ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்
நாடகம் [பகுதி-18]
{ நிறைவுப்பகுதி }
{ நிறைவுப்பகுதி }
By வை. கோபாலகிருஷ்ணன்
காட்சி-23
[சங்கரரின் அழகான சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த பட்டுவும் கிட்டுவும் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்]
பட்டு:
இது போல மிக இனிமையாகவும், மிகச் சுலபமாகப் புரியும்படியும் யாரால் உவமானங்கள் சொல்ல் முடியும்?
கிட்டு:
ஆம். நம் சங்கரரால் மட்டுமே இதுபோல அழகாகப் பேச முடியும்.
ஆமாம். அதிருக்கட்டும்.
நம் சங்கரர், தான் மட்டும் ஏதோ ஹிமாசலம் போய் கேதார்நாத் செல்லப்போவதாகச் சொல்கின்றாரே!
அவர்கூட, நாம் யாராவது போக வேண்டாமா?
பட்டு:
யாரும் தன்கூட வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம்.
ஏதோ ஒரு குகைக்குள் தனிமையில் தியானம் செய்யப்போகிறாராம்.
எப்போது திரும்பி வருவார் என்று அவருக்கே தெரியாதாம்.
கிட்டு:
சங்கரர் இல்லாத இடத்தில் நமக்கு இனி என்ன வேலை?
நாமும் நம் ஊருக்கே திரும்பிப்போய் சங்கரருடன் பழகிய அனுபவங்களை பலருக்கும் தெரிவித்து, அவரின் புகழைப் பரப்புவோம்.
ooooooooooooooooooooooooooooooooo
காட்சி-24
[ஆதி சங்கரர் படத்தை, பூ மாலைகளால் அலங்கரித்து வைக்கலாம். இரண்டு குத்து விளக்குகள், ஐந்து முகங்களுடன் அழகாக எரிவதுபோல வைக்கலாம். பின்னனியில் கீழ்க்கண்டவாறு குரல் மட்டும் கொடுக்கலாம்]
ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று அறிகிறோம்.
அவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
புண்ணிய பூமியாம் நம் பாரதத் திருநாட்டில் பல்வேறு மடங்கள், ஆதி சங்கரரால் நிறுவப்பட்டு, இன்று வரை அவை மக்களை பக்தி மார்க்கத்தில் இட்டுச்சென்று, நல்வழிப்படுத்தி வருகின்றன.
மிகவும் பழமை வாய்ந்த வேதங்களும், சாஸ்திரங்களும், சனாதன தர்மங்களும், ஆலமரம் போல் விழுதுகள் விட்டு, உலகில் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் யார்?
நம் ஆதிசங்கரர் அவர்களால் வித்திட்டு, விதை விதைத்து, நீர் ஊற்றி, நன்கு வளர்த்ததனால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
நமக்கு வழிகாட்டியாக இருந்த “சங்கரர்” என்கிற ஆதிசங்கரரை என்றும் நினைப்போம்.
அவரின் அவதார தினத்தை ஆண்டுதோறும் ”சங்கர ஜயந்தி”த் திருநாளாக எல்லோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவோம்.
அவர் இயற்றிய ஸ்லோகங்களை அனைவரும் படிப்போம்.
அனுதினமும் அவற்றை உச்சரித்து மகிழ்வோம்.
ஆதி சங்கரர் காட்டிய நல்வழியில் நாம் வாழ்வோம்.
நற்கதியை நாம் அடைவோம்.
ஸ்ரீ தோடகாஷ்டகம்
கருணாவருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்!
ரசயாகிலதர்சன தத்த்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 2 ]
பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே!
கலயேச்வர ஜீவவிவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 3 ]
பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெள துதிதா
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 4 ]
ஸுக்ருதே (அ) திக்ருதே பஹூதா பவதோ
பவிதா ஸமதர்சன லால ஸதா!
அதி தீன மிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 5 ]
ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸ: ச்சலத:!
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி புரோ
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 6 ]
குருபுங்கவ புங்கவகேதந தே
ஸமதா மயதாம் ந ஹி கோ பி ஸுதீ:!
சரணா கத வத்ஸல தத்த்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 7 ]

ஆமாம்.... ஆமாம். நீ சொல்வது தான் சரி.
நாளைக்கு சங்கரர் கேதார்நாத்துக்கு புறப்பட்டதும், நாமும் நம் ஊரைப்பார்க்கக் கிளம்பிடுவோம்.
