2
ஸ்ரீராமஜயம்
அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தருவது லக்ஷ்மிகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது.
புனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு.
ஆசையும் காமமும் புனிதமில்லை.
அன்புதான் புனிதம்.
அதனால்தான் ’அன்பேசிவம்’ என்று சொல்வது.
இப்போது நம் ‘கை’ நாமாகத்தோன்றுகிறது.
நம் குரல் நாமாகத்தோன்றுகிறது.
நம் உடம்பு நாமாகத்தோன்றுகிறது.
இதுபோல உலகனைத்தும் நாமாகி விட வேண்டும்.
அப்படிப்பட்ட குணம் ஒருவனுக்கு அனுபவத்தில் வந்தால் அவன் சண்டாளனாக இருந்தாலும் அவன்தான் பண்டிதன்.
இந்த ஞானம் தான் மாறாத ஆனந்தமான மோட்சம்.
இந்த சரீரத்தில் இருக்கும்போதே அனுபவிக்கக்கூடிய மோட்சம்.
oooooOooooo
அதிசய நிகழ்வு
நெஞ்சை உருக்கும் சம்பவம்
மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா!
முன் கதை பகுதி- 5 of 10
முன் கதை பகுதி- 1 of 10
முன் கதை பகுதி- 2 of 10
முன் கதை பகுதி- 3 of 10
முன் கதை பகுதி- 4 of 10
முன் கதை பகுதி- 5 of 10
முன் கதை பகுதி- 6 of 10 ..... தங்கள் நினைவுக்காக
மிராசுதார் வாயப்பொத்தியபடியே, ”ஆமாம் ... பெரியவா ... பந்தியில் சர்க்கரைப்பொங்கல் மட்டும் என் கையால் நானே பரிமாறினேன்” என்று குழைந்தார்.
ஸ்வாமிகள் விடவில்லை. “சரி ... அப்படி சர்க்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?” என்று கேட்டார் கடுமையாக.
வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆச்சார்யாளே பேசினார்.
“நீ சொல்ல வேண்டாம், நானே சொல்றேன். நீ சர்க்கரைப்பொங்கல் போடறச்ச, அது பரம ருசியா இருந்ததாலே, வைதீகாளெல்லாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டா! நீயும் நிறைய போட்டே.
ஆனா தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் ’சர்க்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா ... ரொம்ப ருசியா இருக்குனு பலதடவை வாய்விட்டுக் கேட்டும்கூட, நீ காதிலே வாங்கிண்டு, அவருக்குப் போடாமலேயே போனியா இல்லியா?
அவரும் எத்தனை தடவ வாய் விட்டுக்கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்டியே .... இது தர்மமா? ஒரு மஹா ஸாதுவை இப்படி அவமானப் படுத்திப்டியே....” மிகுந்த துக்கத்துடன் மெளனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்.
மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது.
கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள். சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.
பதினைந்து நிமிடங்கள் மெளனம். பிறகு கண்களைத்திறந்து மெளனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. அச்சார்யாளே, நாராயணஸ்வாமி ஐயரைப்பார்த்து, தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார்.
[பகுதி 7 of 10]
”மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தோரு வயசாகிறது. தன்னோட பதினாறாவது வயசிலேந்து, எத்தனையோ சிவச் க்ஷேத்ரங்கள்ளே ஸ்ரீ ருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்போதுமே அவர் நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு, அப்பேர்ப்பட்ட மஹான் அவர். நீ நடந்துண்ட விதம் மஹா பாபமான காரியம் .... மஹா மஹா பாபமான காரியம்! .... மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். கண்மூடி கண்மூடி மீண்டும் மெளனமாகிவிட்டார். சற்றுப்பொறுத்து ஆச்சார்யாள் மீண்டும் தொடர்ந்தார்.
“நீ பந்தி பேதம் பண்ணின காரியம் இருக்கே .... அது கனபாடிகள் மனஸை ரொம்பவும் பாதித்திடுச்சு. அவர் என்ன காரியம் செஞ்சார் தெரியுமா நோக்கு? சொல்றேன் கேளு!
நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூருக்குப் போகலே.
திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ’அஸ்மேத’ [பெரிய பிரகாரப்] பிரதக்ஷணம் மூணு தடவைப் பண்ணினார்.
திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ’அஸ்மேத’ [பெரிய பிரகாரப்] பிரதக்ஷணம் மூணு தடவைப் பண்ணினார்.
நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால் போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்தித்தார் தெரியுமா? மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.
தொடரும்