என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 17 செப்டம்பர், 2015

புவனா ..... ஒரு ஆச்சர்யக்குறி ! {REVISED ON 11.10.2015}

2

அனைவருக்கும் இனிய
விநாயகர் சதுர்த்தி 
நல்வாழ்த்துகள் !


’பிள்ளையாரப்பா’வுக்கு 
நம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு மிகப்பெரிய எடைகொண்ட
ஒரே கொழுக்கட்டை எடுத்துச்செல்லப்படுகிறது
^ நன்றி: தினமலர்-திருச்சி - 18.09.2015 பக்கம்-9 ^

17.09.2015 வியாழக்கிழமை

நேற்றைய நிகழ்வு  .... இன்றைய செய்தியாக !


கடைகளில் கிடைக்கும் அழகோ அழகான 
கலர் கலர் பிள்ளையார்கள்

-oOo-

புவனா ஒரு ஆச்சர்யக்குறி !

யார் அந்த புவனா?

 
 
புவனமாளும் 
ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள்

அனைவரையும் 
11.10.2015 ஞாயிறு
புதுக்கோட்டை
தமிழ் வலைப்பதிவர்கள் 
சந்திப்பு திருவிழாவுக்கு 
வருக! வருக!! வருக!!!
என தங்கத் தேரினில் ஏறி வந்து
அன்புடன் அழைக்கிறாள் !!!!

-oOo-


எனக்குத்தெரிந்து ஓர் 40-50 ஆண்டுகளுக்கு முன்புவரை புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகியவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒரே திருச்சி மாவட்டமாகத்தான் இருந்தது. 

இன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்கள் பெயர்களில், தமிழ் எழுத்தாள வலைப்பதிவர்களாகிய நம்மில் பலரும் ஆங்காங்கே சிதறி இருப்பினும், வரும் 11.10.2015 ஞாயிறு, ’வலைப்பதிவர்கள் சந்திப்பு’ என்ற பெயரில் புதுக்கோட்டையில் மீண்டும் ஒன்றாக இணைய இருப்பது ஓர் வரவேற்கத்தக்க இனிமையான அனுபவமாகும்.


தமிழ் அறிஞர் + கவிஞர் 
திரு. நா. முத்துநிலவன் அவர்கள் 
தலைமையில்
“வலைப்பதிவர் திருவிழா-2015” 

விழாக்குழுவினர் பற்றி அறிய

விழா நிகழ்வுகள் பற்றி அறிய 

விழாவில் வழங்க உத்தேசித்துள்ள 
விருதுகள் பற்றி அறிய

விழாவின் போது அங்கு வெளியிட இருக்கும்
’நூல் வெளியீடுகள்’ பற்றி அறிய

விழாவிற்காக இதுவரை நன்கொடை 
அளித்துள்ளோர் பட்டியல் பற்றி அறிய

தங்களின் வருகையை பதிவு செய்து 
விண்ணப்பப்படிவம் அனுப்பி வைக்க 

இதுவரை தங்களின் வருகையை 
உறுதி செய்துள்ளோர் பட்டியல் பற்றி அறிய 

“தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”-ல் 
இடம் பெற தகவல் அளித்துள்ளவர்கள் பற்றி அறிய

விழாவினைப்பற்றி தங்களின் வலைத்தளத்தில் 
விளம்பரப்படுத்தி தனிப்பதிவு எழுதி 
வெளியிட்டுள்ளோர் பற்றி அறிய

மின் தமிழ் இலக்கியப் போட்டி பற்றிய 
முழுவிபரங்கள் அறிய


மேற்படி போட்டிக்கு இதுவரை வந்து குவிந்துள்ள 
படைப்புகளின் தலைப்புக்களும், வகைகளும் அவற்றை 
எழுதி அனுப்பியுள்ள பதிவர்களின் பெயர்களும் பற்றி அறிய

Latest Important Link with 30.09.2015 PositionLatest Important Link with 01.10.2015 Position


தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் அவரவர்களின் வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்ப 

1) புதுக்கோட்டை திருவிழாவில் நேரில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். 

2) தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015 க்கு தங்களைப்பற்றிய தகவல்கள் அளித்தும், விளம்பரங்கள் சேகரித்துக்கொடுத்தும் உதவலாம்.

3) விழா வெற்றிகரமாக நடைபெற நன்கொடைகள் அனுப்பி உதவலாம்

4) விழா பற்றிய செய்திகளை தங்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு, பிறர் அறிய விளம்பரப்படுத்திச் சிறப்பிக்கலாம். 

5) விழாவினை வாழ்த்தி கவிதைகளோ / வாழ்த்துரைகளோ அனுப்பி வைக்கலாம்.

6) மின்-தமிழ் இலக்கியப்போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.
 

மேலே கொடுத்துள்ள பல்வேறு இணைப்புகள் மூலம், மேலும் பல விபரங்களை அறிந்து, தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை நல்கி, விழா வெற்றிகரமாக நடைபெற உதவிடுமாறு, அனைவரையும் விழாக்குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இணையத்தால் இணைவோம்!
இதயத்தால் மகிழ்வோம்!!


 


மின்-தமிழ் இலக்கியப்போட்டிகளில் கலந்துகொண்டு 
மொத்தம் 260 படைப்புகளை அளித்து
சிறப்பித்துள்ளோர் பற்றிய முழு விபரங்கள் அறிய


இதுவரை நடைபெற்ற 
வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாக்களில் இல்லாத 
புதிய திருப்பமும், சிறப்புமாக:


தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015 வெளியீடு

உலகம் முழுவதும் உள்ள தமிழ் வலைப்பூக்களில் யார்யார் எழுதுகிறார்கள்? 
என்னென்ன எழுதிவருகிறார்கள்? எனும் விவரங்கள் அடங்கிய 
“தமிழ்வலைப் பதிவர் கையேடு-2015” எனும் நூல் வெளியிடப் படவுள்ளது. 
அதில் பங்கேற்க, உலகத் தமிழ்ப் பதிவர்கள் 
தம்மைப் பற்றிய விவரக்குறிப்பு தந்துவருகிறார்கள். 
விழாவில் கலந்து கொள்ளும் பதிவர்களுக்கு 
இது இலவசமாக வழங்கப்படவுள்ளது.

ooooooooooo


 

அழைப்பிதழ்இனி சூடான சுவையான 
புதிய செய்திகள் !

போட்டிகள் முடிந்தன... அடுத்து ஒரு போட்டி?!


மேலும் அதிக விபரங்களுக்கு
http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_3.html

http://bloggersmeet2015.blogspot.com/2015/10/10000.html

வாசகர்களுக்கான விமர்சனப் போட்டி! 

யாவரும் கலந்துகொள்ளலாம்! 

மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000


இந்தப் புதுமைப்போட்டியில் கலந்துகொள்வதற்கான படிவம்
இதோ இந்த இணைப்பினில் சுலபமாகக் கொடுக்கப்பட்டுள்ளது
http://dindiguldhanabalan.blogspot.com/2015/10/Tamil-Writers-Festival-2015-5.html


 


போட்டிக்கு வந்துள்ள 260 படைப்புகளில் 
இந்தப்படைப்புகளே வெற்றிபெறக்கூடும் என 
கருத்துக்கணிப்புச் செய்து 
அனுப்பியுள்ளோர் பற்றிய விபரங்கள் அறிய 
இதோ இணைப்பு 
 போட்டி முடிவுகள் அறிவிப்பு 

வெற்றியாளர்கள் மொத்தம்: 4 + 4 + 3 + 3 + 3 + 2 = 19 
அனைவருக்கும் நம் வாழ்த்துகள் !

