைப்பதிவர் கையேட்டில் வந்துள்ள உங்களைப் பற்றிய பக்கத்தை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளேன்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ October 13, 2015 at 7:54 AM
நீக்கு//அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.//
வாங்கோ சார், வணக்கம்.
//உங்கள் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்த பிறகு (குறிப்பாக மதுரா லாட்ஜ் சாப்பாடு) பற்றி நிறைய எழுத ஆசை. //
திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களும் இதைப்பற்றி தனிப்பதிவு தருவதாக உள்ளார். அந்த ஹோட்டல் முதலாளி திரு. சுவாமிநாத ஐயர் அவர்களை நான் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவரையும் ஓர் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார். விரைவில் 'மன அலைகள்’ தளத்தில் பதிவு வெளிவரக்கூடும்.
தாங்களும் தங்கள் பாணியில் எழுதுங்கோ. தங்களின் இந்த நல்லெண்ணத்திற்கு என் பாராட்டுகள்.
//அவசரமாக ஒருவரைப் பார்க்க தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு செல்லுகிறேன். வந்து விரிவாக எழுதுகிறேன்.//
பரவாயில்லை சார். ஜாக்கிரதையாகப் போய்விட்டு ஜாக்கிரதையாக வாருங்கள். விரிவாக எழுத ஒன்றும் அவசரமே இல்லை, சார்.
//நீங்கள் கேட்டபடி வலைப்பதிவர் கையேட்டில் வந்துள்ள உங்களைப் பற்றிய பக்கத்தை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளேன்.//
அது எனக்குக் கிடைத்தது. மிக்க நன்றி, சார்.
அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டதால் மட்டுமே என்னைப்பற்றி மிகவும் சுருக்கமாக நான்கு பக்கங்களுக்கு மட்டும் நான் எழுதி அனுப்பி இருந்தேன். அதை அவர்கள் மேலும் சுருக்கி நாலே வரிகளில் போட்டுள்ளார்கள். சற்றே ஏமாற்றமானாலும் மகிழ்ச்சியே. :)
அதன் வலதுபுறம் ஏதோ Bar Code போல உள்ளதே. அது என்னவோ எனக்குப் புரியவில்லை, சார். தங்களுக்கு ஏதும் தெரியுமானால் எனக்கும் சொல்லுங்கள்.
அனைத்துக்கும் மீண்டும் என் நன்றிகள்.
அன்புடன் VGK
வைகோ அய்யாவை சந்திக்கலாம் என்று ஆவலுடன் இருந்தேன். ஏமாற்றமடைந்தேன். இப்படி ஒரு குட்டிப் பதிவர் சந்திப்பு, அதுவும் வலையுலக ஜாம்பவான்கள் ஒன்று கூடிய நிகழ்வு பற்றி முன்பே தெரிந்திருந்தால் நானும் ஜோதியில் கலந்திருப்பேன். அடுத்தமுறை திருச்சி வரும்போது கண்டிப்பாக தங்களை சந்திக்கிறேன் அய்யா!
பதிலளிநீக்குS.P. Senthil Kumar October 13, 2015 at 8:58 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//வைகோ அய்யாவை சந்திக்கலாம் என்று ஆவலுடன் இருந்தேன். ஏமாற்றமடைந்தேன்.//
மேடையேறி ‘முதல் பரிசு’ பெற்ற தங்களைப்போன்ற வெகுசிலரை மட்டும் நேரில் சந்திக்க இயலவில்லையே என்ற ஏக்கம் எனக்குள்ளும் உண்டு.
இருப்பினும் காணொளியில் கண்டு மகிழ்ந்தேன். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மேலும் மேலும் தாங்கள் எழுத்துலகில் ஜொலிக்க என் அன்பு ஆசிகள்.
//இப்படி ஒரு குட்டிப் பதிவர் சந்திப்பு, அதுவும் வலையுலக ஜாம்பவான்கள் ஒன்று கூடிய நிகழ்வு பற்றி முன்பே தெரிந்திருந்தால் நானும் ஜோதியில் கலந்திருப்பேன். //
ஆஹா, ’ஜோதியில் கலந்திருப்பேன்’ மிக அருமையான சொல்லாடல். மிகவும் ரஸித்தேன். நீங்கள் ஓர் பத்திரிகை ஆசிரியர் அல்லவா ! :) அதை இங்கு நிரூபித்து விட்டீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.
//அடுத்தமுறை திருச்சி வரும்போது கண்டிப்பாக தங்களை சந்திக்கிறேன் அய்யா! //
பிராப்தம் இருந்தால் நிச்சயமாகச் சந்திப்போம். எனக்கும் மகிழ்ச்சியே.
