பதிவுலகினில் ’எங்கள் BLOG’ [http://engalblog.blogspot.in/
இவர்கள் தனி நபராக செயல்படாமல், பலரும் சேர்ந்து ஒரு குழுவாக பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள் என்பது ஓர் சிறப்பு அம்சமாகும். இவர்களில் பலரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்த அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான் என்பது மேலும் வியப்பளிக்கும் செய்தியாகும்.
‘எங்கள் BLOG' வலைப்பதிவினிலிருந்து நால்வர் என்னை சந்திக்க என் இல்லத்திற்கு 25.01.2015 ஞாயிறு மதியம் மூன்று மணி சுமாருக்கு அன்புடன் வருகை புரிந்தனர்.
இவர்களில் இருவர் மட்டும் வருவதாக முன்கூட்டியே தகவல் சொல்லி எச்சரித்திருந்ததால், நானும் வழிமேல் விழிவைத்து வெகுநேரம் வீட்டில் எதிர்பார்த்துக் காத்திருந்து வரவேற்பு அளிக்க முடிந்தது.
என் வலைத்தளப்பக்கம் அவ்வப்போது வந்துபோகும் திரு. ஸ்ரீராம் [ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்] அவர்களையும், திரு. K.G. கெளதமன் அவர்களையும் ஓரளவுக்கு பதிவுகளின் மூலம் எனக்குப் பரிச்சயம் உண்டு. அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
வந்தவர்களில் மீதி இருவரும் திரு. K.G. கெளதமன் அவர்களின் சொந்த அண்ணாக்கள். திரு. K.G. கெளதமன் அவர்களுடன் சேர்த்து மொத்தம் அவர்கள் ஐந்து சகோதரர்களாம். மீதி இருவர் அன்று இவர்களுடன் என் இல்லத்திற்கு வருகை தரவில்லை.

-=-=-=-=-=-=-=-=-=-
அவ்வாறு வருகை தராத ஒரு சகோதரருக்கு பதிலாக அவரின் நகைச்சுவைப்படைப்பு ஒன்று அன்றைய தினமலர் சண்டே ஸ்பெஷல் இதழில் ‘பொய்யெனப் பெய்யும் மழை’ என்ற தலைப்பினில் வெளியாகி மகிழ்வித்திருந்தது எனக்கே ஒரே ஆச்சர்யமாக இருந்தது. அவரைப்பற்றி 25.01.2015 ஞாயிறு தினமலர் SUNDAY SPECIAL இல் உள்ள சிறுகுறிப்பு இதோ:
கட்டுரையாளர் K.G.ஜவர்லால், மெக்கானிகல் இஞ்ஜினியர். 1982ல் இருந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது ஒரு பக்கக்கதைகள் மிகவும் பிரபலம். 2009ல் இருந்து வலைப்பதிவில் பல்சுவைக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை இவரது ஒன்பது புத்தகத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
திரு. கே.ஜி. ஜவர்லால் அவர்களே, வணக்கம்.
தங்களின் சகோதரர் K.G.கெளதமன் அவர்களை இன்று நான் திருச்சியில் நேரில் சந்திக்க முடிந்ததால், தங்களின் ’பொய்யெனப் பெய்யும் மழை’ என்ற நகைச்சுவை விருந்தினை தினமலர் இதழில் படித்துச் சிரித்து மகிழ முடிந்தது. பாராட்டுக்கள் + வாழ்த்துகள். - அன்புடன் VGK 25.01.2015
சரி, இப்போது என் இல்லத்திற்கு வருகை தந்தவர்களைப் பற்றிச் சொல்கிறேன்.
1. நம் ஸ்ரீராம் அவர்கள்
இவர் தன் புகைப்படத்தினை பதிவினில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளதால் பொக்கிஷமாகத் தனியே வைத்துக்கொண்டு விட்டேன். இவர் என்னுடைய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
"(1) இவர் ஓர் மிகச்சிறந்த ஓவியர் [2] **இவர் 1978ல் வரைந்த மிகப்பெரியதோர் காமாக்ஷி அம்மன் ஓவியம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, பரிபூர்ண அனுக்கிரஹம் செய்யப்பட்டு, குண்டக்கல் அருகேயுள்ள ‘ஹகரி’ என்ற கிராமத்தில் புதிதாகக்கட்டப்பட்டு 1979ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஓர் கோயிலில் மாட்ட உத்தரவு இடப்பட்டது** [3] கைவேலைகளில் இவர் ஒரு நிபுணர்; யாருக்காவது திருமணத்திற்கு GIFT அல்லது மொய்ப்பணம் கொடுத்தாலும் அதில் ஓர் கலையுணர்ச்சியோடு அலங்கரித்துத் தருபவர் [4] சிறந்த சிறுகதை எழுத்தாளர்; மிகவும் நகைச்சுவையாகவும் எழுதுபவர் [5] மிகவும் ருசியான சாப்பாட்டுப் பிரியரும்கூட” என ஏதேதோ என்னைப்பற்றிப் புகழ்ந்து தன் தாய் மாமாக்களிடம் எடுத்துச் சொன்னார், ஸ்ரீராம் அவர்கள்.
'எங்கள் ப்ளாக்’ தோழர்கள், நான் வரைந்த ஓவியங்களில் சிலவற்றைக் காட்டுமாறு வேண்டினர். ஸ்ரீ ஹனுமார் படத்தை மட்டும், வந்திருந்த அனைவரும் தங்களின் MOBILE PHONE களில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
2. திரு. K.G. கெளதமன் அவர்கள்
3. திரு. K.G. சுப்ரமணியன் அவர்கள்
4. திரு. K.G. யக்ஞராமன் அவர்கள்
இவர்கள் மூவரும் [ 2 to 4 above ] ஸ்ரீராம் அவர்களின் சொந்த ‘தாய் மாமன்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல SKC அளித்து, என் சிறுகதைத் தொகுப்பு நூலினை ஆளுக்கு ஒன்று வீதம் அளித்தேன்.
அவசரமாகச் சென்னை செல்ல வேண்டியுள்ளது என்றும், வெளியே காரில் மேலும் நான்கு பேர்கள் எங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லி 40 நிமிடங்களுக்குள் என் இல்லத்திலிருந்து கிளம்பி விட்டனர்.
அதற்குள் திரு. அப்பாத்துரை அவர்கள் ஏற்கனவே சொல்லியிருந்த என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் ( http://gopu1949.blogspot.in/ 2013/02/blog-post.html ) மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், தாயுமானவர் ஆலயம், ஸ்ரீ ஆனந்தவல்லீ ஸமேத ஸ்ரீ நாகநாதஸ்வாமி ஆலய கோபுரங்கள், பஜ்ஜிக்கடை உள்பட அனைத்தையும் ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
கட்டிப்பிடி வைத்தியம் ஆரம்பம்
[ நம் ஸ்ரீராமுக்கும் இந்த
வைத்தியம் செய்யப்பட்டது :) ]
என்னுடைய சிறுகதைத்தொகுப்பு நூல்
’எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...’
ஒவ்வொருவருக்கும் பரிசளித்தல்.
[ இது நம் ஸ்ரீராமுக்கும் உண்டு :) ]
சுரேஷ் பத்மநாபன் என்பவர் எழுதி
’க்ளிக்’ ரவி என்பரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள
கிழக்குப்பதிப்பக வெளியீடான
பணம்
பண்டைய ரகசியங்கள்
என்ற நூல் எங்கள் ப்ளாக் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.
நம் வீட்டுக்கு வரப்போவதாகச் சொன்னார்களே .....
அதனால் ஒருவேளை .....
சீர் லாடு
சீர் முறுக்கு
நெய் அதிரஸம்
மனோகரம்
முள்ளுத்தேன்குழல்
மைசூர்பாக்
போன்ற பக்ஷணங்களுடன்
வருவார்களோ என நான் பயந்தேன்.
ஆனால் அங்கு கல்யாணத்தில் அவர்களுக்கே பாயஸம்
சரியாக போதுமான அளவுக்குப் பரிமாறப்படவில்லை என்றும்
ரஸத்தினில் எந்தவிதமானதொரு ரஸமும் இல்லை என்றும்
http://engalblog.blogspot.in/ 2015/01/blog-post_28.html
மறுநாள் காலை டிபனும் சுவாரஸ்யமாக இல்லை என்றும்
http://engalblog.blogspot.in/ 2015/01/2.html
தங்கள் பதிவினில் புலம்பி எழுதியுள்ளார்கள் :)
ஏதோ மேலே சொன்ன
‘பணம்’ என்ற நூலாவது
நமக்குக் கிடைத்ததே
என நினைத்து நான் மகிழ்ந்தேன் !
பக்ஷணங்கள் என்றால்
உடனே சாப்பிட்டு மகிழலாம் !
ஆனால் இந்தப் ’பணம்’ என்ற நூலை
சற்று தாமதமாக, மெதுவாக
அசைபோட்டுத்தான் என்னால்
ஜீரணிக்க முடியும்.
பக்கத்தில் கொரிக்க பக்ஷணங்கள் ஏதும் இல்லாமல்
எதையுமே என்னால் படிக்கவும் இயலாது.
அப்படியே படித்தாலும் அது
என் மர மண்டையில் ஏறவே ஏறாது என்பது
எனக்கு மட்டுமே தெரிந்ததோர் இரகசியமாகும். :)
’எங்கள் ப்ளாக்’ தோழர்கள் என்னை சந்திக்க வருவதற்கு சற்று முன்பு, நம் அருமை நண்பர் ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்களை அவரின் வீட்டினில் சந்தித்து விட்டு, பிறகுதான் என் வீட்டுக்கு வந்துள்ளார்கள்.
ஆரண்யநிவாஸ் தோட்டத்தில் விளைந்த நெல்லிக்காய்களை ஒரு பையில் போட்டு இவர்கள் மூலம் அவர் அன்புடன் எனக்கு அனுப்பியுள்ளார்.
நெல்லிக்காய்கள் என்னிடம் வருவதற்கு முன்பே, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, கைபேசியில் எனக்கு இந்தத் தகவல் உருண்டோடி வந்துவிட்டது.
ஒளவையார், அதியமான் நெடுமான்அஞ்சிக்கு, அற்புதமான நெல்லிக்கனி கொடுத்தது போல, ’ஆரண்யநிவாஸ்’ அன்புடன் எனக்கு அனுப்பியுள்ள நெல்லிக்காய்கள் இதோ:
திரு. கே.ஜி. ஜவர்லால் அவர்களே, வணக்கம்.
தங்களின் சகோதரர் K.G.கெளதமன் அவர்களை இன்று நான் திருச்சியில் நேரில் சந்திக்க முடிந்ததால், தங்களின் ’பொய்யெனப் பெய்யும் மழை’ என்ற நகைச்சுவை விருந்தினை தினமலர் இதழில் படித்துச் சிரித்து மகிழ முடிந்தது. பாராட்டுக்கள் + வாழ்த்துகள். - அன்புடன் VGK 25.01.2015
-=-=-=-=-=-=-=-=-=-
சரி, இப்போது என் இல்லத்திற்கு வருகை தந்தவர்களைப் பற்றிச் சொல்கிறேன்.
1. நம் ஸ்ரீராம் அவர்கள்
இவர் தன் புகைப்படத்தினை பதிவினில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளதால் பொக்கிஷமாகத் தனியே வைத்துக்கொண்டு விட்டேன். இவர் என்னுடைய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
"(1) இவர் ஓர் மிகச்சிறந்த ஓவியர் [2] **இவர் 1978ல் வரைந்த மிகப்பெரியதோர் காமாக்ஷி அம்மன் ஓவியம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, பரிபூர்ண அனுக்கிரஹம் செய்யப்பட்டு, குண்டக்கல் அருகேயுள்ள ‘ஹகரி’ என்ற கிராமத்தில் புதிதாகக்கட்டப்பட்டு 1979ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஓர் கோயிலில் மாட்ட உத்தரவு இடப்பட்டது** [3] கைவேலைகளில் இவர் ஒரு நிபுணர்; யாருக்காவது திருமணத்திற்கு GIFT அல்லது மொய்ப்பணம் கொடுத்தாலும் அதில் ஓர் கலையுணர்ச்சியோடு அலங்கரித்துத் தருபவர் [4] சிறந்த சிறுகதை எழுத்தாளர்; மிகவும் நகைச்சுவையாகவும் எழுதுபவர் [5] மிகவும் ருசியான சாப்பாட்டுப் பிரியரும்கூட” என ஏதேதோ என்னைப்பற்றிப் புகழ்ந்து தன் தாய் மாமாக்களிடம் எடுத்துச் சொன்னார், ஸ்ரீராம் அவர்கள்.
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
** மேலும் அதிக விபரங்களுக்கு
நானும் என் அம்பாளும் - அதிசய நிகழ்வு
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
'எங்கள் ப்ளாக்’ தோழர்கள், நான் வரைந்த ஓவியங்களில் சிலவற்றைக் காட்டுமாறு வேண்டினர். ஸ்ரீ ஹனுமார் படத்தை மட்டும், வந்திருந்த அனைவரும் தங்களின் MOBILE PHONE களில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
2. திரு. K.G. கெளதமன் அவர்கள்
3. திரு. K.G. சுப்ரமணியன் அவர்கள்
4. திரு. K.G. யக்ஞராமன் அவர்கள்
இவர்கள் மூவரும் [ 2 to 4 above ] ஸ்ரீராம் அவர்களின் சொந்த ‘தாய் மாமன்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல SKC அளித்து, என் சிறுகதைத் தொகுப்பு நூலினை ஆளுக்கு ஒன்று வீதம் அளித்தேன்.
அவசரமாகச் சென்னை செல்ல வேண்டியுள்ளது என்றும், வெளியே காரில் மேலும் நான்கு பேர்கள் எங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லி 40 நிமிடங்களுக்குள் என் இல்லத்திலிருந்து கிளம்பி விட்டனர்.
அதற்குள் திரு. அப்பாத்துரை அவர்கள் ஏற்கனவே சொல்லியிருந்த என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் ( http://gopu1949.blogspot.in/
என் இல்லத்துக்கு அன்று வருகை தந்தவர்களில்
ஸ்ரீராம் தவிர மற்றவர்களின் புகைப்படங்கள்:-
திரு. K.G. யக்ஞராமன் அவர்கள்
கட்டிப்பிடி வைத்தியம் ஆரம்பம்
[ நம் ஸ்ரீராமுக்கும் இந்த
வைத்தியம் செய்யப்பட்டது :) ]
’எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...’
ஒவ்வொருவருக்கும் பரிசளித்தல்.
[ இது நம் ஸ்ரீராமுக்கும் உண்டு :) ]
சுரேஷ் பத்மநாபன் என்பவர் எழுதி
’க்ளிக்’ ரவி என்பரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள
கிழக்குப்பதிப்பக வெளியீடான
பணம்
பண்டைய ரகசியங்கள்
என்ற நூல் எங்கள் ப்ளாக் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் ஏதோ நெருங்கிய உறவினரின்
கல்யாணத்திற்குப் போய்விட்டு நம் வீட்டுக்கு வரப்போவதாகச் சொன்னார்களே .....
அதனால் ஒருவேளை .....
சீர் லாடு
சீர் முறுக்கு
நெய் அதிரஸம்
மனோகரம்
மைசூர்பாக்
போன்ற பக்ஷணங்களுடன்
வருவார்களோ என நான் பயந்தேன்.
ஆனால் அங்கு கல்யாணத்தில் அவர்களுக்கே பாயஸம்
சரியாக போதுமான அளவுக்குப் பரிமாறப்படவில்லை என்றும்
ரஸத்தினில் எந்தவிதமானதொரு ரஸமும் இல்லை என்றும்
http://engalblog.blogspot.in/
மறுநாள் காலை டிபனும் சுவாரஸ்யமாக இல்லை என்றும்
http://engalblog.blogspot.in/
தங்கள் பதிவினில் புலம்பி எழுதியுள்ளார்கள் :)
ஏதோ மேலே சொன்ன
‘பணம்’ என்ற நூலாவது
நமக்குக் கிடைத்ததே
என நினைத்து நான் மகிழ்ந்தேன் !
பக்ஷணங்கள் என்றால்
உடனே சாப்பிட்டு மகிழலாம் !
ஆனால் இந்தப் ’பணம்’ என்ற நூலை
சற்று தாமதமாக, மெதுவாக
அசைபோட்டுத்தான் என்னால்
ஜீரணிக்க முடியும்.
பக்கத்தில் கொரிக்க பக்ஷணங்கள் ஏதும் இல்லாமல்
எதையுமே என்னால் படிக்கவும் இயலாது.
அப்படியே படித்தாலும் அது
என் மர மண்டையில் ஏறவே ஏறாது என்பது
எனக்கு மட்டுமே தெரிந்ததோர் இரகசியமாகும். :)
ஆரண்யநிவாஸ் தோட்டத்தில் விளைந்த நெல்லிக்காய்களை ஒரு பையில் போட்டு இவர்கள் மூலம் அவர் அன்புடன் எனக்கு அனுப்பியுள்ளார்.
நெல்லிக்காய்கள் என்னிடம் வருவதற்கு முன்பே, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, கைபேசியில் எனக்கு இந்தத் தகவல் உருண்டோடி வந்துவிட்டது.
ஒளவையார், அதியமான் நெடுமான்அஞ்சிக்கு, அற்புதமான நெல்லிக்கனி கொடுத்தது போல, ’ஆரண்யநிவாஸ்’ அன்புடன் எனக்கு அனுப்பியுள்ள நெல்லிக்காய்கள் இதோ:
[அஞ்சியபடியே நானும் அதனை வாங்கிக்கொண்டேன்]
அன்புடன் நெல்லிக்காய்கள் அனுப்பியதற்கு
மிக்க நன்றி Mr. ராமமூர்த்தி Sir.
அதுவும் அவற்றை ஒரு அழகான
ஜிப் வைத்த. புத்தம்புதிய முஹூர்த்தத் தாம்பூலப்பையில்
போட்டு அனுப்பியுள்ளதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
12.06.2013 அன்று நடைபெற்றதங்களின் அன்பு மகளின் திருமணமும்
என் நினைவுக்கு வந்து மகிழ்வித்தது.
12.06.2013 அன்று நடைபெற்றதங்களின் அன்பு மகளின் திருமணமும்
என் நினைவுக்கு வந்து மகிழ்வித்தது.
நான் அஞ்சியதற்குக் காரணம் .... அவற்றை வீணாக்கி விடாமல், பக்குவமாக வேக வைத்து உப்பு + காரம் சேர்த்து FRESH ஆக ஊறுகாய் போட, வீட்டில் உள்ள பெண்மணிகள் உடனடியாக அவசர அவசிய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமே என்ற கவலையினால் தான்.
ஆனால் என் மருமகள், அதில் சரிபாதியை நன்கு அலம்பி, கத்தியால் பொறுமையாகச் சீவி, விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து, உடனடியாக மிகவும் சுறுசுறுப்பாக, காரசாரமான நெல்லிக்காய் தொக்கு செய்து விட்டாள். எனக்கே ஆச்சர்யமாகப் போய் விட்டது !
[என் மருமகள் செய்த நெல்லிக்காய்த் தொக்கு]
புளிப்பாகவும், காரமாகவும், சுவையாகவும், சூப்பராகவும் உள்ளது. இந்த நெல்லிக்காய்த் தொக்கினை அப்படியே சூடான சாதத்தில் பிசைந்து, கொஞ்சமாக எண்ணெய் விட்டு சாப்பிடவும் படா ஜோராகவே உள்ளது.
தொக்கு தீரும் வரை
உம்மை நான்
மறக்கவே மாட்டேன் !
மறக்கவே மாட்டேன் !
[ஒரு பத்து நாட்களுக்குள் எப்படியும் தீர்ந்துவிடும்]
நான் உம்மை மறப்பதற்குள்,
அடுத்த லாட் வேறு ஏதாவது உம்மிடமிருந்து
வராமலாப் போய் விடும் என்ற சபலமும்
ஒரு பக்கம் உள்ளது ஸ்வாமி!
:) ஆரண்ய நிவாஸ் வாழ்க ! :)
அடுத்த லாட் வேறு ஏதாவது உம்மிடமிருந்து
வராமலாப் போய் விடும் என்ற சபலமும்
ஒரு பக்கம் உள்ளது ஸ்வாமி!
:) ஆரண்ய நிவாஸ் வாழ்க ! :)