-oOo-

விழா - நிகழ்ச்சி நிரல்
விழா ஏற்பாடுகள் பற்றி, 
என்னுடன் அலைபேசியில்  10.09.2015 அன்று 
பகிர்ந்துகொண்ட திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், 

16.09.2015 அன்று நீண்ட நேரம் 
என்னுடன் பேசி மகிழ்வித்த 
விழா ஒருங்கிணைப்பாளர் 
கவிஞர் நா. முத்து நிலவன் ஐயா 
அவர்களுக்கும், 

தினமும் வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு செய்திகளை 
உடனுக்குடன் பகிர்ந்துகொண்டுவரும், 
விழாக்குழுவினர் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருச்சி மாவட்டத்திலிருந்து விழாவில் கலந்துகொள்ள இதுவரை பெயர் அளித்து பதிவு செய்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.

குறிப்பாக நான் நேரில் சந்தித்துப்பேசிப் பழகியுள்ள

திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா
அவர்களுக்கும்


திருமதி. ருக்மணி சேஷசாயீ அம்மா
அவர்களுக்கும் 

என் மனம் நிறைந்த பாராட்டுகள் + வாழ்த்துகள் + 
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்று வாருங்கள் !

வென்று வாருங்கள் !!தமிழ் வலைப்பதிவர்கள் 
சந்திப்பு திருவிழா வெற்றிகரமாகவும், 
மிகச்சிறப்பாகவும் நடைபெற 
என் அன்பான நல்வாழ்த்துகள்.


என்றும் அன்புடன் தங்கள்,
 
[வை. கோபாலகிருஷ்ணன்]

வியாழன், 10 செப்டம்பர், 2015

’கீதமஞ்சரி’யின் ’என்றாவது ஒரு நாள்’ ...... Part 5 of 5

 ’என்றாவது ஒரு நாள்’ 

 நூல் புகழுரை  

By 
வை. கோபாலகிருஷ்ணன்

பகுதி-5
{ நிறைவுப் பகுதி }

Link for Part 1 of 5

வலைத்தளம்: கீத மஞ்சரி


’என்றாவது ஒரு நாள்’ 
நூலாசிரியர்
 ’விமர்சன வித்தகி’ 
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-03-03-third-prize-winner.html
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html
திருமதி. 
 கீதா மதிவாணன்  
அவர்கள்

-oOo-

’என்றாவது ஒரு நாள்’ நூலிலிருக்கும் 
ஒவ்வொரு தமிழாக்கக் கதையினிலும் 
நான் ரசித்துப்படித்துப் புரிந்துகொண்டவைகளை
ஒருசில வரிகளில் மட்டும் மிகச்சுருக்கமாகப் 
பகிர்ந்துகொண்டு வருகிறேன்.


கதை எண்: 1 to 10 க்கான இணைப்பு: 

கதை எண்: 11 to 20 க்கான இணைப்பு: 

கதை எண்: 21 மற்றும் 22  மட்டும் 
இப்போது இங்கே தொடர்கிறது

21. மேக்வாரியின் நண்பன்

அயோக்யன், தறுதலை, களவாணிப்பயல், பயந்தாங்கொள்ளி, புளுகன், மோசடிப்பேர்வழி என்றெல்லாம் சமூகத்தால் அழைக்கப்படும் வாலிபனான ’மேக்வாரி’ என்கிற கதாபாத்திரத்தின் பெயர் நம்மூர் ’கேப்மாரி’ போல பொருத்தமாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேக்வாரியின் நண்பர் பெயர்: பார்கோ - இவன் முரட்டு தேகத்துடனான சற்றே கிழவனாவான். 

அந்தக்காலத்தில் 1965-1975 முரட்டு எஞ்ஜின்களுடன் கூடிய கனரக வாகனங்களில் [Bus + Lorry] லேலண்ட், பென்ஸ், பார்கோ என்ற மூன்றும் மிகப் பிரபலமாக இருந்தன. அதுபோலவே முரட்டு தேகத்துடனான இவனுக்கும் பார்கோ என்ற பெயர் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளதாக நான் நினைத்துக்கொண்டேன்.

மேக்வாரி + பார்கோ என்ற இரு பெரும்குடிகாரர்களான பேட்டை ரெளடிகளின் நெருங்கிய நட்பினை உணர்த்தும் கதையாக உள்ளது. 

