ஏணி தோணி கோணி
‘இந்த வருடத்தில் நான் - 2011’
[தொடர்பதிவு]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
அன்புடையீர்,
வணக்கம்.
இனிய
புத்தாண்டு
+
பொங்கல்
நல்வாழ்த்துகள்.
இன்றுடன் 2011 ஆம் ஆண்டு நிறைவு பெற்று,
நாளை 2012 ஆம் ஆண்டு துவங்கவுள்ளது.
*அழைப்பைக்காண:
http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_28.html
-oOo-
இன்றுடன் முடியும் 2011 ஆம் ஆண்டை என்னால் என்றுமே மறக்க முடியாது. இந்த ஆண்டின் ஆரம்ப நாட்களில் தான், நான் முதன் முதலாக என் வலைப்பூவில் எழுதத்தொடங்கி தொடர்ந்து பல பதிவுகள் தந்துள்ளேன். ஒரு சில சோதனைப் பதிவுகளுக்குப் பிறகு முழுவீச்சில் பதிவிட ஆரம்பித்த நாள் 02.01.2011.
நான் பதிவிட்ட முதல் சிறுகதை “இனி துயரம் இல்லை”. முதல் பின்னூட்டம் கொடுத்தவர் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் மட்டுமே. அதன் பிறகு வேறு ஒருவர். சமீபத்தில் மற்றொருவர். ஆக மொத்தம் 3 பேர்கள் மட்டுமே. http://gopu1949.blogspot.com/2011/01/blog-post.html
இந்தப்பதிவுடன் 2011 ஆம் ஆண்டின் மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை: 200 என்று காட்டுகிறது.ஒருசில மீள் பதிவுகளை கணக்கிலிருந்து நீக்கிவிட்டாலும் கூட, சுமார் 175 முதல் 180 வரை புதிய பதிவுகளாக நான் தந்துள்ளேன். அதாவது சராசரியாக ஒரு நாள் விட்டு ஒருநாள் வீதம் ஒரு புதிய பதிவு தந்துள்ளேன். அதுவே எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.
நான் பதிவிட்ட முதல் சிறுகதை “இனி துயரம் இல்லை”. முதல் பின்னூட்டம் கொடுத்தவர் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் மட்டுமே. அதன் பிறகு வேறு ஒருவர். சமீபத்தில் மற்றொருவர். ஆக மொத்தம் 3 பேர்கள் மட்டுமே. http://gopu1949.blogspot.com/2011/01/blog-post.html
இந்தப்பதிவுடன் 2011 ஆம் ஆண்டின் மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை: 200 என்று காட்டுகிறது.ஒருசில மீள் பதிவுகளை கணக்கிலிருந்து நீக்கிவிட்டாலும் கூட, சுமார் 175 முதல் 180 வரை புதிய பதிவுகளாக நான் தந்துள்ளேன். அதாவது சராசரியாக ஒரு நாள் விட்டு ஒருநாள் வீதம் ஒரு புதிய பதிவு தந்துள்ளேன். அதுவே எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.
இந்த என் வெற்றிகரமான தொடர் பயணத்திற்கு, மூல காரணமாக நான் நினைப்பது, வாசகர்களும், பதிவர்களுமாகிய நீங்கள் அவ்வப்போது எனக்கு அன்பாக, ஆதரவாக, அசத்தலாக, உற்சாகமாக, உபயோகமாக, உந்துதலாகக் கொடுத்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே.
பதிவுலகுக்கு நான் வந்த பிறகுதான், என்னைப்போலவே எழுத்தார்வம் கொண்ட பலருடன் என்னால் எளிதில் தொடர்பு கொள்ள முடிந்தது. பலரின் அருமைகளையும், பெருமைகளையும், தனித் திறமைகளையும் நன்கு அறிய முடிந்தது.
இன்று உலகம் பூராவும் பரவியுள்ள தமிழ் எழுத்தாளர்களாகிய பல தோழர்களுடனும், தோழிகளுடனும் நல்ல நட்பை ஏற்படுத்திக்கொண்டு, பல ஆரோக்யமான விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடிந்தது.
இன்று உலகம் பூராவும் பரவியுள்ள தமிழ் எழுத்தாளர்களாகிய பல தோழர்களுடனும், தோழிகளுடனும் நல்ல நட்பை ஏற்படுத்திக்கொண்டு, பல ஆரோக்யமான விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடிந்தது.
அவர்களில் பலரையும் நான் இதுவரை நேரில் சந்திக்க சந்தர்ப்பம் அமையாத போதிலும், அவர்கள் என்னிடம் மின்னஞ்சல் மூலமும், சுட்டிகள் மூலமும், தொலைபேசி இணைப்புகள் மூலமும் தொடர்பு கொண்டு, நெருங்கிய சொந்தங்களை விட அதிகப் பிரியத்துடன் பழகி வருவது என் நெஞ்சினில் மிகவும் பசுமையாகப் பதிந்து, என்றும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
என் மனதுக்குப் பிடித்தமானவர்களாகவும்,என் எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் ஒத்துப்போகும் நபர்களாகவும், என் நலம் விரும்பிகளாகவும் யாராவது ஓரிருவர், தினமும் என்னுடைய தொடர்பு எல்லைக்குள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் என்பது, என் மனதுக்கு மிகவும் சந்தோஷமும், ஆறுதலும், தன்னம்பிக்கையும் தரக்கூடிய மகிழ்ச்சிகரமான விஷயமாக உள்ளது! ;)
நான் இதுவரை நேரில் சந்திக்காத, அந்த அன்பு உள்ளங்கள் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்தப்பகுதியில் இருந்தாலும், அவர்கள் இன்று போல என்றும் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும், வாழ்க்கையில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்புடன் மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்.
நான் இதுவரை நேரில் சந்திக்காத, அந்த அன்பு உள்ளங்கள் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்தப்பகுதியில் இருந்தாலும், அவர்கள் இன்று போல என்றும் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும், வாழ்க்கையில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்புடன் மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்.
நிஜ வாழ்க்கையைவிட, நான் அடிக்கடி கற்பனை உலகில் சஞ்சரிப்பதில் அதிக மகிழ்ச்சி அடையக்கூடியவன். என்னுடைய கற்பனை உலகம் மிகவும் ரம்யமானது. அழகானது. கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாதது.
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே! என சந்தோஷம் மட்டுமே தரக்கூடியது. என் மனதுக்குப் பிடித்தவர்கள் மட்டுமே, என்னைச்சுற்றி அந்த கற்பனை உலகில் என்னுடன் இருக்கவோ, மகிழ்ச்சியுடன் என் உல்லாசத்தில் பங்குகொள்ளவோ அனுமதியுண்டு.
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே! என சந்தோஷம் மட்டுமே தரக்கூடியது. என் மனதுக்குப் பிடித்தவர்கள் மட்டுமே, என்னைச்சுற்றி அந்த கற்பனை உலகில் என்னுடன் இருக்கவோ, மகிழ்ச்சியுடன் என் உல்லாசத்தில் பங்குகொள்ளவோ அனுமதியுண்டு.
என் கற்பனை உலகில் அழகழகான நறுமணம் வீசும் புஷ்பச்செடிகளும், பட்டாம்பூச்சிகளும் நிறைய உண்டு. இன்பமாகப் புசிக்க ருசியான பழங்களும், உணவு வகைகளும் அங்கு ஏராளமாகவும் தாராளமாகவும் உண்டு.
விரோதிகள், எதிரிகள் என்று அங்கு யாருமே கிடையாது. எதைப்பற்றியதோர் பயமோ, கவலையோ, அச்சுறுத்தல்களோ எனக்கு என் கற்பனை உலகில் கிடையவே கிடையாது.
என் கற்பனை உலகில் நான் நினைக்கும் நேரத்தில், நினைக்குமிடத்திற்கு, நினைக்கும் நபருடன் சுதந்திரப் பறவை போல பறந்து செல்வேன். உல்லாசத்தில் அவர்களுடன் ஊஞ்சலாடி மகிழ்வேன்.
அங்கு தான் எனக்கு மனதில் புதிய வசந்தங்களும், புதுப்புது கற்பனைகளும் தோன்றும். அவற்றை என் மனதில் அப்படியே அழகாக படம் பிடித்துக்கொள்வேன். மனக்கண்ணில் படம் பிடிக்கப்பட்ட அவை உடனே என் மூளையில் பதிந்து விடுவதுண்டு. மூளையில் பதிந்த இந்த என் கற்பனை எண்ணங்களை என் கை விரல்கள் மிகச்சுலபமாக கணினியில் தட்டிவிடுவதும் உண்டு.
ஆனாலும் என் கற்பனையில் தோன்றிய அனைத்தையும் [நாகரீகம் கருதி] அப்படியே பதிவிட முடியாதல்லவா! எனவே ஆங்காங்கே மிகவும் வருத்தத்துடன், அதே என் கை விரல்களால் EDIT செய்வதும் உண்டு.
கடைசியில் ’கழுதை தேய்ந்து கட்டெறும்பாவது போல’, என் கற்பனையில் உதித்த பல்வேறு விஷயங்கள், வேறு ஏதோவொரு புதிய சுருக்கப்பட்ட ரூபத்தில், ஏதோவொரு தலைப்பில், சிறுகதைகளாக அவ்வப்போது என் பதிவுகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதுவே இதுவரை நான் பதிவிட்ட, ”என் கதைகள் பிறந்த கதை” யின் கதைச் சுருக்கமாகும்.
கடைசியில் ’கழுதை தேய்ந்து கட்டெறும்பாவது போல’, என் கற்பனையில் உதித்த பல்வேறு விஷயங்கள், வேறு ஏதோவொரு புதிய சுருக்கப்பட்ட ரூபத்தில், ஏதோவொரு தலைப்பில், சிறுகதைகளாக அவ்வப்போது என் பதிவுகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதுவே இதுவரை நான் பதிவிட்ட, ”என் கதைகள் பிறந்த கதை” யின் கதைச் சுருக்கமாகும்.
உங்களில் பலருக்கும் இதுபோல பலவித கற்பனை அனுபவங்கள் இருக்கலாம். சிலர் சிலவற்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படலாம். வேறு சிலர், சமுதாயக் கட்டுப்பாடுகள் காரணமாக, வெளியே சொல்லாமல், மனதுக்குள்ளே மறைத்து வைத்துக் கொள்ளப் பிரியப்படலாம்.
உதாரணமாக நம்மில் பலருக்கு, பாதுகாப்புடன் தாளிடப்பட்ட, பாத்ரூமுக்குள் சென்றவுடன், ஒரு சுதந்திர உணர்வு அவர்களைப் பற்றிக்கொள்ளும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக இருப்பார்கள்.
சிலர் விசில் அடிப்பார்கள். சிலரின் வாய் அவர்களை அறியாமலேயே ஏதோவொரு சினிமா பாடலை முணுமுணுக்கும். உடலில் ஆடை இருக்கிறதா இல்லையா என்ற கவலையே இல்லாமல் இருப்பார்கள். சிலர் பாடுவார்கள், சிலர் ஆடுவார்கள், சிலர் இன்னும் ஏதேதோ செய்வார்கள்.
தனிமையில் இருக்கிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையே இதற்கு முக்கியமான காரணம். இதைக் கூட அவர்களின் கற்பனை உலகம் என்று சொல்லலாம் தான்.
சிலர் விசில் அடிப்பார்கள். சிலரின் வாய் அவர்களை அறியாமலேயே ஏதோவொரு சினிமா பாடலை முணுமுணுக்கும். உடலில் ஆடை இருக்கிறதா இல்லையா என்ற கவலையே இல்லாமல் இருப்பார்கள். சிலர் பாடுவார்கள், சிலர் ஆடுவார்கள், சிலர் இன்னும் ஏதேதோ செய்வார்கள்.
தனிமையில் இருக்கிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையே இதற்கு முக்கியமான காரணம். இதைக் கூட அவர்களின் கற்பனை உலகம் என்று சொல்லலாம் தான்.
{ ஆனாலும் ஒருசிலர் மட்டும், சுதந்திரமாக இயங்கக்கூடிய இந்த பாத்ரூம் என்ற இடத்தின் உள்ளே போனாலும் [போகாததால்] மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். தங்களைத் தாங்களே இடுப்பில் குத்திக்கொள்வார்கள். முக்கி முணகி வியர்த்து விறுவிறுத்துப்போய் கஷ்டப்படுவார்கள்.
இவர்கள் இங்கு மட்டுமல்ல எங்குமே தானும் சுகப்படாமல், பிறரையும் சுகப்பட விடாமல், ஒருவித [மூலக்] கடுப்புடன் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம், சந்தோஷம் + கற்பனை என்பதே எப்போதும் எட்டிட வாய்ப்பு இல்லை. அதுபோன்ற மைனாரிடி ஆசாமிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படியே விட்டுவிடலாம். }
இவர்கள் இங்கு மட்டுமல்ல எங்குமே தானும் சுகப்படாமல், பிறரையும் சுகப்பட விடாமல், ஒருவித [மூலக்] கடுப்புடன் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம், சந்தோஷம் + கற்பனை என்பதே எப்போதும் எட்டிட வாய்ப்பு இல்லை. அதுபோன்ற மைனாரிடி ஆசாமிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படியே விட்டுவிடலாம். }
என் உள்ளம் அடிக்கடி இப்படிக் கற்பனை உலகில் சஞ்சரித்து வந்தாலும், என் உடல் இந்த நம் யதார்த்த உலகில் மற்றவர்களை அனுசரித்து வாழ வேண்டிய கட்டாயத்திலும், சமூகக் கட்டுப்பாடுகளிலும் தானே, உள்ளது!
அதனால் நான் கொடுக்கும் என் பதிவுகளிலும், நிறைய கட்டுப்பாடுகள் வைத்துத்தான் எழுத வேண்டியுள்ளது. ஒருசில இடங்களில் நகைச்சுவைக்காக ஒருசில வரம்பு மீறல்களும், நடந்திருக்கலாம்.
அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், எனக்கு நீங்கள் கொடுத்துள்ள பேராதரவு எனக்கு, பெரு மகிழ்ச்சியளிக்கின்றது.
அதனால் நான் கொடுக்கும் என் பதிவுகளிலும், நிறைய கட்டுப்பாடுகள் வைத்துத்தான் எழுத வேண்டியுள்ளது. ஒருசில இடங்களில் நகைச்சுவைக்காக ஒருசில வரம்பு மீறல்களும், நடந்திருக்கலாம்.
அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், எனக்கு நீங்கள் கொடுத்துள்ள பேராதரவு எனக்கு, பெரு மகிழ்ச்சியளிக்கின்றது.
ஏப்ரல் 2011 முதல் செப்டம்பர் 2011 வரையான ஆறு மாத காலத்தில் மட்டும் இன்ட்லியில் இணைக்கப்பட்ட என் பதிவுகளில், சுமார் 50 பதிவுகளுக்கு மேல் இன்ட்லியில் பிரபலப்படுத்தப்பட்டுள்ளதாக எனக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் தகவல் வந்து அவற்றை நான் தனியாக சேமித்து வைத்துள்ளேன். இவ்வாறு என் படைப்புகள் பலவும் இன்ட்லியில் பிரபலப்படுத்தப்பட்டதற்கு, தங்களில் பலர் எனக்கு ஆதரவாக என் படைப்புகளுக்கு இன்ட்லியில் வாக்களித்தது மட்டுமே காரணமாகும்.
[அதன்பிறகு அக்டோபர் 2011 முதல் இன்ட்லியில் வாக்கு அளிப்பதில் ஏதேதோ புதிய மாற்றங்கள் கொண்டு வந்து குழப்பியிருப்பதால், அந்தப் புதிய முறை, பழையமுறை படி சுலபமாக இல்லாததால், நம்மில் பலருக்கும் ஒன்றும் புரியாத நிலை தான் நீடிக்கிறது]
[அதன்பிறகு அக்டோபர் 2011 முதல் இன்ட்லியில் வாக்கு அளிப்பதில் ஏதேதோ புதிய மாற்றங்கள் கொண்டு வந்து குழப்பியிருப்பதால், அந்தப் புதிய முறை, பழையமுறை படி சுலபமாக இல்லாததால், நம்மில் பலருக்கும் ஒன்றும் புரியாத நிலை தான் நீடிக்கிறது]
வெவ்வேறு வாரங்களில், வெவ்வேறு வலைச்சர ஆசிரியர்களால், என் பெயரும் என் படைப்புகளும் வலைச்சரத்தில் அடிக்கடி தோன்றுமாறு செய்யப்பட்டுள்ளன. இதனால் இதுவரை என்னைப்பற்றி அறியாத பலரும் என்னையும் என் படைப்புகளையும் அறிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
இதுவரை இந்த 2011 ஆம் ஆண்டின் 52 வாரங்களில், என் பெயர் 26 முறை வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது என்பது எனக்கே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது. அதன் விபரம் இதோ இங்கே:
திரு. எல்.கே [கார்த்திக்] அவர்கள்
திருமதி அன்புடன் மலிக்கா அவர்கள்
பச்சைத்தமிழன் திரு. பாரி தாண்டவமூர்த்தி அவர்கள்
திரு. தமிழ்வாசி - பிரகாஷ் அவர்கள்
திரு. வேடந்தாங்கல் - கருண் அவர்கள்
திருமதி லக்ஷ்மி [குறையொன்றும் இல்லை] அவர்கள்
திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள்
திரு RVS [தீராத விளையாட்டுப்பிள்ளை] அவர்கள்
திரு. மோஹன்ஜி [வானவில் மனிதன்] அவர்கள்
திரு. ரமணி [தீதும் நன்றும் பிறர் தர வாரா] அவர்கள்
திருமதி மனோ சுவாமிநாதன் [முத்துச்சிதறல்] அவர்கள்
திருமதி மனோ சுவாமிநாதன் [முத்துச்சிதறல்] அவர்கள்
மாய உலகம் திரு. ராஜேஷ் அவர்கள்
திரு மகேந்திரன் அவர்கள்
திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
திருமதி பி.எஸ். ஸ்ரீதர் [ஆச்சி] அவர்கள்
திருமதி ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்கள்
திருமதி ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்கள்
திருமதி ராஜி வெங்கட் [கற்றலும் கேட்டலும்] அவர்கள்
திருமதி சாகம்பரி [மகிழம்பூச்சரம்] அவர்கள்
திருமதி சாகம்பரி [மகிழம்பூச்சரம்] அவர்கள்
திருமதி ரமாரவி [மதுரகவி] அவர்கள்
திருமதி ரமாரவி [மதுரகவி] அவர்கள்
திருமதி ஷக்தி ப்ரபா [மின்மினிப்பூச்சிகள்] அவர்கள்
திருமதி ஷக்தி ப்ரபா [மின்மினிப்பூச்சிகள்] அவர்கள்
26. http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_3674.html
திருமதி ஷக்தி ப்ரபா [மின்மினிப்பூச்சிகள்] அவர்கள்
26. http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_3674.html
திருமதி ஷக்தி ப்ரபா [மின்மினிப்பூச்சிகள்] அவர்கள்
இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல, ”தமிழ்மணம்” நிர்வாகம் என்னை நட்சத்திரப்பதிவராக ஒரு வாரம் [07.11.11 முதல் 13.11.11 வரை] தேர்ந்தெடுத்து சிறப்பித்ததும் இதே 2011 ஆண்டில் தான்.
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நான் அந்த வாரம் முழுவதும் 8 புதிய பதிவுகளும், 20மீள் பதிவுகளுமாக ஆக மொத்தம் 28 பதிவுகள் கொடுத்திருந்தேன்.
இதோ இணைப்பு:
http://www.tamilmanam.net/inc/star_post_list.php?date=2011-11-07
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நான் அந்த வாரம் முழுவதும் 8 புதிய பதிவுகளும், 20மீள் பதிவுகளுமாக ஆக மொத்தம் 28 பதிவுகள் கொடுத்திருந்தேன்.
இதோ இணைப்பு:
http://www.tamilmanam.net/inc/star_post_list.php?date=2011-11-07
அந்த ஒரே வாரத்தில் தாங்கள் அனைவரும் எனக்கு அளித்த உற்சாகமான வரவேற்பும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், ஒவ்வொரு படைப்புக்கும் வந்து குவிந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையும், தமிழ்மணத்தில் தங்களில் பலர் எனக்கு சாதகமாக வாக்களித்ததும், என்னால் என்றும் மறக்க முடியாத ஓர் மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும்.
தங்களின் இத்தகைய ஒட்டுமொத்த ஆதரவின் பலனாக தமிழ்மணத்தில் அந்த வார சூடான இடுகைகள் பட்டியலில் [TAMILMANAM'S WEEKLY TOP 20 HOT LIST] இல் எனக்கு முதலிடம் தந்து கெளரவிக்கப்பட்டது.
அதைப்பற்றி தமிழ்மணத்தில், ஒரே ஒருநாள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்ட செய்தியினை, நான் அன்று பார்க்கத் தவறிய காரணத்தால், அதே வாரம் எட்டாவது இடத்தைப்பிடித்திருந்த சகபதிவர் ஒருவர், அதை சேமித்து வைத்திருந்து, அவரின் பதிவினில் வெளியிட்ட செய்தியினை எனக்கு கீழ்க்கண்ட லிங்க் மூலம் தெரிவித்து உதவினார்.
இணைப்பு இதோ: http://veeduthirumbal. blogspot.com/2011/11/top-20. html
இந்த 2011 என்ற ஒரே ஆண்டுக்குள் நான் வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிச்செல்ல “ஏணி” யாகவும், இக்கரையில் இருந்த என்னை வெற்றி என்ற அக்கரைக்கு ஏற்றிச் சென்ற “தோணி” யாகவும், சிதறிய குப்பைகள் போல இருந்த என் சிந்தனைகளை, ஒருமுகப்படுத்தி, அன்பென்னும் பின்னூட்டங்களால் அவற்றை அள்ளிக்குவித்து, வெற்றி என்ற இலக்கை நோக்கி மூட்டைகட்டி எடுத்துச்செல்ல ”கோணி” யாகவும் இருந்து உதவிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.
தங்களின் இத்தகைய ஒட்டுமொத்த ஆதரவின் பலனாக தமிழ்மணத்தில் அந்த வார சூடான இடுகைகள் பட்டியலில் [TAMILMANAM'S WEEKLY TOP 20 HOT LIST] இல் எனக்கு முதலிடம் தந்து கெளரவிக்கப்பட்டது.
அதைப்பற்றி தமிழ்மணத்தில், ஒரே ஒருநாள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்ட செய்தியினை, நான் அன்று பார்க்கத் தவறிய காரணத்தால், அதே வாரம் எட்டாவது இடத்தைப்பிடித்திருந்த சகபதிவர் ஒருவர், அதை சேமித்து வைத்திருந்து, அவரின் பதிவினில் வெளியிட்ட செய்தியினை எனக்கு கீழ்க்கண்ட லிங்க் மூலம் தெரிவித்து உதவினார்.
இணைப்பு இதோ: http://veeduthirumbal.
ஜூலை 2011 இல் என்னால் வெளியிடப்பட்டு, பலராலும் மிகவும் பாராட்டப்பட்ட என்னுடைய “ஊரைச்சொல்லவா, பேரைச்சொல்லவா” என்ற கட்டுரையைக் கண்டு மகிழ்ந்த மூன்றாம் கோணம் நிர்வாகத்தினர், அதை அவர்கள் மின்இதழில் அவர்களாகவே விருப்பத்துடன் வெளியிட்டுக்கொண்டு என்னையும் வெகுவாகப்பாராட்டி, மின்னஞ்சல் கொடுத்தனர் .
திருச்சியைப்பற்றிய அந்தக்கட்டுரையைப்படிக்க இதோ இணைப்பு:
தொடர்ந்து மூன்றாம் கோணத்திற்கு தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
நானும் அவர்களின் வேண்டுகோளின் படி என்னுடைய 50 க்கும் மேற்பட்ட படைப்புகளை மூன்றாம் கோணத்தில் வெளியிட்டேன். பிறகு கடந்த ஓரிரு மாதங்களாக எனக்கு, எதற்குமே நேரமின்மையால், மூன்றாம் கோணத்துடன் எனக்குள்ள தொடர்புகளை, தற்காலிகமாக நானே நிறுத்திக் கொண்டுள்ளேன்.
அதுபோலவே ’வல்லமை’ மின்இதழின் துணை ஆசிரியரும், நம் சக பதிவருமான என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய, திருமதி அமைதிச்சாரல் அவர்கள் 26.09.2011 அன்று எனக்கு முதன் முதலாக ஓர் மின்னஞ்சல் அனுப்பி என்னை வியப்பில் ஆழ்த்தியிருந்தார்கள். இதோ இங்கே:
வணக்கம் வைகோ ஐயா,
எழுத்துத் துறையில் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கும் நீங்க, வல்லமைக்கும் உங்க படைப்புகளை அனுப்பி வைக்கலாமே.
தீபாவளிச் சிறப்பிதழும் ரெடியாகிட்டிருக்கு. முடிஞ்சா அதற்கும் தங்களோட பங்களிப்பைக் கொடுத்தீங்கன்னா சந்தோஷம் :-)
உங்க புகைப்படத்தோட சிறு குறிப்பையும் அனுப்பி வெச்சா நல்லது. எடிட்டரோட முகவரிக்கே அனுப்பிடுங்க.
அன்புடன்,
சாந்தி மாரியப்பன்(அமைதிச்சாரல்) 26/09/2011
அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்றுக்கொண்ட நான் இதுவரை என் 11 புதிய படைப்புகளை அவர்களுக்கு அனுப்பி அவை எல்லாமே ”வல்லமை மின்இதழ்” இல் அவ்வப்போது வெளியாகியுள்ளன.
அதில் ”மனதுக்குள் மத்தாப்பூ” என்ற என் குறுநாவல் வல்லமை தீபாவளி 2011 சிறப்பிதழில் வெளியானது மிகவும் மகிழ்ச்சியளித்தது. அதுவும் என் “மனதுக்குள் மத்தாப்பு” என்ற காதல் காவியம் நான் என் கையால் வரைந்து தந்த ஓவியத்துடன் வெளியானது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியளித்தது.
என் ஓவியத்துடன் கூடிய, காதல் காவியத்தையும் படிக்க:
இந்த 2011 என்ற ஒரே ஆண்டில், சக பதிவர்களின் அன்புக்கட்டளைகளுக்கு அடி பணிந்து நான் எழுதியுள்ள தொடர்பதிவுகள் மொத்தம் 7. அவை இதோ:
உணவே வா! உயிரே போ!! [சமையல் பற்றிய நகைச்சுவை]
முத்துச்சிதறல் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!
”பெயர் காரணம் [நகைச்சுவை]”
’கற்றலும் கேட்டலும்’ திருமதி ராஜி அவர்களுக்காக!
”மூன்று முடிச்சு”
’மணிராஜ்’ திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்காக!
”முன்னுரை என்னும் முகத்திரை”
’முத்துச்சிதறல்’ திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!
”ஊரைச்சொல்லவா.. பேரைச்சொல்லவா! ” [திருச்சி பற்றிய அலசல்]
’காகிதப்பூக்கள்’ திருமதி ஏஞ்சலின் அவர்களுக்காக!
”மழலைகள் உலகம் மகத்தானது”
அமைதிச்சாரல் + மணிராஜ் + முத்துச்சிதறல்
ஆகிய முப்பெரும் தேவியர்களுக்காக
நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி! [இந்த 2011 வருடத்தில் நான்]
’மணிராஜ்’ திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்காக!
[நீங்கள் இப்போது படிக்கும் இந்தப்பதிவு]
நான் இதுவரை வெளியிட்டுள்ள 200 பதிவுகளில், கவிதைகள்=5, மலரும் நினைவுகளான மகிழ்ச்சிப்பகிர்வுகள்=15, ஆன்மிக கட்டுரைகள்=3, மூளைக்கு வேலைகள்=5, தொடர்பதிவுகள்=7 என ஆக மொத்தம் 35 போக மற்றவைகள் யாவும் நகைச்சுவை சிறுகதைகள் மற்றும் சிறுகதைத் தொடர்களாகும்.
எனக்கு கணினியில் படங்களை எவ்வாறு இணைப்பது என்றே ஆரம்பத்தில் தெரியாததால் என் முதல் 100 பதிவுகளிலும் [ஜனவரி முதல் ஜூன் வரை] எந்தப்படமும் என்னால் இணைக்கப்படவில்லை.
பிறகு படங்களை இணைப்பது எப்படி என்று என் கைக்குழந்தை [வயது 28], ஒரு நாள் ஊரிலிருந்து இங்கு வந்தபோது, பெரிய மனது பண்ணி, எனக்குச் சொல்லிக்கொடுத்துச் சென்றது.
அதன் பிறகு அதாவது ஜூலை மாதத்திலிருந்து பெரும்பாலும் என் பதிவுகளைப் படங்களுடன் வெளியிட்டு வருகிறேன். பொருத்தமான படங்கள் கிடைக்காவிட்டால், சில சமயம் நானே வரைந்தும் வெளியிட்டுள்ளேன்.
கலர் கலராக ஃபிகர்களைப் பார்ப்பதில் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் தானே! ’அறுபதிலும் ஆசை வரும்’ என்று சும்மாவா சொன்னார்கள்? அது வந்து விட்டதே எனக்கும்! அதனாலேயே ஃபிகர்களை இணைத்துக் கொண்டிருக்கிறேன், அதுவும் எனக்காக அல்ல, உங்களுக்காக மட்டுமே!! ;))))
எனக்கு இது போன்ற பெருமைகளை இந்த ஒரே ஆண்டில் பெற்றுத்தந்த உங்கள் அனைவருக்கும் நான் வெளியிட்ட ”HAPPY இன்று முதல் HAPPY” என்ற என் பதிவினில், தனித்தனியாக நன்றி கூறி எழுதியிருந்தேன்.
Please Refer: http://gopu1949.blogspot.com/2011/11/happy-happy.html
இப்போது மறுபடியும் உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(1) ஆத்மார்த்த நட்புடன் பழகுவோர் (2) அலாதிப்பிரியம் கொண்டவர்கள் (3) அதீத அன்பு கொண்டவர்கள் (4) நல்ல நட்புள்ளம் கொண்டவர்கள் என வகைப்படுத்தி தனித்தனியே உங்கள் அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதலாம் என்று தான் முதலில் நான் யோசித்தேன். ஆனால் அந்தப்பட்டியல் எங்கள் ஊர் மலைக்கோட்டையைவிட மிகப் பெரியதாக இருப்பதால், மலைத்துப்போய் அந்த என் எண்ணத்தையே கைவிட்டுவிட்டேன். |
சமீபத்திய நிலவரப்படி என் வலைப்பூவினைப் பின் தொடர்பவர்கள் [Followers] எண்ணிக்கை 170 ஐத் தாண்டியும், இண்ட்லி மூலம் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 60 ஐத் தாண்டியும் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய ஒருசில சொந்தக்காரணங்களாலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் மாறுபட்ட குடும்பச் சூழ்நிலைகளாலும், இந்த 2011 ஆம் ஆண்டு போலவே, நாளை துவங்க இருக்கும் 2012 ஆம் ஆண்டிலும், தொடர்ந்து இதே வேகத்தில் என்னால் செயல்பட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, பதிவுலகில் என்னுடன் இதுவரைப் பேரன்பு செலுத்தி, ஆத்மார்த்த நட்புடனும், மிகுந்த வாத்சல்யத்தோடும், பழகிவரும் ஒருசிலரை என்றும் என்னால் ..........................
”மறக்க மனம் கூடுதில்லையே”
http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html
அதனால் என்னால் முடிந்தவரை, முடிந்தபோது, புதிய பதிவுகளுடன் உங்களை சந்திக்கத்தான் நான் முயற்சிகள் மேற்கொள்வேன்.
”புத்தாண்டு ஆரம்பித்ததும், இன்றுபோல ஸதா சர்வகாலமும் கம்ப்யூட்டரையே கட்டிக்கொண்டு அழுவதை கட்டாயமாகக் குறைத்துக் கொள்கிறேன்” என்று என் மேலிடத்திடம் உறுதிமொழி அளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு சமீபத்தில் ஆளாக நேர்ந்தது, எனக்கு.
எனக்குள்ள சில பிரத்யேக மனக்கவலைகளை மறக்கத்தான் வலைப்பக்கமே சுற்றிச்சுற்றி வருகிறேன் நான், என்பது தெரியாமல் ஏதேதோ பிரச்சனைகளைக் கிளப்புகிறார்கள் என்னுடன் இங்கு உள்ளவர்கள்.
ஆனாலும் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டாவது கம்ப்யூட்டரில் உட்காரத்தான் முயற்சிப்பேன் நான். ஏனென்றால் ’சொறிபிடித்தவன் கை சும்மாயிருக்காது; அது எப்போதும் சொறிந்து கொண்டே தான் இருக்கும்’ என்று ஒரு பழமொழி சொல்வார்களே! அதுபோலவே பதிவு எழுதி ருசிகண்டவர் கையும் சும்மா இருக்காது அல்லவா!
மேலும்,நாம் பிறருக்கு அவ்வப்போது கொடுக்கும் எல்லா உறுதிமொழிகளும், அநேகமாக பிரஸவ வைராக்யம், ஸ்மஸான வைராக்யம் போலத்தானே கடைசியில் முடிகிறது! என்ற தைர்யம் ஒருபுறம் உள்ளது.
நான் இதுபோல என் மனதினில் நினைத்துக் கொண்டிருந்தாலும், என் யதார்த்த வாழ்க்கையில் ’நாளை என்ன நடக்கும்’ என்பது எனக்கே தெரியாது. நாம் நல்லதையே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்!!
பிறகு தெய்வசங்கல்ப்பம் எப்படியோ! அதன்படியே நடக்கட்டும்!!
இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
மற்றும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மற்றும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
31.12.2011
2012 ஆம் ஆண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும்
நம் மனதை எப்போதும் நாம்
ஜில்லென்று வைத்துக்கொள்ளவே முயற்சிப்போம்
200 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு"நான் ஏறி வந்த ஏணி, தோனி, கோணி!
பதிலளிநீக்குமுழுவிருந்தாய் ரசிக்கும் பகிர்வுக்குப் பாயசமாய் படங்கள்..
கறிவேப்பிலையாய் மணந்து,
நாரத்தையாய் ருசிக்கும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
விரோதிகள், எதிரிகள் என்று அங்கு யாருமே கிடையாது. எதைப்பற்றியதோர் பயமோ, கவலையோ, அச்சுறுத்தல்களோ எனக்கு என் கற்பனை உலகில் கிடையவே கிடையாது
பதிலளிநீக்குஅழ்கான தேவலோகக் காட்சிப்பகிர்வு அருமை...
என் பெயர் 26 முறை வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது என்பது எனக்கே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது. //
பதிலளிநீக்குவலைச்சரத்தில் அடையாளம் காட்ட்டப்படதற்கு வாழ்த்துகள்...
”தமிழ்மணம்” நிர்வாகம் என்னை நட்சத்திரப்பதிவராக சிறப்பான பதிவுகள் தந்து நட்சத்திரமாய் ஒளிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்..
பதிலளிநீக்கு”வல்லமை மின்இதழ்” மின்னிய பதிவுகளுக்கு நிறைந்த வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅன்புநிறை ஐயா,
பதிலளிநீக்குஇந்த வருடத்தின் பதிவுலகில் சந்தித்த
அத்தனைகளையும் அழகுற தொகுத்திருக்கிறீர்கள்.
இங்கே என்னுடைய வலைச்சரப் பதிவையும்
எடுத்துக்காட்டியமைக்கு நன்றிகள் பல.
தங்களைப்போல அனுபவம் வாய்ந்தவர்கள்
எங்களுடன் பதிவுலகில் இருப்பது நாங்கள் செய்த புண்ணியம்.
தங்களின் பணி மேலும் மேலும் தொடர இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
தங்களின் இருநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமற்றும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நாம் நல்லதையே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்!!
பதிலளிநீக்குபிறகு தெய்வசங்கல்ப்பம் எப்படியோ! அதன்படியே நடக்கட்டும்!!
முத்தாய் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
50 க்கும் மேற்பட்ட படைப்புகளை மூன்றாம் கோணத்தில் வெளியிட்டேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
பதிவுலகத்தில் தங்கள் பயணித்த விதத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவிகரமாக இருந்தது..
பதிலளிநீக்குதொடர்ந்து பயணியுங்கள்..சக பயணியாய் நானும் தொடர்கிறேன்..
200 வது பதிவுக்கும் வாழ்த்துகள்..அத்துடன்
புத்தாண்டு வாழ்த்துகள்..
உங்கள் பதிவு வந்தவுடன் படிக்க ஆரம்பித்து விட்டேன். முழுவதும் படித்து முடித்து கருத்து எழுத வந்தால் அதற்குள் 10 கருத்துரைகள்!
பதிலளிநீக்கு200-வது பகிர்வுக்கு வாழ்த்துகள்...
மேலும் மேலும் பல பதிவுகள் எழுதி எங்களையும் மகிழ்விக்க வேண்டுகிறேன் - ஹெல்மெட் அணிந்து கொண்டாவது நீங்கள் பதிவுகள் போட வேண்டியதுதான்....:)
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
அடேயப்பா! எவ்வளவு பணி வாழ்த்துகள் ஐயா! உங்கள் பணி தொடரட்டும். இறை ஆசி கிட்டட்டும்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇருநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குஇதேபோல் சந்தோஷமாக ஜாலியாக குறும்பு மிளிர
நிறைய கதைகள் எழுதி எங்களை சந்தோஷப்படுத்துங்க .என் ஒரே கவலை இன்னும் என்னால் பல முறை முயற்சித்தும் /கொட்டாவி / சிறு கதைக்கு பின்னூட்டமிட முடியவில்லையே என்பதுதான் .still trying ............ROFL :))))
//2012 ஆம் ஆண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் நம் மனதை எப்போதும் நாம்ஜில்லென்று வைத்துக்கொள்ளவே முயற்சிப்போம்//
WELL SAID
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
200 பதிவுகள் முழுமையடைந்ததற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குமேலும் சிறப்பான பதிவுகள் தொடர்ந்து வருகை தருமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தங்களின் வலைப்பூவில் நான் முதல் பின்னூட்டமிட்டதை இங்கே நினைவு கூர்ந்ததற்கு அன்பு நன்றி!!
தங்களுக்கும் தங்கள் இல்லத்தரசிக்கும் குடும்பத்தினருக்கும் என் உளமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
//நிஜ வாழ்க்கையைவிட, நான் அடிக்கடி கற்பனை உலகில் சஞ்சரிப்பதில் அதிக மகிழ்ச்சி அடையக்கூடியவன்.// அதுதான் எல்லோருக்கும் தெரியுமே! ;)
பதிலளிநீக்குபடங்கள் எல்லாமே பொருத்தம்.
தரவுகளோடு, கட்டுரை அழகாக வந்திருக்கிறது அண்ணா.
உங்களுக்கு 2012 இப்போதுள்ளதை விட மகிழ்ச்சிதரும் ஆண்டாக அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
பெரிய பகிர்வாக இருந்தாலும் நிறைவான பகிர்வு..
பதிலளிநீக்குபுத்தாண்டில் இன்னும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகிறேன்...
