என் வீட்டு ஜன்னல் கம்பி
ஒவ்வொன்றாய்க்
கேட்டுப்பார் !
அனுபவம்
By
வை. கோபாலகிருஷ்ணன்
கேட்டுப்பார் !
அனுபவம்
By
வை. கோபாலகிருஷ்ணன்
[ பகுதி 2 ]
-oOo-
எங்களின் 5ம் எண் கட்டடமான
’சிவஷக்தி டவர்ஸ்’க்கு அடுத்த
6ம் எண் கட்டடத்தின் [MEHAR PLAZA]
கட்டுமானப்பணிகள் தொடங்கி
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்
கட்டட வேலைகள் முழுவதுமாக
முடிவடையாமல் பாதியில்
அரைகுறையாகவே நிற்கின்றன.
அதற்குள் அதன் தரைத்தளத்தில்
“CARE” CHEMISTRY TUITION CENTRE +
BANK OF BARODA, TIRUCHI HEAD OFFICE
ஆகிய இரண்டும் ஆரம்பிக்கப்பட்டு
எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.
-=-=-=-=-=-=-=-
எங்களின் 5ம் எண் கட்டடமான
’சிவஷக்தி டவர்ஸ்’க்கு அடுத்த
6ம் எண் கட்டடத்தின் [MEHAR PLAZA]
கட்டுமானப்பணிகள் தொடங்கி
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்
கட்டட வேலைகள் முழுவதுமாக
முடிவடையாமல் பாதியில்
அரைகுறையாகவே நிற்கின்றன.
அதற்குள் அதன் தரைத்தளத்தில்
“CARE” CHEMISTRY TUITION CENTRE +
BANK OF BARODA, TIRUCHI HEAD OFFICE
ஆகிய இரண்டும் ஆரம்பிக்கப்பட்டு
எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.
-=-=-=-=-=-=-=-
நான் அன்று இந்த வீட்டினை வாங்குவதற்கு செலவழித்த பெரும் தொகையில், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தினில் தனித்தனியாக நான்கு மிகப்பெரிய பங்களாக்களே வாங்கியிருக்க முடியும் தான்.
அதனால் என்ன பிரயோசனம் ?
”ஆடி அடங்கும் வாழ்க்கையடா .... ஆறடி நிலமே சொந்தமடா” என்றொரு சினிமா பாடல் உண்டு.
இப்போது அந்த ஆறடி நிலமும் சொந்தமில்லாமல் செய்து விட்டார்கள் - ’மின் மயானம்’ என்ற புதிய கண்டுபிடிப்பின் மூலம்.
நாம் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் [அதாவது கண்டு பிடித்தவர்கள்] என்றும் நீடூழி வாழட்டும் !
இனிமேல் அந்தப்பாடலை ”ஆடி அடங்கும் வாழ்க்கையடா, அரை மணி நேரத்தில் அஸ்தியடா” என மாற்றியும்கூட பாடலாம் தான்.
இனிமேல் அந்தப்பாடலை ”ஆடி அடங்கும் வாழ்க்கையடா, அரை மணி நேரத்தில் அஸ்தியடா” என மாற்றியும்கூட பாடலாம் தான்.
நமக்கு சொந்தமாக எவ்வளவு வீடுகள் இருப்பினும் நாம் தங்கப்போவதோ, தலை வைத்துப் படுக்கப்போவதோ ஒரே ஒரு இடம் மட்டும் தானே!
நாலு இடங்களில் நமக்கு வீடுகள் உள்ளன என்பதால், ஓர் இடத்தில் தலையையும், ஓர் இடத்தில் உடம்பையும், மற்ற இரண்டு இடங்களில் நம் கைகால்களையும் வைத்து வாழமுடியுமா என்ன?
நாலு இடங்களில் நமக்கு வீடுகள் உள்ளன என்பதால், ஓர் இடத்தில் தலையையும், ஓர் இடத்தில் உடம்பையும், மற்ற இரண்டு இடங்களில் நம் கைகால்களையும் வைத்து வாழமுடியுமா என்ன?