அன்புடன் VGK
VGK to Mr. S.P. Senthil Kumar Sir (2)
நீக்குஎங்கள் ஊரைச்சேர்ந்த பிரபல மூத்த எழுத்தாளர் திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வரை செல்ல, தகுந்த வழித்துணையாகத் தாங்கள் இருந்து உதவியதாகக் கேள்விப்பட்டேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் VGK
ஆகா... இது என்ன புதுக்கோட்டை போகும் வழியில் மலைக்கோட்டையில் ஒரு மினி பதிவர் சந்திப்பா? அடடா.. அருமையாகப் பதிவிட்டுள்ளீர்கள் அய்யா.. இந்த நட்பும் அன்பும் வாய்த்துவிட்டால் இன்னும் பல ஆண்டுகள் நமது பயணம் இதே உற்சாகத்தோடு வளரும் என்பதில் சந்தேகமென்ன? தாங்கள் வராத சூழ்நிலையில் இதுபோலும் பதிவுகள் (அதில்தான் எத்தனை வர்ண ஜாலங்கள்..அடடா!) மேலும் மேலும் நமது பதிவர்-உறவை வலுதப்படுத்துகின்றன அய்யா! இதிலும் ஒரு சகோதரியின் அறிமுகம், பாராட்டு, பதிவுலகின் பிரம்மா என்று உங்களுக்கொரு பாராட்டுவிழா நடத்தவேண்டும் போலுள்ளது. நன்றி எனும் வார்த்தை போதுமா தெரியவில்லை. நீங்கள் நீடுவாழ்ந்து இன்னும் பன்னூறு இளைஞர்களை உற்சாகமூட்ட வேண்டி வணங்குகிறேன் அய்யா. நன்றி வணக்கம்
பதிலளிநீக்குMuthu Nilavan October 13, 2015 at 2:24 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//ஆகா... இது என்ன புதுக்கோட்டை போகும் வழியில் மலைக்கோட்டையில் ஒரு மினி பதிவர் சந்திப்பா?//
ஆம் நண்பரே .... மறுநாள் புதுக்கோட்டையில் நடைபெற இருந்த பெரும் விழாவுக்கு ஒரு சிறு ஒத்திகை போல இது இங்கு திருச்சியில் அன்று நடைபெற்றது.
//அடடா.. அருமையாகப் பதிவிட்டுள்ளீர்கள் அய்யா.. //
என் பதிவுகள் பலவும் மிகவும் அருமையாகவே பதிவிடப்பட்டிருக்கும். எந்தத்திரட்டியிலும் அவை இணைக்கப் படாமலேயே பலரும் ஆவலுடன் வந்து எட்டிப்பார்க்கும் தளம் என்னுடையது என்பதை பெருமையுடன் நானும் இங்கு தங்களுக்குக் கூறிக்கொள்கிறேன்.
//இந்த நட்பும் அன்பும் வாய்த்துவிட்டால் இன்னும் பல ஆண்டுகள் நமது பயணம் இதே உற்சாகத்தோடு வளரும் என்பதில் சந்தேகமென்ன?//
சந்தேகமே இல்லாமல், நட்புடனும் அன்புடனும், தமிழ்ப் பதிவர்களின் பயணம் உற்சாகத்தோடு, பல நூற்றாண்டுகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
// தாங்கள் வராத சூழ்நிலையில் இதுபோலும் பதிவுகள் (அதில்தான் எத்தனை வர்ண ஜாலங்கள்..அடடா!) மேலும் மேலும் நமது பதிவர்-உறவை வலுப்படுத்துகின்றன அய்யா!//
வர்ண ஜாலங்கள் மட்டுமே பிறரை சுண்டி இழுத்து நம் பக்கம் வரவழைக்கின்றன என்ற மாபெரும் தொழில் இரகசியத்தை மிகவும் தாமதமாகவே நான் புரிந்துகொண்டேன்.
2011 ஜனவரி முதல் 2011 ஜூன் மாதம் வரை எனக்குப் பதிவுகளில் படங்களை எப்படி இணைக்க வேண்டும் என்பதே சுத்தமாகத் தெரியாமல் இருந்து வந்தது என்பதே உண்மை.
இருப்பினும், அப்போதும்கூட, எந்தவிதமான கவர்ச்சிப்படங்களும் என் பதிவுகளில் காட்டப் படாமல் இருந்தும்கூட, ஓர் நிரந்தர வாசகர் கூட்டம் எனக்கு பின்னூட்டங்களால் உற்சாகம் அளித்துக்கொண்டே இருந்து வந்தது. அவர்கள் என் எழுத்துநடையை மட்டும் மிகவும் நேசித்தவர்கள்.
அவர்களில் பலபேர்கள் இப்போது பதிவுலகத்திலேயே இல்லாமல் தங்களை மறைத்துக்கொண்டுள்ளார்கள் என்பது மட்டுமே சற்றே வருத்தம் அளிப்பதாக உள்ளது.
பதிவர் உறவுகள் வலுப்பட வேண்டும் என்பதே என் நோக்கமும் ஆகும்.
//இதிலும் ஒரு சகோதரியின் அறிமுகம், பாராட்டு.//
பதிவுலகில் சகோதரிகளுக்கா பஞ்சம் ! :)
//பதிவுலகின் பிரம்மா என்று உங்களுக்கொரு பாராட்டுவிழா நடத்தவேண்டும் போலுள்ளது.//
2-3 நாட்கள் முன்பு வரலாறு காணாத முறையில், மிகவும் திட்டமிட்டு, வெகு அழகாக, குறையொன்றும் இல்லாமல் நிறைவாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும், விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனதுக்குப் பரம திருப்தியாகவும், அசத்தலாகவும் புதுக்கோட்டையில் ‘பதிவர் சந்திப்பு திருவிழா-2015’ என்பதை ’விழாவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து தலைமைப் பொறுப்பேற்று நடத்தி’ சரித்திர சாதனை படைத்துள்ள தங்களின் திருவாய் மலர்ந்தருளி இதுபோலச் சொல்லியுள்ளதில் நான் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
//நன்றி எனும் வார்த்தை போதுமா தெரியவில்லை.//
போதும் ...... போதும் ...... அதுவே போதும்.