முன்பெல்லாம் திருச்சி எனச் சொன்னால்
பதிலளிநீக்குமலைக் கோட்டையும் காவேரியும்தான் நினைவுக்கு வரும்
கடந்த ஓராண்டாக தங்கள் பதிவுகளுடன் கைகோர்த்து நடந்தததில்
திருச்சி என்றால் தங்கள் முகமும் பெயரும்தான் முதலில் நினைவுக்கு வருகிறது
ஓராண்டு சாதனையினை வழக்கம் போல் சாதாரண் நிகழ்வு போல்
விளக்கிச் சென்றுள்ளீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
அசாத்திய உழைப்பு!
பதிலளிநீக்கு[புத்தாண்டு வாழ்த்துக்கள்]
Dear Mr Gopalakrishnan
பதிலளிநீக்குThe year has been a great journey not only for you but also for ardent readers like me. Personally for me, the year was sort of a set back (to which I had reconciled, with a positive mindset) but towards the end of the year, by God's grace, I could see a light at the end of the tunnel.
Life, indeed, is a mystery. The lesson that I learnt is: Just live in the present, the future will take care of by itself. All along our life, we tend to live amongst unknown worries of the future that we fail to smell the roses today.
As you wrote, wherever we are in this world, immense goodwill towards each other connect us - writers, readers and commentators.
Many people have a lot of ideas but how many could convey their thoughts through skilful writings or stories that touch our hearts. Your stories belong to such categories.
May 2012 and beyond bring all happiness, good health and cheer for every one of us in this virtual world. Somehow I feel connected to each and every commentator here.
With warm regards to every one
Chandramouli Dharmarajan
நான் இதுவரை நேரில் சந்திக்காத, அந்த அன்பு உள்ளங்கள் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்தப்பகுதியில் இருந்தாலும், அவர்கள் இன்று போல என்றும் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும், வாழ்க்கையில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்புடன் மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்////மிக்க நன்றீ .. கோபால் சார். உங்க ஆசிர்வாதம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
பதிலளிநீக்குகாரசாரமாகவும், அங்கங்கே நச்சென்றும், சில இடங்களில் இனிப்பாகவும் நல்ல சுவை..:)
மின்னிதழ்கள் அனைத்திலும் தமிழ் மணத்திலும் வந்தமைக்கு பாராட்டுக்கள்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..
அப்புறம்.. ஒரு முக்கியமான விஷயம்.. உங்க நிலைமைதான் எங்க நிலைமையும்.. ப்லாகில் உக்காந்தாலே நம்மை ஏதோ ப்லாக் அடிமைகளைப் பார்ப்பது போல பாக்குறாங்க.. ஒய் ப்ளட்... ஹாஹாஹா சேம் ப்ளட்.. ஓகே டோண்ட் ஒர்ரி.. நம்ம திறமைகள் எல்லாம் அவங்களுக்கு சீக்கிரம் புரியும்.. நம்ம சாதனைகளை கைதட்டி அவங்களும் வரவேற்கும் காலம் வரும்..
இந்தவருடம் எனக்கு கிடைத்த நல்ல நட்புக்களில் நீங்களும் ஒருவர். கடவுளுக்கு நன்றி.. வாழ்க வளமுடன்.. நலமுடன்..:)
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஒரு வருடத்தில் 200 பதிவுகள் நீங்கள் சாதனையாளர் என்பதை உறுதி படுத்துகிறது.
உங்கள் உழைப்பும், மன உறுதியும், சந்தோஷமும் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும்.
மேலும் மேலும் நல்ல பதிவுகளை நீங்கள் அளிக்க வேண்டும்
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
200 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபின்னூட்டமே நீளமா போடற நீங்க போஸ்ட் மட்டும் சின்னதாவா போடுவீங்க, கலக்குங்க. ஒரே வாரத்துல 28 போஸ்ட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
200-க்கு நல்வாழ்த்துகள். தொடருங்கள்.
பதிலளிநீக்குபுத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளும்!!
உங்கள் பதிவுகளில் ரொம்பவும் ரசித்த பதிவு இது......அட நீங்களும் என்னைப் போல் தானா என்று நினைத்த இடங்கள் நிறைய :)
பதிலளிநீக்கு//என் கற்பனை உலகில் நான் நினைக்கும் நேரத்தில், நினைக்குமிடத்திற்கு, நினைக்கும் நபருடன் சுதந்திரப் பறவை போல பறந்து செல்வேன். //
பதிலளிநீக்குநானும் :) .............
மறக்க மனம் கூடுதில்லையே கதை படித்தேன், ரொம்பவும் பிடித்தது. அதிலுள்ள இயல்பான விவரிப்பு அருமை. மனதில் நின்ற பிடித்தமான கதைகளில் அதுவும் ஒன்றாகிப் போனது.
பதிலளிநீக்கு//அதுபோலவே பதிவு எழுதி ருசிகண்டவர் கையும் சும்மா இருக்காது அல்லவா!
பதிலளிநீக்கு//
எழுதுங்கள். தினம் ஒரு பதிவு படிப்பவர்களில் ஆர்வம் உள்ளவர்கள் பலர்.
உங்களின் பல சாதனைகள் பெருமைப்படக் கூடியவை. மென்மேலும் 2012 பல சாதனைகள், மகிழ்ச்சி கூடி, இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
தொடருங்கள்...
பல காரணங்களால் முன்போல என்னால் தொடர்ந்து வாசித்துப் பின்னூட்டம் இட முடிவதில்லை ஸ்ரீமான். கோபு சார். ஆனாலும் முடிந்தவரை படித்துவிடுகிறேன்.
பதிலளிநீக்கு//என்னுடைய ஒருசில சொந்தக்காரணங்களாலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் மாறுபட்ட குடும்பச் சூழ்நிலைகளாலும், இந்த 2012 ஆம் ஆண்டு போலவே, நாளை துவங்க இருக்கும் 2013 ஆம் ஆண்டிலும், தொடர்ந்து இதே வேகத்தில் என்னால் செயல்பட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.//
”சொறிபிடித்தவன் கை சும்மாயிருக்காது; அது எப்போதும் சொறிந்து கொண்டே தான் இருக்கும்” என்ற ஒரு பழமொழிக்கேற்ப 2012ன் முடிவில் நீங்கள் எழுதப் போகும் கட்டுரையும் மேலே சொன்னது போல அமையப் போகிறது.
உங்கள் கைக்குழந்தை சொல்லிக் கொடுத்த புதிய அறிமுகம் தீவிரமாக வேலை செய்கிறது என்பதை இந்த இடுகையில் உணர்ந்துகொண்டேன்.
வாழ்த்துக்கள்.
இது வரை படித்தது;
பதிலளிநீக்குசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
2012 லிருந்து பார்க்கப்போவது:
சாதாரணமானவன் தான் ஆனால் சாதித்தவன்”
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு''நான் ஏறிவந்த ஏணி, தோணி, கோணி 2011'' அருமை!
பதிலளிநீக்குநீங்கள் நாணிக் கொண்டே சொன்னாலும் கேணி ததும்பும் அளவு குதூகல விவரங்களுடன் தனிப் பாணியில் எழுத்தும் கதைகளும் கட்டுரைகளும் பேணிக் காக்க வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை.
இந்திய அரசியலமைப்பால் தரப்பட்ட அடிப்படை உரிமை 'கருத்து சுதந்திரம்'
பதிலளிநீக்குமுன்பெல்லாம் ஒரு கருத்தை, படைப்பை ஊடகத்தில் வெளியிடுவது என்பது மிகக் கடினம்.
இப்போது வலைப்பூ பலரின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிட வகை செய்துள்ளது.
அதை முழுமையாக, முழு வீச்சில் பயன்படுத்தி வரும் வெகு சிலர்களில் அய்யா வைகோ அவர்களும் ஒருவர் என்றால் அதில் மிகையில்லை. அவரது கருத்துகள், கதைகள் மனம் கவர் வண்ணம் உள்ளன என்பதற்கு அவரை பதிவுலகம் இனம் கண்டு அவருக்கு கொடுத்துள்ள அங்கீகாரம் மற்றும் மறுமொழிகள்.
ஏணி இல்லாவிட்டால் ஏற முடியாது.. தோணி இல்லாவிட்டால் கரை சேர முடியாது.. கேணி இல்லாவிட்டால் நீர் இல்லை.. நீர் இல்லாவிட்டால் உலகில்லை. வாழ்வியலின் முக்கிய அம்சங்களை அவர் நினைவு கூர்ந்து அவற்றை அவரது சிறப்பு மிக்க இப்பதிவின் தலைப்பாக வைத்துள்ளது பொருத்தமானது; வரவேற்கத்தக்கது.
எழுதுவது அவர் பணி; அவர் எழுத்து தனி; அவருக்கு திரண்டது அணி; பதிவுலகம் காத்திருக்கிறது இனி.
பதிவுலக நண்பர்கள், சக வலைஞர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துரைப்போம்.
புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்..
செல்வங்கள் உள்ளவரிடம் நிச்சயமாக கோணி இருக்கும், பத்திரப்படுத்த.
பதிலளிநீக்குஅவரது பதிவுகள் அனைத்தும் கணினி எனும் கோணி காலத்துக்கும் பயன்தரும் செல்வமாய் பத்திரப்படுத்தியுள்ளது.
வாழ்க வைகோ...
200 ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சார்..
பதிலளிநீக்குபடித்து பொறுமையாக சொல்வேன்...
மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...
பதிவுலகில் கோபு சாரின் புகழ் கொடி கட்டிப் பறக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கற்பனை உலகில் தீவிரமாக சஞ்சரித்து என்றும் நல் முத்துப் பதிவுகள் வெளியிட வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇருநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுலக பயணம் பிரமிக்க வைக்கின்றது. பாராட்டுக்கள்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சாதித்துகாட்டிட்டீங்க கோபால் சார். வாழ்த்துகள். இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇதுவரைக்கும் 2011ல் தாங்கள் இட்ட பதிவுகளும், தங்களுக்கு "கவர்ச்சிப்படங்கள்" இணைக்கக் கற்றுக்கொடுத்த கைக்குழந்தையையும் பற்றி அருமையாகச் சொல்லியிருந்தீர்கள்.
பதிலளிநீக்குஎப்படியோ சார், ஹெல்மெட் மாட்டிக்கொண்டாவது எழுதினால் சரி.
உங்களின் இன்னொரு பெரிய சாதனை உங்களுக்கு தெரியுமோ..?
இத்தனை சாதனைகளையும் சேகரித்து, ஒரு பதிவாகப் போட்டதே பெரிய சாதனைதான்...
தேர்வின் காரணமாய் கடந்த சில நாட்களாக என்னால் தங்களது வலைத்தளத்திற்கு வரமுடியவில்லை சார். மன்னிக்கனும்...
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும்...
- நுண்மதி
பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்கு2011 ஆம் ஆண்டின் தமிழ் மணப் பட்டியல் வரிசையில்
பதிலளிநீக்கு15ஆம் இடத்தைப் பெற்றமைக்கு என து மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
2011 ஆம் ஆண்டின் தமிழ் மணப் பட்டியல் வரிசையில்
பதிலளிநீக்கு15ஆம் இடத்தைப் பெற்றமைக்கு
மகிழ்ச்சி பொங்கும் இனிய வாழ்த்துகள் ஐயா.
2011 ஆம் ஆண்டின் தமிழ்மணம் முதல் 100 வலைப்பூக்கள் பட்டியல் வரிசையில்
பதிலளிநீக்கு15ஆம் இடத்தைப் பெற்றமைக்கு
மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.
தாமதமாக பின்னூட்டமிட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன் .
பதிலளிநீக்குஇருநூறாவது பதிவு மிக இனிமை.
நல்ல தெளிவான கட்டுரை.
உள்ளதை சொல்வேன் நல்லதை செய்வேன் வேறொன்றும் தெரியாது என்ற பாடல் வரிகளுக்கேற்ப
உங்கள் கட்டுரை பிரதிபலிக்கிறது.
ஆரம்ப காலம் முதலே நீங்கள் என்னை போன்ற பலருக்கு பல சமயங்களில் முன்னோடியாக இருக்கிறீர்கள்.
இதை பின்னூட்டம் மூலம் நிறைய பேருக்கு தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி .
தங்கள் ஓராண்டுச் சாதனை ரொம்பப் பெரிசு.
பதிலளிநீக்குநான் தங்களைவிட சிறியவன் எனினும் தாங்கள் மகிழ்ச்சியாக, நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
சென்ற ஆண்டு பதிவுலகில் சிறப்பானதாக அமைந்ததற்குப் பாராட்டுகள் வை.கோ சார். எத்தனை அழகா ஒவ்வொரு பதிவையும் தொகுத்து அற்புதமாப் பதிவிட்டிருக்கீங்க! பின்னூட்டங்களே எழுதுவதற்கான உற்சாகத்தை அளிக்கின்றன என்பதை ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க. மனத்தின் உணர்வுகளை நாசுக்காய் வெளிப்படுத்திய விதமும் அருமை. இந்த வருடமும் நலமாய் அமைய வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குசென்ற வருஷத்தைப் போலவே இந்த வருஷமும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஹெல்மெட்..... சேம் ப்ளட் :-)))))
அதுக்காக எழுதுறதை நிறுத்திருவோமாக்கும். விடமாட்டோமில்லே :-)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு200வது பதிவுக்குப் பாராட்டுக்கள்..
இன்னும் பல பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்..
200வது பதிவுக்கு வாழ்த்துகள் சார். இது போல் பல பதிவுகள் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்.
பதிலளிநீக்குதமிழ்மண பட்டியலிலும் 15வது இடத்தை பெற்றதற்கும் வாழ்த்துகள்.
கடந்த காலத்தை
பதிலளிநீக்குவகைப்படுத்திய விதமும்
வரிசைப் படுத்திய விதமும்
அருமை அய்யா...........
சார்,மாபெரும் சாதனையாளர்களில் நீங்களும் ஒருவர்.உங்கள் கற்பனை உலகம்,எழுத்து,பதிவுலக நட்புகள்,பாத்ரூம் கதை,உங்கள் மேலிடம்,இப்படி எல்லாமே ரசிக்கும்படி இருந்தது.இவ்வளவு விசியங்களை சுவையாக தெளிவாக எழுதுவது எளிதான விசியமல்ல.
பதிலளிநீக்குரோஜாப்பு படம் சூப்பர்.பதிவில் ஃபிகர் வைப்பது எங்களுக்காகன்னு நம்பிட்டேன்.தாமதமாக வந்தது வருத்தமாக உள்ளது.சென்ற வருடத்தைவிட இந்த வருடத்தில் மேலும் சிறப்பான படைப்புகளை படைக்க எல்லா சக்திகளும் தங்களுக்கு அருள் தரட்டும்.
முதலில் 200 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅடுத்து தங்களீன் திறமைகலை எண்ணி வியந்துபோயிருக்கிறேன்.
இன்னுமின்னும் பல நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும் இன்னும் பல்நிலைகளை எழுதுலகில் எட்டவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..
2011 ம் ஆண்டில் தங்கள் வலை உலக பயணத்தைப் பற்றி மிக அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்கு2012ம் வருடமும் தங்களிடமிருந்து நிறைய பதிவுகளை எதிப்பார்க்கிறோம்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே! என சந்தோஷம் மட்டுமே தரக்கூடியது. என் மனதுக்குப் பிடித்தவர்கள் மட்டுமே, என்னைச்சுற்றி அந்த கற்பனை உலகில் என்னுடன் இருக்கவோ, மகிழ்ச்சியுடன் என் உல்லாசத்தில் பங்குகொள்ளவோ அனுமதியுண்டு.
பதிலளிநீக்குஉங்கள் சந்தோஷம் உங்களுடையது மட்டுமல்ல.. அதில் எங்களுக்கும் பங்கு இருந்தது. 200 வது பதிவை எட்டியபோது நீங்கள் மனம் விட்டு பேசியதைப் படிக்க ஒரு புறம் உற்சாகம்.. இன்னொரு புறம் இனம் புரியாத ஒரு சங்கடம்..
உங்கள் பதிவுகள் முன்பு போல அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது வரும் என்று நம்புகிறேன். என்னைப் போல.. ஏன்.. என்னை விட உங்கள் மேல் அன்பு பாராட்டும் அத்தனை பேரும் நிச்சயம் உங்கள் பதிவுகளை எதிர்பார்ப்பார்கள்.
காத்திருக்கிறோம்.
என் கற்பனை உலகில் அழகழகான நறுமணம் வீசும் புஷ்பச்செடிகளும், பட்டாம்பூச்சிகளும் நிறைய உண்டு.
பதிலளிநீக்குஅற்புதம் ஐயா
வலைப்பூவில் மேலும் தஙகளின் படைப்புகள் எங்களையும் அந்த உலகத்தை உணரவைக்கும் என்பதில் ஐயமில்லை
மிகசிறந்த பதிவு உண்மையில் 200 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..பாராட்டுகளும் மனமுவந்த நன்றிகளும்
பதிலளிநீக்குஒரு வருட உங்கள் உழைப்பை தெளிவாகவும் அருமையாகவும் வெளிப்படுத்திஉள்ளீர்கள்.
பதிலளிநீக்குஇவ்வளவு அருமையான ஆக்கதிற்கு காரணமான "மணிராஜ்" க்கும் நன்றி.
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே! என சந்தோஷம் மட்டுமே தரக்கூடியது. என் மனதுக்குப் பிடித்தவர்கள் மட்டுமே, என்னைச்சுற்றி அந்த கற்பனை உலகில் என்னுடன் இருக்கவோ, மகிழ்ச்சியுடன் என் உல்லாசத்தில் பங்குகொள்ளவோ அனுமதியுண்டு.
பதிலளிநீக்குஎன் கற்பனை உலகில் அழகழகான நறுமணம் வீசும் புஷ்பச்செடிகளும், பட்டாம்பூச்சிகளும் நிறைய உண்டு. இன்பமாகப் புசிக்க ருசியான பழங்களும், உணவு வகைகளும் அங்கு ஏராளமாகவும் தாராளமாகவும் உண்டு.
விரோதிகள், எதிரிகள் என்று அங்கு யாருமே கிடையாது. எதைப்பற்றியதோர் பயமோ, கவலையோ, அச்சுறுத்தல்களோ எனக்கு என் கற்பனை உலகில் கிடையவே கிடையாது.
என் கற்பனை உலகில் நான் நினைக்கும் நேரத்தில், நினைக்குமிடத்திற்கு, நினைக்கும் நபருடன் சுதந்திரப் பறவை போல பறந்து செல்வேன். உல்லாசத்தில் அவர்களுடன் ஊஞ்சலாடி மகிழ்வேன்.
அங்கு தான் எனக்கு மனதில் புதிய வசந்தங்களும், புதுப்புது கற்பனைகளும் தோன்றும். அவற்றை என் மனதில் அப்படியே அழகாக படம் பிடித்துக்கொள்வேன். மனக்கண்ணில் படம் பிடிக்கப்பட்ட அவை உடனே என் மூளையில் பதிந்து விடுவதுண்டு. மூளையில் பதிந்த இந்த என் கற்பனை எண்ணங்களை என் கை விரல்கள் மிகச்சுலபமாக கணினியில் தட்டிவிடுவதும் உண்டு.
மிக அற்புதம்-இரசித்தேன்! தொடரட்டும் உம் படைப்பு அமுதங்கள்!
காரஞ்சன்(சேஷ்)
WOW!!!!! Pretty impressive!
பதிலளிநீக்குWe are proud of you.
தொடர்ந்து மென்மேலும் சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
200 பதிவுகளுக்கு,புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.பகிர்வு மிக அருமை கோபு சார்.
