என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 7 ஜனவரி, 2019

‘ஆங்கரைப் பெரியவா’ .. YOU-TUBE AUDIO BY 'GOPU'

பூர்வாஸ்ரமத்தில்
’ஆங்கரை பெரியவா’ என்று அழைக்கப்பட்ட,
சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த,
ஸ்ரீ. A.V. கல்யாணராம சாஸ்திரிகள் [பாகவதர்].

திருச்சி, பழூர் கிராமத்தில் அதிஷ்டானம் அமைந்துள்ள
’ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்’

^பழூர் அதிஷ்டானத்தில் 
அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள 
அபூர்வமானதொரு படம்^
^^ஸ்வாமிகள் பல்லாண்டுகள் பூஜித்து வந்த 
ஸ்ரீ குருவாயூரப்பன் விக்ரஹம்^^

^அதிஷ்டானத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை^ 

அன்புடையீர்,

அனைவருக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்.

'EXPERIENCE WITH MAHA PERIYAVA' என்ற தலைப்பில் யூ-ட்யூப்பில் பலரையும் பேட்டி எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டவர்களின் பேட்டிகள் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.

இதுவிஷயம், நம் அன்புக்குரிய வலைப்பதிவர் ’ஆச்சி ஆச்சி’ மூலம் அடியேன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதுடன், அடியேனும் ஒரு பேட்டி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம், கடந்த ஓராண்டாக, ஆச்சி அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். 

அதேபோல பேட்டி எடுக்கும் இரு தோழர்களையும் மாற்றிமாற்றி ஆச்சியே தொடர்புகொண்டு, அடியேனை நேரில் சென்று, பேட்டி காணவேண்டும் என  தனது நீண்ட நாள் ஆவலை அவர்களிடம், நிர்பந்தப் ப...டு...த்...தி, கேட்டுக்கொண்டிருப்பார்கள் போலிருக்குது. 

’ஆச்சி’ பற்றி மேலும் அறிய இதோ சில இணைப்புகள்:
அன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது!

அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]
 
சந்தித்த வேளையில் ..... பகுதி 5 of 6

 ஆச்சியின் கொடுக்குகள்:- 

^20.06.2014^

 ^MAY, 2018^
^DECEMBER, 2018^

[’கொடுக்கு’ என்பது தெலுங்கு வார்த்தை.
இதற்கு தமிழில் ’பிள்ளை’ அல்லது ‘வாரிசு’ என்பது பொருள்]

’ஆச்சி’ போட்ட அதிரடி + அவசர உத்தரவால் அரண்டுபோன, பேட்டி காண்போர், திருச்சிக்கு வருகை தந்து என்னை நேரில் சந்தித்து, நேரடியாகப் பேட்டி காண, கால-நேர-சூழ்நிலைகள் ஒத்து வராததால், என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆடியோவாக பேசி பதிவு செய்து அனுப்பி வைத்துவிடுமாறு, வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி அடியேன் 12.12.2018 புதன்கிழமை, நல்ல முஹூர்த்த நாளில், திருச்சியில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்கோயில் கும்பாபிஷேகத்தன்று, திருவானைக்கோயில் சங்கர மடத்திற்கு வருகை தந்து சிறப்பித்திருந்த, ஸ்ரீ காஞ்சி சங்கரமடத்தின் தற்போதைய பீடாதிபதி, ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் மூன்று கால பூஜைகளையும் திவ்ய தரிஸனம் செய்துவிட்டு, அவர்களை நமஸ்கரித்துவிட்டு, அவர்களின் திருக்கரங்களால் அனுக்கிரஹிக்கப்பட்ட பிரஸாதங்களும் கிடைக்கப்பெற்று, அவர்களின் பரிபூர்ண அனுக்கிரஹத்துடன், மூன்று தனித்தனிப் பதிவுகளாகப் பேசி அனுப்பியுள்ள செய்தித் தொகுப்புக்களின், மூன்றாம் பாகத்தை யூ-ட்யூப்பில் 20.12.2018 அன்று வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.

