என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
தொடர்பதிவு - 2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்பதிவு - 2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 மார்ச், 2012

இயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா


இயற்கை அழகில் ’இடுக்கி’ 
 இன்பச் சுற்றுலா

By 
வை.கோபாலகிருஷ்ணன்



”மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற தலைப்பில் ஓர் தொடர்பதிவினை 09.03.2012 முதல் 15.03.2012 வரை 7 நாட்களுக்கு தினம் ஒரு பகுதி வீதம் வெளியிட்டிருந்தேன். 


அந்தத் தொடர்பதிவுக்கு அவ்வப்போது வருகை தந்து நல்ல பல கருத்துக்களைக் கூறி என்னை உற்சாகப்படுத்திய கீழ்க்கண்ட அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வருகை தந்தவர்கள் பட்டியல் இதோ இங்கே:


திருமதிகள்:

01. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்
02.இராஜராஜேஸ்வரி அவர்கள்
03. மனோ சாமிநாதன் அவர்கள்
04. லெக்ஷ்மி அவர்கள்
05. ஸாதிகா அவர்கள்
06. விஜி அவர்கள்
07. ஆச்சி அவர்கள்
08. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
09. கோவை2தில்லி அவர்கள்
10. அமைதிச்சாரல் அவர்கள்
11. ஷக்திப்ரபா அவர்கள்
12. மாதேவி அவர்கள்
13. கோமதி அரசு அவர்கள்
14. மீரா அவர்கள்
15. சாகம்பரி அவர்கள்
16. மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
17. யுவராணி தமிழரசன் அவர்கள்
18. கீதமஞ்சரி அவர்கள்
19. கோவை மு. சரளா அவர்கள்
20. சந்திரகெளரி அவர்கள்
21. ஆசியா ஓமர் அவர்கள்
22. சந்திரவம்சம் அவர்கள்

திருவாளர்கள்:

01. வெங்கட் நாகராஜ் அவர்கள்
02. மதுமதி அவர்கள்
03. E.S. சேஷாத்ரி அவர்கள்
04. ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள்
05. அன்பின் சீனா ஐயா அவர்கள்
06. ஸ்ரீனிவாஸன் ராமகிருஷ்ணன் அவர்கள்
07. சேகர் அவர்கள்
08. ’அவர்கள் உண்மைகள்’ அவர்கள்
09. ரிஷபன் அவர்கள்
10. ஜீவி ஐயா அவர்கள்
11. ரமணி அவர்கள்
12. G. கணேஷ் அவர்கள்*****
13. ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்
14. கே.பி. ஜனா அவர்கள்
15. சென்னை பித்தன் ஐயா அவர்கள்
16. கே.ஜி. கெளதமன் அவர்கள்
17. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்
18. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
19. “என் ராஜபாட்டை” - ராஜா அவர்கள்
20. மணக்கால் M.J. ராமன் அவர்கள்*****
21. ஜி.எம். பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள்
22. புலவர் சா. இராமாநுசம் ஐயா அவர்கள்
23. D. சந்திரமெளலி அவர்கள்
24. T N முரளிதரன் அவர்கள்
25. அப்பாதுரை ஐயா அவர்கள்
26. பழனி. கந்தசாமி ஐயா அவர்கள்
27. தமிழ் இளங்கோ அவர்கள்*****
28. ஜாஃப்பர் அவர்கள்

ஏழு நாட்களுக்கும் தொடர்ச்சியாக எல்லாப் பகுதிகளுக்கும் வருகை தந்து சிறப்பித்த கீழ்க்கணட ஒரு சிலருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்:


  அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் 

[பகுதி-1 க்கு மட்டுமே, மிகவும் அதிசயமாக 11 முறைகள் வந்து பின்னூட்டமிட்டு அசத்தியிருந்தீர்கள், ஐயா!;)))))))))))   


Ref: http://gopu1949.blogspot.in/2012/03/1.html ] மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஐயா.]

 திரு. ஜீவி ஐயா அவர்கள்

[என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தாங்களே, சிரமத்தைப் பார்க்காமல், தினமும் வருகை தந்து ஆசீர்வதித்தது. எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மிகவும் திருப்தியாகவும் இருந்தது, ஐயா! 



 திரு. ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்


[என் இந்தத் தொடர் பதிவினை தங்களின் முகநூலுக்குக் [Face Book] கொண்டு சென்றுள்ளதாக கூறியிருந்தீர்கள். அதற்கு என் நன்றிகள், ஐயா] 

 திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்

[தினமும் அள்ளி அள்ளி அக்ஷயபாத்திரம் போல பின்னூட்டமிட்டு உற்சாகம் கொடுத்திருந்தீர்கள்!  அவை என்னை மிகவும் மகிழ்வித்தன!;))))) ]

 திருமதி ஸாதிகா அவர்கள்

[பின்னூட்டத்துடன் மட்டும் நில்லாமல் மின்னஞ்சலிலும் அல்லவா இந்த என் பதிவினைப்பற்றி ஏராளமான தகவல்களை தாராளமாகப் பகிர்ந்து கொண்டீர்கள் ! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ;))))) ]


 திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

[ பன்முகத்திறமையாளரான உங்களை எனக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியதே, தாங்களாகவே முன்வந்து 04.02.2012 அன்று எனக்குக் கொடுத்த விருதாகிய  THE VERSATILE BLOGGER AWARD அல்லவா! 

தங்கள் கையால் முதன் முதலாக இந்த 2012 ஆம் ஆண்டு எனக்களிக்கப்பட்ட அந்த விருதுக்கும், அதன்பின் வலைப்பதிவுகள் மூலம், நமக்குள் இந்த மிகக்குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள பாசம் மிகுந்த நட்புக்கும், நான் கடவுளுக்கு மிகவும் நன்றி கூறிக்கொள்கிறேன். 

தங்களின் கலைத்திறன் எனக்கு மிகவும் வியப்பளிப்பதாகவும், குறிப்பாக தஞ்சாவூர் பெயிண்டிங் ஓவியங்கள் என் மனதை மயக்குவதாக உள்ளன. மனமார்ந்த பாராட்டுக்கள் ! ;)))))).

தங்களின் தஞ்சாவூர் ஓவியங்களில் ஏதாவது ஒன்றையாவது, தாங்கள் வரையும் போது கூடவே நானும் அமர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பிராப்தம் எப்படியோ! ]



 திருமதி விஜி அவர்கள்

[முதலில் பதிவர் மணிராஜ் அவர்களின் பதிவுகளைப் அன்றாடம் படிக்கச்சென்ற நாம் ஒருவருக்கொருவர் வலைப்பதிவினில் அறிமுகமானோம். 


பிறகு நான் வெளியிட்ட ’ஸத் விஷயங்கள்’ பற்றிய பதிவுகளின் மூலம் தங்களைப் பற்றியும், பகவத் க்ருபையால் தங்களுக்குக் கிடைத்துள்ள விசேஷ தெய்வானுக்கிரஹங்கள் மற்றும் தனிச்சிறப்புகள் பற்றியும், எனக்கு அறியச் செய்தீர்கள். 


அதன்பின் ஸ்ரீராமதூதனான ஸ்ரீ ஹனுமனால் நமக்குள் எத்தனை எத்தனையோ மகிழ்ச்சிப் பகிர்வுகள் ஏற்படலானது. ;))))) 


தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பின்னூட்டம் இட்டு அசத்தி வருகிறீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ;))))) ] 

 திருமதி கோவை2தில்லி அவர்கள்

[விருப்பப்படுவோர் அனைவருக்குமே பொதுவாக நான் கடைசியில் கொடுத்துள்ள என் அழைப்பை, தங்களுக்கென்றே ஏற்றுக்கொண்டு பதிவிடத் துணிந்துள்ள, தங்களுக்கு என் பாராட்டுக்கள். நன்றிகள். தாங்கள் தொடரப்போகும் தொடர்பதிவினை படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் ] 

 திருமதி கோமதி அரசு அவர்கள்

[தங்கள் பெயரிலேயே ’அரசு’ உள்ளது.  அசத்தலான தங்களின் பின்னூட்டங்களால் அரசாட்சியே செய்கிறீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ]  

 திருமதி சாகம்பரி அவர்கள்

[ பல மாதங்களாக என் பதிவுகளில் உங்களைப் பார்க்க முடியாமல் போனதில் எனக்கு மிகவும் மன வருத்தமே. 


இருப்பினும் ’பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், கல்வி’ பற்றிய பதிவு என்பதனாலோ என்னவோ, கொடிமின்னல் போல பளிச்சென்று தோன்றி, இந்த என் தொடர்பதிவுக்கு வருகை தந்து பெருமை சேர்த்து விட்டீர்கள். 


கல்விதுறையில் உயர்ந்த நிலையில் பணியாற்றும் தங்கள் வருகை என்னை மிகவும் மகிழ்வித்தது.


அதுவும் ஒரே நாளில் இந்தப்பதிவின் அனைத்துப் பகுதிகளையும் தொடர்ச்சியாக ஒரே மூச்சில் படித்துள்ளீர்கள். 


மிக்க மகிழ்ச்சி, ரொம்ப சந்தோஷம். ;))))) ]

 திருமதி ஷக்திப்ரபா அவர்கள்

[ என்னை இந்தத் தொடர்பதிவிட தூண்டிவிட்ட ஷக்தியே நீங்கள் அல்லவா! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான் ;)))))))) ]


 திருமதி B.S. ஸ்ரீதர் [ஆச்சி] அவர்கள்


[கடைசி 2 பகுதிகளுக்கு மட்டும் தனியாக மெயில் மூலமாக அன்புடன் அழகாக பல தகவல்களை, உரிமையுடனும் நகைச்சுவையுடனும் தெரிவித்திருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. பிறந்தகம் போய்விட்டு, வெற்றியுடன் சந்தோஷமாகத் திரும்பி வாருங்கள். மனமார்ந்த ஆசிகள் ]



***** நான் கல்வி கற்ற “தேசிய கல்லூரி உயர்நிலைப்பள்ளி”யிலேயே வெவ்வேறு காலகட்டங்களில் படித்தவர்களான கீழ்க்கண்ட மூவரும் இறுதிப்பகுதியான பகுதி-7 க்கு வருகை புரிந்து பல நல்ல தகவல்களை மிக உருக்கமாக பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொளகிறேன்.

1) மணக்கால் திரு. M.J. ராமன் அவர்கள்.

இவர் என்னைவிட 5 வயதுகள் பெரியவர். 1961 SSLC யில் திருச்சி ஜில்லா அளவில் முதல் மதிப்பெண் எடுத்து, தங்கப்பதக்கம் பெற்றவரும் கூட. இவர் என் [பெரியம்மாவின்] அம்மாவின் கூடப்பிறந்த அக்காவின் பெண் வழிப்பேரன் என்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்போது இவர் மும்பையில் வசிக்கிறார்.

2) திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்:

இவர் என்னைவிட 5 வயதுகள் சிறியவர். 1971 இல் SSLC அதே பள்ளியில் படித்ததாக எழுதியுள்ளார். 

நான் படித்த பள்ளியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வளர்ந்துள்ள மிகப்பெரிய அரசமரம்+வேப்பமரம், நம் தேசபிதா மஹாத்மா காந்தி அவர்களின் திருக்கரங்களால் நடப்பட்டவை என்பதைத் தன் பின்னூட்டத்தில் நினைவு கூர்ந்துள்ளார். நானும் இதை பள்ளியில் படிக்கும்போது கேள்விப்பட்டுள்ளேன். ஏனோ பதிவினில் அதை எழுத மறந்து விட்டேன்.  

இந்த திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் திருச்சிக்காரராக இருந்தும், பதிவராக இருந்தும், இதுவரை எனக்கு எந்தவித அறிமுகமும் இல்லாதவராகவே இருந்து வந்துள்ளார். அவரின் முதல் வருகையும் இரண்டு பின்னூட்டங்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தந்தன. மிக்க நன்றி, ஐயா.



3) திரு. G. கணேஷ் [தற்சமயம் செளதி அரேபியாவில் பணியாற்றுகிறார்]


இவர் என்னைவிட 21 ஆண்டுகள் சிறியவர். 

என் அளவற்ற அன்பிற்கு இன்றும் பாத்திரமாக உள்ள, என் மூத்த சகோதரி [பெரிய அக்கா] அவர்களுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். 6 Sons + 2 Daughters. 

இந்த G. கணேஷ் என் பெரிய அக்காவுக்கு, ஆறாவது பிரஸவத்தில் பிறந்தவன். பிள்ளைகளில் ஐந்தாவதாகப் பிறந்த பிள்ளை. மிகவும் கெட்டிக்காரன். தாய்மாமனாகிய என்னிடத்தில் அன்று முதல் இன்று வரை மிகவும் பிரியமாக உள்ளவன். 

 

வலைப்பதிவு ”மாத்தியோசி”
பெயர்: G. கணேஷ் 

அவர் எழுதியுள்ள பின்னூட்டம்:


கணேஷ் said...




இந்த பதிவை தொடர்ந்து மிக நுணுக்கமாக படித்தவர்களுக்கு இறுதியில் கண் கலங்காமல் இருந்தால் அது ஆச்சர்யமே!
இப்பொழுது நிறைய பேர் வெவ்வேறு காரணங்களால் கல்லூரி படிப்பு தொடர முடியாதவர்கள், அஞ்சல் வழியில் சேர்ந்து விட்டு பாதியில் விட்டு விடுகின்றனர். 
அவர்களுக்கு இந்த பதிவே ஒரு வழிகாட்டி.

மொத்தத்தில் இந்த வலைப்பூவே ஒரு பல்கலை கழகம்!

 



பள்ளியில் படிக்கும் போது நம்மை இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள் அல்லவா! 

“மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்று சொல்லி, இந்தத் தொடர்பதிவின் மூலம் பள்ளி நாட்களுக்குச் சென்று வந்த நாமும் இப்போது எங்காவது இன்பச் சுற்றுலாவுக்குச் சென்று வந்தால் தானே நல்லது! 

வாருங்கள்! நாம் எல்லோரும் சேர்ந்து கேரளாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ’இடுக்கி’ க்குச் செல்வோம் இப்போது .......................  



பதிவர்களின் வருகைக்காகவே பச்சையில்
பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளதே!


என் பெயர் ’படையப்பா’ இல்லை
ம..லை..ய..ப்..பா !


சொன்னால் நம்பமாட்டீர்கள்! 

நான் தான் 
“ஆட்டுக்கார அலமேலு”வில் 
நடித்த ராமு!


பச்சை மரம் ஒன்று!
இச்சைக்கிளி ரெண்டு!!


புதிய வானம் .. புதிய பூமி .. 
எங்கும் பனி மழை பொழிகிறது!


என் பெயர் பச்சையம்மா !
இது இறைவன் இட்ட பிச்சையம்மா!!



சும்மா பார்த்துவிட்டுப் போனா போதாது, 
போய் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கணும்!




குளிக்க ஆசையுள்ளவங்க 
சீக்கரமா குளிச்சிட்டு வாங்க!

டிபன் ரெடியா இருக்கு!!























அன்புடன்
vgk

வியாழன், 15 மார்ச், 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறைவுப் பகுதி-7



மீண்டும் பள்ளிக்குப் போகலாம்


[தொடர்பதிவு]


நிறைவுப் பகுதி-7





முன்பகுதி முடிந்த இடம்:


இந்த B.Com., CONTACT SEMINAR CLASS களுக்கு, நான் திருச்சி ஜமால் முகமது காலேஜுக்குப் போய் வந்த போது [1990] R. விஜயலக்ஷ்மி என்ற ஒரு சின்னப்பெண். அவளுக்கு JUST 17 + வயது தான் ஆகியிருந்தது.  அவள் என்னிடம் மிகவும் பிரியத்துடன் ஒட்டி உறவாட ஆரம்பித்தாள்.  


அவளுக்கு நான் வைத்த பெயர் ஜிமிக்கி + சொக்கி. எனக்கு மிகவும் பிடித்தமான பெரிய சைஸ் ஜிமிக்கிகளை காதில் அணிந்திருப்பாள். வட்ட முகத்துடன், வாளிப்பான உருவத்துடன், நிதான உயரத்தில், திக் மெரூன் கலரில் ஒயிட் காலர் வைத்த சட்டையும், குட்டைப்பாவாடையும், சமயத்தில் சுடிதாரும் அணிந்து வருவாள். 


oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
அடுத்த இறுதிப்பகுதி இதோ தொடர்கிறது...
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


வகுப்பில் என் அருகில் யார் அமர்ந்திருந்தாலும் அவர்களை பிடிவாதமாக எழுப்பி விட்டு இவள் [ஜிமிக்கி] என்னருகில் உட்கார்ந்து கொள்வாள்.  உரிமையுடன் என் நோட்டு, புஸ்தகம், நான் வைத்திருக்கும் ஒரு டஜன் பேனாக்கள் எல்லாவற்றையும் எடுத்து ஆராய்ச்சி செய்வாள். 


மாலையில் வகுப்பு முடிந்த பிறகும், நான் வகுப்பைவிட்டு வெளியே கிளம்பும் போது தான், அவளும் வெளியேறுவாள். 


நான் வேறு யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தாலும், பாத்ரூம் பக்கம் போய் விட்டாலும், எனக்காக அவள் காத்திருப்பாள். 


பிறகு சுப்ரமணியபுரம் டி.வி.எஸ். டோல்கேட் பஸ் ஸ்டாப்பில் நான் போய் பஸ் ஏறச் செல்லும் போதும், பசுமாட்டைக் கன்னுக்குட்டி முட்டிமோதித் தொடர்வது போல என்னுடன் தொடர்ந்தே வருவாள். 


நடுரோட்டில் காலை இடறுவதுபோல இவள் ஏன் என்னுடன் ஒட்டி உரசிக் கொண்டு நிழல் போல தொடர்ந்து வருகிறாள்? என நினைத்தேன். இருப்பினும் அவளிடம் நான் ஒன்றும் கேட்கவில்லை.


முதல் நாள் அங்கு வந்து நின்ற எந்த பஸ்ஸிலுமே அவள் ஏறவில்லை. ஒரு அரை மணி நேரத்திற்கும் மேலாக இதை கவனித்த நான் அவளிடம் “நீங்கள் எங்கே போக வேண்டும், ஏன் இந்த பஸ்கள் எதிலுமே நீங்கள் ஏறவில்லை?” எனக்கேட்டேன். 


அதற்கு அவள் “நீங்கள் BHEL Township தானே போகப்போகிறீர்கள், தஞ்சாவூர் மொஃபஸல் பஸ்ஸில் போகாமல் என்னுடன் BHEL வரை போகும் சாதா 128 ரூட் டவுன் பஸ்ஸில் வரமுடியுமா சார்? என்று மிகுந்த தயக்கத்துடன் கேட்டாள்.  


”ஏனம்மா? என்ன விஷயம்? என்று நான் கேட்டேன். 


கண் கலங்கியபடி தன் சொந்தக்கதையைச் சொல்லி என்னையும் கண் கலங்க வைத்து விட்டாள்.


அவள் தந்தை பொன்மலை ரெயில்வேயில் வேலை பார்த்தவராம். இவள் அவருக்கு ஒரே பெண்ணாம். ஆறு மாதங்கள் முன்பு அவள் தந்தை திடீரென காலமாகி விட்டாராம். என்னைப் பார்த்தால் அவள் தந்தை ஞாபகம் தான் அவளுக்கு வருகிறதாம்.


+2  படிப்பு முடித்திருந்த அவளுக்கு 18 வயதுகள் பூர்த்தியான பிறகு கருணை அடிப்படையில் ரெயில்வேயில் வேலை தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். 


அம்மாவும் இவளும் மட்டும் திருச்சி to BHEL செல்லும் வழியில் உள்ள ரெயில் நகர் என்ற பகுதியில் தனியாக வசித்து வருகிறார்களாம்.


இவளுக்கு வெளியுலகப் பழக்கமே சுத்தமாகக் கிடையாதாம். பஸ்ஸில் ஏறி தனியாகப் பயணம் செய்தது கூடக் கிடையாதாம். அவள் தந்தை இருந்தவரை வீட்டில் மிகவும் செல்லமாக வளர்ந்த பெண்ணாம்.  


CONTACT SEMINAR CLASS இல் எங்களுடன் படித்த மற்ற யாரோ சில பெண்மணிகளிடம் அவள் விசாரித்ததில் நான் BHEL AREA விலிருந்து வருவதாகவும், ”அவர் மிகவும் நல்லவர், போகும் போது அவர் துணையுடன் போ” என்று ஆலோசனை சொன்னார்களாம். 


அதனால் நான் அவளுடன் டவுன் பஸ்ஸில் துணைக்கு வர வேண்டுமாம். தஞ்சாவூர் செல்லும் மொஃபஸல் பஸ் என்றால் அவள் குடியிருக்கும் ரெயில் நகர் பகுதியில் அந்த பஸ்கள் நிற்காதாம். அதனால் நானும் அவளை விட்டுவிட்டு வேறு ஏதாவது மொஃபஸல் பஸ்ஸில் ஏறக்கூடாதாம். 


பலவித அன்புக்கட்டளைகள் இடத்தொடங்கி விட்டாள். அவளின் மிகவும் நியாயமான இந்த சோகக்கதைகளைக் கேட்டதும், அவள் மேல் நான் மிகவும் இரக்கம் கொண்டேன்.


இவ்வாறு படிக்கப்போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அழகிய பெண் குழந்தை என்னுடன் ஒட்டிக்கொண்டதில், பெண் குழந்தையே பிறக்காத எனக்கும் மனதுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. 


அடுத்து வந்த கும்பல் குறைவாக இருந்த தஞ்சாவூர் மொஃபஸல் பஸ்ஸில் அவளையும் ஏறச்சொல்லி, நானும் ஏறிக்கொண்டு, அவளை நேராக என் வீட்டுக்கு அழைத்துச் சென்று, என் மனைவியை அறிமுகப்படுத்தி விட்டு, டிபன் காஃபி சாப்பிடச் சொல்லி வற்புருத்தினேன். மிகவும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டாள்.  


பிறகு வேறு ஒரு பஸ் பிடித்து, அவளை பத்திரமாக அவள் வீட்டுக்குக் கொண்டு போய் சேர்த்து விட்டு வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு தைர்யம் சொல்லி, அவளுக்கு இருந்த வெளியுலக பயத்தை நாளடைவில் போக்கினேன். 


பிறகு 18 வயது பூர்த்தியான பிறகு அவளுக்கு கருணை அடிப்படையில் ரெயில்வேயில் வேலை கிடைத்து, மதுரையில் போய் பணியில் சேரும்படி ஆனது. அதன் பின் அவளுக்குக் கல்யாணமும் ஆகிவிட்டது. அவளுக்குப்பிறந்த ஒரே பெண் குழந்தை இப்போது 9th or 10th படிக்கிறாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொன்மலைக்கே பணிமாற்றமும் கிடைத்து திருச்சிக்கே வந்து விட்டாள். 


இடையில் 1997 முதல் 2006 வரை ஒரு பத்து ஆண்டுகள் இவளை நான் நேரில் சந்திக்க முடியவில்லை.


01.03.2007 முதல் 15.03.2007 வரை திருச்சி தேவர் ஹாலில் நடைபெற்ற ”பாண்டுரங்க விட்டல்தாஸ் மஹராஜ் ஸ்ரீ ஜெயகிருஷ்ண தீக்ஷதர்” அவர்களின் சங்கீத உபன்யாசத்திற்கு நான் சென்று, அவர் கூறும் முக்கியக் கருத்துக்களை சுவாரஸ்யமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த போது,  என் அருகில் யாரோ வந்து என்னை லேஸாகத் தட்டி அழைப்பதை கவனிக்கலானேன். 



 


நீண்ட இடைவெளிக்குப்பின், இந்த ஜிமிக்கிப்பெண் சொக்கி தான், தன் கணவருடன் வந்து என்னை அழைத்தவள். அங்கிருந்த மிகப்பெரிய ஹாலில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடுவில் இருக்கையில் அமர்ந்திருந்த என்னை, கும்பலின் மத்தியில் எப்படி இவள் அடையாளம் கண்டுபிடித்தாள் என நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். 


அவள் கணவரை எனக்கும், என்னை அவள் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.   அன்று முதல் இன்று வரை என் வீட்டுக்கு அடிக்கடி அவள் வந்து போய்க்கொண்டு இருக்கிறாள். சமீபத்தில் கூட ஒரு நாள் இங்கு என் வீட்டுக்கு வந்திருந்தாள்.  


இவளைப்போலவே திருமதி. கமலம், திருமதி. ஜெயலக்ஷ்மி என்று இருவர் BHEL இல் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்துக்கொண்டு என்னுடன் அதே 3 வருஷங்கள் B.Com., படிக்க CONTACT SEMINAR CLASS க்கு வந்திருந்தார்கள். 


அவர்கள் இருவரும் என்னைவிட 7 அல்லது 8 வயது மட்டுமே சிறியவர்கள். 


அவர்கள் இருவரும் கூட என்னிடம் அன்று முதல் மிகுந்த நட்புடன் பழக ஆரம்பித்து இன்று வரை குடும்ப நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள்.


நாங்கள் மூவரும் ஒரு சில ஞாயிற்றுக்கிழமைகளில் எங்களுக்குள் யாராவது ஒருவர் வீட்டில் கூடி GROUP STUDY செய்யும் வழக்கம் உண்டு. எனக்குத் தெரிந்த ராஜூ என்ற M.Com., படித்த நண்பர் ஒருவரை 2 or 3 ஞாயிற்றுக்கிழமைகளில் வரவழைத்து, B.Com., OPEN UNIVERSITY EXAM பழைய வினாத் தாள்களில் வந்திருந்த ACCOUNTANCY EXAM. QUESTIONS களை அவரிடம் கொடுத்து, ஒவ்வொரு PROBLEM ஆக SOLVE செய்யச் சொல்லி நாங்கள் மூவரும் அதை கவனித்து, குறிப்புகள் எடுத்து கற்றுக் கொண்டோம். 


அதன் பிறகு அந்த ஜிமிக்கி என்பவள் இவற்றையெல்லாம் தனியாகக் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்வாள்.


அதுபோலவே என்னுடன் பல்வேறு CORRESPONDENCE COURSE இல் படித்த ரெயில்வேயில் பணியாற்றிய ரெங்கராஜன் என்பவர் ஒருவர் [இவர் என்னை விட வயதில் சற்று பெரியவர்], வேறொருவர் மதுரை LIC யில் பணியாற்றியவர். இந்த இருவரும் கூட என்னுடன் நீண்ட நாட்கள், கடிதத்தொடர்புகள் + தொலைபேசித் தொடர்புகள் வைத்துக் கொண்டிருந்தார்கள்.        


நான் படித்த B.Com., + MA (Sociology) + PGD in PMIR ஆகிய மூன்று படிப்புகளிலுமே STATISTICS  என்ற ஒரு SUBJECT இருந்தது. எவ்வளவு தான் படித்தாலும் எனக்கு விளங்காமலும், புரியாமலும் என்னைப் பாடாய்ப்படுத்தி, மண்டைகாய வைத்தது அந்த STATISTICS என்ற பாடம் மட்டும். 


”நீலா” என்று ஒரு பெண். திருவானைக்கா ஐயன் தெருவில் வசித்து வந்தாள். கல்லூரிப்படிப்பு முடித்து விட்டு வேலைவாய்ப்புகளைத் தேடி நியூஸ் பேப்பரைப்பார்த்து பல இடங்களுக்கு அவள் மனுச் செய்து வந்து கொண்டிருந்த [1992] காலம் அது .


எனக்குப் புரியாத STATISTICS பாடங்களை அவளிடம் போய்க்கேட்டால் ஓரளவுக்குச் சொல்லித்தருவாள் என்று அவளுடைய பெரியப்பா பையன் ஒருவர் என்னிடம் கூறினார். நானும் ஒரு எட்டு ஞாயிற்றுக்கிழமைகள், அவர்கள் வீட்டுக்குப்போய் பாடம் கற்று வந்தேன்.          


மதியம் வீட்டில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, BHEL Township லிருந்து, வேகாத வெயிலில் மதியம் 11.45  க்குப் புறப்பட்டு, 2 பஸ்கள் மாறி, திருவானைக்கா பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ஐயன்தெரு கடைசியில் இருந்த அவர்கள் வீட்டை நான் நடந்து சென்று அடையும் போது மணி 1.45 ஆகிவிடும். வியர்த்துக் கொட்டும் எனக்கு. கையில் ஒரு புஸ்தகப்பை. அந்தப்பையில் புஸ்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள், சின்ன விசிறி, குடிநீர் பாட்டில், முகம் துடைக்க ஒரு துண்டு, கர்சிப் முதலிய எல்லாம் செட்டாக எடுத்துக்கொண்டுதான் போவேன். 


அவர்கள் வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும் என்னை வரவேற்று அவர்கள் வீட்டு மண் தரையில் அமரவைத்து, கையில் ஒரு பெரிய பனை ஓலை விசிறியைக் கொடுத்து, "முகத்தையெல்லாம் வியர்வை போகத்துடைத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் விசிறிக் கொண்டு ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு பாடம் ஆரம்பிக்கலாம்" என்று மிகுந்த அன்புடன் சொல்லுவாள், அந்த நீலா. 


மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மிகவும் பொறுமையாக எனக்குப் புரியும் படியாக பாடம் சொல்லித் தருவாள். பிறகு ஏதாவது டிபனும் காஃபியும் கொடுத்து சாப்பிடச்சொல்லி வற்புருத்தி அதன் பிறகே என்னை என் வீட்டுக்கு அனுப்பி வைப்பாள். 


எனக்கு அவளால் பாடம் நடத்தப்படும் போது, கூடவே ஒரு கட்டிலில் உடல்நிலை சரியில்லாத அவளின் தகப்பனாரும்,  மிகவும் சாதுவான அவளின் தாயாரும், ஒரு தம்பியும், தங்கையும் இருப்பார்கள். 


பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, அவர்கள் குறுக்கே ஏதாவது பேசினாலோ, சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ இவளுக்கு மிகவும் கோபம் வந்து விடும். 


எல்லோரும் பெட்டிப்பாம்பாக அடங்கியே இருப்பார்கள். இந்த வயதிலும் நான் படிப்பைத் தொடர்வதிலும், ஆர்வமாக பாடம் சொல்லிக்கொள்ள சின்னப் பெண்ணான தன்னை நாடி வருவதிலும் அவளுக்கு ஒரு சந்தோஷம் இருக்கவே செய்தது என்பதை நான் புரிந்து கொண்டேன். 


சற்று நடுத்தர வயதிலும், படிப்பில் மிகவும் ஆர்வத்துடன் இருந்த என்னை, அவள் பலமுறை பாராட்டியும் இருக்கிறாள்.


நான் அவர்கள் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ஏதாவது நிறைய தின்பண்டங்களும் பழங்களும் வாங்கிச்செல்வேன். அவள் தந்தையிடம் கொடுப்பேன். 


பிறகு 3 பல்கலைக் கழகத் தேர்வுகளிலும் வெற்றி பெற்ற நான் நிறைய மதிப்பெண்கள் [70% to 80%] வாங்கியது, அவள் எனக்குக் கற்றுக்கொடுத்த அந்த STATISTICS என்ற பாடத்தில் தான்.  


என் மனைவியுடன் அவர்கள் வீட்டுக்குச்சென்று குருதக்ஷணையாக ஒரு பெருந்தொகையைக் கொடுத்தபோது அதை வாங்க அந்தப்பெண் கெளரவமாக மறுத்து விட்டாள். ஏழ்மையிலும் நேர்மை + வைராக்யம் கொண்ட நல்ல பெண். மிகவும் ரோஷக்காரி அவள். மிகவும் பெருந்தன்மையானவளும் கூட.


பிறகு அவர்கள் வீட்டுக்கு அத்யாவஸ்யமாகத் தேவைப்பட்ட குக்கர் முதலிய ஒருசில எவர்சில்வர் பாத்திரங்களாக வாங்கித் தந்து விட்டு வந்தோம். அவள் சார்பில் அவளின் தாயார் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக்கொண்டார்கள்.  பிறகு தான் எனக்கு மனம் சமாதானம் அடைந்தது. 


எனக்கு குருவாக இருந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளில் 8*3=24 மணிநேரங்கள் எனக்குப் பாடம் நடத்திய அந்த நீலாவை என்னால் என்றும் மறக்கவே முடியாது. பிறகு அவளுக்குத் திருமணம் ஆகி ஏதோவொரு வெளிநாட்டில் தற்போது இருப்பதாக, சமீபத்தில் அவளின் பெரியப்பா பையன் மூலம், கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். 

இன்றும் கூட எனக்கு I C W A I என்ற COSTING படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் உள்ளது. இந்த என் ஆர்வத்திற்கு என் தற்போதைய உடல்நிலையும், வீட்டில் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இல்லாமையும் மிகவும் முட்டுக் கட்டைகளாக உள்ளன. அதனால் என் ஆசையை தற்போதைக்கு ஒத்திப்போட்டு வைத்துள்ளேன்.

எப்போதும் எந்த வயதிலும் ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும், மன நிம்மதியையும் தரும்.  அப்போது தான் நம் வாரிசுகளே நம்மை மதிப்பார்கள். நாமே நம் வாரிசுகளுக்கு ஓர் முன்னுதாரணமாகவும் திகழலாம்.


நாம் கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். படிப்பறிவு + அனுபவப்பட்டறிவு இரண்டுமே வாழ்க்கைக்கு மிகவும் தேவை தான்.   


மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் உடனடியாக ஏதாவது படிக்க ஆரம்பித்து விடுங்கள். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. 




 

அதிர்ஷ்டமும், வசதி வாய்ப்புக்களும் இருப்பவர்கள் சிறு வயதிலேயே நிரந்தர கல்வியில் சேர்ந்து [REGULAR COLLEGE STUDIES] தொடர்ந்து, எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவையும் படித்து விடுவதே நல்லது. அதில் அதிகமாக தொல்லை ஏதும் கிடையாது.


ஆனால் இந்த அஞ்சல்வழிக் கல்வி கற்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அதற்கு மிக மிகப் பொறுமை வேண்டும். படிக்கணும், பாஸ் செய்யணும் என்ற வெறி வேண்டும். படிக்க வேண்டும் என்ற ஆசையும் சிரத்தையும் வேண்டும். உண்மையாக நாம் அதற்காக உழைத்தே ஆக வேண்டும்.


பல்கலைக்கழகங்களுக்கு பணம் கட்டிவிட்டால் மட்டும் போதாது. மனுக்களை பூர்த்தி செய்யும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். அதில் கேட்கப்படும் தகவல்களை தெளிவாக அழகாக எழுதப் பொறுமை வேண்டும்.  படிக்கச் சேருபவர்கள் அடிக்கடி விலாசம் மாறுபவர்களாக இருக்கக்கூடாது. 


பல்கலைக்கழகங்களுடனான நம் தொடர்புக் கடிதங்கள் அத்தனைக்கு XEROX எடுத்து ஒரு FILE இல் சோம்பல் படாமல் போட்டு வைக்க வேண்டும். 


பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும், நம் போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகள் [IDENTITY CARD], தேர்வு மனுக்கள் [APPLICATION FOR APPEARING FOR EXAMINATIONS],    தேர்வுக்கான நுழைவு அனுமதிச்சீட்டு [HALL TICKETS], தேர்வு அட்டவணைகள் [EXAMINATION TIME TABLE], அவ்வப்போது வரும் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் [EXAM MARK SHEETS] அவ்வப்போது நாம் அனுப்பும் பணத்திற்கான அத்தாட்சி ரசீதுகள் [XEROX COPY OF THE DEMAND DRAFTS],  அஞ்சல் வழிக்கல்விக்கான தொடர்பு வகுப்புகள் நடக்கும் இடங்கள், நாட்கள் மற்றும் நேரங்கள் சம்பந்தமாக வரும் அட்டவணைகள்   [CONTACT SEMINAR CLASS DATE + TIME + VENUE DETAILS], இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்துப் பாடங்களிலும் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் [MODEL QUESTION PAPERS OF THE PAST 5 YEARS IN ALL SUBJECTS], நம்முடைய தற்போதைய படிப்புக்கான அனைத்து புத்தகங்கள், நோட்டுக்கள் [ALL STUDY MATERIALS ...... BOOKS + NOTES] இவற்றையெல்லாம் தேடாமல் அழகாக ஒரே இடத்தில், ஒரு தனி பெட்டியில் எப்போது தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.


’அனைத்துப் பொருட்களுக்கு ஓர் இடம்; அந்தந்த இடத்தில் அந்தந்தப்பொருட்கள்’   [A PLACE FOR EVERYTHING AND EVERYTHING IN ITS PLACE] என்ற HOUSE KEEPING CONCEPT மிக முக்கியமாக இருக்க வேண்டும்.   


இது போல ஒரு ஒழுங்கு இல்லாவிட்டால் அவசரமாக ஏதாவது தேடும் போது அது கிடைக்காமல் எரிச்சல் தான் ஏற்படும். நமது பொன்னான நேரமும் நமது அருமையான ஆற்றலும் அனாவஸ்யமாக வீணாகும். இவையெல்லாம் நாம் தொடர நினைக்கும் நம் படிப்புக்கு முட்டுக்கட்டை போட்டு விடக்கூடும்.


அதுபோல நாம் வங்கிக்குச் சென்று கேட்பு காசோலை எனப்படும் DEMAND DRAFT வாங்கும் போது கீழ்க்கண்ட ஒரு சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 


வங்கியில் வேலை பார்ப்போர் அவருடைய வேலை பளுவினாலும் கவனக்குறைவாலும் ஒரு சில தவறுகள் செய்ய நேரிடலாம். 


நாம் தான் அவற்றைக் கையோடு கண்டுபிடித்து சரி செய்து வாங்கி வரவேண்டும். அவ்வாறு செய்யாது போனால் பிறகு நஷ்டப்படப்போவது நாம் மட்டுமே தான்.


1) DD யில் தேதி, மாதம், வருடம் சரியாகப்போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


2) ON DEMAND PAY TO _________________________________


என்ற இடத்தில், பல்கலைக்கழகத்தின் தேவைக்குத் தகுந்தபடி சரியாக எழுதப்பட்டுள்ளதா? எழுத்துப்பிழை ஏதும் உள்ளதா? என உறுதி செய்து கொள்ள வேண்டும்.


இதில் நாம் படிப்புக்காக பணம் கட்ட ஒரு மாதிரியும், தேர்வுக்காக பணம் கட்ட ஒரு மாதிரியும், இதர அபராத தொகைகள் செலுத்த வேறு ஒரு மாதிரியும் இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக விதி முறைகள் கையேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். 


For Example: 


DD is to be drawn in favour of The Vice Chancellor, .......................... University 
[for Term Fees /  Penalty for Late Payment / Issue of Duplicate Identity Card etc.,] 


DD is to be drawn in favour of The Controller of Examinations,  ............................. University
[ for Exam Fees / Mark sheets / Result etc.,]


அது போல மிகச்சரியாக DD யார் பெயரில் எடுக்கணுமோ அவர் பெயரில் தான் எடுக்கப்பட வேண்டும்.  மாற்றி தவறாக எடுத்து அனுப்பினால் நமக்குத்தான் தொல்லை. நாம் தேர்வு எழுத முடியாமல் போகும். ஹால் டிக்கெட் நமக்கு கிடைக்காமல் போகும்.


3) நாம் கட்ட வேண்டிய தொகை சரிதானா? அதற்குத்தான் DD வாங்கியுள்ளோமா? அந்தத் தொகை DD யில் சரியாக எண்ணாலும், எழுத்தாலும் தவறு ஏதும் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதா? என்பதையும் உற்றுப்பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.


4) நாம் வாங்கிய DD க்கு பணம் பெற்றுக் கொள்ளக்கூடிய ஊர் இடம் வங்கியின் கிளை முதலியன பல்கலைக்கழகத்தாரால் சொல்லியபடி DD யில், வங்கியினர் எழுதியுள்ளார்களா என்பதையும் நாமே ஒருமுறை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். [Name of Payable Branch]


5) DD யின் அடிபாகத்தில் வங்கி அதிகாரி கையொப்பம் இட்டுள்ளாரா, ரப்பர் ஸ்டாம்ப் வைத்துள்ளாரா என்பதையும் கட்டாயம் நாம் கவனிக்க வேண்டும். அப்போது தான் நாம் வாங்கிய அந்த DD செல்லுபடியாகும். சில சமயங்களில் வங்கியினர், அவசரத்தில் அதிகாரியின் கையெழுத்து ஏதும் இல்லாமலேயே DD ஐ நம்மிடம் கொடுத்து விடுவார்கள். அது பல்கலைக் கழகத்தினரால் REJECT செய்யப்பட்டு, DUE DATE எல்லாம் முடிந்த பிறகு நமக்கே திரும்ப வரக்கூடும். நாம் தான் DD வாங்கி அனுப்பும் போதே இவற்றையெல்லாம் கவனித்து சரி பார்க்க வேண்டும். 


6) நாம் பணம் கட்டி வங்கியில் DD வாங்கும் போது, DD கொடுக்கும் கிளையின் விபரங்களும் தலைப்பகுதியில் எங்காவது அச்சிட்டோ அல்லது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இட்டோ இருக்க வேண்டும். [Details of DD Issuing Branch] 


7) மேற்படி ஆறு விஷயங்களையும் சரி பார்த்து திருப்தியான பிறகே வங்கியை விட்டு நாம் வெளியேறி, நேராக அதை XEROX செய்யப்போக வேண்டும். DD யின் பின்புறம் மறக்காமல் நம் ‘பல்கலைக்கழக சேர்க்கை எண்ணை’  [ENROLLMENT NUMBER] நாம் எழுத வேண்டும்  


மீண்டும் தொடர்ந்து கல்வி கற்க விரும்புவோர், அந்தப்பாடங்கள் சம்பந்தமான சந்தேகங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வெட்கமோ கூச்சமோ படவே கூடாது. 


வயதில் மிகச்சிறியவரோ, பெரிய்வரோ, ஆணோ பெண்ணோ யாரிடம் போனால் அதற்கான தகுந்த விளக்கங்கள் கிடைக்குமோ அவரிடம் செல்லத் தயங்கவே கூடாது/ 


நான் இதை இப்போது சொல்வதற்கான காரணம் நான் இதுபோல வெட்கப்பட்டு, கூச்சப்பட்டு வாழ்க்கையில் இழந்தவைகள் ஏராளம். 


என்னைவிட மிகச்சிறிய பையனான M.Com., பட்டதாரியான ராஜூ என்பவரிடம் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் ACCOUNTANCY கற்றுக்கொண்ட போதும், என்னைவிட மிகச்சிறிய பெண்ணான நீலா என்பவரிடம் எட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் [அதுவும் அவர்கள் வீட்டுக்கே நான் போய் அமர்ந்து கொண்டு ] 8*3=24 மணி நேரங்கள் STATISTICS கற்ற போதும், எனக்கு மிகவும் கூச்சமாகவும், வெட்கமாகவும் தான் உணர முடிந்தது. 


நான் யாரிடமும் எந்த உதவிகளையும் கேட்டுப்பெற என்றும் விரும்பாதவனாகவே வளர்க்கப் பட்டிருந்தேன். 


பிறருடன், அதுவும் பெண்களுடன் நேருக்கு நேர் பேசவே மிகவும் கூச்சப்படுவேன். அது போல ஒரு சுபாவம் எனக்கு. அவர்களாகவே என்னை நன்கு புரிந்து கொண்டு என்னுடன் பழக ஆரம்பித்தால் நானும் அவர்களுடன் மட்டும் நன்கு பழகுவதுண்டு. 


இருப்பினும் பாடம் புரிந்து கொள்ளப்பட வேண்டும், படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்ன்னேற வேண்டும் என்று நாம் இறங்கும் போது, இதிலெல்லாம் நாம் பிடிவாதமாக இல்லாமல்,   நம்மை நாமே கொஞ்சம் மாற்றிக்கொண்டே ஆக வேண்டியதாக உள்ளது என்பதை அனைவரும் உணரத்தான் வேண்டும்.


ராஜூ என்பவரையாவது நாங்கள் மூவரும் எங்கள் வீட்டுக்கே மூன்று நாட்கள் அழைத்து, அவருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து, மூன்றே மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில், ஓரளவு பாடங்கள் நடத்தச்சொல்லி, ACCOUNTANCY பாடத்தின் அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். 


நீலா என்ற பெண்ணின் வீட்டுக்கு நானே அல்லவா செல்ல நேர்ந்தது! 


அதுவும் நான் மட்டுமே தனியாக அல்லவா செல்ல நேர்ந்தது!! 


அவர்கள் அறிவுடன் அளித்த பாடவிளக்கங்கள் மட்டுமின்றி, அன்புடன் அளித்த டிபன்+காஃபி யையும் எட்டு ஞாயிற்றுக்கிழமைகளின் நான் சாப்பிட அல்லவா நேர்ந்தது!!! 


நான் சாப்பிட மறுத்தால் அவளுக்கு மஹா கோபம் அல்லவா வந்தது !!!! 


முதல் நாள், நான் தவிர்க்க நினைத்து முயற்சித்தபோதே அவளுக்கு மிகவும் கோபம் வந்து விட்டதே!. 


என் வீட்டில் என் கையால் செய்து தரும் டிபன் + காஃபி யை ஏற்க நீங்கள் மறுத்தீர்களானால், பாடம் படிக்க என் வீட்டுக்கு நீங்கள் இனி வர வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாளே!! 


மிகவும் கூச்ச சுபாவம் உள்ள, அதுவும் பிறர் வீடுகளில் சாப்பிட்டே பழக்கமில்லாத என் நிலைமையைச் சற்றே சிந்தித்துப்பாருங்கள். 


நான் 40 வயதுக்கு மேல் 46 வயதுக்குள் 3 பல்கலைக்கழகத்தில் படித்து 3 வெவ்வேறு பட்டம் பெற்றது போல நீங்களும் சற்றே முயற்சித்து, அதற்காக கடுமையாக உழைத்தால், மிகச்சுலபமாக வெற்றி பெறலாம். காலம் கடத்தாமல் சிறு வயதிலேயே நிறைய படித்து வைத்துக்கொண்டால் அது நமக்கு உரிய பலனை, உரிய நேரத்தில் நிச்சயமாகத் தரும். 




அதுபோலெல்லாம் எதுவும் படித்து தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள், இந்தப் பதிவையாவது படித்து விட்டு ஏதாவது பின்னூட்டமாவது இடுங்களேன்.  அதுவே ஒரு மிகச்சிறந்த சாதனையாகத் தான் இருக்கும்.

-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-o-o-o-


 







[ "மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற இந்தத் தொடர் பதிவினை தொடர விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அவர்களின் அனுபவத்தினை எழுதித் தொடரலாம். 


நான் யாருக்கும் குறிப்பாக இந்தத் தொடர்பதிவினைத் தொடருமாறு அழைப்பிதழ் கொடுத்து தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. 


என்னை இந்தத் தொடர்பதிவிட அழைப்பு விடுத்த “அவர்கள் உண்மைகள்” மற்றும் ”திருமதி ஷக்திப்ரபா” இருவருக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.]



பிறகு வேறொரு பதிவில் மீண்டும் சந்திப்போம்


இந்த என் ஏழு தொடர்பதிவுகளையும் படித்து 
அவ்வப்போது கருத்துக்கள் கூறியுள்ள ஒவ்வொருவருக்கும், 
என் அடுத்த பதிவினில் நன்றி கூறுவேன்.


என்றும் தங்கள் அன்புள்ள
வை. கோபாலகிருஷ்ணன்