பதிலளிநீக்குவயதில் நீங்கள் பெரியவராக இருக்கலாம்
பதிலளிநீக்குஆனால் எழுதுவதில் நீங்கள் சுறு சுறுப்பு கொண்ட இளைஞர்தான் இன்றும்
பெயரில் மட்டும் நீங்கள் கோபால கிருஷ்ணன் அல்ல
உங்கள் எழுத்திலும் கோகுலகிருஷ்ணனின் குறும்புத்தனம் மிளிர்கிறது
முத்துகள் போன்று ஓவ்வொரு பதிவுகளாக சேர்த்து
இறுநூறவதுபதிவில் முத்துமாலை போல அழகாக தொகுத்து
நடந்து வந்த பாதைகளை வழங்கியது அருமை ஐயா
கொடுப்பதென்றால் கோகுல கிருஷ்ணனுக்கு பிடிக்கும்
ஆனால் இந்த கோபால கிருஷ்ணனுக்கோ பதிவுகளை
கோபுரமாய் அள்ளிதந்து மற்றவர்களை மகிழ்விக்க பிடிக்கும்.
படிப்பவர்கள் மனதுக்கு மட்டுமே தெரியும்
உங்களின் 200 ம் மலரை போல மலர்ந்து மணம்வீசிக்கொண்டு இருக்கிறது என்று.
வைகோ சார் எழுதும் போது குனிந்த உங்கள் தலை எழுதி முடித்தவுடன் உங்கள் தரமான எழுத்தை போல தலை நிமிர்ந்து நிற்கிறது
வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள். நீங்கள் பதிவு இடும் வேகத்திற்கு என்னால் உங்களை தொடர முடியவில்லை ஆனாலும் உங்களை நிழல் போல தொடர்ந்து பின் வருகிறேன் வாழ்க வளமுடன்
அன்புடன் மதுரைத்தமிழன்
200க்குப் பின் ஏன் எதுவும் இல்லை?
பதிலளிநீக்குபொங்கல் சிறப்பு வெளியீடாக வருகிறதா?வாழ்த்துகளுடன் -
அன்புள்ள வைகோ அவர்களுக்கு...
பதிலளிநீக்குவணக்கம்.
முதிர்ந்த அனுபவம் என்பது இதுதான். ஒரு அலுப்பில்லாத சோர்வு தராத மனக்களிப்போடு மன நிறைவோடு ஒரு கட்டுரையை வாசித்த மகிழ்ச்சி இருக்கிறது.
பாராட்டுக்கள்.
ஒவ்வொரு படைப்பாளனுக்கும் அவனின் எந்தவொரு படைப்பு பிரசவ வலியைப்போலத்தான். அதன் நிதர்சனத்தை தாங்கள் விடுபடாது தொடர்சித்திரமாய் படிப்பவர் மனதில் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். அருமை.
ஏணி, தோணி, கோணி என்று நகைச்சுவையான தலைப்புபோல தோன்றினாலும் அதன் ஆழத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. நமக்கு வலைப்பக்கம் உருவாக்கவும்.. அதனை இயக்கவும் ஒரு ஏணி தேவைப்படுகிறது. ஏறிவிட்டதாலேயே எல்லாம் கடந்துவிட்ட நிலை வந்துவிடாது. அதன் எல்லைகள் பரந்த கடலைப்போல ஒவ்வொன்றையும் நாம் அனுபவ்த்தில் உணரும்போது ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நாம் மனதுக்குப் பிடித்த ஒன்றைப் பதிவிடுகிறோம். அதற்கு வாசிக்கும் பதிவர்கள் நண்பர்கள் தோழிகள் கருத்துக்களைக் குறிப்பிடும்போது நாம் நம்முடைய பதிவில் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய சிந்தனைக்குத் தள்ளப்படுகிறோம். இதனால் கடல் பயணத்தில் நமக்கு தோணி தேவைப்படுகிறது..
நமக்கு நம்முடைய சிறப்பாகப் பட்டாலும் சிலவற்றைப் புறம்தள்ளி பின்னாளில் கோணிக்குள் தள்ளவேண்டிய நிலைப்பாட்டையும் நாம் எடுக்கிறோம். ஆனால் அதனை நாம் முழுமையும வெளிப்படுத்துவதில்லை.
இப்படி தலைப்பிலேயே உங்களின் தெளிவான போக்குடன் இந்தக் கட்டுரை பதிவர்களின் சிந்தனையைக் கிளறுகிறது. உங்களின் பன்முகப் பார்வைத் தளங்களில் கருத்தமைவுகளில் பல பதிவுகளைப் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்களின் நிலைப்பாட்டில் 200 பதிவுகள் உண்மையின் சாதனைகள். மனம் திறந்து பாராட்டுவதோடு நதி நிறைந்தோடுவதைப்போல மகிழ்ச்சியும் துள்ளுகிறது.
நீண்ட கட்டுரையில் ஒவ்வொரு பத்தியும் ஒரு உணர்வின் பங்களிப்பைக் காட்சிப்படுத்துகிறது. உங்களின் நேரம்...மனக்கிளர்ச்சி..சிந்தனையின் பரிவோட்டம்...பிரசுரமாகியிருக்கிற ஒவ்வொரு சொல்லின் பயன்பாடு இவையே வலைச்சரத்திலும்..தமிழ் மணத்திலும்..இண்ட்லியும் உங்கள் பதிவுகளை அதற்குரிய தரமான தளத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் என்ன செய்கிறோம் என்பதினும் எப்படிச் செய்கிறோம என்பது மிக முக்கியமானது. படைப்பாளி ஒரு சமுகப் போராளி. நீங்கள் அப்படித்தான். 200 என்ன இன்னும் ஏராளமாக சாதிப்பீர்கள். மனசுதான் எல்லாவற்றிற்கும் உங்களின் மாமலையின் ஆளுமைகொண்ட மனசால் எல்லாவற்றையும் இந்த ஆண்டில் மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டிலும் நாங்கள் தரிசிப்போம்.
நமது எல்லா இன்பங்களுக்கும்...அல்லது எல்லாப் பாரங்களுக்கும் நம்முடைய வலைப்பக்கம்தான் இளைப்பாறுதல் துறைமுகம்.. மட்டுமல்லாமல் நாம் அடுத்துப் பயணிக்கவேண்டிய இலக்கையும் தீர்மானிப்பது.
உங்களின் இந்த தொகுப்புரையாக அமைந்த 2011 கட்டுரை நல்ல கட்டமைப்புடன் கூடிய சொற்சித்திரம். ஓராண்டை ஒரு நலம்தரும் பழமாகத் தந்திருக்கிறீர்கள்.
என்னுடைய அன்பான நேசிப்புக்களையும் வாழ்த்துக்களையும் உங்களின் கட்டுரைக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன்.
வாய்ப்பமைவில் மறுபடியும் சந்திக்கலாம். இந்த நல்லப் பதிவிற்கு வித்திட்ட இராஜராஜேஸ்வரிக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Ayya enna inba athichi.
பதிலளிநீக்குEn blogil unngal comment.
I really really excited.
Do you know for the past one year i am your follower and blog reader.
I dont want to write in English in your blog. So Not given comments and silently enjoyed your writings bit by bit.
Not only that at Maniraj(Rajeswaris ) blog I never miss your comments. I can learn a lot and enjoy your Rasanai through your comments.
Thanks ayya mikavum Nandri.
valtha vayathu illai enave vanukkukiren unnkalai unkkal elluthukka.
viji
Ayya en Puduvaruda valthukkal marrtum pongal nal valthukkal especially your loving grand little one.
பதிலளிநீக்குviji
தங்களைப்போல அனுபவம் வாய்ந்தவர்கள்
பதிலளிநீக்குஎங்களுடன் பதிவுலகில் இருப்பது நாங்கள் செய்த புண்ணியம்.
தங்களின் பணி மேலும் மேலும் தொடர இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
தங்களின் இருநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//"நான் ஏறி வந்த ஏணி, தோனி, கோணி!
முழுவிருந்தாய் ரசிக்கும் பகிர்வுக்குப் பாயசமாய் படங்கள்..
கறிவேப்பிலையாய் மணந்து,
நாரத்தையாய் ருசிக்கும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.//
முழுவிருந்து படைத்தது மட்டுமே நான் படைக்கச் சொன்னது தாங்கள் அல்லவோ.
அது மட்டுமா, முழு விருந்து படைக்க
மளிகை சாமான்கள், காய்கறிகள், எரிபொருள், பாத்திரம் பண்டங்கள், சமைக்க நல்ல இடம் என அனைத்து செளகர்யங்களையும் எனக்காக தாங்களே செய்து கொடுத்து, எப்படிச் சமைக்கிறேன் என்று கூடவே இருந்து உற்சாகப்படுத்தி, பிறகு முதல் நபராக வந்தமர்ந்து, ஒவ்வொரு பதார்த்தமாக ரஸித்து ருஸித்துப் பார்த்து, ஒவ்வொன்றையும் தனித்தனியே ஒரு முறையல்ல இருமுறையல்ல ஒன்பது முறை பாராட்டி, ஒன்பது அழகிய செந்தாமரைகளால் அர்ச்சித்து இந்தப் பதிவிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்.
தங்களின் அனைத்துக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள vgk
அருமையாய் பதிலுரைகள் அளித்து கருத்துரைகளைச் சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
பதிலளிநீக்குமகேந்திரன் said...
பதிலளிநீக்கு//அன்புநிறை ஐயா,
இந்த வருடத்தின் பதிவுலகில் சந்தித்த
அத்தனைகளையும் அழகுற தொகுத்திருக்கிறீர்கள்.//
தொகுப்பின் அழகை ரசித்து அழ்குறச்சொல்லியுள்ளது அழகாகவே உள்ளது, நண்பரே!
//இங்கே என்னுடைய வலைச்சரப் பதிவையும் எடுத்துக் காட்டியமைக்கு நன்றிகள் பல.
தங்களைப்போல அனுபவம் வாய்ந்தவர்கள்
எங்களுடன் பதிவுலகில் இருப்பது நாங்கள் செய்த புண்ணியம்.
தங்களின் பணி மேலும் மேலும் தொடர இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.//
தாங்கள் என்னைப்பற்றி வலைச்சரத்தில் மிகவும் பாராட்டி எழுதியுள்ள கீழ்க்கண்ட வரிகளை எவ்வாறு என்னால் மறக்க முடியும்?
================================
அனுபவத்தில் முதிர்ந்தவர் ஐயா.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தன் வலைப்பூவில் ஊரைச் சொல்லவா?!! பேரைச் சொல்லவா?!! என்று ஆரம்பித்து திருச்சிராப்பள்ளியின் ஆழ அகலங்களை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து, வரலாற்று ஆதாரங்களுடன் அழகாக பேசுகிறார். திருச்சிராப்பள்ளி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்த பதிவை பார்த்தாலே போதுமானது.. அவ்வளவு விஷயங்கள்..
இதோ அவருக்காக...
முதலடி எடுத்துவைச்சேன்
மூத்தோரை வணங்கிடவே!
இரண்டாமடி எடுத்துவைச்சேன்
அனுபவத்தை ஏற்றிடவே!
மூனாமடி எடுத்துவைச்சேன்
ஆவணத்தை காத்திடவே!
நாலாமடி எடுத்துவைச்சேன்
நாற்புறமும் கொண்டுசெல்ல!!
===========================
//தங்களின் இருநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நண்பரே!
அன்புடன் வருகை தந்து, பல அரிய கருத்துக்களைக்கூறி என்னைப் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்துள்ள
பதிலளிநீக்குதிருவாளர்கள்:
-------------
மதுமதி அவர்கள்
வெங்கட் நாகராஜ் அவர்கள்
ரத்னவேல் ஐயா அவர்கள்
தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்
அப்பாதுரை ஐயா அவர்கள்
சி.பி.செந்தில்குமார் அவர்கள்
Dr.P. Kandaswamy ஐயா அவர்கள்
Nizamudeen அவர்கள்
A R Rajagopalan அவர்கள்
E S Seshadri அவர்கள்
சென்னை பித்தன் ஐயா அவர்கள்
புலவர் சா.இராமநுசம் ஐயா அவர்கள்
திருமதிகள்:
-----------
KOVAIKKAVI அவர்கள்
கோமதி அரசு அவர்கள்
ராமலக்ஷ்மி அவர்கள்
மஞ்சுபாஷிணி அவர்கள்
மாதேவி அவர்கள்
LAKSHMI அம்மா அவர்கள்
இந்திரா அவர்கள்
அன்புடன் மலிக்கா அவர்கள்
RAMVI அவர்கள்
மாலதி அவர்கள்
ASIA OMAR அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் vgk
Ramani said...
பதிலளிநீக்கு//முன்பெல்லாம் திருச்சி எனச் சொன்னால்
மலைக் கோட்டையும் காவேரியும்தான் நினைவுக்கு வரும்
கடந்த ஓராண்டாக தங்கள் பதிவுகளுடன் கைகோர்த்து நடந்தததில்
திருச்சி என்றால் தங்கள் முகமும் பெயரும்தான் முதலில் நினைவுக்கு வருகிறது.//
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் ஆகிய தாங்கள். என்னை எங்கள் ஊர் மலைக்கோட்டை+காவிரி நதி க்கும் மேல் திருச்சி என்றாலே இன்று என் பெயரும் உருவமும் தான் முதலில் தங்கள் நினைவுக்கு வருகிறது என்று சொல்வது, மிகவும் மிகைப்படுத்தல் என்றாலும் .....
”கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு”
என்று சொல்வார்கள்.
அது ஏனோ என் நினைவுக்கு வந்து விட்டது கவிஞர் ஐயா! ;))))
//ஓராண்டு சாதனையினை வழக்கம் போல் சாதாரண் நிகழ்வு போல்
விளக்கிச் சென்றுள்ளீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
அன்புடன் vgk
D. Chandramouli said...
பதிலளிநீக்கு//Dear Mr Gopalakrishnan
The year has been a great journey not only for you but also for ardent readers like me. Personally for me, the year was sort of a set back (to which I had reconciled, with a positive mindset) but towards the end of the year, by God's grace, I could see a light at the end of the tunnel.
Life, indeed, is a mystery. The lesson that I learnt is: Just live in the present, the future will take care of by itself. All along our life, we tend to live amongst unknown worries of the future that we fail to smell the roses today.
As you wrote, wherever we are in this world, immense goodwill towards each other connect us - writers, readers and commentators.
Many people have a lot of ideas but how many could convey their thoughts through skilful writings or stories that touch our hearts. Your stories belong to such categories.
May 2012 and beyond bring all happiness, good health and cheer for every one of us in this virtual world. Somehow I feel connected to each and every commentator here.
With warm regards to every one
Chandramouli Dharmarajan//
Dear Sir,
Welcome to you!
//எவ்வளவோ பேர்களுக்கு எவ்வளவோ எண்ணங்கள் மனதில் இருக்கக்கூடும்.
ஆனால் அதை எவ்வளவு பேர்களால், உங்களைப்போல தங்களின் எழுத்துத் திறமைகளால், தரமான சிறந்த சிறுகதைகளாக மாற்றி, சுவைபட எங்களுக்கு விருந்தாகத் தர முடியும்?//
என்று தாங்கள் எழுதியுள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.
எல்லாவற்றிற்கும் இறைவன் தந்த அருளும், தங்களைப்போன்றவர்கள் அவ்வப்போது தரும் உற்சாகமும் மட்டுமே காரணம் என்பதைச் சொல்லிக்கொண்டு, நன்றி கூறுகிறேன். வணக்கம்.
அன்புடன் vgk
சுந்தர்ஜி said...
பதிலளிநீக்கு//பல காரணங்களால் முன்போல என்னால் தொடர்ந்து வாசித்துப் பின்னூட்டம் இட முடிவதில்லை ஸ்ரீமான். கோபு சார். ஆனாலும் முடிந்தவரை படித்துவிடுகிறேன்.//
ஆரம்ப நாட்களில் எவ்வளவோ முறை மிகச்சிறந்த கருத்துக்கள் கூறி, என்னைப்பாராட்டியுள்ளீர்கள், சார்.
அதை என்னால் எப்படி மறக்க முடியும்?
என்னுடைய கற்பனை எஞ்சினை நன்கு ஸ்பீடாக ஸ்டார்ட் செய்து கொடுத்து விட்டு, பிறகு தான் எங்கோ போய்விட்டீர்கள்.
நீங்கள் தட்டிவிட்ட அந்த என் கற்பனை எஞ்சின் தான் இன்று வரை பழுதில்லாமல் ஏதோ ஓடி வருகிறது, என்பேன்.
//உங்கள் கைக்குழந்தை சொல்லிக் கொடுத்த புதிய அறிமுகம் தீவிரமாக வேலை செய்கிறது என்பதை இந்த இடுகையில் உணர்ந்துகொண்டேன்.
வாழ்த்துக்கள்.//
அடடா! கவர்ச்சிப்படங்கள் ஏதும் இல்லாமல் நான் எழுதிய முதல் ஆறு மாதப் பதிவுகள் மட்டுமே, பார்த்து மகிழ்ந்துள்ள உங்களுக்கு, இந்த என் படங்களுடனான இடுகை அதை நன்கு உணர்த்தியிருக்கும் என்பதை நானும் உணர்கிறேன்.
நாம் இருவரும் நிகழ்த்திய முதல் டெலிபோன் உரையாடலை நினைத்துக்கொண்டேன். புரையேறி விட்டது, அவ்வளவு சிரிப்பல்லவோ அது. உங்களையும் அந்த மகிழ்ச்சியான தருணத்தையும் நான் மறக்க முடியுமா, என்ன?
நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.
அன்புடன் கோபு
Manakkal said...
பதிலளிநீக்கு//இது வரை படித்தது;
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
2012 லிருந்து பார்க்கப்போவது:
சாதாரணமானவன் தான் ஆனால் சாதித்தவன்”
புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
Dear Sir,
சாதித்தவன் என்று தாங்கள் சொல்வது தங்களின் சொந்தக்கருத்தாக இருந்தாலும், என்னைவிட சாதித்தவர்கள், சாதித்துக்கொண்டிருப்பவர்கள், சாதிக்கப்போகிறவர்கள்
பட்டியலைப் பார்க்கும் எனக்கு இதெல்லாம் ஒரு சாதனையாகவே சொல்லிக்கொள்ள முடியவில்லை.
நான் எப்போதுமே மிகச் சாதாரணமானவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
அதனால் தான் தங்களைப்போன்ற பாசமுள்ள, உள்ளன்பு கொண்ட, என் நலம் விரும்பிகள் பலரின் நட்பு பின்னூட்டங்கள் மூலம் எனக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
அதில் தான் என் மன மகிழ்ச்சியும், வெற்றியும் அடங்கியுள்ளதாக நான் கருதுகிறேன்.
வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் கோபு
கே. பி. ஜனா... said...
பதிலளிநீக்கு//''நான் ஏறிவந்த ஏணி, தோணி, கோணி 2011'' அருமை!
நீங்கள் நாணிக் கொண்டே சொன்னாலும் கேணி ததும்பும் அளவு குதூகல விவரங்களுடன் தனிப் பாணியில் எழுத்தும் கதைகளும் கட்டுரைகளும் பேணிக் காக்க வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை.//
Dear Sir,
எழுத்திலகில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் சிலரின் பட்டியலில் உள்ள தங்களின் இந்த வரிகள் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.
மிக்க நன்றி, சார்.
அன்புடன் vgk
Advocate P.R.Jayarajan said...
பதிலளிநீக்கு//இந்திய அரசியலமைப்பால் ..... சுதந்திரமாக வெளியிட வகை செய்துள்ளது.
அதை முழுமையாக, முழு வீச்சில் பயன்படுத்தி வரும் வெகு சிலர்களில் அய்யா வைகோ அவர்களும் ஒருவர் என்றால் அதில் மிகையில்லை.
அவரது கருத்துகள், கதைகள் மனம் கவர் வண்ணம் உள்ளன என்பதற்கு அவரை பதிவுலகம் இனம் கண்டு அவருக்கு கொடுத்துள்ள அங்கீகாரம் மற்றும் மறுமொழிகள்.
