என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 30 மார்ச், 2017

மின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் !அன்புடையீர், 

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். 


எழுத்துலகின் புதிய பரிணாம வளர்ச்சியாக, மின்னூல் [e-book] என நம் பதிவர்களில் பலராலும் இப்போது பேசப்பட்டு வருகின்றன. 

எந்த ஒரு கலையுமே நம்மை எட்டவோ, நாம் அந்தக் கலையைப்பற்றி அறியவோ, அதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று, அதில் நமக்கு வெற்றி வாய்ப்புக் கிட்டவோ, ஒரு நல்ல காலம், ஒரு நல்ல நேரம், நமக்கான அதிர்ஷ்டம், கொடுப்பிணை, ’கலையரசி’யாம் சரஸ்வதி கடாக்ஷம் போன்றவைக் கூடி வந்து கைகொடுத்து உதவ வேண்டும்.

எப்போதோ ஒரு காலக்கட்டத்தில் (2-3 ஆண்டுகளுக்கு முன்பாக) நான் அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்த என்னுடைய மூன்று  நூல்களை படித்துப் பார்த்து, இப்போது சமீபத்தில் நூல் மதிப்புரையாகக் கொடுத்திருந்தார்கள் நம் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய பதிவர் ஒருவர். அவர்கள் பெயரும் ‘கலையரசி’ என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான இணைப்புகள் இதோ:

மேலும் நம் வலையுலகில், மூத்த பதிவரும் மிகப்பெரிய அறிஞரும் ஆன திரு. சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் பெற்றெடுத்துள்ள ஞானக்குழந்தையே  இந்தக்  ‘கலையரசி’ என்ற பதிவர் ஆவார்.

திரு. சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள்
http://sgnanasambandan.blogspot.com

இந்த மார்ச் 2017-இல் வெளியான, மேற்படி என் நூல் மதிப்புரைப் பதிவுகளில் நான் ஏராளமான பின்னூட்டங்கள் கொடுத்திருந்தேன். அதற்கு எனக்கு அவர்களால் கொடுக்கப்பட்டிருந்த மறுமொழிகள் மூலம் என் ஆக்கங்கள் அனைத்தையும் மின்னூல் வடிவில் கொண்டுவர, எனக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்து செயல்பட்டவர் என்ற பெருமை திருமதி. கலையரசி அவர்களுக்கு மட்டுமே உண்டு. திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் என்னைத் தூண்டிவிட்டதன் பலனாக ‘புஸ்தகா மின்னூல் நிறுவனம்’ + ’அடியேன்’ அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய கூட்டு ஒப்பந்தமாக எங்களுக்குள் கையெழுத்திட்ட தேதி: 10.03.2017. இன்றைய தேதி: 30.03.2017. இந்த மிகக்குறுகிய காலமாகிய இருபது நாட்களுக்குள் என்னுடைய பத்து மின்னூல்கள் வரிசையாக ‘புஸ்தகா மின்னூல் நிறுவனத்தால்’ வெளியிடப்பட்டுள்ளன என்பதும், மேலும் அடுத்தடுத்து பல மின்னூல்கள் வெளியிடப்பட  தயார் நிலையில் உள்ளன என்பதும், எனக்கே மிகப் பெரிய ஆச்சர்யம் அளிக்கும் செய்திகளாக உள்ளன.

இதைப்பற்றிய மேலும் முழு விபரங்களுக்கு இதோ இந்த இணைப்பினில் போய்ப் பார்க்கவும்:  http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan

இந்த மார்ச்-2017 இல் மட்டும், நேற்று வரை வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மின்னூல்கள் உங்கள் பார்வைக்காக இதோ:

 

 

 

 

 


இவ்வாறு மிகக்குறுகிய காலத்தில் என் மின்னூல்கள் வெளியாகத் தூண்டுதலாக இருந்துள்ள ’ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கும், பெங்களூரில் மையம் கொண்டுள்ள ‘புஸ்தகா மின்னூல் நிறுவனம்’ மற்றும் அங்கு பொறுப்பான பதவி வகிக்கும் என் இனிய நண்பர் திரு. பத்மநாபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்,
112 கருத்துகள்:

 1. கோபூஜி... சந்தோஷம்.. மின்னூல் பத்தி எதுவும் தெரியலியே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிப்பிக்குள் முத்து. March 30, 2017 at 10:30 AM

   //கோபூஜி... சந்தோஷம்..//

   வா .... மீனா .... வணக்கம்மா .... உன் அதிசயமான .... அதுவும், இந்த என் பதிவுக்கு முதல் வருகை ஆச்சர்யம் அளித்து என்னை அப்படியே மயக்கம் போட்டு கீழே விழச் செய்து விட்டது.

   எப்படி இருக்கிறாய்? எங்கே எந்த ஊரில் இருக்கிறாய்? அங்கு உன் ஆசாமிகள் (அனைவரும்) நலம் தானே? :)

   //மின்னூல் பத்தி எதுவும் தெரியலியே//

   உனக்கு வாழ்க்கையில் இதுவரை என்ன தெரிந்துள்ளது? பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, படிப்பு, வேலை, உத்யோகம், சம்பளம், குடும்பம், அன்பைப் பொழியும் பெற்றோர்கள், உடன் பிறப்புகள், உலகம், நாடு, ஊர், ஜாதி, மதம், இனம், மொழி, காதல், கல்யாணம், பிறந்த வீடு, புகுந்த வீடு, பிரஸவம், குழந்தைகள் வளர்ப்பு போன்ற எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறதே.

   என்னவோ அதையெல்லாம் கரைத்துக்குடித்து தெரிந்துகொண்டு விட்டது போலவும், இந்த மின்னூல் பற்றி மட்டுமே தெரியாதது போலவும் இங்கு சொல்லியுள்ளாய்.

   உன் ஒவ்வொன்றையும் நானே எனக்குள் அசை போட்டு நினைத்துப் பார்த்தேன். எனக்குள் சிரித்துக்கொண்டேன். :)

   சரி அதெல்லாம் போகட்டும். உன் கேள்விக்கு பதில் தர வேண்டியது என் கடமையாக நினைத்து இதோ .... மின்னூல் பற்றி நானும் எடுத்துச் சொல்கிறேன். உனக்கு இல்லாவிட்டாலும் வேறு சிலருக்காவது இது பயன்படக்கூடும். :)

   >>>>>

   நீக்கு
  2. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (மீனா) - 2

   மின்னூல் (e-book) என்பது பற்றி சில வரிகள்:-
   ================================================

   நம் கையில் கனமாக ஒரு புத்தகத்தை கஷ்டப்பட்டுப் பிடித்துக்கொண்டு திண்டாடாமல், அதனை அடிக்கடி கஷ்டப்பட்டு ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக்கொண்டே இருக்காமல், நாளடைவில் அந்தப் புத்தகத்தை அழுக்காக்கியோ, கிழித்தோ, தொலைத்தோ விடாமல், எப்போதுமே புத்தம் புதியதாக காட்சியளிக்குமாறு, படிக்க உதவுகிறது இந்த மின்னூல்.

   டெஸ்க்-டாப் எனப்படும் மேஜை கணினியிலோ, லாப்-டாப் எனப்படும் மடிக்கணினியிலோ, மொபைல் ஐ-பேடு எனப்படும் மின்னஞ்சல் வசதிகள் உள்ள கைபேசியிலோ சுலபமாக கண்ணால் பார்த்து, மனதால் படித்து, மண்டையில் ஏற்றிக்கொள்ளக்கூடியது இந்த மின்னூல் என்பது.

   அதே நேரம் புத்தகம் படிப்பது போன்ற சுவாரஸ்யத்தையும் தரும் ஓர் லேடஸ்ட் புத்தகமே இந்த மின் நூல் என்பதாகும்.

   இருப்பினும் இதனை மொபைல் ஐ-பேடில் படிப்பதைவிட மிகப்பெரிய ஸ்க்ரீன் உள்ள மேஜை கணினி அல்லது மடிக்கணினியில் படிப்பதில் ஓர் தனியான இன்பமும் பரம சுகமும் உண்டு.

   >>>>>

   நீக்கு
  3. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (மீனா) - 3

   இதில் பேப்பர்களுக்கே எதுவும் வேலை இல்லாததால், பேப்பர் தயாரிக்க வேண்டி மட்டுமே உலகளவில் இன்று வெட்டப்பட்டு வரும் கோடிக்கணக்கான மரங்கள் பாதுகாக்கப்படும் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

   நூல்களை குவித்து, சேமிக்க வேண்டிய நூலகங்கள் போன்ற மிகப்பெரிய இடங்களும், அவற்றைப் பராமரிக்க வேண்டிய செலவுகளும் உலகளவில் மிச்சமாகும்.

   நம் வீட்டளவில் புத்தக அடசல்கள் குறையும். புத்தகங்களைக் கண்டால் நம்மைவிட அதிக ஆசையுடன் அவற்றில் அடைக்கலம் தேடி வந்து, அவற்றை அரித்து விட்டுப்போகும் அந்துப்பூச்சிகளின் தொல்லைகளும், ஆபத்துக்களும் அறவே இனி இருக்காது.

   >>>>>

   நீக்கு
  4. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (மீனா) - 4

   அச்சிடப்பட்ட நூல்களுக்கு ஆயுட்காலம் மிகவும் குறைவு. அவை காலத்தால் அழிந்து போகும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். மின்னூல்களுக்கு அழிவு என்பதே எப்போதுமே கிடையாது.

   இந்த மின்னூல் என்பது மார்க்கண்டேயன் போலவும், ’16 வயதினிலே மயிலு (ஸ்ரீதேவி)’ போலவும், எப்போதுமே இளமையோடும், பார்க்க மிகவும் அழகாகவும், ஸ்வீட் சிக்ஸ்டீனாகவும், பளபளன்னு புத்தம் புதிதாக மட்டுமே, பார்ப்போர் + படிப்போர் கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக மட்டுமே காட்சியளிக்கும்.

   சும்மா ..... ஜில்லென்று இருக்குமாக்கும். :)

   http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html

   >>>>>

   நீக்கு
  5. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (மீனா) - 5

   மொத்தத்தில் காலத்தால் அழியாதது, கள்வரால் திருட முடியாதது, தீயினாலும் அழிக்க முடியாதது இந்த மின்னூல் என்பது மட்டுமே.

   ஒருவேளை நூலை எழுதியவரே வயதாகி தன் சரீரத்தால் இந்த உலகைவிட்டு மறைந்தாலும்கூட, அவரால் எழுதி வெளியிடப்பட்ட மின்னூல்களுக்கு அழிவு என்பது கிடையவே கிடையாது.

   மற்றவிதமான வெளியீடுகள் மனித உடலைப்போல என்றால் ... மின்னூல் மட்டுமே ஆன்மாவாகும்.

   ஒருவரின் உடலுக்கு மட்டுமே அழிவு உண்டே தவிர அவரின் ஆன்மாவுக்கு என்றுமே அழிவு என்பது கிடையவே கிடையாது என்பது பெரும்பாலான மதங்களில் பெரியோர்களால் சொல்லப்பட்டு வரும் கருத்தாகவே இன்றும் உள்ளது.

   >>>>>

   நீக்கு
  6. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (மீனா) - 6

   இன்று மேற்படிப்பு, வசதியான உத்யோகம், உல்லாசமான வாழ்க்கை என்ற ஏதோவொரு காரணத்தால் ஒவ்வொரு நாட்டிலிருந்தும், ஒவ்வொரு ஊரிலிருந்தும், ஒவ்வொரு கிராமத்திலிருந்து அயல் நாட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமை அனைவருக்குமே தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.

   அவ்வாறு உலகின் ஏதோவொரு மூலையில் போய்த் தங்கியுள்ளவர்களுக்கு, இலக்கிய தாகமும் மோகமும் ஏற்படும் போது அவர்கள், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வெளிவந்துள்ள நூல்களைத் தேடி எங்கு அலைந்து திரிய முடியும்?

   அதுபோன்றவர்களின் சிரமங்களையும், தாகத்தையும் உணர்ந்து மிகவும் மலிவு விலையில் வடிவமைக்கப்பட்டுள்ளவைகளே, எல்லோராலும் இன்று மிகவும் வரவேற்கப்படும் இந்த மின்னூல்கள் என்ற மிக அருமையான கண்டுபிடிப்பாகும்.

   >>>>>

   நீக்கு
  7. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (மீனா) - 7

   நாம் காசு செலவழித்து, அன்றாட செய்தித்தாள்களையும், வார/மாத இதழ்களையும் வாங்கிப் படிக்கிறோம் அல்லவா .... அதே போல இந்த மின்னூல்களை மிகச் சிறியதொரு தொகை செலுத்தி, சொந்தமாக நிரந்தரமாக வாங்கியோ அல்லது இன்னும் மிகச்சிறிய தொகை மட்டும் செலுத்தி வாடகைக்கு வாங்கி தற்காலிகமாகவோ படிக்க முடியும் என்பது இதில் உள்ள மேலும் சில செளகர்யங்களாக உள்ளன.

   இவ்வாறு வியாபாரமாகி வசூல் ஆகும் தொகையில், ஒரு பகுதி (Around 40 to 50%) நூலை எழுதிய ஆசிரியருக்கு ROYALTY என்ற பெயரில் அளிக்கப்படுகிறது.

   மீதியை மின்னூலை வடிவமைத்து, விளம்பரப்படுத்தி, உலகளவில் வணிகச் சந்தையை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தப் புகழ் பெற்ற ’புஸ்தகா மின்னூல் நிறுவனம்’, தன் நிறுவனத்தினை நடத்த வேண்டிய செலவுகளுக்கு வைத்துக்கொள்கிறது.

   இது மிகவும் நியாயமான DEAL ஆகவும் உள்ளது.

   >>>>>

   நீக்கு
  8. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (மீனா) - 8

   http://www.pustaka.co.in/ என்ற இணைப்புக்குச் சென்று, அங்கு PUSTAKA DIGITAL MEDIA வின் தலைப்பகுதியில் காட்டப்பட்டுள்ள Home, Blogs, eBooks, eMagazines, Authors, Plans போன்றவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக்கிப்பார்த்தால் மேலும் பல விபரங்கள் உனக்குத் தெரியவரக்கூடும்.

