About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, April 20, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-6]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-6]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-8


குரு:


சங்கரா! பல ஆண்டுகள் குருகுலத்தில் இருந்து கற்க வேண்டிய வேத பாடங்களை ஒருசில மாதங்களிலேயே கற்று முடித்து விட்டாய். இனி நீ படிப்பதற்கோ, நான் புதிதாகக் கற்றுத்தருவதற்கோ ஒன்றுமே இல்லை.


கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லி அந்த சாக்ஷாத் அம்பாளை நேரில் வரவழைத்து, அவளின் கருணை மழையை ஸ்வர்ண மழையாகவே பொழிந்திடச்செய்து விட்டாய். 


நீ இன்றுடன் உன் குருகுல வாழ்க்கையை முடித்துக்கொண்டு, உன் தாயிடம் போய்ச் சேரலாம்.


சங்கரன்: 


தங்களைக் குருவாக அடைந்தது என் பாக்யம். அதனாலேயே இது போன்ற அபூர்வ சக்திகள் எனக்கு வாய்க்கப்பட்டுள்ளன. விடைபெறுகிறேன், குருவே!


[சங்கரன் குருவை விழுந்து நமஸ்கரித்தல் - குரு அவனை ஆசீர்வதித்தல்] 


  

ooooooooooooooooooooooooooooo

காட்சி-9

[தியானத்தில் அமர்ந்திருக்கும் சங்கரனிடம், முனிவர் ஒருவர் வந்து நின்று ஏதோ சொல்லக் காத்திருத்தல். சங்கரன் கண்ணைத்திறந்து முனிவரைப் பார்த்தல்]

முனிவர்: 

ஸ்வாமீ! தங்களின் அவதார நோக்கம் விரைவில் நிறைவேற அருள் புரிய வேண்டும். 

சங்கரன்:

ஞாபகம் உள்ளது முனிவரே. அதற்கு முன்பு நான் சந்நியாஸம் பெற வேண்டும், அதன் பிறகு தான் இந்த நாட்டையே சுற்றி வந்து வைதீக மதத்தின் தர்மத்தைப் பரப்ப வேண்டும். அவதார நோக்கம் வெகு விரைவிலேயே நிறைவேறும்.

முனிவர்: 


மிக்க மகிழ்ச்சி ஐயனே! உத்தரவு பெற்றுச் செல்கிறேன்.

சங்கரன்: 


சென்று வாருங்கள்.

ooooooooooooooooooooooooooooo

காட்சி-10

[பட்டுவும் கிட்டுவும் சங்கரனின் தாயிடம் ஓடி வருகின்றனர்]

பட்டு:

தாயே! தங்களின் பிள்ளையாண்டான் சங்கரன் நதியில் குளிக்கும் போது அவன் காலை முதலை ஒன்று கவ்விக்கொண்டு விட மறுக்கின்றது.

நீங்கள் உடனே புறப்பட்டு வரணும். 

நீங்கள் உடனே புறப்பட்டு வந்தால் தான், தான் முதலையிடமிருந்து தப்ப முடியும் என்று சொல்லி, சங்கரன் எங்களை அனுப்பி வைத்துள்ளான்.

கிட்டு:

ஆமாம். சீக்கரமா வாங்கோ! உடனே புறப்பட்டு எங்களுடன் வாருங்கள்.  

ஆர்யாம்பாள்:

கடவுளே! இது என்ன சோதனை. 

பகவானே! என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி என்னிடம் கொடுத்துவிடு.

[ஆர்யாம்பாள் ஸ்வாமிப் படத்திற்கு நமஸ்காரம் செய்து விட்டு, பட்டு, கிட்டுவுடன் புறப்படுதல்]

ooooooooooooooooooooooooooooo


இதன் தொடர்ச்சி 
நாளை 21.04.2012 சனிக்கிழமை
மதியம் சுமார் 1 மணிக்கு ஒரு பகுதியும் [பகுதி-7]
 இரவு 9 மணி சுமாருக்கு மற்றொரு பகுதியுமாக 
[பகுதி-8] வெளியிடப்படும்]

23 comments:

 1. சுவை குன்றாமல் செல்லும் ஆன்மீகப் பகிர்வு!

  ReplyDelete
 2. அடடா அதற்குள் முதலை காலைப் பிடித்து விட்டதே.....

  சுவையான பகிர்வு... தொடருங்கள் காத்திருக்கிறேன்.....

  ReplyDelete
 3. திரைப்படம் போன்று சுவாரசியமாக இருக்கிறது.

  ReplyDelete
 4. படிக்கும் போது காட்சிகள் மனத்திரையில் ஓடுகின்றன ஐயா...
  யதார்த்தம்...

  ReplyDelete
 5. ஆவலுடன் காத்திருப்பு!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 6. Short and meaningful வசனங்கள்...
  தொய்வு இல்லாத காட்சி அமைப்பு...
  Superb !!!

  ReplyDelete
 7. ஞாபகம் உள்ளது முனிவரே. அதற்கு முன்பு நான் சந்நியாஸம் பெற வேண்டும், அதன் பிறகு தான் இந்த நாட்டையே சுற்றி வந்து வைதீக மதத்தின் தர்மத்தைப் பரப்ப வேண்டும். அவதார நோக்கம் வெகு விரைவிலேயே நிறைவேறும்.//

  நாடகத்தில் முக்கிய கட்டம் வந்து விட்டதே!

  அருமையாக சொல்கிறீர்கள்.
  நன்றி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. ஆதி சங்கரரின் வாழ்க்கை பதிவு படிப்படியாக படிப்பதற்கே நல்ல அனுபவம் தொடருங்கள்.

  ReplyDelete
 9. 1000 and why 1000 morethan times i heard this story from my father. But i am feeling very new here.
  Like to read it fully sir.
  viji

  ReplyDelete
 10. சங்கரர் குளிக்கும் நதி காலடியில் ஓடும் பூர்ணா நதி.

  தொடர்கிறேன் சார்.

  ReplyDelete
 11. கோவை2தில்லி said...
  //சங்கரர் குளிக்கும் நதி காலடியில் ஓடும் பூர்ணா நதி.

  தொடர்கிறேன் சார்.//

  தகவலுக்கு மிக்க நன்றி, மேடம்.

  தொடர்ந்து வருகை தருவதற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி.

  ReplyDelete
 12. காலடியில் பிற்ந்த கருணைக் கடலின் அற்புதச்சரித்திரம்..

  ReplyDelete
 13. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 14. காட்சிகளின் அமைப்பு கவர்ச்சிகரமாக உள்ளது.

  ReplyDelete
 15. எல்லாம் அவன் திருவிளையாடல்

  ReplyDelete
 16. குழந்தையின் காலை முதலை கவ்விக்கொண்டிருக்கிறது என்று அறிந்தால் அந்த தாயின் மனம் என்ன பாடுபடும்? அடப்பாவமே.

  ReplyDelete
  Replies
  1. ஆதி சங்கரர் இவ்வளவு பெரிய மஹானாக இருந்தாலும் தாய்க்கு மகன் தானே. அந்த தாய் மனம் எப்படி பதறி துடிக்கும்?

   Delete
  2. பூந்தளிர் August 5, 2015 at 11:58 AM

   //ஆதி சங்கரர் இவ்வளவு பெரிய மஹானாக இருந்தாலும் தாய்க்கு மகன் தானே. அந்த தாய் மனம் எப்படி பதறி துடிக்கும்?//

   நீங்க சொல்வது மிகவும் கரெக்ட். பெற்ற தாயின் மனம் பதறித் துடிக்கத்தான் செய்யும்.

   Delete
 17. ஐயோடா கொளந்த கால மொதல புடிச்சிகிச்சா அம்மி அளுவாங்கல்ல.

  ReplyDelete
  Replies
  1. :) ஆமாம். அம்மி (அம்மா) அழுவாங்கதான் :)

   Delete
 18. அவதார நோக்கம் நிறைவேரும் நாள் நெருங்கி விட்டதால் முதலையை வைத்து திருவிளையாடலை ஆரம்பித்துவிட்டாரா.

  ReplyDelete
 19. ஆஹா...புராண நாடகத்திலும் ஒரு சுவார்ஸ்ய திருப்பமா?

  ReplyDelete