அவர் நினைவு கூர்ந்து அவற்றை அவரது சிறப்பு மிக்க இப்பதிவின் தலைப்பாக வைத்துள்ளது பொருத்தமானது; வரவேற்கத்தக்கது.
எழுதுவது அவர் பணி; அவர் எழுத்து தனி; அவருக்கு திரண்டது அணி; பதிவுலகம் காத்திருக்கிறது இனி.
பதிவுலக நண்பர்கள், சக வலைஞர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துரைப்போம்.
நல்வாழ்த்துகள்..
செல்வங்கள் உள்ளவரிடம் நிச்சயமாக கோணி இருக்கும், பத்திரப்படுத்த.
அவரது பதிவுகள் அனைத்தும் கணினி எனும் கோணி காலத்துக்கும் பயன்தரும் செல்வமாய் பத்திரப்படுத்தியுள்ளது.
வாழ்க வைகோ...//
Dear Sir,
தங்கள் அன்பான வருகை + நீண்ட விளக்கமான வாழ்த்துரைகள் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன. மிக்க நன்றி சார்.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்கு//பதிவுலகில் கோபு சாரின் புகழ் கொடி கட்டிப் பறக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கற்பனை உலகில் தீவிரமாக சஞ்சரித்து என்றும் நல் முத்துப் பதிவுகள் வெளியிட வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
Respected Sir,
வணக்கம்.
தங்களின் அன்பான வருகையும், ஆதரவான கருத்துக்களும் என்னை மகிழ்வடையச் செய்துள்ளன.
வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.
கணேஷ் said...
பதிலளிநீக்கு//தாமதமாக பின்னூட்டமிட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன் .
இருநூறாவது பதிவு மிக இனிமை.
நல்ல தெளிவான கட்டுரை.
உள்ளதை சொல்வேன் நல்லதை செய்வேன் வேறொன்றும் தெரியாது என்ற பாடல் வரிகளுக்கேற்ப
உங்கள் கட்டுரை பிரதிபலிக்கிறது.
ஆரம்ப காலம் முதலே நீங்கள் என்னை போன்ற பலருக்கு பல சமயங்களில் முன்னோடியாக இருக்கிறீர்கள்.
இதை பின்னூட்டம் மூலம் நிறைய பேருக்கு தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.//
My Dear Ganesh,
உன் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் கவர்ந்தன.
”உள்ளதைச் சொல்வேன்
நல்லதைச் செய்வேன்
வேறொன்றும் தெரியாது”
உண்மைதான் கணேஷ். வேறென்ன ஒருவருக்குத் தெரிய வேண்டும்?
இது ஒன்று போதுமே உன் அன்பு மாமனுக்கு!
பிரியத்துடன்
கோபு மாமா.
உங்கள் பதிவுகளை மிக ஆர்வமாகப் படிப்பவன். தமிழ் வேகமாக கணினியில் அடிக்க வருவதில்லை. எனவே பல முறை பின்னோட்டம் இடமுடியவில்லை.
பதிலளிநீக்குசென்ற ஆண்டைப் போலவே மிகச் சிறப்பான பதிவுகள் இந்த ஆண்டும் எங்கள் பார்வைக்கு இடுவீர்கள் என்ற எங்களின் நம்பிக்கை உங்களுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை ஐயா.
அன்புடன்,
வெங்கட்.
ரிஷபன் said...
பதிலளிநீக்கு//ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே! என சந்தோஷம் மட்டுமே தரக்கூடியது. என் மனதுக்குப் பிடித்தவர்கள் மட்டுமே, என்னைச்சுற்றி அந்த கற்பனை உலகில் என்னுடன் இருக்கவோ, மகிழ்ச்சியுடன் என் உல்லாசத்தில் பங்குகொள்ளவோ அனுமதியுண்டு.
உங்கள் சந்தோஷம் உங்களுடையது மட்டுமல்ல.. அதில் எங்களுக்கும் பங்கு இருந்தது.//
நிச்சயமாக சார். அதுவும் உங்கள் பங்கு மிக மிக அதிகம்.
நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் நான், ”யாரோ ... இவர் யாரோ? ... ஊர் பேர் தான் தெரியாதோ!”
என்றல்லவா ஆகியிருப்பேன்!!
//200 வது பதிவை எட்டியபோது நீங்கள் மனம் விட்டு பேசியதைப் படிக்க ஒரு புறம் உற்சாகம்.. இன்னொரு புறம் இனம் புரியாத ஒரு சங்கடம்..
உங்கள் பதிவுகள் முன்பு போல அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது வரும் என்று நம்புகிறேன்.//
எனக்குள்ள பிரத்யேகப்பிரச்சனைகளை [தேவ ரகசியங்களை] அன்று நாம் ரூம் போட்டு (ஏ.ஸி. ரூம் போட்டு) என் வீட்டில் தனிமையில் பதிவர் சந்திப்பு நடத்திய போதே வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். வெங்கட் நாகராஜ் + இராமமூர்த்தி கூட உடன் இருந்தனர் சாட்சிக்காக.
என் இந்தப்பதிவிலும் அதைப்பற்றி நாசூக்காக சொல்லியிருக்கிறேன். எனக்கும் தினம் ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை தான் உள்ளது.
என்ன செய்வது அதற்கான இன்பமயமான சூழல் உருவாகவில்லையே, இன்னும்.
ஏதோ அதுவரை என் மனநிம்மதிக்காக ஒரே ஒரு பதிவரின் பதிவுக்கு அடிக்கடி சென்று, அவர்கள் அளிக்கும் உயிர்ப்புள்ள தெய்வங்களுடன் அப்படியே நேரில் பேசி மகிழ்கிறேன்.
அதைத்தவிர தங்களைப்போன்ற ஏதோ வேறு ஒருசிலரின் பதிவுகளுக்கும் சென்று மகிழ்கிறேன். இப்போதைக்கு இதற்கு மட்டுமே தினம் 1 மணி நேரம் மட்டும் Permission is granted.
அதையும் நான் தூக்கம் வராத நள்ளிரவுகளில் தான் பெரும் பாலும் பயன்படுத்தி வருகிறேன்.
//என்னைப் போல.. ஏன்.. என்னை விட உங்கள் மேல் அன்பு பாராட்டும் அத்தனை பேரும் நிச்சயம் உங்கள் பதிவுகளை எதிர்பார்ப்பார்கள்.//
தங்களை விட என் மேல் அன்பு பாராட்டுபவர்களா? அது யார் சார்?
அப்படியெல்லாம் யாரும் எனக்குத் தெரியவில்லை. எல்லோருமே உங்களின் தூய அன்புக்குப்பிறகு தான்.
பத்திரிகை உலகுக்கு முதலில் என்னைக் கொண்டு செல்ல ஊக்குவித்து உதவிய முதல் “ஏணி” யும் நீங்களே!
பதிவு உலகுக்கு என்னை அறிமுகப்படுத்திய முதல் ”தோணி”யும் நீங்களே!!
சிறுகதைத் தொகுப்பு வெளியீடுகள் போடச்சொல்லி என்னை வற்புருத்தி
அவற்றைக் “கோணி” இல் கட்டி அனைவருக்கும் அன்பளிப்பாக நாம் வினியோகித்தபோது உதவியவரும் நீங்களே!!!
இதையெல்லாம் விஸ்தாரமாக இந்தப்பதிவில் சொல்ல வேண்டும் என்று தான் எனக்கும், ஆசையாக இருந்தது.
ஏற்கனவே பலமுறை தங்களைப்பற்றி நான் என் பதிவுகளில் எழுதியபோது, தாங்கள் தங்களுக்கே உரிய மிகுந்த தன்னடகத்தோடு கூறிய சில விஷயங்களால் மட்டுமே, நான் தங்கள் பெயரையோ புகைப்படங்களையோ என் இந்தப்பதிவினில் கொண்டுவரவில்லை.
//காத்திருக்கிறோம்.//
மிக்க நன்றி, சார்.
காலம் கனியும் வரை காத்திருப்போம்.
தங்கள் மேல் என்றும்
அதிக பிரியமுள்ள உங்கள் வீஜீ ;))))) vgk
Avargal Unmaigal said...
பதிலளிநீக்கு//வயதில் நீங்கள் பெரியவராக இருக்கலாம். ஆனால் எழுதுவதில் நீங்கள் சுறு சுறுப்பு கொண்ட இளைஞர்தான் இன்றும் பெயரில் மட்டும் நீங்கள் கோபாலகிருஷ்ணன் அல்ல உங்கள் எழுத்திலும் கோகுலகிருஷ்ணனின் குறும்புத்தனம் மிளிர்கிறது
முத்துகள் போன்று ஓவ்வொரு பதிவுகளாக சேர்த்து இறுநூறாவது பதிவில் முத்துமாலை போல அழகாக தொகுத்து நடந்து வந்த பாதைகளை வழங்கியது அருமை ஐயா.
கொடுப்பதென்றால் கோகுல கிருஷ்ணனுக்கு பிடிக்கும். ஆனால் இந்த கோபால கிருஷ்ணனுக்கோ பதிவுகளை கோபுரமாய் அள்ளிதந்து மற்றவர்களை மகிழ்விக்க பிடிக்கும்.
படிப்பவர்கள் மனதுக்கு மட்டுமே தெரியும், உங்களின் 200 ம் மலரை போல மலர்ந்து மணம்வீசிக்கொண்டு இருக்கிறது என்று.
வைகோ சார் எழுதும் போது குனிந்த உங்கள் தலை எழுதி முடித்தவுடன் உங்கள் தரமான எழுத்தை போல தலை நிமிர்ந்து நிற்கிறது
வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்.
நீங்கள் பதிவு இடும் வேகத்திற்கு என்னால் உங்களை தொடர முடியவில்லை.
ஆனாலும் உங்களை நிழல் போல தொடர்ந்து பின் வருகிறேன் வாழ்க வளமுடன்.
அன்புடன் மதுரைத்தமிழன்//
அன்புடன் வருகை தந்து மிக நீண்ட பின்னூட்டம் கொடுத்து பாராட்டியுள்ள மதுரைத்தமிழனின் வரிகள் என்னை மகிழ்விப்பதாகவே உள்ளன.
மிக்க நன்றி, நண்பரே!
ஹ ர ணி said...
பதிலளிநீக்கு//அன்புள்ள வைகோ அவர்களுக்கு...
வணக்கம்.//
வாங்க ஐயா, வணக்கம் ஐயா.
//முதிர்ந்த அனுபவம் என்பது இதுதான். ஒரு அலுப்பில்லாத சோர்வு தராத மனக்களிப்போடு மன நிறைவோடு ஒரு கட்டுரையை வாசித்த மகிழ்ச்சி இருக்கிறது.
பாராட்டுக்கள்.//
மிக்க நன்றி, ஐயா. எனக்கும் இதைக் கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.
//ஒவ்வொரு படைப்பாளனுக்கும் அவனின் எந்தவொரு படைப்பும் பிரசவ வலியைப்போலத்தான். அதன் நிதர்சனத்தை தாங்கள் விடுபடாது தொடர்சித்திரமாய் படிப்பவர் மனதில் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். அருமை.//
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள், ஐயா. நன்றி.
//ஏணி, தோணி, கோணி என்று நகைச்சுவையான தலைப்புபோல தோன்றினாலும் அதன் ஆழத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. நமக்கு வலைப்பக்கம் உருவாக்கவும்.. அதனை இயக்கவும் ஒரு ஏணி தேவைப்படுகிறது. ஏறிவிட்டதாலேயே எல்லாம் கடந்துவிட்ட நிலை வந்துவிடாது. அதன் எல்லைகள் பரந்த கடலைப்போல ஒவ்வொன்றையும் நாம் அனுபவ்த்தில் உணரும்போது ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நாம் மனதுக்குப் பிடித்த ஒன்றைப் பதிவிடுகிறோம். அதற்கு வாசிக்கும் பதிவர்கள் நண்பர்கள் தோழிகள் கருத்துக்களைக் குறிப்பிடும்போது நாம் நம்முடைய பதிவில் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய சிந்தனைக்குத் தள்ளப்படுகிறோம். இதனால் கடல் பயணத்தில் நமக்கு தோணி தேவைப்படுகிறது..
நமக்கு நம்முடைய சிறப்பாகப் பட்டாலும் சிலவற்றைப் புறம்தள்ளி பின்னாளில் கோணிக்குள் தள்ளவேண்டிய நிலைப்பாட்டையும் நாம் எடுக்கிறோம். ஆனால் அதனை நாம் முழுமையும வெளிப்படுத்துவதில்லை.
இப்படி தலைப்பிலேயே உங்களின் தெளிவான போக்குடன் இந்தக் கட்டுரை பதிவர்களின் சிந்தனையைக் கிளறுகிறது.//
தலைப்பு வைத்ததுபற்றி தாங்கள் கூறும் கருத்துக்கள் புதியதொரு பார்வையாகவும், பொருள் தரும் சொற்களாகவும் புரியும்படியும் உள்ளன. மிக்க நன்றி, ஐயா.
//உங்களின் பன்முகப் பார்வைத் தளங்களில் கருத்தமைவுகளில் பல பதிவுகளைப் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்களின் நிலைப்பாட்டில் 200 பதிவுகள் உண்மையின் சாதனைகள். மனம் திறந்து பாராட்டுவதோடு நதி நிறைந்தோடுவதைப்போல மகிழ்ச்சியும் துள்ளுகிறது.//
துள்ளியோடிவரும் நதிநீர் போன்ற தங்களின் மனமகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டுக்களுக்கு, என் மனம் நிறைந்த நன்றிகள், ஐயா.
//நீண்ட கட்டுரையில் ஒவ்வொரு பத்தியும் ஒரு உணர்வின் பங்களிப்பைக் காட்சிப்படுத்துகிறது. உங்களின் நேரம்...மனக்கிளர்ச்சி..சிந்தனையின் பரிவோட்டம்...பிரசுரமாகியிருக்கிற ஒவ்வொரு சொல்லின் பயன்பாடு இவையே வலைச்சரத்திலும்..தமிழ் மணத்திலும்..இண்ட்லியும் உங்கள் பதிவுகளை அதற்குரிய தரமான தளத்தில் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.//
ஆதரவான தங்களின் பாராட்டுக்கள் எனக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மிகவும் சந்தோஷம் ஐயா.
//நாம் என்ன செய்கிறோம் என்பதினும் எப்படிச் செய்கிறோம என்பது மிக முக்கியமானது.//
நான் என் மனதில் எப்போதும் என்ன நினைக்கிறேனோ அதையே தாங்களும் இங்கு சொல்லியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, ஐயா.
//படைப்பாளி ஒரு சமுகப் போராளி. நீங்கள் அப்படித்தான். 200 என்ன இன்னும் ஏராளமாக சாதிப்பீர்கள். மனசுதான் எல்லாவற்றிற்கும் உங்களின் மாமலையின் ஆளுமைகொண்ட மனசால் எல்லாவற்றையும் இந்த ஆண்டில் மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டிலும் நாங்கள் தரிசிப்போம்.
நமது எல்லா இன்பங்களுக்கும்...அல்லது எல்லாப் பாரங்களுக்கும் நம்முடைய வலைப்பக்கம்தான் இளைப்பாறுதல் துறைமுகம்.. மட்டுமல்லாமல் நாம் அடுத்துப் பயணிக்கவேண்டிய இலக்கையும் தீர்மானிப்பது.
உங்களின் இந்த தொகுப்புரையாக அமைந்த 2011 கட்டுரை நல்ல கட்டமைப்புடன் கூடிய சொற்சித்திரம். ஓராண்டை ஒரு நலம்தரும் பழமாகத் தந்திருக்கிறீர்கள்.
என்னுடைய அன்பான நேசிப்புக்களையும் வாழ்த்துக்களையும் உங்களின் கட்டுரைக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன்.//
தாங்கள் இவ்வாறு மனம் திறந்து மிக நீண்ட இந்தப் பின்னூட்டத்தின் மூலம் என்னைப் பாராட்டியுள்ளது எனக்கு மிகவும் உற்சாகம் தரக்கூடியதாக உள்ளது, ஐயா! ;))))
மிக்க நன்றி, நன்றி, நன்றி.
//வாய்ப்பமைவில் மறுபடியும் சந்திக்கலாம்.//
வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே என் ஆசையும் கூட. பார்ப்போம். இறைவன் சித்தம் எப்படியோ?
//இந்த நல்லப் பதிவிற்கு வித்திட்ட இராஜராஜேஸ்வரிக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//
இந்த நல்லப் பதிவிற்கு, வித்திட்ட திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பார்வைக்கு, இந்தத்தங்களின் விலைமதிப்பற்ற கருத்துரைகள், மின்னஞ்சல் மூலம் என்னால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை நன்றியுடன் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் vgk
வணக்கம்,
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
angelin said...
பதிலளிநீக்கு//இருநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதேபோல் சந்தோஷமாக ஜாலியாக குறும்பு மிளிர நிறைய கதைகள் எழுதி எங்களை சந்தோஷப்படுத்துங்க.//
மிகவும் சந்தோஷம் மேடம். முயற்சிக்கிறேன்.
//என் ஒரே கவலை இன்னும் என்னால் பல முறை முயற்சித்தும் /கொட்டாவி / சிறு கதைக்கு பின்னூட்டமிட முடியவில்லையே என்பதுதான் .still trying ............ROFL :))))//
அதனால் பரவாயில்லை. அதைப் படித்து விட்டு, நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதாகச் சொல்லி ROFL என்று சொல்லியுள்ளதே, எனக்கு மிகச்சிறந்த பின்னூட்டம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக்கும்.;))))
//2012 ஆம் ஆண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் நம் மனதை எப்போதும் நாம்ஜில்லென்று வைத்துக்கொள்ளவே முயற்சிப்போம்//
/WELL SAID/
இது தங்களுக்காகவே நான் பிரத்யேகமாக எழுதியது. சரியான புரிதலுக்கும், குறிப்பிட்டுள்ளதற்கும் மிக்க நன்றி.
/இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்/
அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் vgk
மனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்கு//200 பதிவுகள் முழுமையடைந்ததற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!
மேலும் சிறப்பான பதிவுகள் தொடர்ந்து வருகை தருமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.//
நம்பிக்கை தானே வாழ்க்கை. நானும் அதே நம்பிக்கையில் தான் உள்ளேன்.
பார்ப்போம். தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு, என் மனமார்ந்த நன்றிகள், சகோதரியே!
//தங்களின் வலைப்பூவில் நான் முதல் பின்னூட்டமிட்டதை இங்கே நினைவு கூர்ந்ததற்கு அன்பு நன்றி!!//
தாங்கள் நவம்பர் டிஸம்பர் 2010 இல் எனக்கு நிறைய மெயில்கள் கொடுத்து, என்னை கட்டாயமாக பதிவு எழுதச்சொல்லி சொன்னீர்கள்.
பதிவிடுவதால் அது நம் எண்ணங்களுக்கு, ஒரு சிறந்த வடிகாலாக அமையும் என்றீர்கள்.
அதன்பிறகே நான் தட்டுத்தடுமாறி அந்த என் முதல் பதிவினை
02.01.2011 அன்று வெளியிட்டேன்.
”இனி துயரம் இல்லை” என்ற அந்தத் தலைப்பும் பொருத்தமாக அமைந்தது.
அதாவது பதிவிடுவதில் எனக்கு இனி துயரம் ஏதும் இல்லை என்பது போல.
பிறகு உங்களுக்கும் அதுபற்றி நான் தகவல் கொடுத்தேன் என்று நினைக்கிறேன். உடனே வந்து தாங்கள் தான் முதல் பின்னூட்டம் அளித்தீர்கள்.
பிறகு நாம் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் பிப்ரவரி 2011 இல் அமைந்ததில் இருவருக்குமே மகிழ்ச்சியே!
