அன்புச்சகோதரி திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுடன் எனக்கோர் 7-8 மாதங்களுக்கு முன்பாக மட்டுமே பதிவுகள் + பின்னூட்டங்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
திருமதி ஜெயந்தி அவர்களின் குழந்தைத்தனம், குறும்புத்தனம், துடுக்குத்தனம், வால்த்தனம், உரிமையுடன் ஸ்வாதீனமாகப் பேசும் கலகலப்பான பேச்சுக்கள், நகைச்சுவை உணர்வுகள், கேலிகள், கிண்டல்கள், என்னிடம் காட்டிவந்த மிகுந்த அன்பு, பாசம், நேசம், பிரியம், வாஞ்சை, வாத்ஸல்யம்; எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசிடும் இனிய அணுகுமுறை [Transparency in all matters] உடனுக்குடன் மேற்கொள்ளும் தகவல் பறிமாற்றங்கள் [Quick Feedback] ஆகிய குணங்கள், இவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்தவைகளாக அமைந்து விட்டன.
இவ்விதமான நான் மிகவும் ரஸிக்கும் + எதிர்பார்க்கும், எல்லா அபூர்வ குணங்களையும், நான் அடிக்கடி இவர்களின் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், பதிவுகளிலும், எனக்கு இவர்கள் எழுதும் பின்னூட்டங்களிலும் பார்த்து உணர்ந்து மகிழ்ந்து வருகிறேன்.
உதாரணமாக, என்னுடைய கீழ்க்கண்ட பதிவுகளில் திருமதி. ஜெயந்தி அவர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்கள், என் மனதை மிகவும் நெகிழச்செய்துள்ளன.
ஒரேவிதமான ரசனைகளும் எண்ண அலைகளும் உள்ள இருவருக்குள் மட்டும்தான் இதுபோன்ற வலுவான உன்னதமான நட்பு மலர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மிகுந்த பாசத்துடன் பழகிவரும் அன்புச்சகோதரி திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
//”ஜெயமுடன் ரமணீயமாக பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் ..!” //
என்று சஸ்பென்ஸ்ஸை உடைக்கக் க்ளூ கொடுத்து உதவியிருந்த அதிபுத்திசாலிப் பதிவர்களுக்கும் ......
//செவத்தம்மா தெரிந்தபதிவர் தான். காத்து இருக்கிறேன். விடையை தெரிந்து கொள்ள. இப்போதே என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.//
என்று நாசூக்காக சுட்டிக்காட்டி எழுதியிருந்த திருமதி கோமதி அரசு அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான நல்வாழ்த்துகள். இனிய நன்றிகள்.
oooooOooooo
அறுபதிலும் ஆசை வரும் ! ;)))))
என்றல்லவா இந்தப்பதிவுக்கு நான் தலைப்புக்கொடுத்துள்ளேன் !
எனக்கும் அந்த ஆசை வந்ததே !!
எங்களின் சஷ்டியப்தபூர்த்தி 05.12.2009 அன்று நடைபெற்றது.
அப்போது ஓர் ஆசையினால் சற்றே வித்யாசமாக அச்சிடப்பட்ட
அழைப்பிதழ்கள் இதோ மலரும் நினைவுகளாக.
எப்படியிருந்த நான் .... ....
இப்படி ஆகிவிட்டேன். ;)))))
oooooOooooo
அறுபதாம் கல்யாணம் என்று சொல்லப்படும் ’சஷ்டியப்த பூர்த்தி’போன்ற ஒருசில விழாக்களைப்பற்றி அடியேன் கேள்விப்பட்டுள்ள ஒருசில சிறப்புச் செய்திகளைத் தங்கள் தகவலுக்காக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:
1]
59 வயதுகள் பூர்த்தியாகி 60ல் அடியெடுத்து வைக்கும் நாளில் செய்துகொள்வது “உக்ரஹ சாந்தி” என்றதொரு ஹோமம்.
அடுத்த ஓராண்டு அரோக்யத்துடன் இருந்து சஷ்டியப்த பூர்த்தி நல்லபடியாக நடக்க எண்ணி, சிறப்பு வழிபாடுகளுடன் வேண்டிக்கொண்டு செய்யும் ஓர் விசேஷ ஹோமம் இது.
-=-=-
பிறந்து 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் [பிறந்த அதே தமிழ் வருஷம், அதே தமிழ் மாதம், அதே ஜன்ம நக்ஷத்திரம் சேரும் நன்னாளில்] செய்துகொள்ளும் விசேஷ பூஜைகளும் ஹோமங்களுமே, சஷ்டியப்த பூர்த்தி எனப்படுவது.
ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் எந்தெந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில் உள்ளனவோ, அதே ராசிகளில் அதே கிரஹங்கள் மீண்டும் வந்து அமர்வது என்பது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடிய அபூர்வமானதோர் நிகழ்வாகும்.
இதுபோன்ற அபூர்வமான கிரஹ அமைப்புகள் தான் சஷ்டியப்த பூர்த்தி நன்னாளின் தனிச்சிறப்பாகும்.
பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில், ஒரே ஒருமுறை மட்டும் தான் இத்தகைய அபூர்வ நிகழ்வினை மீண்டும் சந்திப்பதற்க்கான வாய்ப்பு அமையும். [அதுவும் பிராப்தம் இருந்தால் மட்டுமே]
{குழந்தை பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகத்தின் இராசிக்கட்டங்களில் இந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில் அன்று அமைந்திருந்தன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே கிரஹங்கள் மீண்டும் அதே ராசிகளில் அப்படியே அமர்ந்திருப்பது, இந்த சஷ்டியப்தபூர்த்தி என்று கொண்டாடிடும் நாளில் மட்டுமே தான். }
மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்வினைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற விரும்பினால், 120 ஆண்டுகளுக்கு மேல் அவர் இந்த பூமியில் வாழ வேண்டியிருக்கும். ;)))))
60 வயது ஆனவர்களை [அவர்கள் ஆணோ பெண்ணோ, படித்தவர்களோ படிக்காதவர்களோ,நம் வீட்டில் மிகச்சாதாரண வேலைகள் செய்யக்கூடியவர்களாகவே இருப்பினும் கூட] நாம் அவர்களுக்கு ஆசனம் அளித்து அமர வைத்து மட்டுமே பேச வேண்டும். நாம் உட்கார்ந்து கொண்டு அவர்களை நிற்க வைத்து பேசுவது கூடவே கூடாது. அவர்களின் வயதுக்கு ஒர் தனி மரியாதை அளிக்கப்பட வேண்டும்.
2]
ஒரு பெற்றோரின் திருமணத்தை அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பார்க்க இயலாமல் போகிறது அல்லவா !
இத்தக்காலத்தில் ஒரு செளகர்யம் உள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோரின் திருமண ஆல்பம், திருமண வீடியோ கேஸட் முதலியனவற்றைப் போட்டுக் காண்பித்து விடலாம் தான் !!
இருந்தாலும் கூட, அந்த போட்டோ ஆல்பத்திலோ, வீடியோ கேஸட்டிலோ, தாங்கள் எங்கேயும் ஒரு இடத்தில் கூட இல்லையே என்ற ஏக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம் தானே !!!
அந்தக்குறையில்லாமல் தன் அப்பா, தன் அம்மாவுக்குத் தாலிகட்டி திருமணம் செய்து கொள்வதை குழந்தைகள் நேரில் பார்த்து மகிழவும், அவர்களுடன் அவர்கள் அருகிலேயே நின்று, போட்டோ வீடியோ எடுத்துகொண்டு மகிழவும், இந்த அறுபதாம் கல்யாணம் என்பது வழிவகுத்துக் கொடுக்கிறது.
3]
பொதுவாக குடும்பத்தில் ஓர் சுபமங்கள நிகழ்ச்சி நடைபெறும் போது, பத்திரிகை [அதாவது அழைப்பிதழ்] அச்சடிக்கும் போது, அந்தக் குடும்பத்திலேயே வயதில் மிகப்பெரியவராக உள்ளவர் அழைப்பது போலத்தான் அச்சடிப்பது வழக்கம்.
ஆனால் இந்த அறுபதாம் கல்யாணம் போன்ற ஒருசில விசேஷ வைபவங்களில் மட்டும், அந்த தம்பதியினருக்குப் பிறந்த நேரடி வாரிசுகளும், அவர்கள் வழியாகப் பிறந்துள்ள பேரன் பேத்தி முதலிய பொடியர்களும் அழைப்பதாக அச்சடிப்பது வழக்கம்.
அதாவது பிள்ளைகள், மருமகள்கள், பெண்கள், மருமகன்கள், பிள்ளைவழி பேரன்கள், பேத்திகள், பெண்வழி பேரன்கள், பேத்திகள் என அனைவரும் அழைப்பதாக அது அமைந்திருக்கும்.
சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்றவை நடைபெறும்போது, கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் பெயர்கள் கூட, அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கும்.
4]
69 வயது பூர்த்தியாகி 70-ம் ஆண்டு ஆரம்பிக்கும் ஜன்ம நக்ஷத்திர நாளில் பெரும்பாலானவர்கள் ”பீமரத சாந்தி” என்று ஒன்று, இப்போதெல்லாம் செய்து கொள்கிறார்கள்.