செய்நன்றி மறந்தவர்கள் நிறைந்துள்ள இவ்வுலகில் ‘நன்றி’ என்று மனம் திறந்து சொல்லும் ஓரிருவர் உங்களைப்போல ஆங்காங்கே உள்ளதால் மட்டுமே கொஞ்சமாவது மழை பொழிகின்றது என்று நினைக்கிறேன்.
//நீங்கள் நீடுவாழ்ந்து இன்னும் பன்னூறு இளைஞர்களை உற்சாகமூட்ட வேண்டி வணங்குகிறேன் அய்யா. நன்றி வணக்கம் //
இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான வணக்கத்துடன் கூடிய கருத்துக்களுக்கும் நான்தான் தங்களுக்கு நன்றி கூற வேண்டும்.
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார் . வாழ்க !
அன்புடன் VGK
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். மூன்று பதிவுகளாக எழுத வேண்டிய விஷயங்ளை ஒரே பதிவாக போட்டு, திக்குமுக்காட செய்து விட்டீர்கள். முனைவர் பழனி. கந்தசாமி அய்யா அவர்களை திருச்சியில் பிரபலமான ‘மதுரா லாட்ஜ்” சாப்பாட்டு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றீர்கள் என்றவுடனேயே, அவரிடமிருந்து ஒரு சுவையான பதிவு வரும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எழுந்தது. நீங்களும் அதனை குறிப்பாக உணர்த்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குநீங்கள் குடியிருக்கும் ஆண்டார்தெரு கடைவீதியில் உள்ள மதுரா லாட்ஜ் சாப்பாட்டு பிரியர்களில் நானும் ஒருவன். முன்பு நாங்கள் சிந்தாமணியில் குடியிருந்தபோதும், திருச்சி டவுனில் பணிபுரிந்த போதும் இங்கு அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன். வலைப்பதிவராக ஆனவுடன் அந்த ஹோட்டல் சாப்பாட்டைப் பற்றி எழுத ஆசை. நான் நீண்டநாள் வாடிக்கையாளர் என்ற முறையில், உரிமையாளர் சாமிநாதன் அவர்களையும் தெரியும். இருந்தாலும் உங்களைப் போல் உரிமையாக, உள்ளே சென்று படம் எடுத்து என்னால் எழுத இயலாது. நீங்களே அந்த சாப்பாட்டைப் பற்றி, ஒரு பதிவு எழுத வேண்டும் என்று சொல்லலாம் என்று இருந்தேன். அதற்கு நேரம் வந்து விட்டது. நிறைய படங்கள், நிறைய தகவல்கள் ஆகியவற்றுடன் நீங்களும் ஒரு பதிவினை (அய்யா பழனி. கந்தசாமி அவர்களின் பதிவிற்குப் பின்) உங்கள் வலைத்தளத்தில் எழுதவும்.
தி.தமிழ் இளங்கோ October 13, 2015 at 7:28 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்வளிக்கிறது.
திருச்சி வடக்கு ஆண்டார் தெரு ’மதுரா ஹோட்டல்’ மேல் உள்ள தங்களின் ஈடுபாட்டு + அங்கு தாங்கள் பலமுறை சாப்பிட்ட அனுபவங்கள் + அதைப்பற்றி பதிவிட நினைத்த ஆசைகள் அனைத்தும் பாராட்டத்தக்கது.
நம் ஊரைப்பற்றி நாம் எழுதுவதைவிட, வெளியூரிலிருந்து வந்த ஒரு பெரியவர் அங்கு சாப்பிட்டு, அதன் ருசியை அவர் உணர்ந்த வகையில் எழுதினால் மேலும் சிறப்பாக அமையும் என்ற நோக்கத்தில் அவரை ”கோவையைச் சேர்ந்த ஓர் பிரபல எழுத்தாளர் என்றும் தங்களின் ஹோட்டலைப்பற்றி எழுதப்போகிறார்” என்றும் அந்தக்கடையின் உரிமையாளரிடம் சொல்லி அறிமுகப்படுத்தினேன்.
உடனே அவரிடம் பெயர் என்ன? சொந்த ஊர் எது? என நம்ம சார் கேட்டுவிட்டு, ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டு போய் இருக்கிறார். என்ன எழுதப்போகிறார் என நாமும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்போம்.
>>>>>
VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [ 2 ]
நீக்குதங்களின் சமீபத்திய பதிவினில் திரு. மணவை ஜேம்ஸ் அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தின் இறுதிப்பகுதியை சற்றுமுன் நான் படிக்க நேர்ந்தது. (அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்)
படித்ததும் என் மனதுக்கு மிகவும் கவலையாகவும், வருத்தமாகவும் இருந்தது.
-=-=-=-=-=-
manavai jamesTuesday, October 13, 2015 7:30:00 p.m.