சிறிது காலமாக யார் கண்களிலும் படாமல் உள்ள தன் நண்பன் ‘மேக்வாரி’ ஐ நீண்ட நாட்களாகக் காணுமே என பிறர் இவன் காதுபட பேசிக்கொள்ளும்போது, அவன் இறந்து போய்விட்டதாக மற்றவர்களிடம் ‘பார்கோ’ அறிவிக்கிறான். 

மேலும், ’யாரையும் அவர்கள் இல்லாதபோது, முதுகுக்குப்பின்னால் புறணி பேசும் வழக்கம் கூடாது’ என்று முழு போதையிலும் பார்கோ பிறருக்கு உபதேசம் செய்கிறான். இந்த இடம் படிக்க நல்ல நகைச்சுவையாகவும் யோசிக்க வைப்பதாகவும் உள்ளது. 

இறந்து போனதாக பார்கோவால் அறிவிக்கப்பட்ட அதே ’மேக்வாரி’ கதையின் கடைசியில் உயிருடன் வருவது, கதையில் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.

பிறகு என்ன நடந்தது? நூலில் பார்த்துப் படித்து அறியவும்.
22. பொறுப்பிலிகள்

அவள் தன் வீட்டில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவன் வருகிறான். 

தன் வயிற்றில் அவன் வாரிசு உருவாகியுள்ளதாகச் சொல்லி மகிழ்கிறாள். அவளை மட்டும் விரும்பி அனுபவித்த அவன், ஏனோ அதனை ஏற்க மட்டும் விரும்பாமல் இருக்கிறான். 

”உடனே எங்காவாது இதில் எக்ஸ்பர்ட் ஆன பெண்மணிகள் யாரிடமாவது சென்று கலைத்து விடுவது தானே” என்கிறான். 

”என்னிடம் கையில் காசு ஏதும் இல்லை. அதனால் அதற்கும் வழியில்லை .... நீ எனக்குத் துணையாக இருப்பின் நான் அதனைப் பெற்றுக்கொள்கிறேனே ... ஆசையுடன் அழகாக பொறுப்புடன் வளர்க்கிறேனே ... பிற்காலத்தில் அது உன் பெயரைச் சொல்லுமே ... உனக்கு என்றும் ஆதரவாக இருக்குமே” என்கிறாள் அவள்.

இதைக்கேட்டவன் தர்ம சங்கடத்துடன், அவளை அழைத்துக்கொண்டு வெளியே எங்கோ நடைப்பயிற்சிக்குச் செல்ல விரும்புகிறான்.

”இந்த நிலைமையில் நான் எப்படி வெளியே வர முடியும்?, என்னைப்பலரும் பார்க்கக்கூடுமே” என முதலில் மறுக்கிறாள் அவள். இருப்பினும் அவனின் வற்புறுத்தலுக்குப்பின் அவனுடன் வெளியே புறப்பட்டுச்செல்கிறாள்.  

வழக்கம்போல அவனுடன் வேகமாக நடக்கவும், உயரமான பாதைகளில் ஏறி அவனுக்கு ஈடாக பின் தொடரவும், தன்னுடைய தற்போதைய உடல் நிலைமை அசெளகர்யமாக இருப்பதாகச் சொல்லி அவனையும் உணர வைக்கிறாள்.

பிறகு அவளை, அவளின் வீட்டில் அவன் பத்திரமாகக் கொண்டுபோய் விடும்போது, ஒரு கணிசமான தொகையை அவளிடம் செலவுக்காகக் கொடுக்கிறான். அவளிடம் அவன் பிறக்கவுள்ள குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளைச் சொல்லி புரிய வைக்கிறான். மேலும் அவளுடன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறான். 

அவளும் அதுபோலவே மனம் விட்டுப்பேசும் போது, ”தன் வயிற்றில் வளரும் கரு நிச்சயமாக ’__ண்’ குழந்தையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது” என அவனிடம் சொல்கிறாள். அவள் இதுபோலச் சொல்லியதில், அவனுக்கு ஓர் மன நிறைவு ஏற்பட்டு, அவன் மனதையே அடியோடு மாற்றி விடுகிறது. 