எனவே நம்மால் நம் சக்திக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒரே ஒரு வீடு, நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்றதாகவும், நமக்கு மிகவும் மனதுக்குப் பிடித்தமானதாகவும், நாம் பழகிய ஓர் இடமாகவும், ஓரளவுக்காவது பாதுகாப்பானதாகவும், எந்த ஒரு அத்யாவஸ்ய பொருள் வாங்கவும் அங்குமிங்கும் பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஆட்டோ பிடித்து, டாக்ஸி பிடித்து அலையாதபடியாகவும், HEART OF THE CITY யாகவும் அமைந்து விட்டால் மிகவும் நல்லது அல்லவா!
நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ, நாம் வணங்கும் தெய்வத்தின் கோயில்களோ, எல்லாமே நம் வீட்டிலிருந்து நடந்தே செல்லும் கூப்பிடு தூரத்தில் அமைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் அல்லவா!!
முக்கியமாக நம் பசிக்கும் ருசிக்குமான உணவகங்களும், மருத்துவ வசதிகளும் எந்த நாளும் எந்த நேரமும் கிடைக்கும்படியாக, அவைகள் நம் வீட்டுக்கு அருகிலேயே இருக்க வேண்டியது மிக மிக முக்கியம் அல்லவா!!!
நான் இந்தக்குறிப்பிட்ட வீட்டை மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கியதற்கு பல காரணங்கள் உண்டு.
இன்று நான் இப்போது குடியிருக்கும் பகுதி சுமார் முப்பதாயிரம் சதுர அடிகளுக்கு மேல் பரப்பளவு கொண்ட, ஏழைகளின் குடியிருப்பாக “பெரிய நாராயண ஐயர் ஸ்டோர்” என்ற திருநாமத்துடன், ஓட்டு வீடுகளாகத்தான் அன்று திகழ்ந்தன.
உலகத்திலேயே மிகப்பெரிய குடியிருப்பு அது [ஸ்டோர்] என்றும் சொல்லலாம்.
52 ஏழைக்குடும்பங்கள் குருவிக்கூடுபோல இதில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.
-=-=-=-=-=-=-=-
இதைப்பற்றி என்னுடைய பதிவு ஒன்றில் மிகவும் வர்ணித்து, நகைச்சுவையாக எழுதியுள்ளேன்.
அதன் தலைப்பு: ”மறக்க மனம் கூடுதில்லையே”
அதை இதுவரை படிக்காதவர்கள் மிகவும் துரதிஷ்டசாலிகள் தான் என்பேன்.
அவசியமாகப் படிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அது ஓர் அற்புதமான 80% உண்மைக்காவியம்.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
-=-=-=-=-=-=-=-
இந்தக்கதையைப் படிக்க ஆரம்பித்து விட்டால், அதை முழுவதும் படித்து முடிக்காமல், அங்கே இங்கே என யாரும் அசைந்து செல்லவே முடியாது. அந்த அளவுக்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
-=-=-=-=-=-=-=-
இந்த ஏழைகளின் குடியிருப்பில் தான் எனக்கு நினைவு தெரிந்த நாட்களான 1955 முதல் 1980 வரை [என் 5 வயது முதல் 30 வயது வரை] சுமார் 26 வருடங்கள் நான் வாழ்ந்துள்ளேன்.
இங்கு நான் வாழ்ந்த போது தான் 03.07.1972 அன்று எனக்குத் திருமணம் நடைபெற்றது. 18.03.1974 + 22.09.1975 ஆகிய தேதிகளில் எனக்கு முதல் இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.
”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” என்பது போல எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி என்னுடனும் என் மனைவியுடனும் என் குழந்தைகளுடனும் இருந்ததும் இந்த மிகப்பெரிய ஸ்டோரே [குடியிருப்புப் பகுதியே] எனச்சொன்னால் அது மிகையாகாது.
அதன் பிறகு என்னுடைய ஒரு சில பணிச்சுமை + கூடுதல் பொறுப்புக்களால் நான் 1981 முதல் 2000 வரை, என் அலுவலகத்திற்கு அருகே அமைந்திருந்த COMPANY QUARTERS இல் வசிக்க வேண்டிய நிர்பந்தங்களால், இந்த ஸ்டோர் வாழ்க்கையை விட்டு நான் கட்டாயமாக விலக நேர்ந்தது.
பிறகு 30000 சதுர அடி நிலமான அது மூன்றாகப்பிரிக்கப்பட்டு 1995 இல் விற்கப்பட்டு விட்டது. ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த அந்த ஏழை மக்களின் குருவிக்கூடுகள் கலைக்கப்பட்டு விட்டன.