அதுவும் தாங்கள் வசிக்கும் இடமோ
[ஷார்ஜா] என் மூத்த மகன், மருமகள், அன்புப் பேரன், அருமைப்பேத்தி இருக்கும் இடத்திற்கு அருகே, அரை மணி நேரக் கார்ப்பயணத்தில்.
இவ்வாறெல்லாம் இருக்கும் போது உங்களை என்னால் எப்படி நினைவு கூர்ந்து குறிப்பிடாமல் இருக்க முடியும்?
//தங்களுக்கும் தங்கள் இல்லத்தரசிக்கும் குடும்பத்தினருக்கும் என் உளமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
தங்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளித்தது.
அன்புள்ள vgk
இமா said...
பதிலளிநீக்கு//நிஜ வாழ்க்கையைவிட, நான் அடிக்கடி கற்பனை உலகில் சஞ்சரிப்பதில் அதிக மகிழ்ச்சி அடையக்கூடியவன்.//
**அதுதான் எல்லோருக்கும் தெரியுமே! ;)**
ஆஹா, என் இமாவின் வருகை இன்ப மூட்டுவதாக உள்ளதே!
உங்களுக்கு மட்டும் தெரிந்தது எப்படி எல்லோருக்கும் தெரியும்? ;)))))
**படங்கள் எல்லாமே பொருத்தம்.**
ஆஹா, என்னப்பொருத்தம் ....நமக்குள் இந்தப்பொருத்தம்! என என் வாய் ஏதோ முணுமுணுக்கிறது, இமா.
**தரவுகளோடு, கட்டுரை அழகாக வந்திருக்கிறது அண்ணா.**
ரொம்ப சந்தோஷம், இமா.
**உங்களுக்கு 2012 இப்போதுள்ளதை விட மகிழ்ச்சிதரும் ஆண்டாக அமைய என் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.**
இமாவின் பிரார்த்தனைகள் நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துகளுக்கு என் நன்றி, இமா.
பிரியமுள்ள vgk
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு**நான் இதுவரை நேரில் சந்திக்காத, அந்த அன்பு உள்ளங்கள் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்தப்பகுதியில் இருந்தாலும், அவர்கள் இன்று போல என்றும் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும், வாழ்க்கையில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்புடன் மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்**
/மிக்க நன்றீ .. கோபால் சார். உங்க ஆசிர்வாதம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்../
சந்தோஷம், மேடம்.
/காரசாரமாகவும், அங்கங்கே நச்சென்றும், சில இடங்களில் இனிப்பாகவும் நல்ல சுவை..:)/
தங்களின் இந்தப்பின்னூட்டம் போலவே! ;))))
/மின்னிதழ்கள் அனைத்திலும் தமிழ் மணத்திலும் வந்தமைக்கு பாராட்டுக்கள்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்../
பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/அப்புறம்.. ஒரு முக்கியமான விஷயம்.. உங்க நிலைமைதான் எங்க நிலைமையும்.. ப்லாகில் உக்காந்தாலே நம்மை ஏதோ ப்லாக் அடிமைகளைப் பார்ப்பது போல பாக்குறாங்க.. ஒய் ப்ளட்... ஹாஹாஹா சேம் ப்ளட்.. ஓகே டோண்ட் ஒர்ரி.. நம்ம திறமைகள் எல்லாம் அவங்களுக்கு சீக்கிரம் புரியும்.. நம்ம சாதனைகளை கைதட்டி அவங்களும் வரவேற்கும் காலம் வரும்.. /
நம்மைப்போலவே சிலர் என்பதைக் கேட்க சற்றே ஆறுதலாக உள்ளது, மேடம்.
தங்களின் “ஒய் ப்ளட்...ஹாஹாஹா சேம் ப்ளட்” சிறப்பான நகைச்சுவையான சொல்லாடல் எனக்கு மிகவும் பிடித்துப்போனது.
மனதுக்குள் புரிந்து கொள்கிறார்கள்.
மனதுக்குள் வரவேற்கிறார்கள்
என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் ஏதும் இல்லை.
கை தட்டி வ்ரவேற்று ஊக்குவிக்க மட்டும், ஏனோ தோன்றுவதில்லை.
இதுவும் ஒருவித POSSESSIVENESS என்பதை நான் உணர்கிறேன்.
மொத்தத்தில் ’நம்மாள் நமக்கு மட்டுமே!’
பிறர், இவரை நம் எதிரிலேயே எப்படிப் பாராட்டலாம்?
எப்படி அவர்கள் துணிந்து அவருக்குத் தன் கண் எதிரிலேயே கைகொடுத்துப் பாராட்ட முன் வரலாம்?***
எப்படிப் புகழ்ந்து புகழ்ந்து ஓயாமல் தன்னிடமே அவரைப்பற்றி பேசலாம்?
என்றதோர் அறியாமையும், அப்பாவித்தனமும் மட்டுமே! அதையும் ரஸிப்பவன் நான். ;))))
*** இதைத்தான் என்
“சுடிதார் வாங்கப்போறேன்*** சிறுகதையில், ஒரு கதாபாத்திரம் வாயிலாகத் தெரிவித்துள்ளேன். தயவுசெய்து படித்துப்பாருங்கள்:
http://gopu1949.blogspot.com/2011/04/1-of-3.html
//இந்தவருடம் எனக்கு கிடைத்த நல்ல நட்புக்களில் நீங்களும் ஒருவர். கடவுளுக்கு நன்றி.. வாழ்க வளமுடன்.. நலமுடன்..:)//
இதை தங்கள் வாயால் கேட்டதில் நான் தன்யனானேன்.
உங்களின் ஆககபூர்வமான எழுத்துக்களை மிகவும்
ரஸித்துப்படிப்பவன் நான்.
எனக்கும் வலைப்பதிவினால் கிடைத்த மிக நல்ல நட்புகள் சிலரில் நீங்களும் ஒருவர் தான்.
அன்பான வருகை + அழகான கருத்துக்கள் என் மனதை மிகவும் மகிழ்வடையச்செய்தன.
மிகவும் சந்தோஷமும், நன்றிகளும் மேடம்.
அன்புடன் vgk
Shakthiprabha said...
பதிலளிநீக்கு//உங்கள் பதிவுகளில் ரொம்பவும் ரசித்த பதிவு இது......அட நீங்களும் என்னைப் போல் தானா என்று நினைத்த இடங்கள் நிறைய :)//
அன்புள்ள ஷக்தி,
இந்த அழகான கருத்தினைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எண்ணங்கள் ஒத்துப்போகும் போது தான் நட்பும் நன்றாக மலர்கிறது, என்பதற்கு நீங்கள் எனக்கு ஓர் உதாரணம், என உணர்கிறேன்.
=============================
Shakthiprabha said...
//என் கற்பனை உலகில் நான் நினைக்கும் நேரத்தில், நினைக்குமிடத்திற்கு, நினைக்கும் நபருடன் சுதந்திரப் பறவை போல பறந்து செல்வேன். //
நானும் :) .............
VERY GOOD! ;))))))
============================
Shakthiprabha said...
//மறக்க மனம் கூடுதில்லையே கதை படித்தேன், ரொம்பவும் பிடித்தது. அதிலுள்ள இயல்பான விவரிப்பு அருமை. மனதில் நின்ற பிடித்தமான கதைகளில் அதுவும் ஒன்றாகிப் போனது.//
அது முழுவதும் கதை அல்ல. 80% சம்பவங்கள் என் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவை. அதனாலேயே அதை அவ்வளவு அழகாக எழுத முடிந்தது.
அது பெரும்பாலானவர்களுக்குப் பிடித்துள்ளது. வந்துள்ள பாராட்டுக்கடிதங்கள் ஏராளம். எனக்கும் அது என் கதைகளில் மிகவும் பிடித்தமான ஒன்று தான்.
==============================
Shakthiprabha said...
***அதுபோலவே பதிவு எழுதி ருசிகண்டவர் கையும் சும்மா இருக்காது அல்லவா!***
//எழுதுங்கள். தினம் ஒரு பதிவு படிப்பவர்களில் ஆர்வம் உள்ளவர்கள் பலர்.
உங்களின் பல சாதனைகள் பெருமைப்படக் கூடியவை. மென்மேலும் 2012 பல சாதனைகள், மகிழ்ச்சி கூடி, இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
தொடருங்கள்...//
முயற்சிக்கிறேன்.
அன்பான வருகைக்கும் அழகான நான்கு பின்னூட்டங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள vgk
nunmadhi said...
பதிலளிநீக்கு//இதுவரைக்கும் 2011ல் தாங்கள் இட்ட பதிவுகளும், தங்களுக்கு "கவர்ச்சிப்படங்கள்" இணைக்கக் கற்றுக்கொடுத்த கைக்குழந்தையையும் பற்றி அருமையாகச் சொல்லியிருந்தீர்கள்.
எப்படியோ சார், ஹெல்மெட் மாட்டிக்கொண்டாவது எழுதினால் சரி.//
அன்புமகள் நுண்மதியே!
வாங்க! வாங்க!!
உங்கள் அன்பான வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.
ஹெல்மெட், நகைச்சுவையையும் மிகவும் ரஸித்தேன்.
//உங்களின் இன்னொரு பெரிய சாதனை உங்களுக்கு தெரியுமோ..?
இத்தனை சாதனைகளையும் சேகரித்து, ஒரு பதிவாகப் போட்டதே பெரிய சாதனைதான்...//
மிக்க சந்தோஷம்! கெள்ரி.
ஆம் அது கொஞ்சம் கஷ்டமான வேலையாகத்தான் இருந்தது.
//தேர்வின் காரணமாய் கடந்த சில நாட்களாக என்னால் தங்களது வலைத்தளத்திற்கு வரமுடியவில்லை சார். மன்னிக்கனும்...
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும்...//
ஒரே இரவில் என் பல படைப்புக்களை விடாமல் கண்விழித்துப்படித்து, அவ்வப்போது உடனுக்குடன் பின்னூட்டமிட்டு, கடைசியில் பொழுதும் விடிந்து போய், ”மற்ற கதைகளை நாளை மீண்டும் தொடர்ந்து படிப்பேன், அவ்வளவு சுவரஸ்யமாக உள்ளன” என்று சொல்லிச் சென்று அன்று முதல் பாசத்துடன் பழகிவரும் உங்களை என்றும் என்னால் மறக்க முடியாதுதான்.
தேர்வுக்கு நன்றாகப் படியுங்கள். அதுதான் இப்போதைக்கு மிகவும் முக்கியம். உங்கள் கனவுகள் யாவும் நனவாகி, வாழ்க்கையின் அனைத்து உச்சகட்ட வெற்றிகளை அடைவீர்கள். அதற்கு என் அன்பான வாழ்த்துகள்.
என் தீவிர ரசிகையான ENGINEER NUNMATHI ஐ விரைவில் Dr. NUNMATHI யாகப்பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.
பிரியமுள்ள vgk
கீதா said...
பதிலளிநீக்கு//சென்ற ஆண்டு பதிவுலகில் சிறப்பானதாக அமைந்ததற்குப் பாராட்டுகள் வை.கோ சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராடுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
//எத்தனை அழகா ஒவ்வொரு பதிவையும் தொகுத்து அற்புதமாப் பதிவிட்டிருக்கீங்க!//
உங்களின் இந்தப்பின்னூட்டமும் மிக அழகாகவே அதை உணர்ந்து எழுதப்பட்டுள்ளதில் எனக்கு மகிழ்ச்சியே! ;)))
//பின்னூட்டங்களே எழுதுவதற்கான உற்சாகத்தை அளிக்கின்றன என்பதை ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க.//
ஆமாம் மேடம். அது தான் உண்மை.
//மனத்தின் உணர்வுகளை நாசுக்காய் வெளிப்படுத்திய விதமும் அருமை. இந்த வருடமும் நலமாய் அமைய வாழ்த்துக்கள் சார்.//
சந்தோஷம். வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.
அன்புடன் vgk
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//சென்ற வருஷத்தைப் போலவே இந்த வருஷமும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்..
ஹெல்மெட்..... சேம் ப்ளட் :-)))))
அதுக்காக எழுதுறதை நிறுத்திருவோமாக்கும். விடமாட்டோமில்லே :-)//
தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, மேடம்.
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் vgk
thirumathi bs sridhar said...
பதிலளிநீக்கு//சார்,மாபெரும் சாதனையாளர்களில் நீங்களும் ஒருவர்.உங்கள் கற்பனை உலகம்,எழுத்து,பதிவுலக நட்புகள்,பாத்ரூம் கதை,உங்கள் மேலிடம்,இப்படி எல்லாமே ரசிக்கும்படி இருந்தது.//
ஆஹா! ஒவ்வொன்றையும் ரஸித்து ஊன்றிப்படித்து மகிழ்ந்து போயிருக்கிறீர்கள் என்பதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
அதை எவ்வளவு அழகாக கோர்வையாக எழுதியுள்ளீர்கள்! ;))))
//இவ்வளவு விஷயங்களை சுவையாக தெளிவாக எழுதுவது எளிதான விஷயமல்ல.//
அய்யோ!
சுவையோ சுவை தான் தங்களின் இந்த வரிகளும்! ;))))
//ரோஜாப்பு படம் சூப்பர்.பதிவில் ஃபிகர் வைப்பது எங்களுக்காகன்னு நம்பிட்டேன்.//
அம்மாடி! ஒரு வழியா நம்பிட்டீங்களே, அது போதும் எனக்கு.
நல்லா வரவர மிகவும் கிண்டலா எழுதுறீங்க!
அது போதும். நீங்களும் எழுத்துலகில் ஜொலிக்க!
//தாமதமாக வந்தது வருத்தமாக உள்ளது.//
அதனால் பரவாயில்லை. நீங்கள் இன்று இருக்கும் நிலைமையில், வந்ததே மிகவும் அதிசயம்.
வருத்தப்படாதீர்கள்.
எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணம் இது.
அது தான் மிகவும் நல்லது [for both].
//சென்ற வருடத்தைவிட இந்த வருடத்தில் மேலும் சிறப்பான படைப்புகளை படைக்க எல்லா சக்திகளும் தங்களுக்கு அருள் தரட்டும்.//
ரொம்ப சந்தோஷம் மேடம்.
Take Care of You, Amrutakutti + ;))))
அன்புடன் உங்கள் vgk
Chitra said...
பதிலளிநீக்கு//WOW!!!!! Pretty impressive!
We are proud of you.
தொடர்ந்து மென்மேலும் சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!//
அன்புள்ள சித்ரா,
தங்களின் அன்பான திடீர் வருகையால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போய் விட்டேன்.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
அன்பான ஆசிகளுடன்
பிரியமுள்ள
கோபு மாமா
சந்திர வம்சம் said...
பதிலளிநீக்கு//ஒரு வருட உங்கள் உழைப்பை தெளிவாகவும் அருமையாகவும் வெளிப்படுத்திஉள்ளீர்கள்.
இவ்வளவு அருமையான ஆக்கதிற்கு காரணமான "மணிராஜ்" க்கும் நன்றி.//
தங்களின் அன்பான வருகையும், பாராட்டுக்களும், ஆக்கம் அனைத்துக்கும் மூல காரணமான “மணிராஜ்” க்கு நன்றியும் தெரிவித்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மிக்க நன்றி.
[இந்தத்தகவலை உடனே “மணிராஜ்”
அவர்களுக்கு அன்றே அனுப்பி வைத்து, அவர்களின் ஓர் பதிவினில் பின்னூடமாக இதையும் வெளியிட்டு தங்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்கள்.கவனித்தீர்களா?]
அன்புடன் vgk
viji said...
பதிலளிநீக்கு//Ayya enna inba athichi.
En blogil unngal comment.
I really really excited.
Do you know for the past one year i am your follower and blog reader.
I dont want to write in English in your blog. So Not given comments and silently enjoyed your writings bit by bit.
Not only that at Maniraj(Rajeswaris ) blog I never miss your comments. I can learn a lot and enjoy your Rasanai through your comments.
Thanks ayya mikavum Nandri.
valtha vayathu illai enave vanukkukiren unnkalai unkkal elluthukka.
viji//
அன்புடையீர்,
தாங்கள் என் வலைப்பக்கம் கடந்த ஒரு வருடமாக விடாமல் வருகை தந்து என் ஒவ்வொரு பதிவினையும், வரிக்குவரி மிகவும் ரஸித்துப் படித்து மகிழ்ந்துள்ளதாகக் கூறுவது கேட்க, எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பதிவர் “மணிராஜ்” அவர்களின் வலைத்தளத்தில், நான் அன்றாடம் அவர்கள் பதிவுக்குத் தந்துவரும் பின்னூட்டங்கள் அத்தனையும் முழுவதுமாகப் படித்து என் ரசனைகளை அறிந்து மகிழ்ந்ததாகச் சொல்வது, மேலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
தங்களின் இன்றைய புது வருகைக்கும் பொலிவுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் தேவைப்பட்டால், என் வலைத்தளத்திற்கு வருகை தரும்போது, Comments in English கொடுப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனைகள் இல்லை. வரவேற்கிறேன். WELCOME !
Ramani said...
பதிலளிநீக்கு//2011 ஆம் ஆண்டின் தமிழ் மணப் பட்டியல் வரிசையில்
15 ஆம் இடத்தைப் பெற்றமைக்கு எனது மனப் பூர்வமான வாழ்த்துக்கள்//
===================================
இராஜராஜேஸ்வரி said...
//2011 ஆம் ஆண்டின் தமிழ் மணப் பட்டியல் வரிசையில் 15 ஆம் இடத்தைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி பொங்கும் இனிய வாழ்த்துகள் ஐயா.
==================================
வெங்கட் நாகராஜ் said...
//2011 ஆம் ஆண்டின் தமிழ்மணம் முதல் 100 வலைப்பூக்கள் பட்டியல் வரிசையில் 15 ஆம் இடத்தைப் பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.//
=================================
கோவை2தில்லி said...
//200வது பதிவுக்கு வாழ்த்துகள் சார். இது போல் பல பதிவுகள் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்.
தமிழ்மண பட்டியலிலும் 15 வது இடத்தை பெற்றதற்கும் வாழ்த்துகள்.//
-----------------------------------
சென்ற வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் தமிழ்மணத்தில் பதிவை இணைப்பது என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தேன்.
அதன் பிறகு என் அன்புக்குரிய கற்றலும் கேட்டலும் ராஜி அவர்கள் தமிழ்மணத்தில் இணைக்கச் சொன்னதால் மட்டுமே [ஏப்ரில் 2011 இல்] இணைப்பதற்கான வழி முறைகள் பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்.
அதற்குள் என் அன்பிற்குரிய மற்றொரு பதிவர் Thirumathi bs sridhar [ஆச்சி மேடம்] அவர்களும், திரு KRP செந்தில் அவர்களுமாகச் சேர்ந்து, தாங்களே எனக்கு இது விஷய்த்தில் உதவிட முன்வந்து, என் சார்பில் என் வலைத்தளத்தை தமிழ்மணத்தில் இணைத்துக்கொடுத்து விட்டனர்.
எனவே நான் வலைத்தளத்தில் நுழைந்து 8 அல்லது 9 மாதங்களே இருக்கும்.
இவ்வாறு என்னை தமிழ்மணத்தில் இணைத்துக்கொண்ட பிறகும் பிறர் பதிவுக்கு நாம் சென்று வோட் போடுவது, நம் பதிவுக்கு பிறர் வந்து வோட் அளிப்பது, இடுகைகள் தமிழ்மணத்தில் வாராவாரம் ஹிட் ஆவது என்பது பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமல், அதைப்பற்றிய எந்தத்தகவல்களும் அறிய விரும்பாமல், நான் ஏதோ என் வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன்.
அதன் பிறகு 7.11.2011 முதல் 13.11.2011 வரை என்னை தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராக ஆக்கியுள்ளதாக அறிவித்திருந்தனர்.
