என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 1 டிசம்பர், 2018

எழுச்சியுடன் எழுபதை எட்டினேன் !

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.



எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி போன்ற விசேஷ ஹோமங்கள், விசேஷ பூஜைகள் முதலியவற்றை, முறைப்படி வேதவித்துக்கள் மூலமாக பீடாபரிகார சம்ஸ்காரமாக செய்யச்சொல்லி கொண்டாடுவது வழக்கம். 

வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள இவற்றின் முக்கியத்துவம் பற்றியதோர், இனிய மற்றும் நகைச்சுவையான சொற்பொழிவு ஒன்றினை வேதபண்டிதர் பிரும்மஸ்ரீ. நன்னிலம் இராஜகோபால கனபாடிகள் அவர்கள் சமீபத்தில் ஆற்றியுள்ளார்கள்.  அதனை இதோ இந்த இணைப்பினில் அனைவரும் அவஸ்யமாகக் கேட்டு மகிழவும்.





^^ 15.12.2008 கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ’உக்ர ரத சாந்தி’ ஹோமம் (Attaining the age of 60 on Completion of 59 Years)  நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படம். ^^











^^ 05.12.2009 கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ‘சஷ்டியப்த பூர்த்தி’ (Attaining the age of 61 on Completion of 60 years) நடைபெற்ற போது எடுக்கப்பட்ட ஒருசில படங்கள். ^^   Ref:   http://gopu1949.blogspot.com/2011/07/1.html  





சமீபத்தில் 27.11.2018 செவ்வாய்க்கிழமையன்று கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தில் ’பீமரத சாந்தி’ (Attaining the age of 70 on Completion of 69 years) என்ற விழா மிக எளிமையாகவும், சிறப்பாகவும், வைதீக முறைப்படி செய்துகொள்ளப் பட்டது.  அதற்கான ஒரு சில படங்கள் இதோ:





























மேலே காட்டியுள்ள புகைப்படங்கள் எல்லாமே, ஒருசில நண்பர்களும் உறவினர்களும் தங்களின் மொபைல் போன் மூலம் எடுத்துள்ளவைகளாகும். Professional Video / Photographer களால் எடுக்கப்பட்டுள்ளவை இனிமேல் தான் தாமதமாக வரக்கூடும்.  

திடீர் ஏற்பாடுகளால் நம் பதிவுலக நட்புக்களில் யாரையும் என்னால், இந்த விழாவுக்கு நேரில் வருகை தருமாறு அழைக்க இயலவில்லை. இந்த விழாவுக்கு அடியேன் அழைப்பிதழ்கூட எதுவும் அச்சடிக்கவில்லை. 

வைதீக ஜப, ஹோம, பூஜை கார்யங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, சிம்பிளாகவும், சிறப்பாகவும்  செய்துகொண்டோம். உள்ளூரிலேயே உள்ள மிக நெருங்கிய சொந்தங்களில் சிலரை மட்டும், தொலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் அழைத்திருந்தோம். வேத பண்டிதர்கள் உள்பட சுமார் 100 நபர்கள் வரை கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.



 

^^27.11.2018 காலை சிற்றுண்டி விருந்து^^
ஸ்வீட்: பைனாப்பிள் ஃபுட்டிங், 
இட்லி, வெண்பொங்கல், ரவாதோசை, மெதுவடை, 
கொத்ஸு, மிளகாய்ப்பொடி, தேங்காய் சட்னி 
காஃபி


One More
H A P P Y     N E W S


 


’Happy’ என்ற பெயரில், என்னை பிரியத்துடன் ’பெரீப்பா’ என்று மிகச் செல்லமாக அழைத்து, அவ்வப்போது என் பதிவுகளுக்குப் பின்னூட்டமிடும் ‘ஹாப்பி’ பதிவர், செளபாக்யவதி. காயத்ரி என்ற பெண்ணுக்கு இதே நாளில் (27.11.2018) திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஓர் குக்கிராமத்தில் எளிமையாகவும், மிகச் சிறப்பாகவும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அவளும் நானும் பிறந்த ஆங்கிலத் தேதி: 8th  DECEMBER ஆகும். என்னே எங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமை பாருங்கோ!! :))))))))  புதுமணப்பெண்ணாக 27.11.2018 அன்று எங்களைப்போலவே மனையில் அமர்ந்த HAPPY காயத்ரி தன் இல்வாழ்க்கையில் மிகவும் HAPPY யாக இருக்க வேண்டி பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறேன். 

 

 


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

செவ்வாய், 13 நவம்பர், 2018

தாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' !




இவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளில், மிகச் சிறப்பாக பின்னூட்டங்கள் அளித்துவருபவரும், ‘எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்தில் பெரும்பாலான திங்கட்கிழமைகளில் அடிக்கடி தோன்றி மறையும் ’சமையல் சக்ரவர்த்தி’யுமான இவரை நம் வலையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 

இன்று 12.11.2018 ”திங்க”க்கிழமைகூட - ’தித்திக்கும் லட்டு - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி’  என்ற தலைப்பில் மிகவும் அசத்தலான லட்டு போன்றதொரு பதிவு வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு இதோ:    https://engalblog.blogspot.com/2018/11/blog-post_12.html 
  
இந்த நெல்லைத் தமிழன் என்கிற புனைப்பெயரினில் வலையுலகில் புகழ் பெற்றுள்ள திரு. முரளி N சேஷன் அவர்களுடன் எனக்கு கடந்த ஒருசில வருடங்களாக நல்ல பரிச்சயம் உண்டு. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் இதுவரை சந்தித்தது இல்லையே தவிர, தொலைபேசி, மின்னஞ்சல், வாட்ஸ்-அப், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், என் பதிவு + மற்றவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கள், பின்னூட்டங்களுக்கு மறுமொழிகள் முதலியவற்றின் மூலம் தினமும் பலமணி நேரங்கள் தொடர்பில் இருந்து நெருங்கிப் பழகி, எங்களுக்குள் மிகவும் ஆச்சர்யமான நட்பினை உருவாக்கிக் கொண்டுள்ளோம்.  

நாளைய 13.11.2018 ஸ்ரீரங்கம் பெருமாளை தரிஸிக்க வேண்டி, இன்று 12.11.2018 திருச்சி வந்து, ஸ்ரீரங்கத்தில் தங்கியுள்ள இவர் தன் மனைவியுடன் திடீரென்று என் இல்லத்திற்கு, இன்றே விஜயம் செய்து மகிழ்வித்தார். 

இரவு 9.05 மணிக்கு, ஸ்ரீரங்கத்திலிருந்து தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். ”இப்போது வந்து உங்களை, உங்கள் இல்லத்தில் சந்தித்தால் தங்களுக்கு ஏதும் தொந்தரவாக இருக்குமா?” என்று கேட்டார். 

”வாருங்கள் ஸ்வாமீ, அதெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லை. விடிய விடிய விழித்துக் கொண்டுதான் இருப்பேன். விடியற்காலம் மூன்று அல்லது நான்கு மணிக்குத்தான் தூங்கவே ஆரம்பிப்பேன். பிறகு எப்போது கண் விழிப்பேன் என்பது எனக்கே தெரியாது” என்ற உண்மையை உண்மையாக ஒத்துக்கொண்டு, அவரின் வருகைக்குப் பச்சைக்கொடி காட்டி விட்டேன். 

இரவு 9.30 மணி சுமாருக்கு, நம் பெருமாள் ஸ்வாமீ, தாயாருடன் (தனது தர்ம பத்தினியுடன்) என் இல்லத்திற்கு எழுந்தருளினார்.  

என் இல்லத்திற்கு பேரன்புடன் வருகை தந்த உத்தம தம்பதியினர் எனக்கு மிகவும் பிடித்தமான, ஒஸத்தியான ஸ்பெஷல் மில்க் ஸ்வீட்ஸ்களை ஏராளமாகவும் தாராளமாக வாங்கி வந்ததுடன், அதனுடன் பழம் புஷ்பம் முதலியவற்றை வைத்து என்னையும் என் மனைவியை விழுந்து நமஸ்கரித்து சேவித்துக்கொண்டனர்.  இரவு 11 மணி வரை, நாங்கள் எங்களுக்குள் ஆசைதீர பேசி மகிழ்ந்தோம்.   பிறகு பிரியாவிடை பெற்றுச் சென்றனர். 

நம் வலையுலகில், நான் அவசியமாக சந்திக்க வேண்டும் என்று என் மனதில் நினைத்திருந்த மிக முக்கியமான நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு வேளையில், ‘உடனே உதித்த உத்தமர்’ ஆக திடீரென வருகை தந்ததால் என்னால் அவர்களை, என் திட்டப்படி + என் வழக்கப்படி சரிவர கவனிக்க முடியாமல் போய் விட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது.  இருப்பினும் எப்படியோ ‘பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல’  ஓரளவுக்கு ஏதோ சமாளித்து மரியாதை செய்து அனுப்பி வைக்க முடிந்ததில் மகிழ்ச்சியே. 