அதற்கான பயண வேலைகளை இப்போதே ஆரம்பித்து விடலாம் ..... வா!
ooooooooooooooooooooooooooooooooo
காட்சி-24
[ஆதி சங்கரர் படத்தை, பூ மாலைகளால் அலங்கரித்து வைக்கலாம். இரண்டு குத்து விளக்குகள், ஐந்து முகங்களுடன் அழகாக எரிவதுபோல வைக்கலாம். பின்னனியில் கீழ்க்கண்டவாறு குரல் மட்டும் கொடுக்கலாம்]
ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று அறிகிறோம்.
அவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
புண்ணிய பூமியாம் நம் பாரதத் திருநாட்டில் பல்வேறு மடங்கள், ஆதி சங்கரரால் நிறுவப்பட்டு, இன்று வரை அவை மக்களை பக்தி மார்க்கத்தில் இட்டுச்சென்று, நல்வழிப்படுத்தி வருகின்றன.
மிகவும் பழமை வாய்ந்த வேதங்களும், சாஸ்திரங்களும், சனாதன தர்மங்களும், ஆலமரம் போல் விழுதுகள் விட்டு, உலகில் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் யார்?
நம் ஆதிசங்கரர் அவர்களால் வித்திட்டு, விதை விதைத்து, நீர் ஊற்றி, நன்கு வளர்த்ததனால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
நமக்கு வழிகாட்டியாக இருந்த “சங்கரர்” என்கிற ஆதிசங்கரரை என்றும் நினைப்போம்.
அவரின் அவதார தினத்தை ஆண்டுதோறும் ”சங்கர ஜயந்தி”த் திருநாளாக எல்லோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவோம்.
அவர் இயற்றிய ஸ்லோகங்களை அனைவரும் படிப்போம்.
அனுதினமும் அவற்றை உச்சரித்து மகிழ்வோம்.
ஆதி சங்கரர் காட்டிய நல்வழியில் நாம் வாழ்வோம்.
நற்கதியை நாம் அடைவோம்.
[தோடகாஷ்டக ஸ்லோகத்தை ஒலிபரப்பி நாடகத்தை முடிக்கலாம்]
ஸ்ரீ தோடகாஷ்டகம்
விதிதா கில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 1 ]
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 1 ]
கருணாவருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்!
ரசயாகிலதர்சன தத்த்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 2 ]
பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே!
கலயேச்வர ஜீவவிவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 3 ]
பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெள துதிதா
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 4 ]
ஸுக்ருதே (அ) திக்ருதே பஹூதா பவதோ
பவிதா ஸமதர்சன லால ஸதா!
அதி தீன மிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 5 ]
ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸ: ச்சலத:!
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி புரோ
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 6 ]
குருபுங்கவ புங்கவகேதந தே
ஸமதா மயதாம் ந ஹி கோ பி ஸுதீ:!
சரணா கத வத்ஸல தத்த்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 7 ]
விதிதா ந மயா விசதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ!
த்ருத மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 8 ]
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 8 ]
-ooooooooooooooooooooooooooo-
நாடகம் நிறைவுற்றது
சுபம்
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
இந்த நாடகத்திற்கு காட்சி வாரியாக என்னால் கொடுக்கப்பட்டிருந்த நேர ஒதிக்கீடுகள் [TIME SCHEDULE FOR EACH AND EVERY SCENE]
காட்சிகள்: 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 13, 17 மற்றும் 23 ஆகிய
12 காட்சிகள் தலா 2 நிமிடங்கள் வீதம் ............................ 12*2 = 24 நிமிடங்கள்
காட்சிகள்: 7, 11, 15, 16/1, 16/2, மற்றும் 21 ஆகிய
6 காட்சிகள் தலா 6 நிமிடங்கள் வீதம்................................ 6*6 = 36 நிமிடங்கள்
காட்சிகள்: 12, 14, 18, 19, 20 மற்றும் 24 ஆகிய
6 காட்சிகள் தலா 4 நிமிடங்கள் வீதம் .............................. 6*4 = 24 நிமிடங்கள்
காட்சி 22 க்கு மட்டும் .......................................................... 10 நிமிடங்கள்
ஒவ்வொரு காட்சிக்கும் இடைவெளி
Setting Time / Breathing Time .................................................... 26 நிமிடங்கள்
=================== ========
ஆகமொத்தம் ............................................................... 120 நிமிடங்கள்
=================== ========
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
”ஸ்ரீ ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்”
என்ற தலைப்பில் பள்ளிச்சிறுவர்களால் 2 மணி நேரத்திற்குள் நாடகமாக நடித்து முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய, நாடக ஆக்கம் பற்றிய எழுத்துப்போட்டி ஒன்றுக்காக, இந்த நாடகம் என்னால் 2007 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.
குறிப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் இந்த நாடகம் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதாலும், அதே நேரம் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள் யாவும், ஓரளவுக்காவது, முழுமையாகப் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதாலும், “பட்டு” “கிட்டு” என்ற இரண்டு கற்பனைக் கதாபாத்திரங்களை இந்த நாடகத்தில் நானாகவே நுழைத்துள்ளேன்.
நாடகத்தில் நடித்துக்காட்டப்பட நேரமில்லாத பகுதிகளை இந்த “பட்டு” “கிட்டு” ஆகிய இருவரின் உரையாடல்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு செய்து விடலாம் என்ற நம்பிக்கையில். நான் இந்த இரு கதாபாத்திரங்களைக் கையாண்டுள்ளேன்.
ஆதிசங்கரரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று நூல்கள் எதிலும், இந்தப்பட்டுவையோ அல்லது கிட்டுவையோ நீங்கள் காணமுடியாது.
இதுபோன்ற வரலாற்றில் காணப்படாத இருவரை, நானே [காமெடியன்ஸ் போல] இடையே நுழைத்துள்ளதால் தான், என்னுடைய படைப்பு முதல் பரிசுக்கோ இரண்டாவது பரிசுக்கோ பரிசீலிக்கப்படாமல் போய் விட்டதோ என்ற சந்தேகமும் எனக்கு பிறகு ஏற்பட்டது.
ஏதோ என் படைப்பு, அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியொன்றில், மொத்தம் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட, படைப்பாளிகளின் இடையே, மூன்றாவது பரிசுக்காவது தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே.
பரிசளிப்பு விழா 02.10.2007 அன்று சென்னை தி. நகரில், வாணி மஹாலில் நடைபெற்றது. ரொக்கப்பரிசாக ரூபாய் ஐயாயிரம் அளிக்கப்பட்டது. என் குடும்பத்தார் அனைவருடனும் நேரில் போய் விழாவில் கலந்து கொண்டேன்.
அன்றைய தினம் அங்கு கூடியிருந்த எக்கச்சக்கமான கும்பலாலும், ஒருசில V.V.I.P. க்களின் வருகையாலும், அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளாலும், பரிசு பெறுபவர்களைத் தவிர வேறு யாரையும் மேடைக்கு அருகே, சென்று அமர அவர்கள் அனுமதிக்கவில்லை.
அதனால் அன்று நான் பரிசு பெறுவதை, என் குடும்பத்தினர், மிகத்தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்தது சரியாகத் தெளிவாக அமையவில்லை.
இந்த என் வெற்றிக்காக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் 16.10.2007 அன்று திருச்சியில், எனக்கு ஓர் பாராட்டு விழா நடத்தியது.
இந்தத் தொடர் நாடகத்திற்கு, அன்புடன் வருகை புரிந்து, அவ்வப்போது உற்சாகப்படுத்தி மகிழ்வித்த, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் அடுத்த பதிவினில்,
இந்த என் நாடகத்தின் 18 பகுதிகளிலும்
அவ்வப்போது வருகை தந்து
கருத்துக்கள் கூறி
உற்சாகப்படுத்தியுள்ள
உங்கள் அனைவருக்கும்
தனித்தனியே நன்றி கூறுவேன்.

தமிழ்ப் பேராசிரியரும், தொலைகாட்சிப்புகழ் பட்டிமன்ற நடுவரும்
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் புரவலருமான
பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
திரு. சோ. சத்யசீலன் ஐயா அவர்களால்
16.10.2007 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி கெளரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
-oOo-
இந்தத் தொடர் நாடகத்திற்கு, அன்புடன் வருகை புரிந்து, அவ்வப்போது உற்சாகப்படுத்தி மகிழ்வித்த, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் அடுத்த பதிவினில்,
இந்த என் நாடகத்தின் 18 பகுதிகளிலும்
அவ்வப்போது வருகை தந்து
கருத்துக்கள் கூறி
உற்சாகப்படுத்தியுள்ள
உங்கள் அனைவருக்கும்
தனித்தனியே நன்றி கூறுவேன்.
என்றும் அன்புடன் தங்கள்
vgk
-oOo-