   இதில் AUTHORS என்பதை க்ளிக்கும் போது ஏராளமான பிரபல எழுத்தாளர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அந்தப் பிரபல எழுத்தாளர்களின் புகைப்படங்களுக்கு இடையே என்னுடைய புகைப்படத்தினையும் நான் காணும்போது என்னையறியாமல், மிகவும் ஒஸத்தியான சரக்கினை ஃபுல் (Full) ஏற்றியது போல மாபெரும் ’கிக்’ எனக்கு ஏற்படுகிறது.

   நான் மிகவும் DULL ஆக இருக்கும் நேரங்களில் இவற்றைப் போய்ப் பார்க்கும் போது FULL ஏற்றிய கிக் ஏற்படுவதால் மிகவும் பேரெழுச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் எனக்கு உள்ளது.

   >>>>>

   நீக்கு
  9. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (மீனா) - 9

   அவர்களில் ஒவ்வொருவரின் புகைப்படத்தினையும் க்ளிக் செய்தால் அவர்களைப்பற்றிய முழு ஜாதகமும் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன.

   அடுத்தவரைப் பற்றி நமக்கென்ன கவலை? ஊர் வம்ஸ்ஸ்ஸ் எல்லாம் நமக்கு எதற்கு? என்பதால், நான் நேரிடையாக அடிக்கடி போய்ப் பார்ப்பது, என்னைப் பற்றி வெளியிடப்பட்டுள்ள இதோ இந்த இணைப்பினை மட்டுமே.

   http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan

   அதனால் மீனா ..... நீயும் அடிக்கடி நேரிடையாக இங்கு போய் என்னை மட்டும் மறக்காமல் தலையோடு கால் பார்த்து விட்டு வரவும்.

   அதென்ன தலையோடு கால் என்றால் .... அதன் கால் பகுதியில் மட்டுமே (AT THE BOTTOM MOST PORTION) MY LATEST UPDATED BOOKS RELEASE பற்றிய செய்திகளைக் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். அவற்றை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

   எனவே இந்தக் குறிப்பிட்ட லிங்கை மட்டும் எங்காவது நீ உன்னிடம் மறக்காமல் குறித்துக்கொள்ளவும்.

   http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan

   அன்புடன் கோபூஜி :)

   நீக்கு
  10. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (மீனா) - 10

   உன் ஒருவரி பின்னூட்டத்திற்கு நான் ஓராயிரம் விளக்கங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. எல்லாம் என் தலையெழுத்து.

   இதைப்பார்த்து ’நம்மாளு’ சிலபேர்களுக்கு காதில் புகை வந்து, என்னைக் கடித்துக் குதறினாலும் பரவாயில்லை என நினைத்து, துணிந்து பதில் கொடுத்து விட்டேன் .... மீனா.

   So you are only the Luckiest of all here. :)

   உன் முதல் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.

   அன்புடன் கோபூஜி.

   நீக்கு
  11. ///உன் ஒருவரி பின்னூட்டத்திற்கு நான் ஓராயிரம் விளக்கங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. எல்லாம் என் தலையெழுத்து.///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு சோட் அண்ட் சுவீட்டா பதில் கொடுக்கத் தெரியல்ல:) ஒரு சொல்லில் online books எனச் சொன்னால் புரிந்திருக்கும்.. நான்கூட மின்னூல் என்றதும் பலகாலம் அது என்ன எனவும் புரியல்ல.. ஆராய்ச்சி பண்ணவும் நினைக்கவில்லை.. இப்போ உங்கள் புக்ஸ் போய், நேரில் பார்த்ததும்தான் விளங்கிடுச்சு:).

   நீக்கு
  12. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு சோட் அண்ட் சுவீட்டா பதில் கொடுக்கத் தெரியல்ல:)//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! நாங்க ஒரு தனி க்ரூப் ஆளுங்க அதிரா .. நாங்கள் எல்லோரும் ஒரு காலத்தில் ஓரிடத்தில் கூடி, மிகவும் ஜாலியாக, நல்லாக் கும்மி அடிச்சு கோலாட்டம் போட்டுக்கொண்டு இருந்தவங்க .. நான் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக பதில் கொடுத்தால் அவங்களில் யாருக்கும் பிடிக்காது. ஏற்கனவே இந்த ஆளு மீனா வேறு ஏதோவொரு கடுப்பிலே இருக்குது. அதைக் கூலாக்கிக்கொண்டு வரும் பொறுப்பும் என்னிடம் உள்ளது.

   இதற்கு மேல் ஏதும் கேட்காதீங்கோ, அதிரா. என்னிடம் நூல் விட்டுப் பார்க்காதீங்கோ. அப்புறமா நான் வேறு ஏதும் வாய் தவறி உளறிப்புடுவேன். டேஞ்சராகி விடும். அவள் என்னைக் கடித்துக் குதறிப்புடுவா. :)))))

   எனக்கு இப்போ ஒரே பயமாக்கீதூஊஊஊ.

   நீக்கு
 2. ஓவியன் மறையலாம். ஓவியங்கள் அவன் பெருமையை காலா காலத்துக்கும் பேசும் என்பதுபோல், எழுத்தாளன் புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது, காலமெல்லாம் வாழும் பெருமையைப் பெருகிறான்.

  முனைந்து நிறைய மின்னூல் பதிப்பித்துவிட்டீர்கள். அட்டைப் படங்கள் சிறப்பாக வந்துள்ளன. வாழ்த்துக்கள். (அதனால்தான் வலைத்தளங்களில் உங்களை அவ்வப்போது காணமுடியவில்லையா?)

  உங்களுக்குத் தூண்டுகோலாக இருந்த கலையரசி மேடம் அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன் March 30, 2017 at 10:41 AM

   வாங்கோ மை டியர் நெல்லைத் தமிழரே ! வணக்கம்.

   //ஓவியன் மறையலாம். ஓவியங்கள் அவன் பெருமையை காலா காலத்துக்கும் பேசும் என்பதுபோல், எழுத்தாளன் புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது, காலமெல்லாம் வாழும் பெருமையைப் பெருகிறான்.//

   ஆம். நிச்சயமாக !

   //முனைந்து நிறைய மின்னூல் பதிப்பித்துவிட்டீர்கள்.//

   எல்லாம் அம்பாள் கலைவாணி .... கலையரசி .... அருளால் .... தூண்டுதலால் மட்டுமே.

   //அட்டைப் படங்கள் சிறப்பாக வந்துள்ளன. வாழ்த்துக்கள்.//

   அட்டைப் படங்கள் அனைத்துமே ‘புஸ்தகா மின்னூல் நிறுவனத்தார்’ அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளவைகள் மட்டுமே. இதில் நம் பங்கு கிஞ்சித்தும் இல்லை. எல்லாப் புகழும் அவர்களுக்கு மட்டுமே !

   //(அதனால்தான் வலைத்தளங்களில் உங்களை அவ்வப்போது காணமுடியவில்லையா?)//

   ஆமாம். வயதான காலத்தில் பேரன் பேத்திகள் பிறப்பதையும், வளர்வதையும் சட்டுப்புட்டுன்னு பார்த்து விடணும் என்பதுபோல, அடுத்தடுத்து என் படைப்புகள் பலவற்றை மின்னூல்களில் பார்க்க எனக்கும் ஓர் பேராசையும் பேரெழுச்சியும் வந்துவிட்டது, இப்போது.

   இருப்பினும் என் ஸ்பீடுக்கு அவர்களால் இயங்க முடியவில்லை என்பதையும், என் ஸ்பீடுக்கு என் கணினி, நெட் முதலியனவற்றால் ஒத்துழைக்க முடிவது இல்லை என்பதையும் மிகவும் வருத்தத்துடன் இங்கு கூறிக்கொள்கிறேன்.

   நான் தலைதெறிக்க அனுப்பி வைத்த 35 லாட்டுகளில் சுமார் 16 லாட்டுகளை மட்டுமே இதுவரை எடுத்துக்கொண்டு, அவற்றை 10 மின்னூல்களாக வடிவமைத்து முடித்துள்ளார்கள். மீதி 19 லாட்டுகள் என்ன ஆச்சு என்றே இன்றுவரை எனக்குப் புரியவில்லை. :(

   மேலும் நான் அவர்களுக்கு அனுப்பி வைக்க நினைப்பதே ஒரு 40 லாட்டுகள் வரை கைவசம் தயாராகிக்கொண்டு வருகின்றன.

   ஏதோ இப்போது ஒரு ஸ்பீடு ப்ரேக் போடப்பட்டுள்ளது என நினைக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என நாமும் நினைத்துக்கொள்வோம்.

   ’நடப்பதெல்லாம் நாராயணன் செயல்’ என்பது போல அங்கு நடப்பதெல்லாம் நம் ’பத்மநாபன்’ ஸாரின் செயலாக உள்ளது. பார்ப்போம்.

   ஏழு ஆண்டுகளுக்கு அல்லவா ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். முதல் ஓராண்டுக்குள் எப்படியும் என்னால் முடிந்த 50 மின்னூல்களாவது கொண்டு வந்து பார்த்து விடுவேன் அல்லவோ ! :)

   //உங்களுக்குத் தூண்டுகோலாக இருந்த கலையரசி மேடம் அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.//

   மிகவும் சந்தோஷம். எதற்குமே எனக்கு இன்று ஓர் தூண்டுகோல் (ஊன்றுகோல் போலத்) தேவைப்படுகிறது என்பதே உண்மை.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

   அன்புடன் கோபு

   நீக்கு
  2. ////வை.கோபாலகிருஷ்ணன்April 1, 2017 at 3:12 PM
   'நெல்லைத் தமிழன் March 30, 2017 at 10:41 AM

   வாங்கோ மை டியர் நெல்லைத் தமிழரே ! வணக்கம்.////

   ஆவ்வ்வ்வ் கோபு அண்ணன் சூப்பர் மாட்டீஈஈஈஈ:) ஸ்வாமி எங்கே போனார் இங்கு?:).. அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:).. ஹாக்க்க்க் ஹாக்க்க் ஹாஆஆஆஆஆ:)

   நீக்கு
  3. //ஆவ்வ்வ்வ் கோபு அண்ணன் சூப்பர் மாட்டீஈஈஈஈ:) ஸ்வாமி எங்கே போனார் இங்கு?:).. அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:).. ஹாக்க்க்க் ஹாக்க்க் ஹாஆஆஆஆஆ:)//

   மை டியர் நெல்லைத் தமிழரே & ஸ்வாமீ ..... ஆகிய எல்லாமே ஒன்றுதான், அதிரா.

   அதிரா என்றாலும் ஸ்வீட் சிக்ஸ்டீன் என்றாலும் ஒன்றல்லவா .... அது போலவே தான் இதுவும்.

   அதிரடி, அந்தர்பல்டி, அலட்டல், அல்டி, அழும்பு, அதிரஸ அதிரா என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செல்லமான பெயர்களில் உங்களை நான் அழைப்பது இல்லையா. அது போலத்தான் இதுவும். எப்போதும் ஒரே மாதிரி அழைத்தால் போர் அடித்து விடும் அல்லவா !

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, எப்படியோ அதிரடி அதிராவிடம் மாட்டீஈஈஈஈ இல்லாமல் சமாளித்துத் தப்பித்து விட்டேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் !

   ’என் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்று ஆகிவிட்டது.

   நீக்கு
 3. முதல்ல பெரிய பின்னூட்டமா போட்டேன்.. (சொதப்பி..)........
  மறுபடி வ ந்துட்டேன்.ரொம்ப சந் தோஷம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் March 30, 2017 at 10:52 AM

   வாங்கோ ..... மை டியர் ராஜாத்தி. நல்லா செளக்யமா, சந்தோஷமா இருக்கீங்களா?

   //முதல்ல பெரிய பின்னூட்டமா போட்டேன்.. (சொதப்பி..)........ மறுபடி வந்துட்டேன்.//

   அச்சச்சோ. நியாயமாக எனக்குக் கிடைக்க வேண்டிய உன் மிகப்பெரிய போளி-வடை எல்லாம் போச்சே
   :((((((

   //ரொம்ப சந்தோஷம்//

   எதற்கு? இப்படி சொதப்போ சொதப்புன்னு சொதப்பி எனக்கு அந்த உன் மிகப்பெரிய ஸ்வீட் போளி + காரசாரமான ருசியான மெதுவடை (பின்னூட்டம்) கிடைக்காமல் போனதற்கா? :(

   அப்படி என்னதான் அதில் எழுதியிருந்தாயோ! அதனையும் படிக்க ஆவலுடன் உள்ளேன். மீண்டும் யோசித்து எழுதி அனுப்பக்கூடாதோ? சரி, பரவாயில்லை. எனக்கு அந்தக் கொடுப்பிணை (ப்ராப்தம்-சாரூ) இல்லை. மிக்க நன்றி.

   பிரியத்துடன் கிருஷ்

   நீக்கு
 4. அஹா அருமை அருமை. மின்னூல்கள் ஜொலிக்கின்றன. வாழ்த்துகள் விஜிகே சார். கலையரசி மேடத்தின் நூல்களும் மின்னூல்களானது குறித்து சந்தோஷம். அட அவர் தந்தையாரும் வலைப்பதிவரா. அநேக புதுத் தகவல்கள். உங்கள் நூல்கள் அனைத்தும் உலகம் முழுதும் புகழ்பெற வாழ்த்துகள். அ;0

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan March 30, 2017 at 11:19 AM

   வாங்கோ ஹனி மேடம். வணக்கம்.

   //அஹா அருமை அருமை. மின்னூல்கள் ஜொலிக்கின்றன. வாழ்த்துகள் விஜிகே சார். //

   மிகவும் சந்தோஷம், மேடம்.

   //கலையரசி மேடத்தின் நூல்களும் மின்னூல்களானது குறித்து சந்தோஷம்.//

   இந்த மின்னூல் விஷயத்தில் அவர்கள் எனக்கு ’GURU’ ஆச்சே :) GURU வின் நூல்கள் மின்னூல்கள் ஆனதில் வியப்பேதும் இல்லையே.