**பெரியவர் திருமிகு. G.M.B. அவர்களைத் திருச்சியில் சந்திக்க பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்த பொழுது இன்னொரு பேருந்து வந்ததை கவனிக்காமல் சாலை கடக்க முற்பட்ட பொழுது... நொடிப் பொழுதில் பேருந்து மோத இருந்தது என்று தாங்கள் சொல்லிய பொழுது அதிர்ந்து போய் விட்டேன். அய்யா பதட்டம் இல்லாமல் நிதானமாக அவசரப்படாமல் காரியங்களைச் செய்யுங்கள். ‘சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும்’ சிறியவன் நான் சொல்லக்கூடாதுதான் என்றாலும் சொல்ல வேண்டும் என என் மனம் எண்ணியதால் சொல்கிறேன். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும். தாங்களும் விபத்தில் சிக்கி காலில் அடிபட்டதையும் பொருட்படுத்தாமல் அநேக இடங்களுக்குச் சென்று வருவதையும், தங்களின் ஆர்வத்தையும் எண்ணி வியக்கிறேன். நன்றி.**
-=-=-=-=-=-
>>>>>
VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [ 3 ]
நீக்குDear Sir,
நான் தங்களை கவனித்தவரை, தங்களுக்கும் என்னைப்போலவே கொஞ்சம் பதட்டம் அதிகமாகத்தான் உள்ளது. பெரு மூச்சு வாங்கி, வியர்த்துக்கொட்டும் ஸ்தூல சரீரமாகவே உள்ளது. உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள், சார்.
பதிவு / பதிவர்கள் / சந்திப்பு / திருவிழா / போட்டோ என எங்கும் அலைந்து தயவுசெய்து உடலை வருத்திக்கொள்ளாதீர்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவையெல்லாம் ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே, நமக்கு நேரம் இருக்கும்போது மட்டுமே, நமக்குள்ள ஓய்வு நேரத்தைக் கடத்த மட்டுமே நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதே வேலையாக நாம் இருத்தல் கூடவே கூடாது.
எதற்காகவும், யாருக்காகவும், நம் உடலை கொஞ்சமும் வருத்திக்கொள்ளவே கூடாது. இதுதான் என் பாலிஸி. அதனால்தான் நீங்கள் எவ்வளவோ வற்புருத்தியும் நான் புதுக்கோட்டை விழாவிற்கு வரவே இல்லை.
அங்கு நடந்தவற்றை இங்கு வீட்டிலிருந்தே அழகாக ஆனந்தமாகக் கண்டு மகிழ்ந்தேன். நீங்களும் அதுபோலவே செய்திருக்கலாம் என்பதே என் தனிப்பட்ட கருத்தாகும். இதெல்லாம் இந்த வயதில் நமக்கு இருக்கும் உடல்நிலை + பதட்டம் + அசெளகர்யங்களுக்கு, நமக்கு வேண்டாத வேலைகள் சார்.
இதுபோல தங்களுக்கு அன்று நிகழ இருந்த பெரும் ஆபத்தினைப்பற்றி, தாங்கள் என்னை அன்று சந்தித்தபோது கூட என்னிடம் சொல்லவில்லையே, சார்.
இனியாவது கவனமாக இருங்கோ சார், ப்ளீஸ்.
அன்புடன் VGK
மூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B அவர்கள் வலைப்பதிவு, வலைப்பதிவர் மீது வைத்திருக்கும் தூய அன்பினை என்னேன்று சொல்வது? இதற்காகவே திருச்சிக்கு வந்த அவரைப் பார்க்க இரண்டாம் முறையும் வந்தேன்.
பதிலளிநீக்குஅய்யா இன்னொரு விஷயம். இதுபோல் இரண்டு மூன்று பதிவுகளை ஒரே பதிவாக போடவேண்டாம். அதேபோல் ஒரு பதிவினைப் போட்டுவிட்டு, ஒன்றிரண்டு தினங்கள் கழிந்த பின்னர் புதிய படங்களைச் சேர்க்க வேண்டாம். அதுதான் அப்போதே இந்த பதிவைப் பார்த்து விட்டோமே என்று , பிற்பாடு இணைத்த புதியவற்றை பலர் பார்க்காமலே போய்விடுகின்றனர்.
அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ சார் அவர்களே!
நீக்குவணக்கம்.
நான் மேலே என் மனம் திறந்து எழுதியுள்ள தங்களின் பின்னூட்டத்திற்கான என் பதில்களில் சில தங்களுக்கு ஒருவேளை ஏதேனும் வருத்தம் அளிக்கக்கூடுமானால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
என் மனதுக்குச் சரி என்று பட்டதை, தங்களின் உடல்நலன் கருதி மட்டுமே, தங்களின் சொந்த அண்ணன் போலச் சொல்லி விட்டேன்.
//மூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B அவர்கள் வலைப்பதிவு, வலைப்பதிவர் மீது வைத்திருக்கும் தூய அன்பினை என்னென்று சொல்வது? இதற்காகவே திருச்சிக்கு வந்த அவரைப் பார்க்க இரண்டாம் முறையும் வந்தேன். //
நான் அன்று அவர்களை இரண்டாம் முறையாக சந்திக்க வர நேர்ந்தது வேறு சில காரணங்களுக்காகவும் .... அதாவது நம் திரு. ரிஷபன் சார் அவர்களும், ஆரண்யநிவாஸ் திரு. இராமமூர்த்தி அவர்களும் திரு. GMB Sir அவர்களை முதன்முதலாக சந்திக்கச் செல்லும்போது நானும் கூடவே அவர்களுடன் வரவேண்டும் என விரும்பினார்கள். போகவர தாங்களே கார் ஏற்பாடு செய்வதாகவும் என்னிடம் வாக்குறுதி கொடுத்து விட்டார்கள்.
அதுபோலவே அவர்களின் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு என் வீட்டுக்கே வந்து காரில் என்னைக் கூட்டிச்சென்றார்கள். திரும்ப என் வீட்டினில் காரில் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.
Otherwise அன்று வானம் உருட்டிக்கொண்டு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சூழ்நிலையில், அவர்கள் என்னைக் காரில் கூட்டிச்செல்லாமல் இருந்திருந்தால் நான் தனியாக புறப்பட்டு வந்து திரு. GMB Sir அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பே இருந்திருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.
சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பித்தத் தங்களுக்கும், திரு. ரிஷபன் சாருக்கும், திரு. இராமமூர்த்தி சாருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகள்.
//அய்யா இன்னொரு விஷயம். இதுபோல் இரண்டு மூன்று பதிவுகளை ஒரே பதிவாக போடவேண்டாம்.//
நான் இப்போதெல்லாம் அதிகமாகப் பதிவுகளே வெளியிடுவது இல்லை என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
05.07.2015 அன்று நான் வெளியிட்டிருந்த ’நினைவில் நிற்போர் - 35ம் திருநாள்’ என்ற http://gopu1949.blogspot.in/2015/07/35.html இந்தப்பதிவினை முழுவதுமாகப் படித்துப் பார்த்து மனம் திறந்து பாராட்டிவிட்டு, புதுக்கோட்டை பதிவர் சந்திப்புத் திருவிழா பற்றி ஓர் பதிவினை நான் கட்டாயமாக வெளியிட வேண்டும் என நம் இனிய நண்பரும் விழாத் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள் என்னிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டதால் மட்டுமே 17.09.2015 அன்று ’புவனா .. ஒரு ஆச்சர்யக்குறி!’ என்ற தலைப்பில் ஓர் பதிவு வெளியிட்டேன்.
[அதிலேயே அவ்வப்போது புதுக்கோட்டை விழாக்குழுவினரால் வெளியிடப்பட்ட லேடஸ்ட் நியூஸ்களையும் 10.10.2015 வரை அப்டேட் செய்துகொண்டே வந்துள்ளேன். ]
மேலும் இந்த 10.10.2015 தேதியிட்ட, இந்தப்பதிவுக்குப்பின் நான் எப்போது புதிய பதிவு வெளியிடுவேன் என எனக்கே தெரியாது. அதுபற்றி என்னால் இப்போது ஏதும் சொல்லவும் இயலாது.
அதனால் மட்டுமே நடுவில் நிகழ்ந்துள்ள குவைத் பெண் பதிவர் ஒருவரின் திடீர் வருகையையும், மற்றொரு பெண் பதிவரின் சமீபத்திய எழுத்துலக சாதனையையும் இதிலேயே கொண்டுவரும்படி ஆகிவிட்டது.
பிறகு அவை வெளியிடாமலேயே விட்டுப்போய்விடக்கூடும் என்பதால் வேறு வழியே இல்லாமல் இந்தப்பதிவினிலேயே சேர்க்கும்படி ஆகிவிட்டது.
//அதேபோல் ஒரு பதிவினைப் போட்டுவிட்டு, ஒன்றிரண்டு தினங்கள் கழிந்த பின்னர் புதிய படங்களைச் சேர்க்க வேண்டாம். அதுதான் அப்போதே இந்த பதிவைப் பார்த்து விட்டோமே என்று , பிற்பாடு இணைத்த புதியவற்றை பலர் பார்க்காமலே போய்விடுகின்றனர். //
இதை நான் நன்கு புரிந்துகொள்கிறேன். இந்தப்பதிவினில் நான் அதுபோல கொஞ்சம் செய்ய நேர்ந்துவிட்டது. ஆனால் அதுபோல நான் செய்த நள்ளிரவு நேரத்தில் யாரும் பின்னூட்டம் இடவில்லை என்பதால் அதுபோலச் செய்து விட்டேன்.
இல்லாவிட்டால் (அதாவது யாராவது பின்னூட்டங்கள் கொடுத்தபிறகு என்னால் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால்) அது பற்றியதோர் அறிவிப்பினை நானே பின்னூட்டப் பெட்டியில் கொடுத்துவிடுவது என் வழக்கம்.
தங்களின் மீண்டும் வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
அடடா!! மலைக்கோட்டைப் பதிவர் சந்திப்பு!! அதுவும் வலையுலக மூத்த ஜாம்பவான்கள் சந்திப்பு!!! ம்ம்ம் ந்டத்துங்கள் நடத்துங்கள்! தங்கள் தர்பாரை...."தர்பார் மகிமை சொல்லும்"
பதிலளிநீக்குமூத்தவர்கள் எல்லாம் இந்த வயதிலும் உற்சாகத்துடன் ஒருவரை ஒருவர் சந்தித்து அளவளாவுவதைக் காணும் போது எல்லோருமே குழந்தைகள் போல அகமகிழ்ந்து அன்புடன் சந்தித்து வலு பெறுகின்றார்கள் என்று அழகியலாய் தோன்றுதின்றது. இந்த வலைப்பதிவு ஒற்றுமை ஓங்கி உலகளந்து வளர்ந்து வலம் வர வேண்டும்!
தங்கள் எல்லோரது உடல் நலத்திற்கும் பிரார்த்தித்துக் கொண்டு, தங்களின் அன்பும், நட்பும் செழித்தோங்கிட வாழ்த்துகளுடன்....பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது சார்!!! தங்களது உற்சாகம் எங்கள் எல்லோருக்கும் ஒரு சிறந்த உதாரணம் என்பது மிகையல்ல...
துளசிதரன், கீதா...
Thulasidharan V Thillaiakathu October 14, 2015 at 12:56 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
அது : புதுவை பதிவர் சந்திப்பு!~
பதிலளிநீக்குஇது: புதுமை பதிவர் சந்திப்பு!
மிக அருமை!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 15, 2015 at 9:53 PM
நீக்குவாங்கோ நண்பரே, வணக்கம். நலம் தானே!
//அது : புதுவை பதிவர் சந்திப்பு!~
இது: புதுமை பதிவர் சந்திப்பு!
மிக அருமை!//
தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான ’புதுமை’யான [சிலேடையான] கருத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வாழ்க !
அன்புடன் VGK
கோட்டை நகரங்களில் நிகழ்ந்த சிறப்பான பதிவர் சந்திப்புகள்
பதிலளிநீக்குவெற்றிக்கோட்டைத் தொட்டு வெற்றிக்கொடி பறக்கவிட்டதற்கு
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:05 AM
நீக்குவாங்கோ, வணக்கம். நலம். நலமறிய ஆவல்.
//கோட்டை நகரங்களில் நிகழ்ந்த சிறப்பான பதிவர் சந்திப்புகள் வெற்றிக்கோட்டைத் தொட்டு வெற்றிக்கொடி பறக்கவிட்டதற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//
தங்களை நீண்ட நாட்களுக்குப்பின் [கடைசியாகப் பார்த்தது: இராஜராஜேஸ்வரி December 21, 2014 at 3:43 AM] இங்கு என் பதிவினில் இன்று பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
தங்களின் இன்றைய அன்பான அபூர்வ வருகைக்கும், கனிவான இதமளிக்கும் கருத்துக்களுக்கும், 2015ம் ஆண்டின் முதல் வருகைக்கும், திருச்சி மலைக்கோட்டை மாநகரத்தின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
WELCOME and THANK YOU Madam !
எங்களின் இனிய மீண்டும் சந்திப்பினைப்பற்றி, முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள், சமீபத்தில் தன் ‘மன அலைகள்’ என்ற வலைத்தளத்தினில், இரண்டு பதிவுகள் கொடுத்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஅவற்றிற்கான இணைப்புகள் இதோ:
http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_17.html
தலைப்பு: கரும்பு தின்னக் கூலி
http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_14.html
தலைப்பு: இரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்பு
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் VGK
ஏற்கனவே முனைவர். திரு. கந்தசாமி ஐயா அவர்கள் கொடுத்துள்ளதோர் பதிவுக்கான இணைப்பு:
பதிலளிநீக்குhttp://swamysmusings.blogspot.com/2015/09/blog-post.html
தலைப்பு: நானும் ஒரு பரிசு பெற்றேன்
ஆஹா! நான் ரெண்டு கோட்டையையுமே 'கோட்டை' விடுறாப்புல ஆகிடுச்சே! ஒரு நாளைக்கு சொல்லாம கொள்ளாம வந்து வீட்டு கதவ தட்டப்போறேன் வாத்யாரே! ஹா ஹா!
பதிலளிநீக்குRAVIJI RAVI October 17, 2015 at 11:23 PM
நீக்குவாங்கோ வாத்யாரே, வணக்கம்.
//ஆஹா! நான் ரெண்டு கோட்டையையுமே 'கோட்டை' விடுறாப்புல ஆகிடுச்சே! ஒரு நாளைக்கு சொல்லாம கொள்ளாம வந்து வீட்டு கதவ தட்டப்போறேன் வாத்யாரே! ஹா ஹா!//
வாருங்கள். வாருங்கள். மிக்க மகிழ்ச்சி. முன்கூட்டியே சொல்லிவிட்டு வந்தால் நம் இருவருக்குமே சந்திப்பினில் ஏமாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கலாம்.
WELCOME TO YOU !
அன்புடன் VGK
பழனி கந்தசாமி சார் & ஜி எம் பாலா சாருடனான முதல் சந்திப்பு அருமை. மஞ்சு எங்கே இருக்கிறார்.
பதிலளிநீக்குபவித்ராவுக்கு வாழ்த்துகள். :)
வழக்கம்போல அருமையான அழகான பகிர்வு கோபால் சார் :)
Thenammai Lakshmanan October 25, 2015 at 12:52 PM
நீக்குவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.
//பழனி கந்தசாமி சார் & ஜி எம் பாலா சாருடனான முதல் சந்திப்பு அருமை.//
இது அவர்கள் இருவருடனுமான என் இரண்டாம் சந்திப்பு ஆகும். அவர்களுடனான என் முதல் சந்திப்புக்கான இணைப்புகளும், இந்தப்பதிவினில் ஆங்காங்கே நான் கொடுத்துள்ளேன்.
