அன்புடையீர்,
எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி போன்ற விசேஷ ஹோமங்கள், விசேஷ பூஜைகள் முதலியவற்றை, முறைப்படி வேதவித்துக்கள் மூலமாக பீடாபரிகார சம்ஸ்காரமாக செய்யச்சொல்லி கொண்டாடுவது வழக்கம்.
வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள இவற்றின் முக்கியத்துவம் பற்றியதோர், இனிய மற்றும் நகைச்சுவையான சொற்பொழிவு ஒன்றினை வேதபண்டிதர் பிரும்மஸ்ரீ. நன்னிலம் இராஜகோபால கனபாடிகள் அவர்கள் சமீபத்தில் ஆற்றியுள்ளார்கள். அதனை இதோ இந்த இணைப்பினில் அனைவரும் அவஸ்யமாகக் கேட்டு மகிழவும்.
^^ 15.12.2008 கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ’உக்ர ரத சாந்தி’ ஹோமம் (Attaining the age of 60 on Completion of 59 Years) நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படம். ^^
^^ 05.12.2009 கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ‘சஷ்டியப்த பூர்த்தி’ (Attaining the age of 61 on Completion of 60 years) நடைபெற்ற போது எடுக்கப்பட்ட ஒருசில படங்கள். ^^ Ref: http://gopu1949.blogspot.com/ 2011/07/1.html
சமீபத்தில் 27.11.2018 செவ்வாய்க்கிழமையன்று கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ’பீமரத சாந்தி’ (Attaining the age of 70 on Completion of 69 years) என்ற விழா மிக எளிமையாகவும், சிறப்பாகவும், வைதீக முறைப்படி செய்துகொள்ளப் பட்டது. அதற்கான ஒரு சில படங்கள் இதோ:
சமீபத்தில் 27.11.2018 செவ்வாய்க்கிழமையன்று கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ’பீமரத சாந்தி’ (Attaining the age of 70 on Completion of 69 years) என்ற விழா மிக எளிமையாகவும், சிறப்பாகவும், வைதீக முறைப்படி செய்துகொள்ளப் பட்டது. அதற்கான ஒரு சில படங்கள் இதோ:
மேலே காட்டியுள்ள புகைப்படங்கள் எல்லாமே, ஒருசில நண்பர்களும் உறவினர்களும் தங்களின் மொபைல் போன் மூலம் எடுத்துள்ளவைகளாகும். Professional Video / Photographer களால் எடுக்கப்பட்டுள்ளவை இனிமேல் தான் தாமதமாக வரக்கூடும்.
திடீர் ஏற்பாடுகளால் நம் பதிவுலக நட்புக்களில் யாரையும் என்னால், இந்த விழாவுக்கு நேரில் வருகை தருமாறு அழைக்க இயலவில்லை. இந்த விழாவுக்கு அடியேன் அழைப்பிதழ்கூட எதுவும் அச்சடிக்கவில்லை.
வைதீக ஜப, ஹோம, பூஜை கார்யங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, சிம்பிளாகவும், சிறப்பாகவும் செய்துகொண்டோம். உள்ளூரிலேயே உள்ள மிக நெருங்கிய சொந்தங்களில் சிலரை மட்டும், தொலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் அழைத்திருந்தோம். வேத பண்டிதர்கள் உள்பட சுமார் 100 நபர்கள் வரை கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
^^27.11.2018 காலை சிற்றுண்டி விருந்து^^
ஸ்வீட்: பைனாப்பிள் ஃபுட்டிங்,
இட்லி, வெண்பொங்கல், ரவாதோசை, மெதுவடை,
கொத்ஸு, மிளகாய்ப்பொடி, தேங்காய் சட்னி
காஃபி
One More
H A P P Y N E W S
’Happy’ என்ற பெயரில், என்னை பிரியத்துடன் ’பெரீப்பா’ என்று மிகச் செல்லமாக அழைத்து, அவ்வப்போது என் பதிவுகளுக்குப் பின்னூட்டமிடும் ‘ஹாப்பி’ பதிவர், செளபாக்யவதி. காயத்ரி என்ற பெண்ணுக்கு இதே நாளில் (27.11.2018) திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஓர் குக்கிராமத்தில் எளிமையாகவும், மிகச் சிறப்பாகவும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அவளும் நானும் பிறந்த ஆங்கிலத் தேதி: 8th DECEMBER ஆகும். என்னே எங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமை பாருங்கோ!! :)))))))) புதுமணப்பெண்ணாக 27.11.2018 அன்று எங்களைப்போலவே மனையில் அமர்ந்த HAPPY காயத்ரி தன் இல்வாழ்க்கையில் மிகவும் HAPPY யாக இருக்க வேண்டி பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறேன்.
[வை. கோபாலகிருஷ்ணன்]