எந்த அடிப்படையில் என்னை நட்சத்திரப்பதிவராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் எனக்குப் புரியாத நிலையில் தான் நான் அப்போதும் இருந்தேன்.
நட்சட்திர இடுகைகள் நான் ஒரு வாரம் என் வலைத்தளத்தில் வழங்கிய பிறகு தான் சொன்னார்கள் அந்த குறிபிட்ட வாரத்தின் சூடான இடுகைகள் பட்டியலில் நானே முதலிடம் பெற்றிருந்ததாகவும் அதற்கான அறிவிப்பு தமிழ்மணத்தில் 13.11.2011 ஞாயிறு அன்று ஒரே ஒரு நாள் மட்டும் வெளியிடப்பட்டிருந்ததாகவும்.
அதையும் நான் என் கண்ணால் அன்று பார்க்கவில்லை. பிறகு ஒரு நாள் கேள்விப்பட்டதோடு சரி.
பிறகு வேறொரு பதிவர் நல்லவேளையாக அந்த அறிவிப்பை, Copy எடுத்து Save செய்து வைத்திருந்ததாகச் சொல்லி எனக்கு அனுப்பி, நான் பார்த்திட உதவினார்.
எதற்குச் சொல்கிறேன் என்றால் இந்த வோட்டுக்கள் பெறுவதினால் என்ன பெரிய MLA அல்லது MP பதவிகளா கிடைத்துவிடப்போகிறது என்ற அலட்சியத்தினால், சற்றும் அதைப்பற்றிய ஆர்வமே இல்லாமல் இருந்து வந்திருக்கிறேன்.
என் பதிவுகளுக்கு, பிறரின் கருத்துக்கள் பின்னூட்டமாக வந்தால் அதைப் பார்த்து படித்து மகிழ்வதோடு சரி.
இதெல்லாம் இவ்வாறு இருக்க, சென்ற 2011 ஆண்டு, தமிழ்மணத்தில் பதிவு செய்திருந்த பதிவர்களில் ஒரு 100 பேர்களை மட்டும், மிகச்சிறந்த பதிவர்கள் என்று தமிழ்மண நிர்வாகம் 01.01.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது என்றும் அந்த 100 பதிவர்களில் என் பெயர் 15 ஆவது இடம் பெற்றுள்ளதாகவும், நம் ரமணி சார் அவர்கள் மூலம் மின்னஞ்சலில் எனக்கு முதல் தகவல் வந்தது.
எனக்கே இது மிகவும் வியப்பான செய்தி தான். இதற்காகப் பாராட்டியுள்ள தங்கள் நால்வருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பின்குறிப்பு:
===========
எவ்வளவோ ஆயிரக்கணக்கான பதிவர்கள் தமிழ்மணத்தில் தங்களை இணைத்துக்கொண்டு வலைத்தளத்தில் பல நாட்களாக எழுதி வரும் போது, இதையெல்லாம் பற்றி எந்த ஒரு அனுபவ அறிவும் இல்லாமல் இருந்த மிகப் புதிய பதிவரான எனக்கு 15th RANK Out of 100 என அளிக்கப்பட்டிருப்பதை, முதல் ரேங்கைவிட மிகப்பெரியதாக நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த எதிர்பாராத வெற்றிக்குக் காரணம் முழுக்க முழுக்க எல்லாம்வல்ல இறைவன் அருளும், தாங்கள் எனக்கு அவ்வப்போது தந்துவரும் உற்சாகமுமே!
நால்வருக்கும்
நன்றி, நன்றி, நன்றி, நன்றி.
அன்புடன் vgk
VENKAT said...
பதிலளிநீக்கு//உங்கள் பதிவுகளை மிக ஆர்வமாகப் படிப்பவன். தமிழ் வேகமாக கணினியில் அடிக்க வருவதில்லை. எனவே பல முறை பின்னோட்டம் இடமுடியவில்லை.
சென்ற ஆண்டைப் போலவே மிகச் சிறப்பான பதிவுகள் இந்த ஆண்டும் எங்கள் பார்வைக்கு இடுவீர்கள் என்ற எங்களின் நம்பிக்கை உங்களுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை ஐயா.
அன்புடன்,
வெங்கட்.//
தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.
தொடர்ந்து மிகவும் ஆர்வமாக என் படைப்புக்களைப் படிக்கிறீர்கள் என்பதைக் கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
தமிழிலோ ஆங்கிலத்திலோ அவ்வப்போது ஏதேனும் ஒருவரி Comments எழுதி Feedback கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும்.
பரவாயில்லை, சார். நீண்ட நாட்களுக்குப்பிறகு இந்தப்பதிவுக்காவது வந்து அதுவும் தமிழிலேயே பின்னூட்டம் கொடுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
அன்பு+நன்றியுடன் vgk
[தொடர்ந்து எழுதத் தொடர்ந்து முயற்சிப்பேன்]
சி.கருணாகரசு said...
பதிலளிநீக்கு//வணக்கம்,
தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.//
வணக்கம். தங்கள் புது வருகைக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி.
என் பின்னூட்டத்துக்கு தங்கள் பதிலைக் கண்டபோது என் பின்னூட்டத்தில் இருந்த அச்சுப் பிழையைக் கண்டு இதோ திருத்திய படிவம்:
பதிலளிநீக்கு//''நான் ஏறிவந்த ஏணி, தோணி, கோணி 2011'' அருமை!
நீங்கள் நாணிக் கொண்டே சொன்னாலும் கேணி ததும்பும் அளவு குதூகல விவரங்களுடன் தனிப் பாணியில் எழுதும் உங்கள் கதைகளும் கட்டுரைகளும் பேணிக் காக்க வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை.//
பிழைக்கு மன்னிக்கவும்.
மிகவும் பொறுமையாகவும் அருமையாகவும் சொல்லி இருக்கீங்க சார்.இந்த பதிவு போடுவதற்கான உங்கள் உழைப்பு நன்றாகவே தெரிகின்றது,வாழ்த்துக்கள்.மேன்மேலும் பதிவுலகில் பயணித்து அனைவருக்கும் உங்கள் எழுத்துக்களை விருந்தாக்க அன்பு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்தவருடப் பதிவுலகப் பதிவுகள் பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள். தொடரும் உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துகள் .
பதிலளிநீக்குகே. பி. ஜனா... said...
பதிலளிநீக்குஎன் பின்னூட்டத்துக்கு தங்கள் பதிலைக் கண்டபோது என் பின்னூட்டத்தில் இருந்த அச்சுப் பிழையைக் கண்டு இதோ திருத்திய படிவம்:
//''நான் ஏறிவந்த ஏணி, தோணி, கோணி 2011'' அருமை!
நீங்கள் நாணிக் கொண்டே சொன்னாலும் கேணி ததும்பும் அளவு குதூகல விவரங்களுடன் தனிப் பாணியில் எழுதும் உங்கள் கதைகளும் கட்டுரைகளும் பேணிக் காக்க வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை.//
////பிழைக்கு மன்னிக்கவும்.////
என்ன ஜனா சார். இதற்கெல்லாம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு.
அவசரத்தில் தட்டும்போது ஏதாவது எழுத்துப்பிழைகள் வருவது மிகவும் சகஜம் தானே!
இப்போதும் கூட எனக்கு எல்லாமே மிகவும் சரியாகவே இருப்பதாகத்தான் தோன்றுகிறது. எழுத்துப்பிழையேதும் இருப்பதாகவே என் கண்களுக்குத் தெரியவில்லை.
மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி சார்.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//மிகவும் பொறுமையாகவும் அருமையாகவும் சொல்லி இருக்கீங்க சார். இந்த பதிவு போடுவதற்கான உங்கள் உழைப்பு நன்றாகவே தெரிகின்றது,வாழ்த்துக்கள்.//
மிகவும் சந்தோஷமும் நன்றிகளும் மேடம். நீண்ட நாட்கள் கழித்து நீங்கள் மீண்டும் என் பதிவுக்கு வந்து கருத்தளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
//மேன்மேலும் பதிவுலகில் பயணித்து அனைவருக்கும் உங்கள் எழுத்துக்களை விருந்தாக்க அன்பு வாழ்த்துக்கள்.//
தொடர்ந்து விருந்தளிக்க எனக்கும் ஆவல் உண்டு. சூழ்நிலை கொஞ்சம் சரியில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மேடம்.
அன்புடன் vgk
சந்திரகௌரி said...
பதிலளிநீக்கு//இந்தவருடப் பதிவுலகப் பதிவுகள் பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள். தொடரும் உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.
vgk
இருநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசமுத்ரா said...
பதிலளிநீக்கு//இருநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் சந்தோஷம்.
என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே.
படித்தேன்.ரசித்தேன்.பக்கம் வரத் துடித்தேன் .
பதிலளிநீக்குKalidoss Murugaiya said...
பதிலளிநீக்கு//படித்தேன்.ரசித்தேன்.பக்கம் வரத் துடித்தேன் .//
தங்களின் அன்பான வருகைக்கும், படித்து ரசித்ததை அழகான பாடல் வரிகளின் மூலம் தெரிவித்த கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.
தங்களின் இந்தப் பதிவை இன்றுதான் படிக்க நேர்ந்தது.அந்த மாதம் முழுவதும் கணிணியில் அமர இயலாமல் போய் விட்டதால் எனக்கு இதைப் படிக்கும் சந்தர்ப்பமற்றுப் போனது.தாமதமானதற்கு வருந்துகிறேன்.
பதிலளிநீக்கு//சிதறிய குப்பைகள் போல இருந்த என் சிந்தனைகளை, ஒருமுகப்படுத்தி//
சிதறிய முத்துக்கள் போலிருந்த என்று இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.முத்துக்கள் இருந்தால் மட்டும் போதாது என்று அவற்றை ஒளி வீசச் செய்து நல்ல ஆரமாக சேர்த்து தொடுத்து அதனிடையே நகைச்சுவை, குணசித்திரம்.சிந்தனை என்ற பல பதக்கங்களைச் சேர்த்துக் கட்டி தந்திருக்கும், இனியும் தரப் போகும் தங்களது கடும் உழைப்பிற்கு எனது வந்தனங்கள்.HATS OFF SIR!
raji said...
பதிலளிநீக்கு//தங்களின் இந்தப் பதிவை இன்றுதான் படிக்க நேர்ந்தது.அந்த மாதம் முழுவதும் கணிணியில் அமர இயலாமல் போய் விட்டதால் எனக்கு இதைப் படிக்கும் சந்தர்ப்பமற்றுப் போனது.தாமதமானதற்கு வருந்துகிறேன்.
*****சிதறிய குப்பைகள் போல இருந்த என் சிந்தனைகளை, ஒருமுகப்படுத்தி*****
சிதறிய முத்துக்கள் போலிருந்த என்று இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.முத்துக்கள் இருந்தால் மட்டும் போதாது என்று அவற்றை ஒளி வீசச் செய்து நல்ல ஆரமாக சேர்த்து தொடுத்து அதனிடையே நகைச்சுவை, குணசித்திரம்.சிந்தனை என்ற பல பதக்கங்களைச் சேர்த்துக் கட்டி தந்திருக்கும், இனியும் தரப் போகும் தங்களது கடும் உழைப்பிற்கு எனது வந்தனங்கள்.HATS OFF SIR!//
தாமதமானாலும் தங்களின் அன்பான வருகை + அழகான கருத்து மூலம், இந்த என் பதிவும் நானும் மனநிறைவு அடைகிறோம்.
மிக்க நன்றி, மேடம்.
அன்புடன் vgk
VGK அவர்களுக்கு வணக்கம்!
பதிலளிநீக்குகம்ப்யூட்டர் வாங்கிய புதிதில் இண்டர்நெட் வந்த ஆர்வத்தில் கூகிளில் எதையோ தேடப் போக, நீங்கள் நம்மூர்க்காரர் (திருச்சி) என்று தெரிய வந்ததும் அன்று முதல் உங்கள் பதிவுகளை பார்வையிட்டு வருகிறேன்.
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு உள்ள ஆர்வம், அனுபவம், உழைப்பு வெளிப்படுகின்றன. நகைச் சுவையாகவும், மேலும் படிக்கத் தூண்டும் வண்ணம் தொடர் பதிவுகளில் சஸ்பென்ஸ் வைத்தும் எழுதும் உங்கள் திறமை எல்லோருக்கும் வராது. சின்னச் சின்ன விஷயங்களையும் படங்களோடு தெளிவு படுத்தும் போது உங்களில் ஒரு குழந்தையின் சந்தோஷத்தைக் காண்கிறேன்.
தங்களின் ஆரம்பகால ”ஜாதிப் பூ” என்ற கதை பழைய சத்திரம் பஸ் நிலையக் காட்சிகளை நினைவுபடுத்தியது. திருச்சியைப் பற்றிய பதிவின் பின்னூட்டங்களே அதன் சிறப்பைச் சொல்லும். அதே போல பின்னாளில் எழுதிய ஓடத்துறையின் (காவிரிக் கரை) ஆற்றழகிய சிங்கப் பெருமாள் கோயில் பற்றிய பதிவும்தான். தேசிய உயர்நிலைப் பள்ளி பழைய நினைவுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
உங்களின் வரிகள்:
// எனக்குள்ள சில பிரத்யேக மனக்கவலைகளை மறக்கத்தான் வலைப்பக்கமே சுற்றிச்சுற்றி வருகிறேன் நான், என்பது தெரியாமல் ஏதேதோ பிரச்சனைகளைக் கிளப்புகிறார்கள் என்னுடன் இங்கு உள்ளவர்கள். //
இது வலைப் பதிவை நேசிக்கும் எல்லோருக்கும் ஏற்படும் ஒன்றுதான். நானும் “மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்றபடி வலைப் பக்கம் செல்லுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர்களுக்கு வலைப் பக்கம் என்பது உற்சாக டானிக்காக நான் நினைக்கிறேன். இருக்கும் வரை நாம் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும் என்று நினைக்கிறேன். எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
தி.தமிழ் இளங்கோ said...
பதிலளிநீக்கு//VGK அவர்களுக்கு வணக்கம்!//
ஐயா, வாங்க! வணக்கம் ஐயா!!
//கம்ப்யூட்டர் வாங்கிய புதிதில் இண்டர்நெட் வந்த ஆர்வத்தில் கூகிளில் எதையோ தேடப் போக, நீங்கள் நம்மூர்க்காரர் (திருச்சி) என்று தெரிய வந்ததும் அன்று முதல் உங்கள் பதிவுகளை பார்வையிட்டு வருகிறேன். //
ஆஹா! கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.
//உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு உள்ள ஆர்வம், அனுபவம், உழைப்பு வெளிப்படுகின்றன. நகைச் சுவையாகவும், மேலும் படிக்கத் தூண்டும் வண்ணம் தொடர் பதிவுகளில் சஸ்பென்ஸ் வைத்தும் எழுதும் உங்கள் திறமை எல்லோருக்கும் வராது.//
ஆஹா! தங்களின் அன்பான இந்தப் பாராட்டுக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துறது, ஐயா.
//சின்னச் சின்ன விஷயங்களையும் படங்களோடு தெளிவு படுத்தும் போது உங்களில் ஒரு குழந்தையின் சந்தோஷத்தைக் காண்கிறேன்.//
உள்ளத்தில் நான் எப்போது ஒரு குழந்தைதான் ஐயா. சரியாகவே சொல்லி உள்ளீர்கள். மகிழ்ச்சி.
//தங்களின் ஆரம்பகால ”ஜாதிப் பூ” என்ற கதை பழைய சத்திரம் பஸ் நிலையக் காட்சிகளை நினைவுபடுத்தியது.//
மிகச்சரியாகவே சொல்லி விட்டீர்கள், ஐயா. You are so great.
என் அந்தக் கதைக்கான கதாநாயகியை நான் சந்திதது தேர்வு செய்ததும் அதே இடம் தான்.
தினமும் அங்கு தான், நான் அலுவலகம் செல்ல, காலை 7 மணிக்கு பஸ் ஏறுவேன். அவளைப் பார்க்காமல் பஸ் எறவே முடியாத சூழலில் தான் கதைக்கான மூலக்கரு கிடைத்தது.
பிறகு கண், காது, மூக்கு வைத்து கற்பனைகளைத் தட்டிவிட்டு அழகாக எழுத முடிந்தது.
அதில்
“பூக்களை விட நல்ல அழகு அந்தப் பூக்காரி” என்ற என் முதல் வாக்கியமும்; ”மாப்ளே” என்ற கடைசிச் சொல்லும் பலராலும் பாராட்டப்பட்டன.
Manuscript இல் இந்தக் கதையை வாசிக்கத் தொடங்கிய என் அலுவலக நண்பர் ஒருவர், முதல் வரியைப்படித்ததும் என்னை அப்ப்டியே கட்டிப்பிடித்துக் கொண்டு விட்டார்.
அவர் என் கதைகளை அடிக்கடி முதன் முதலாகப் படித்து விடுவார்.
பாதி எழுதிக்கொண்டிருக்கும் போதே, எழுதிய வரை படித்துவிடத் துடிப்பார்.
அவ்வளவு ஒரு ஆசை அவருக்கு என் எழுத்துக்களின் மேல்.
//திருச்சியைப் பற்றிய பதிவின் பின்னூட்டங்களே அதன் சிறப்பைச் சொல்லும்.//
ஆம் ஐயா! எனக்கே மிகவும் திருப்தியாக இருந்தது, அந்த என் மிகப்பெரிய கட்டுரையும், அதற்கு வந்து விழுந்த பாராட்டுக்களும்.
//அதே போல பின்னாளில் எழுதிய ஓடத்துறையின் (காவிரிக் கரை) ஆற்றழகிய சிங்கப் பெருமாள் கோயில் பற்றிய பதிவும்தான்.//
ஆம், ஐயா,. அது மிகவும் அவசர அவசரமாக ஓரிரு நாட்களில், நான் எடுத்து வந்த புகைப்படங்களை, கணினியில் ஏற்றி, உடனடியாக[ பதிவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, எனக்கு.
200 ஆவது பதிவை நான் தயாரித்துக்கொண்டிருக்கும் போதே,
அதை எப்படியாவது 199 ஆவது பதிவாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற வேகம் ஏற்பட்டது.
//தேசிய உயர்நிலைப் பள்ளி பழைய நினைவுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.//
ஆம் ஐயா; அதுவும் மொத்தம் இவ்வளவு பகுதிகள் வரும் எனத் திட்டமிடாமல், ஏதோ ஓர் ஆர்வத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன்.
அது சற்று நீண்டுகொண்டே சென்று விட்டது.
இருந்தாலும் எழுதி முடித்ததும் மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
பலரின் பாராட்டுக்களும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.
//உங்களின் வரிகள்//:
****எனக்குள்ள சில பிரத்யேக மனக்கவலைகளை மறக்கத்தான் வலைப்பக்கமே சுற்றிச்சுற்றி வருகிறேன் நான், என்பது தெரியாமல் ஏதேதோ பிரச்சனைகளைக் கிளப்புகிறார்கள் என்னுடன் இங்கு உள்ளவர்கள்.****
//இது வலைப் பதிவை நேசிக்கும் எல்லோருக்கும் ஏற்படும் ஒன்றுதான். நானும் “மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்றபடி வலைப் பக்கம் செல்லுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர்களுக்கு வலைப் பக்கம் என்பது உற்சாக டானிக்காக நான் நினைக்கிறேன். இருக்கும் வரை நாம் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும் என்று நினைக்கிறேன்.//
ஆம் ஐயா, மிகச்சிறந்த உற்சாக டானிக் போலவே உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை தான்.
//எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.//
முயற்சிக்கிறேன், ஐயா.