சாஸ்திரப்படி இந்த ”பீமரத சாந்தி” செய்துகொள்ள அவரின் வயது 77 ஆண்டுகள் + 7 மாதங்கள் + 7 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் என்றும், மிகவும் சாஸ்திரம் கற்ற பெரியோர்கள் சொல்கிறார்கள்.
-=-=-
80 வயது பூர்த்தியானவர்கள் செய்துகொள்வது ’சதாபிஷேகம்’ என்ற அருமையான நிகழ்ச்சியாகும்.
இதை தம்பதியினர் இருவரும் சேர்ந்து இருந்து செய்துகொள்ள மிகவும் கொடுப்பிணை வேண்டும்.
அதுபோன்ற தம்பதியினரை தரிஸித்து, அவர்களை நமஸ்கரித்து, ஆசிகள் வாங்க நாமும் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
சதாபிஷேகம் செய்து கொள்வதிலும் சாஸ்திரப்படி ஒருமுக்கியமான விஷயம் உள்ளது.
அதாவது ஒருவர் இந்த பூலோகத்தில் பிறந்தது முதல் *1000 மூன்றாம் பிறைகள்* பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
அதன் பிறகே அவர் சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.
இதை மிகச்சரியாகக் கணக்கிட்டால், 82 அல்லது 83 வயதாகும் போது மட்டுமே, அவர் சதாபிஷேகம் செய்து கொள்ளும்படி ஆகும்.
-=-=-
*மூன்றாம் பிறை பற்றி*
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப்பிறகு [அமாவாசையையும் சேர்த்து எண்ண வேண்டும்] வரும் மூன்றாம் நாள், வானத்தில் மூன்றாம் பிறை சந்திரன் தோன்றும்.
அழகான மெல்லிய வைர மோதிரம் போன்ற இதை, வானத்தில் தேடித்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
இதைத் தேடிக்கண்டுபிடித்து தரிஸிப்பதால் நிறைய புண்ணியங்கள் நமக்கு ஏற்படும்.
அதற்கு மறுநாள் நாலாம் பிறைச்சந்திரன் நாம் தேடாமலேயே நம் கண்களுக்குப் பளிச்சென்று தெரியும். இதைப்பார்த்தல் அவ்வளவாக நல்லது அல்ல. நாலாம் பிறையைப்பார்த்தால் நாய் படாதபாடு படணும் என்று ஒரு பழமொழியும் சொல்வார்கள்.
நாலாம் பிறையைத் தப்பித்தவறி பார்த்து விட்டால் விநாயகரை மனதில் நினைத்து, ஒருசில விநாயகர் ஸ்லோகங்கள் சொல்வது நல்லது. விநாயகர் கோயில் ஏதும் அருகில் இருந்தால், அங்கு போய் தோப்பிக்கரணம் போட்டுவிட்டு வரலாம்.
இதனால் அந்த நாலாம் பிறைச் சந்திரனைப் பார்த்த தோஷங்கள் நமக்கு விலகிடும் என்று சொல்கிறார்கள்.
-=-=-
கனகாபிஷேகம் என்பது நூறாண்டுகள் நிறைவாக வாழ்ந்து முடிந்தவர்கள் செய்துகொள்வதாகும்.
அதுபோல வயது கணக்குக்கு நூறாண்டுகள் ஆகாவிட்டாலும், தன் பெளத்ரனுக்கு [பிள்ளை வழிப் பேரனுக்கு] திருமணம் ஆகி அவனுக்கு ஓர் ஆண் வாரிசு பிறந்து விட்டாலே ”கனகாபிஷேகம்” செய்துகொள்ளலாம் என்றும் ஓர் சாஸ்திரம் கூறுகிறது, என்கிறார்கள் சிலர். ;)
oooooOooooo
பிரபல பதிவரும்
நம் அன்புச்சகோதரியுமான
செளபாக்யவதி ஜெயந்தி ரமணி
அவர்களை நீங்களும் இங்கு
மனதார வாழ்த்துங்கள்.
இங்கு அன்புடன் வருகை தந்து
கருத்துக்கூறிடும் அனைவருக்கும்,
என்னால் தனித்தனியாக
நன்றி கூறி பதில் தரப்படும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
ஆடி வெள்ளிக்கிழமை
16.08.2013
’ஜெ’ மாமிக்கு
பிரித்தானியா மஹாராணியாரின்
ஒரே பேத்தி
அதிரடி
அட்டகாச
அலம்பல்
அதிரா
[ஸ்வீட் சிக்ஸ்டீன்]
ஜே ... ஜே ... ன்னு
அனுப்பியுள்ள அன்பளிப்பு.
அதிராவுக்கு நன்றிகள்