தன்னிடம் மிகத் தீவிரமான பக்தி கொண்ட பாகவதனான ’பிரகலாதன்’ என்ற சிறு குழந்தையைக் காக்க வேண்டி, ஸ்ரீ மஹாவிஷ்ணு ’நரசிம்ஹ’ அவதாரம் எடுத்தார். தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியை ‘உடனே உதித்த உத்தமர்’ எனச் சொல்வதுண்டு. இதுபற்றிய மேலும் விபரங்கள் ‘காவேரிக் கரையிருக்கு! கரை மேலே ____________இருக்கு!!’ என்ற என் பதிவினில் உள்ளன. http://gopu1949.blogspot.com/2011/12/blog-post_28.html  

ஏற்கனவே பல்வேறு தொடர்புகளால் எங்களுக்குள் ஊடுறுவிப் போய் இருந்த மிக ஆழமான நட்பினாலும், பாசத்தினாலும் புதிய நபர் ஒருவரை முதன் முதலாக சந்திக்கிறோம் என்ற எண்ணமே எங்கள் இருவருக்குள்ளும் ஏற்படவில்லை.  எங்களின் சந்திப்பு மிகவும் இனிமையாகவும், மனது பூராவும் ஒரே மகிழ்ச்சி நிறைந்ததாகவும், திருப்தியாகவும் அமைந்தது.

இருவர் தரப்பிலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், ’நெல்லைத் தமிழன் ஸ்வாமீஜி’யின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு புகைப்படங்கள் எதையும் நான் வெளியிடவில்லை. 

இருப்பினும் அவர் அன்புடன் என் வீட்டாரிடம் கொடுத்துச் சென்ற மிகச் சுவையான மற்றும் மிகத்தரமான  ஸ்வீட்ஸ் + பழங்களை மட்டும் இங்கு பதிவேற்ற விரும்புகிறேன்.  ஏனெனில் அவைகள் தின்று தீர்ந்து விட்டால் பிறகு அவற்றை மறந்துவிட வாய்ப்பு உண்டு அல்லவா! பதிவினில் காட்டிவிட்டால் அதன் சுவையை நான் மட்டுமல்ல நீங்களும் நினைத்து நினைத்து, என்றுமே மகிழலாம்தானே !!  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !!!


எத்தனையோ நேர நெருக்கடிகளுக்கு இடையில், தூய்மையான அன்புக்காக மட்டுமே, வெளியூரிலிருந்து திருச்சிக்கு தன் மனைவியுடன் வருகை தந்து, என்னை என் இல்லத்தில் சந்தித்துச் சென்ற அருமை நண்பர் நெல்லைத்தமிழன் ஸ்வாமீ அவர்களுக்கும், அவரின் துணைவியாருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்லைத்தமிழன் அவர்கள்
இதுவரை நான் நேரில் சந்தித்துள்ள 
44-வது பதிவராகும்.

என்னுடைய மற்ற சந்திப்புகள் பற்றிய 
முழு விபரங்களை, அரிய படங்களுடன் அறிய
இதோ சில இணைப்புகள்:

சந்தித்த வேளையில் .....


பகுதி-1 க்கான இணைப்பு:

பகுதி-2 க்கான இணைப்பு:

பகுதி-3 க்கான இணைப்பு:

பகுதி-4 க்கான இணைப்பு:

பகுதி-5 க்கான இணைப்பு:

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் .....

பகுதி-1 க்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2015/02/1.html


பகுதி-2 க்கான இணைப்பு:

பகுதி-3 க்கான இணைப்பு:


^பகுதி-3 க்கான இணைப்பு:^

பகுதி-4 க்கான இணைப்பு:

பகுதி-5 க்கான இணைப்பு:

பகுதி-6 க்கான இணைப்பு:

பகுதி-7 க்கான இணைப்பு:

புதுக்கோட்டை via மலைக்கோட்டை

மீண்டும் ஓர் இனிய சந்திப்பு

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே .... !

முனைவர் ஐயாவுடன் ‘ஹாட்-ட்ரிக்’ சந்திப்பு

சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்

2017 ......... 2018 வாழ்த்துகள்

40 மற்றும் 41 ஆவது பதிவர்களை நான் சந்தித்தது
ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி-6

42-ஆவது பதிவர் சந்திப்பு
ஹனிமூன் வந்துள்ள பதிவர்!

43-ஆவது பதிவர் சந்திப்பு
’விமர்சன வித்தகியின் வியப்பளிக்கும் விஜயம்’


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]