https://youtu.be/OoMeuzmdC-k

ஆடியோ வெளியீட்டாளர் 
திரு. பரத் சுப்ரமணியன் அவர்களுக்கும், 

அன்புக்குரிய ஆச்சி அவர்களுக்கும் 
என் மனமார்ந்த இனிய அன்பு 
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரையிலான ஆடியோ வெளியீடுகள்:

                                                           1)      https://youtu.be/8-uVasAmlAQ 

                                                           2)      https://youtu.be/GkWwZ_n7As0

                                                           3)      https://youtu.be/OoMeuzmdC-k

 நினைத்துப்பார்க்கிறேன் 

[ http://gopu1949.blogspot.com/2011/07/3.htmlஜாம்ஷெட்பூரில் 03.02.2007 அன்று நடந்த நிகழ்ச்சியொன்றில், அகில இந்திய அளவில் முதல் பரிசும், தேசிய விருதும் (National Award with Gold Medal and First Prize in an All India Level Competition) அடியேன் பெற்றபோது, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் என்னை நேரிடையாக பேட்டி கண்டு, ரேடியோவில் ஒலிபரப்பு செய்தது, மலரும் நினைவுகளாக இப்போதும் என்னை மகிழ்விக்கிறது. இந்த You-Tube Audio Recording எனது இரண்டாவது மகன் சிரஞ்ஜீவி. G. SHANKAR அவர்களால், MOBILE SMART PHONE இல் பதிவு செய்யப்பட்டது. அவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ]

குருர் ப்ரஹ்மா, குருர் விஷ்ணு: குருதேவோ மஹேஸ்வர: !
குருஸ் ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குரவே நம: !!

என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

சனி, 5 ஜனவரி, 2019

64, 65, 66-வது நாயன்மார்கள் .. YOU-TUBE AUDIO BY 'GOPU'

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா கைங்கர்யம்
திருச்சி ஸ்ரீ. V. ஸ்ரீகண்டன் அவர்கள் 
 சந்நியாஸம் ஏற்ற [24.02.2002] தினத்தில்
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா அதிஷ்டானத்தில்
ஸ்ரீ ஸதா சிவானந்த தீர்த்த ஸ்வாமிகளாக காட்சியளித்தல் 

^சந்நியாஸம் மேற்கொள்ளும் முன்பு சங்கல்பம்
காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் குளத்தில்^  
^குருவிடம் காவி வஸ்திரம் ஏற்றல்^
^காவி ஆடையுடன் குருவை வணங்குதல்^ 
^சிரஸ்ஸில் லிங்கப் பிரதிஷ்டையுடன் அபிஷேகம்^

^ஞான தீக்ஷை அளித்தல்^ 
  
^மந்திர உபதேசம்^

^குரு வணக்கம்^
^ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் வழிபாடு^
 
^ஸ்ரீ பாலபெரியவா தரிஸனம்^
^ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானத்தில் பிரார்த்தனை^

 ^ஆங்கரை அதிஷ்டானத்தில் உள்ள கல்வெட்டு^
[This photo is taken on 04.01.2019 by one Mr. A.K.Balasubramanian. Thanks to my Dear AKB]

^ஆங்கரை அதிஷ்டான சிவலிங்கம்^
[This photo is taken on 04.01.2019 by one Mr. A.K.Balasubramanian. Thanks to my Dear AKB]

^ஆங்கரை அதிஷ்டானத்தில் கும்பாபிஷேகம்^

அன்புடையீர்,

அனைவருக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்.

'EXPERIENCE WITH MAHA PERIYAVA' என்ற தலைப்பில் யூ-ட்யூப்பில் பலரையும் பேட்டி எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டவர்களின் பேட்டிகள் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.

இதுவிஷயம், நம் அன்புக்குரிய வலைப்பதிவர் ’ஆச்சி ஆச்சி’ மூலம் அடியேன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதுடன், அடியேனும் ஒரு பேட்டி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம், கடந்த ஓராண்டாக, ஆச்சி அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். 

அதேபோல பேட்டி எடுக்கும் இரு தோழர்களையும் மாற்றிமாற்றி, ஆச்சியே தொடர்புகொண்டு, அடியேனை நேரில் சென்று, பேட்டி காணவேண்டும் என  தனது நீண்ட நாள் ஆவலை அவர்களிடம், நிர்பந்தப் ப...டு...த்...தி, கேட்டுக்கொண்டிருப்பார்கள் போலிருக்குது. 

’ஆச்சி’ பற்றி மேலும் அறிய இதோ சில இணைப்புகள்:

அன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது!

அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]

சந்தித்த வேளையில் ..... பகுதி 5 of 6

’ஆச்சி’ போட்ட அதிரடி + அவசர உத்தரவால் அரண்டுபோன, பேட்டி காண்போர், திருச்சிக்கு வருகை தந்து என்னை நேரில் சந்தித்து, நேரடியாகப் பேட்டி காண, கால-நேர-சூழ்நிலைகள் ஒத்து வராததால், என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆடியோவாக பேசி பதிவு செய்து அனுப்பி வைத்துவிடுமாறு, வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி அடியேன் 12.12.2018 புதன்கிழமை, நல்ல முஹூர்த்த நாளில், திருச்சியில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்கோயில் கும்பாபிஷேகத்தன்று, திருவானைக்கோயில் சங்கர மடத்திற்கு வருகை தந்து சிறப்பித்திருந்த, ஸ்ரீ காஞ்சி சங்கரமடத்தின் தற்போதைய பீடாதிபதி, ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் மூன்று கால பூஜைகளையும் திவ்ய தரிஸனம் செய்துவிட்டு, அவர்களை நமஸ்கரித்துவிட்டு, அவர்களின் திருக்கரங்களால் அனுக்கிரஹிக்கப்பட்ட பிரஸாதங்களும் கிடைக்கப்பெற்று, அவர்களின் பரிபூர்ண அனுக்கிரஹத்துடன், மூன்று தனித்தனிப் பதிவுகளாகப் பேசி அனுப்பியுள்ள செய்தித் தொகுப்புக்களின், இரண்டாம் பாகத்தை யூ-ட்யூப்பில் 16.12.2018 அன்று வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.

ஆடியோ வெளியீட்டாளர் திரு. பரத் சுப்ரமணியன் அவர்களுக்கும், அன்புக்குரிய ஆச்சி அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 நினைத்துப்பார்க்கிறேன் 

[ http://gopu1949.blogspot.com/2011/07/3.htmlஜாம்ஷெட்பூரில் 03.02.2007 அன்று நடந்த நிகழ்ச்சியொன்றில், அகில இந்திய அளவில் முதல் பரிசும், தேசிய விருதும் (National Award with Gold Medal and First Prize in an All India Level Competition) அடியேன் பெற்றபோது, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் என்னை நேரிடையாக பேட்டி கண்டு, ரேடியோவில் ஒலிபரப்பு செய்தது, மலரும் நினைவுகளாக இப்போதும் என்னை மகிழ்விக்கிறது. இந்த You-Tube Audio Recording எனது இரண்டாவது மகன் சிரஞ்ஜீவி. G. SHANKAR அவர்களால், MOBILE SMART PHONE இல் பதிவு செய்யப்பட்டது. அவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ]

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவருடன் 
மூன்று நாயன்மார்களும் (1980)

சற்றே பின்புறமாக உள்ளவர்  
(கண்ணாடி அணிந்தவர்)
பிரதோஷம் வெங்கட்ராம ஐயர்

விபூதி பட்டை பட்டையாக இட்டுள்ளவர்
ராயபுரம் ஸ்ரீ பாலு அண்ணா

மற்றொருவர் (முன்னால் வலது புறமாக) 
திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அண்ணா

மார்கழி மாதம், ஸ்திரவாரம் (சனிக்கிழமை), 
ஸர்வ அமாவாசை, சித்த யோகம், மூலா நக்ஷத்திரம்
ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி 
நல்ல நாளில் இதனை வெளியிடுவதில் 
பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! 

ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்களைப்பற்றி 
மேலும் சில அபூர்வமான படங்களுடன் அறிய 
எனது பழைய பதிவு ஒன்றின் இணைப்பு:

”நானும் என் அம்பாளும் !” (அதிசய நிகழ்வு)

என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]