ஓரிரு நாட்களில் திரும்ப வந்து அவளை அழைத்துச் செல்வதாகவும், அதன் பிறகு அவள் தன்னுடனேயே தன் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி இருக்கலாம் என்றும், கர்பிணியான அவள் இனி தையல் வேலைகள் செய்து தவித்துக்கொண்டு, தனித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். 

மேலும் தான் அப்படிப்பட்டவன் அல்ல” என்று தன்னைப்பற்றி அவளிடம் உயர்வாகச் சொல்லியும் செல்கிறான். அவன் அன்புடன் தந்த பணத்தைப்பெற்றுக்கொண்ட அவளும் அவனின் நல்ல முடிவினையும், திடீர் மனமாற்றத்தையும் கண்டு மகிழ்ச்சியடைகிறாள். 

கருவுற்ற ஒரு பெண்ணின் அன்புடன் கூடிய ஓர் மிகச்சிறிய வார்த்தை ‘பொறுப்பிலிகளாக’ இதுவரை இருந்துள்ள இவர்களை எப்படிப் ’பொறுப்பானவர்களாக’ மாற்றியுள்ளது என்பதை நீங்களே படித்துத் தெரிந்து கொண்டால்தான் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கக்கூடும். :) 

அப்படியே நம் உசிலம்பட்டி போன்ற ஊர்க்காரர்களுக்கும் இதனை எடுத்துச்சொல்ல வசதியாக இருக்கும்.என் மூச்சும் பேச்சும்
என்றென்றும் தமிழமுதே!
என் எழுதுகோல் பீச்சும்
எண்ணத்தின் வீச்சுமதுவே!
   
- கீதமஞ்சரி
http://geethamanjari.blogspot.in/


ஹென்றி லாஸன் என்பவர், ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மிகச்சிறந்த எழுத்தாளராக இருந்திருக்கலாம். அவர் சொல்லியுள்ள கதைகளும் கருத்துக்களும் அன்றைய காலக்கட்டத்தில், தண்டனைபெற்று வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்து அன்றாடம் தங்களின் வாழ்வாதாரத்திற்கே போராடிய ஏழை மக்களின் சோதனை + வேதனை மிக்க வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம். 


இருப்பினும் அந்த ’ஹென்றி லாஸன்’ அவர்களைப்பற்றி, நாம் இன்று ஓரளவுக்காவது அறிய, கொஞ்சும் தமிழில், தனக்கே உரித்தான தனி நடையில், வெகு அழகாகவும், மிக நேர்த்தியாகவும் மொழியாக்கம் செய்துள்ள திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் கடுமையான உழைப்பினை நாம் பாராட்டியே தீரவேண்டும்.
  

என்னைப்பொறுத்தவரை இதனைத் தமிழாக்கம் செய்து ஜூஸ் போல நமக்குப் பருகவும், படிக்கவும் கொடுத்துள்ள நம் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற நூலை மட்டும் நான் பார்க்காமலும் படிக்காமலும் இருந்திருந்தால் ’ஹென்றி லாஸன்’ என்ற பிரபலமானதோர் எழுத்தாளரைப்பற்றி நான் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


திருமதி. கீதா மதிவாணன் அவர்களைப்பற்றி ஏற்கனவே தெரிந்துள்ள + இதுவரை தெரிந்துகொள்ள வாய்ப்பு அமையாத தமிழ் எழுத்தாளர்களும், வாசகர்களும், தமிழ் வலையுலகப் பதிவர்களும் அவசியமாகப் படித்து ரஸிக்க வேண்டிய நூல் இது. 


எந்தக்காலத்திலோ,  யார் யார் வாழ்க்கையிலோ நடந்த சம்பவங்களை யாரோ ஒருவர் எழுதியிருப்பினும், அதற்கு தன் தனித்திறமைகளால் தமிழில் உயிரூட்டம் கொடுத்து, சுவை சேர்த்து, நமக்காகவே ருசியாகச் சமைத்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பரிமாறியுள்ளார்கள் திருமதி. கீதா அவர்கள். 


