”பொக்கிஷம்”
தொடர்பதிவு
By
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம்.
என் தாயார் உள்பட எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஆறு நபர்கள். என் ஒருவனின் வருமானம் மட்டுமே. வேறு ஏதும் சொத்தோ சுகமோ கிடையாது. அலுவலகத்திலோ, வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.
எனது அலுவலக நண்பர் ஒருவர், திரு. B. ராமகிருஷ்ணன் என்று பெயர். ஸ்ரீராம் சிட்ஸ் இல் ஓர் சீட்டு சேருமாறு என்னை மிகவும் நிர்பந்தப்படுத்தினார். அவர் தன் மனைவி பெயரில் ஸ்ரீராம் சிட் ஃபண்டில் ஏஜண்ட் ஆக செயல்பட்டு வந்தார்.
அப்போது ஸ்ரீராம் சிட்ஸ் கம்பெனி திருச்சியில் கிடையாது. சென்னையில் இருந்தது. மாதம் ரூ. 250 வீதம் 40 மாதங்கள் = ரூ. 10000/- என்ற சீட்டில் என்னை சேர்த்து விட்டார். ஏலச்சீட்டில் தள்ளுபடி போக, மாதம் சுமார் ரூ 180 முதல் 220 வரை மட்டும் கட்டும்படியாக இருக்கும்.
நவராத்திரி சமயத்தில் சேர்த்து விட்டதால் சுமார் 50 கிராம் எடையுள்ள ஒருபுறம் மட்டும் பிள்ளையார் படமும், மறுபுறம் ஸ்ரீராம் சிட்ஸ் சின்னமும் பொறித்த வெள்ளிக்காசு ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதோ இங்கே. மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஒவ்வொரு மாதமும் அந்த ஏஜண்ட் என்னிடம் வந்து பணத்தை வசூல் செய்து போவார். என்னைப்போல பலரிடமும் மொத்தமாக வசூல் ஆகும் தொகையை சென்னைக்கு ஒரே DD யாக வாங்கி அனுப்பிவிடுவார்.
ஒவ்வொரு மாதமும் ஏலம் கேட்கலாமா? ஏலச்சீட்டை தள்ளி எடுக்கலாமா? குடும்பத்தில் ஏதாவது அவசர செலவுகள் இருக்கிறதா? என என்னைக்கேட்பார்.
சும்மா இல்லாமல் நான், ஏழாவது மாதத்தில் ஏலம் கேட்கச்சொல்லி சொன்னேன். ரூ. 3000 தள்ளி ரூ. 7000 கிடைத்தால் எடுத்துக்கொள்வதாக சம்மதக்கடிதம் எழுதி அவரிடம் கொடுத்து விட்டேன்.
அதுபோலவே ஏலம் கேட்ட பலநபர்களில், குலுக்கல் முறையில் என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், ரூ 7000 சீட்டுப்பணத்தை வாங்கிக்கொள்ள, ஏற்கனவே இதுபோல சீட்டுக்கட்டி வரும், இரண்டு தனி நபர் ஜாமீன் வேண்டும் எனவும் எனக்கு சென்னை ஸ்ரீராம் சிட்ஸ்லிருந்து கடிதம் வந்தது.
எனக்கு அந்த நேரத்தில் அந்தப்பணம் தேவைப்படாததாலும், இரண்டு தனி நபர் ஜாமீனுக்கு யாரிடமும் போய்க்கேட்க எனக்கு விருப்பம் இல்லாததாலும், நான் என்னசெய்வது என்று யோசித்து ஓர் முடிவுக்கு வந்தேன்.
அதாவது அவர்களிடமே, ஸ்ரீராம் சிட்ஸ் சென்னையிலேயே [ஸ்ரீராம் மோட்டார் ஃபைனான்ஸ் கம்பெனியில்] அந்தப்பணத்தை மூன்று வருடங்களுக்கு டெபாஸிட் செய்துகொள்வதாகச் சொல்லி அதற்கான மனுவை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தேன்.