அடுக்குமாடிக்குயிருப்பு + வெவ்வேறு வணிக வளாகங்கள் என புதியதாக முளைக்க ஆரம்பித்தன.
அடுக்குமாடிக்குயிருப்பு + வெவ்வேறு வணிக வளாகங்கள் என புதியதாக முளைக்க ஆரம்பித்தன.
அதில் ஒன்றில் தான் நானும் ஓர் வெறியுடன், மிக அதிக விலையானாலும் பரவாயில்லை என்று, துணிந்து ஓர் வீடு வாங்கினேன்.
இந்த என் வெறிச்செயலால நான் என் வாழ்க்கையில் இழந்த சொத்துக்களும், சேமிப்புகளும் ஏராளம் தான்.
நான் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்து ஓரளவு சேமித்து, அந்த சேமிப்பில் ஏற்கனவே வாங்கியிருந்த இரண்டு வீடுகளையும், நான்கு மனைகளையும் மிகக்குறைந்த விலைக்கு விற்றேன். [இன்று அவற்றின் விலைகள், நான் விற்ற விலையைப் போல பத்து மடங்குகள் ஏறியுள்ளன.]
என் PF சேமிப்புத்தொகை முழுவதையும் சுரண்டி எடுத்தேன்.
அதுவரை வாழ்க்கையில் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கையுடன் இருந்து வந்த நான், வங்கிக்குச்சென்று மிகப்பெரியதொரு தொகையை கடனாகவும் வாங்கினேன்.
இவ்வாறு பலவித தடாலடி வேலைகளில் இறங்கித்தான், இந்த வீட்டை வாங்க வேண்டும், என்ற என் வெறியை என்னால் தணித்துக்கொள்ள முடிந்தது.
என்னுடைய மூத்த பிள்ளையையும் அவன் மனைவியையும்தவிர, என் நெருங்கிய சொந்தங்களோ, நண்பர்களோ கூட இந்த என் துணிச்சலான முடிவினை ஆதரிக்கவில்லை.

ஆனால் இதில் நான் இறுதியாகப் பெற்றதோ ஓர் மன நிம்மதி, ஆத்ம திருப்தி, சொல்லமுடியாத ஏதோ ஒரு சந்தோஷம்.
இதில் நான் மிகவும் அதிகமான RISK எடுத்து விட்டாலும் கூட, மிகச்சரியான நேரத்தில் நான் எடுத்த மிகச்சரியான முடிவுதான் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை, என்பேன்.
நான் என் தாய் தந்தையருடன், என் இளம் வயதில், எங்கு ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தேனோ, அதே இடத்தில் ஓர் சொந்த வீடு, புத்தம் புதியதாக ’வஸந்த மாளிகை’யாக வாங்கியுள்ளேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு.

இதனால் எனக்குக்கிடைத்துள்ள மன நிம்மதியை, மன மகிழ்ச்சியை, என் மிகப்பெரிய இந்த சாதனையை என்னால் பிறருக்கு உணர்த்தவோ, சொல்லிப்புரிய வைக்கவோ முடியவே முடியாது.
என்னைப்பெற்று வளர்த்த என் தாய் தந்தையர் இன்று இருந்து இதைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற ஓர் மனக்குறை மட்டும் எனக்கு இப்போதும் உண்டு.
என்னைப்பெற்று வளர்த்த என் தாய் தந்தையர் இன்று இருந்து இதைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற ஓர் மனக்குறை மட்டும் எனக்கு இப்போதும் உண்டு.
இந்த என் புது வீட்டினில் இது வரை நடந்துள்ள பல்வேறு சுப நிகழ்ச்சிகள்:
24.08.2001
’பவித்ராலயா’வின்நூதன க்ருஹப்ரவேச சுபமுஹூர்த்தம்
05.03.2002
என் முதல் பேரன் சிவா பிறந்தது.
31.10.2002
இரண்டாவது பிள்ளைக்குத் திருமணம் ஆகி புது மருமகள் வருகை.
29.03.2006
மூன்றாவது மகனுக்கு, மிகச்சிறப்பான பெரிய உத்யோகம், அதுவாகவே அவனைத்தேடி வந்து அமைந்தது
15.12.2008
உக்ரஹ சாந்தி நடைபெற்றது [ Reaching the Age of 60 from 59 ]
01.07.2009
மூன்றாவது பிள்ளைக்குத் திருமணம் ஆகி புது மருமகள் வருகை
04.12.2009
என் முதல் இரண்டு சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
05.12.2009
எங்களுக்கு சஷ்டியப்த பூர்த்தி [60th Birth Day] சிறப்பாக நடைபெற்றது.
