இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்கள்.
அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்யத்துடனும் திகழ்ந்து, மிகவும் நல்லதொரு ஆட்சி தருவார் என்ற பரிபூரண நம்பிக்கையுடன், அவரை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம்.
26.05.2014 அன்று மோடி
முதன்முறை பிரதமராக பதவி ஏற்ற போது
அது பற்றிய செய்தியினை அடியேன், சற்றே
வித்யாசமாக என் பதிவினில் எழுதியிருந்தேன்.
இதோ அதற்கான இணைப்பு:
செந்தேன் நிலவே ... !
நம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக ‘தாமரை’ச்சின்னம் முழு மெஜாரிடி பலம் பொருந்திய தனிக்கட்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று 26.05.2014 திங்கட்கிழமை ஆட்சியைக் கைப்பற்றி, கோலாகலமான பதவி ஏற்பு விழா நடத்தி உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.
அதே நல்ல நாளில் இங்கு அதே ‘தாமரை’ச்சின்னம் வலையுலக வரலாற்றிலும் ஓர் மிகப்பெரிய சாதனை செய்து, இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் ’ஹாட்-ட்ரிக்’ பரிசின் உச்சக்கட்ட அளவினைப் பிடித்து வலையுலக பதிவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.
இவ்விரு நிகழ்ச்சிகளின் அபூர்வமானதொரு ஒற்றுமையை நினைத்தாலே இனிக்கிறது அல்லவா !
WHAT A VERY GREAT CO-INCIDENT !!!!!! ;))))))
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.