//மஞ்சு எங்கே இருக்கிறார். //
மஞ்சு தற்சமயம் ‘குவைத்’தில் இருக்கிறார்.
//பவித்ராவுக்கு வாழ்த்துகள். :) //
எழுத்துலகில் மேலும் ஓர் சாதனையை சமீபத்தில் செய்துள்ள திருமதி. பவித்ரா அவர்களை தாங்கள் வாழ்த்தியுள்ளதற்கு, அவர்கள் சார்பில் என் நன்றிகள்.
//வழக்கம்போல அருமையான அழகான பகிர்வு கோபால் சார் :)//
தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK
பல நாட்கள் ஆயிற்று. வழக்கம் போலவே வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் பதிவு. நலம் தானே வைகோ சார்?
பதிலளிநீக்குமோகன்ஜி October 26, 2015 at 9:17 AM
நீக்குவாங்கோ ... வணக்கம்.
//பல நாட்கள் ஆயிற்று. வழக்கம் போலவே வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் பதிவு. நலம் தானே வைகோ சார்?//
நலமே. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார் :)
வணக்கம். தங்களின் பதிவுகள் தற்சமயம் எனக்கு இ மெயிலில் கிடைப்பதில்லை. தயவுசெய்து என் இ மெயில் விலாசத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
காசிவிஸ்வநாதன்.
kasiviswanath ramanathan October 28, 2015 at 11:01 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//வணக்கம். தங்களின் பதிவுகள் தற்சமயம் எனக்கு இ மெயிலில் கிடைப்பதில்லை. தயவுசெய்து என் இ மெயில் விலாசத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி.
காசிவிஸ்வநாதன்.//
தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.
இருப்பினும் நான் நீண்ட நாட்களாகவே [ஓராண்டுக்கும் மேலாகவே] யாருக்கும் என் புதிய பதிவுகள் வெளியீடுபற்றி இ.மெயிலில் தகவல் அனுப்பும் வழக்கம் ஏதும் என்னிடம் இல்லை.
இங்கு வருகை தந்து கருத்தளித்துள்ளவர்கள் அனைவருமே அவர்களாகவே டேஷ்-போர்டினைப்பார்த்து மட்டுமே ஓர் ஆர்வத்துடன் வருகை தந்துள்ளார்கள். தாங்களும் அதுபோலவே செய்தால் நல்லது.
என் பதிவுக்கு தாங்கள் Follower ஆகியிருந்தால், என் புதிய வெளியீடுகள் பற்றிய தகவல் தங்களின் டேஷ்-போர்டில் நிச்சயமாகக் காட்சியளிக்கும்.
இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் VGK
My e-mail address: kasi1949@gmail.com.
பதிலளிநீக்குkasiviswanath ramanathan October 28, 2015 at 11:01 AM
நீக்கு//My e-mail address: kasi1949@gmail.com//
I have just noted this in my mind.
நான் புதிய வெளியீடுகள் கொடுக்கும்போது இது நினைவில் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை.
மேலும் புதிய வெளியீடுகள் பற்றி யாருக்குமே நாமாகவே இ.மெயில் மூலம் தகவல் கொடுத்து அவர்கள் யாரையும் வருந்தி அழைக்கக்கூடாது என்ற கொள்கை முடிவினை நான் எடுத்து செயல்பட்டு வருவதால், அதனை மீறி தங்களை மட்டும் அழைப்பதும் அவ்வளவாக சரியாக இருக்காது.
மற்றொரு மிக முக்கியமான விஷயம்: நான் வெளியிடும் பதிவுக்கு சற்றேனும் சம்பந்தம் உள்ளதாகவும், சற்றே வித்யாசமாகவும், விரிவாகவும் பின்னூட்டமிடும் நபர்கள் என் பதிவுக்கு வருவதை மட்டுமே நான் எப்போதும் விரும்புகிறேன்.
சும்மாவாவது வருகை தந்து, பதிவினையும் முற்றிலும் படிக்காமல், சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஓரிரு வரிகள் எழுதிவிட்டுச் செல்வோர் இங்கு என் பதிவுகள் பக்கம் வருவதும் வராததும் என்னைப் பொறுத்தவரை ஒன்று தான். அப்படிப்பட்டவர்கள் வருவதால் எனக்கு சந்தோஷமோ அவர்கள் வராததால் எனக்கு வருத்தமோ ஏதும் கிடையவே கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் இந்த பதிலால் நான் ஏதேனும் தவறாகச் சொல்லி இருப்பதாகத் தாங்கள் நினைத்தால் என்னை தயவுசெய்து மன்னித்துக்கொள்ளவும்.
அன்புடன் VGK
மலைக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு நீங்கள் சென்றிருந்தால் எங்களுக்கு ஒரு அருமையான எழுத்து விருந்து கிடைத்திருக்கும்.
பதிலளிநீக்குவடை போச்சே.
Jayanthi Jaya November 1, 2015 at 7:41 PM
நீக்குவாங்கோ .... ஜெ. வணக்கம்.