01.04.2010
வெறும் எட்டு வயதே ஆகியிருந்த எங்கள் அருமைப் பேரன் சிவாவுக்கு உபநயனம் [பூணூல் கல்யாணம்] நடைபெற்றது
01.01.2011
என் மூன்றாவது, சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு
20.02.2011
எங்கள் மூன்றாவது மருமகளுக்கு, கங்கணதாரண பும்ஸுவன ஸீமந்த சுபமுஹூர்த்தம் நடைபெற்றது [வளைகாப்பு + சீமந்த நிகழ்ச்சிகள்]
24.04.2011
என் இரண்டாவது பேரன் ”அநிருத்” பிறந்தது.
11.05.2012
பேரன் ‘அநிருத்’ ஆயுஷ்ஹோமம் நடைபெற்றது
நான் மிகப்பெரிய [நவரத்னா To மஹாரத்னா] பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் என் கடின உழைப்பினால் மட்டுமே அதிகாரியாக பதவி உயர்வு பெற்றது,
நான் பத்திரிகை எழுத்தாளரானது,
நான் பதிவரானது,
நான் பரிசுகள் பல பெற்றது,
தேசிய விருதுகள் உள்பட பல விருதுகள் நான் பெற்றது,
மனநிறைவுடன், நான் பணி ஓய்வு பெற்றது,
பல வேதவித்துக்களையும், மார்கழி மாதம் விடியற்காலம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம் சொல்லி கிரிவலம் செய்யும் கோஷ்டியினரையும், வீட்டிற்கு வரவழைத்து கெளரவித்தது,
பல ஹோமங்கள், ஸ்ரீ வேங்கடாசலபதி தீப ஸமாராதனைகள், சுமங்கலிப்பிரார்த்தனைகள், ஹனுமனுக்கு வடை மாலைகள் என பல வழிபாடுகள் அவ்வப்போது இதே வீட்டில் செய்தது
என இந்த என் வீட்டின் ராசியைப்பற்றி மேலும் சொல்லிக்கொண்டே போகலாம் தான்.
-=-=-=-=-=-=-=-=-=-=-
இந்த சுப நிகழ்ச்சிகள் சிலவற்றை நான் என் “மலரும் நினைவுகள்” என்ற பதிவினில் நிறைய படங்களுடன் கொடுத்துள்ளேன்.
2011 ஜூலை மாத முதல் ஆறு பதிவுகளில் அவற்றைப்பார்க்கலாம்.
முதல் பதிவின் இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
-=-=-=-=-=-=-=-=-=-=-
அடடா, நான் ஏதேதோ பேசி உங்களையெல்லாம், எங்கெங்கோ அழைத்துச்சென்று கொண்டிருக்கிறேன்.
அதனால் நான் சொல்ல வந்த முக்கியமான ’என் வீட்டு ஜன்னல் கம்பி’ விஷயம், இந்தப்பகுதியிலும் சொல்ல முடியாமல் போய் விட்டது ...... பாருங்கோ!
”அடுத்த முறை, ஓ..மீண்டும் திருச்சி வந்தால், வை.கோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது.
திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வை.கோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும்.
காணக்கண் கோடி வேண்டும்.”
- அப்பாதுரை
திரு. அப்பாதுரை சார் அவர்கள் ஏன் இவ்வாறு சொல்லியுள்ளார்? என்பதற்கான காரணத்தை இதன் அடுத்த பகுதியில் நான் நிச்சயமாகச் சொல்லிவிடுகிறேன்.
-=-=-=-=-=-=-
அதற்குள், எங்கள் ஊராம் திருச்சியைப்பற்றி நான் எழுதியுள்ள விரிவான கட்டுரையை மிக அழகான ஏராளமான படங்களுடன் கண்டு களியுங்கள்.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

[ இதன் தொடர்ச்சி அதாவது இறுதிப்பகுதி வரும்
ஞாயிறு 17.02.2013 அன்று வெளியிடப்படும். ]
ஞாயிறு 17.02.2013 அன்று வெளியிடப்படும். ]