என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 1 மார்ச், 2019

பேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019

^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^

24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவுகளில் படங்களுடன் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். 

   ஆர்டிஸ்ட் அநிருத் ..... வயது ஐந்து !

   சந்தித்த வேளையில் ..... பகுதி 1 of 6

3) http://gopu1949.blogspot.com/2015/02/3.html
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி-3)

   மலரும் நினைவுகள் .. பகுதி-1  [நல்லதொரு குடும்பம்] 

தற்சமயம் ஏழு வயது பூர்த்தியாகி எட்டாம் வயது நடக்கும் எங்கள் பேரன் ’அநிருத்’ என்கிற ’நாராயண’னுக்கு சமீபத்தில் உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் [22nd, 23rd, 24th and 25th February 2019] நான்கு நாட்களுக்கு இனிதே  நடைபெற்றது. விழாவில் அவரவர்கள் தங்களின்  மொபைலில் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் மட்டும் கீழே காட்சிப்படுத்தியுள்ளேன். 






  

^முதல்நாள் 21.02.2019 எங்கள் இல்லத்தில் நடந்த ஸ்ரீ வேங்கடாசலபதி தீப சமாராதனை பூஜைகள்.^












^22.02.2019 வெள்ளிக்கிழமையன்று^



25.02.2019 திங்கட்கிழமை 
உபநயன ப்ரஹ்மோபதேச 
சுப முஹூர்த்த நிறைவு விழா + 
நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்தல்





பாலிகை கரைத்தல்




01.04.2010 அன்று பெரிய பேரன் ‘ஷிவா’ என்கிற 
சந்த்ரசேகரனுக்கு உபநயனம் நிகழ்ந்தபோது





அடுத்த இரண்டாண்டுகளில் வரக்கூடிய 
தனது பூணல் கல்யாணத்திற்காக
இப்போதே ரிகர்சல் பார்த்துள்ள, 
5 வயதே முடிந்துள்ள, எங்களின்  மூன்றாவது பேரன் 
‘ஆதர்ஷ்’ என்னும் ’கோபாலகிருஷ்ணன்’





^22.03.2019 அன்று வீட்டில் கேஷுவலாக எடுக்கப்பட்ட வீடியோ^
[அநிருத் பெரிய வாத்யார் போல ஆகி 
ஆதர்ஷுக்கு சந்தியாவந்தனம் சொல்லிக்கொடுத்தல்]



அன்புள்ள ஆச்சி 
அனுப்பி அசத்தியுள்ள அன்பளிப்பு  

நமது வலையுலக நட்புத் தோழி, அன்புள்ளம் கொண்ட ஆச்சி அவர்களை தங்களில் பலருக்கும்  தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக இதோ படங்களுடன் கூடிய சில இணைப்புகள்:

அன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது !

அன்பு நிரம்பி வழியும் காலிக்கோப்பை [துபாய்-20]

சந்தித்த வேளையில் ....... பகுதி 5 of 6

'ஆங்கரை பெரியவா’ You-Tube Audio by GOPU

அன்புக்குரிய ஆச்சி அவர்கள், தான் வசிக்கும் ஹரியானாவிலிருந்து சமீபத்தில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அவதார ஸ்தலமான விழுப்புரத்திற்கு வருகை தந்து, ஸ்வாமிகளின் அவதார ஸ்தல இல்லத்துக்குச் சென்று, விபூதி + குங்குமப் பிரஸாதங்கள் எனக்காகவும் கூடுதலாக வாங்கிக்கொண்டு ஹரியானா திரும்பியுள்ளார்கள். 26.02.2019 மாசி செவ்வாய்க்கிழமை அனுஷ நக்ஷத்திரத்தன்று என் கைகளுக்கு பிரஸாதங்கள் கிடைக்குமாறு கொரியர் தபாலில் அனுப்பி வைத்துள்ளார்கள். 

இந்த திவ்ய பிரஸாதங்களுடன் எனக்கான அன்பளிப்பாக மிகவும் விலை ஜாஸ்தியான மற்றொரு பொருளையும் அனுப்பி அசத்தியுள்ளார்கள் இந்த ஆச்சி. அந்தப் பொருள் சுமார் ஏழடி நீளமும், சுமார் 5 அடி அகலமும், கச்சிதமாக மடித்தால் சுமார் ஒரு முக்கால் கிலோ எடையும் கொண்டதாக உள்ளது.  அது என்ன பொருள் என தயவுசெய்து, யாரிடமும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்றும், அதனைப் பொக்கிஷமாகப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து, தினமும் போத்திப் போத்தி மகிழும்படியும் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.  

மான் குட்டி போலவும், முசல்குட்டி போலவும், அணில் குட்டி போலவும் மிகவும் ஸாப்ட் ஆகவும், மிருதுவாகவும், வழவழப்பாகவும், வேறு எதையோ தொடுவதுபோல ஒருவித வெட்கத்தையும், கூச்சத்தையும், குதூகலத்தையும், ‘கிக்’கையும் ஏற்படுத்தி வரும் அதனை நான் அடிக்கடி , தொட்டுத்தொட்டுத் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்து வருகிறேன்.  :)

ஆச்சியின் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கு மீண்டும் கூறிக் கொள்கிறேன். 


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]