மலைக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு நீங்கள் சென்றிருந்தால் எங்களுக்கு ஒரு அருமையான எழுத்து விருந்து கிடைத்திருக்கும். வடை போச்சே.//
உங்களுக்கு வடை போனால் போகட்டும்.
ஒருசிலர் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி அவர்களின் புதிய எழுத்துக்களுக்கு திறப்பு விழா நடத்தி சிறப்பிப்பார்கள்.
வேறு சிலரோ, பொறாமையினாலோ என்னவோ, ஒழுங்காக நடந்துவரும் ஒரு அமைப்பினைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஒருவழியாக மூடுவிழா நடத்துவதிலேயே ஆர்வமாகவும் குறியாகவும் இருந்து செயல்படுவார்கள்.
அங்கு சென்றால், இதுபோல ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமான விசித்திர குணாதிசயம் கொண்ட ஆசாமிகளாக பல ஊர்களிலிருந்து வந்து சேர்ந்திருப்பார்கள்.
நான் அங்கு போகாமல் இருந்ததற்கான பல காரணங்களில் இதுபோன்ற ஓரிருவரை பார்க்கவே சுத்தமாக விரும்பாததும் ஒன்று.
வணக்கம் அப்பா, தாங்கள் நலம் என்பதை அறிவதில் ஆனந்தம். நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு பொன்னான நேரத்தில் பதிவிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. இப்படி ஒரு கொண்டாட்டமான பதிவை உங்களை காட்டிலும் சிறப்பாக வேறு யாரால் கொடுத்து விட முடியும்?
பதிலளிநீக்குஅவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் என்று எக்கச்சக்கமாக எழுதி உள்ளீர்கள். இன்னும் அந்த இடத்தை அடைய காலம் கனிய வேண்டும். தங்கள் வாழ்த்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.
திருச்சி ஆரணிக்கு பக்கத்தில் இல்லையே என்று இப்பொழுது வருத்தமாக இருக்கிறது. தங்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்குமே...என்ன செய்ய...ஆனால் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் என எதிர்பார்க்கிறேன். நம்பிக்கையுடன் பவித்ரா நந்தகுமார்
பவித்ரா நந்தகுமார் November 11, 2015 at 11:26 AM
நீக்கு//வணக்கம் அப்பா, தாங்கள் நலம் என்பதை அறிவதில் ஆனந்தம். //
வாம்மா பவித்ரா, வணக்கம்மா.
//நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு பொன்னான நேரத்தில் பதிவிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. //
அன்பு மகளின் இன்றைய வருகை எனக்கும் ஆனந்தம் அளிக்கிறது.
//இப்படி ஒரு கொண்டாட்டமான பதிவை உங்களை காட்டிலும் சிறப்பாக வேறு யாரால் கொடுத்து விட முடியும்?//
அடடா ! மிக்க மகிழ்ச்சிம்மா.
//அவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் என்று எக்கச்சக்கமாக எழுதி உள்ளீர்கள். இன்னும் அந்த இடத்தை அடைய காலம் கனிய வேண்டும். தங்கள் வாழ்த்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.//
என்னே ஒரு தன்னடக்கமான பதில்! நேற்று தீபாவளியன்று நேரில் (தொலைகாட்சியில்) பவித்ராவைக் கண்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு. அந்த முழு நிகழ்ச்சியையும் என்னால் கவனிக்க இயலவில்லை. தங்களின் மிகச் சிறப்பான பேச்சினை மட்டும் கேட்டு மகிழ்ந்தேன். அதற்குமுன் பேசிய பேச்சாளருடன் திண்டுக்கல்காரர் டூயட் ஆடினார் என ஆரம்பித்து ........ விடுமுறை நாட்களில் ஒட்டடை அடிப்பது வரை அனைத்துத் தொல்லைகளையும் அடுக்கடுக்காகக் கோர்வையாகச் சொன்னபோது பலமாகக் கைத்தட்டி மகிழ்ந்தேன்.
அப்போது என் மடியில் 4+ மற்றும் 1+ வயதுப் பேரன்கள் அமர்ந்து லூட்டி அடித்துக்கொண்டிருந்தனர். அதனால் அந்த நிகழ்ச்சியை முழுமையாக நேற்று கேட்க முடியாமல் போய்விட்டது. அதனால் என்ன ..... தனியே யூ-ட்யூப்பில் எடுத்து வைத்துள்ளேன். அதனைப் போட்டு மீண்டும் ஒருமுறை பொறுமையாகக் கேட்டு மகிழ்வேன்.
//திருச்சி ஆரணிக்கு பக்கத்தில் இல்லையே என்று இப்பொழுது வருத்தமாக இருக்கிறது. தங்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்குமே...என்ன செய்ய...ஆனால் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் என எதிர்பார்க்கிறேன். நம்பிக்கையுடன் பவித்ரா நந்தகுமார்//
அடிக்கடி தொலைகாட்சி + பெண்கள் மலர் மூலமாக சந்தித்துவிடுவதால் எனக்கு அந்த மனக்குறையெல்லாம் இல்லவே இல்லையம்மா. இருப்பினும் பிராப்தம் இருந்தால், தங்களின் இந்த நம்பிக்கை வீண்போகாமல், நாம் நேரில் சந்திப்போம்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான தன்னடக்கமான இனிய கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா.
என்றும் அன்புடன் கோபு