   //அட அவர் தந்தையாரும் வலைப்பதிவரா. அநேக புதுத் தகவல்கள்.//

   அவரின் தந்தையார் ஒரு மூத்த வலைப்பதிவர் மட்டுமல்ல. பல மொழிகளும் அறிந்த மஹா மேதை. அவரின் பல்வேறு உலக அனுபவங்களும், ஞாபக சக்தியும் மிகவும் வியப்புக்குரியவை. அவரின் பதிவுப்பக்கம் போய்ப் பார்த்தால் மட்டுமே நம்மால் அவரின் அருமை பெருமைகள் ஒவ்வொன்றையும் அறிந்துகொள்ள முடியும்.

   தான் ஒரு பதிவராக இருப்பதுடன் தன் மகள் + தன் மருமகள் ஆகிய இருவருமே இன்று உலகப்பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களாகவும், பதிவர்களாகவும் இருப்பதைத் தன் கண்குளிரப் பார்ப்பதிலும் பாக்யம் செய்துள்ளவராக இருக்கின்றார். :)

   //உங்கள் நூல்கள் அனைத்தும் உலகம் முழுதும் புகழ்பெற வாழ்த்துகள். //

   தங்களின் அன்பான வருகைக்கும், இனிமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஹனி மேடம்.

   அன்புடன் ..... வீஜிகே

   நீக்கு
 5. கோபு அண்ணா
  வாழ்த்துக்கள்.
  கதைக்குள், கதைக்குள் கதை போல் உங்கள் வலைத்தளத்துக்குள் வலம் வந்தால் எவ்வளவு வலைப்பதிவர்களின் அறிமுகம் கிடைக்கிறது.
  பொக்கிஷமாகிய உங்கள் வலைப்பயணம் மேலும், மேலும் ஜொலித்து மற்ற வலைப்பதிவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya March 30, 2017 at 12:20 PM

   //கோபு அண்ணா .... வாழ்த்துக்கள்.//

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //கதைக்குள், கதைக்குள் கதை போல் உங்கள் வலைத்தளத்துக்குள் வலம் வந்தால் எவ்வளவு வலைப்பதிவர்களின் அறிமுகம் கிடைக்கிறது. //

   அடடா ..... என் வலைத்தளத்துக்குள் சரிவர வலம் வராமலேயே ஏதேதோ அள்ளித் தெளிக்கிறீங்களே, ஜெயா. எனினும் சந்தோஷம். :)

   //பொக்கிஷமாகிய உங்கள் வலைப்பயணம் மேலும், மேலும் ஜொலித்து மற்ற வலைப்பதிவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஜொலிக்கும் பொக்கிஷமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 6. ஆஹா !! மின்னூல்கள் எல்லாம் அழகா ஜொலிக்கின்றன ..வாழ்த்துக்கள் அண்ணா ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Angelin March 30, 2017 at 1:21 PM

   வாங்கோ அஞ்சூஊஊஊ, வணக்கம்.

   //ஆஹா !! மின்னூல்கள் எல்லாம் அழகா ஜொலிக்கின்றன .. வாழ்த்துக்கள் அண்ணா ..//

   தங்களின் அன்பு வருகைக்கும், அழகாக ஜொலிக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் கோபு அண்ணா

   நீக்கு
 7. Mail message received today 30.03.2017 at 12.04 Hrs.
  =====================================================

  அன்பின் கோபு ஸார் ,

  இணையவழி வலைதளத்தில் மின்னிய நட்சத்திரங்கள்....
  இணையவானில் விடிவெள்ளியாக மின்னூல்கள் ......... அற்புத மணியாக தங்களின் நீலமணி உலகம் சுற்றுவது போல.... பலரின் பார்வைகள் பட்டு மதிப்பேற்கும் என்பதில் ஐயமில்லை.

  அருமை. சரஸ்வதி கடாக்ஷம் அற்புதமாக இருப்பதில் மகிழ்ச்சி.

  நன்றி.

  வணக்கங்கள். நமஸ்காரங்கள்.

  இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
  பரம ரஸிகை

  பதிலளிநீக்கு
 8. மிக்க மகிழ்வாய் இருக்கிறது
  பயனுள்ள எழுத்தை தருதல் மட்டுமே
  நோக்கமாகக் கொண்டு வரும் தங்கள்
  படைப்புகள் மின்நூலாகி எப்போதும்
  எங்கும் கிடைக்கும்படியாகச் செய்தமைக்கு
  தஙகளுக்கும் அதற்குக் காரண்மான்வர்களுக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //Ramani S March 30, 2017 at 3:38 PM

   வாங்கோ My Dear Mr. RAMANI Sir, வணக்கம்.

   //மிக்க மகிழ்வாய் இருக்கிறது. பயனுள்ள எழுத்தை தருதல் மட்டுமே நோக்கமாகக் கொண்டு வரும் தங்கள் படைப்புகள் மின்நூலாகி எப்போதும் எங்கும் கிடைக்கும்படியாகச் செய்தமைக்கு தங்களுக்கும் அதற்குக் காரண்மானவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 9. மகிழ்ச்சியான செய்தி. மின்னல் வேகத்தில் மின்னூல்கள். நூல்களின் அட்டைப் படங்களும் வித்தியாசமாக புதுமையாக இருக்கின்றன. அன்றைக்கு ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்களது மகள் திருமண வரவேற்பு விருந்தின்போது, நீங்கள் சூசகமாக குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. வாழ்த்துகள். இதற்குக் காரணமாயிருந்த, உங்களுக்கு உற்சாகம் தந்த வலைப்பதிவர் திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு நன்றி. இவரை புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டில் சந்தித்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ March 30, 2017 at 3:51 PM

   வாங்கோ மை டியர் திரு. தி. தமிழ் இளங்கோ ஸார், வணக்கம்.

   //மகிழ்ச்சியான செய்தி. மின்னல் வேகத்தில் மின்னூல்கள்.//

   மிகவும் சந்தோஷம், ஸார்.

   //நூல்களின் அட்டைப் படங்களும் வித்தியாசமாக புதுமையாக இருக்கின்றன.//

   அட்டைப்பட அலங்கார வடிவமைப்புகள் அவர்களுடையது. உள்ளே உள்ள ’சரக்கு’ மட்டுமே என்னுடையது.

   //அன்றைக்கு ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்களது மகள் திருமண வரவேற்பு விருந்தின்போது, நீங்கள் சூசகமாக குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. வாழ்த்துகள்.//

   ஆமாம் ஸார். நான் கூரியர் தபாலில் அனுப்பி வைத்த என்னுடைய ஒப்பந்தப்பத்திரம் அவர்களுக்கு வந்து சேர்ந்ததாகவும், என் படைப்புகளைத் தொடர்ந்து அனுப்பி வைக்கலாம் என்றும் அன்றுதான் எனக்குப் பச்சைக்கொடி காட்டியிருந்தார்கள். அந்த ஒப்பந்தப் பத்திரத்தின் எனக்கான நகலை, என் இல்லத்திற்கு அன்று வருகை தந்திருந்த நம் முனைவர் பழனி கந்தசாமி ஐயாவும் வாங்கி மேலோட்டமாகப் படித்துப் பார்த்து வாழ்த்தினார்கள். :)

   //இதற்குக் காரணமாயிருந்த, உங்களுக்கு உற்சாகம் தந்த வலைப்பதிவர் திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //இவரை புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டில் சந்தித்து இருக்கிறேன்.//

   நீங்களும் இதுபற்றி என்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள். அவர்களும் என்னிடம் இதுபற்றி சொல்லி இருந்தார்கள். நன்றாக நினைவில் உள்ளது. மேலும் நாம் மூவருமே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடையவர்களாகவும் போய் விட்டோம். :)

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான இனிய கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 10. வாழ்த்துக்கள் இருபது நாட்களுக்குள் மின்னல் வேகத்தில் தங்களது 10 படைப்புகள் மின்னூல்களாக வெளியிடப்பட்டமைக்கு!
  சகோதரி திருமதி கலையரசி அவர்கட்கு பாராட்டுகள்! தங்களது படைப்புகள் மின்னூல்களாக வெளிவர கிரியாஊக்கியாக (Catalyst) இருந்தமைக்காக.
  சகோதரி திருமதி கலையரசி தங்களது நூல்களை திறனாய்வு செய்து வெளியிட்ட பதிவுகளில் ஒன்றுக்கு மட்டும் எனது பின்னூட்டத்தை தந்திருந்தேன். பணிச் சுமை காரணமாக மற்ற இரண்டு பதிவுகளுக்கு கருத்தை தெரிவிக்க இயலவில்லை.
  தங்களுக்கு கலைமகளின்/கலையரசியின் கடாட்சம் எப்போதும் உண்டு என்பது தெரிந்ததுதான்.
  தங்களின் படைப்புகளை படித்து இன்புற இருக்கிறேன். மேலும் பல படைப்புகள் மின்னூல்களாக வர வாழ்த்துகள்!
  வலைப்பதிவர் சகோதரி திருமதி கலையரசி அவர்கள் வங்கியாளர் என்று தான் தெரியும் அவர் மூத்த பதிவரும் அறிஞருமான திரு சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்களின் புதல்வி என்பது இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி March 30, 2017 at 4:54 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //வாழ்த்துக்கள் இருபது நாட்களுக்குள் மின்னல் வேகத்தில் தங்களது 10 படைப்புகள் மின்னூல்களாக வெளியிடப்பட்டமைக்கு! //

   ஏதோ அதுபோன்றதோர் வாய்ப்பு அமைந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   //சகோதரி திருமதி கலையரசி அவர்கட்கு பாராட்டுகள்! தங்களது படைப்புகள் மின்னூல்களாக வெளிவர கிரியாஊக்கியாக (Catalyst) இருந்தமைக்காக. //

   Yes Sir, Correct Sir, மிகவும் சந்தோஷம், ஸார்.

   //சகோதரி திருமதி கலையரசி தங்களது நூல்களை திறனாய்வு செய்து வெளியிட்ட பதிவுகளில் ஒன்றுக்கு மட்டும் எனது பின்னூட்டத்தை தந்திருந்தேன். பணிச் சுமை காரணமாக மற்ற இரண்டு பதிவுகளுக்கு கருத்தை தெரிவிக்க இயலவில்லை. //

   நானும் அங்கு உங்களை ஒரு பதிவினில் பார்த்தேன். அதனால் பரவாயில்லை, ஸார்.

   //தங்களுக்கு கலைமகளின்/கலையரசியின் கடாட்சம் எப்போதும் உண்டு என்பது தெரிந்ததுதான். //

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! தங்களின் வாக்கு பலிக்கட்டும். வாக்தேவியான சரஸ்வதியின் கடாக்ஷம் என்றும் எனக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்.

   //தங்களின் படைப்புகளை படித்து இன்புற இருக்கிறேன். மேலும் பல படைப்புகள் மின்னூல்களாக வர வாழ்த்துகள்!//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //வலைப்பதிவர் சகோதரி திருமதி கலையரசி அவர்கள் வங்கியாளர் என்று தான் தெரியும்.//

   ஆம். SBI யில் பணிபுரிபவர்கள். 2014-இல் என் வலைத்தளத்தில் ‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ தொடர்ச்சியாக 40 வாரங்களுக்குத் தொய்வில்லாமல் வெற்றிகரமாக நடைபெற்ற போதே, வெற்றிவாகை சூடியவர்கள் அனைவருக்கும் அவ்வப்போது ’பரிசுப்பண பட்டுவாடாக்கள்’ செய்வது என்ற மாபெரும் பொறுப்பினை தன்னார்வத்துடன் தானாகவே வலுவில் ஏற்றுக்கொண்டு, மின்னல் வேகத்தில் செயல்பட்டு, எனக்கு பலவித உதவிகள் செய்திருந்தார்கள். https://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

   //அவர் மூத்த பதிவரும் அறிஞருமான திரு சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்களின் புதல்வி என்பது இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.//

   ஆமாம். சாக்ஷாத் அவரின் புதல்வியேதான். கூடுதலாக மற்றுமொரு இனிய தகவல்: அவரின் மருமகளும் மிகப்பிரபலமான + மிகத் தரமான எழுத்தாளரும், Number One பதிவரும் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   அந்த மிகப்பிரபலமான பதிவருக்கு இந்த திருமதி. ஞா. கலையரசி அவர்கள் சொந்த ‘நாத்தனார்’ ஆவார்கள்.

   யார் அந்த மிகப்பிரபலமான பதிவர் என்று அறிய இதோ இந்த பதிவுக்குச் செல்லுங்கோ .... ஸார்.

   https://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

   அதிலும் Number One ஆகவே காட்சியளிப்பார்கள். :)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான இனிய கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 11. வலைப்பூக்கள் வெளியிடும் மின்னூல்கள் பாராட்டத்தக்க மாற்றம்
  வாழ்த்துகள் அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mathu S March 30, 2017 at 6:04 PM

   வாங்கோ, வணக்கம்.

   //வலைப்பூக்கள் வெளியிடும் மின்னூல்கள் பாராட்டத்தக்க மாற்றம் .. வாழ்த்துகள் அய்யா//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 12. காலைலயே வந்து கமெண்டு போட்டேனே... காக்கா கொண்டு போயோ.... உங்க திறமைக்கு கிடைத்த பெருமைகள்தானே கிஷ்ணாஜி.. இந்த புகழுக்கும் பெருமைக்கும் பின்னால உங்க கடுமையான உழைப்பும் ஆர்வமும் இருக்கே.. சந்தோஷமா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco March 30, 2017 at 6:05 PM

   வாங்கோ ஷாமைன்ஜி மேடம். வணக்கம்.

   //காலைலயே வந்து கமெண்டு போட்டேனே... காக்கா கொண்டு போயோ....//

   அப்படியா ! அச்சச்சோ :(

   ஏற்கனவே எனக்கு மட்டுமே நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய போளி-வடை போச்சு. அத்தோடு இது வேறயா?

   அந்த போளி+வடையைக் கொத்திக்கொண்டு சென்றுள்ளது நிச்சயமாக ஒரு வெள்ளைக்கார காக்காவாத்தான் இருக்கணும். அது மட்டும் தப்பித்தவறி என் கையில் கிடைத்தால் ....... அவ்வளவுதான். நான் அதை அப்படியே க்ளோஸ் பண்ணிப்புடுவேன்.

   நினைக்க நினைக்கக் கோபம் கோபமாகவும், அழுகை அழுகையாகவும் வருகிறது எனக்கு. :(((((

   //உங்க திறமைக்கு கிடைத்த பெருமைகள்தானே கிஷ்ணாஜி.. இந்த புகழுக்கும் பெருமைக்கும் பின்னால உங்க கடுமையான உழைப்பும் ஆர்வமும் இருக்கே.. சந்தோஷமா இருக்கு//

   மிக்க மகிழ்ச்சி மேடம். உங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் தரும் ஊக்கம் + உற்சாகத்தால் மட்டுமே, இதனையெல்லாம் என்னால் சாதிக்க முடிகிறது.

   தங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் இனிமையான அழகழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஷாமைன் மேடம்.

   பிரியத்துடன் கிஷ்ணாஜி.

   நீக்கு
 13. எது செய்தாலும் ஒரே அடியாகச் செய்துவிடுகிறீர்கள் ஸ்வாமி! பத்து நூல்களை ஒரே சமயத்தில் மின்-நூல்களாகக் கொண்டுவந்த சாதனை தங்களுடையதே! நானும் தங்களைப் பின்பற்றலாமா?

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Chellappa Yagyaswamy March 30, 2017 at 7:30 PM

   வாங்கோ ஸார், நமஸ்காரம் ஸார்.

   //எது செய்தாலும் ஒரே அடியாகச் செய்துவிடுகிறீர்கள் ஸ்வாமி!//

   எப்போதுமே நாம் பந்திக்கு முந்திக்கணும் ஸார். :)

   //பத்து நூல்களை ஒரே சமயத்தில் மின்-நூல்களாகக் கொண்டுவந்த சாதனை தங்களுடையதே!//

   இன்னும் பத்து சேர்த்தே எதிர்பார்த்தேன் ஸார். இந்தப் பத்தே எனக்குப் பத்தாது ஸார். :)

   // நானும் தங்களைப் பின்பற்றலாமா? - - இராய செல்லப்பா நியூஜெர்சி//

   தாராளமாக !

   ஓல்ட் திருச்சியில் இருக்கும் ஓல்ட் மேனாகிய நானே செய்யும் போது .....

   நியூ ஜெர்சியில், ஜெர்சி காளை போல இளமை ததும்பும் தாங்கள் ஏன் செய்ய முடியாது?

   அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 14. மிகவும் மகிழ்ச்சி...

  வாழ்த்துகள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் March 30, 2017 at 8:02 PM

   //மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...//

   Mr. DD Sir, வாங்கோ வணக்கம்.

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 15. அட! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக என்ற ஃபேமஸ் வசனத்தையும் மிஞ்சும் தங்கள் மின் நூலகள்!! பள பள ஜொலிப்பும் கல கல என்றும் ஆஹா! வாழ்த்துகள்! சார்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu

   வாங்கோ, வணக்கம்.

   //அட! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக என்ற ஃபேமஸ் வசனத்தையும் மிஞ்சும் தங்கள் மின் நூல்கள்!! பள பள ஜொலிப்பும் கல கல என்றும் ஆஹா! வாழ்த்துகள்! சார்!!//

   தங்களின் அன்பான வருகைக்கும் பள பள கல கல வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
 16. வணக்கம் கோபு சார்!
  நான் தினையளவு செய்த உதவியைப் பனை அளவாகக் கருதி என்னைப்பற்றியும், என் தந்தையைப் பற்றியும் மிக உயர்வாகப் பாராட்டி எழுதியிருப்பதற்கு மிகவும் நன்றி!

  மின்னூல்கள் வெளியிட, நான் ஒரு சிறு தூண்டுகோலாக இருந்துள்ளேன் என்பதை நினைக்க, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

  நான் சொன்னதை, அலட்சியம் செய்யாமல், சீரியஸாக எடுத்துக் கொண்டு, அதற்காகக் கடினமாக உழைத்ததன் பயனே, இந்த மின்னூல்கள்! இத்தனை புத்தகங்களுக்கான Soft copy ஐ தயார் செய்து அனுப்புவது, எவ்வளவு சிரமம் என்பதை நானறிவேன். எனவே எல்லாப் புகழும், உங்களுக்கே!

  புத்தகங்களின் அட்டைப்படங்களும் அழகாய் வித்தியாசமாய் உள்ளன. இன்னும் பல மின்னூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன். வெளிவந்த நூல்களுக்குப் பாராட்டுகள்!

  என்னைப் பாராட்டிக் கருத்துரைத்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மின்னல் வேகத்தில் மின்னூல்கள் என்ற தலைப்பும், சுழன்று ஜொலிக்கும் முகப்புப் படமும் இப்பதிவுக்கு மிகவும் பொருத்தமான தேர்வுகள்!

  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி March 30, 2017 at 10:07 PM

   //வணக்கம் கோபு சார்!//

   வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

   //நான் தினையளவு செய்த உதவியைப் பனை அளவாகக் கருதி என்னைப்பற்றியும், என் தந்தையைப் பற்றியும் மிக உயர்வாகப் பாராட்டி எழுதியிருப்பதற்கு மிகவும் நன்றி!

   மின்னூல்கள் வெளியிட, நான் ஒரு சிறு தூண்டுகோலாக இருந்துள்ளேன் என்பதை நினைக்க, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

   நான் சொன்னதை, அலட்சியம் செய்யாமல், சீரியஸாக எடுத்துக் கொண்டு, அதற்காகக் கடினமாக உழைத்ததன் பயனே, இந்த மின்னூல்கள்! இத்தனை புத்தகங்களுக்கான Soft copy ஐ தயார் செய்து அனுப்புவது, எவ்வளவு சிரமம் என்பதை நானறிவேன். எனவே எல்லாப் புகழும், உங்களுக்கே!//

   எல்லாவற்றிற்குமே ஒரு நேரம், காலம் வரணும் மேடம். மின்னூலைப்பற்றி நானும் கடந்த ஆறு மாதங்களாக இங்குமங்கும் அரைகுறையாகக் கேள்விப்பட்டது உண்டு. இருப்பினும் அதைப் பற்றிய முழு விபரங்களை அறிந்துகொள்ள ஆவலே எனக்கு ஏற்பட்டது இல்லை.

   இருப்பினும் தங்களின் இதோ இந்தப்பதிவினில் http://unjal.blogspot.com/2017/02/1.html என் பின்னூட்ட எண்: 3 க்குத் தாங்கள் கொடுத்துள்ள மறுமொழியில் (பதிலில்) உள்ள இதோ இந்த வரிகள் மட்டுமே என்னை தூண்டிவிட்டன என்பதே இதிலுள்ள உண்மையாகும்.

   -=-=-=-=-

   **உங்கள் மூன்று புத்தகங்களையும் இ புத்தகமாக மாற்றிவிட்டால், இணையத்தில் எப்போதும், இதே அட்டைப்படத்துடன் தொகுப்பாகக் கிடைக்கும். இ புத்தகமாக வெளியிடுவதற்கு செலவு ஏதுமில்லை. உலகமுழுதும் பரவலாக வாசகர்களைச் சென்று சேர, இது மிகவும் பயன்படும். நான் வலைப்பூவில் எழுதியவற்றை அப்படித்தான் இப்போது தொகுப்பு நூல்களாக வெளியிட்டிருக்கிறேன். இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.

   “அவைகள் பதிப்பகத்தாரிடம் இனி கிடைக்குமோ கிடைக்காதோ,” என்ற கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

   இதனை பெங்களூரைச் சேர்ந்த புஸ்தகா மின்னூல் நிறுவனம் வெளியிடுகிறார்கள். உங்கள் வலைப்பூவில் கதைகள் தனித்தனியாகக் கிடைத்தாலும், மின்னூலாக்கிவிட்டால், சிறுகதை தொகுப்பு புஸ்தகமாகவே கிடைக்கும். **

   -=-=-=-=-

   இதைப்படித்தவுடன் ஏதோவொரு உந்துதலில், நானும் உடனடியாக பெங்களூரின் அந்தக் கம்பெனிக்கு ஜஸ்ட் ஓர் மெயில் அனுப்பி வைத்தேன். உடனே அடுத்த ஐந்தாவது நிமிடம் என்னுடன் அந்த Mr. பத்மனாபன் Sir, Mobile இல் அழைத்துப் பேசினார். எனக்கு அதுவே மிகவும் சந்தோஷமாக இருந்தது.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> திருமதி. கலையரசி மேடம் (2)

   நானும் என் அறிமுகத்தில் திருச்சி BHEL Retired என்றதும், அவரின் அப்பாவும் திருச்சி BHEL Retired தான் என்று சொன்னார். அவரின் அப்பா என்னைவிட மிகவும் சீனியர் ஆனபடியால் எனக்கு முன்பே அவர் பணி ஓய்வு பெற்று BHEL Township வீட்டை காலி செய்துகொண்டு புறப்பட்டு விட்டதாகச் சொன்னார்.

   இவ்வாறு பேசிப்பேசியே நாங்கள் இருவரும் எங்களுக்குள் மிகவும் நெருக்கமாகி விட்டோம்.

   பிறகு Agreement Form Registered Post மூலம் அனுப்பி வைத்தார். நானும் கையொப்பமிட்டு Courier மூலம் அனுப்பி வைத்தேன்.

   இவ்வளவு ஸ்பீடாக அனைத்தும் முடிந்து அடுத்த 15-20 நாட்களுக்குள் என் 10 மின்னூல்கள் வெளியிடப்பட்டு விடும் என நானே எதிர்பார்க்கவில்லை.

   இதில் இரவு-பகல் என்று பார்க்காமல் நானும் படு ஸ்பீடாக என்னுடைய படைப்புகளில் பலவற்றை Consolidate செய்து Lot Lot ஆக அனுப்பிக்கொண்டே இருந்தேன் என்றாலும்கூட, இதுபோன்றதொரு தூண்டுதல் தங்கள் மூலம் மட்டுமே எனக்கு ஏற்பட்டு, நான் என் மின்னூல்களை இப்போதுதான் வெளியிடணும் என்ற ப்ராப்தம் எனக்கு இருந்துள்ளது. அதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.

   மற்ற எவ்வளவோ விஷயங்கள் நான் உங்களுக்கு மெயில் மூலம் ஏற்கனவே சொல்லிவிட்டதால் இங்கு இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

   //புத்தகங்களின் அட்டைப்படங்களும் அழகாய் வித்தியாசமாய் உள்ளன. இன்னும் பல மின்னூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன். வெளிவந்த நூல்களுக்குப் பாராட்டுகள்! //

   தங்களின் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கு, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //என்னைப் பாராட்டிக் கருத்துரைத்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

   நானும் தங்களுடன் சேர்ந்து அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் இங்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

   //மின்னல் வேகத்தில் மின்னூல்கள் என்ற தலைப்பும், சுழன்று ஜொலிக்கும் முகப்புப் படமும் இப்பதிவுக்கு மிகவும் பொருத்தமான தேர்வுகள்! //

   வானம் + கொடிமின்னல் அனிமேஷன் படம் தான் நான் தேடிக்கொண்டே இருந்தேன். அது சரியானபடி எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் கைவசம் ரெடியாக இருந்த இந்த இரண்டு படங்களையும் பிடித்துப் போட்டு விட்டேன். அவற்றை மிகவும் பொருத்தமான தேர்வுகள் எனத் தாங்களும் சொல்லியுள்ளதில் மேலும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

   //மீண்டும் நன்றி. //

   தக்க நேரம் பார்த்து தாங்கள் தந்துள்ள தங்களின் அனைத்து ஆலோசனைகளுக்கும், உதவிகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளை மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 17. மிக்க அருமை கோபு அண்ணன்,வாழ்த்துக்கள்.. ஓன்லைன் புக்ஸ் எனவே பழக்கப்பட்ட எனக்கு மின்னூல் என பலரும் பேசியும் நான் கவனிக்கவில்லை, பின்பு நீங்க ஆரம்பம் சொன்னபோது அது ஏதோ இன்னொரு புளொக்கில் புக்கை வெளியிடுகிறீங்களாக்கும் என நினைச்சிட்டேன்ன், பின்னர்தான் கண்டு பிடிச்சேன்.

  இப்படித்தான் வளர்ந்து கொண்டே போகவேண்டும்.. புத்தகங்கள் பார்க்க மிக மகிழ்வாக இருக்கு.. அன்று நீங்கள் சொன்ன உடனேயே போய்ப் பார்த்து என் பக்கத்திலும் கொமெண்ட்ஸ் போட்டிருந்தோம், படிச்சீங்களோ தெரியவில்லை.. அதையும் இங்கே கொப்பி பேஸ்ட் பண்ணி விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ அதிரா, வணக்கம்.

   //இப்படித்தான் வளர்ந்து கொண்டே போகவேண்டும்..//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! ஏற்கனவே ஆறு அடி உயரம். இன்னும் வளர்ந்தால் என்ன ஆவது? வாசல் நிலைப்படி இடிக்காதா? என்னால், ஒவ்வொரு முறையும் குனிந்து போகத்தான் முடியுமா?

   //புத்தகங்கள் பார்க்க மிக மகிழ்வாக இருக்கு..//

   மிகவும் சந்தோஷம், அதிரா.

   //அன்று நீங்கள் சொன்ன உடனேயே போய்ப் பார்த்து என் பக்கத்திலும் கொமெண்ட்ஸ் போட்டிருந்தோம், படிச்சீங்களோ தெரியவில்லை..//

   அதெல்லாம் உடனுக்குடன் புடுச்சுடுவேனாக்கும் + படிச்சுடுவேனாக்கும். :)

   மிக்க நன்றி, அதிரா.

   அன்புடன் கோபு அண்ணன்.

   நீக்கு
 18. வை.கோபாலகிருஷ்ணன்Saturday, March 25, 2017 5:45:00 am
  அன்புள்ள அதிரா, வணக்கம்.

  இந்த http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan இணைப்பினில் போய்த் தலைமுதல் அடிவரைப் பாருங்கோ. இதுவரை இந்த கடந்த ஒரே வாரத்தில் (17.03.2017 முதல் 22.03.2017 வரை) மட்டும் மின்னல் வேகத்தில் எட்டு மின்னூல்கள் என்னால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான மின்னூல்கள் வெளியாகவும் உள்ளன.

  இதற்கு பின்னால் நானும் மின்னல் வேகத்தில் அதிரடியாகச் செயலாற்ற வேண்டியுள்ளது என்பதை அதிரடி அதிரா முதலானோர் தெரிந்துகொள்ளவும்.

  நம் அஞ்சுவிடமும் இதனை அஞ்சாமல் சொல்லுங்கோ, அதிரா.

  நீங்கள் இருவரும் சும்மா இடி இடிப்பதுபோல மாத்தி மாத்தி தினமும் பதிவுகள் கொடுத்துக்கொண்டே இருந்தால் என்னால் எப்படி மின்னல் வேகத்தில் பின்னூட்டமிட வர முடியும்? இதனைக் கொஞ்சம் யோசியுங்கோ.

  அன்புடன் கோபு அண்ணன்

  Delete

  athiraSaturday, March 25, 2017 9:51:00 pm
  கோபு அண்ணன் போய்ப் பார்த்தேன்.. மயங்கி விழுந்திட்டேன்ன்.. சுட்டாறிய தண்ணி அடிச்சு எழுப்பி விட்டார்கள். உண்மையில் மின்னூல்கள் சூப்பரா இருக்கு. எனக்கு இதைத்தான் மின்னூல் எனச் சொல்லுவார்கள் எனத் தெரியாது, இப்போதான் புரிந்து கொண்டேன்ன்..

  அதுசரி என்போன்ற புளொக் ஓனர்ஸ்க்கு ஏதும் தள்ளுபடி உண்டோ?:) ஹா ஹா ஹா..

  உண்மையில் மிக அருமை, சொல்ல வார்த்தை இல்லை. ஆனா அவசரப்பட்டு, குதப்பிடாமல், ரைம் எடுத்து மெதுவா, அழகா செய்யுங்கோ, அட்டைகள் ஒவ்வொன்றும் சூப்பரா இருக்கு, விலையும் ரொம்பவும் சீப்..///


  AngelinSaturday, March 25, 2017 10:04:00 pm
  ஆஆ !! கோபு அண்ணா சூப்பர் ..நானா இந்த பின்னூட்டத்தை இப்போதான் பார்த்தேன் அதிரா சொல்லாட்டி நான் கவனிச்சிருக்க மாட்டேன் ..அருமையான முன்னுரை ..ellame சூப்பரா இருக்கு ..
  நான் ரிவர்ஸ் ஆர்டார்லயே படிச்சதில் இந்த கமெண்ட் கண்ணில்படலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira Saturday, March 25, 2017 9:51:00 pm

   //அதையும் இங்கே கொப்பி பேஸ்ட் பண்ணி விடுகிறேன்.//

   நினைத்ததை நடத்தியே முடிப்பவள் அதிராஆஆஆ !

   //கோபு அண்ணன் போய்ப் பார்த்தேன்.. மயங்கி விழுந்திட்டேன்ன்.. சுட்டாறிய தண்ணி அடிச்சு எழுப்பி விட்டார்கள்.//

   யாரு அப்படி எழுப்பினார்கள்? :(

   பார்த்ததும் மயங்கி விழுந்திட்டவங்களைப் போய் இப்படி சுட்டாறிய தண்ணி அடிச்சு எழுப்பி விடுவாங்களோ? :)

   //உண்மையில் மின்னூல்கள் சூப்பரா இருக்கு.//

   மிகவும் சந்தோஷம், அதிரா.

   //எனக்கு இதைத்தான் மின்னூல் எனச் சொல்லுவார்கள் எனத் தெரியாது, இப்போதான் புரிந்து கொண்டேன்ன்..//

   வெரி குட். மிகவும் நல்லதாப் போச்சு.

   //அதுசரி என்போன்ற புளொக் ஓனர்ஸ்க்கு ஏதும் தள்ளுபடி உண்டோ?:) ஹா ஹா ஹா..//

   தள்ளுபடி என்றால் தேம்ஸில் பிடித்துத் தள்ளிவிடுவதா .... அதிரா. கவலைப்படாதீங்கோ. அந்த வேலைகளை என் சார்பில் எங்கட அஞ்சுவே பார்த்துக்கொள்வார்கள்.

   //உண்மையில் மிக அருமை, சொல்ல வார்த்தை இல்லை. ஆனா அவசரப்பட்டு, குதப்பிடாமல், ரைம் எடுத்து மெதுவா, அழகா செய்யுங்கோ, அட்டைகள் ஒவ்வொன்றும் சூப்பரா இருக்கு, விலையும் ரொம்பவும் சீப்..//

   தேங்க் யூ வெரி மச் ...... அதிரா.

   அன்புடன் கோபு அண்ணன்

   Angelin Saturday, March 25, 2017 10:04:00 pm

   //ஆஆ !! கோபு அண்ணா சூப்பர் ..நானா இந்த பின்னூட்டத்தை இப்போதான் பார்த்தேன் அதிரா சொல்லாட்டி நான் கவனிச்சிருக்க மாட்டேன் .. அருமையான முன்னுரை எல்லாமே சூப்பரா இருக்கு .. நான் ரிவர்ஸ் ஆர்டார்லயே படிச்சதில் இந்த கமெண்ட் கண்ணில்படலை.//

   தேங்க்ஸ் ய லாட் அஞ்சு.

   அதிராவின் வேண்டுகோள் படி, புளொக் ஓனர் அதிராவை தேம்ஸ் நதியில் பிடிச்சுத் தள்ளி விட்டுடுங்கோ. :)))))

   அன்புடன் கோபு அண்ணா

   நீக்கு
  2. நோஓஓஓஓ என்னை தேம்ஸ்ல தள்ளினால் பிறகு உங்கள் ஓன்லைன் புக்ஸ் படிப்போர் எண்ணிக்கையில் ஒன்று குறையும்:) அது ஓகேயா கோபு அண்ணன்?:)

   நீக்கு
  3. athira April 7, 2017 at 2:38 AM

   //நோஓஓஓஓ என்னை தேம்ஸ்ல தள்ளினால் பிறகு உங்கள் ஓன்லைன் புக்ஸ் படிப்போர் எண்ணிக்கையில் ஒன்று குறையும்:) அது ஓகேயா கோபு அண்ணன்?:)//

   நோ ..... நோ ..... [நோ ..... நோ ..... என்றதும் உடனே ஹாப்பி ஆயிடாதீங்கோ.] நீங்களெல்லாம் ஓன்லைன் புக்ஸ் படிப்போர் அல்ல. அதன் அட்டைப் படத்தினைப் பார்ப்போர் மட்டுமே. உண்மையிலேயே ஆசையாகப் படிப்போர் என்றால் என் ஒவ்வொரு மின்னூல் புத்தகத்திலும் முதல் அத்யாயம் என்ன? கடைசி அத்யாயம் என்ன? என எனக்குச் சொல்ல வேண்டும். அதற்கு நீங்க ஓகேயா அதிரா?

   அப்படி ஏதேனும் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட்டுச் சொன்னால், இன்னொரு புத்தகம் இலவசமாக [FREE GIFT ஆக] நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.

   அன்புடன் கோபு அண்ணன்.

   நீக்கு
 19. உங்கள் படைப்புகள் மின்னூலாக வெளி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. உங்கள் படைப்புகள் அனைத்தும் மின்னூலாக விரைவில் வெளிவர வாழ்த்துகிறேன்.

  மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப.கந்தசாமி March 31, 2017 at 3:36 AM

   வாங்கோ ஸார், நமஸ்காரங்கள் ஸார்.

   //உங்கள் படைப்புகள் மின்னூலாக வெளி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. உங்கள் படைப்புகள் அனைத்தும் மின்னூலாக விரைவில் வெளிவர வாழ்த்துகிறேன். மனமார்ந்த பாராட்டுகள்.//

   என் இல்லத்திற்கே தேவரீர் நேரில் எழுந்தருளி, மின்னூலுக்கான ஒப்பந்தப்பத்திரத்தை மேலோட்டமாகப் பார்த்து, பாராட்டி ஆசீர்வதித்துள்ள ஒரே பதிவர் + மூத்தவர் + முனைவர் + முத்திரை பதித்த கொங்குநாட்டுக் கோவைத் தங்கம் தாங்கள் அல்லவா.

   தங்களின் இந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் மேலும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.

   தங்களின் வாக்கு பலிக்கட்டும். என் ஆக்கங்கள் அனைத்தும் விரைவில் மின்னூலாக வெளிவரட்டும். மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, ஸார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 20. கலையரசி மேடம் தளத்தில் உங்கள் நூல் பகிர்வுகள் கண்டேன். உங்கள் வழக்கப்படி வித்தியாசமாக சட்சட்டென பத்து புத்தகங்கள் அழகாக முடித்து விட்டீர்கள். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். March 31, 2017 at 6:18 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

   //கலையரசி மேடம் தளத்தில் உங்கள் நூல் பகிர்வுகள் கண்டேன்.//

   மிக்க மகிழ்ச்சி ... ஸ்ரீராம்.

   //உங்கள் வழக்கப்படி வித்தியாசமாக சட்சட்டென பத்து புத்தகங்கள் அழகாக முடித்து விட்டீர்கள்.//

   ஏதோ ஸ்ரீராமனின் அருள் அதுபோல அமைந்து விட்டது.

   நான் இரவு தூக்கமே இல்லாமல் சுமார் 20-25 புத்தகங்களுக்கான சரக்குகளை, மளமளவென்று லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டேன். லாரி ஸ்ட்ரைக்கினால் 10 மட்டும் வெளியிட்டுள்ளார்கள் போலிருக்கிறது. :)

   //பாராட்டுகளும், வாழ்த்துகளும்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   நீக்கு
 21. வாழ்த்துக்கள் சார்.. ...
  எனக்கும் அந்த வண்ண வண்ண அட்டை படங்கள் ரொம்ப பிடித்து இருக்கு..அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Anuradha Premkumar March 31, 2017 at 10:35 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வாழ்த்துக்கள் சார்.. ...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //எனக்கும் அந்த வண்ண வண்ண அட்டை படங்கள் ரொம்ப பிடித்து இருக்கு..அழகு//

   மிகவும் சந்தோஷம். தங்களின் அபூர்வ வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.

   நீக்கு
 22. வாழ்த்துக்கள் கோபு சார்! நீங்கள் செய்யும் யாவுமே திருத்தமானவையாக அமைவதன் பின் உங்கள் அயரா உழைப்பு உள்ளது என்பதை அறிவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோகன்ஜி March 31, 2017 at 11:04 AM

   வாங்கோ திரு. மோகன்ஜி அவர்களே, வணக்கம் ஜி.

   //வாழ்த்துக்கள் கோபு சார்!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //நீங்கள் செய்யும் யாவுமே திருத்தமானவையாக அமைவதன் பின் உங்கள் அயரா உழைப்பு உள்ளது என்பதை அறிவேன்.//

   ஆஹா, என் பெண்டாட்டிகூட அறியாத, அயரா உழைப்பு என்ற இந்த இரகசியத்தைத் தாங்கள் அறிந்து இங்கு சொல்லியுள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் எழுச்சியாகவும் உள்ளது. :)

   மிக்க நன்றி, ஸார்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 23. பெரிப்பாஎன்னலாமோ பதுசு புதுசா பண்ணிட்டு இ ருக்கேளே.. மின்னூல் னா என்னது... எங்க ப டிக்க முடியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy March 31, 2017 at 1:09 PM

   வாடா ..... மை டியர் ஹாப்பி. என்ன இந்தப்பக்கம் மிகவும் அதிசயமாக வந்திருக்கிறாய் ?

   //பெரிப்பா என்னலாமோ பதுசு புதுசா பண்ணிட்டு இருக்கேளே..//

   ஹாப்பி நீ இப்போதெல்லாம் ’என் தொடர்பு எல்லைக்கு அப்பால் வெளியே இருக்கிறாய்’ அல்லவா. அதனால் நான் மிகவும் UNHAPPY ஆகி சோர்ந்து போய் விட்டேன்.

   பெரிப்பாவை மறந்தே போய்விட்ட ஹாப்பியின் நினைவுகளை நானும் மிகவும் கஷ்டப்பட்டு மறக்க வேண்டி மட்டுமே, புதுசு புதுசா இதுபோலெல்லாம் ஏதேதோ செய்ய வேண்டியதாகி விட்டது.

   இப்போ நீ இங்கு வந்துள்ளதால் மட்டுமே எனக்கும் கொஞ்சம் ஹாப்பியாக உள்ளது.

   அப்புறம் நம் ஆத்தில் எல்லோரும் செளக்யமா? வெளியூர் போனவர் செளக்யமா? அப்புறம் உங்கள் ஊரிலுள்ள தாமிரபரணி ஆற்றுப்பக்கம் சுற்றித்திரியும் ஆடு-மாடுகள், நாய்கள் எல்லாம் செளக்யமா? :)))))

   //மின்னூல் னா என்னது... எங்க படிக்க முடியும்?//

   மேலே முதல் பின்னூட்டம் கொடுத்துள்ள ‘சிப்பிக்குள் முத்து’வுக்கு நான் எழுதியுள்ள பதில்களைப் படித்துப்பாரு. புரியும்.

   உன் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி....டா ஹாப்பி.

   பிரியத்துடன் பெரிப்பா

   நீக்கு
  2. பெரிப்பா...... சிப்பிக்குள் முத்து அவர்களுக்கு நீங்க கொடுத்திருந்த விவரமான பதில் பாத்து புஸ்தகா பாக்கம் போயி பாத்தேன்.. உங்க புக் எல்லாத்துக்கும் விலை போட்டிருக்கே. பணம் கட்டினால்தான் படிக்கமுடியுமா எப்படி....எங்க பணம் கட்டணும்

   நீக்கு
  3. happy April 3, 2017 at 11:05 AM

   வாடா ....... என் தங்கமே, ஹாப்பி. நீ வந்தால் மட்டும் தான் நானும் ஹாப்பியாக இருக்க முடிகிறது.

   //பெரிப்பா...... சிப்பிக்குள் முத்து அவர்களுக்கு நீங்க கொடுத்திருந்த விவரமான பதில் பாத்து புஸ்தகா பக்கம் போயி பாத்தேன்..//

   வெரி குட் .... ஹாப்பி. இதைக்கேட்கவே எனக்கும் ஹாப்பியாக இருக்குதுடா.

   //உங்க புக் எல்லாத்துக்கும் விலை போட்டிருக்கே.//

   அது ஏதோ அவர்களாகவே விலைகள் நிர்ணயித்துள்ளார்கள் போலிருக்குது ஹாப்பி.

   ஆனால் உன் பெரிப்பாவின் எழுத்துகள் விலை மதிப்பற்றவை என்பதை நீ கட்டாயமாகப் புரிந்து கொள்ளணும் ஹாப்பி. :)))))

   //பணம் கட்டினால்தான் படிக்கமுடியுமா?//

   அப்படித்தான் இருக்குமோ என்னவோ ...... யாரு கண்டா ? :)))))

   //எப்படி....எங்க பணம் கட்டணும்//

   நீ இப்போ உடனடியாக எப்படியும் எங்கேயும் போக வேண்டாம். பணமும் கட்ட வேண்டாம்.

   முதலில் இப்போது நீ படித்துவரும் ஹிந்தி + ஆங்கிலம் இரண்டையும் சரளமாகப் பேசவும் ஓரளவுக்கு எழுதவும் அல்லது எழுதியவைகளைப் படிக்கவும் நன்றாகக் கற்றுக்கொள்.

   கல்யாணம் ஆகி ஆத்துக்காரருடன் மும்பையில் செட்டில் ஆகும் போது, அந்த ஹிந்தி மட்டும்தான் மிக முக்கியமாகத் தேவைப்படும்.

   உனக்குக் கல்யாணம் ஆனதும், உன் ஆத்துக்காரரை விட்டு உனக்குப் பொழுது போக்குக்காக ஒரு பெரிய ஸ்கிரீன் உள்ள லாப்-டாப் வாங்கித்தரச்சொல்லு.

   அதில்தான் இந்த மின்னூல் என்பதை நாம் சுலபமாக சுகமாகப் படிக்க முடியும் ஹாப்பி. மொபைலில் படிப்பதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும்.....டா ஹாப்பி.

   கல்யாணம் ஆகி லாப்-டாப் வாங்கினதும் எனக்குச் சொல்லு. உனக்கு நான் என்னுடைய எல்லா மின்னூல் புத்தகங்களையும் சப்-ஜாடா (ஹிந்தியில் ’சப்-ஜாடா’ அல்லது ’பில்குல்’ என்றால் ‘முழுவதும்’ அல்லது ’முற்றிலும்’ என்று அர்த்தமாக்கும்) FREE GIFT ஆகவே தந்து படிக்க உதவுவேன்.

   உனக்கு எப்படியும் இந்த 2017-2018 இல் கல்யாணம் ஆகிவிடும். அதற்குள், இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த என் குறிப்பிட்ட பத்து மின்னூல்களைத்தவிர, மேலும் நிறையவே வெளியிடப்பட்டு விடும்.

   எல்லாவற்றையும் சப்-ஜாடா உனக்கு நான் உன் கல்யாணத்திற்காக FREE GIFT ஆகவே தரலாம் என்று இருக்கிறேன்.

   உன் ஆசை ஆத்துக்காரர் காலையிலே ஆபீஸுக்குப் புறப்பட்டு போய் இரவு திரும்ப உன்னிடம் வந்து சேரும்வரை உனக்கும் பொழுது போகணுமே. :)))))

   நான் எழுதியுள்ள இதெல்லாம் உனக்குப் புரியுதாடா ..... ஹாப்பி?

   பார்ப்போம். அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஹாப்பி.

   பிரியத்துடன் பெரிப்பா

   நீக்கு
 24. கோபால்ஜி..நமஸ்காரம்.. மிஸ் யூ ஸோ...ஸோ...மச் உங்க பேர குழந்தைக நெட் பக்கமே வர விட மாட்டேங்குறாங்களே. வாழ்த்துகள் கோபால்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ராப்தம் March 31, 2017 at 1:53 PM

   //கோபால்ஜி..நமஸ்காரம்..//

   வாம்மா .... மை டியர் சாரூஊஊஊஊ. அநேக ஆசீர்வாதங்கள்.

   //மிஸ் யூ ஸோ...ஸோ...மச்//

   ஆக்சுவலாக இதனை நான் சொல்லணும். நீ சொல்லிவிட்டாய். ஓக்கே ! என்ன செய்வது? நம் சூழ்நிலைகள் அதுபோல ஆகிவிட்டது. பரவாயில்லை.

   //உங்க பேர குழந்தைக நெட் பக்கமே வர விட மாட்டேங்குறாங்களே.//

   பச்சை உடம்புக்காரி .... இதுபோல இப்போது இங்கு அவசரப்பட்டு நீ நெட் பக்கம் வரலாமா? இது நியாயமா சாரூ?

   இன்றுடன் (31.03.2017) 63 நாட்களே ஆகியுள்ள என் பேரன் பேத்திகளாகிய தங்கங்களை ஒன்றும் குற்றம் சொல்லாதே, ப்ளீஸ்.

   அதிர்ஷ்டமுள்ள அவை இரண்டும் சமத்தோ சமத்துகள். அவைகளை உடனே நான் பார்க்கணும் போல எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது.

   //வாழ்த்துகள் கோபால்ஜி.//

   உன் அன்பான வருகைக்கும், அருமையான இனிமையான செய்திகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூ.

   Please take care of yourself & also my grand children. :) :)

   பிரியத்துடன் கோபால்ஜி

   நீக்கு
  2. அன்புள்ள சாரூஊஊஊஊஊஊ ........

   உன் திருமணத்தில் ஆரம்பித்து, பிரஸவம் வரை, எனக்குத் தெரிந்து 9 கின்னஸ் ரிகார்ட்ஸ்களை நிகழ்த்தி, இல்வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகள் செய்து, மாபெரும் வெற்றிக்கொடியை நட்டு, என்னை அப்படியே ஆச்சர்யப்பட வைத்து, சொக்க வைத்து மகிழ்வித்துள்ளாய். அவை ஒவ்வொன்றையும் இங்கு ஓபனாகச் சொன்னால் திருஷ்டியாகப் போய்விடும் என நான் சொல்லவில்லை. :)

   இப்போது 10-வது சாதனையாக அதற்குள், இங்கு என் பதிவுப்பக்கம் ஓடி வந்து பின்னூடமும் கொடுத்து அசத்தியுள்ளாய். உன் உடம்பையும், குழந்தைகள் (என் பேரன்+பேத்தி) இருவரையும் பத்திரமாக ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்.

   பதிவுப்பக்கமோ, நெட் பக்கமோ வருகை தந்து பின்னூட்டங்களோ, மெயில்களோ ஏதும் கொடுத்து உன் உடம்பை இப்போதைக்கு சிரமப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

   அநேக ஆசீர்வாதங்களுடனும் பிரியத்துடனும் ..... கோபால்ஜி.

   நீக்கு
 25. குறுகிய காலத்தில் மின்னூல் வெளியிட்டு அசத்தி விட்டீர்கள் சார்! உங்கள் அயராத உழைப்பிற்கு மற்றுமொரு சாட்சி! கலையரசி மேடம் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! தொடரட்டும் உங்கள் சாதனைகள் சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Seshadri e.s. March 31, 2017 at 2:00 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //குறுகிய காலத்தில் மின்னூல் வெளியிட்டு அசத்தி விட்டீர்கள் சார்! உங்கள் அயராத உழைப்பிற்கு மற்றுமொரு சாட்சி! கலையரசி மேடம் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! தொடரட்டும் உங்கள் சாதனைகள் சார்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தெளிவான கருத்துக்களுக்கும், மனமார்ந்த பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 26. குருஜி.....குருஜி கும்புடுக்கிடுதேன். இன்னாமோ சொல்லிகினிக
  ஏதுமே வெளங்களையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru March 31, 2017 at 2:21 PM

   //குருஜி.....குருஜி கும்புடுக்கிடுதேன்.//

   அடேடே ..... வாம்மா ..... முருகு. வணக்கம். நல்லா இருக்கிறாயா? ’மஸ்கட்’டிலிருந்து நீ இங்கு என் பக்கம் ஓடியாந்துள்ளது, எனக்கு க்ரீம் ’பிஸ்கட்’ சாப்பிட்டது போல மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, முருகு. :)

   //இன்னாமோ சொல்லிகினிக .... ஏதுமே வெளங்களையே//

   நான் என்ன சொன்னேன்னு எனக்கே இன்னும் ஏதும் வெளங்கலையே; பிறகு உனக்கு எப்படி வெளங்கிக்கிட ஏலும்? :)

   மேலே உங்கட முன்னாவும் இதையே தான் தன் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறாள். அவளுக்கும் ஒன்றும் வெளங்கலையாம்.

   அவளுக்கு நான் மிகப்பெரிய பதில்களாகக் கொடுத்து மிகவும் டயர்ட் ஆயிட்டேன், முருகு. அதை நீயும் படிச்சுப் பார்த்து ஏதேனும் வெளங்குதா பாரு ..... முருகு.

   உன் அன்பான அபூர்வ வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு.

   பிரியத்துடன் குருஜி

   நீக்கு
 27. எதிலும் சாதனை படைப்பவர் நீங்கள் ! மின்னூல் போடுவதிலும் சாதனை படைத்து விட்டீர்கள்.
  வாழ்த்துக்கள் சார்.
  கலைரசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு March 31, 2017 at 4:09 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //எதிலும் சாதனை படைப்பவர் நீங்கள் ! மின்னூல் போடுவதிலும் சாதனை படைத்து விட்டீர்கள்.//

   ஏதோ அதுபோல ஒரு ப்ராப்தம் இப்போது அமைந்தது.

   //வாழ்த்துக்கள் சார். கலையரசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK

   நீக்கு
 28. மிக்க சந்தோஷம். கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. kasiviswanath ramanathan March 31, 2017 at 5:29 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //மிக்க சந்தோஷம். கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான + அபூர்வமான வருகைக்கும் அழகான கருத்துகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
 29. பதில்கள்
  1. வணக்கம் ஐயா , அபார சாதனை புரிந்திருக்கிறீர்கள் . மகிழ்ச்சி . பாராட்டுகிறேன் , மேன்மேலும் உயர வாழ்த்துகிறேன். என்னைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி .மூத்தவன் சரி , மற்றது பொருந்தாது .

   நீக்கு
  2. சொ.ஞானசம்பந்தன் March 31, 2017 at 6:36 PM

   //வணக்கம் ஐயா,//

   வாங்கோ ஸார். நமஸ்காரங்கள் ஸார்.

   //அபார சாதனை புரிந்திருக்கிறீர்கள்.//

   இதெல்லாம் ஒன்றுமே அபார சாதனையாக நான் நினைக்கவே இல்லை ஸார். நான் என்றுமே மிக மிகச் சாதாரணமானவன் மட்டுமே, ஸார்.

   ஒருவேளை இதனையே தாங்கள் என் அபார சாதனை என்று நினைத்தால் அதற்கு அடிப்படைக் காரணமாகவும், மிகச் சரியானதொரு நேரத்தில், மிக நல்லதொரு ஆலோசகராகவும், மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் எனக்கு அமைந்துபோன தங்களின் அன்பு மகளுக்கே இதன் புகழ் அத்தனையும் போய்ச் சேரவேண்டும் என மிகத் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

   //மகிழ்ச்சி. பாராட்டுகிறேன். மேன்மேலும் உயர வாழ்த்துகிறேன்.//

   மிகப்பெரியவரும், எனக்கு மனதுக்குப்பிடித்த பதிவருமாகிய தங்களின் இந்தப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் என் பாக்யமாகக் கருதி அன்புடனும் அடக்கத்துடனும் ஏற்று மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். மிக்க நன்றி, ஸார்.

   //என்னைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி. மூத்தவன் சரி. மற்றது பொருந்தாது.//

   மிகப்பெரியவராகிய + உலக அனுபவங்கள் பலவும் நிறைந்தவராகிய தங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. அதில் இந்தத் தங்களின் தன்னடக்கத்தை மட்டும்தான், நான் முதலில் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஆசீர்வதியுங்கள், ஸார்.

   என் பதிவுப்பக்கம் தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், மிக எளிமையான ஆனால் மிகவும் உயர்வான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஸார்.

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
  3. kg gouthaman March 31, 2017 at 6:18 PM

   WELCOME TO YOU MY DEAR KGG Sir.

   //Great!//

   Thanks. Thanks a Lot, Sir.

   vgk

   நீக்கு
 30. Aha Great.
  Congragulations.
  I gone throw the reply you had given to the first comment.
  Clear my doubts also
  very nice
  Happy to read your books.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. viji April 1, 2017 at 3:30 AM

   வாங்கோ விஜி. வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? நாம் தொடர்புகொண்டு வெகு நாட்கள் ஆச்சு. ஆனால் அடிக்கடி நான் உங்களை நினைத்துக்கொள்வது உண்டு.

   //Aha Great. Congratulations. I have gone thro’ the reply you have given to the first comment. It cleared my doubts also. Very nice. Happy to read your books.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், விஜி.

   பிரியத்துடன் கோபு

   நீக்கு
 31. வெளியாகிய மின்நூல்கள்
  பல அறிவினை ஊட்டும்
  ஆசிரியர்கள்! - அந்த
  ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களான
  தங்களுக்குப் பாராட்டுகள்!

  ஐயா!
  "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன்.
  அதற்கொரு கட்டுரை தாங்களால் ஆக்கி அனுப்பமுடியுமா?
  முழு விரிப்புமறிய
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jeevalingam Yarlpavanan Kasirajalingam
   April 1, 2017 at 5:26 AM

   //வெளியாகிய மின்நூல்கள் பல அறிவினை ஊட்டும். ஆசிரியர்கள்! - அந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களான தங்களுக்குப் பாராட்டுகள்!//

   தங்களின் பாராட்டுகளுக்கு என் நன்றிகள்.

   //ஐயா! "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன். அதற்கொரு கட்டுரை தாங்களால் ஆக்கி அனுப்பமுடியுமா? முழு விரிப்புமறிய https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html//

   மன்னிக்கவும். ’உலகில் முதன் முதலாகத் தோன்றியது தமிழ் மொழியே’ என்ற தங்களின் தலைப்பினிலேயே எனக்குப் பலவிதமான சந்தேகங்கள் உள்ளதால் என்னால் கட்டுரை ஏதும் எழுதி அனுப்பிவைக்க இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   நீக்கு
 32. மனம் நிறைந்த வாழ்த்துகள் கோபு சார்.. அதிரடியாக மின்னூல்கள் வெளியிட்டு இதிலும் தாங்கள் சாதனைத்திலகம் என்பதை மெய்ப்பித்துவிட்டீர்கள்.. என் பதிவின் பின்னூட்டத்தில் மின்னூலா.. என்னவோ புதுசு புதுசா சொல்றீங்களே என்று கேட்டபோதே பதிலளித்திருந்தேன்.

  \\ஆறே ஆறு நூல்களை வெளியிட்டுவிட்டு குறைகுடமாக நான் இங்கு கூத்தாடிக்கொண்டிருக்க.. புஸ்தகாவில் வரிசையாய் மின்னூல்களை வெளியிட்டும் இன்னும் சில நிலுவையிலும் வைத்திருக்கும் தாங்கள் நிறைகுடமாக அமைதியாக இருப்பதோடு மின்னூல் என்றால என்ன என்று கேள்வியும் கேட்கிறீர்களே.. இந்த தன்னடக்கம்தான் உங்கள் உயர்வுக்கு வழிகோலுகிறது. அன்பும் நன்றியும் கோபு சார்.\\

  இன்னும் பல ஆக்கங்கள் மின்னூலாய் வெளிவரவும் மனம் நிறைந்த வாழ்த்துகள். கலையரசி அக்காவைக் குறிப்பிட்டு சிறப்பித்தமைக்கு நன்றி. அவர்களது தூண்டுதலால்தான் என்னுடைய ஆக்கங்களும் மின்னூலாகின.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி April 1, 2017 at 10:23 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //மனம் நிறைந்த வாழ்த்துகள் கோபு சார்..//

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //அதிரடியாக மின்னூல்கள் வெளியிட்டு இதிலும் தாங்கள் சாதனைத்திலகம் என்பதை மெய்ப்பித்துவிட்டீர்கள்..//

   அதெல்லாம் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மேடம். ஏதோ இவ்வாறு அகஸ்மாத்தாக நானே எதிர்பாராமல் நேர்ந்துள்ளது / நிகழ்ந்துள்ளது.

   -oOo-

   //என் பதிவின் பின்னூட்டத்தில் மின்னூலா.. என்னவோ புதுசு புதுசா சொல்றீங்களே என்று கேட்டபோதே பதிலளித்திருந்தேன்.

   \\ஆறே ஆறு நூல்களை வெளியிட்டுவிட்டு குறைகுடமாக நான் இங்கு கூத்தாடிக்கொண்டிருக்க.. புஸ்தகாவில் வரிசையாய் மின்னூல்களை வெளியிட்டும் இன்னும் சில நிலுவையிலும் வைத்திருக்கும் தாங்கள் நிறைகுடமாக அமைதியாக இருப்பதோடு மின்னூல் என்றால என்ன என்று கேள்வியும் கேட்கிறீர்களே.. இந்த தன்னடக்கம்தான் உங்கள் உயர்வுக்கு வழிகோலுகிறது. அன்பும் நன்றியும் கோபு சார்.\\

   -oOo-

   நான் சும்மா ஓர் தமாஷுக்காகத்தான் அதுபோல எழுதியிருந்தேன். தங்களின் மேற்படி மறுமொழி-பதிலையும் பார்த்தேன். படித்தேன். மகிழ்ந்தேன்.

   உண்மையிலேயே இதில் பல விஷயங்கள் எனக்குத் தெரியவோ புரியவோ இல்லை மேடம். ஒவ்வொன்றாக இப்போதுதான் நானே புரிந்துகொண்டு கற்றுக்கொண்டு வருகிறேன்.

   //இன்னும் பல ஆக்கங்கள் மின்னூலாய் வெளிவரவும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

   //கலையரசி அக்காவைக் குறிப்பிட்டு சிறப்பித்தமைக்கு நன்றி.//

   அவர்கள் மட்டும் இதில் எனக்குத் தக்க நேரத்தில் ஒரு தூண்டுகோலாக இல்லாமல் இருந்திருந்தால், இந்தப் பதிவினை நான் வெளியிட வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்பதே உண்மையிலும் உண்மை, மேடம்.

   மனதளவில் மிகச் சோர்வாக இருந்த எனக்கு, டானிக் போல .... எதையோ ஒருசில வார்த்தைகளில் அவர்களின் பதிவினில் பின்னூட்ட மறுமொழி-பதில்களில் சொல்லப்போக, நான் அதனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சற்றே மனமாற்றத்துடன் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டேன்.

   //அவர்களது தூண்டுதலால்தான் என்னுடைய ஆக்கங்களும் மின்னூலாகின.//

   யாரோ எவரோவாகிய எனக்கே வழிகாட்டியுள்ள நல்ல உள்ளம் கொண்ட தங்களின் நாத்தனார் அவர்கள், தங்களைத் தூண்டிவிடாமல் இருப்பார்களா? :)

   தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாக மூட்டிடும் அழகான, விரிவான இனிய கருத்துக்களுக்கும், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 33. மிக்க மகிழ்ச்சி...
  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரிவை சே.குமார் April 1, 2017 at 12:33 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...//

   தங்களின் அன்பான வருகைக்கும் மகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 34. முதலில் காகிதத்தில், பின்னர் வலைப்பூவில், இப்பொழுது மின்-நூல் வடிவில்...மிகவும் மகிழ்ச்சி!மின்னூலிலும் மின்னல் வேகம்தானா...வாத்யாரே...அடி கலக்குங்க! வாழ்த்துக்கள்!!! என்றும் அன்புடன், உங்கள் எம்.ஜி.ஆர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI April 1, 2017 at 2:30 PM

   வாங்கோ மை டியர் சின்ன வாத்யாரே ! வணக்கம்.

   //முதலில் காகிதத்தில், பின்னர் வலைப்பூவில், இப்பொழுது மின்-நூல் வடிவில்... மிகவும் மகிழ்ச்சி!//

   மாற்றங்கள் ஒன்றே மாறாதது அல்லவா. அதுபோலத்தான் இதுவும். எல்லாம் புதுசில் கொஞ்ச நாளைக்கு விறுவிறுப்பாகத்தான் இருக்கும். மிக அதிகமாகக் ’கிக்’ அளிக்கும். அதன்பின் வழக்கம்போல இதுவும் வழுவட்டையாகலாம். இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html [தாங்கள் விமர்சனப்போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றதும்கூட]

   //மின்னூலிலும் மின்னல் வேகம்தானா... வாத்யாரே... அடி கலக்குங்க! வாழ்த்துக்கள்!!! என்றும் அன்புடன், உங்கள் எம்.ஜி.ஆர்.//

   எதிலும் ஆர்வமில்லாமல் நான் சுத்த வழுவட்டையாகத்தான் இருந்து வந்தேன். ஏதோ மின்னூல் என்றார்கள். அதைப்பற்றி ஏதோ ஆஹா / ஓஹோ என்றார்கள்.

   வழுவட்டையாக இருந்த நானும் உடனே பேரெழுச்சியுடன் மின்னல் வேகத்தில் இறங்கி விட்டேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சின்ன வாத்யாரே :)

   அன்புடன் VGK

   நீக்கு
 35. மிக முக்கியமானதோர் அறிவிப்பு :)
  ======================================

  புஸ்தகா மின்னூல் நிறுவனத்திலிருந்து, சற்று முன் கிடைத்துள்ள FLASH NEWS:

  ooooooooooooooooooooooooo

  Hello Sir,

  We have created a banner for you with your books which will be displayed for few days.

  This is for your information.

  Regards
  Pustaka Support

  ooooooooooooooooooooooooo

  அது ஒன்றுமில்லை. என்னை அவர்கள் தலைமேல் ஏற்றி தலைதெறிக்க ஓடவிட்டு கெளரவப்படுத்தியுள்ளார்கள்.

  இதோ http://www.pustaka.co.in/ இங்கு போய் அந்தப் பக்கத்தின் மேல் பகுதியில் என் ஓட்டத்தைக் கண்டு களியுங்கள்.

  இன்னும் ஒருசில நாட்களுக்கு மட்டும் நான் அங்கு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்குது.

  அதனால் அதற்குள் அதனைக் காணத்தவறாதீர்கள் ! :)

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆவ்வ்வ் இதை இப்போதான் பார்த்தேன், எடுத்து விட்டார்களோ என போய்ப் பார்த்தால் இன்னமும் இருக்கு பானர்:)... இங்கே உங்கள் புளொக் அருகிலும் உங்கள் புத்தக வெளியீட்டு இணைப்பைக் கொடுத்து வைக்கலாமே ஒரு ஹஜட் மூலம்...

   நீக்கு
  2. athira April 7, 2017 at 2:44 AM

   //ஆவ்வ்வ் இதை இப்போதான் பார்த்தேன், எடுத்து விட்டார்களோ என போய்ப் பார்த்தால் இன்னமும் இருக்கு பானர்:)...//

   அப்படியா, நீங்களும் அதனை (என் அந்த ஓட்டத்தை) பார்த்துட்டேளா, அச்சச்சோ .. மிக்க மகிழ்ச்சி அதிரா.

   //இங்கே உங்கள் புளொக் அருகிலும் உங்கள் புத்தக வெளியீட்டு இணைப்பைக் கொடுத்து வைக்கலாமே ஒரு ஹஜட் மூலம்...//

   அது பற்றி (ஹஜட் பற்றி) எனக்கு ஒன்றுமே தெரியாது அதிரா. நான் சின்னப் பொடிப்பையன் தானே.

   இருப்பினும் நீங்க அனுப்பி வைத்துள்ள அந்த வயசான வியாதிக்காரி சீக்காளி ஆயா அல்லது நீங்க அடுத்து அனுப்பி வைக்க இருக்கும் இளம் குட்டி+புட்டி மூலம் முயற்சிக்கிறேன். :)))))

   தங்களின் இந்த ஆலோசனைக்கு மிக்க நன்றி, அதிரா.

   நீக்கு
 36. “We have created a banner for you with your books which will be displayed for few days”
  புஸ்தகா இணைப்பின் முகப்பில் உங்கள் புகைப்படமும், குறிப்பும் வருவதை இன்று தான் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி கோபு சார்!
  பின்னூட்டங்களை இன்று முழுமையாக வாசித்தேன். சிப்பிக்குள் முத்து மீனா மின்னூல் பற்றிக் கேட்ட கேள்விக்கு நீங்கள் கொடுத்த பதில் சுவாரசியமாயிருந்தது. இதனை வாசிக்கும் அனைவரும், மின்னூல் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.
  நான் மிகவும் ரசித்த வரிகள்:-
  மற்றவிதமான வெளியீடுகள் மனித உடலைப்போல என்றால் ... மின்னூல் மட்டுமே ஆன்மாவாகும்.
  இதில் பேப்பர்களுக்கே எதுவும் வேலை இல்லாததால், பேப்பர் தயாரிக்க வேண்டி மட்டுமே உலகளவில் இன்று வெட்டப்பட்டு வரும் கோடிக்கணக்கான மரங்கள் பாதுகாக்கப்படும் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
  நம் வீட்டளவில் புத்தக அடசல்கள் குறையும். புத்தகங்களைக் கண்டால் நம்மைவிட அதிக ஆசையுடன் அவற்றில் அடைக்கலம் தேடி வந்து, அவற்றை அரித்து விட்டுப்போகும் அந்துப்பூச்சிகளின் தொல்லைகளும், ஆபத்துக்களும் அறவே இனி இருக்காது.
  என்னைப் பற்றியும், தந்தையைப் பற்றியும் சிறப்பித்துச் சொல்லியமைக்கு என் இதயங்கனிந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் கோபு சார்! உங்களுக்குத் திரும்பவும் உற்சாகம் ஏற்படுத்த, இந்த மின்னூல் வெளியீடு வழிவகுத்திருக்கிறது என்பதை எண்ணும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி April 2, 2017 at 4:02 PM

   “We have created a banner for you with your books which will be displayed for few days” - Pustaka Support

   //புஸ்தகா இணைப்பின் முகப்பில் உங்கள் புகைப்படமும், குறிப்பும் வருவதை இன்று தான் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி கோபு சார்!//

   மிக்க மகிழ்ச்சி மேடம். மின்னூலில் மின்னிடும் ஒவ்வொரு எழுத்தாளர்களையும், இதுபோல ஒரு வார காலத்திற்கு மட்டும் மாற்றி மாற்றி ஓட விடுவார்கள் என நினைக்கிறேன். :)

   //பின்னூட்டங்களை இன்று முழுமையாக வாசித்தேன்.//

   மிகவும் சந்தோஷம் மேடம்.

   //சிப்பிக்குள் முத்து மீனா மின்னூல் பற்றிக் கேட்ட கேள்விக்கு நீங்கள் கொடுத்த பதில் சுவாரசியமாயிருந்தது. இதனை வாசிக்கும் அனைவரும், மின்னூல் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.//

   ஆமாம் மேடம். ஏதோ எனக்கு இதில் மிகச்சிறப்பாக மனதுக்குத் தோன்றிய ஒருசில விஷயங்களை மட்டும் மற்றவர்களுக்கும் தெரியட்டுமே என நினைத்து எழுதினேன். அது ஏதோ ஹனுமார் வால் போல ஒரேயடியாக நீண்டு போய் விட்டது. :)

   யோசிக்க யோசிக்க அத்தனை விஷயங்கள் (தனிப்பதிவாகவே தரும் அளவுக்கு) மனதுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டன.

   //நான் மிகவும் ரசித்த வரிகள்:-

   மற்றவிதமான வெளியீடுகள் மனித உடலைப்போல என்றால் ... மின்னூல் மட்டுமே ஆன்மாவாகும்.

   இதில் பேப்பர்களுக்கே எதுவும் வேலை இல்லாததால், பேப்பர் தயாரிக்க வேண்டி மட்டுமே உலகளவில் இன்று வெட்டப்பட்டு வரும் கோடிக்கணக்கான மரங்கள் பாதுகாக்கப்படும் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

   நம் வீட்டளவில் புத்தக அடசல்கள் குறையும். புத்தகங்களைக் கண்டால் நம்மைவிட அதிக ஆசையுடன் அவற்றில் அடைக்கலம் தேடி வந்து, அவற்றை அரித்து விட்டுப்போகும் அந்துப்பூச்சி + கரையான்களின் தொல்லைகளும், ஆபத்துக்களும் அறவே இனி இருக்காது. //

   ஆஹா, தன்யனானேன். என் வரிகளில் சிலவற்றை தாங்களும் மிகவும் ரஸித்துள்ளது எனக்கும் ஒரே சந்தோஷமாக உள்ளது. இங்கு அவற்றை நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளதற்கு மிக்க நன்றி, மேடம்.

   //என்னைப் பற்றியும், தந்தையைப் பற்றியும் சிறப்பித்துச் சொல்லியமைக்கு என் இதயங்கனிந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் கோபு சார்! உங்களுக்குத் திரும்பவும் உற்சாகம் ஏற்படுத்த, இந்த மின்னூல் வெளியீடு வழிவகுத்திருக்கிறது என்பதை எண்ணும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது.//

   நமக்குத் தெரிந்துள்ள + நம் மனசுக்குப் பிடித்தமான எழுத்துத்துறையினில், எதேனும் புதுசு புதுசா ஓர் உற்சாகமும், பொழுதுபோக்கும் தேவைபடத்தானே செய்கிறது, மேடம்.

   அது தங்கள் மூலமும், இந்த மின்னூல் என்பதன் மூலமும் இப்போதைக்கு எனக்குக் கிடைத்துள்ளதில், எனக்கும் என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. பார்ப்போம் மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 37. கிஷ்ணாஜி மறுபடியும் வந்துட்டேனே. ஒரு டவுட்டு... //ஒரு வெள்ளைக்கார காக்காவாத்தான் இருக்கணும்.//காக்கா கருப்பா தானே இருக்கும்...)))நீங்க வெள்ளைக்கார காக்கானு சொல்லியிருக்கீங்களே..))))))அது போகட்டும்.. முன்னாவுக்கு கொடுத்திருந்த ரிப்ளை சூப்பர். மின்னூல் பத்தி ஓரளவு தெளிவா புரிஞ்சுக்க முடிஞ்சது..நன்றி கிஷ்ணாஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco April 3, 2017 at 10:43 AM

   //கிஷ்ணாஜி மறுபடியும் வந்துட்டேனே.//

   வாங்கோ ஷாமைன் மேடம். என் வலைத்தளம் உங்க பிறந்த வீடு மாதிரி. எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்க வரலாம். எனக்கும் மகிழ்ச்சியே.

   இதோ இந்தப் பதிவினைப்போய்ப் பாருங்கோ. http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html அதில் இரண்டு சண்டிக்குதிரைகள் மட்டும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு, எவ்வளவு வேக வேகமாக ஆளுக்கு 25 தடவைக்கு மேல் வந்திருக்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியவரும்.

   அதில் மொத்தமுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 246 என இப்போது காட்டுகிறது. ஆனால் Comment No. 1 to 200 மட்டுமே உங்களால் படிக்க இயலும். 201 to 246 என்னால் மட்டுமே வேறு ஒரு முறையில் போய்ப் பார்க்க இயலும். BLOGGER இல் அதுபோல ஒரு தொல்லை உள்ளது. சரி அது போகட்டும்.

   //ஒரு டவுட்டு... *ஒரு வெள்ளைக்கார காக்காவாத்தான் இருக்கணும்.* காக்கா கருப்பா தானே இருக்கும்...))) நீங்க வெள்ளைக்கார காக்கானு சொல்லியிருக்கீங்களே..))))))//

   உங்களின் இது மிகச்சரியான நியாயமான கேள்விதான். ஆனால் என்னால் உங்களுக்கு இதற்கு பதிலே சொல்ல இயலாது.

   எனக்கு மட்டுமே சொந்தமான போளி-வடையை ஒரு வெள்ளைக்காரக் காக்கை கொத்திக்கொண்டு போய்விட்டது போல நான் சொப்பணம் கண்டேன். அதே கோபத்திலும், வருத்தத்திலும் இருந்து வருகிறேன்.

   அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும். அது போதும். அ...த்...தை (அதை) விடுங்கோ.

   //அது போகட்டும்..//

   ’அது போகட்டும்’ என்று என்னால் இருக்கவே முடியாது. போளி-வடையை நினைக்க நினைக்க எனக்கு ஒரே அழுகையாக வருகிறது, ஷாமைன் மேடம். :(((((

   //முன்னாவுக்கு கொடுத்திருந்த ரிப்ளை சூப்பர்.//

   அது யாரு அந்த முன்னாஆஆஆஆஆ?????

   //மின்னூல் பத்தி ஓரளவு தெளிவா புரிஞ்சுக்க முடிஞ்சது.. நன்றி கிஷ்ணாஜி...

   மிகவும் சந்தோஷம் ..... மேடம். பார்ப்போம்.

   அன்புடன் கிஷ்ணாஜி

   நீக்கு
 38. ரொம்ப சந்தோஷம்.. உங்க திறமைக்கு இ ன்னும் பல பருமைகளும் சிறப்புகளும் உங்களைத்தேடி வரும் ஸார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்....... April 3, 2017 at 11:42 AM

   வாங்கோ வணக்கம்.

   //ரொம்ப சந்தோஷம்.. உங்க திறமைக்கு இன்னும் பல பெருமைகளும் சிறப்புகளும் உங்களைத்தேடி வரும் ஸார்//

   ஆஹா, பக்ஷியொன்று பறந்து வந்து ஏதேதோ நல்ல காலம் பிறக்கும் என்று சொல்லுகிறதே ! :)

   மிக்க நன்றி, ஸார்.

   நீக்கு
 39. தங்களின் அயரா உழைப்பும், சாதனையும் வியக்க வைக்கிறது. பாராட்டுகள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dr B Jambulingam April 3, 2017 at 11:57 AM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம் ஐயா.

   //தங்களின் அயரா உழைப்பும், சாதனையும் வியக்க வைக்கிறது.//

   முனைவராகிய தங்களின் சாதனைகளுக்குமுன், என்னுடையதெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா. அடியேன் மிக மிகச் சாதாரணமானவன் மட்டுமே.

   //பாராட்டுகள் ஐயா.//

   தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   நீக்கு
 40. The following Comment pertaining to this Post is wrongly routed to the Comment Box of http://gopu1949.blogspot.in/2017/03/81.html (சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன், 81+ வயது இளைஞர்)


  ஸ்ரத்தா, ஸபுரி...April 3, 2017 at 11:51 AM

  **ஒரு கலையுமே நம்மை எட்டவோ, நாம் அந்தக் கலையைப்பற்றி அறியவோ, அதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று, அதில் நமக்கு வெற்றி வாய்ப்புக் கிட்டவோ, ஒரு நல்ல காலம், ஒரு நல்ல நேரம், நமக்கான அதிர்ஷ்டம், கொடுப்பிணை, ’கலையரசி’யாம் சரஸ்வதி கடாக்ஷம் போன்றவைக் கூடி வந்து கைகொடுத்து உதவ வேண்டும்.**

  ஸார் ஸரஸ்வதி தன் கடாஷத்தை உங்களுக்கு தாராளமாகவே வழங்கி இருக்காங்க. மின்னூல் பத்தி தெரியாதவங்களுக்கு கூட உங்க தெளிவான விளக்கங்கள்மூலம் தெரிந்து கொள்ள முடியும்..... வாழ்த்துகளும்..பாராட்டுகளையும்... ஸார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஸார் ... ஸரஸ்வதி தன் கடாக்ஷத்தை உங்களுக்கு தாராளமாகவே வழங்கி இருக்காங்க.//

   அப்படியா சொல்றீங்கோ? சிலருக்கு அண்டா அண்டாவா அள்ளிக்கொடுத்திருக்கும் சரஸ்வதி தேவி, என்னையும் மறக்காமல் ஒரு டீ ஸ்பூன் அளவுக்காவது கொடுத்திருக்கிறாள். அதுவே எனக்குப்போதும். எதேஷ்டமாகும். எனக்கும் மிகவும் சந்தோஷமும் திருப்தியும் மட்டுமே. குறையொன்றும் இல்லை.

   //மின்னூல் பத்தி தெரியாதவங்களுக்கு கூட உங்க தெளிவான விளக்கங்கள்மூலம் தெரிந்து கொள்ள முடியும்.....//

   ஏதோ எனக்குத் தெரிந்த + என் மனதுக்குத் தோன்றிய சிலவற்றை மட்டும் மேலே எடுத்து விட்டுள்ளேன். அதனை எடுத்துச் சொல்லியுள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //வாழ்த்துகளும்... பாராட்டுகளும்... ஸார்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 41. இரண்டே நிமிடங்களில் படித்து முடிக்கக்கூடிய

  ‘ஆஹா என்னப்பொருத்தம் -
  நமக்குள் இந்தப் பொருத்தம்’

  என்ற தலைப்பிலான நான் எழுதிய
  மிகக்குட்டியூண்டு கதையொன்று
  இன்று 04.04.2017 செவ்வாய்க்கிழமை
  ’எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்தில்,
  நண்பர் ஸ்ரீராம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

  இதோ அதற்கான இணைப்பு:
  http://engalblog.blogspot.com/2017/04/blog-post_4.html#more

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 42. ஆஹா.... பத்து மின்னூல்கள் ஒரே சமயத்தில்....

  வாழ்த்துகள் வை.கோ. ஜி! உங்கள் சுறுசுறுப்பு அசத்த வைக்கிறது. தொடரட்டும் மின்னூல்களும் உங்கள் படைப்புகளும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் April 9, 2017 at 8:49 AM

   வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

   //ஆஹா.... பத்து மின்னூல்கள் ஒரே சமயத்தில்....//

   ஏதோ அதுபோல அகஸ்மாத்தாக நேர்ந்துள்ளது, ஜி.

   //வாழ்த்துகள் வை.கோ. ஜி! உங்கள் சுறுசுறுப்பு அசத்த வைக்கிறது. தொடரட்டும் மின்னூல்களும் உங்கள் படைப்புகளும்....//

   மற்ற எந்த விஷயங்களிலும் இப்போது எனக்கு சுறுசுறுப்பு என்பதே சுத்தமாக இல்லாததால், தங்களை இது ஒருவேளை அசத்த வைக்கிறதோ என்னவோ!

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வெங்கட்ஜி.

   நீக்கு
 43. mohamed althaf April 15, 2017 at 12:42 PM

  //மிகவும் அருமையான பதிவு//

  மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 44. வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா..விரைவில் அனைத்து புத்தகங்களையும் படிக்க முயற்சிக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலியபெருமாள் புதுச்சேரி April 16, 2017 at 10:33 PM

   //வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா..//

   வாங்கோ, வணக்கம்.

   //விரைவில் அனைத்து புத்தகங்களையும் படிக்க முயற்சிக்கிறேன்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 45. ஓர் முக்கிய அறிவிப்பு:

  http://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html

  மேற்படி இணைப்பினில்

  ‘கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும் :)’

  என்ற தலைப்பினில் எங்கட

  அதிரடி
  அந்தர்பல்டி
  அழும்பு
  அட்டகாச
  அழிச்சாட்டிய
  அதிரஸ

  அதிரா அவர்கள்

  அதாவது பிரத்தானிய மஹாராணியாரின் ஒரே வாரிசும், என்றும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே என கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லித்திரியும் அதிரா அவர்கள்

  என்னுடைய இரு மின்னூல்களை விமர்சனம் செய்து சுடச்சுட வெளியிட்டுள்ளார்கள். அவை சூடு ஆறும் முன்பு போய்ப்பார்த்து ஏதேனும் கமெண்ட்ஸ் போட்டு விட்டு வாருங்கள். :)

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 46. வாழ்த்துகள், பாராட்டுகள். உங்கள் மின்னூல் வெளியீடு குறித்து ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். ஒரு சில கதைகள் நான் ஏற்கெனவே படித்திருப்பேன் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam April 27, 2017 at 7:03 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வாழ்த்துகள், பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //உங்கள் மின்னூல் வெளியீடு குறித்து ஏற்கெனவே அறிந்திருக்கிறேன்.//

   அப்படியா, மிகவும் சந்தோஷம் மேடம்.

   //ஒரு சில கதைகள் நான் ஏற்கெனவே படித்திருப்பேன் என நம்புகிறேன்.//

   இதுவரை சிறிதும் பெரிதுமாக சுமார் 80 கதைகள் மின்னூல்களில் அடங்கியுள்ளன.

   அவற்றில் படிக்குப்பாதியான அதாவது 40 பெரிய கதைகளை நீங்கள் என் வலைத்தளத்தில் 2014 ஆண்டில்
   ஊன்றிப் படித்துப்பார்த்து, ஒவ்வொன்றுக்கும் விமர்சனங்களே அனுப்பியுள்ளீர்கள்.

   அதற்கான 40 out of 40 விருதும் வாங்கியுள்ளீர்கள்.
   http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

   15 முறை, விமர்சனத்திற்கான பரிசுகளும் பெற்றுள்ளீர்கள்.

   http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

   தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 47. ஓர் முக்கிய அறிவிப்பு:

  http://kaagidhapookal.blogspot.com/2017/12/blog-post.html#comment-form

  மேற்படி இணைப்பினில் ’அட்வென்ட் ஸர்ப்ரைஸ் :)’ என்ற
  மெயின் தலைப்பினில், சகோதரி ஏஞ்சலின் அவர்கள், என் மின்னூலில் ஒன்றினைப் பற்றி, பாராட்டி விமர்சனம் போல ‘எனது பார்வையில் கோபு அண்ணாவின் குட்டியூண்டு கதைகள் ..’ என்ற உபதலைப்பினில் ஓர் தனிப்பதிவு வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  இது இங்கு வருகை தந்துள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு