About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, May 30, 2019

மீண்டும் ‘மோடி’யே பிரதமர் !


இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்கள்.

அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்யத்துடனும் திகழ்ந்து, மிகவும் நல்லதொரு ஆட்சி தருவார் என்ற பரிபூரண நம்பிக்கையுடன், அவரை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம்.   


  26.05.2014 அன்று மோடி 
முதன்முறை பிரதமராக பதவி ஏற்ற போது
அது பற்றிய செய்தியினை அடியேன், சற்றே
வித்யாசமாக என் பதிவினில் எழுதியிருந்தேன்.
இதோ அதற்கான இணைப்பு:

செந்தாமரையே ... 
செந்தேன் நிலவே ... !


நம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தாமரை’ச்சின்னம் முழு மெஜாரிடி பலம் பொருந்திய தனிக்கட்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று 26.05.2014 திங்கட்கிழமை ஆட்சியைக் கைப்பற்றி, கோலாகலமான பதவி ஏற்பு விழா நடத்தி உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே நல்ல நாளில் இங்கு அதே ‘தாமரை’ச்சின்னம் வலையுலக வரலாற்றிலும் ஓர் மிகப்பெரிய சாதனை செய்து, இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் ’ஹாட்-ட்ரிக்’ பரிசின் உச்சக்கட்ட அளவினைப் பிடித்து வலையுலக பதிவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.

இவ்விரு நிகழ்ச்சிகளின் அபூர்வமானதொரு ஒற்றுமையை நினைத்தாலே இனிக்கிறது அல்லவா !

WHAT A VERY GREAT CO-INCIDENT !!!!!! ;))))))

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். 
என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

Friday, March 1, 2019

பேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019

^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^

24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவுகளில் படங்களுடன் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். 

   ஆர்டிஸ்ட் அநிருத் ..... வயது ஐந்து !

   சந்தித்த வேளையில் ..... பகுதி 1 of 6

3) http://gopu1949.blogspot.com/2015/02/3.html
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி-3)

   மலரும் நினைவுகள் .. பகுதி-1  [நல்லதொரு குடும்பம்] 

தற்சமயம் ஏழு வயது பூர்த்தியாகி எட்டாம் வயது நடக்கும் எங்கள் பேரன் ’அநிருத்’ என்கிற ’நாராயண’னுக்கு சமீபத்தில் உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் [22nd, 23rd, 24th and 25th February 2019] நான்கு நாட்களுக்கு இனிதே  நடைபெற்றது. விழாவில் அவரவர்கள் தங்களின்  மொபைலில் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் மட்டும் கீழே காட்சிப்படுத்தியுள்ளேன். 


  

^முதல்நாள் 21.02.2019 எங்கள் இல்லத்தில் நடந்த ஸ்ரீ வேங்கடாசலபதி தீப சமாராதனை பூஜைகள்.^
^22.02.2019 வெள்ளிக்கிழமையன்று^25.02.2019 திங்கட்கிழமை 
உபநயன ப்ரஹ்மோபதேச 
சுப முஹூர்த்த நிறைவு விழா + 
நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்தல்

பாலிகை கரைத்தல்
01.04.2010 அன்று பெரிய பேரன் ‘ஷிவா’ என்கிற 
சந்த்ரசேகரனுக்கு உபநயனம் நிகழ்ந்தபோது

அடுத்த இரண்டாண்டுகளில் வரக்கூடிய 
தனது பூணல் கல்யாணத்திற்காக
இப்போதே ரிகர்சல் பார்த்துள்ள, 
5 வயதே முடிந்துள்ள, எங்களின்  மூன்றாவது பேரன் 
‘ஆதர்ஷ்’ என்னும் ’கோபாலகிருஷ்ணன்’

^22.03.2019 அன்று வீட்டில் கேஷுவலாக எடுக்கப்பட்ட வீடியோ^
[அநிருத் பெரிய வாத்யார் போல ஆகி 
ஆதர்ஷுக்கு சந்தியாவந்தனம் சொல்லிக்கொடுத்தல்]அன்புள்ள ஆச்சி 
அனுப்பி அசத்தியுள்ள அன்பளிப்பு  

நமது வலையுலக நட்புத் தோழி, அன்புள்ளம் கொண்ட ஆச்சி அவர்களை தங்களில் பலருக்கும்  தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக இதோ படங்களுடன் கூடிய சில இணைப்புகள்:

அன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது !

அன்பு நிரம்பி வழியும் காலிக்கோப்பை [துபாய்-20]

சந்தித்த வேளையில் ....... பகுதி 5 of 6

'ஆங்கரை பெரியவா’ You-Tube Audio by GOPU

அன்புக்குரிய ஆச்சி அவர்கள், தான் வசிக்கும் ஹரியானாவிலிருந்து சமீபத்தில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அவதார ஸ்தலமான விழுப்புரத்திற்கு வருகை தந்து, ஸ்வாமிகளின் அவதார ஸ்தல இல்லத்துக்குச் சென்று, விபூதி + குங்குமப் பிரஸாதங்கள் எனக்காகவும் கூடுதலாக வாங்கிக்கொண்டு ஹரியானா திரும்பியுள்ளார்கள். 26.02.2019 மாசி செவ்வாய்க்கிழமை அனுஷ நக்ஷத்திரத்தன்று என் கைகளுக்கு பிரஸாதங்கள் கிடைக்குமாறு கொரியர் தபாலில் அனுப்பி வைத்துள்ளார்கள். 

இந்த திவ்ய பிரஸாதங்களுடன் எனக்கான அன்பளிப்பாக மிகவும் விலை ஜாஸ்தியான மற்றொரு பொருளையும் அனுப்பி அசத்தியுள்ளார்கள் இந்த ஆச்சி. அந்தப் பொருள் சுமார் ஏழடி நீளமும், சுமார் 5 அடி அகலமும், கச்சிதமாக மடித்தால் சுமார் ஒரு முக்கால் கிலோ எடையும் கொண்டதாக உள்ளது.  அது என்ன பொருள் என தயவுசெய்து, யாரிடமும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்றும், அதனைப் பொக்கிஷமாகப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து, தினமும் போத்திப் போத்தி மகிழும்படியும் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.  

மான் குட்டி போலவும், முசல்குட்டி போலவும், அணில் குட்டி போலவும் மிகவும் ஸாப்ட் ஆகவும், மிருதுவாகவும், வழவழப்பாகவும், வேறு எதையோ தொடுவதுபோல ஒருவித வெட்கத்தையும், கூச்சத்தையும், குதூகலத்தையும், ‘கிக்’கையும் ஏற்படுத்தி வரும் அதனை நான் அடிக்கடி , தொட்டுத்தொட்டுத் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்து வருகிறேன்.  :)

ஆச்சியின் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கு மீண்டும் கூறிக் கொள்கிறேன். 


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

Saturday, February 9, 2019

ரத ஸப்தமி + பீஷ்மாஷ்டமி [12.02.2019 செவ்வாய்க்கிழமை]


’மூக பஞ்ச சததி’யில் 
ஓர் முக்கிய ஸ்லோகம்!
’மூக பஞ்ச சததி’ என்பது, முற்பிறவியில் கவி காளிதாஸனாகப் பிறந்தவரும், இப்பிறவியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 20-ஆவது பீடாதிபதியாக சுமார் 39 ஆண்டுகள் விளங்கியவரும், கி.பி. 437 இல், கோதாவரி நதிக்கரை அருகே ஸித்தி அடைந்தவருமான  ‘மூக சங்கரர்’ என்ற பிறவி ஊமையால், அம்பாளின் அருள் பெற்று, சதகம் ஒன்றுக்கு 100 ஸ்லோகங்கள் வீதம், ஐந்து சதகங்களில் மொத்தம் 500 ஸ்லோகங்களாக, அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாளின் மீது பாடப்பட்டதாகும்.     

இதில் கடாக்ஷக சததத்தில் வரும் 45-வது ஸ்லோகம் மிகவும் முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. இதனை தினமும் தனியாகவோ, கூட்டாகவோ, தனக்காகவோ, பிறருக்காகவோ வேண்டிக்கொண்டு, பாராயணம் செய்துவர அனைத்து *ஸ்ரேயஸ்*களும் ஏற்படுவதுடன், நினைத்துப்பார்க்கவே முடியாத அற்புதங்கள் (MIRACLES) நிகழும் என இதனைப் பாராயணம் செய்து கண்கூடாக பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். 

*ஸ்ரேயஸ்* = நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம், சந்தோஷம், நல்ல புத்தி, வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் மற்றும் மன நிம்மதி போன்ற அனைத்து விதமான செளக்யங்களுமாகும்.

இதோ அந்தப் பொக்கிஷமான 45-வது ஸ்லோகம்:

மாத: 
(மாதஹா)
க்ஷணம் ஸ்னபய,
மாம் தவ வீக்ஷிதேன  
மந்தாக்ஷிதேன
ஸுஜனை: 
(ஸுஜனைஹி)
அபரோக்ஷிதேன !
காமாக்ஷி, கர்ம, திமிரோத்கர,
பாஸ்கரேண, ஸ்ரேயஸ்கரேண,
மது, பத்யுதி, தஸ்கரேண !!

