என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 1 ஜனவரி, 2015

எங்கள் பயணம் [துபாய்-16]

அனைவருக்கும் 
 இனிய 
ஆங்கிலப் 
புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்.
2 0 1 5

 


துபாயில் உள்ள மிகப்பெரிய பூந்தோட்டத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் ஏற்கனவே ’இன்பச் சுற்றுலா இனிதே நிறைவடைந்தது’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html அதில் இடம்பெறாத ஒருசில படங்கள் இதோ தங்களின் பார்வைக்காக:


Visited this Very Beautiful Place 
on 06.12.2014 
Dubai Time:
 12.30 PM to 3.30 PM

 தாயும் தலைச்சன் பிள்ளையும் 
 மதியம் 1 மணி நல்ல வெயில்
{மேலே உள்ள பூவினாலான 
கெடிகாரத்தைப்பாருங்கோ }
மேலே பூப்பந்தல் - கீழே சிற்றுண்டி சாலை
கீழேயுள்ள நம் தலையில் விழாதபடி ....
நிறைய பூந்தொட்டிகள் - மேலே பூப்பந்தலாக ...

 "பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழகு !"
For further Details Please Refer : 
http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html

அவள் மூக்குக்கும் வாய்க்கும் இடையே 
வலது பக்கமாக ஓர் மச்சம் உள்ளது.
அது நல்ல அதிர்ஷ்ட மச்சமாக்கும் ! 
[உங்களில் அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது தென்படும் ! :) ]இப்போ தெரியுதா அவளின் அந்த அதிர்ஷ்ட மச்சம் ?
வெட்கத்தில் தலை கவிழ்ந்த பூக்களோ !
பூப்பூவாய்ப் பறந்துபோகாமல் 
அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள்.


பூப்போன்ற மனம் கொண்ட மணம் வீசும் மகன்

 புதிதாகப் பூப்பெய்தியுள்ள 
மிக  நீண்ண்ண்ண்ண்ண்ட கார் ! ;)
ஆத்துல வந்துச்சு ..... மணலிலே சொருகிச்சு ..... என்பார்கள்.
 கார்களுக்கும் அது துபாயில் பொருந்துமோ !
  
  மகனுடனும், மயில்களுடனும் ,
மகிழ்ச்சியுடனும் மகராஜி ! 
மிகப்பெரிய கதவுக்கிடுக்கில் 
மிகப் பொடியனாக அடியேன் !


இருவருக்கும் இடையே தோகை விரித்ததோர் மயில்
 
மேலும் சில படங்களுக்கு

oooooOooooo

WISHING YOU ALL  
A VERY VERY 
HAPPY NEW YEAR 2015 !


பயணம் தொடரும்39 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப சூப்பராக இருக்கு, இப்ப துபாயிலா இருக்கீறீர்கள்

  பதிலளிநீக்கு
 3. Jaleela Kamal January 1, 2015 at 1:03 AM

  வாங்கோ மேடம். வணக்கம். நலமா ?

  //ரொம்ப சூப்பராக இருக்கு,//

  மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி மேடம்.

  //இப்ப துபாயிலா இருக்கிறீர்கள்?//

  இல்லை மேடம். திருச்சிக்குத் திரும்பி விட்டேன். 15.11.2014 முதல் 13.12.2014 வரை சுமார் ஒரு மாதம் துபாய் போய் இருந்தேன்.

  டிஸம்பர் மாதம் வெளியிட்டுள்ள இதற்கு முந்திய பகுதி-1 முதல் பகுதி-15 வரை நேரம் கிடைக்கும்போது பாருங்கோ. பெரும்பாலும் படங்களாகவே இருக்கும்.

  முதல் பகுதிக்கான இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் !

  கண்கொள்ளாக் காட்சி ! இந்த இடங்களை நேரில் சென்று பார்க்க
  வேண்டும் என்று ஆவலாக உள்ளதே வாய்ப்புக் கிடைத்தால் ஓடி
  வந்து பார்ப்பேன் அம்மாவுக்கும் மகனுக்கும் வாழ்வில் மறக்கவே
  மறக்க முடியாத தருணங்களாக இவை அமைந்திருக்கும் என்றே
  எண்ணுகின்றேன் .தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி வரவிற்கும்
  தங்களின் வாழ்த்திற்கும் .

  பதிலளிநீக்கு
 5. பாலைவனத்தில் மலர்ச்சோலை. மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்று சும்மாவா சொன்னார்க்ள முன்னோர். படங்கள் நன்றாக இருக்கின்றன.

  புது வருட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் அண்ணா... தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
  வண்ணத்து பூச்சியில் இருக்கும் இருவரின் படமும் மிக நன்றாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ஐயா
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. ஆஹா! படங்கள் ;அருமை! மனதைக் கொள்ளைக் கொள்ளுகின்ரன பூக்களும் அதன் வடிவங்களும்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 11. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 12. ஆஹா
  அருமை
  மிக அருமை
  நேரில் செல்லும் வாய்ப்பு கிடைக்காது.
  ஆனால் நேரில் பரததிபோன்ற உணர்வை உங்கள் பதிவு அற்படிதிவிட்டது.
  புத்தாண்டு வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
 13. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 14. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், கோபு ஸார்!

  பதிலளிநீக்கு
 16. அழகிய பூங்கா.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 17. இனிய இன்பம் தரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா!
  நன்றியுடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 18. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 19. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கோபு அண்ணா

  உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

  //"பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழகு !"//

  ம். அதைவிட உங்க பக்கத்துல நிக்கற அந்த நீலப் புடைவைக்காரி அழகோ அழகு.

  பறக்கத்தயாராய் இருக்கும் ரெண்டு பட்டாம்பூச்சிகளும் சூப்பர். புகைப்படங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர். எப்பவாவது பொழுது போகலைன்னா உங்க துபாய் சுற்றுலாப் பதிவுகளில் வலம் வந்தால் போதும்.


  //மகனுடனும், மயில்களுடனும் ,
  மகிழ்ச்சியுடனும் மகராஜி ! //

  மகராஜனுக்கேத்த மகராஜி.

  மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.

  ஒரு பெரிய பூசணிக்காய் வாங்கி உங்களுக்கும், மன்னிக்கும் யாரையாவது விட்டு சுத்திப் போடச் சொல்லுங்கள்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 20. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 21. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  வாவ்....அருமையான இடம்....அழகான புகைப் படங்கள்....அற்புதம் சார்! இப்பவே துபாய்க்குப் போகலாம்போல ஆசையா இருக்கு...சூ......ப்பர்!!

  பதிலளிநீக்கு
 22. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 23. நான் இன்றுதான் உங்கள் ப்ளாகிற்கு வந்தேன். உங்கள் குடும்பத்தார்
  அனைவருடன் உங்களுக்கும் வாழ்த்துகள். ஆசிகளும். தம்பதி ஸமேதரான படங்கள்,மகனுடனான படங்கள்,பூங்கா, யாவும் பார்க்க மிக்க அருமையாகவும்,பெருமையாகவும் இருக்கிறதெனக்கு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 24. பதில்கள்
  1. thirumathi bs sridhar January 3, 2015 at 1:10 PM

   ஆஹா, ஆச்சி, வாங்கோ, வணக்கம்.

   //anaithum kankalukku niraivaana padangal அனைத்தும் கண்களுக்கு நிறைவான படங்கள் //

   இன்றுதான் முதன் முதலாக நீங்க இந்தப்படங்களைப் பார்க்கிறீர்கள் போலிருக்கிறது. :) மிக்க மகிழ்ச்சி. ஆச்சியின் அபூர்வமான வருகைக்கு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 25. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கோபு சார். அத்தனைப் படங்களும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல அவ்வளவு அழகு. பூக்காரி அழகுதான். அதைவிட அழகு தாங்களும் துணைவியாரும் உள்ள படங்கள். பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து அழகு மயிலாய் தோகை விரித்து மகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிறைவு தங்களிருவரின் முகங்களிலும் தெரிகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
 26. நான் படிக்காமல் பார்க்காமல் விட்டுப் போன பதிவுகளையும், நான் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பிய தாங்கள் பயன்படுத்தும் கேமராவைப் பற்றியும் மின்னஞ்சல் வழியே தெரியப் படுத்திய தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. அருமையான பதிவுக்கும், படங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 28. பூக்காடுகள் அழகோ அழகு. ஆமா உங்காத்து மாமி பக்கத்தில் இருக்கும் போதே பூக்களை விட பூக்காரி அழகுன்னு ஜொள்ளு விடறீங்களே ஓ ஓ மாமிய பாத்துதான் சொன்னீங்களோ அப்பன்னா ஓ கே:)))

  பதிலளிநீக்கு
 29. இந்த பதிவுக்கு கொஞ்சம் காமெடி கலந்து பின்னூட்டம் போட்டேன். உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைலாம்னு அந்த கமெண்ட போகவே இல்ல.. மொபைல்ல ஸேவ் பண்ற வசதிலாம் இல்ல.

  பதிலளிநீக்கு
 30. புத்தாண்டில் புதிதாய் பூத்த மலர்களாய் அருமையான படங்கள்..வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:15 PM

   வாங்கோ ... வணக்கம்.

   //புத்தாண்டில் புதிதாய் பூத்த மலர்களாய் அருமையான படங்கள்..வாழ்த்துகள்...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 31. பூக்கள் பூத்த நந்தவன்மோ? பட்டர்ப்லை சேரு பல வித மயிலு பொரவால (மயிலு களுத்து கலர் சேலை கட்டிருக்கும்) திருமதி குருஜி& எங்கட குருஜி அல்லாமே சூப்பருங்கோ. உங்கட மொகம் பூராவும் சந்தோசம் தெரியுதுங்கோ. அது கண்டுகிட்டு எனக்கும் சந்தோசமாகீது.

  பதிலளிநீக்கு
 32. லைஃபை சூப்பரா என்ஜாய் பண்றீங்க. அகத்தின் அழகு முகத்தில் நனறாகவே தெரிக்றது.

  பதிலளிநீக்கு
 33. // "பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழகு !"// சரிதான். மச்சக்கன்னியோ...நல்லாத்தான் கண்டுபுடிக்கிறீங்க லொக்கேஷன். உணவகம்...பாலைவனத்தில் ஒரு வண்ணப்பூஞ்சோலை..அருகே சிறகடிக்கும் இளம்-வண்ணத்துப்பூச்சிகளாய் நீங்கள்..அருமை..

  பதிலளிநீக்கு
 34. //பறந்து போகாத பட்டாம்பூச்சிகள் கொள்ளை அழகு!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு