என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

எங்கள் பயணம் [துபாய்-10]

OUR VISIT TO 
'DUBAI PALM ISLAND '

On 05.12.2014 - 2 PM


 


 


 

PALM ISLAND [பாம் ஐலண்டு] 
என்ற பெயரில் கடலை ஒட்டி
தீவு போன்ற மிகப்பெரிய குடியிருப்புப்பகுதியை 
 பனை மர வடிவில் பிரும்மாண்டமாக 
வடிவமைத்துள்ளார்கள்.தீவின் இரவு நேரத்தோற்றம்
ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்புறமும்
அதிக அலையில்லா சமுத்திரம் உள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் முன்புறம் இரண்டு கார்களும்
பின்புறம் இரண்டு படகுகளும் வைத்துள்ளார்களாம்.


கடல் நீரைத்தடுத்து ஒருமிகப்பெரிய 
தீவினை செயற்கையாக உருவாக்கி 
மாபெரும் குடியிருப்புப்பகுதிகளாக ஆக்கியிருப்பது
மிகவும் வியப்பளிக்கும் தொழில்நுட்பமாகும்.
இது சமீபத்தில் 2004 -ம் ஆண்டு
 திட்டமிட்டு அதன் பிறகு மிக விரைவில் முடிக்கப்பட்டுள்ளது 
என்பதும் குறிப்பிடத்தக்கது.
செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள 
இந்தத்தீவிலிருந்து பார்த்தால்
துபாயின் கட்டடங்கள் தனியாக 
கடலுக்கு அப்பால் தெரிகின்றன.சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கான மின்விளக்குகள்


பயணம் தொடரும்

19 கருத்துகள்:

 1. கடல் நீரைத்தடுத்து ஒருமிகப்பெரிய
  தீவினை செயற்கையாக உருவாக்கி
  மாபெரும் குடியிருப்புப்பகுதிகளாக ஆக்கியிருப்பது
  மிகவும் வியப்பளிக்கும் தொழில்நுட்பமாகும்.//

  நீங்கள் சொல்வது போல் வியப்பளிக்கும் தொழில்நுட்பம்தான்.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. அட்டகாசமான போஸ்... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. கோபு அண்ணா

  PALM ISLAND SUPER.

  ரொம்ப அருமையான புகைப்படங்களும், தகவல்களும்.

  ஊர் சுற்றும் வாலிபன் கோபு அண்ணா, மற்றும் மன்னி, உங்க பையன் புகைப்படங்கள் அருமை.

  பதிவிற்குப் பதிவு எங்கள் ஆவலை (அதான் துபாய்க்கு போகணும்ங்கற) தூண்டி விடுகிறது.

  வாழ்த்துக்களுடனும்,
  நன்றியுடனும்

  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 4. பிரமிப்பு.. சொல்ல வார்த்தைகள் இல்லை

  பதிலளிநீக்கு
 5. அன்பு v.g.k அவர்களுக்கு வணக்கம். பனைத் தீவு அதாங்க பால்ம் ஐலண்ட் படங்கள் யாவும் பார்க்கப் பார்க்க பரவசம். பத்து வருடங்களுக்கு முன்னர் எடுத்த போட்டோக்களையும் இணைத்தமைக்கு நன்றி. அன்றும் இன்றும் என்றும் நீங்கள் சுறுசுறுப்புதான்.

  பதிலளிநீக்கு
 6. பாம் தீவின் அழகை அழகாக படங்களுடன் பகிர்ந்து சிறப்பித்து விட்டீர்கள்! நீங்களும் தீவில் எடுத்த புகைப்படத்தில்ஒரு பத்து வயது குறைந்தார்போல அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. பனைமரத் தீவு வியப்பளிக்கிறது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. நான் சென்றபோது வேலைகள் நடுந்து கொண்டு இர்ருந்தது.
  இப்போது படத்தில் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. பனைமரத்தீவு வடிவமைப்பு வியக்கவைக்கிறது. படங்கள் அதி அழகு. நேரில் கண்டு ரசிப்பதைப் போன்ற உணர்வு. நன்றி கோபு சார்.

  பதிலளிநீக்கு
 10. பாம் ஐலேண்ட் படத்திலேயே இவ்வளவு அழகா இருக்கே....நேரே பார்த்தால் எப்படி இருக்குமோ!

  பதிலளிநீக்கு
 11. பனைமர வடிவில் செயற்கையாக ஒரு தீவு! வியப்பளித்தது! அருமை! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 12. பனைமர தீவு பிரமிப்பா இருக்கு. படங்களும் சூப்பர்

  பதிலளிநீக்கு
 13. பிரம்மாண்டமான கட்டுமானம் ..வியப்பளிக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:51 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பிரம்மாண்டமான கட்டுமானம் ..வியப்பளிக்கிறது..//

   அங்கு எல்லாமே ஒரே பிரும்மாண்டமாகவே உள்ளன.

   அனைத்துக் கட்டுமானங்களும் ஆஜானுபாஹுவாக ஒரே படாடோபஹா .... பயங்கரஹா .... வாகத்தான் உள்ளன.

   அங்கு மிக உயரமான கட்டடங்கள் கட்ட பயன்படுத்தும் பளுதூக்கிகளின் (LIFT) வானளாவிய உயரத்தைப்பார்த்தால் நம் கழுத்தே சுளுக்கிக் கொள்ளும் போல உள்ளது.

   நீக்கு
 14. படங்க பதிவு சூப்பரா போகுது. ஒவ்வொரு எடம் பத்தியும் வெவரமா சொல்லுறது நல்லா இருக்குது.

  பதிலளிநீக்கு
 15. ரொம்பவே பிரும்மாண்டமா படாடோபமாகத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 16. அருமை. முகப்பு கோட்டை வாசல் மாதிரி இருக்கே.. சில புகைப்படங்கள்..கருங்கல் பின்னணி...புதுச்சேரி மாதிரி இருக்கே. ஸ்கை ப்ளு கலர்ல ..NSK பாட்டுல வர்றமாதிரி ஜிலுஜிலு ஜிப்பா...ரொம்ப நல்லாருக்கு வாத்யாரே..

  பதிலளிநீக்கு