உலகத்திலேயே மிகப்பெரிய வணிக வளாகமாகத் திகழ்வது துபாய் மால். இங்கு இரவு நேரத்தில் சென்று பார்ப்பது மிகவும் நல்லது. FOUNTAIN எனச்சொல்லப்படும் செயற்கை நீர் ஊற்றுகள் மூலம் சுமார் 500 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.
கலர் கலராக பல்வேறு டிசைன்களில் மின்னொளியில் இவற்றைக் காண்பது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. உலகம் முழுவதுமிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு தினமும் வருகிறார்கள்.
மாலை 6 மணி முதல் விடியவிடிய அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வீதம் மட்டும் இதைக் காட்சிப்படுத்துகிறார்கள். தொடர்ச்சியாக ஒரு 10 நிமிடத்திற்கு அந்தப்பகுதி முழுவதும் ஜகத்ஜோதியாகக் காட்சி அளிக்கிறது.
துபாய் மாலின் தரைத்தளத்தினில் நடைபெறும் இதைக்கண்டு களிக்க தனியாகக் கட்டணம் ஏதும் கிடையாது.
23.11.2014 இரவு 7 மணி முதல் 9 மணி வரை
இதனைக்கண்டு களித்தோம்.
உலகிலேயே மிக உயர்ந்த கட்டடமான ‘புர்ஜ் கலிபா’ செல்ல இங்கு துபாய் மாலில் தான் முன்பதிவு செய்துகொள்கிறார்கள்.
இங்கிருந்துதான் லிஃப்டு மூலம் மேலே செல்ல வேண்டும். காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, ஒவ்வொரு 2 மணி நேரங்களுக்கு ஒருமுறை மட்டும் [தினமும் எட்டு முறை மட்டுமே] மேலே செல்ல அனுமதிக்கிறார்கள்.
ஒரிருநாட்கள் முன்னதாகவே ON LINE மூலம் பதிவு செய்துகொள்வது கடைசிநேர ஏமாற்றத்தைத் தவிர்க்கக்கூடும்.

மொத்தம் 160 தளங்களுடன் 2766 அடி உயரம் கொண்ட அந்தக்கட்டடத்தின் 124-வது தளத்திற்கு, 50 பேர்களுடன், ஒரே லிஃப்டில், ஒரு நிமிடம் + 8 வினாடிகளில் போய்ச்சேரமுடிகிறது.
100 தளங்களைத் தாண்டுவதற்குள் நம் காதுகளில் ஒருசில நிமிடங்கள் மட்டும் நீடிக்கும் வலி உண்டாகிறது. ஆகாய விமானம் கிளம்பிப்பறக்கும்போது காது வலிக்குமே, பஞ்சு வைத்துக்கொள்வோமே ... அதே போன்ற வலிதான் இதுவும்.
124-வது தளத்திலிருந்து துபாயின் பெரும்பாலான பகுதிகளைக் கண்ணாடிச் சுவர்கள் மூலம் கண்டு களிக்க முடிகிறது. மேலும் நமக்கு உயரே உள்ள 36 தளங்களையும் அங்கிருந்தபடியே மேல் நோக்கிக் காணமுடிகிறது.

Visited this very wonderful place on 12.12.2014
12.30 PM to 3.30 PM
சற்றே அதிக நுழைவுக்கட்டணம் கொடுத்து இங்கு செல்லும் நம்மை அங்குள்ள நிர்வாகமே வேவ்வேறு இடங்களில் நிற்க வைத்து இலவசமாக போட்டோ எடுக்கிறார்கள். நம் கையில் ஓர் நம்பர் போட்ட கம்ப்யூட்டர் சீட்டும் உடனடியாகக் கொடுத்து விடுகிறார்கள்.
பிறகு அந்தச்சீட்டை வேறொரு இடத்தில் கொண்டுபோய் கொடுத்தால், கம்ப்யூட்டரில் நம் புகைப்படங்களை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்கள். அந்தப்படங்களில் பல்வேறு ஆச்சர்யங்கள் [Trick Shots] புதிதாக நம்முடன் இணைக்கப்பட்டிருக்கும்.

போட்டோவின் பிரதி ஒன்று வேண்டும் என்று ஆசையுடன் கேட்டால் ”அதற்குத்தனியாக 260 திர்ஹாம் கொடுக்க வேண்டும்” என்றார்கள். அதாவது 260*17 = ரூபாய் 4420 மட்டுமே. :) ”வேண்டாம் நீங்களே பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு புறப்பட்டோம். எங்களைப் போலவே தான் பலரும் செய்தனர்.
ஏற்கனவே நாங்கள் எட்டு பேர் கையில் ஆளுக்கு ஒரிரு கேமரா வீதம் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான படங்களை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வருகிறோமே ! மேலும் அவர்கள் தரும் விலை ஜாஸ்தியான TRICK SHOT போட்டோ நமக்கு எதற்கு? என்று வந்து விட்டோம்.
உச்சிக்குச்செல்ல நுழைவுக்கட்டணம் நபர் ஒன்றுக்கு பகல் 12.30 வரை 125 திர்ஹாம், அதன் பிறகு 200 திர்ஹாம். [ஒரு திர்ஹாம் = 17 ரூபாய் ஆகும்]

இது உச்சியில் 124வது தளத்திலிருந்து
கீழ் நோக்கி எடுக்கப்பட்ட படம்
மிக அகலமான சாலைகள் அனைத்தும்
மிகச்சிறியதாகக் காட்சியளிக்கின்றன.
அதில் செல்லும் வாகனங்கள் அனைத்தும்
பொடிப்பொடியாக எறும்பு ஊர்வதுபோல உள்ளன.
அதே போல நாம் 'புர்ஜ் கலிபா'வின் 124வது
தளத்திற்குச் சென்றதும்
அங்கே ஒரு மிஷின் வைத்துள்ளார்கள்.
அதில் உள்ள உண்டியலில்
10 திர்ஹாம் பணம் போட வேண்டும்.
பின் அதன் மேல் உள்ள கார் ஸ்டியரிங் வீல்
போன்ற ஒன்றைக் கஷ்டப்பட்டு
சேவை நாழியில் சேவை பிழிவதுபோல
சற்றே அழுத்திச் சுற்ற வேண்டும்.
ஒரு ஐந்து நிமிடங்கள் சுற்றிய பிறகு
நமக்கு ஓர் மிகச்சிறிய [1” x 3/4" size] சற்றே வளைந்த
’தங்க வில்லை’ டாலர் போல வந்து விழும்.
அதில் அந்த ’புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான
கட்டடத்தின் படமும் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
நானும் என் மகனும் அதில் காசு போட்டு சுற்றினோம்.
தங்க வில்லை வெளியே வந்தது.
என்னிடம் அதை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன்.
திருச்சி வந்ததும்
தங்கவில்லை எங்கே ?
என்று தேடினேன். கிடைக்கவில்லை.
’தங்கவில்லை’
நம்மிடம்
தங்கவில்லையோ !
என வருந்தினேன்.
பிறகு ஒருவழியாகக் கிடைத்ததில் மகிழ்ச்சி :)
இதோ அதன் படம்:
World's Tallest Building - Height 2766 feet
’At the Top - Burj Khalifa - Dubai’
பயணம் தொடரும்