என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 17 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-3 of 16 [7-10]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 







  




திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்




திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள்தான் தனக்கு வந்த வாய்ப்பை இப்போதுதான் நடக்க கற்ற குழந்தையின் நடை அழகைப் பாராட்டி ஒலிம்பிக்கில் ஓடவிட “பரிந்துரை” செய்தவர்.


  


சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று தன்னை சொல்லிக் கொள்வதிலிருந்தே சாதனையாளர் என்று உறுதிப்படுத்தலாம். தெளிந்தநடையும், அளவற்ற அனுபவ அறிவும் வாய்ந்தவர்.

கல்கி பத்திரிகை நடத்திய 12 வார தொடர் போட்டியொன்றில், தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு, இறுதியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறார். http://gopu1949.blogspot.in/2011/04/6_17.html 





சென்னையிலிருந்து வெளிவரும் “நம் உரத்த சிந்தனை”  என்னும் தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு, இவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ”எங்கெங்கும்... எப்போதும்...  என்னோடு...” என்ற சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு 15/05/2011 அன்று சென்னையில் நடந்த விழாவில், முதல் பரிசினை பெற்றிருக்கிறார்.. http://gopu1949.blogspot.in/2011/07/4.html



 

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ....

http://jaghamani.blogspot.com/ என்ற வலைத்தளத்தினில் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 1510 பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்கள். 

சமீபத்தில் என் வலைத்தளத்தினில் நடத்தப்பட்ட VGK's சிறுகதை விமர்சனப்போட்டிகள் - 2014 இல் அதிகபட்ச எண்ணிக்கையில் ஹாட்-ட்ரிக் பரிசுகள் வாங்கி முதலிடம் பிடித்துள்ளார்கள். http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html . 

போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்கள். http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

நான் இதுவரை வெளியிட்டுள்ள 703 பதிவுகளில் முதல் 683 பதிவுகளுக்கு [1 to 678 and  680-684] தொடர்ச்சியாக இவர்கள் பல பின்னூட்டங்கள் கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடல்நலக்குறைவினால் கடந்த சில [சுமார் 20] பதிவுகளுக்கு மட்டும் இவர்களால் வருகைதர இயலாமல் உள்ளது. இவர்கள் விரைவில் பூரண குணமடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக !


   


 


திரு RVS அவர்கள்

பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் எழுத்துப் பணியை விடாமல் செவ்வனே செய்து வருபவர் வை. கோபாலகிருஷ்ணன். வையகம் புகழ கதைகள் எழுதுகிறார். எவ்வளவு பார்ட் வரும் என 1 of 4  என்று தலைப்பில் போட்டு எழுதும் யதார்த்த கதைக்காரர். இவரது எழுத்துக்கள் சில கல்கியில் வெளிவந்துள்ளன.

 

 


  

திரு. மோஹன்ஜி அவர்கள்


வை.கோபாலகிருஷ்ணன்: இவர் ஒரு எழுத்து ஃபாக்டரி வைத்திருக்கும் இளைஞர். பழைய நிகழ்வுகளை அசைபோடும் அழகே தனி. பாருங்கள்.


  




 

திரு. ரமணி அவர்கள்

1.வை கோபாலகிருஷ்ணன் http://gopu1949.blogspot.com/
நாம் அன்றாடம் சந்திக்கின்ற சிறு சிறு நிகழ்வுகள்
மிகச் சாதாரண மனிதர்கள் இவரது கண்களில் பட
அது கதையாகி ஒருகாவியமாகிப் போவது ஆச்சரியம்தான்.
மிக மிக எளிமையான சொற்களைக் கொண்டே
அவர் படைக்கும் கதைகள் படிப்பவர் மனதில்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்திப்போவது அவரின்
எழுத்துத் திறமைக்கு அத்தாட்சி. உதாரணத்திற்கு 
இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் புரியும் 

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:


 

’உடம்பெல்லாம் உப்புச்சீடை’

 





தொடரும்
இவர்கள் அனைவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள்.

 


நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் ஐவர்:



1) திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்கள்


2) திருமதி. மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்


3) திருமதி. ஆச்சி [thirumathi bs sridhar] அவர்கள்


4)  திரு. மகேந்திரன் அவர்கள்


and


5] மாய உலகம் திரு. ராஜேஷ் அவர்கள்




என்றும் அன்புடன் தங்கள்

[வை.கோபாலகிருஷ்ணன்]


18 கருத்துகள்:

  1. இராஜராஜேஸ்வரி அம்மா விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. கோபு அண்ணா

    உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசம் உலகெங்கும் வீசிக் கொண்டிருக்கிறது.

    ஒரு பெரிய விஷயத்தை சாதாரணமாக ஒரு சிறுகதையில் கொடுத்து விடுகிறீர்கள். அதைவிட HIGHLIGHT அதன் தலைப்பு.

    வாழ்த்துவதையும், வணங்குவதையும் தவிர வேறென்றும் சொல்லத் தெரியவில்லை.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  3. ராஜராஜேஸ்வரி அவர்கள் உடல்நலம் தேறி மீண்டும் பதிவுலகுக்கு வரப் பிரார்த்தனைகள். இன்று அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வலைச்சரத்தில் அறிமுகம் செய்தவர்களை அறிமுகம் செய்து சிறப்பிப்பது புதிய பதிவர்கள் பலர் அவர்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பை தருவதோடு உங்கள் மற்றும் அவர்களின் பழைய பதிவுகளை வாசிக்கவும் உதவும். சிரமப்பட்டு தொகுத்து சிறப்பாக வெளியிடும் உங்களின் செயல் பாராட்டுக்குரியது! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. பல வலைப்பதிவு எழுத்தாளர்களுக்கு நீங்கள் ஒரு முன்னோடி என்பது, உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர்களின் எழுத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. தொடர்கின்றேன்.

    மீண்டும் இன்று காலை உங்கள் தொடர் வந்தவுடன், உங்களை மீண்டும் இந்த வலையுலகில் சந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வை.கோ

    அருமையான சிந்தனை. தன்னை அறிமுகப் படுத்திய நண்பர்களை அறிமுகப் படுத்தும் அருமையான செயல் பாராட்டுக்குரியது.

    நல்வாழ்த்துகள்
    நட்[புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. aha nanbarkalai eppadi arimuga paduthi ullerkal. valga valamudan.
    viji

    பதிலளிநீக்கு
  8. அருமையான தொகுப்பு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அழகான அறிமுகங்கள் அளித்த பதிவர்களைப் பாராட்டுவதா? அவற்றை நேர்த்தியாகத் தொகுத்தளிக்கும் தங்களைப் பாராட்டுவதா? புரியவில்லை. அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான தொகுப்பு. இதுபோலல்லாம் யோசித்து செயல்படவும் தனி திறமை வேணும். அந்த திறமை தங்களிடம்தான் நிறயவே இருக்கே.

    பதிலளிநீக்கு
  11. பெருமைமிகு அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:39 PM

      //பெருமைமிகு அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..//

      வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  12. இங்கன இன்னா சொல்லுதுன்னு வெளங்கல. குஞ்சி குளுவாங்க வண்டி தள்ளிகிட்டு வார படம் செமயா இருக்குது.

    பதிலளிநீக்கு
  13. உங்களால் இங்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல இடுகைகள். திரு ரமணி அவர்களின் அறிமுகம் எனக்கு பிடித்தது.

    பதிலளிநீக்கு