என்றும் அன்புடன் தங்கள்
vgk
சார் உங்க 200-வது பதிவை படித்ததும் பிரமிச்சுப்போயிட்டேன். என்ன ஒரு திறமை, என்ன ஒரு எழுது ஆளுமை, ஒவ்வொரு வரியா எடுத்து பாராட்டணும் என்றுதான் ஆசை. உங்களை வாழ்த்த வயசில்லை சார் உங்க திறமைக்கு தலை வணங்குகிறேன். நீங்க லிங்க் கொடுத்ததால தான் இந்த பதிவு படிக்க முடிந்தது. இப்ப உங்க எல்லா பதிவுகளையும் ஆரம்பத்திலிருந்தே படிக்கபோகிறேன் சார்.படிக்க படிக்க நாமும் இப்படி நம்ம எழுத்துத் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற உத்வேகம் தோன்றுகிறது. இன்றைய வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி இருக்காங்க. இது எவ்வளவு பெரிய அங்கீகாரம் இல்லீங்களா சார். அந்த சந்தோஷத்தையும் உங்ககிட்ட பகிர்ந்து கொள்கிறேன் சார். நான் உங்க மனது வருத்தப்படும்படி நடந்து கொண்டிருந்தால் ரொம்ப, ரொம்ப சாரி சார். சின்னவதானே. இனிமேல் கவனமுடன் இருந்துகொள்கிறேன் சரியா? ரொம்ப நல்ல அனுபவம் கிடைத்தது இந்தபதிவுமூலமாக. மீண்டும் நன்றிகள்
பதிலளிநீக்குபூந்தளிர்January 11, 2013 7:51 AM
பதிலளிநீக்குவாருங்கள் Ms. பூந்தளிர் Madam, வணக்கம்.
//சார் உங்க 200-வது பதிவை படித்ததும் பிரமிச்சுப் போயிட்டேன். என்ன ஒரு திறமை, என்ன ஒரு எழுத்து ஆளுமை, ஒவ்வொரு வரியா எடுத்து பாராட்டணும் என்றுதான் ஆசை. உங்களை வாழ்த்த வயசில்லை சார் உங்க திறமைக்கு தலை வணங்குகிறேன்.//
ரொம்பவும் சந்தோஷம்மா. மனமார்ந்த ஆசிகள்.
//நீங்க லிங்க் கொடுத்ததால தான் இந்த பதிவு படிக்க முடிந்தது.//
லிங்க் கொடுக்க வேண்டிய சூழ்நிலையை நீங்கள் தான் உருவாக்கிக்கொடுத்தீர்கள். அதற்கு என் நன்றிகள். எல்லாம் நன்மைக்கே.
//இப்ப உங்க எல்லா பதிவுகளையும் ஆரம்பத்திலிருந்தே படிக்கபோகிறேன் சார்.//
ஆஹா, கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 02.10.2012 அன்று வலைச்சர ஆசிரியராக இருந்த திருமதி மஞ்சுபாஷிணி என்பவர் என்னைப்பற்றி ஒரு சிறப்பு வெளியீடு வெளியிட்டுள்ளார்கள். அதில் நான் எழுதியுள்ள சிறப்பான சில படைப்புகளுக்கு INDEX போல லிங்க் கொடுத்து உதவியுள்ளார்கள். அந்த லிங்க் இதோ உள்ளது.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
அதைப்போய் படியுங்கள். அதற்கு வந்துள்ள ஏராளமான பின்னூட்டங்களையும் பொறுமையாகப் படியுங்கள்.
மேற்படி லிங்கை மட்டும் எங்காவது குறித்து சேமித்து வைக்கவும்.
என் படைப்புகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து வாசிக்க அது உங்களுக்கு மிகவும் பயன்படும்.
//படிக்க படிக்க நாமும் இப்படி நம்ம எழுத்துத் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற உத்வேகம் தோன்றுகிறது.//
நிச்சயமாக தாங்களும் நல்ல முறையில் திறமையை வளர்த்துக் கொண்டு என்னைவிட மிகச்சிறப்பாக எழுத முடியும். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
//இன்றைய வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி இருக்காங்க. இது எவ்வளவு பெரிய அங்கீகாரம் இல்லீங்களா சார். அந்த சந்தோஷத்தையும் உங்ககிட்ட பகிர்ந்து கொள்கிறேன் சார்.//
பார்த்தேன். மிகவும் சந்தோஷப்பட்டேன். வலைப்பதிவினில் எழுத ஆரம்பித்து 10-12 நாட்களுக்குள் யாருமே இதுபோல வலைச்சரத்தில் எனக்குத்தெரிந்து அறிமுகம் செய்யப்பட்டது இல்லை. அதனால் இது மிகப்பெரியதோர் அங்கீகாரம் தான்.
நீங்கள் நல்ல முறையில் தரமான பதிவுகளாக ஒரு 50 பதிவுகளாவது தந்தபின், நீங்களே கூட வலைச்சர ஆசிரியராக ஒரு வாரம் பொறுப்பேற்கவும் முடியும். அதற்கு நானே ஏற்பாடுகளும் செய்து, பரிந்துரைக்கவும் முடியும்.
// நான் உங்க மனது வருத்தப்படும்படி நடந்து கொண்டிருந்தால் ரொம்ப, ரொம்ப சாரி சார். சின்னவதானே. இனிமேல் கவனமுடன் இருந்துகொள்கிறேன் சரியா?//
OK OK அதெல்லாம் ஒன்றும் இல்லையம்மா. சரி, சரி, சரியே. இப்போ எல்லாமே [தங்களின் முதல் பதிவினில்] எழுத்துப் பிழை ஏதும் இல்லாமல் ஜோராக இருக்கிறது.
//ரொம்ப நல்ல அனுபவம் கிடைத்தது இந்தப்பதிவு மூலமாக. மீண்டும் நன்றிகள்//
இதே போல என்னுடைய பல பதிவுகளையும் படியுங்கோ.
50 ஆவது, 100 ஆவது, 150 ஆவது, 250 ஆவது, 300 ஆவது போன்ற சிறப்புப்பதிவுகளை. மேலும் பல அனுபவங்கள் கிடைக்கக்கூடும். எல்லாமே மேலே நான் கொடுத்துள்ள லிங்கிலேயே INDEX போல அழகாக கொடுக்கப்பட்டுள்ளன.
தங்களின் அன்பான வருகைக்கும் மனம் திறந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துகள் + ஆசிகளுடன்
VGK
கண்டிப்பாக போயி படித்துப்பர்க்கிறேன் சார். விவரமான பதிலுக்கு மிகவும் நன்றிகள்.இப்பதான் மனசே லேசானமாதிரி உணற முடிகிறது. வலைச்சரம் போயி அந்த லிங்க் ஸேவ் பண்ணிகிட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிச்சுப்பார்க்கிறேன். இப்பவும் கமெண்ட் போடலாமா?
பதிலளிநீக்குபூந்தளிர் January 13, 2013 4:23 AM
நீக்குவாங்கோ Ms. பூந்தளிர் Madam,
//கண்டிப்பாக போயி படித்துப்பர்க்கிறேன் சார்.//
நல்லது. மிகவும் சந்தோஷம்.
//விவரமான பதிலுக்கு மிகவும் நன்றிகள்.//
நன்றிக்கு நன்றிகள்.
//இப்பதான் மனசே லேசானமாதிரி உணர முடிகிறது.//
அடடா, ஏன் இப்படி? அதெல்லாம் ஒன்றும் மனதிலே போட்டுக் குழப்பிக்காதீங்கோ. அவ்வப்போது மறந்து விடணும்.
//வலைச்சரம் போயி அந்த லிங்க் ஸேவ் பண்ணிகிட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிச்சுப்பார்க்கிறேன்.//
OK Very Good. Very Happy to hear this.
//இப்பவும் கமெண்ட் போடலாமா?//
தாராளமாக. கண்டிப்பாப் போடணும். அப்போ தானே நீங்க எதையெல்லாம் படிச்சீங்கோ, என்ன்வெல்லாம் நினைச்சீங்கோன்னு நானும், தங்கள் கருத்துக்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
பிரியமுள்ள
VGK
மீண்டும் ஒரு முறை பாராட்டுகிறேன். ஒரு வருட சாதனை மிகப்பெரிய சாதனைதான்.
பதிலளிநீக்குமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
நீக்குஅன்புடையீர்,
வணக்கம்.
31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை, 2011 ஜனவரி முதல் 2011 டிஸம்பர் வரையிலான பன்னிரெண்டு மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மிக்க மகிழ்ச்சி. :) மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் VGK
விரோதிகள், எதிரிகள் என்று அங்கு யாருமே கிடையாது. எத்துணை உணைமையான வார்த்தைகள். மாபெரும் உறவுகளை தந்துக்கோண்டு இருப்பது தான் வலை உலகம். தங்கள் பயணம் தொடரட்டும். நன்றி.
பதிலளிநீக்குmageswari balachandran April 30, 2015 at 6:53 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//விரோதிகள், எதிரிகள் என்று அங்கு யாருமே கிடையாது. எத்துணை உணைமையான வார்த்தைகள். மாபெரும் உறவுகளை தந்துக்கோண்டு இருப்பது தான் வலை உலகம். தங்கள் பயணம் தொடரட்டும். நன்றி.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
தங்களால் முடியுமானால் ஜனவரி 2011 முதல் நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும், வரிசையாக வருகை தந்து, ஒரு 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் பின்னூட்டமிட்டு, என் புதுப்போட்டியில் கலந்துகொண்டு ரொக்கப் பரிசினை வெல்லுங்கள். போட்டி முடிய இன்னும் மிகச்சரியாக எட்டே எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. இப்போதே ஆரம்பித்து தினமும் சராசரியாக ஒரு ஐந்து பதிவுகளுக்காவது வருகைதந்து பின்னூட்டமிட்டு, வெற்றிவாகை சூடுங்கள். தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
அன்புடன் VGK
ன் மனதுக்குப் பிடித்தமானவர்களாகவும்,என் எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் ஒத்துப்போகும் நபர்களாகவும், என் நலம் விரும்பிகளாகவும் யாராவது ஓரிருவர், தினமும் என்னுடைய தொடர்பு எல்லைக்குள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் என்பது, என் மனதுக்கு மிகவும் சந்தோஷமும், ஆறுதலும், தன்னம்பிக்கையும் தரக்கூடிய மகிழ்ச்சிகரமான விஷயமாக உள்ளது! ;) // ஆமாம் சார் எங்கலுக்கும் முதலில் வலைத்தளம் ஆரம்பித்து இப்படிப் பின்னூட்டங்கள் பெருக பெருக மகிழ்சி. நம் உணர்வுகள், கற்பனைகளிலிருந்து பிறக்கும் நம் எழுத்துக் குழந்தைகளை அழகு பார்க்கவும், அதை மெச்சவும் நாலு பேர் வரும்போது கிடைக்கும் ஆனந்தம் ஆனந்தமே.
பதிலளிநீக்குதங்களின் கற்பனை உலகு போலவே தான் எங்களின் கற்பனை உலகும்.
தங்களின் சாதனை அளப்பற்கரியது!!
தொடர்கின்றோம்...ஷூட்டிங்க் வேலை அது இது என்று கொஞ்சம் வேலைப்பளு அதிகமாகிவிட்டதால் மெதுவாகத்தான் வர முடிகின்றது. இன்னும் பெண்டிங்க் தளங்கள் பதிவுகள் நிறைய உள்ளன. வாசிக்க...நாங்களும் எழுத வேண்டும் எங்கள் பயணக் குறிப்புகள் என்று...ம்ம்ம்ம் அதனால் கொஞ்சம் மெதுவாக வருகின்றோம் சார்...தொடர்கின்றோம்...
Thulasidharan V Thillaiakathu May 16, 2015 at 8:05 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்களின் சாதனை அளப்பற்கரியது!!//
மிக்க நன்றி.
//தொடர்கின்றோம்...ஷூட்டிங்க் வேலை அது இது என்று கொஞ்சம் வேலைப்பளு அதிகமாகிவிட்டதால் மெதுவாகத்தான் வர முடிகின்றது.//
அதனால் பரவாயில்லை. புரிந்துகொள்ள முடிகிறது.
//இன்னும் பெண்டிங்க் தளங்கள் பதிவுகள் நிறைய உள்ளன. வாசிக்க...நாங்களும் எழுத வேண்டும் எங்கள் பயணக் குறிப்புகள் என்று...ம்ம்ம்ம் அதனால் கொஞ்சம் மெதுவாக வருகின்றோம் சார்...தொடர்கின்றோம்...//
OK No problem at all. என்னால் இதனை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.
Suppose போட்டியில் கலந்துகொள்வதாக இருந்தால் 2011 ஜனவரி முதல் வரிசையாக பின்னூட்டம் இட்டுக்கொண்டு வாங்கோ.
தாங்கள் தொடர ஆரம்பிக்க வேண்டிய பதிவு: http://gopu1949.blogspot.in/2011/01/1-of-2.html
இதில் கட்டாயம் ஏதும் இல்லை. தங்கள் செளகர்யப்படி மட்டுமே. போட்டியின் இறுதி நாளுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. தினமும் சராசரியாக நான்கு பதிவுகளுக்காவது பின்னூட்டமிட்டால் தான் சரியாக முடித்து வெற்றிபெற ஏதுவாகும். ஏற்கனவே பின்னூட்டம் இட்ட பதிவுகளுக்கு மறுபடியும் பின்னூட்டம் இட வேண்டாம். அவற்றிற்கு மட்டும் ஜஸ்ட் ஒரு :) ஸ்மைலியை பின்னூட்டமாகப் போட்டு விட்டு அடுத்த பதிவுக்குச் சென்று விடலாம்.
அன்புடன் VGK
பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
பதிலளிநீக்குவணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 டிஸம்பர் வரை முதல் பன்னிரெண்டு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
இதுபோல கவர்ச்சிப்பட விளம்பரங்கள் ஏதும் இல்லாமலேயே என் முதல் நூறு பதிவுகள் பதிவுலகச் சந்தையில் நல்ல வியாபாரம் ஆகி வரவேற்பு பெற்றது என்பதை நினைக்கும் போது, என் எழுத்துக்களின் மீது எனக்கே ஒரு புது காதல் பிறந்தது. //
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துக்களின் மீது எனக்கும் காதல் பிறந்து விட்டது. என்ன உங்கள் கதையில் நீங்கள் குறிப்பிட்ட சுடச்சுட ஜாங்கிரி போல் இல்லாமல் ஆறி அவலான பின் வந்து இருக்கிறேன்.
200 பதிவுகள். மலைப்பா இருக்கு. ஆனா உங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.
மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு ஒரு அப்பளம்.
பல பரிசுகள், கௌரவிப்புகளுக்கு சொந்தக்காரராக இருந்தும் அடக்கம் மேன் மேலும் உங்கள் பெயரை உயர கொண்டு போய் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
@Jayanthi Jaya
நீக்கு:))))))))))
My Heartiest Congratulations, Jaya !
Yours affectionately,
GOPU
அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
நீக்குஅன்புள்ள ஜெயா,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 டிஸம்பர் வரை முதல் ஆண்டில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.
பிரியமுள்ள நட்புடன் கோபு
சார்! பிரமித்து நிற்கின்றோம்......யம்மாடியோவ்! சொல்லிட வார்த்தைகள் இல்லை சார் சத்தியமாக! நீங்கள் ஏணி வந்த ஏணி என்று தலைப்புக் கொடுத்திருக்கின்றீர்கள் சரியே! அப்படியே இன்று நீங்கள் மகுடம் சூட்டப்பெற்று நிற்கின்றீர்கள்! எல்லோருக்கும் அதே ஏணியில் படிகள் அமைத்து வர வேண்டிய பாதையைக் காட்டி உள்ளீர்கள் உங்கள் எழுத்துகள் மூலமாய்...
பதிலளிநீக்குஅருமை...னீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள பதிவுகளையும் வாசிக்கின்றோம் ...சார்...இன்னும் பிரமிப்பிலிருந்து மீளவில்லை...
ஆம் சார் இப்போதெல்லாம் இன்ட்லி எப்படி என்று குழப்பமாக இருக்கிறது.....
Thulasidharan V Thillaiakathu July 3, 2015 at 8:56 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சார்! பிரமித்து நிற்கின்றோம்...... யம்மாடியோவ்! சொல்லிட வார்த்தைகள் இல்லை சார் சத்தியமாக! நீங்கள் ஏறி வந்த ஏணி என்று தலைப்புக் கொடுத்திருக்கின்றீர்கள் சரியே! அப்படியே இன்று நீங்கள் மகுடம் சூட்டப்பெற்று நிற்கின்றீர்கள்! எல்லோருக்கும் அதே ஏணியில் படிகள் அமைத்து வர வேண்டிய பாதையைக் காட்டி உள்ளீர்கள் உங்கள் எழுத்துகள் மூலமாய்...//
தங்களின் அன்பான வருகைக்கும் பிரமிக்க வைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
அன்புடன் VGK
இங்க நெறய லிங்க் இருக்குதே. இதுஅல்லாமும் போட்டில வார லிங்குதானா.
பதிலளிநீக்குmru October 14, 2015 at 3:09 PM
நீக்கு//இங்க நெறய லிங்க் இருக்குதே. இதுஅல்லாமும் போட்டில வார லிங்குதானா.//
ஆமாம் .... ஆமாம். பதிவைப்பற்றி ஏதும் கொஞ்சம் எழுதாமல் ஏதாவது கேள்வி கேட்டுக்கினே இருப்பதே உங்களுக்கு வேலையாப்போச்சு ! :)
அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
நீக்குஅன்புள்ள (mru) முருகு,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 டிஸம்பர் வரை, முதல் (ஓராண்டு) பன்னிரண்டு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு
200- வது பதிவுக்கு வாழ்த்துகள். அரச்ச மாவயே அரைக்காம ஒவ்வொரு பதிவிலும் வித்யாசமா யோசித்து பதிவு எழுதுறீங்க. நாங்கல்லாம் ரெடியாக இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு ஆஹா ரொம்ப டேஸ்டா நல்லா இருக்குனு சொல்லிட்டு போயிண்டே இருப்போம் ஆனா சமைக்கிறவாளுக்குத்தானே அதிலுள்ள கஷ்டங்கள் சிரமங்கள் தெரியும் என்னதான் பொருட்களை வாங்கி போட்டாலும் சுவை சேர்ப்பது நீங்களல்லவா
பதிலளிநீக்குசரணாகதி. November 20, 2015 at 10:53 AM
பதிலளிநீக்கு********************************************************
As on date, at this moment,
Status of your Comments Completion:
200 Posts Over, out of 750 Posts :)
12 Months Over, out of 51 Months :))
This achievement is just within
SIX DAYS only !!!! :)))
{ 15th to 20th November, 2015 }
Very Great Job ! Congrats !!
Best Wishes ........ :))))
vgk
********************************************************
அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 டிஸம்பர் மாதம் முடிய, என்னால் முதல் வருடம், 12 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
தரமான பாதாம், பிஸ்தா, முந்திரி, கிஸ்மிஸ், தேன், குங்குமப்பூ, இன்ன பிற ஐட்டங்களை அள்ளிக்கொட்டி கிண்டியது போல சுவை... நாவூறவைகிறது.. 200ம் இடுகைக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
பதிலளிநீக்குதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 டிஸம்பர் மாதம் வரை, என்னால் முதல் 12 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
My Dear RAVIJI RAVI Sir,
நீக்குAs on date, at this moment,
Status of your Comments Completion:
200 Posts Over, out of 750 Posts :)
12 Months Over, out of 51 Months :))
This achievement is just within
SIX DAYS only !!!! :)))
{ 26th November to 1st December, 2015 }
Very Great Job ! Congrats !!
Best Wishes ........ :))))
vgk
:))
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
200 out of 750 (26.66%) that too within
TWO Days from 17th December, 2015.
CONGRATULATIONS ! :)
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 டிஸம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 12 மாத அனைத்துப் பதிவுகளிலும், [ONE FULL YEAR] தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK