என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 30 மார்ச், 2017

மின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் !அன்புடையீர், 

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். 


எழுத்துலகின் புதிய பரிணாம வளர்ச்சியாக, மின்னூல் [e-book] என நம் பதிவர்களில் பலராலும் இப்போது பேசப்பட்டு வருகின்றன. 

எந்த ஒரு கலையுமே நம்மை எட்டவோ, நாம் அந்தக் கலையைப்பற்றி அறியவோ, அதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று, அதில் நமக்கு வெற்றி வாய்ப்புக் கிட்டவோ, ஒரு நல்ல காலம், ஒரு நல்ல நேரம், நமக்கான அதிர்ஷ்டம், கொடுப்பிணை, ’கலையரசி’யாம் சரஸ்வதி கடாக்ஷம் போன்றவைக் கூடி வந்து கைகொடுத்து உதவ வேண்டும்.

எப்போதோ ஒரு காலக்கட்டத்தில் (2-3 ஆண்டுகளுக்கு முன்பாக) நான் அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்த என்னுடைய மூன்று  நூல்களை படித்துப் பார்த்து, இப்போது சமீபத்தில் நூல் மதிப்புரையாகக் கொடுத்திருந்தார்கள் நம் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய பதிவர் ஒருவர். அவர்கள் பெயரும் ‘கலையரசி’ என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான இணைப்புகள் இதோ:

மேலும் நம் வலையுலகில், மூத்த பதிவரும் மிகப்பெரிய அறிஞரும் ஆன திரு. சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் பெற்றெடுத்துள்ள ஞானக்குழந்தையே  இந்தக்  ‘கலையரசி’ என்ற பதிவர் ஆவார்.

திரு. சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள்
http://sgnanasambandan.blogspot.com

இந்த மார்ச் 2017-இல் வெளியான, மேற்படி என் நூல் மதிப்புரைப் பதிவுகளில் நான் ஏராளமான பின்னூட்டங்கள் கொடுத்திருந்தேன். அதற்கு எனக்கு அவர்களால் கொடுக்கப்பட்டிருந்த மறுமொழிகள் மூலம் என் ஆக்கங்கள் அனைத்தையும் மின்னூல் வடிவில் கொண்டுவர, எனக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்து செயல்பட்டவர் என்ற பெருமை திருமதி. கலையரசி அவர்களுக்கு மட்டுமே உண்டு. திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் என்னைத் தூண்டிவிட்டதன் பலனாக ‘புஸ்தகா மின்னூல் நிறுவனம்’ + ’அடியேன்’ அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய கூட்டு ஒப்பந்தமாக எங்களுக்குள் கையெழுத்திட்ட தேதி: 10.03.2017. இன்றைய தேதி: 30.03.2017. இந்த மிகக்குறுகிய காலமாகிய இருபது நாட்களுக்குள் என்னுடைய பத்து மின்னூல்கள் வரிசையாக ‘புஸ்தகா மின்னூல் நிறுவனத்தால்’ வெளியிடப்பட்டுள்ளன என்பதும், மேலும் அடுத்தடுத்து பல மின்னூல்கள் வெளியிடப்பட  தயார் நிலையில் உள்ளன என்பதும், எனக்கே மிகப் பெரிய ஆச்சர்யம் அளிக்கும் செய்திகளாக உள்ளன.

இதைப்பற்றிய மேலும் முழு விபரங்களுக்கு இதோ இந்த இணைப்பினில் போய்ப் பார்க்கவும்:  http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan

இந்த மார்ச்-2017 இல் மட்டும், நேற்று வரை வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மின்னூல்கள் உங்கள் பார்வைக்காக இதோ:

 

 

 

 

 


இவ்வாறு மிகக்குறுகிய காலத்தில் என் மின்னூல்கள் வெளியாகத் தூண்டுதலாக இருந்துள்ள ’ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கும், பெங்களூரில் மையம் கொண்டுள்ள ‘புஸ்தகா மின்னூல் நிறுவனம்’ மற்றும் அங்கு பொறுப்பான பதவி வகிக்கும் என் இனிய நண்பர் திரு. பத்மநாபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்,
சனி, 18 மார்ச், 2017

சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன், 81+ வயது இளைஞர்

14.03.2017 செவ்வாய்க்கிழமை மாசி+பங்குனி கூடும்
காரடையான நோன்பு விரத தினமாக நேரிட்டதாலும்
அன்று பகல் முழுவதும் பட்டினியுடன் விரதமிருந்து
மாசி மாதம் இருக்கும் போதே, அதாவது 
பிற்பகல் 4.30க்கு மேல் 4.45 மணிக்குள் 
பூஜையில் கொழுக்கட்டைகள் நைவேத்யம் செய்து, 
என் வீட்டுப் பெண்கள் கழுத்தில் சரடு கட்டிக்கொள்ள 
வேண்டியிருந்ததாலும், மறுநாள் மிகவும் டயர்ட் ஆகிவிட்டனர்.
 அதனால் மறுநாள் 15.03.2017 வருகை தந்திருந்த முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களை, மதிய உணவுக்காக, என் வீட்டின் மிக அருகே உள்ள மதுரா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்தளிக்க நேர்ந்தது. இருப்பினும், அன்றைய தினம் அங்கு அளிக்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு, தினமும் சாப்பிடும் என் வீட்டு சாப்பாட்டையும் விட மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருந்ததாக என்னால் உணர முடிந்தது.

இந்த மேற்படி காரடையான் நோன்பு என்பது பற்றி மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் படங்களுடன் கூடிய என் பழைய பதிவான ‘தீர்க்க சுமங்கலி பவ!’ என்பதைக் கண்டு களிக்கவும். இதோ அதற்கான இணைப்பு:  http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_9400.html

சென்ற பதிவின் இறுதியில் நான் கொடுத்துள்ள சில கேள்விகள் இதோ:

முனைவர் பழனி கந்தசாமி ஐயா 15.03.2017 திடீரென்று
திருச்சிக்கு எதற்காக வருகை தந்திருந்தார்?

மாலை 6 மணிக்கு 
சில்க் ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன்  
மாப்பிள்ளை போல ட்ரெஸ் செய்துகொண்டு
என்னுடன் எங்கு புறப்பட்டார்?

அங்கு வந்திருந்த இதர பதிவர்கள் 
யார் யாரை இவர் சந்தித்தார்?

அங்கு மேற்கொண்டு என்னதான் நடந்தது?

போன்ற மற்ற சுவையான விபரங்களுக்கு
இப்போது நாம் விடை காண்போம்.

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு
கலைஞர் அறிவாலயம் தாண்டி எதிர்புறமாக 
அமைந்துள்ளது ’தாஜ் திருமண மஹால்’

15.03.2017 புதன்கிழமை 
மாலை 6.30 முதல் அங்கு
ஓர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 
+
மல்லடி சகோதரர்கள் குழுவினரின் 
கர்நாடக இசைக் கச்சேரிகள்  
+
இரவு டின்னர்

16.03.2017 வியாழக்கிழமை 
காலை 8 to 9 திருமணம்


மணமகள்: 
செளபாக்யவதி. 
நித்யா ராமமூர்த்தி
[நம் ’ஆரண்ய நிவாஸ்’ வலைப் பதிவர்
திரு. R. ராமமூர்த்தி அவர்களின் பெண்]
மணமகன்:
சிரஞ்சீவி: விக்னேஷ் ஸ்வாமிநாதன்

[பொண்ணு மாப்பிள்ளை மேடைக்கு வந்ததும்
 ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்து 
மகிழும் போது எடுக்கப்பட்ட படம் இது]


-oOo-

என் வீட்டிலிருந்து முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களை ஓர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அன்று மாலை 6.10 க்குப் புறப்பட்டேன். அடுத்த 10  நிமிடங்களில் திருமண மண்டபத்தை நாங்கள் அடைந்தோம்.

எங்களை அன்புடன் வரவேற்ற 
ஆரண்யநிவாஸ் தம்பதியினருடன்
முனைவர் ஐயாவும் அடியேனும்
மேடையில் மணமக்களுடன் சில BHEL நண்பர்கள் 
மண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள 
ஒரு சில கலை நுட்பமானப் பொருட்கள்
பார்வையாளர்களின் ஓர் பகுதி
பதிவர் திரு. தமிழ் இளங்கோ அவர்களுடன் 
முனைவர் கந்தசாமி ஐயா அவர்கள்
கம்பீரமான நம் முனைவர் ஐயா அவர்களின் வலது காது !

மேளம் + நாயன கோஷ்டியினர்
VGK + முனைவர் ஐயா + பால கணேஷ்
15.03.2017 இரவு டின்னர் (பஃபே சிஸ்டம்)

மேற்படி படங்களில் சிலவற்றை தன் கேமராவில் எடுத்து
எனக்கு அனுப்பி வைத்து உதவிய என் அருமை நண்பர்
திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகள்.


அங்கிருந்த ஓரிரு மணி நேரங்களுக்குள், பதிவர்களும், பத்திரிகை எழுத்தாளர்களுமாக ஒரு சிலரை ஒருவருக்கொருவர் சந்திக்கவும், அறிமுகப்படுத்திக்கொள்ளவும், பேசி மகிழவும் முடிந்தது.  

அவர்களில் இப்போது என் நினைவுக்கு வருவோர்  (1) திரு. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் அவர்கள் (2) ஆரண்ய நிவாஸ் திரு. R. ராமமூர்த்தி (3) எல்லென் எனப்படும் திரு. R. லக்ஷ்மி நாராயணன் (4) திரு. பாஸ்கர் என்னும் கிருஷ்ணா (5) திரு. தி. தமிழ் இளங்கோ (6) திரு. பால கணேஷ் (7) வஸந்தமுல்லை திரு. ரவி  (8) அஷ்டாவதானி திருவாளர் மஹாலிங்கம் ஸார் அவர்கள் (9) முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் (10) அடியேன் VGK 

பதிவர்களும் எழுத்தாளர்களுமாகிய நாங்கள் அனைவரும் ஒன்றாக திருமண மேடையில் ஏறி தம்பதியினரை வாழ்த்தி ஆசீர்வதித்த புகைப்படம் இன்னும் எனக்கு வந்துசேரவில்லை. அதனால் அதனை இங்கு இப்போது காட்சிப்படுத்த என்னால் இயலவில்லை.

BHEL இல் என்னுடன் ஒரே இலாகாவில் வேலை பார்த்த பல்வேறு தோழர்களையும் தோழிகளையும், நீண்ட இடைவேளைக்குப்பின்  அன்று என்னால் சந்தித்துப் பேச முடிந்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். 

திரு. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் மூத்த பெண் திருமணமும் இதே திருமண மண்டபத்தில் தான் 12.06.2013 அன்று நடைபெற்றது. அதைப்பற்றி நான் ஏற்கனவே என் பதிவினில் எழுதி வெளியிட்டிருந்தேன். அதற்கான இணைப்பு இதோ:  http://gopu1949.blogspot.in/2013/06/9.html

’ஆரண்யநிவாஸ்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மற்றும் பலரையும் படத்தில் காண இதோ மற்றொரு இணைப்பு:  http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html

நாங்கள் அவ்விடம் இரவு விருந்து சாப்பிட்டு முடிய 8.15 மணி ஆனது. பஃபேயில் ஏதேதோ பல உணவுப்பொருட்கள் இருப்பினும், நான் எனக்குப் பிடித்தமான பூரிகளையும், தயிர் சாதம் + வறுத்த மோர் மிளகாயையும் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தேன்.  

பிறகு 8.30க்கு என் ஆஸ்தான ஆட்டோக்காரர் ஏழுமலை அவர்களை என் மொபைலில் அழைத்து வரவழைத்தேன்.  அதில் முனைவர் அவர்களை ஏற்றிக்கொண்டு, திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில், கும்பல் அதிகம் இல்லாததோர் டவுன் பஸ்ஸில் அவரை அமரச்செய்து, அவரிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு, அதே ஆட்டோவில் நான் என் வீட்டுக்கு இரவு ஒன்பது மணிக்குள் வந்து சேர்ந்து விட்டேன்.

இரவு 10.30 மணிக்கு முனைவர் ஐயா அவர்களுடன் மொபைலில் பேசி, அவர் திருச்சி ஜங்ஷனிலிருந்து, செளகர்யமாக கோவை செல்ல வேண்டிய ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துகொண்டேன். மறுநாள் 16.03.2017 அதிகாலை 10 மணிக்குள் நான் மிகவும் சீக்கரமாகவே  எழுந்துகொண்டு, லேண்ட் லைன் போனில் முனைவர் ஐயா அவர்களின் சம்சாரத்துடன் பேசி, அவர் செளக்யமாக வீடு வந்து சேர்ந்து விட்டாரா என்பதையும் கேட்டு  உறுதி செய்துகொண்டேன். (அவர் நன்கு அசந்து தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்)

81+ வயதான இந்த இளைஞர், பேரெழுச்சியுடன் கோவையிலிருந்து தனியாகப் புறப்பட்டு, ஒரே நாளில்  6+6 = 12 மணி நேரங்கள் பயணம் செய்துள்ளார். அவரை நினைக்க எனக்கு மிகவும் வியப்பாகவும் பொறாமையாகவும் உள்ளது. அவரின் அன்பும், பண்பும், பழுத்த அனுபவங்களும், நகைச்சுவை உணர்வுகளும், மிகவும் வெளிப்படையான பேச்சுக்களும், ஓரளவு ஆரோக்யமான உடல்நிலையும் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை தானே !

நல்ல மனம் கொண்ட நம் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மேலும் பல்லாண்டுகள் இதேபோல பேரெழுச்சியுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன்.  


   

புதிதாக இன்று (28.05.2017) இணைக்கப்பட்டுள்ள படங்கள்:


திருமண மேடையில் இடதுமிருந்து வலமாக
1) திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
2) திரு. அஷ்டாவதானி மஹாலிங்கம் அவர்கள்
3) அடியேன் கோபு
4) மணமகள் செள. நித்யா அவர்கள்
5) மாப்பிள்ளை சிரஞ்சீவி. விக்னேஷ் ஸ்வாமிநாதன் அவர்கள்
6) முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
7) திரு. பால கணேஷ் அவர்கள்
8) ஆரண்யநிவாஸ் திரு. இராமமூர்த்தி அவர்கள்

என்றும் அன்புடன் தங்கள்,

 

(வை. கோபாலகிருஷ்ணன்)