ஹென்றி லாஸன் அவர்களால் சொல்லியிருக்கக்கூடிய மூலக் கதைகளைவிட, இவர்களின் தமிழ் எழுத்து நடையில் நிறைய சுவாரஸ்யங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். இவர்களின் தனித்திறமைகள் வாய்ந்த தமிழ் எழுத்துக்களுக்காகவே அனைவரும் இந்த நூலினை வாங்கிப் படித்து மகிழலாம் என்பதை எனது தனிப்பட்ட கருத்தாகப் பதிவு செய்துகொள்கிறேன். 


இது இவர்களின் முதல் நூல் வெளியீடாகும். முதல் நூலே வெற்றிகரமாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கதாகும். இந்த தன் நூல் வெற்றிகரமாக அமையவேண்டி இவர்கள் மேற்கொண்டுள்ள சிரத்தையான கடும் உழைப்புகள் பற்றி இவர்களே தன் நூலில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ளார்கள். இந்த நூல் வெளியீட்டால் இவர்களுக்கு பல்வேறு புதிய உலக அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்பதில் எனக்கொன்றும் சந்தேகமே இல்லை. அந்த அரிய பெரிய அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு, இவர்களின் பொறுமைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், தனித்தன்மைகளுக்கும், தமிழ் எழுத்தினிலுள்ள தனித்திறமைகளுக்கும், ஆண்டுக்கு ஒன்று வீதம் மேலும் பல நூல்கள் இவர்கள் வெளியிட முயற்சிக்கலாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


பல்வேறு காரணங்களால், சற்றே தாமதமானாலும், இந்த நூலை நான் பொறுமையாகவும், முழுமையாகவும், நன்கு புரிந்துகொண்டும், ஒவ்வொரு வரிகளையும் மனதில் ஏற்றிக்கொண்டும் படித்து முடித்து, இதுபோல விரிவாகக் புகழுரை வழங்க எனக்கு வாய்ப்பளித்த ’கீதமஞ்சரி’ வலைத்தளப் பதிவர், திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


’என்றாவது ஒருநாள்’

(மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய 
காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்) 

மூல ஆசிரியர் :– ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா) 

தமிழில் :– கீதா மதிவாணன்  

பதிப்பகம்: அகநாழிகை  
விலை – ரூ.150/-  
(அட்டைகள் நீங்கலாக 160 பக்கங்கள்)
கிடைக்குமிடம்: 
அகநாழிகை புத்தக உலகம், 
390, அண்ணா சாலை, 
KTS complex, 
சைதாப்பேட்டை, 
சென்னை - 600015.
To Contact Mobile: 9994541010

30.09.2015 தேதியிட்ட திருச்சி-தினமலர்-தினசரி 
நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி !

'கீத மஞ்சரி’  திருமதி.  கீதா மதிவாணன் அவர்களின்  ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் வந்த ‘சீனத்தவனின் ஆவி’ என்ற சிறுகதை ஒலிவாகனம் ஏறி கலை வலம் வந்துள்ளது.
இன்று 22.1.17 இரவு 8.00 - 9.00 மணி வரை நடைபெறும் SBS அரசு ஊடக வானொலியில், சுமார் 73 மொழிகளில் ஒலிபரப்பு நடைபெறுகிறது.
அந்த ஒலி வடிவத்தை நீங்களும் கீழ்வரும் இணைப்பினில் சென்று கேட்கலாம்.
கதை வடிவம்: கீதா.மதிவாணன்.
ஒலிவடிவம்: பாலசிங்கம். பிரபாகரன்.
நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா.துரைசிங்கம்
நிகழ்ச்சி மேலாளர்: ரேமண்ட். செல்வராஜ் (றைசெல்)


’என்றாவது ஒரு நாள்’

 மீண்டும் நாம் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும் வரை 
தங்களிடமிருந்து விடைபெறுவது


 தங்கள்  அன்புள்ள

[ வை. கோபாலகிருஷ்ணன் ]