ஸ்லோகத்தின் பொருள்:

அம்பாள் காமாக்ஷி தேவியே ! ஒரு மலரிலிருந்து தேனைத் திருடிக்கொண்டு வேறு மலருக்கு, ரீங்காரமிட்டுக்கொண்டு,  மிகவும் ஜொலிக்கும் வெளிச்சத்துடன் பறந்து செல்லும்  பொன் வண்டினைப்போன்ற, காந்த சக்தியுள்ள, உன் கடைக்கண் பார்வையை, புன்னகையுடன், ஒரு க்ஷண நேரம் (கண் இமைக்கும் நேரம்) என் மீது திருப்பி, என் ஜன்மாந்தர பாபங்களாகிய மன அழுக்குகளைக் குளிப்பாட்டி நீக்கி, ஸதா ஸர்வ காலமும் உன்னையே நினைத்து வழிபடும் ஞானிகளுக்கு அருள் செய்வதுபோலவே, என்னையும் அக்ஞானம் என்ற இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அருள வேண்டும் தாயே !!      

  ரத ஸப்தமி + பீஷ்மாஷ்டமி 
12.02.2019 செவ்வாய்க்கிழமை

வரும் 12.02.2019 செவ்வாய்க்கிழமை சூர்ய பகவானுக்கு உரிய ரத ஸப்தமியும், பீஷ்மருக்கு உரிய பீஷ்மாஷ்டமியும் சேர்ந்து ஒரே நாளில் வருகின்றன. அன்று ஸ்நானம் செய்யும்போது, ஆண்கள் + பெண்களால் சொல்லப்பட வேண்டிய மந்திரங்களும், அன்று ஆண்கள் அனைவராலும் செய்யப்பட வேண்டிய மிகச்சுலபமான தர்ப்பண (நீர்க்கடன்) மந்திரங்களும் கீழ்க்கண்ட பதிவுகளில் உள்ளன. அவற்றைத் தனியாகக் குறித்து வைத்துக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சூர்ய பகவானுக்காகச் செய்ய வேண்டிய, மிகச் சுலபமான ரத ஸப்தமி ஸ்நான மந்திரங்களும், ரத ஸப்தமி தர்ப்பண (நீர்க்கடன்) மந்திரங்களும் தெரிந்துகொள்ள இதோ ஓர் பதிவு:    http://gopu1949.blogspot.com/2012/01/blog-post_31.html
குருக்ஷேத்ர யுத்த பூமியில், மஹா பாரதப் போர் முடிந்து, உத்தராயண புண்யகாலத்தில் தனது மரணம் நிகழ வேண்டும் என எதிர்பார்த்து,  அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்ம பிதாமஹர், பஞ்ச பாண்டவர்களுக்காக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் முன்னிலையில், முதன் முதலாக எடுத்துச் சொன்னதுதான் ’ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்’ என்ற மஹா மந்திரமாகும். பீஷ்மாஷ்டமி புண்ணிய காலத்தில் பீஷ்மப் பிதாமஹருக்காக ஆண்கள் அனைவராலும் செய்யப்பட வேண்டிய, மிகச் சுலபமான தர்ப்பண (நீர்க்கடன்) மந்திரங்கள் இடம் பெற்றுள்ள பதிவு இதோ:   http://gopu1949.blogspot.com/2012/01/31012012.html2011 முதல் 2015 வரை நான் என் வலைத்தளத்தில் 
வெளியிட்டுள்ள அனைத்து 806 பதிவுகளுக்கும், 
அன்புடன் வருகைதந்து, 
அழகாகப் பின்னூட்டங்கள் அளித்துள்ளவரின் 
மூன்றாம் ஆண்டு நினைவு நாள்.   

  

 09.02.2019 
 மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி 


"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”

 வலைத்தளம்: மணிராஜ்

[ மறைவு: 09.02.2016  ]

தொடர்புடைய பழைய பதிவுகள்:
கண்ணீர் அஞ்சலி :(

அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(

http://gopu1949.blogspot.com/2018/02/09022018.html
நினைவு நாள் : 09.02.2018


 
  
    
    
9
    
2
    
  
  
  
   
19
 
நினைத்துப் பார்க்கிறேன்

                        https://gopu1949.blogspot.com/2014/10/blog-post.html
                       2014 போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி

                   

சாதனையாளர் விருது - 2015

 

அன்றும், இன்றும், என்றும்
நீங்காத நினைவுகளுடன்


பதிவர்களாகிய நாங்கள். 


 


[ வை. கோபாலகிருஷ்ணன் ]