மனுவைப்பூர்த்தி செய்து அனுப்பும்போது, ஏற்கனவே அவர்கள் எனக்குக் கொடுத்த 50 கிராம் வெள்ளிக்காசுகள் போல மேலும் மூன்று காசுகளாவது, இந்த என் புதிய டெபாஸிட் தொகைக்காக அனுப்பி வைக்கும்படி, ஓர் கோரிக்கைக்கடிதமும் வைத்து அனுப்பினேன்.
என் கோரிக்கை உடனே அவர்களால் ஏற்கப்பட்டது. FIXED DEPOSIT RECEIPT FOR RS. 7000 உடன் மூன்று 50 கிராம் வெள்ளிக்காசுகளும் REGISTERED POST மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரு வெள்ளிக்காசில்
தாமரைமலரில்
நிற்கும் ஸ்ரீ கெஜலக்ஷ்மி.
இரண்டாவது வெள்ளிக்காசில்
ஸ்ரீ வெங்கடாசலபதி .
மூன்றாவது வெள்ளிக்காசில்
ஸ்ரீ கோதண்டராமர்
ஸீதை + லக்ஷ்மணன் + ஹனுமனுடன்.
ஒரே கல்லில்
ஒன்றல்ல இரண்டல்ல மூன்றுல்ல
நான்கு மாங்காய்கள் போல
அதுவும் ஒரே ஒரு ஏலச்சீட்டில் -
நான்கு வெள்ளிக்காசுகள்
கிடைக்கப்பெற்றேன்.
அன்று முதல் இன்று வரை என் பணப்பெட்டியில் இந்த வெள்ளிக்காசுகள் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை என்னிடம் வந்தது முதல் இன்று வரை எனக்குப் பணப் பஞ்சம் என்பதே ஏற்பட்டது இல்லை.
நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.
அப்போது நான் 40 மாதங்களிலும் சேர்த்து கட்டிய மொத்தத்தொகை ரூ. 8500 க்கு மேல் இல்லை. ரூபாய் ஏழாயிரத்தை ஏலச்சீட்டில் ஏழாவது மாதம் எடுத்து அதை அவர்களிடமே டெபாஸிட் செய்ததில் மூன்றாண்டுகள் கழித்து கிடைத்த மொத்தத்தொகை ரூ 10570/-.
இந்த சிறுசேமிப்பில் நான் முதன் முதலாகச் சேர்ந்ததினால், 40 மாதங்களில் எனக்குக் கிடைத்த நிகர லாபம் ரூ.2070 + நான்கு வெள்ளிக்காசுகள்.
இந்த சிறுசேமிப்பில் நான் முதன் முதலாகச் சேர்ந்ததினால், 40 மாதங்களில் எனக்குக் கிடைத்த நிகர லாபம் ரூ.2070 + நான்கு வெள்ளிக்காசுகள்.
அப்போதெல்லாம் இப்போது போல யாருக்கும் கைநிறைய சம்பளம் தரப்படவில்லை.
மூன்றாண்டுகள் கழித்து சுளையாக பத்தாயிரம் ரூபாயை என் கண்களால் நான் பார்க்க, 40 மாதங்கள் சிறுகச்சிறுக சீட்டுக்கட்டியுள்ளேன் என்பதை இன்று நினைத்தாலும் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.
அந்த நான் சேர்ந்த புதிய சீட்டுக்களுக்கெல்லாம் அவ்வப்போது ஏதேதோ பரிசுப்பொருட்கள் எனக்கு அளித்தார்கள்.
இருந்தாலும் முதன் முதலாக நான் கஷ்டப்பட்டுச் சேர்ந்த மிகச்சிறிய Rs. 250 x 40 Months = Rs. 10000 என்ற சீட்டின் மூலம் நான்கு வெள்ளிக்காசுகள் கிடைத்தது தான் சந்தோஷமான நினைவலைகளாக இன்றும் உள்ளது.
அந்த நான்கு வெள்ளிக்காசுகளும் இன்றும் என்னிடம் பொக்கிஷங்க்ளாகவே உள்ளன.
மூன்றாண்டுகள் கழித்து சுளையாக பத்தாயிரம் ரூபாயை என் கண்களால் நான் பார்க்க, 40 மாதங்கள் சிறுகச்சிறுக சீட்டுக்கட்டியுள்ளேன் என்பதை இன்று நினைத்தாலும் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.
அதன் பிறகு திருச்சியிலேயே ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டது. பிறகு பல ஏலச்சீட்டுகளில் நானும் சேர்ந்துள்ளேன். லட்ச ரூபாய் சீட்டுக்களிலெல்லாம் கூட துணிந்து சேர்ந்துள்ளேன்.
இருந்தாலும் முதன் முதலாக நான் கஷ்டப்பட்டுச் சேர்ந்த மிகச்சிறிய Rs. 250 x 40 Months = Rs. 10000 என்ற சீட்டின் மூலம் நான்கு வெள்ளிக்காசுகள் கிடைத்தது தான் சந்தோஷமான நினைவலைகளாக இன்றும் உள்ளது.
அந்த நான்கு வெள்ளிக்காசுகளும் இன்றும் என்னிடம் பொக்கிஷங்க்ளாகவே உள்ளன.
தொடரும்
இந்த ’பொக்கிஷம்’ பதிவின் தொடர்ச்சி
05.04.2013 வெள்ளிக்கிழமையன்று
வெளியிடப்படும்.
மாதா, பிதா, குரு, தெய்வம்
என்று சொல்வார்கள் அல்லவா!
இனிவரும் என் பொக்கிஷப்பதிவுகளில்
அவர்களும் ஆங்காங்கே வரக்கூடும்.
oooooOooooo
நாம் இன்று மறந்துபோன
ஒருசில நாணயங்கள்
இதோ இங்கே!
[உங்கள் ஞாபகத்திற்காக]
1 பைசா [2 வடிவங்களில்]
2 பைசா [2 வடிவக்களில்]
3 பைசா,
5 பைசா,
10 பைசா [3 வடிவங்களில்]
20 பைசா [தாமரைப்பூ போட்டது]
1/4 ரூபாய் [25 பைசாவுக்கு சமமானது]
1/2 ரூபாய் [50 பைசாவுக்கு சமமானது]
நடுவில் உள்ளது தான் ஓட்டைக்காலணா
சமீபத்தில் நம்மிடையே புழக்கத்தில் இருந்த 25 பைசா
-oOo-
அடுத்து பலியாகத்
தயாராகக் காத்திருக்கும்
[இன்று நம்மிடைய புழக்கத்தில் உள்ள]
50 பைசா நாணயங்கள் இதோ:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
வெளியிடப்படும்.
மாதா, பிதா, குரு, தெய்வம்
என்று சொல்வார்கள் அல்லவா!
இனிவரும் என் பொக்கிஷப்பதிவுகளில்
அவர்களும் ஆங்காங்கே வரக்கூடும்.
oooooOooooo
நாம் இன்று மறந்துபோன
ஒருசில நாணயங்கள்
இதோ இங்கே!
[உங்கள் ஞாபகத்திற்காக]
1960 இல் வெளியிட்டுள்ள
ஒரு நயா பைசா
1 பைசா [2 வடிவங்களில்]
2 பைசா [2 வடிவக்களில்]
3 பைசா,
5 பைசா,
10 பைசா [3 வடிவங்களில்]
20 பைசா [தாமரைப்பூ போட்டது]
1/4 ரூபாய் [25 பைசாவுக்கு சமமானது]
1/2 ரூபாய் [50 பைசாவுக்கு சமமானது]
நடுவில் உள்ளது தான் ஓட்டைக்காலணா
1/2 ரூபாய் நாணயம்
[அதாவது 50 பைசாவுக்குச் சமமானது]
தாமரைப்பூ போட்ட 20 பைசா,
கெட்டியான நெளிநெளியான 10 பைசா
3 பைசா, 2 பைசா, 1 பைசாசமீபத்தில் நம்மிடையே புழக்கத்தில் இருந்த 25 பைசா
-oOo-
அடுத்து பலியாகத்
தயாராகக் காத்திருக்கும்
[இன்று நம்மிடைய புழக்கத்தில் உள்ள]
50 பைசா நாணயங்கள் இதோ:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்